அய்ராவதம் மகாதேவன் முடிவெய்தினார்

அய்.ஏ.எஸ். அதிகாரியாக பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்று ‘தினமணி’ நாளேட்டில் ஆசிரியராக நான்காண்டு காலம் பணியாற்றி, பிறகு எழுத்தியல் குறித்த ஆய்வில் பெரும்

சாதனை முத்திரைகளைப் பதித்த அய்ராவதம் மகாதேவன் முடிவெய்தினார்.

பார்ப்பனராகப் பிறந்தாலும் அவர் சார்பு நிலையற்ற ஆய்வாளராக வாழ்ந்து காட்டிய அபூர்வ மனிதராகவே வாழ்ந்தார்.

சிந்து சமவெளி நாகரிக எழுத்துக்கள் திராவிட நாகரிகத்துக்கு உரியவை என்பதை ஆதாரங்களுடன் நிரூபித்தார். தமிழ் பிராமி எழுத்துகள் தான் மிகவும் பழமையானது என்பதை நிறுவியவர். சிந்து வெளி நாகரிகம், ஆரிய நாகரிகமே என்று வரலாற்றுத் திரிபு செய்த பார்ப்பனியத்துக்கு மறுப்பாக அவரது ஆய்வு அமைந்தது. இந்திய வரலாற்று ஆய்வு மய்யத்தின் நிதி உதவியோடு அவர் நடத்திய ஆய்வுகளை இந்திய தொல்லியல் துறை 1977இல் நூலாக வெளியிட்டது. மண்டல் பரிந்துரையில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு ஆணை வந்தபோது பார்ப்பனர்கள் கடுமையாக எதிர்த்த நிலையில் அதை ஆதரித்தவர் அய்ராவதம் மகாதேவன்.

தனது 88ஆவது வயதில் கடந்த நவம்பர் 26 அன்று முடிவெய்தினார். திராவிடர் விடுதலைக் கழகம் அவரது ஆய்வுத் தொண்டைப் பாராட்டி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள் கிறது.

பெரியார் முழக்கம் 20122018 இதழ்

You may also like...