Category: நிமிர்வோம் 2018

நான் நரகாசுரன்… – சவுரி, பெங்களூர்

நான் நரகாசுரன்… – சவுரி, பெங்களூர்

நடப்பவைகளை சகித்துக் கொள்ளாதபோது நான் நரகாசுரன் எங்கிருந்தோ வரும் தேவர்கள் எங்கள் கதிராமங்கலத்தில் துளையிடுவதை எதிர்த்துக்  கேட்டால் நான் நரகாசுரன். மூலதன கூர்மாவதாரங்கள் எனது நெடுவாசலைப் பாயாய் சுருட்டிக் கொண்டு ஓட வருகையில், வீதிக்கு வந்து விரட்டினால் நான் நரகாசுரன். தமிழகத்தையே மத்தாக்கி கெயில் ஆதிசேஷன் இறுக்குகையில்  – அமிர்தம் மேல் லோகத்திற்கு, விஷம் எங்களுக்கா? என ஆர்த்தெழுந்துப் போராடினால் நான் நரகாசுரன். பசுந்தளிர் அகலிகையை அபகரிக்க ‘மேக் இன் இந்தியா’ மாறுவேடத்தில் வரும் பன்னாட்டு இந்திரனைத் தடுத்து நிறுத்தினால் நான் நரகாசுரன். அழகிய தாமிரவருணியை ஆக்கிரமிக்க வரும் அமெரிக்க பிரகஸ்பதியை – என்னைக் கொன்றுவிட்டு தீபாவளி, என் ஆற்றைக் கொன்றுவிட்டு கொக்கோகோலாவா?  என எதிர்த்துக் கேட்டால் நான் நரகாசுரன் வல்லினம், மெல்லினம், இடையினம், உயிர்மெய், அணியாய், இலக்கணமாய் இலக்கியமாய் என் குருதி கலந்த தாய்த்தமிழை ஆதிக்கம் செய்ய வரும் சமஸ்கிருதத்தை அடித்துத் துரத்தினால் நான் நரகாசுரன். கருவறைக்குள் வந்தால் தீட்டு,...

வாசகர்களிடமிருந்து…

வாசகர்களிடமிருந்து…

‘எழுத்தில் வராத வரலாறுகள் – களப்பணி யாளர்களின் வாய்மொழியாக பதிவு செய்யப்படும்போது இயக்கச் செயல்பாடுகளையும் தோழர்களின் உணர்வுகளை யும் உணர முடிகிறது. 14 வயதில் பெரியாரிடம் வந்து 23ஆவது வயதில் அரசுப் பணியில் சேர்ந்து ஓய்வுக்குப் பிறகு சைவ சித்தாந்தத்தில் ஈடுபட்ட நிலையிலும் தன்னை ஆட்கொண்ட தலைவர் பெரியார்தான் என்று கூறம் மா.கோபாலின் வாய்மொழி வரலாறு மெய்சிலிர்க்க வைத்தது. அன்று சென்னையில் திராவிடர் கழகம் எப்படி செயல்பட்டது; கூட்டங்கள் எப்படி நடத்தப்பட்டன என்ற வரலாறுகளை இளைய தலைமுறைக்கு உணர்த்தியது, இந்த வாய்மொழி வரலாறு. – மணி, திருச்சி ‘பிரம்மத்தைப் பார்த்த பிரமாணன் உண்டா?’ என்ற புத்தர் இயக்கம் பற்றிய கட்டுரை பல தகவல்களை அறிய உதவியது. முடிதிருத்தும் நாவிதர் சமூகத்தைச் சார்ந்த உபாலி – பவுத்த சங்கத்தில் புத்தருக்கு அடுத்த இடத்தில் உயர்த்தப்பட்டதோடு பவுத்த நூலான திரிபிடகத்தைப் படித்து மற்றவர்களுக்கு விளக்கக்கூடிய நிலையிலும் இருந்திருக்கிறார் என்பது அந்த காலத்தில் புத்தர் செய்த...

அனுமதி பெறாத சர்ச்சுகளை இழுத்து மூடியது சீனா

அனுமதி பெறாத சர்ச்சுகளை இழுத்து மூடியது சீனா

கடவுள் மதமறுப்பு நாத்திகக் கொள்கையை ஏற்றுக் கொண்டுள்ள சீன நாடு, கட்டுப்பாடற்ற மத நடவடிக்கைகளுக்கு கடிவாளம் போட்டு வருகிறது. குறிப்பாக கிறிஸ்தவ சர்ச்சுகள், அரசு அங்கீகாரம் பெற்றவையாக இருக்க வேண்டும். அத்தகைய சர்ச்சுகளில் மட்டுமே வழிபாடுகள் நடத்தப்பட வேண்டும். இந்த விதிமுறைகளை மீறி ஆங்கங்கே வீடுகளுக்கு கீழேயும் பொதுவிடங்களிலும் ‘சர்ச்’சுகளை நிறுவி வழிபாடுகள் நடத்தப்பட்டு வந்தன. பெய்ஜிங் உள்ளிட்ட பல்வேறு பிராந்தியங்களில் உரிய அனுமதி இன்றி நடத்தப்பட்ட இந்த சர்ச்சுகளை சீன அதிகாரிகள் சோதனையிட்டு இழுத்து மூடினர். அமெரிக்காவைச் சார்ந்த பாப்ஃபூ என்ற பாதிரியார், “சீனா மத உரிமைகளைப் பறிக்கிறது; வழிபாட்டு இடங்களை அவமதிக்கிறது; சர்வதேச சமூகம் இதைக் கண்டிக்க வேண்டும்” என்று அறிக்கை விடுத்துள்ளார். “அரசின் நாத்திகக் கொள்கைகளை சீர்குலைக்கும் கட்டுப்பாடற்ற மதப்பிரச்சாரத்தை சீனா அனுமதிக்காது” என அரசு அறிவித்துள்ளது. ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ (செப்.17, 2018) இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. நிமிர்வோம் நவம்பர் 2018 இதழ்

நேர்மைக்கு ஓர் இலக்கணம் பெரியாரின் நேர்மையே அவரது கொள்கைக்கு வலிமையான ஆயுதமாக இருந்திருக்கிறது.

நேர்மைக்கு ஓர் இலக்கணம் பெரியாரின் நேர்மையே அவரது கொள்கைக்கு வலிமையான ஆயுதமாக இருந்திருக்கிறது.

பெரியார் என்கிற மனிதர் சாதாரணமான மக்களுக்கு கடவுள் மறுப்பாளராகவும் பாசிசவாதிகளுக்கு எதிரியாகவும், ஒடுக்கப்பட்ட பெரும்பான்மை மக்களுக்கு போற்றத்தக்க தலைவராகவும் விளங்குகிறார் என்று சொன்னால் அவருடைய பொது வாழ்வில் அவர் பின்பற்றிய நேர்மை முக்கிய பங்காற்றுகிறது. அவருடைய வாழ்வு நீண்டது. அவர் நடத்திய போராட்டங்களின் எண்ணிக்கையும் நீண்டது. அதன் மூலம் மக்கள் பெற்ற நன்மைகளின் பட்டியலும் நீண்டது. அவரது வெற்றிக்கு அடிப்படையாக அமைந்தது அவருடைய மனித நேயமும் பொது வாழ்க்கையில் அவர் கடைபிடித்த நேர்மையுமே ஆகும். தந்தை பெரியார் தன்னுடைய வாழ்க்கையில் எப்போதும் யாரிடமும் நல்ல பெயர் எடுக்கவேண்டும் என்றோ அல்லது தன்னைக் குறித்து மற்றவர்கள் பெருமையாகப் பேசவேண்டும் என்றோ விரும்பியவரல்ல. ஒருமுறை வ.உ.சி.யும் பெரியாரும் ஒரே மேடையில் பேச நேர்ந்தபோது வ.உ.சி பெரியாரை தன் தலைவர் என்று பேசினார். இறுதியாக பேசிய பெரியார், வ.உ.சி பேசும்போது என்னை அவருடைய தலைவர் என்று குறிப்பிட்டார். மன்னிக்க வேண்டும் அவருக்கு தலைவராக இருக்கக் கூடிய...

மக்கள் நலத் திட்டங்களை எதிர்க்கும் ‘முதலாளித்துவ பார்ப்பனியம்’ – செ. கார்கி

மக்கள் நலத் திட்டங்களை எதிர்க்கும் ‘முதலாளித்துவ பார்ப்பனியம்’ – செ. கார்கி

இலவசங்களைக் கேலி செய்யும் ஜெயமோகன் – முருகதாசுகள் பன்னாட்டு நிறுவனங்களின் பல இலட்சம் சுருட்டல்களுக்கு என்ன நியாயம் கூறுவார்கள்? தமிழ்நாட்டில் கொஞ்ச காலமாக திராவிட எதிர்ப்பு பேசும் அமைப்புகள் திட்டமிட்டு இளைஞர்கள் மத்தியில் தமிழக அரசு வறிய மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் நோக்கில் கொடுக்கும் பல நலத்திட்டங்களை கொச்சைப்படுத்தும் நோக்கில் அவதூறு பிரச்சாரத்தை முடுக்கிவிட்டுள்ளனர். ‘சர்கார்’ திரைப்படத்தை பார்த்த சில இளைஞர்கள் ஜெயமோகன், முருகதாஸ் போன்ற பார்ப்பன அடிமைகளின் விஷக் கருத்துக்களை உண்மை என்று நம்பி அரசு கொடுத்த கிரைண்டர், மிக்சி, டீவி, லேப்டாப் போன்றவற்றை உடைத்தும் தீக்கிரையாக்கியும் வீடியோ பதிவுகளை வெளியிட்டனர். தமிழக அளவில் பெரும் சர்ச்சையை இந்தத் திரைப்படம் ஏற்படுத்தியது. அந்தப் படம் திரையிடப்பட்ட பல திரையரங்கங்கள் முன் வைக்கப்பட்டிருந்த நடிகர் விஜயின் கட் அவுட்டுகளை அதிமுகவினர் கிழித்தெறிந்தனர். பின்னர் இருவருக்கும் ஏற்பட்ட உடன்பாட்டின் படி சர்கார் படத்தில் இருந்து சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க ஒப்புக்கொண்ட பின்...

பட்டியல் இனப் பிரிவு இட ஒதுக்கீட்டில் கிரிமிலேயர்

பட்டியல் இனப் பிரிவு இட ஒதுக்கீட்டில் கிரிமிலேயர்

உச்சநீதிமன்றப் பட்டியல் இனப் பிரி வினரை தீர்மானிப்பதில் முதன்முறையாக ‘கிரிமிலேயரை’ப் புகுத்தி ஆபத்தான தீர்ப்பை வழங்கியிருக்கிறது உச்சநீதிமன்றம். உச்சநீதி மன்றத் தீர்ப்பை வரவேற்ற தமிழ்நாட்டுத் தலை வர்கள் இதை கவனத்தில் கொள்ள வில்லை. பட்டியல் இனப் பிரிவினர் மற்றும் பழங்குடியினருக்கான பதவிகளில் பதவி உயர்வு நிலையிலும் இடஒதுக்கீடு வழங்குவது குறித்து உச்சநீதிமன்றத்தின் அய்ந்து நீதிபதிகள் அடங்கிய அமர்வு அளித்துள்ள தீர்ப்பு – சமூக நீதிக்கு பெரும் பின்னடைவாகும். செப். 26ஆம் தேதி தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமை யிலான அமர்வு – பட்டியல் இனப் பிரிவு மற்றும் பழங்குடி மக்களுக்கு பதவி உயர்வில் இட ஒதுக்கீடு வழங்க முடியும் என்று தீர்ப்பளித்தது உண்மைதான்; ஆனால், ‘கிரிமிலேயர்’ எனும் வடிகட்டும் முறையை அதில் புகுத்தி, தீர்ப்பின் நோக்கத்தையே கெடுத்துவிட்டது. அது மட்டுமின்றி, பதவி உயர்வில் இடஒதுக்கீட்டை வழங்குவதா வேண்டாமா என்பதை அந்தந்த மாநிலங்களே முடிவு செய்து கொள்ளலாம் என்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது....

ஆரியர்களே பூர்வீகக் குடிகள் என்ற வரலாற்றுப் புரட்டுகள் தகர்கின்றன

ஆரியர்களே பூர்வீகக் குடிகள் என்ற வரலாற்றுப் புரட்டுகள் தகர்கின்றன

திராவிட நாகரிகத்தை உறுதி செய்கிறது, ராகிகடி ஆய்வு அரியானாவில் ராகிகடி  என்ற இடத்தில் 4500 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த மிகப் பழமையான மனித எலும்புக் கூடு அறிவியல் சோதனைக்கு (டி.என்.ஏ.) உள்ளாக்கப்பட்டது.  அப்பகுதியில் வாழ்ந்த சிந்துவெளி நாகரிக மக்கள் திராவிடர்களே என்றும், ஆரிய மரபணு வழி வந்தவர்கள் அல்ல என்றும் அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்டு விட்டது. ஆரியர்கள் வந்தேறிகள் அல்ல; அவர்கள் பூர்வீகக் குடிகள் என்ற இந்துத்துவா வரலாற்றுப் புரட்டுக்கு சரியான  அறிவியல் மறுப்பாக வெளி வந்திருக்கும் இந்த ஆய்வை கடந்த 3 ஆண்டு காலமாக  வெளியிடாமலேயே ஆய்வாளர்கள் தயக்கம் காட்டி வந்தனர். ‘இந்தியா டுடே’ 2018 செப்.10இல் வெளிவந்த ஆங்கிலப் பதிப்பு ‘சங்கடம் தரும் உண்மை’ “ஹn ஐnஉடிnஎநnநைவே கூசரவா” என்ற தலைப்பில் விரிவான கட்டுரை வெளியிட்டுள்ளது. அதன் சுருக்கமான தமிழ் வடிவம்: புனேவின் டெக்கான் கல்லூரியின் துணை வேந்தரான டாக்டர் வசந்த் ஷிண்டே ஒரு அகழ்வாராய்ச்சியாளர். இவரும் இவரது...

‘இந்துராஷ்டிரம்’ உருவாக்க ‘படுகொலைகள்’

‘இந்துராஷ்டிரம்’ உருவாக்க ‘படுகொலைகள்’

‘சனாதன் சன்ஸ்தா’வின் பார்ப்பன பயங்கரவாத பின்னணி தபோல்கரிலிருந்து  – கவுரி லங்கேஷ் வரை சுட்டுக் கொன்ற இந்த அமைப்பு, இராணுவம், போலீசை வீழ்த்தவும் படை திரட்டுகிறது.  தேர்தல், நீதிமன்றம், ஜனநாயகத்துக்கு அவர்கள் அமைக்கப் போவதாகக் கூறும் இந்து இராஷ்டிரத்தில் இடமில்லை என்று தனது பத்திரிகையில் எழுதி வருகிறது. நகர்ப்புற கொரிலாக்கள் என்ற பெயரில் சமுதாய சிந்தனைகளை விதைத்து வரும் எழுத்தாளர்கள், கருத்தாளர்களை பயங்கரவாதி களாக்கி தேசத் துரோகக் குற்றச்சாட்டில் கைது செய்து வரும் மோடி ஆட்சி, ஆயுதம் ஏந்தி அரசுக்கு எதிராக போராடி வரும் ‘சனாதன் சன்ஸ்தா’ என்ற இந்து மதவெறி அமைப்பு மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மவுனம் காத்து வருகிறது. இந்து ஆன்மீகம் பேசிக் கொண்டே அரசுக்கு எதிரான ஆயுதம் தாங்கிய போரை நடத்துகிறோம் என்ற கொள்கையைக் கொண்ட இந்த அமைப்பு 2025க்குள் இந்தியாவை ‘கடவுள் ராஜ்யம்’ அல்லது ‘இந்து இராஷ்டிர’மாக மாற்றுவோம் என்ற இலக்கோடு செயல்பட்டு வருகிறது....

ஊழல் பெருச்சாளிப் பார்ப்பனர் கேத்தன் தேசாயை  காப்பாற்றி வரும் குஜராத் அரசு

ஊழல் பெருச்சாளிப் பார்ப்பனர் கேத்தன் தேசாயை காப்பாற்றி வரும் குஜராத் அரசு

தனியார் சுயநிதி மருத்துவக் கல்லூரி ஊழல் வழக்கில், முதல் குற்ற வாளியாக சேர்க்கப்பட்டுள்ள பார்ப்பன கேத்தன் தேசாயைத் தப்பவிடும் வேலையில், குஜராத் மாநில பாஜக அரசு ஈடுபட்டுள்ளது. பார்ப்பன கேத்தன் தேசாயிடம், சிபிஐ விசாரணை நடத்துவதற்கு அம்மாநில அரசு அனுமதி மறுத்துள்ளது.இந்திய மருத்துவக் கவுன்சிலின் தலைவராக இருந்தார் கேத்தன் தேசாய். இவர் தனதுபதவிக்காலத்தில், நாடு முழுவதும் தனியார் சுயநிதி மருத்துவக் கல்லூரி களுக்கு விதிகளை மீறி அனுமதி வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. கல்லூரி ஒன்றுக்கு தலா 25 கோடி முதல் 30 கோடி ரூபாய் வரைபெற்றதாகக் கூறப்பட்டது. மேலும், 200 தனியார் மருத்துவக் கல்லூரிகள், தலா 5 மருத்துவப் படிப்புக்கான இடங்களை கேத்தன் தேசாய்க்கு ஒதுக்கீடு செய்ததும், அந்த இடங்களை பல கோடி ரூபாய்க்கு மாணவர்களுக்கு அவர் விற்றதும் கண்டுபிடிக்கப் பட்டது. இதையடுத்து மருத்துவக் கவுன்சிலே கலைக்கப்பட்டதுடன், கேத்தன் தேசாய் மீதும் கடந்த 2010-ஆம் ஆண்டு சிபிஐ மூலம்வழக்கு பதிவு செய்யப்பட்டது....

பார்ப்பான் ஜாதிப் புத்தியை மாற்றிக் கொள்ள மாட்டான்

பார்ப்பான் ஜாதிப் புத்தியை மாற்றிக் கொள்ள மாட்டான்

பார்ப்பான் ஜாதிப் புத்தியை மாற்றிக் கொள்ள மாட்டான் என்று பார்ப்பன நீதிபதியின் முன்பாகவே முழக்கமிட்ட போராளி! 21 மாதங்கள் சிறை சென்ற ஜாதி ஒழிப்புப் போராளியின் நினைவலைகள் 25ஆவது அகவையில் அரசியல் சட்டத்தின் ஜாதியைப் பாதுகாக்கும் பிரிவுகளை எரித்து 21 மாதங்கள் சிறைத் தண்டனை பெற்ற பெரியார் தொண்டர் இடையாற்றுமங்கலம் முத்து செழியன். பெரும் பண்ணையார் குடும்பத்தில் பிறந்தவர். இப்போதும் சொந்த கிராமத்தில் கொள்கை உறுதியோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவரது வயது 86. சிறையிலிருந்த காலத்திலேயே திருச்சி தேசியக் கல்லூரியில் பட்டப்படிப்புக்கான தேர்வுகளை காவல்துறை பாதுகாப்புடன் எழுதியவர். வரலாற்றுச் சிறப்புமிக்க போராட்டத்தின் மெய்சிலிர்க்கும் நினைவுகளைப் பகிர்ந்து கொள்கிறார். தஞ்சாவூரில் 1957 நவம்பர் 3இல் நடந்த சாதி ஒழிப்பு ஸ்பெஷல் மாநாட்டில் மிகப் பெரிய ஊர்வலம் நடந்தது. அதில் எம்.ஆர். ராதா அவர்கள் வெள்ளைக் குதிரையில் வந்தார். அவருக்கு ஜோடியாக திருச்சி வீ.அ. பழனி இன்னொரு குதிரையில் வந்தார். இலட்சக்க ணக்கான மக்கள்...

நடுவண் ஆட்சியின் துரோகங்கள்

நடுவண் ஆட்சியின் துரோகங்கள்

தூத்துக்குடி மக்களை கதிர்வீச்சுக்கு உள்ளாக்கி  மக்களை நோயாளிகளாக மாற்றிய ‘ஸ்டெர்லைட்’ நிறுவனம் மீண்டும் அதிகாரத் திமிருடன் தூத்துக்குடியில் மக்கள் எதிர்ப்புகளை மதிக்காமல் நுழையத் துடிக்கிறது. 100 நாள் போராட்டத்தின் இறுதியில் காவல்துறையின் துப்பாக்கி சூட்டுக்கு 13 உயிர்களை பலி கொடுத்தனர் தூத்துக்குடி மக்கள். உச்சநீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்து வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை நீர்த்துப் போகச் செய்யும் தீர்ப்பை வழங்கிய பார்ப்பன நீதிபதி கோயல் ஓய்வு பெற்ற சில மணி நேரங்களிலே தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தலைவர் ஆனார். முன்னாள் நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் இந்த ஆலை பற்றிய ஆய்வை நடத்த ஒரு குழுவையும் அமைத்தார். குழுவில் தமிழகத்தைச் சார்ந்த நீதிபதியை இணைத்தால் தூத்துக்குடி மக்களுக்கு ஆதரவான முடிவு வந்துவிடும் என்பதால் அந்தக் கோரிக்கையை நிராகரித்தார். இப்போது தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாம் என்று அகர்வால் குழு பச்சைக்கொடி காட்டிவிட்டது. தமிழக அரசு ஆலையை மூடி சீல் வைத்து தவறு என்றும்...

தற்போது விற்பனையில் ‘நிமிர்வோம்’ –  நவம்பர் 2018 இதழ்

தற்போது விற்பனையில் ‘நிமிர்வோம்’ – நவம்பர் 2018 இதழ்

நடுவண் ஆட்சியின் துரோகங்கள் – தலையங்கம் ஜாதி ஒழிப்புப் போராளியின் நினைவலைகள் “இந்து இராஷ்டிரம்” அமைக்க படுகொலைகளை நடத்தும் அமைப்பு – அதிர்ச்சித் தகவல்கள் ஆரியர்களே பூர்வீகக் குடிகள் என்ற வரலாற்றுப் புரட்டுகள் தகர்கின்றன சீடர்களுடன் புத்தர் நடத்திய அறிவார்ந்த விவாதங்கள் பட்டியல் இனப்பிரிவு இட ஒதுக்கீட்டில் கிரிமிலேயர் மற்றும் பெரியார் சிந்தனைகளுடன்… தனி இதழ் விலை : ரூ.20 தொடர்புக்கு:  நிர்வாகி, 95, டாக்டர் நடேசன் சாலை, அம்பேத்கர் பாலம், மயிலாப்பூர், சென்னை-600 004. தொலைபேசி எண்: 044 24980745/7299230363 www.dvkperiyar.com/nimirvomdvk@gmail.com பெரியார் முழக்கம் 20122018 இதழ்

பட்டாசு வெடிப்பின் ஆபத்து: மாசு கட்டுப்பாட்டு வாரியம் எச்சரிக்கிறது

பட்டாசு வெடிப்பின் ஆபத்து: மாசு கட்டுப்பாட்டு வாரியம் எச்சரிக்கிறது

தீபாவளி பட்டாசு வெடிப்புகளால் இந்தியா விலேயே அதிக காற்று மாசு ஏற்படும் நகரமாக கடந்த ஆண்டு சென்னை இருந்தது என்று கூறியுள்ள மாசு, கட்டுப்பாட்டு வாரியம் சுவாசக் கோளாறு, மூச்சுத் திணறல், தொண்டை எரிச்சல் பாதிப்புகளோடு புற்று நோய் ஆபத்தும்  இதில் அடங்கியிருக்கிறது என்று எச்சரித்துள்ளது. தீபாவளி பண்டிகையின்போது பட்டாசுகளால் காற்று மாசு ஏற்படுவதைத் தடுக்க, குறிப்பிட்ட  பொது இடங்களில் மட்டும் பொதுமக்கள் பட்டாசு வெடிக்க அனுமதி வழங்குவது குறித்து தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் பரிசீலித்து வருகிறது. தீபாவளியன்று  பட்டாசுகளை  வெடிப்பதால் ஏற்படும் காற்று மாசானது மிகவும் அதிகமாக உள்ளது.  இது மதம் மற்றும் திருவிழா சார்ந்த விஷயம்  என்பதால், அரசானது விழிப்புணர்வை மட்டுமே நம்பியுள்ளது. அதுவும் கடந்த ஆண்டு தீபாவளியின் போது கை கொடுக்கவில்லை.   கடந்தஆண்டில் தீபாவளி பண்டிகை யின்போது, சென்னை சவுக்கார் பேட்டையில் 777 மைக்ரோ கிராம் காற்று மாசு பதிவானது. காற்றில் மிதக்கும் 10 மைக்ரோ கிராமுக்கும்...

அய்யப்ப ஆச்சாரம்? – முல்லைவேந்தன் பெரியார்

அய்யப்ப ஆச்சாரம்? – முல்லைவேந்தன் பெரியார்

கோவணம் கட்டாமல் சென்றவன் ஜட்டிபோட்டு சென்றபோது மாறிய ஆச்சாரம்?   வீடுமுதல் வீடுவரை அய்யப்பன்கோவில் நடைபயணம் ஊர்திகளில் பயணித்த போது மாறிய ஆச்சாரம்?   நாற்பத்தெட்டு நாள் விரதம் மாறி இன்று மாலைபோட்டு நாளை சபரிமலை சென்றபோது மாறிய ஆச்சாரம்?   வெறும் காலில் மலையேறி ஒருமுடியில் இருந்த உணவுதின்றது மாறி உணவக வியாபாரம் உச்சி சென்றபோது மாறிய ஆச்சாரம்?? நெய் எரிந்த வெளிச்சம் மின்விளக்காய் பரிணமித்தபோது மாறிய ஆச்சாரம்???   மலைமேல் மாலை அவிழ்த்து, மலையிறங்கி கோவணம் அவிழ்த்து குடி,கும்மாளம் போட்ட சாமிகளின் கொண்டாட்டத்தால் மாறிய ஆச்சாரம்???   பெண்ணின் பிறப்புறுப்பில் ??? தீட்டோடு பிரவித்த அய்யப்ப(னும்) பக்த(னும்) பெண்களை தீட்டென ஒதுக்குவது தங்களின் ஆச்சார பலகீனம் பல்லிளித்து உலகம் சிரிக்குது,   பெண்கள் வருகை கண்டு பீதியில் பேதியாவது அய்யப்பனா?? அய்யப்ப பக்தனா?? ஆச்சார போர்வைக்குள். – முல்லைவேந்தன் பெரியார் நிமிர்வோம் அக்டோபர் 2018 இதழ்

வாசகர்களிடமிருந்து…

வாசகர்களிடமிருந்து…

‘கருப்பும் காவியும் இணைந்தபுள்ளி’ கட்டுரை பல அரிய தகவல்களைத்தந்தது. பார்ப்பனியத்தை முதன்மையான எதிரியாக தமிழினத்துக்கு அடையாளம் காட்டிய பெரியார், அதற்குக் கருத்தியலை வழங்கும் பார்ப்பனர்களைக்கூட அவர்கள் மேலாதிக்கத்தை எதிர்த்தாரே தவிர, தனிப்பட்ட பார்ப்பனர்களிடம் பகைமை பாராட்டியதில்லை. அனல் வீசும் கருத்துக் களங்களும் அதன் வழியாக நடந்த உரையாடல்களுமே தமிழ் நாட்டைப் பண்படுத்தி உயர்ந்தன. பெரியாரின் அத்தகைய அணுகுமுறைக்கு சான்றாக பெரியார்-அடிகளார் உறவு நிலவியது. 1971ஆம் ஆண்டு சேலத்தில் “இராமனை செருப்பாலடித்த” திராவிடர் கழக ஊர்வலத்தைத் தொடர்ந்து பார்ப்பனர் -பார்ப்பனரல்லாதார் எழுச்சியைத் தமிழகம் பார்த்தது. அப்போது பெரியார் உருவப் படத்தை பார்ப்பன சக்திகள் பல பகுதிகளில் செருப்பாலடித்தபோது பெரியார் ஆத்திரப்படவில்லை. குறைந்த விலையில் எனது செருப்பையும் படத்தையும் அனுப்புகிறேன்; நன்றாக அடியுங்கள்; அதன் வழியாக எனது கொள்கைதான் பரவும் என்றார். அக்காலகட்டத்தில் காவி உடை தரித்த குன்றக்குடி அடிகளார் கூறியதுதான் மிகவும் முக்கியமானது. “இன்று ஆத்திகம் என்பது உயர்சாதி நலன் காப்பது; நாத்திகம்...

இரட்டை வேடம்

இரட்டை வேடம்

“சபரிமலை பற்றிய உச்ச நீதிமன்றத் தீர்ப்பை இயற்கை யாகவே ஏற்றுக் கொள்ள முடியாது; கோடிக் கணக்கான பக்தர்களின் உணர்வை நீதிமன்றம் தனது தீர்ப்பில் கவனத்தில் கொள்ளவில்லை; பாரம்பரியத்தை கடைபிடிக்கும் ஏராளமான பெண்களின் கோரிக்கையும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை; இந்து சமுதாயத்தின் மீது மட்டும் ஏன் இதுபோன்ற தாக்குதல்கள் நடத்தப்படுகிறது என்று தெரியவில்லை; உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு நாட்டில் அமைதி யின்மையை ஏற்படுத்தி உள்ளது; சமுதாயத் தில் பிரிவினையை ஏற்படுத்தி இருக்கிறது.” – ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் “கோயில்களில் பெண்களைத் தடை செய்தது போன்ற அநீதியான மரபுகள் மாற்றப்பட வேண்டும்; இது போன்ற முக்கியப் பிரச்சனைகள் அரசியல் மயமாக்கப்படக் கூடாது; ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரும் எந்த விதமான பாகுபாடுமின்றி கோயில்களில் நுழைய ஆர்எஸ்எஸ் அனுமதிக்கிறது; தற்போதைய காலங்களில் பெண்களே வேதங்களைப் படிப்பதோடு, கோயில்களில் பூஜையும் செய்கிறார்கள்.” ஆர்.எஸ்.எஸ். பொதுச்செயலாளர் பையாஜி ஜோஷி நிமிர்வோம் அக்டோபர் 2018 இதழ்

அய்.நா. ஆய்வே அம்பலப்படுத்துகிறது: உலகமயமாக்கலின் படுதோல்வி –  முனைவர் ஜெ.ஜெயரஞ்சன்

அய்.நா. ஆய்வே அம்பலப்படுத்துகிறது: உலகமயமாக்கலின் படுதோல்வி – முனைவர் ஜெ.ஜெயரஞ்சன்

உலகமயமாக்கல் – தனியார் மயமாக்கல் – தாராளமயமாக்கல் கொள்கை – ஏற்றத் தாழ்வுகளை ஆதரித்து பெரும் நிறுவனங்களின் சுரண்டல்களை அதிகரித்திருக்கிறது என்ற உண்மையை அய்.நா.வின் வர்த்தகம் மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பே அம்பலப்படுத்தியிருக்கிறது. உலக மயமாக்கல், தனியார் மயமாக்கல், தாராள மயமாக்கல் (Liberalisation, Privatisation, Globalisation) இவை மூன்றும்தான் உலகப் பொருளாதாரத்தை புதிய வளர்ச்சிப் பாதையில் இட்டுச் செல்லும், வளர்ச்சி அதிகரிக்கும், செல்வம் பெருகும், மக்களின் வாழ்வு சிறக்கும் என்ற தாரக மந்திரம், 1980களிலிருந்து ஒலிக்கத்துவங்கி 1990களில் வலுப்பெற்றது. இக்கருத்தாக்கத்தின் அரசியல் வலிமை என்பது அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நாடுகளின் ஆதரவினால் கூடுதலானது. உலக வங்கியும், பன்னாட்டு நிதியமும் இதனை அனைத்து நாடுகளுக்குமான சர்வ ரோக நிவாரணியாக பரிந்துரைக்கத் துவங்கின. பரிந்துரைத்தன என்பதைவிட அவைகளின் கட்டளைகளாவே இவை மாறின. இதன்விளைவாக வளர்ந்த நாடுகள் மட்டுமின்றி பல வளரும் நாடுகளும் இக்கொள்கைகளை ஏற்று செயல்படுத்த வேண்டிய கட்டாய நிலை எற்பட்டது. இதன் தொடர்ச்சியாக, உலகளவில்...

ஜாதி அமைப்பின் கொடூர வடிவம் கிராமங்கள் மனுஷ புத்திரன்

ஜாதி அமைப்பின் கொடூர வடிவம் கிராமங்கள் மனுஷ புத்திரன்

என் மதத்தைச் சார்ந்தவன் என்ற காரணத்துக்காக அவனுக் குத் தகுதியில்லாவிட்டாலும் நான் அவனை மேலே கொண்டு வருவேன் என்பதை விட பெரிய ஊழல் இந்த நாட்டில் எதுவுமே இருக்க முடியாது. கடந்த பல ஆண்டுகளாக தமிழகத் தினுடைய வரலாறாக தமிழகத்தினுடைய அடையாளமாக படுகொலைகளும், சாதிப் படுகொலைகளும், வன்முறைகளும் தான் ஒவ்வொரு ஊரினுடைய அடையாளமாக மாறிக் கொண்டிருப்பதை நாம் பார்க்கிறோம். இப்படியே போனால் தமிழகத்தினுடைய வரலாறு சில ஆண்டுகளுக்குப் பிறகு ஜாதிப் படுகொலைகளுடைய வரலாறாக இருக்கப் போகிறது என்ற அச்சம் எழுகிறது.  முக்கியமாக இந்துத்துவாவை வேரறுக்க வேண்டும். பிராமணியத்தை வேரறுக்க வேண்டும் என்று நண்பர்கள் சொன்னார்கள். நானும்  அந்த கருத்துக்களை தீவிரமாக முன் வைக்கக்க கூடியவன் தான். ஆனால் இந்துத்துவா என்பது இந்துத்துவா என்கின்ற இந்த சமூகத்தில் இல்லை . அது பல்வேறு வடிவங்களில் பல்வேறு முகமூடிகளில் இருக்கிறது. அதேபோல் பார்ப்பனியம் என்பது பெயரில் இல்லை அது பல்வேறு வடிவங்களில் பல்வேறு முகமூடிகளில்...

மதயானை வருகிறது!

மதயானை வருகிறது!

“அப்பா! மதம் பிடித்த யானை வருகிறதாமே! வாங்களேன் போவோம், வேடிக்கைப் பார்க்க! நான் பார்த்ததே இல்லையே, மதம்பிடித்த யானையை! வாங்க! வாங்க! சீக்கிரம் வாங்க!” இப்படி ஒரு சிறு பிள்ளைகூடக் கூப்பிட மாட்டான். யானை பார்த்திராதவர்கள் பலர் இருக்கலாம். அவர்கள் யானை வந்தால் கட்டாயம் பார்த்தே தீருவார்கள். முன்பு பார்த்தவர்களேகூட மீண்டும் பார்க்கத்தான் ஆசைப்படுவார்கள்! யானையிலேயே வெள்ளை யானை வருகிறது என்றால், நீங்களும் நானும்கூடத்தான் பார்க்க ஆசைப்படுவோம்! காரணமென்ன? யானை பூனையைப்போல நாள்தோறும் வீட்டில் பார்க்கப்படும் விலங்கல்ல. அதன் அமைப்பே ஒரு அலாதி! ஆகையால்தான் பார்க்க ஆசைப்படுகிறோம். யானையின் நிறம் சாதாரணமாகக் கறுப்பு. ஆதலால் வெள்ளை யானையென்றால் இன்னும் ஆச்சரியமல்லவா? இந்திரனிடத்தில் மட்டும் (இதுமேல் உலக விஷயம்! என்னைப் போல அடிக்கடி பார்க்கிறவர்கள் மட்டுந்தான் நம்புவார்கள்!) ஒரே ஒரு வெள்ளை யானை இருப்பதாகக் கதை! போன வருஷத்தில் பர்மா காட்டிலிருந்து ஒரு வெள்ளை யானையைப் பிடித்து வந்ததாகப் பத்திரிகையில் படித்தேன். நீங்களும்...

“நான் மகிழ்ச்சியான பெண்ணியவாதி”

“நான் மகிழ்ச்சியான பெண்ணியவாதி”

இன்று ஆங்கிலத்தில் எழுதும் மிக முக்கியமான கறுப்பின எழுத்தாளர்களில் சிமாமாண்டா எங்கோஸி அடீச்சியும் ஒருவர். நைஜீரியாவைச் சேர்ந்த இவர், இதுவரை ஆறு புத்தகங்களை எழுதியிருக்கிறார். பெண்ணியம் குறித்த சரியான புரிதலை உண்டாக்கும் வகையில் அமைந்துள்ளது இவரது எழுத்து. இவருக்குக் கடந்த 2018 ஜூன் 12இல் ‘பென்’ (ஞநுசூ) பரிசு அறிவிக்கப்பட்டது. நோபல் பரிசு பெற்ற நாடக ஆசிரியர் ஹரால்ட் பிண்ட்டரின் நினைவாக இந்தப் பரிசு ஒவ்வோர் ஆண்டும் பிரிட்டன், காமன்வெல்த் நாடுகளைச் சேர்ந்த எழுத்தாளர் ஒருவருக்கு வழங்கப்படுகிறது. இந்த உலகத்தின் மீது துணிச்சலான, தடுமாற்றம் இல்லாத பார்வையைக் கொண்டிருக்கும் எழுத்தாளர்களைக் கவுரவிக்கும் விதமாக இந்தப் பரிசு ஒன்பது ஆண்டுகளாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு அக்டோபர் 9-ம் தேதி அடீச்சிக்கு இந்தப் பரிசு வழங்கப்பட உள்ளது. பாலினம், நிறம், உலக அளவிலான சமத்துவமின்மை ஆகியவற்றின் மீது இவர் கொண்டிருக்கும் நவீன அணுகுமுறையே இந்தப் பரிசுக்காக இவர் தேர்வு செய்யப்பட்டதற்குக் காரணம் என்று...

கருநாடக இசை பார்ப்பனர்களின் தனிச் சொத்தா?   ராமச்சந்திர வைத்தியநாத்

கருநாடக இசை பார்ப்பனர்களின் தனிச் சொத்தா? ராமச்சந்திர வைத்தியநாத்

கருநாடக இசை ‘இந்து’க் கடவுள்களுக்கே உரித்தானது என்று பார்ப்பனர்கள் வெளிப் படையாகப் பேசுவதோடு பிற மதக் கடவுள்களை கருநாடக இசையில் பாடுவோரை யும் மிரட்டுகிறார்கள். இசைக்கு மதம் உண்டா என்ற கேள்வியை எழுப்புகிறார், கட்டுரையாளர். கர்நாடக சங்கீதம் எனும் மரபு சார்ந்த இசை வடிவம் காலங்காலமாய் இருந்த கட்டுத் தளைகளிலிருந்து அறுபட்டு ஜனநாயகப் படுத்தும் முயற்சிகளுக்கு உட்படுகையில், அதை சாதி வடிவத்திற்குள் அடைக்கும் சமீபத்திய முயற்சி விபரீதமானது. இந்து இசைக் கலைஞர்கள் இந்து அல்லாத மற்ற மதங்களுக் குரிய தெய்வங்களைப் பற்றியோ,நம்பிக்கைகள் குறித்தோ பாடலாகாது என்று எச்சரிக்கை விடப்படுகிறது. எச்சரிக்கை விடுக்கும் ராமநாதன் எனும் அந்நபர் ராஷ்ட்ரீய சனாதன் சேவா சங் எனும் அமைப்பின் நிர்வாகி என்ற முறையில் பல்வேறு இசைக் கலைஞர்களை தொடர்பு கொண்டு அச்சுறுத்தியும் வருகிறார். பார்ப்பனர்களுக்கான பிரத்யேக அரசியல் அமைப்புதான் ராஷ்ட்ரீய சனாதன் சேவா சங் என்று அவரும், சென்னை செல்வகுமார் சாஸ்திரிகளும் கூறி வருவதால் இந்த...

‘பிரம்மத்தை’ப் பார்த்த “பிராமணன்” உண்டா?

‘பிரம்மத்தை’ப் பார்த்த “பிராமணன்” உண்டா?

புத்தரின் பார்ப்பனிய எதிர்ப்பை முன் வைக்கும் சில வரலாற்றுக் குறிப்புகள் விடுதலை இராசேந்திரன் “யாகத்துக்காக நீங்கள் நெருப்பைமூட்டி அதில் யாகத்துக் காகவே பொருள்களைக் கொட்டி ஜாதியை சுத்தம்செய்துவிடலாம். தீங்குகளை ஒழித்து விடலாம் என்று கூறுகிறீர்கள். ஒருவனை ஜாதியி லிருந்தும் தீங்கிலிருந்தும் விடுவிக்கும் சக்தி நீங்கள் வளர்க்கும் யாக நெருப்புக்கு உள்ளே இல்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள். அது அந்த யாக நெருப்புக்கு வெளியே இருக்கிறது. அந்த நெருப்பு மக்களின் சிந்தனைகளில் மூட்ட வேண்டிய நெருப்பு. நான் அந்த நெருப்பைத்தான் மூட்டுகிறேன்; நீங்கள் மூட்டிய யாக நெருப்பு அணைந்துவிடும்; நான் மக்களின் சிந்தனையில் மூட்டும் நெருப்பு அணையாது” என்று பதிலடி தந்தார் புத்தர். பெரியார் 1953ஆம் ஆண்டு நடத்திய விநாயகன் சிலை உடைப்புப் போராட்டம் வர்ணாஸ்ரம எதிர்ப்புக்கான போராட்டம்தான். 1952இல் தமிழ்நாட்டில் தேர்தலில் போட்டி யிட்டு மக்களை சந்திக்காமல் கொல்லைப்புற வழியாக பார்ப்பனர் இராஜகோபாலாச்சாரி முதல்வரானார். பார்ப்பன மேலாதிக்கத்தை நிறுவி வர்ணாஸ்ரமத்தை காப்பாற்ற...

‘விநாயகன்’  அரசியலுக்கு வந்த வரலாறு தமிழகத்தில்  பகுத்தறிவு அரசியலில்  இருந்த விநாயகர்

‘விநாயகன்’ அரசியலுக்கு வந்த வரலாறு தமிழகத்தில் பகுத்தறிவு அரசியலில் இருந்த விநாயகர்

மற்ற இந்திய பகுதிகளைப் போலவே ஊர்வல அரசியலுக்கு வந்தது 1980களில்தான். பேஷ்வா பார்ப்பனர்களின் குடும்ப விழாவாக இருந்த விநாயக சதுர்த்தி அரசியல் வடிவம் எடுத்தது எப்படி? இந்தியாவின் வர்த்தகத் தலைநகரம் மும்பை. உலக கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் நவநாகரீக இந்தியப் பெருநகரம். அந்த நகரையே திக்குமுக்காட வைக்கும் நிகழ்வொன்று ஆண்டுக்கு ஒருமுறை வரும். அப்போது ஆர்ப்பரிக்கும் கூட்டம் மும்பை வீதிகளில் வழிந்து நிற்கும். தீபாவளிக்குப் பிறகு இந்தியா முழுக்க கொண்டாடப்படும் ஒரு விழா என்றால் அது விநாயாகர் சதுர்த்திதான். கடந்த அரை நூற்றாண்டுகளில் இந்து அமைப்புகளால்  இந்தியா முழுக்க கொண்டு சேர்க்கப்பட்டுள்ள விநாயகர் ஊர்வலத்துக்கு ஆன்மீக ரீதியில் பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் அதையும் தாண்டிய காரணம் ஒன்று உள்ளது. அது இந்துத்துவா அரசியல். நாடு முழுக்க இந்துத்துவா அரசியலை இந்துக்களிடம் கொண்டு சேர்க்கவும், அதன்பேரில் அவர்களை ஒன்று திரட்டவும் அறிவிக்கப்படாத ரத யாத்திரையாக விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்கள் நடந்து வருகின்றன. உண்மையில் இதன்...

மோடி ஆட்சியில் சீர்குலைந்த  பொருளாதாரம்  புள்ளி விவரங்கள் உண்மையை  படம் பிடிக்கின்றன செ.கார்கி

மோடி ஆட்சியில் சீர்குலைந்த பொருளாதாரம் புள்ளி விவரங்கள் உண்மையை படம் பிடிக்கின்றன செ.கார்கி

“பங்குச்சந்தையில் முதலீடு செய்து கொள்ளையடிக்க வந்த அந்நிய மூலதனம் எப்போதுமே நிலையாக இருப்பதில்லை. அவை எங்கு லாபம் கிடைக்குமோ அங்கு வெட்டுகிளி கூட்டத்தைப் போல ஓடிக்கொண்டே இருக்கும். இந்தியாவில் இருந்து வெளியேறிய அந்நிய முதலீடுகள் 2010 ஆம் ஆண்டு 30 சதவீதமாகவும் 2016-2017 ஆம் ஆண்டு 36 சதவீதமாகவும் 2017-2018(ஜனவரி வரை) 47 சதவீதமாகவும் உயர்ந்திருக்கின்றது.”   மோடியின் ஆட்சி இன்னும் சில மாதங்களில் முடியப்போகின்றது. நரகத்தின் எண்ணெய் சட்டியில் இருந்து எழுந்து ஓட இந்தியர்கள் தயாராக இருக்கின்றார்கள். ஆனால் இந்த முறையும் மோடி பழைய பொய்களுக்கு பதில் பதிய பொய்களைத் தூக்கிக் கொண்டு உங்களை சந்திக்க வருவார். இந்த முறை முன்பைவிட  கவர்ச்சியான அதி பயங்கரமான பொய்களை அவர் கட்டவிழ்த்து விடுவார். இறந்து போனவர்களை உயிர்ப் பிப்பேன் என்றோ, உயிரோடு இருப்பவர்களுக்கு மரணமற்ற பெருவாழ்வை தருவேன் என்றோ அவர் வாக்குறுதி தரலாம். பொய்யையும், உண்மையையும் பிரித்தறிய திராணியற்ற பார்ப்பனியத்தால் மூளை...

‘அவர்களின் கைப்பிடித்து நடப்போம்’ ‘டீன்ஏஜ்‘ குழந்தைகளின் பாலின ஈர்ப்பை  பெற்றோர்கள் எப்படி எதிர்கொள்வது?

‘அவர்களின் கைப்பிடித்து நடப்போம்’ ‘டீன்ஏஜ்‘ குழந்தைகளின் பாலின ஈர்ப்பை பெற்றோர்கள் எப்படி எதிர்கொள்வது?

பள்ளிக்குச் செல்லும் வழியில் கல்லூரி மாணவன் ஒருவன் தன்னைச் சில நாட்களாகப் பின்தொடர்ந்து வருவதை ரேவதி கவனித்தாள். அவனைத் திரும்பிப் பார்க்க வேண்டும்போல் தோன்றியது. ஆனால், அவன் அதைக் கவனித்துவிடுவானோ என்று பதற்றமாகவும் இருந்தது. பிப்ரவரி 14 காதலர் தினத்தன்று அவன் ஒரு வாழ்த்து அட்டையை அவளிடம் கொடுத்தான். கைகள் தீண்டியபொழுது கிடைத்த ஸ்பரிசம் அவளுக்கு மகிழ்ச்சியாகவும் இருந்தது. கூடவே யாராவது பார்த்து விடுவார்களோ என்று பயமாகவும் இருந்தது. பிறந்த நாளன்று புது டிரெஸ் அணிந்து அத்தை வீட்டுக்கு இனிப்பு கொடுக்கப் போனாள் ஸ்வேதா. அத்தை, மாமாவிடம் கொடுத்துவிட்டு சந்துருவைத் தேடினாள். அவன் அறைக்குள் இருப்பதாக அத்தை சொன்னார். கதவுக்குப் பின்னால் மறைந்து இருந்தவன் அவள் உள்ளே நுழைந்தவுடன் ‘பே’ என்று பயமுறுத்தினான். அவள் பயந்துவிட்டாள் என்று தெரிந்தவுடன், ‘சும்மா’ என்று சொல்லி விட்டு, இனிப்பை எடுத்துச் சாப்பிட்டான். இன்னொரு இனிப்பை எடுத்து அவளுக்கு ஊட்டிவிடப் போனான். அவள் பின்னால் போவதைப்...

நீர் நிலைகளை மாசுபடுத்தும் ‘கடவுள்’ கரைப்புகள்

நீர் நிலைகளை மாசுபடுத்தும் ‘கடவுள்’ கரைப்புகள்

பல்வேறு வகையில் வெளியேறும் கழிவுநீரும் நீர்நிலைகளை மாசுபடுத்துகிறது. ஆனால், கடவுள் சிலைகளைக் கரைப்பதால் ஏற்படும் ஆபத்தைவிடக் குறைவான பாதிப்பையே கழிவுநீர் ஏற்படுத்துகிறது என்று மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்திருக்கிறது. களிமண்ணால் செய்யப்பட்ட சிலைகள், நீர்நிலைகளுக்கு எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது. ஆனால், செயற்கைக் களிமண் (பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ்), சுட்ட களிமண், காகிதக்கூழ் போன்றவற்றால் செய்யப்படும் சிலைகள், நீர்நிலைகளுக்குப் பெரும் ஆபத்தை விளைவிக்கும். தவிர, இந்தச் சிலைகளைச் செய்யவும் அலங்கரிக்கவும் பயன்படுத்தப்படும் ரசாயனப் பூச்சுகள், வண்ணத் திரவங்கள், இரும்புக் கம்பிகள், பல வகையான துணி ரகங்கள், செயற்கை மணிகள் – மாலைகள் போன்றவையும் நீர்நிலைகளைப் பெரிய அளவில் மாசுபடுத்து கின்றன. ரசாயன வண்ணங்களில் பாதரசம், காட்மியம், குரோமியம், துத்தநாகம், ஆர்சனிக், காரீயம் போன்ற கன உலோகங்கள் நிறைந்திருக்கும். இவற்றில் பல புற்றுநோயை ஏற்படுத்தக் கூடியவை. இவை நீரில் கரையும்போது அங்கு வாழும் உயிரினங்களும் அந்தப் பகுதியைச் சுற்றி வாழும் பறவை யினங்களும்...

ஒரு பெரியார் தொண்டரின் வாய்மொழி வரலாறு மா.கோபாலன்

ஒரு பெரியார் தொண்டரின் வாய்மொழி வரலாறு மா.கோபாலன்

1940-50களில் சென்னையில் பெரியார் இயக்கச் செயல்பாடுகள் எப்படி இருந்தன? 14 வயதில் பெரியாரிடம் அறிமுகமாகி பெரியார் இயக்கத்தில் இணைத்துக் கொண்டு 23ஆவது வயதில் பெரியார் ஆணையை ஏற்று தமிழக அரசுப் பணியில் சேர்ந்தவர் மா.கோபாலன். திருத்தணி வட்டம் சிறுமணவூரைச் சேர்ந்தவர். அரசு துணைச் செயலாளராகவும், கடைசியில் புதிய பல்கலைக் கழகங்களுக்குத் தனி அலுவலராகவும் பணியாற்றி, ஓய்வுக்குப் பிறகு சைவப் பற்றாளராக மாறியவர். குடந்தை அருகே திருப்பனந்தாள் சைவ மடத்தில் மடத்தின் சைவ மடாதிபதியிடம் நெருக்கமாகி, சைவச் சொற்பொழிவுகளை நடத்தத் தொடங்கினார். பெரியாரியலிலிருந்து சைவப் பற்றாளராக மாறிய நிலையிலும், பணி ஓய்வுக்குப் பிறகு வாழ்வின் இறுதி காலத்தில் தனது மரணத்துக்கு முன் ‘ஆடும் பருவத்தில் என்னை ஆட்கொண்ட பெரியார்’ என்று பெரியார் இயக்கத்திடம் தனக்கிருந்த ஈடுபாட்டை நெகிழ்ச்சியோடு பதிவு செய்துள்ளார். வாய்மொழி வரலாறாக வெளி வந்துள்ள இந்த நூலில், அக்காலத்தில் சென்னையில் திராவிடர் கழகத்தின் செயல்பாடுகளையும் களப்பணியாற்றிய பெரியார் தொண்டர்கள், அவர்கள் நடத்திய...

“கோயில் பக்கம் திரும்பாதே!”

“கோயில் பக்கம் திரும்பாதே!”

உலகில் எந்த ஒரு மதமும் தங்கள் மதத்தினர் வழிபாட்டுக்கு வரும்போது ‘உள்ளே வராதே’ என்று தடுப்பது இல்லை. ஆனால் இந்த நாடே இந்துக்களுக்கானது; நாம் அனைவருமே இந்துக்கள்; பிற மதத்தவர் – அன்னியர்” என்று  பேசுகிறவர்கள்தான். ‘இந்து’ வழிபாட்டுக்கு உரிய கோயில்களில் சமூகத்தின் சரி பகுதியாக இருக்கும் பெண்களைப் பார்த்து, “கோயிலுக்கு வராதே” என்று தடுக்கிறார்கள். “தீண்டாமை அனைத்து வடிவங்களிலும் தடை செய்யப்படுகிறது” என்று சட்டம் அமுலில் உள்ள ஒரு நாட்டில் அந்த சட்டத்தின் உணர்வுகளை மதித்து உச்சநீதிமன்றம், பெண்களையும் கோயிலுக்குள் அனுமதிக்கலாம் என்று தீர்ப்பளித்த பிறகும், பா.ஜ.க.வும் சங்பரிவாரங்களும் கேரள மாநில காங்கிரசும் கைகோர்த்துக் கொண்டு, பெண்கள் சபரிமலை அய்யப்பன் கோயிலுக்குள் வழிபட வருவதைத் தடுத்து நிறுத்துகிறார்கள். ‘தீண்டப்படாத மக்கள்’ கோயில் நுழைவுக்குக்கூட சம்பிரதாயங்களைக் காட்டியே பார்ப்பனர்கள் தடுத்தனர். 1947ஆம் ஆண்டு அனைத்து ஜாதியினருக்கும் ‘ஆலயப் பிரவேசம்’ வழங்கும் சட்டம் தமிழ்நாட்டில் கொண்டுவரப்பட்டபோது சம்பிரதாயங்களான ‘ஆகமவிதிகளும்’ மாற்றப்பட்டன என்பது வரலாறு....