Author: admin

திராவிடர் விடுதலைக் கழக மாத நாள் காட்டி !

திராவிடர் விடுதலைக் கழக மாத நாள் காட்டி !

”நாள்காட்டி” திராவிடர் விடுதலைக் கழக மாத நாள் காட்டி ! விலை : ரூபாய் 70.00 மட்டும்.(ரூபாய் எழுபது மட்டும்) பெரியார், அண்ணல் அம்பேத்கர், மேதகு பிரபாகரன், கலைஞர்,  அறிஞர்அண்ணா, காமராஜர், எம்.ஆர்.ராதா, புரட்சிக்கவிஞர் படங்களுடன் அழகிய வடிமைப்பில்,வரலாற்று குறிப்புகளுடன் உள்ள மாத நாள்காட்டி. குறைந்த அளவே அச்சிடப்பட்டு உள்ளது. நாள்காட்டி தேவைப்படுவோர் தொடர்பு கொள்ளவேண்டிய எண் : தோழர் தபசி குமரன், அலைபேசி எண் : 9941759641 தலைமை நிலையச்செயலாளர், திராவிடர் விடுதலைக் கழகம். (திராவிடர் விடுதலைக் கழக மாவட்ட நிர்வாகிகளிடமும் நாள்காட்டி கிடைக்கும்

இராவண காவியம் தொடர் சொற்பொழிவு !

இராவண காவியம் தொடர் சொற்பொழிவு !

இராவண காவியம் தொடர் சொற்பொழிவு ! சொற்பொழிவு : ”புலவர் செந்தலை கெளதமன்” கழகத்தலைவர் தோழர் கொளத்தூர் மணி, த,பெ,தி,க பொதுச்செயலாளர் தோழர் கோவை கு.ராமகிருட்டிணன் உள்ளிட்ட தோழர்கள் வாழ்த்துரை வழங்குகிறார்கள். நாள் : 30.12.2018 ஞாயிற்றுக்கிழமை நேரம் : மாலை 5.00 மணி. இடம் : கெளரி திருமண மண்டபம்,சென்டெக்ஸ் அருகில்,சென்னிமலை.

தோழர் பிரியதர்சினி – தோழர் சரவணபரத் இணையேற்பு அறிமுக விழா !

தோழர் பிரியதர்சினி – தோழர் சரவணபரத் இணையேற்பு அறிமுக விழா !

தோழர் பிரியதர்சினி – தோழர் சரவணபரத் இணையேற்பு அறிமுக விழா ! இருசக்கர பேரணி,பெரியார் முழக்கம் நிமிர்வோம் சந்தா வழங்கும் விழா ! நாள் 30.12.2018 ஞாயிறு நேரம் : காலை 9.00 மணி பேரணி துவங்கும் இடம் : பெரியார் படிப்பகம், சோதனைச்சாவடி,கொளத்தூர். கருத்துரை : தோழர் கொளத்தூர் மணி, தலைவர் திராவிடர் விடுதலைக் கழகம். தோழர் விடுதலை ராஜேந்திரன், பொதுச்செயலாளர்,திராவிடர் விடுதலைக் கழகம்.

யாவையும் நிறுத்திக் கொள் காவியே!  – பெ. கிருஷ்ணமூர்த்தி

யாவையும் நிறுத்திக் கொள் காவியே! – பெ. கிருஷ்ணமூர்த்தி

வெறிமிகு வேகத்தில் பயணிக்காத வாகனங்கள். தனிமனிதத் துதியும், வெறுப்புமற்ற , சமூகநீதி வேண்டித் தாகமுடன் களம்காணும் வேட்கை பொதிந்தப் பயணம் ! மகிழுந்தும், பெருவாகனமும்… தும்பை வெள்ளையும்… பட்டை மோதிரமும்… அத்தர் நெடியும்… பட்டைச் சங்கிலி சகிதம் மதுக்கடையை மொய்க்காதக் கூட்டம்.! நோட்டுகளை எண்ணுகிறதும், எண்ணுகிற நோட்டுக்காய் எச்சில் விழுங்கிக் கையேந்தாதக் கரங்கள்.! மனமெல்லாம் தாடிக்கிழவனை நிரப்பி… பசியென்னும் உணர்வையே பறையிசையில் நிறைத்து… நரம்பு நாணை சுயமரியாதைப் பாட்டால் மீட்டும் கூட்டம்! எம் கரமேந்தும் கருங்கொடி … சூரியனையும் மிஞ்சும் சுடரொளி! எங்கள் கருந்தேகத்தைக் கிழித்திட்டால் சிவப்பு நட்சத்திரமாய் மினுங்கும் புது ஒளி! வரலாறைச் சுமந்த மூளை. அடக்குமுறை எதிர்க்கும் தேகம். சமூகநீதிக்காய் நடந்து… நடந்து உரமேறியக் கால்கள். தீமைக்கெதிரான சொற்கள். தீர்வு கிட்டும்வரை துஞ்சாதக் கண்கள். இவையே எங்கள் அடையாளம். போதையின் ஆக்கத்தால் ஆட்டமோ.. மாநாடுத் திடலில் குழாய் விளக்குடைக்கும் நாட்டமோயின்றி… அரைக்கல் அளவே இடமாயினும்… நெஞ்சுநிமிர்த்தி அமர்ந்து… பகலவனின்...

‘பெண் ஏன் அடிமையானாள்’ நூலுக்கு மட்டும் புத்தகக் கண்காட்சியில் தனி அரங்கு

‘பெண் ஏன் அடிமையானாள்’ நூலுக்கு மட்டும் புத்தகக் கண்காட்சியில் தனி அரங்கு

‘பெண் ஏன் அடிமையானாள்’ நூலை ரூ.10க்கு மலிவு பதிப்பாக்கி இலட்சக்கணக்கில் விற்பனை இயக்கம் நடத்தி வரும் நன்செய் பதிப்பகத் தோழர்கள் சென்னை புத்தகக் கண்காட்சியில் இந்த நூலுக்கு மட்டுமே தனி விற்பனை அரங்கு எடுத்துள்ளனர். இலட்சங்களையும் தாண்டி பிரதிகள் வேகமாக விற்பனையாகி வருகின்றன.   அரங்கின் எண். 543 பெரியார் முழக்கம் 27122018 இதழ்

“காவிக்கு மறுப்பு – பெரியாரின் கறுப்பு” திருச்சிப் பேரணி மாநாட்டு நிகழ்விலிருந்து ஒரு தொகுப்பு:

“காவிக்கு மறுப்பு – பெரியாரின் கறுப்பு” திருச்சிப் பேரணி மாநாட்டு நிகழ்விலிருந்து ஒரு தொகுப்பு:

இலட்சியத்தில் உறுதி; கட்டுப்பாட்டின் அடை யாளமே கருஞ்சட்டை என்பதை நிரூபித்தது பேரணி. காவல் துறைக்கு வேலையே இல்லை; தோழர்களே தங்களை ஒழுங்குப்படுத்திக் கொண்டு கட்டுப்பாட்டுடன் – இளம் பெண்களும் ஆண்களும் பேரணியில் அணி வகுத்தக் காட்சி – எந்த அரசியல் கட்சியிலும் பார்க்க முடியாத ஒன்று. மூத்த தலைவர்களான திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, மார்க்சிய பெரியாரிய பொதுவுடைமைக் கட்சியின் நிறுவனர் வே. ஆனைமுத்து; அடுத்த தலைமுறையைச் சார்ந்த திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, தந்தை பெரியார் திராவிடர் விடுதலைக் கழகப் பொதுச் செயலாளர் கோவை இராமகிருட்டிணன் ஆகியோர் ஒரே மேடையில் அடுத்தடுத்து அமர்ந்திருந்த காட்சி தோழர்களுக்கு பெரும் உற்சாகத்தைத் தந்தது. மேடைக்குப் பின் திரையில் ஒளிக் காட்சிகளாக பெரியாரின் வெவ்வேறு நிழல் படங்கள் திரையிடப்பட்டன. உரைகளுக்கு இடையே பெரியாரின் ஒரு நிமிட உரை இரண்டு முறை ஒளி பரப்பப்பட்டது. பெரியார் குரலையும் கருத்தையும் கேட்ட இளைஞர்கள் கூட்டம்...

ஜாதி ஒழிப்பு – தமிழின விடுதலை – மதவெறி எதிர்ப்பை வலியுறுத்திக் குரல் கொடுத்தது கருஞ்சட்டை மாநாடு

ஜாதி ஒழிப்பு – தமிழின விடுதலை – மதவெறி எதிர்ப்பை வலியுறுத்திக் குரல் கொடுத்தது கருஞ்சட்டை மாநாடு

செயல் திசை நோக்கி வெளிச்சம் காட்டும் திருச்சி மாநாட்டுத் தீர்மானங்கள் திருச்சி பெரியாரிய உணர்வாளர் கூட்டமைப்பு தமிழர்களின் அடையாளம் – உரிமைப் பறிப்பு – விடுதலைக்கான இலக்கு நோக்கிய கொள்கை வழியை அடையாளப்படுத்தி தீர்மானங்களை நிறைவேற்றி யுள்ளது. திருச்சி உழவர் திடலில் 2018 திசம்பர் 23 அன்று பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் நடைபெற்ற தமிழின உரிமை மீட்பு மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: ஒரே மக்கள், ஒரே சட்டம், ஒற்றைப் பண்பாடு, ஒற்றை அடையாளங்கள் என்கிற வகையில் பார்ப்பனிய அதிகார வெறிகொண்டு இயங்குகிற இந்திய அரசு இந்தியாவிற்குள் அடக்கப்பட்டுள்ள பல்வேறு மொழித் தேசங்களின் வரலாற்றையும், பண்பாட்டையும், அடையாளங்களையும் மறுக் கிறது. இந்நிலையில் தமிழ்நாட்டு மக்கள் தங்களின் தேசியஇன அடையாள உரிமையின் கீழ்த் தங்களைத் `தமிழர்கள்’ என்றே பதிந்து கொள் வதற்கான வகையில் தமிழக அரசு ஆவன செய்ய வேண்டுமென இம்மாநாடு வலியுறுத்து கிறது. மாநில உரிமைகளை நசுக்குவதற்காகவே ஆங்கிலேயர்களால் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட...

பெரியாரைப் பார்த்திடாத இளைஞர் கூட்டம்  பெரியாரியலை முன்னெடுக்க உறுதி ஏற்றது

பெரியாரைப் பார்த்திடாத இளைஞர் கூட்டம் பெரியாரியலை முன்னெடுக்க உறுதி ஏற்றது

ஆயிரமாயிரமாய் இளைஞர்கள் அணி வகுத்த கருஞ்சட்டைப் பேரணி குலுங்கியது திருச்சி மாநகர் டிசம்பர் 23, 2018 அன்று திருச்சி மாநகர் ஒரு வரலாற்றை எழுதியுள்ளது. சுமார் 200 அமைப்புகள் ஓரணியில் திரண்டு – பெரியாரே – தமிழர்களின் – தமிழ்நாட்டின் முதன்மை அடையாளம்; காவிக்கு மறுப்பு – பெரியாரின் கருப்பு என்ற முழக்கத்தோடு பல்லாயிரக்கணக்கில் திருச்சியில் திரண்டார்கள். திரும்புமிடமெல்லாம் கருப்புச் சட்டை. அதிலும் நூற்றுக்கு 90 சதவீதம் பேர் பெரியார் இறப்புக்குப் பின் 10 ஆண்டுகள், 20 ஆண்டுகள் கழித்துப் பிறந்த பெரியாரையேப் பார்த்திடாத இளைஞர்கள்; அவர்களிலும் பலர் பெண்கள். தமிழ்நாடு முழுதுமிருந்தும் பல நூறு தனி வாகனங்கள் திருச்சியை நோக்கி வந்தன. பகல் 2 மணியளவில் பேரணி புறப்படும் கே.டி. திரையரங்கு அருகே கருஞ்சட்டைத் தோழர்கள் திரளத் தொடங்கினார்கள். 3.30 மணியளவில் பறை இசை முழங்க பேரணியை திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தொடங்கி வைத்தார். ஒவ்வொரு அமைப்பும் தங்கள்...

நான் நரகாசுரன்… – சவுரி, பெங்களூர்

நான் நரகாசுரன்… – சவுரி, பெங்களூர்

நடப்பவைகளை சகித்துக் கொள்ளாதபோது நான் நரகாசுரன் எங்கிருந்தோ வரும் தேவர்கள் எங்கள் கதிராமங்கலத்தில் துளையிடுவதை எதிர்த்துக்  கேட்டால் நான் நரகாசுரன். மூலதன கூர்மாவதாரங்கள் எனது நெடுவாசலைப் பாயாய் சுருட்டிக் கொண்டு ஓட வருகையில், வீதிக்கு வந்து விரட்டினால் நான் நரகாசுரன். தமிழகத்தையே மத்தாக்கி கெயில் ஆதிசேஷன் இறுக்குகையில்  – அமிர்தம் மேல் லோகத்திற்கு, விஷம் எங்களுக்கா? என ஆர்த்தெழுந்துப் போராடினால் நான் நரகாசுரன். பசுந்தளிர் அகலிகையை அபகரிக்க ‘மேக் இன் இந்தியா’ மாறுவேடத்தில் வரும் பன்னாட்டு இந்திரனைத் தடுத்து நிறுத்தினால் நான் நரகாசுரன். அழகிய தாமிரவருணியை ஆக்கிரமிக்க வரும் அமெரிக்க பிரகஸ்பதியை – என்னைக் கொன்றுவிட்டு தீபாவளி, என் ஆற்றைக் கொன்றுவிட்டு கொக்கோகோலாவா?  என எதிர்த்துக் கேட்டால் நான் நரகாசுரன் வல்லினம், மெல்லினம், இடையினம், உயிர்மெய், அணியாய், இலக்கணமாய் இலக்கியமாய் என் குருதி கலந்த தாய்த்தமிழை ஆதிக்கம் செய்ய வரும் சமஸ்கிருதத்தை அடித்துத் துரத்தினால் நான் நரகாசுரன். கருவறைக்குள் வந்தால் தீட்டு,...

வாசகர்களிடமிருந்து…

வாசகர்களிடமிருந்து…

‘எழுத்தில் வராத வரலாறுகள் – களப்பணி யாளர்களின் வாய்மொழியாக பதிவு செய்யப்படும்போது இயக்கச் செயல்பாடுகளையும் தோழர்களின் உணர்வுகளை யும் உணர முடிகிறது. 14 வயதில் பெரியாரிடம் வந்து 23ஆவது வயதில் அரசுப் பணியில் சேர்ந்து ஓய்வுக்குப் பிறகு சைவ சித்தாந்தத்தில் ஈடுபட்ட நிலையிலும் தன்னை ஆட்கொண்ட தலைவர் பெரியார்தான் என்று கூறம் மா.கோபாலின் வாய்மொழி வரலாறு மெய்சிலிர்க்க வைத்தது. அன்று சென்னையில் திராவிடர் கழகம் எப்படி செயல்பட்டது; கூட்டங்கள் எப்படி நடத்தப்பட்டன என்ற வரலாறுகளை இளைய தலைமுறைக்கு உணர்த்தியது, இந்த வாய்மொழி வரலாறு. – மணி, திருச்சி ‘பிரம்மத்தைப் பார்த்த பிரமாணன் உண்டா?’ என்ற புத்தர் இயக்கம் பற்றிய கட்டுரை பல தகவல்களை அறிய உதவியது. முடிதிருத்தும் நாவிதர் சமூகத்தைச் சார்ந்த உபாலி – பவுத்த சங்கத்தில் புத்தருக்கு அடுத்த இடத்தில் உயர்த்தப்பட்டதோடு பவுத்த நூலான திரிபிடகத்தைப் படித்து மற்றவர்களுக்கு விளக்கக்கூடிய நிலையிலும் இருந்திருக்கிறார் என்பது அந்த காலத்தில் புத்தர் செய்த...

அனுமதி பெறாத சர்ச்சுகளை இழுத்து மூடியது சீனா

அனுமதி பெறாத சர்ச்சுகளை இழுத்து மூடியது சீனா

கடவுள் மதமறுப்பு நாத்திகக் கொள்கையை ஏற்றுக் கொண்டுள்ள சீன நாடு, கட்டுப்பாடற்ற மத நடவடிக்கைகளுக்கு கடிவாளம் போட்டு வருகிறது. குறிப்பாக கிறிஸ்தவ சர்ச்சுகள், அரசு அங்கீகாரம் பெற்றவையாக இருக்க வேண்டும். அத்தகைய சர்ச்சுகளில் மட்டுமே வழிபாடுகள் நடத்தப்பட வேண்டும். இந்த விதிமுறைகளை மீறி ஆங்கங்கே வீடுகளுக்கு கீழேயும் பொதுவிடங்களிலும் ‘சர்ச்’சுகளை நிறுவி வழிபாடுகள் நடத்தப்பட்டு வந்தன. பெய்ஜிங் உள்ளிட்ட பல்வேறு பிராந்தியங்களில் உரிய அனுமதி இன்றி நடத்தப்பட்ட இந்த சர்ச்சுகளை சீன அதிகாரிகள் சோதனையிட்டு இழுத்து மூடினர். அமெரிக்காவைச் சார்ந்த பாப்ஃபூ என்ற பாதிரியார், “சீனா மத உரிமைகளைப் பறிக்கிறது; வழிபாட்டு இடங்களை அவமதிக்கிறது; சர்வதேச சமூகம் இதைக் கண்டிக்க வேண்டும்” என்று அறிக்கை விடுத்துள்ளார். “அரசின் நாத்திகக் கொள்கைகளை சீர்குலைக்கும் கட்டுப்பாடற்ற மதப்பிரச்சாரத்தை சீனா அனுமதிக்காது” என அரசு அறிவித்துள்ளது. ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ (செப்.17, 2018) இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. நிமிர்வோம் நவம்பர் 2018 இதழ்

நேர்மைக்கு ஓர் இலக்கணம் பெரியாரின் நேர்மையே அவரது கொள்கைக்கு வலிமையான ஆயுதமாக இருந்திருக்கிறது.

நேர்மைக்கு ஓர் இலக்கணம் பெரியாரின் நேர்மையே அவரது கொள்கைக்கு வலிமையான ஆயுதமாக இருந்திருக்கிறது.

பெரியார் என்கிற மனிதர் சாதாரணமான மக்களுக்கு கடவுள் மறுப்பாளராகவும் பாசிசவாதிகளுக்கு எதிரியாகவும், ஒடுக்கப்பட்ட பெரும்பான்மை மக்களுக்கு போற்றத்தக்க தலைவராகவும் விளங்குகிறார் என்று சொன்னால் அவருடைய பொது வாழ்வில் அவர் பின்பற்றிய நேர்மை முக்கிய பங்காற்றுகிறது. அவருடைய வாழ்வு நீண்டது. அவர் நடத்திய போராட்டங்களின் எண்ணிக்கையும் நீண்டது. அதன் மூலம் மக்கள் பெற்ற நன்மைகளின் பட்டியலும் நீண்டது. அவரது வெற்றிக்கு அடிப்படையாக அமைந்தது அவருடைய மனித நேயமும் பொது வாழ்க்கையில் அவர் கடைபிடித்த நேர்மையுமே ஆகும். தந்தை பெரியார் தன்னுடைய வாழ்க்கையில் எப்போதும் யாரிடமும் நல்ல பெயர் எடுக்கவேண்டும் என்றோ அல்லது தன்னைக் குறித்து மற்றவர்கள் பெருமையாகப் பேசவேண்டும் என்றோ விரும்பியவரல்ல. ஒருமுறை வ.உ.சி.யும் பெரியாரும் ஒரே மேடையில் பேச நேர்ந்தபோது வ.உ.சி பெரியாரை தன் தலைவர் என்று பேசினார். இறுதியாக பேசிய பெரியார், வ.உ.சி பேசும்போது என்னை அவருடைய தலைவர் என்று குறிப்பிட்டார். மன்னிக்க வேண்டும் அவருக்கு தலைவராக இருக்கக் கூடிய...

மக்கள் நலத் திட்டங்களை எதிர்க்கும் ‘முதலாளித்துவ பார்ப்பனியம்’ – செ. கார்கி

மக்கள் நலத் திட்டங்களை எதிர்க்கும் ‘முதலாளித்துவ பார்ப்பனியம்’ – செ. கார்கி

இலவசங்களைக் கேலி செய்யும் ஜெயமோகன் – முருகதாசுகள் பன்னாட்டு நிறுவனங்களின் பல இலட்சம் சுருட்டல்களுக்கு என்ன நியாயம் கூறுவார்கள்? தமிழ்நாட்டில் கொஞ்ச காலமாக திராவிட எதிர்ப்பு பேசும் அமைப்புகள் திட்டமிட்டு இளைஞர்கள் மத்தியில் தமிழக அரசு வறிய மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் நோக்கில் கொடுக்கும் பல நலத்திட்டங்களை கொச்சைப்படுத்தும் நோக்கில் அவதூறு பிரச்சாரத்தை முடுக்கிவிட்டுள்ளனர். ‘சர்கார்’ திரைப்படத்தை பார்த்த சில இளைஞர்கள் ஜெயமோகன், முருகதாஸ் போன்ற பார்ப்பன அடிமைகளின் விஷக் கருத்துக்களை உண்மை என்று நம்பி அரசு கொடுத்த கிரைண்டர், மிக்சி, டீவி, லேப்டாப் போன்றவற்றை உடைத்தும் தீக்கிரையாக்கியும் வீடியோ பதிவுகளை வெளியிட்டனர். தமிழக அளவில் பெரும் சர்ச்சையை இந்தத் திரைப்படம் ஏற்படுத்தியது. அந்தப் படம் திரையிடப்பட்ட பல திரையரங்கங்கள் முன் வைக்கப்பட்டிருந்த நடிகர் விஜயின் கட் அவுட்டுகளை அதிமுகவினர் கிழித்தெறிந்தனர். பின்னர் இருவருக்கும் ஏற்பட்ட உடன்பாட்டின் படி சர்கார் படத்தில் இருந்து சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க ஒப்புக்கொண்ட பின்...

பட்டியல் இனப் பிரிவு இட ஒதுக்கீட்டில் கிரிமிலேயர்

பட்டியல் இனப் பிரிவு இட ஒதுக்கீட்டில் கிரிமிலேயர்

உச்சநீதிமன்றப் பட்டியல் இனப் பிரி வினரை தீர்மானிப்பதில் முதன்முறையாக ‘கிரிமிலேயரை’ப் புகுத்தி ஆபத்தான தீர்ப்பை வழங்கியிருக்கிறது உச்சநீதிமன்றம். உச்சநீதி மன்றத் தீர்ப்பை வரவேற்ற தமிழ்நாட்டுத் தலை வர்கள் இதை கவனத்தில் கொள்ள வில்லை. பட்டியல் இனப் பிரிவினர் மற்றும் பழங்குடியினருக்கான பதவிகளில் பதவி உயர்வு நிலையிலும் இடஒதுக்கீடு வழங்குவது குறித்து உச்சநீதிமன்றத்தின் அய்ந்து நீதிபதிகள் அடங்கிய அமர்வு அளித்துள்ள தீர்ப்பு – சமூக நீதிக்கு பெரும் பின்னடைவாகும். செப். 26ஆம் தேதி தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமை யிலான அமர்வு – பட்டியல் இனப் பிரிவு மற்றும் பழங்குடி மக்களுக்கு பதவி உயர்வில் இட ஒதுக்கீடு வழங்க முடியும் என்று தீர்ப்பளித்தது உண்மைதான்; ஆனால், ‘கிரிமிலேயர்’ எனும் வடிகட்டும் முறையை அதில் புகுத்தி, தீர்ப்பின் நோக்கத்தையே கெடுத்துவிட்டது. அது மட்டுமின்றி, பதவி உயர்வில் இடஒதுக்கீட்டை வழங்குவதா வேண்டாமா என்பதை அந்தந்த மாநிலங்களே முடிவு செய்து கொள்ளலாம் என்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது....

ஆரியர்களே பூர்வீகக் குடிகள் என்ற வரலாற்றுப் புரட்டுகள் தகர்கின்றன

ஆரியர்களே பூர்வீகக் குடிகள் என்ற வரலாற்றுப் புரட்டுகள் தகர்கின்றன

திராவிட நாகரிகத்தை உறுதி செய்கிறது, ராகிகடி ஆய்வு அரியானாவில் ராகிகடி  என்ற இடத்தில் 4500 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த மிகப் பழமையான மனித எலும்புக் கூடு அறிவியல் சோதனைக்கு (டி.என்.ஏ.) உள்ளாக்கப்பட்டது.  அப்பகுதியில் வாழ்ந்த சிந்துவெளி நாகரிக மக்கள் திராவிடர்களே என்றும், ஆரிய மரபணு வழி வந்தவர்கள் அல்ல என்றும் அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்டு விட்டது. ஆரியர்கள் வந்தேறிகள் அல்ல; அவர்கள் பூர்வீகக் குடிகள் என்ற இந்துத்துவா வரலாற்றுப் புரட்டுக்கு சரியான  அறிவியல் மறுப்பாக வெளி வந்திருக்கும் இந்த ஆய்வை கடந்த 3 ஆண்டு காலமாக  வெளியிடாமலேயே ஆய்வாளர்கள் தயக்கம் காட்டி வந்தனர். ‘இந்தியா டுடே’ 2018 செப்.10இல் வெளிவந்த ஆங்கிலப் பதிப்பு ‘சங்கடம் தரும் உண்மை’ “ஹn ஐnஉடிnஎநnநைவே கூசரவா” என்ற தலைப்பில் விரிவான கட்டுரை வெளியிட்டுள்ளது. அதன் சுருக்கமான தமிழ் வடிவம்: புனேவின் டெக்கான் கல்லூரியின் துணை வேந்தரான டாக்டர் வசந்த் ஷிண்டே ஒரு அகழ்வாராய்ச்சியாளர். இவரும் இவரது...

‘இந்துராஷ்டிரம்’ உருவாக்க ‘படுகொலைகள்’

‘இந்துராஷ்டிரம்’ உருவாக்க ‘படுகொலைகள்’

‘சனாதன் சன்ஸ்தா’வின் பார்ப்பன பயங்கரவாத பின்னணி தபோல்கரிலிருந்து  – கவுரி லங்கேஷ் வரை சுட்டுக் கொன்ற இந்த அமைப்பு, இராணுவம், போலீசை வீழ்த்தவும் படை திரட்டுகிறது.  தேர்தல், நீதிமன்றம், ஜனநாயகத்துக்கு அவர்கள் அமைக்கப் போவதாகக் கூறும் இந்து இராஷ்டிரத்தில் இடமில்லை என்று தனது பத்திரிகையில் எழுதி வருகிறது. நகர்ப்புற கொரிலாக்கள் என்ற பெயரில் சமுதாய சிந்தனைகளை விதைத்து வரும் எழுத்தாளர்கள், கருத்தாளர்களை பயங்கரவாதி களாக்கி தேசத் துரோகக் குற்றச்சாட்டில் கைது செய்து வரும் மோடி ஆட்சி, ஆயுதம் ஏந்தி அரசுக்கு எதிராக போராடி வரும் ‘சனாதன் சன்ஸ்தா’ என்ற இந்து மதவெறி அமைப்பு மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மவுனம் காத்து வருகிறது. இந்து ஆன்மீகம் பேசிக் கொண்டே அரசுக்கு எதிரான ஆயுதம் தாங்கிய போரை நடத்துகிறோம் என்ற கொள்கையைக் கொண்ட இந்த அமைப்பு 2025க்குள் இந்தியாவை ‘கடவுள் ராஜ்யம்’ அல்லது ‘இந்து இராஷ்டிர’மாக மாற்றுவோம் என்ற இலக்கோடு செயல்பட்டு வருகிறது....

ஊழல் பெருச்சாளிப் பார்ப்பனர் கேத்தன் தேசாயை  காப்பாற்றி வரும் குஜராத் அரசு

ஊழல் பெருச்சாளிப் பார்ப்பனர் கேத்தன் தேசாயை காப்பாற்றி வரும் குஜராத் அரசு

தனியார் சுயநிதி மருத்துவக் கல்லூரி ஊழல் வழக்கில், முதல் குற்ற வாளியாக சேர்க்கப்பட்டுள்ள பார்ப்பன கேத்தன் தேசாயைத் தப்பவிடும் வேலையில், குஜராத் மாநில பாஜக அரசு ஈடுபட்டுள்ளது. பார்ப்பன கேத்தன் தேசாயிடம், சிபிஐ விசாரணை நடத்துவதற்கு அம்மாநில அரசு அனுமதி மறுத்துள்ளது.இந்திய மருத்துவக் கவுன்சிலின் தலைவராக இருந்தார் கேத்தன் தேசாய். இவர் தனதுபதவிக்காலத்தில், நாடு முழுவதும் தனியார் சுயநிதி மருத்துவக் கல்லூரி களுக்கு விதிகளை மீறி அனுமதி வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. கல்லூரி ஒன்றுக்கு தலா 25 கோடி முதல் 30 கோடி ரூபாய் வரைபெற்றதாகக் கூறப்பட்டது. மேலும், 200 தனியார் மருத்துவக் கல்லூரிகள், தலா 5 மருத்துவப் படிப்புக்கான இடங்களை கேத்தன் தேசாய்க்கு ஒதுக்கீடு செய்ததும், அந்த இடங்களை பல கோடி ரூபாய்க்கு மாணவர்களுக்கு அவர் விற்றதும் கண்டுபிடிக்கப் பட்டது. இதையடுத்து மருத்துவக் கவுன்சிலே கலைக்கப்பட்டதுடன், கேத்தன் தேசாய் மீதும் கடந்த 2010-ஆம் ஆண்டு சிபிஐ மூலம்வழக்கு பதிவு செய்யப்பட்டது....

பார்ப்பான் ஜாதிப் புத்தியை மாற்றிக் கொள்ள மாட்டான்

பார்ப்பான் ஜாதிப் புத்தியை மாற்றிக் கொள்ள மாட்டான்

பார்ப்பான் ஜாதிப் புத்தியை மாற்றிக் கொள்ள மாட்டான் என்று பார்ப்பன நீதிபதியின் முன்பாகவே முழக்கமிட்ட போராளி! 21 மாதங்கள் சிறை சென்ற ஜாதி ஒழிப்புப் போராளியின் நினைவலைகள் 25ஆவது அகவையில் அரசியல் சட்டத்தின் ஜாதியைப் பாதுகாக்கும் பிரிவுகளை எரித்து 21 மாதங்கள் சிறைத் தண்டனை பெற்ற பெரியார் தொண்டர் இடையாற்றுமங்கலம் முத்து செழியன். பெரும் பண்ணையார் குடும்பத்தில் பிறந்தவர். இப்போதும் சொந்த கிராமத்தில் கொள்கை உறுதியோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவரது வயது 86. சிறையிலிருந்த காலத்திலேயே திருச்சி தேசியக் கல்லூரியில் பட்டப்படிப்புக்கான தேர்வுகளை காவல்துறை பாதுகாப்புடன் எழுதியவர். வரலாற்றுச் சிறப்புமிக்க போராட்டத்தின் மெய்சிலிர்க்கும் நினைவுகளைப் பகிர்ந்து கொள்கிறார். தஞ்சாவூரில் 1957 நவம்பர் 3இல் நடந்த சாதி ஒழிப்பு ஸ்பெஷல் மாநாட்டில் மிகப் பெரிய ஊர்வலம் நடந்தது. அதில் எம்.ஆர். ராதா அவர்கள் வெள்ளைக் குதிரையில் வந்தார். அவருக்கு ஜோடியாக திருச்சி வீ.அ. பழனி இன்னொரு குதிரையில் வந்தார். இலட்சக்க ணக்கான மக்கள்...

நடுவண் ஆட்சியின் துரோகங்கள்

நடுவண் ஆட்சியின் துரோகங்கள்

தூத்துக்குடி மக்களை கதிர்வீச்சுக்கு உள்ளாக்கி  மக்களை நோயாளிகளாக மாற்றிய ‘ஸ்டெர்லைட்’ நிறுவனம் மீண்டும் அதிகாரத் திமிருடன் தூத்துக்குடியில் மக்கள் எதிர்ப்புகளை மதிக்காமல் நுழையத் துடிக்கிறது. 100 நாள் போராட்டத்தின் இறுதியில் காவல்துறையின் துப்பாக்கி சூட்டுக்கு 13 உயிர்களை பலி கொடுத்தனர் தூத்துக்குடி மக்கள். உச்சநீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்து வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை நீர்த்துப் போகச் செய்யும் தீர்ப்பை வழங்கிய பார்ப்பன நீதிபதி கோயல் ஓய்வு பெற்ற சில மணி நேரங்களிலே தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தலைவர் ஆனார். முன்னாள் நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் இந்த ஆலை பற்றிய ஆய்வை நடத்த ஒரு குழுவையும் அமைத்தார். குழுவில் தமிழகத்தைச் சார்ந்த நீதிபதியை இணைத்தால் தூத்துக்குடி மக்களுக்கு ஆதரவான முடிவு வந்துவிடும் என்பதால் அந்தக் கோரிக்கையை நிராகரித்தார். இப்போது தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாம் என்று அகர்வால் குழு பச்சைக்கொடி காட்டிவிட்டது. தமிழக அரசு ஆலையை மூடி சீல் வைத்து தவறு என்றும்...

தற்போது விற்பனையில் ‘நிமிர்வோம்’ –  நவம்பர் 2018 இதழ்

தற்போது விற்பனையில் ‘நிமிர்வோம்’ – நவம்பர் 2018 இதழ்

நடுவண் ஆட்சியின் துரோகங்கள் – தலையங்கம் ஜாதி ஒழிப்புப் போராளியின் நினைவலைகள் “இந்து இராஷ்டிரம்” அமைக்க படுகொலைகளை நடத்தும் அமைப்பு – அதிர்ச்சித் தகவல்கள் ஆரியர்களே பூர்வீகக் குடிகள் என்ற வரலாற்றுப் புரட்டுகள் தகர்கின்றன சீடர்களுடன் புத்தர் நடத்திய அறிவார்ந்த விவாதங்கள் பட்டியல் இனப்பிரிவு இட ஒதுக்கீட்டில் கிரிமிலேயர் மற்றும் பெரியார் சிந்தனைகளுடன்… தனி இதழ் விலை : ரூ.20 தொடர்புக்கு:  நிர்வாகி, 95, டாக்டர் நடேசன் சாலை, அம்பேத்கர் பாலம், மயிலாப்பூர், சென்னை-600 004. தொலைபேசி எண்: 044 24980745/7299230363 www.dvkperiyar.com/nimirvomdvk@gmail.com பெரியார் முழக்கம் 20122018 இதழ்

கவுசல்யா மறுமணம் ஆணவப் படுகொலைக்கு எதிராக இணைந்த கைகள்

கவுசல்யா மறுமணம் ஆணவப் படுகொலைக்கு எதிராக இணைந்த கைகள்

திருப்பூர் மாவட்டம் உடுமலைப் பேட்டை அருகே உள்ள குமரலிங்கம் எனும் கிராமத்தைச் சேர்ந்த சங்கரும் பழநியைச் சேர்ந்த கவுசல்யாவும் பொள்ளாச்சியில் உள்ள பொறியியல் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போது 2015இல் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டனர்.  சங்கர் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் ஜாதி வெறியுடன் கவுசல்யா வின் பெற்றோர் இத்திருமணத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். 2016 மார்ச் மாதம் உடுமலைப்பேட்டையில் பட்டப் பகலில் சங்கர் படுகொலை செய்யப்பட்டார். கொலைக்கு திட்டமிட்ட கவுசல்யாவின் பெற் றோர்கள் தண்டிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில் கவுசல்யா மறுமணம் புரிய துணிவுடன் முடிவெடுத்தார். கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழக அலுவலகத்தில் டிசம்பர் 9ஆம் தேதி மறுமணம் நடந்தது. பறை இசை முழங்க நடந்த அந்தத் திருமணத்தில் சங்கரின் தந்தை வேலுச்சாமியும் சங்கரின் சகோதரர் களும் கலந்து கொண்டு இணையரை வாழ்த்தினர். இனி, “ஜாதி ஒழிப்புக் களத்தில் துணைவருடன் இணைந்து செயல்படுவேன். ஆணவப் படுகொலைக்கு...

அய்ராவதம் மகாதேவன் முடிவெய்தினார்

அய்ராவதம் மகாதேவன் முடிவெய்தினார்

அய்.ஏ.எஸ். அதிகாரியாக பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்று ‘தினமணி’ நாளேட்டில் ஆசிரியராக நான்காண்டு காலம் பணியாற்றி, பிறகு எழுத்தியல் குறித்த ஆய்வில் பெரும் சாதனை முத்திரைகளைப் பதித்த அய்ராவதம் மகாதேவன் முடிவெய்தினார். பார்ப்பனராகப் பிறந்தாலும் அவர் சார்பு நிலையற்ற ஆய்வாளராக வாழ்ந்து காட்டிய அபூர்வ மனிதராகவே வாழ்ந்தார். சிந்து சமவெளி நாகரிக எழுத்துக்கள் திராவிட நாகரிகத்துக்கு உரியவை என்பதை ஆதாரங்களுடன் நிரூபித்தார். தமிழ் பிராமி எழுத்துகள் தான் மிகவும் பழமையானது என்பதை நிறுவியவர். சிந்து வெளி நாகரிகம், ஆரிய நாகரிகமே என்று வரலாற்றுத் திரிபு செய்த பார்ப்பனியத்துக்கு மறுப்பாக அவரது ஆய்வு அமைந்தது. இந்திய வரலாற்று ஆய்வு மய்யத்தின் நிதி உதவியோடு அவர் நடத்திய ஆய்வுகளை இந்திய தொல்லியல் துறை 1977இல் நூலாக வெளியிட்டது. மண்டல் பரிந்துரையில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு ஆணை வந்தபோது பார்ப்பனர்கள் கடுமையாக எதிர்த்த நிலையில் அதை ஆதரித்தவர் அய்ராவதம் மகாதேவன். தனது 88ஆவது வயதில்...

முன்னாள் நீதிபதி சந்துரு சாடுகிறார் ஆகமங்களை அறியாமலேயே தீர்ப்பு வழங்கும் நீதிபதிகள்

முன்னாள் நீதிபதி சந்துரு சாடுகிறார் ஆகமங்களை அறியாமலேயே தீர்ப்பு வழங்கும் நீதிபதிகள்

நீதிபதிகள் ஆகமங்களையே அறியாமல் தீர்ப்பு சொல்லுகின்றனர் என்று சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி கே.சந்துரு கூறினார். வழக்கறிஞர் சிகரம் ச. செந்தில் நாதனின் படைப்புலகம் குறித்த ஆய்வரங்கு  டிச.16 அன்று சென்னை யில் நடைபெற்றது. இந்நிகழ்வின் நிறைவாக சிறப்புரை யாற்றிய அவர், “நீதிபதிகளே ஆகமம் என்றால் என்னவென்று தெரியாமல் தீர்ப்பு வழங்குகின்றனர். காஞ்சி வைணவக் கோவிலில் தமிழில் பாசுரங்களை பாடக் கூடாது என்று ஒரு வழக்கு. அதன்மீது தீர்ப்பளித்த உயர்நீதிமன்ற நீதிபதி, ஆகம விதிப்படி தமிழில் பாட தடைவிதிப்பதாக தீர்ப்பளித்தார். அந்த நீதிபதியைத் தொடர்பு கொண்டு எந்த ஆகமத்தை படித்துப்பார்த்து தீர்ப்பு வழங்கினீர்கள்? ஏற்கெனவே ஆகமம் குறித்து நான் வழங்கிய தீர்ப்பைக் கூட படிக்கவில்லையா? என்று கேட்டேன். அவரிடம் பதில் இல்லை. ஆகமங்கள், கோவில்கள் குறித்து செந்தில்நாதன் புத்தகம் எழுதி யுள்ளார். அவற்றை முதலில் நீதிபதி களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும். ஒரு வழக்கு வருகிறதென்றால், நீதிபதிகள், அதை நன்கு...

பெரியார் இயக்கம் சந்தித்த அடக்குமுறைகள் (2) அரசியல் சட்ட எரிப்புக் கிளர்ச்சி

பெரியார் இயக்கம் சந்தித்த அடக்குமுறைகள் (2) அரசியல் சட்ட எரிப்புக் கிளர்ச்சி

22.9.2018 அன்று பெரம்பூரில் வடசென்னை மாவட்டக் கழகம் நடத்திய கருத்தரங்கில் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் ‘பெரியார் இயக்கம் சந்தித்த அடக்குமுறைகள்’ என்ற தலைப்பில் நிகழ்த்திய உரையி லிருந்து. பகுதி 1 ஒரு நாட்டின் அரசியல் சட்டப் பிரிவுகளையே 10,000 பேர் தீயிட்டுக் கொளுத்திய போராட்ட வரலாறு – பெரியார் இயக்கத்துக்கு மட்டுமே உண்டு. 1957 நவம்பர் 26இல் அரசியல் சட்டத்தில் ஜாதி இழிவு ஒழிப்புக்குத் தடையாக உள்ள உட்பிரிவுகளான 13(2), 25(1), 26(1), 26(2), 368 பிரிவுகளை தீயிட்டு எரிக்கும் போராட்டத்தை தஞ்சையில் திராவிடர் கழக சிறப்பு மாநாட்டை 3.11.1957 அன்று கூட்டி பெரியார் அறிவித்தார். சரியாக 24 நாட்கள் இடைவெளியில் சட்ட எரிப்புப் போராட்டத்தை பெரியார் அறிவித்தார். பெரியார் தஞ்சை  மாநாட்டுச் சிறப்பை தனது உரையில் இவ்வாறு குறிப்பிட்டார். “எனது 40 ஆண்டுகால வாழ்க்கையில் எத்தனையோ மாநாடுகள் நடந்திருக்கின்றன. தலைமை வகித்திருக்கிறேன்; சுயமரியாதை இயக்க கால முதல்...

போலி அறிவியலை தோலுரித்த நரேந்திர தபோல்கர்

போலி அறிவியலை தோலுரித்த நரேந்திர தபோல்கர்

நரேந்திர அச்சுத் தபோல்கர் (1945-2013) ஒரு பிரபலமான அறிவியல் ஆர்வலர், பகுத்தறிவுப் போராளி மற்றும் எழுத்தாளர். 2013 ஆகஸ்ட் 20 அன்று காலையில் நடை பயிற்சியில் இருந்தபோது சுட்டுக் கொல்லப்பட்டார். தபோல்கரைப் பற்றி உடனேயே அறிவியல் கதிரில் கட்டுரை வெளியிட்டிருக்கிறோம். மனிதத் தன்மையற்ற மூடநம்பிக்கைகளுக்கெதிராக அவரது இடைவிடாத பிரச்சாரத்தின் காரணமாகவும் மக்களிடையே அறிவியல் கண்ணோட்டத்தைப் பரப்பி வந்ததற்காகவும்தான் அவர் கொல்லப்பட்டார் என்பது வெளிப்படையான உண்மை. தபோல்கர்தான் முதல் பலி என்பதுபின்னர் தெரிந்தது. 2015 பிப்ரவரி 20 அன்று கோவிந்த் பன்சாரே, அதே வருடம் ஆகஸ்ட் 30 அன்று எம்.எம்.கல்புர்கி, 2017 செப்டம்பர் 5 அன்று கௌரி லங்கேஷ்ஆகிய பகுத்தறிவாளர்களும் மதச்சார்பின்மைக்காகப் போராடியவர்களும் செயல்பாட்டாளர்களும் ஆன மேலும் மூவர் வரிசையாகக் கொல்லப்பட்டனர். `சனாதன் சன்ஸ்தா’ என்ற இந்துத்துவ பயங்கரவாத அமைப்புதான் இவர்களைக் கொலை செய்த குற்றத்தைச் செய்தது என்று கர்நாடக சிறப்புப் புலனாய்வு குழு தற்போது உறுதிப்படுத்தியுள்ளது. சமூகத்தில் தபோல்கரின் தலையீடுகள் காரணமாக...

பெரியார்-அம்பேத்கர் நினைவு நாள்  பொதுக் கூட்டம்

பெரியார்-அம்பேத்கர் நினைவு நாள் பொதுக் கூட்டம்

பெரியார் –  அம்பேத்கர் நினைவு நாள் பொதுக் கூட்டம் 2018, டிசம்பர் 13ஆம் தேதி சென்னை சேத்துப்பட்டு பெரியார் திடலில் திராவிடர் விடுதலைக் கழக சார்பில் நடைபெற்றது. பா. ராஜன் தலைமை தாங்கினார். கோ. இளங்கோ (விடுதலை சிறுத்தைகள்), புவன் (மக்கள் அதிகாரம்) ஆகியோர் உரையாற்றியதைத் தொடர்ந்து கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், முனைவர் சுந்தரவள்ளி உரையாற்றினர். வடசென்னை மாவட்டக் கழகத் தோழர் சா. ராஜீ நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். தொடக்கத்தில் சமர்கலைக் குழுவினரின் பறை இசை நிகழ்வு நடைபெற்றது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி குழுவினருக்கு நூல்களை வழங்கி பாராட்டினார். பெரியார் முழக்கம் 20122018 இதழ்

மேதகு பிரபாகரன் பிறந்த நாளில் மாணவர்களுக்கு கல்வி உதவி

மேதகு பிரபாகரன் பிறந்த நாளில் மாணவர்களுக்கு கல்வி உதவி

திராவிடர் விடுதலைக் கழகம் மற்றும் கற்க கல்வி அறக்கட்டளை சார்பில் தமிழீழத் தேசிய தலைவர் வே. பிரபாகரன் 64ஆவது பிறந்த நாள் விழா மற்றும் மாணவர்களுக்கு கல்வி உதவி வழங்கும் விழா சென்னை மேடவாக்கம்  தமிழ் வழிப் பள்ளியில்  கரு அண்ணாமலை தலைமை யில் நடந்தது. பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவி வழங்கி இனமான நடிகர் சத்யராஜ், திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி, பொழிலன் (த.வி.க. தலைவர்) உரையாற்றினர். தலைவர் பிரபாகரன் பிறந்த நாள் விழாவில் மாணவர்கள் தமிழில் பிறந்த நாள் வாழ்த்து பாடல்கள் பாடி கேக் வெட்டி பிறந்த நாள் விழா கொண்டாடினர்.  உமாபதி, சுப்பிரமணி பொற்கோவன், பெரியார் மணிமொழியன் கண்ணன், சிலம்பம் சிவாஜி, கரிகாலன் சுரேஷ், மூவேந்தன், மதன்குமார் மற்றும் திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள், கற்க கற்க கல்வி அறக்கட்டளை தோழர்கள், பள்ளி மாணவர்கள் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். பெரியார் முழக்கம் 20122018 இதழ்

கோவை கல்லூரி விழாவில் ‘பெண் ஏன் அடிமையானாள்?’ நூல் அறிமுகம்

கோவை கல்லூரி விழாவில் ‘பெண் ஏன் அடிமையானாள்?’ நூல் அறிமுகம்

கோவை அன்னூர் அருகே குப்பேபாளையம் கிராமத்தில் உள்ள ஜி.ஆர்.ஜி. தொழில்நுட்பக் கல்லூரியில் டிசம்பர் 14, 2018 அன்று முத்தமிழ் விழா நடந்தது. விழாவில் கோவை திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள் நிர்மல், வெங்கட் ஆகியோர் பங்கேற்று, பெரியாரின் “பெண் ஏன் அடிமையானாள்?” நூல் குறித்து மாணவ மாணவிகளிடம் பேசினர். ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் உள்பட 230 பேர் நிகழ்வில் பங்கேற்றனர். கல்லூரி முதல்வர் சங்கர சுப்பிரமணியம் பங்கேற்றார். கவிஞர் வைகை சுரேஷ், இந்நிகழ்வை மிகுந்த ஆர்வத்தோடு ஏற்பாடு செய்தார். 10 ரூபாய் விலையில் வெளியிடப்பட்டுள்ள நூலை தனது சொந்தப் பணத்தில் வாங்கி, மாணவிகளுக்கு வழங்கினார் வைகை சுரேஷ். கல்லூரியின் மனித வள மேம்பாட்டு அலுவலர் பாபு, மற்றும் நாட்டு நலப் பணித் திட்ட  ஒருங் கிணைப்பாளர்கள் நிகழ்வுக்கு ஒத்துழைப்பு வழங்கினர். சில மாதங்களுக்கு முன்பு இங்கே கல்லூரி நிகழ்வில் பங்கேற்றுப் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்...

‘கருஞ்சட்டைப் பேரணி’க்கு திரளுவீர்!

‘கருஞ்சட்டைப் பேரணி’க்கு திரளுவீர்!

அன்பார்ந்த தோழர்களுக்கு, வணக்கம். தந்தை பெரியாரின் 45ஆம் நினைவுநாளை (24.12.1973) முன்னிட்டு வரும் டிசம்பர் 23, 2018 அன்று திருச்சியில் ‘காவி பயங்கரவாதத்தை’ வீழ்த்த இலட்சம் பேர் பங்கேற்கும்  கருஞ் சட்டைப் பேரணி – மாநாடு நடைபெற உள்ளது. பேரணியையும், மாநாட்டையும் வெற்றி பெற செய்ய வேண்டியது நம்முடைய கடமையும், உரிமையும் ஆகும். குறிப்பாக காவி பயங்கரவாதம் தமிழ் நாட்டையும், இந்திய துணை கண்டத்தையும் கார் இருளுக்குள் தள்ளிவிட்டது. வரலாற்றில் இதுவரை கண்டிராத அளவில் மனிதனை மனிதன் அடித்துக் கொல்லும் கொடூரமான கொடுங்கோல் ஆட்சியை மோடி தலைமையில் ஆர்.எஸ்.எஸ்.சும், பி.ஜே.பி.யும் நடத்திக் கொண்டு இருக்கின்றன. இதற்கு மேலும் பொறுமையாகக் கடந்து செல்வது. தன்மானமுள்ள தமிழனுக்கு அவமானம்.  தமிழினத்தைப்  பாதுகாக்க தமிழ் இளைஞர்கள் தோள் கொடுக்கவேண்டிய தருணம் இது. மேலும் பெரியாரிய, மார்க்சிய, அம்பேத்கரிய, தமிழ்த் தேசிய, ஜனநாயக சிந்தனையாளர்கள்  ஒரு குடையின் கீழ் திரள உள்ளனர். இங்கே எந்த வேறுபாடும் இல்லை....

160க்கும் மேற்பட்ட அமைப்புகள் பங்கேற்கின்றன கருஞ்சட்டைப் பேரணிக்கு திருச்சி நோக்கி திரளுகிறார்கள்

160க்கும் மேற்பட்ட அமைப்புகள் பங்கேற்கின்றன கருஞ்சட்டைப் பேரணிக்கு திருச்சி நோக்கி திரளுகிறார்கள்

திருச்சியில் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் டிசம்பர் 23 அன்று நடைபெறவுள்ள பெரியார் நினைவு கருஞ்சட்டைப் பேரணி மற்றும் தமிழின உரிமை மீட்பு மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கும் பத்திரிக்கையாளர் சந்திப்பு 17.12.2018 அன்று சென்னையில் நடைபெற்றது. இந்த பேரணி மற்றும் மாநாட்டில் இது வரையில் 160க்கும் மேற்பட்ட அமைப்புகள் இணைந்திருக்கின்றன. தமிழ்நாடு முழுதும் உள்ள பெரியார் கொள்கைகளை ஏற்கும் அனைத்து அமைப்புகளும், படைப்பாளி களும், செயல்பாட்டாளர்களும், தமிழின உணர்வாளர்களும் கருப்புச் சட்டை அணிந்து இந்த பேரணியில் பங்கேற்கிறார்கள். 19.12.2018 அன்று அனைத்து அமைப்பு களின் பெயர்களையும் உள்ளடக்கிய முழுமையான பட்டியல் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. பொதுமக்களும், பெண்களும், மாணவர் களும், இளைஞர்களும் பெருமளவில் திரண்டு பேரணி மற்றும் மாநாட்டில் பங்கேற்க வேண்டுமென அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில், தமிழக மக்கள் முன்னணியின் ஒருங்கிணைப்பாளர் பொழிலன், விடுதலை தமிழ்ப்புலிகள் கட்சி யின் தலைவர் குடந்தை அரசன், திராவிடர் விடுதலைக் கழகத்தின் சென்னை...

கருத்தரங்கம் – கேள்வி பதில்  “மதவெறியும் மனிதநேயமும்” மார்த்தாண்டம் 16122018

கருத்தரங்கம் – கேள்வி பதில் “மதவெறியும் மனிதநேயமும்” மார்த்தாண்டம் 16122018

அறிவுக்களஞ்சியம் நூலகம் 322வது நிகழ்வு கருத்தரங்கம் – கேள்வி பதில்  “மதவெறியும் மனிதநேயமும்” தோழர் கொளத்தூர் மணி உரை     இடம் : அறிவுக் களஞ்சியம் நூலகம் மார்கெட் ரோடு, மார்த்தாண்டம் தொடர்புக்கு 9487275631   நேரம் 16.12.2018 மாலை 6 மணி அனைவரும் வருக, அனுமதி இலவசம்

பெரியார் இயக்கம் சந்தித்த அடக்குமுறைகள் (1) பிரிட்டிஷ் ஆட்சி தொடர்ந்த இராஜதுவேஷ வழக்கு

பெரியார் இயக்கம் சந்தித்த அடக்குமுறைகள் (1) பிரிட்டிஷ் ஆட்சி தொடர்ந்த இராஜதுவேஷ வழக்கு

22.9.2018 அன்று பெரம்பூரில் வடசென்னை மாவட்டக் கழகம் நடத்திய கருத்தரங்கில் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் நிகழ்த்திய உரையிலிருந்து. “பெரியார் இயக்கம் சந்தித்த அடக்குமுறைகள்” என்ற தலைப்பு எனக்கு தரப்பட்டிருக்கிறது. பெரியார் இயக்க வரலாற்றிலிருந்து ஒரு சில நிகழ்வுகளை மட்டும் தேர்வு செய்து பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன். 1932ஆம் ஆண்டு ‘குடிஅரசு’ பத்திரிகையில் “இன்றைய ஆட்சி முறை ஏன் ஒழிய வேண்டும்” என்று பெரியார் எழுதிய கட்டுரைக்காக அவர் மீது ‘இராஜ துவேஷ’ வழக்கை அன்றைய பிரிட்டிஷ் ஆட்சி போட்டது. கட்டுரை அப்படி ஒன்றும் கடுமையானதும் அல்ல. “ஏழை எளிய மக்களுக்கு கல்வி வேலை வாய்ப்புகளை வழங்காமல், பணக்காரர்களுக்கு, பரம்பரை மேல் ஜாதிக்காரர்களுக்கு மட்டும் அரசு மக்களின் வரிப்பணத்தை விரயமாக்குகிறது” என்பதே கட்டுரையின் உள்ளடக்கம் (குடிஅரசு, 29.10.1933). பெரியார் மட்டும் கைது செய்யப்படவில்லை. பத்திரிகையின் பதிப்பாளர் – அச்சிடுபவராக இருந்த பெரியாரின் தங்கை கண்ணம்மாவும் கைது செய்யப்பட்டார். கோவை...

2019ஆம் ஆண்டுக்கான கழக நாள்காட்டி

2019ஆம் ஆண்டுக்கான கழக நாள்காட்டி

கண்ணைக் கவரும் வண்ணப்படங் களுடன் தயாராகி வருகின்றன. ஒரு நாள்காட்டியின் விலை ரூ.70/- தேவைப்படுவோர் முன்பதிவு செய்து கொள்ள வேண்டுகிறோம். முன் பதிவு எண்ணிக்கைக்கேற்ப மட்டுமே நாட்காட்டிகள் அச்சிடப்படு கின்றன. தொடர்புக்கு : தபசி. குமரன், தலைமைக் கழக செயலாளர். தொடர்பு எண் : 9444025408 பெரியார் முழக்கம் 13122018 இதழ்

எது இந்து மதம்? எது இந்துத்துவா?

எது இந்து மதம்? எது இந்துத்துவா?

ம.பி., இராஜஸ்தான் சட்டமன்றத் தேர்தல் கள்  – பரப்புரைக் கூட்டத்தில் ‘இந்துத்துவம்’ குறித்து காரசார விவாதம் நடக்கிறது. காங்கிரஸ் தலைவர் இராகுல் காந்தி, இந்துத்துவத்தின் அடிப்படையை மோடி புரிந்து கொள்ளவில்லை என்று பேச, அதற்கு மோடி இந்துத்துவம் பற்றி நீங்கள் எங்கு தெரிந்து கொண்டீர்கள்? என்று எதிர் கேள்வி கேட்டிருக்கிறார். இரண்டு தரப்புக்கும் இப்போது நாம் சில கேள்விகளை கேட்க வேண்டியிருக்கிறது. ‘இந்து’ என்ற பெயர் – வேதம், இதிகாசம், புராணம் உள்ளிட்ட எந்த மத நூல்களி லாவது இருக்கிறதா? ‘இல்லை’ என்று கூறுகிறோம். இருக்கிறது என்பதற்கு ஆதாரம் காட்டத் தயாரா? இந்து மதத்தை விமர்சித்தால் ‘தேச விரோதிகள்’ என்று கூப்பாடு போடுகிற எச்.ராஜா உள்ளிட்ட பார்ப்பனர்களும் சங் பரிவாரங்களும் ‘இந்து’ என்ற பெயர் பிரிட்டிஷ்காரன் சூட்டியது என்பதை மறுக்க முடியுமா? இந்து மதத்தின் ‘மனிதத் தெய்வமாகப்’ பார்ப்பனர்களும் சங்பரிவாரங்களும் தலையில் தூக்கி வைத்து ஆடிக் கொண்டிருக்கும் இறந்து போன சீனியர்...

மேக தாது அணை: நடுவண் அரசின் துரோகம்

மேக தாது அணை: நடுவண் அரசின் துரோகம்

வீடு கட்டுவதற்கான திட்டங்களுக்குத் தான் வீட்டுவசதி வாரியம் ஒப்புதல் தந்திருக்கிறது. அதற்காக வீடு கட்டுவதற்கு ஒப்புதல் தரவேண்டும் என்ற அவசியமில்லை என்று வீட்டுவசதி வாரியம் கூறினால் எப்படி இருக்கும்? கட்டப் போகாத வீடுகளுக்கு ஏன் திட்ட நகலை தயாரிக்க வேண்டும்? அந்தத் திட்ட நகலுக்கு அங்கீகாரம் வழங்க வேண்டும் என்று சராசரி அறிவுள்ளவர்கள் கூட கேட்பார்கள். காவிரியின் குறுக்கே மேகதாதுபகுதியில் அணைகட்டும் திட்டம் ஒன்றுக்கு வரைவு நகலை தயாரித்து கருநாடக அரசு மத்திய நீர் ஆணையத்துக்கு அனுப்பியவுடன், ஆணையம் ஒப்புதல் வழங்கி விட்டது. பா.ஜ.க.வினர், வரைவுத் திட்ட அறிக்கைக்குத் தானே ஒப்புதல் தரப்பட்டிருக்கிறது. திட்டத்துக்கு ஒப்புதல் தரவில்லையே என்று இப்போது வாதம் செய்கிறார்கள். காவிரிப் பிரச்சினையில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு; அதைத் தொடர்ந்து மத்திய நீர்வள அமைச்சகம் வெளியிட்ட அரசாணைகளின் அடிப்படையில் மேகதாதுவில் அணை கட்டும் முயற்சிகள் தொடங்கும் நிலை யிலேயே அதைத் தடுத்திருக்க வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்ட போது...

டிசம்பர் 23 பேரணி தோழர்களே தயாராகி விட்டீர்களா?

டிசம்பர் 23 பேரணி தோழர்களே தயாராகி விட்டீர்களா?

திருச்சியில் டிசம்பர் 23இல் பெரியார் உணர்வாளர்கள் நடந்த இருக்கும் கருஞ்சட்டைப் பேரணிக்கு பேராதரவு பெருகி வருகிறது. கலைஞர்கள், எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள் மிகவும் உற்சாகத்துடன் இந்த முயற்சியை பாராட்டி வரவேற்று பேரணியில் பங்கேற்க ஆர்வம் காட்டி வருகின்றனர். புதிய அமைப்புகளும் தங்கள் ஆதரவைத் தெரிவித்து வருகின்றன. அதிகாரம் இருக்கிறது என்ற இறுமாப்புடன் தமிழ்நாட்டின் தனித்துவத்துக்கும் சமூக நீதிக்கும் சவால் விட்டு வரும் மதவெறி சக்திகளுக்கு தமிழ்நாடு – பெரியார் மண் என்பதை உணர்த்துவோம். திருச்சி கருஞ்சட்டைக் கடலாக வேண்டும் தோழர்களே! தனிப் பேருந்துகளில் அணி அணியாகத் திரளுவீர்! பெரியார் முழக்கம் 13122018 இதழ்

சந்தா சேர்ப்பு இயக்கம்: கழகத் தோழர்களுக்கு முக்கிய வேண்டுகோள்

சந்தா சேர்ப்பு இயக்கம்: கழகத் தோழர்களுக்கு முக்கிய வேண்டுகோள்

கழக ஏடுகளான ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’, ‘நிமிர்வோம்’ இதழ்களுக்கான சந்தா சேர்ப்புப் பணிகளை டிசம்பர் 15ஆம் தேதிக்குள் முடித்துத் தருமாறு தோழர்களைக் கேட்டுக் கொள்கிறோம். கழகத்தின் இணைப்பு சக்தியாய் விளங்குவது கழகத்தின் ஏடுகள் தான்! கழக ஏடுகளை பரப்புவதன் வழியாக கழகத்தின் வளர்ச்சியை மேலும் தீவிரமாக்க முடியும் என்பதை உணர்ந்து சந்தா சேர்ப்பு இயக்கத்தில் முனைப்புக் காட்டி செயல்படுமாறு தோழர்களைக் கேட்டுக் கொள்கிறோம். – தலைமைக் கழகம் பெரியார் முழக்கம் 13122018 இதழ்

மதவாதிகளின் முயற்சி முறியடிப்பு

மதவாதிகளின் முயற்சி முறியடிப்பு

திருப்பூரில் இந்து முன்னனி அமைப்பைச் சார்ந்தவர் களின் மகா யாக பூஜைக்கு பள்ளி மாணவர் களிடம் செங்கல், பூ, நெய் ஆகியவை எடுத்து வர வலியுறுத்தப்பட்டார்கள் அதை தடுத்து நிறுத்தும் நடவடிக்கையாக மாவட்ட ஆட்சியரிடமும், கல்வி முதன்மை அதிகாரியிடமும் திருப்பூர் கழகம் சார்பில் 3.12.2018 அன்று புகார் மனு வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மனு மீது  நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். நிகழ்வில்    திராவிடர் விடுதலைக்கழகம், தந்தை பெரியார் திராவிடர் கழகம், பதியம் இலக்கிய அமைப்பு மற்றும் பல்வேறு அமைப்புகள் கலந்து கொண்டன. பெரியார் முழக்கம் 13122018 இதழ்

சின்னியம்பாளையத்தில் அம்பேத்கர் நினைவு பொதுக் கூட்டம்

சின்னியம்பாளையத்தில் அம்பேத்கர் நினைவு பொதுக் கூட்டம்

கோவை சின்னியம் பாளையத்தில் டிசம்பர் 6ஆம் தேதி அம்பேத்கரின் 62 ஆவது நினைவு நாளை முன்னிட்டு டிசம்பர் 1ஆம் தேதி நினைவு நாள் பொதுக்கூட்டம் சிவா தலைமையில் நடைபெற்றது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி  மற்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட துணைச் செயலாளர் வழக்கறிஞர் சீலாராஜ் உரையாற்றினர். டி.கே.ஆர். குழுவின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. பொதுக்கூட்டத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி முன்னிலையில் திராவிடர் விடுதலை  கழகத்தில்  சிலம்பரசன் (வழக்கறிஞர்), ரஞ்சித் இணைந்தனர். அவர்களுக்கு நிமிர்வோம் இதழை கழகத் தலைவர் கொளத்தூர் மணி வழங்கி வரவேற்றார். பெரியார் முழக்கம் 13122018 இதழ்

தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம்  பாசிச எதிர்ப்பு நாள் கண்டன ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம் பாசிச எதிர்ப்பு நாள் கண்டன ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம் சேலம் மேற்கு மாவட்டம் சார்பாக 06.12.2018 அன்று பாசிச எதிர்ப்பு நாள் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தி யது. இந்த கண்டன ஆர்ப் பாட்டத்தில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் உமா சங்கர் (வனவாசி நகர செய லாளர்) கண்டன உரையாற்றி னார். சேலம் மாவட்ட அமைப்பாளர் கிருஷ்ணன், நங்கவள்ளி நகரச் செயலாளர் கண்ணன், நகர துணைத் தலைவர் குமார், சந்திரசேகர் ஆகியோர் கலந்து கொண்டனர். பெரியார் முழக்கம் 13122018 இதழ்

நாத்திகம் முருகேசன் துணைவியார் முடிவெய்தினார்

நாத்திகம் முருகேசன் துணைவியார் முடிவெய்தினார்

ஆழ்வை ஒன்றிய தி.வி.க. தலைவர் நாத்திகம் முருகேசன் துணைவியார் திருமதி. சந்திரா (வயது 65) 30.11.2018 மாலை 4.00 மணியளவில் முடிவெய்தினார். அவரது உடல் நல்லடக்கம் ஆழ்வார் தோப்பில் 01.12.2018மதியம் 1.00 மணியளவில் நடைபெற்றது. திராவிடர் விடுதலைக் கழகப் பரப்புரைச் செயலாளர் பால் .பிரபாகரன்  மாலை அணிவித்து வீர வணக்கம் செலுத்தினார். நிகழ்வில் நெல்லை மாவட்டத் தலைவர் பா. பால்வண்ணன், நெல்லை மாவட்டச் செயலாளர் சி.ஆ.காசிராஜன், தமிழ்நாடு அறிவியல் மன்ற நெல்லை மாவட்ட பொறுப்பாளர் ச. தமிழன், நெல்லை மாவட்ட அமைப்பாளர் சு. அன்பரசு, கீழப்பாவூர் ஒன்றிய தலைவர் அ.மாசிலாமணி, தூத்துக்குடி மாவட்ட அமைப்பாளர் பால். அறிவழகன், மாவட்ட துணைச் செயலாளர் ச.கா.பால சுப்பிரமணியன், மாவட்ட பொருளாளர் சந்திரசேகர், தூத்துக்குடி மாவட்டத் தலைவர் கோ.அ.குமார், வே.பால்ராசு, சா.த.பிரபாகரன், செ.செல்லத்துரை. குமணன், பாரி, மனோஜ் மற்றும் தூத்துக்குடி நெல்லை மாவட்ட தி.வி.க. தோழர்கள் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர். எவ்வித சடங்குகள் இன்றி...

சிறைக்குள் மரணமடைந்த ஜாதி ஒழிப்புப் போராளி நன்னிமங்கலம் கணேசன் நினைவிடத்தில் தோழர்கள் உறுதி ஏற்பு

சிறைக்குள் மரணமடைந்த ஜாதி ஒழிப்புப் போராளி நன்னிமங்கலம் கணேசன் நினைவிடத்தில் தோழர்கள் உறுதி ஏற்பு

ஜாதியைப் பாதுகாக்கும் அரசியல் சட்டப் பிரிவுகளை எரித்து கோவை சிறையில் அடைக்கப்பட்டிருந்த பல தோழர்களில் நண்ணிமங்கலம் கணேசன் ஒருவர். அவர் சிறையிலேயே இறந்துவிட்டார். அவருடைய உடல் கோவை ஆத்துப்பாலம் சுடுகாட்டில் பெரியாரின் போர்வாள் எம்.ஆர்.ராதா  மனைவி பிரேமாவதி மற்றும் மகன் தமிழரசன் நினைவிடத்திற்கு அருகே புதைக்கப் பட்டுள்ளார். அவரை நினைவு படுத்தும் விதமாக ஆத்துப்பாலம் சுடுகாட்டில் கோவை திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள் சூலூர் பன்னீர்செல்வம் வெங்கட் மேட்டுப்பாளையம் ராமச்சந்திரன் உடுமலை இயல் கிருஷ்ணன் நிர்மல்குமார்  மலர் வளையம் வைத்து  ஜாதி ஒழிப்பு உறுதிமொழி ஏற்றனர். பெரியார் முழக்கம் 13122018 இதழ்

கஜா புயல் : வேலூர் மாவட்டக் கழகத் தோழர்கள் நேரில் நிவாரண உதவி

கஜா புயல் : வேலூர் மாவட்டக் கழகத் தோழர்கள் நேரில் நிவாரண உதவி

கஜா புயல் நிவரணத்திற்காக வேலூர் மாவட்ட திவிக தோழர் களால் திரட்டப் பட்ட பொருட் கள் தஞ்சாவூர் மாவட்டம் பட்டு கோட்டை வட்டம் வாட்டா குடி மற்றும் இரண்யன் நகர் உள்ளிட்ட 3 குக்கிராமங்களைச் சேர்ந்த 156 குடும்பங்களுக்கு கழகத் தோழர்களின் உதவியுடன் வேலூர் மாவட்ட திவிக தோழர்கள் நேரில் சென்று வழங்கினர். 1 குடும்பத்திற்கு 2.5 கிலோ காய்கறி, 1.25 கிலோ அரிசி, 1 ப்ரெட் பாக்கெட், 1 வரக்கி பாக்கெட் , 100கிராம் கடலை எண்ணெய், 50கிராம் மிளகுதூள் பாக்கெட், 1 நாப்கின் பாக்கெட், 1 பாக்கெட் பன், 1 தைலம், 1 கொசுவத்தி, 1 வத்திப் பெட்டி என பல்வேறு பொருட்களை ஒவ்வொரு குடும்பத்திற்கும் வழங்கப்பட்டது. ஆசிரியர்கள் கஜேந்திரன், பாஸ்கரன், சுதகார், பார்த்திபன், வழக்கறிஞர் மகேஷ் குமார், பாரத் தமிழ், மாதேஷ், பாண்டியன், மாதேஷ், திருமலை ஆகியோர் அடங்கிய குழு சென்றது. பெரியார் முழக்கம் 13122018 இதழ்

‘இந்துமதம்’ நமது முன்னோர்கள் மீது திணிக்கப்பட்டது; விரும்பி ஏற்றது அல்ல!

‘இந்துமதம்’ நமது முன்னோர்கள் மீது திணிக்கப்பட்டது; விரும்பி ஏற்றது அல்ல!

வேத மதம் என்று அழைக்கப்பட்ட பண்டைய ஆரிய மதத்திற்கு மூன்று தனிப்பட்ட குணாம்சங்கள் இருந்தன. மாட்டிறைச்சி உண்பது, குடிப்பது மற்றும் கேளிக்கை களியாட்டங்களில் ஈடுபடுவது, இவை  அன்றைய வேத மதத்தின் கூறுகளாகவே இருந்தன. இந்தியாவில் பல்லாயிரக்கணக்கான மக்கள் இவற்றைப் பின்பற்றினார்கள். இப்போதும்கூட சில பார்ப்பனர்கள் அந்த நாட்களுக்குத் திரும்பிப் போய் விடமாட்டோமா என்ற ஏக்கத்தோடு கனவு காண்கிறார்கள். அந்தப் பண்டைய மதத்தோடு மட்டுமே ஒட்டிக் கொண்டிருக்க வேண்டும் என்ற கட்டாயமிருந்திருந்தால் எதற்காக இந்திய மக்கள் அன்று இந்து மதத்தை உதறித் தள்ளிவிட்டு, புத்த மதத்தை ஏற்றுக் கொண்டார்கள்? எதற்காக அவர்கள் வேத மதத்தை உதறித்தள்ளிவிட்டு, சமண மதத்தை ஏற்றுக் கொண்டார்கள்? நம்முடைய முன்னோர்கள் அந்த மதத்திற்குள்ளேயே இருந்தார்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது. ஆனால் அவர்கள் தாங்களாகவே விருப்பப்பட்டு அந்த மதத்திற்குள் இருந்தார்கள் என்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன். நால்வர்ண அமைப்பு என்பது இந்த நாட்டில் பன்னெடுங்காலமாக நிலவிய ஓர்...

அம்பேத்கர் நினைவு நாளில் கழகத்தினர் சூளுரை ஜாதி அடையாளம் அல்ல; அவமானம்

அம்பேத்கர் நினைவு நாளில் கழகத்தினர் சூளுரை ஜாதி அடையாளம் அல்ல; அவமானம்

புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர் நினைவு நாளான டிசம்பர் 6ஆம் தேதி அம்பேத்கர் சிலைகளுக்கு கழகத் தோழர்கள் மாலை அணிவித்து ஜாதி ஒழிப்பு சூளுரை எடுத்தனர். விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரத்தில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சிலைக்கு பேரணியாக வந்து மு.நாகராஜ் (அறிவியல் மன்ற அமைப்பாளர்) தலைமையில்  மாலை அணிவித்து ஜாதி ஒழிப்பு சூளுரை எடுத்தனர். இந்நிகழ்வில் கழகத்தின் மாவட்ட அமைப் பாளர் சி.சாமிதுரை முன்னிலை வகித்தார். ஜாதி ஒழிப்பு, ஆணவப் படுகொலைக்கு தனி சட்டம் ஆகியவற்றை வலியுறுத்தி முழக்க மிட்டனர். இரா.துளசிராஜா, குமார், பாரதிதாசன், ராமச்சந்திரன் கார்மேகம், நீதிபதி மற்றும் தோழர்கள் கலந்து கொண்டனர். சேலம் : திவிக சேலம் மாநகரம் சார்பாக 6.12.2018 அன்று சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் டேவிட் மற்றும் சேலம் மாநகர செயலாளர் பரமேஸ்குமார் தலைமையில் அம்பேத்கர் சிலைக்கு  மாலை அணிவித்து ஜாதி ஒழிப்பு உறுதி ஏற்றனர். நிகழ்வில் மாநகர தோழர்கள் கலந்து கொண்டனர். கோவை: இந்திய...

“சாதிச் சமூகமே சிறைதான்!” – ஆனந்த விகடன் பேட்டி

“சாதிச் சமூகமே சிறைதான்!” – ஆனந்த விகடன் பேட்டி

`இதுவரை என்மீது எத்தனை வழக்குகள் காவல்துறையினரால் பதிவு செய்யப்பட்டிருக்கிறது என்று தெரியவில்லை, எனக்குத் தெரிந்து 18 வழக்குகள் இருக்கலாம். அனைத்தும் மக்களுக்கான போராட்டங்களை நடத்தியதற்காகப் போடப்பட்ட வழக்குகள்தான்’’ என்று சொல்லும் மணி அமுதன், திராவிடர் விடுதலைக் கழகத்தின் மதுரை மாவட்டச் செயலாளர். வயது 31 தான். கடந்த சில வருடங்களாக ஆணவப்படுகொலை, நீட், ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு ஆகியவற்றுக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுத்து வருபவர். ஸ்டெர்லைட்டுக்கு எதிராக மக்களைத் தூண்டியதாகக் குற்றஞ்சாட்டி, கடந்த ஆகஸ்ட் 23-ம் தேதி  கைது செய்து சிறையில் அடைத்தது காவல்துறை. 78 நாள்கள் சிறைவாசத்திற்குப் பிறகு பிணையில் வந்திருந்தார். ‘`சாதிப்பாகுபாடு கெட்டி தட்டிப்போன மதுரை மாவட்டத்தில் மேலூர்தான் எனக்கு சொந்த ஊர். விவசாயக் குடும்பம். குடும்பத்தினருக்கு விவசாய வேலைகளைத் தவிர எந்த அரசியலும் தெரியாது.  இப்போதுதான் அவர்களுக்கு அரசியலைக் கற்றுக் கொடுத்துக்கொண்டிருக்கிறேன். சிறுவயதில் எல்லா இளைஞரையும்போல எந்தவொரு பிடிப்பும் இல்லாமல் சராசரியாக  வளர்ந்த எனக்கு,  போகப்போக கண்ணுக்கு...

புரட்சியாளர் அம்பேத்கர் & தந்தை பெரியார் நினைவு நாள் பொதுக்கூட்டம் சென்னை 13122018

புரட்சியாளர் அம்பேத்கர் & தந்தை பெரியார் நினைவு நாள் பொதுக்கூட்டம் சென்னை 13122018

திராவிடர் விடுதலைக் கழகத்தின் சென்னை மாவட்டம் சார்பாக #புரட்சியாளர்_அம்பேத்கர் & #தந்தை_பெரியார் நினைவு நாள் பொதுக்கூட்டம்…. வரும் டிசம்பர் 13, 2018 (வியாழக்கிழமை)மாலை 6 மணிக்கு, சேத்துப்பட்டு அம்பேத்கர் திடலில்… #சிறுநகர்_இசை_சமர்_கலைக்குழுவினரின்_பறை_இசை நிகழ்ச்சி நடைபெறும்… #சிறப்புரை : தோழர்.கொளத்தூர் மணி தலைவர், திராவிடர் விடுதலைக் கழகம் முனைவர்.சுந்தரவள்ளி தோழர்.விடுதலை இராசேந்திரன் பொதுச் செயலாளர், திராவிடர் விடுதலைக் கழகம் அனைவரும் வாரீர் தோழர்களே.! திராவிடர் விடுதலைக் கழகம்- சென்னை மாவட்டம் தொடர்புக்கு : 7299230363

கருஞ்சட்டை பேரணி – கழக தலைவர் அழைப்பு

கருஞ்சட்டை பேரணி – கழக தலைவர் அழைப்பு

டிச.23 திருச்சியில *கருஞ்சட்டைப் பேரணி* கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்களின் அழைப்பு : அன்பார்ந்த தோழர்களுக்கு, வணக்கம். தந்தை பெரியாரின் 45ஆம் நினைவுநாளை (24.12.1973) முன்னிட்டு வரும் திசம்பர் 23/2018 அன்று திருச்சியில் ‘காவி பயங்கரவாத்த்தை’ வீழ்த்த இலட்சம் பேர் பங்கேற்கும் கருஞ்சட்டைப் பேரணி- மாநாடு நடைபெற உள்ளது. பேரணியையும், மாநாட்டையும் வெற்றிபெற செய்யவேண்டியது நம்முடைய கடமையும், உரிமையும் ஆகும். குறிப்பாக காவி பயங்கரவாதம் தமிழகத்தையும், இந்திய மக்களையும் கார் இருளுக்குள் தள்ளிவிட்டது. வரலாற்றில் இதுவரை கண்டிராத அளவில் மனிதனை மனிதன் அடித்துக் கொல்லும் கொடூரமான கொடுங்கோல் ஆட்சியை மோடி தலைமையில் ஆர்.எஸ்.எஸ்வும், பிஜேபியும் நடத்திக் கொண்டு இருக்கின்றது. இதற்கு மேலும் பொறுமையாக கடந்து செல்வது. தன்மானமுள்ள தமிழனுக்கு அவமானம். தமிழினத்தை பாதுகாக்க தமிழ் இளைஞர்கள் தோள் கொடுக்கவேண்டிய தருணம் இது. மேலும் மாக்சிய, பெரியாரிய, அம்பேத்காரிய , தமிழ்த்தேசிய, சனநாயக சிந்தனையாளர்கள் ஒரு குடையின் கீழ் திரள...

சண்டாளர்கள் அதிகம் எனில், பார்ப்பனப் பெண்கள் ஒழுக்கம் கெட்டவர்களா ? அம்பேத்காரின் 62 வது நினைவுநாள் பொதுக்கூட்டம் கோவை 01122018 தோழர் கொளத்தூர் மணி உரை

சண்டாளர்கள் அதிகம் எனில், பார்ப்பனப் பெண்கள் ஒழுக்கம் கெட்டவர்களா ? அம்பேத்காரின் 62 வது நினைவுநாள் பொதுக்கூட்டம் கோவை 01122018 தோழர் கொளத்தூர் மணி உரை

தமிழீழப் போராட்டத்தின் உடனடிக் கோரிக்கைகளும் – நீண்டகால கோரிக்கைகளும் – மாவீரர் நாள் கருத்தரங்கம் – 01122018 | தோழர் விடுதலை இராசேந்திரன் உரை

தமிழீழப் போராட்டத்தின் உடனடிக் கோரிக்கைகளும் – நீண்டகால கோரிக்கைகளும் – மாவீரர் நாள் கருத்தரங்கம் – 01122018 | தோழர் விடுதலை இராசேந்திரன் உரை