அனுமதி பெறாத சர்ச்சுகளை இழுத்து மூடியது சீனா

கடவுள் மதமறுப்பு நாத்திகக் கொள்கையை ஏற்றுக் கொண்டுள்ள சீன நாடு, கட்டுப்பாடற்ற மத நடவடிக்கைகளுக்கு கடிவாளம் போட்டு வருகிறது. குறிப்பாக கிறிஸ்தவ சர்ச்சுகள், அரசு அங்கீகாரம் பெற்றவையாக இருக்க வேண்டும். அத்தகைய சர்ச்சுகளில் மட்டுமே வழிபாடுகள் நடத்தப்பட வேண்டும். இந்த விதிமுறைகளை மீறி ஆங்கங்கே வீடுகளுக்கு கீழேயும் பொதுவிடங்களிலும் ‘சர்ச்’சுகளை நிறுவி வழிபாடுகள் நடத்தப்பட்டு வந்தன. பெய்ஜிங் உள்ளிட்ட பல்வேறு பிராந்தியங்களில் உரிய அனுமதி இன்றி நடத்தப்பட்ட இந்த சர்ச்சுகளை சீன அதிகாரிகள் சோதனையிட்டு இழுத்து மூடினர். அமெரிக்காவைச் சார்ந்த பாப்ஃபூ என்ற பாதிரியார், “சீனா மத உரிமைகளைப் பறிக்கிறது; வழிபாட்டு இடங்களை அவமதிக்கிறது; சர்வதேச சமூகம் இதைக் கண்டிக்க வேண்டும்” என்று அறிக்கை விடுத்துள்ளார். “அரசின் நாத்திகக் கொள்கைகளை சீர்குலைக்கும் கட்டுப்பாடற்ற மதப்பிரச்சாரத்தை சீனா அனுமதிக்காது” என அரசு அறிவித்துள்ளது. ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ (செப்.17, 2018) இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

நிமிர்வோம் நவம்பர் 2018 இதழ்

You may also like...