போர்க்கலை வல்லுநர்களின் கணிப்பீடுகளுக்கு அப்பாற்பட்டவர் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் – கழகத் தலைவர் பேட்டி

05.05.2019 தேதியிட்ட ஈழத்தமிழர்களால் அமெரிக்காவிலிருந்து நடத்தப்படும் ”இலக்கு” வாராந்திர மின்னிதழுக்கு ‘தாயகக் களம்’ பகுதியில் தமிழீழ தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் குறித்தும், தற்போதைய ஈழச்சூழல், தமிழீழம் குறித்தும் கழகத்தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் அளித்துள்ள பேட்டி :

”போர்க்கலை வல்லுநர்களின் கணிப்பீடுகளுக்கு அப்பாற்பட்டவர் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன்”

‘வன்னிக்காட்டில் அவருடன் இருந்த நாட்கள் மறக்க முடியாதவை’

– ஈழத் தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கொளத்தூர் தா.செ.மணி.

முள்ளிவாய்க்காலுக்கு முன் எமது மண்ணின் விடுதலைப் போராட்டத்திற்கு ஈக வரலாறு இருப்பது போல் அதற்கு தோள் கொடுத்து நின்ற தாய்த்தமிழகத்திற்கும் ஓர் ஈக வரலாறு உண்டு. கடலினும் பெரிதான ஈக நெஞ்சங்களின் ஒரு துளி சாட்சி தான் திராவிடர் விடுதலைக்கழகத்தின் தலைவரும் ஈழத்தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளருமான கொளத்தூர் தா.செ.மணி.

1984 சனவரி 05 முதல் 1986 நவம்பர் இறுதிவரையான மூன்று ஆண்டுகளுக்கு புலிகள் பயிற்சி எடுப்பதற்காக தன்னுடைய 15 ஏ க்க ர் நிலத்தைக் கொடுத்தார். இன்றும் பொன்னம்மானுக்கு ஓர் வீரவணக்க நினைவுச்சின்னமும்,பயிற்சி எடுக்கும் போது உயிரிழந்த மாவீரர் ரோய் உறங்கும் கல்லறையும் கொளத்தூரில் இருக்கிறது.

இக்காலத்தில் சில அரசியல் காரணங்களுக்காக ஒரு முறை வெளித் தொடர்புகள் ஏதுமின்றி தேசிய தலைவர் இவருடன் 23 நாட்கள் தங்கி இருந்துள்ளார். 1989 ஆம் ஆண்டில் முதல் மாவீரர் நாள் நிகழ்வுக்கு தேசிய தலைவரால் அழைக்கப்பட்டு தாயகத்திற்கு வந்து இரண்டு வாரங்கள் வன்னிக் காட்டில் தங்கி இருந்தவர்.

1991 பிப்ரவரியில் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 1994 மே மாதத்தில் புலிகளுக்கு ஆயுதம் கடத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டு தடாவில் கைது செய்யப்பட்டு ஓராண்டு சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது பறிமுதல் செய்யப்பட்ட இவரது மகிழுந்து இன்றுவரை திருப்பிக் கொடுக்கப்படவில்லை.

1995 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வேலூர் சிறப்பு முகாமில் இருந்து புலிகள் சுரங்கம் தோண்டி தப்பிய வழக்கில் மீண்டும் ஓர் ஆண்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

2009 தொடக்கத்தில் ஒரு முறையும் 2013இல் ஒருமுறையும் ஈழ விடுதலையை ஆதரித்தமைக்காக தேசிய பாதுகாப்புச்சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில்அடைக்கப்பட்டார். தமிழகத்திற்காக அன்றிதமிழீழத்திற்காக இவர் சிறையில் கழித்தநாட்களே அதிகம். ஓரிரு மாதங்கள் அல்ல,ஆண்டுகள் பல சிறையில் கழித்தவர்.

அறிவுத் தளம், வெகுஜனப் போராட்டதளம், நம்பிக்கை தளம் என மூன்றிலும் பயணித்தவர். இவர் இதயம் திறந்து பேசினால் அது உலகம் அறியாத உண்மைகளாக மட்டும் இருக்காது, விடுதலைக்கான பாதையில் கடந்து வந்த காட்டாறுகள் எத்தனை எத்தனை எ ன்பதாகவும் இருப்பதால் இவர் செய்தவற்றை இவரோ அல்லது பிறரோ பேசுவதில்லை. எமது விடுதலைக்காக தமிழகத்தில் நெருப்பை விழுங்கியவர்களில் இவரும் ஒருவர். தன்னை எங்கும் முன்னிலைப்படுத்தாது இவர் ஆற்றிய பங்களிப்பை ஈழ விடுதலைப் போராட்டத்தைக் கூர்ந்து கவனித்துவரும் அனைவரும் அறிவார்கள். தேசிய தலைவரால் உரிமையோடு ‘அண்ணா’ என்று அழைக்கப்படும் இவர் இலக்கு மின்னிதழுக்கு வழங்கிய சிறப்புப் பேட்டி :

59723136_2385338371750049_6382246605000540160_n 59756617_2385338341750052_1111924401089019904_n

You may also like...