மேதகு பிரபாகரன் பிறந்த நாளில் மாணவர்களுக்கு கல்வி உதவி

திராவிடர் விடுதலைக் கழகம் மற்றும் கற்க கல்வி அறக்கட்டளை சார்பில் தமிழீழத் தேசிய தலைவர் வே. பிரபாகரன் 64ஆவது பிறந்த நாள் விழா மற்றும் மாணவர்களுக்கு கல்வி உதவி வழங்கும் விழா சென்னை மேடவாக்கம்  தமிழ் வழிப் பள்ளியில்  கரு அண்ணாமலை தலைமை யில் நடந்தது. பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவி வழங்கி இனமான நடிகர் சத்யராஜ், திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி, பொழிலன் (த.வி.க. தலைவர்) உரையாற்றினர்.

தலைவர் பிரபாகரன் பிறந்த நாள் விழாவில் மாணவர்கள் தமிழில் பிறந்த நாள் வாழ்த்து பாடல்கள் பாடி கேக் வெட்டி பிறந்த நாள் விழா கொண்டாடினர்.  உமாபதி, சுப்பிரமணி பொற்கோவன், பெரியார் மணிமொழியன் கண்ணன், சிலம்பம் சிவாஜி, கரிகாலன் சுரேஷ், மூவேந்தன், மதன்குமார் மற்றும் திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள், கற்க கற்க கல்வி அறக்கட்டளை தோழர்கள், பள்ளி மாணவர்கள் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

பெரியார் முழக்கம் 20122018 இதழ்

You may also like...