12 மணி நேர வேலை சட்டம்; அரசு திரும்பப் பெற வேண்டும்
1948ஆம் ஆண்டு இயற்றபட்ட தொழிற்சாலை சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்திருக்கிறது தமிழ்நாடு அரசு. தொழிலாளர் களின் 8 மணி நேர வேலையை 12 மணி நேரமாக உயர்த்தி அறிவித்திருக்கிறது தமிழ்நாடு அரசு. இந்த சட்டத்திற்கு திமுகவின் கூட்டணி கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து சட்டமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்திருக்கிறது. இப்படிப்பட்ட ஒரு சட்டம் ஏன் கொண்டு வரப்பட்டுள்ளது என்று தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தரும் விளக்கம் ஏற்றுக் கொள்வதாக இல்லை. பல தொழில் நிறுவனங்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய வரும்போது இப்படி கடநஒiடெந hடிரசள என்ற ஒரு சட்ட திருத்தத்தை அவர்கள் கோருகின்றனர். அதற்காகவே இந்த திருத்தம் கொண்டு வரப்பட்டிருக்கிறது, தொழிலாளர்கள் 12 மணி நேரம் வேலை செய்ய வேண்டிய கட்டாயம் இல்லை, அவர்கள் விரும்பினால் வேலை செய்யலாம் என்று ஒரு விளக்கத்தை அவர் வழங்கியிருக்கிறார். முதலாளிகளிடம் அதிகாரத்தைக் கொடுத்துவிட்டு அவர்கள் தொழிலாளிகளுக்கு உரிய பாதுகாப்பை வழங்குவார்கள் என்று எதிர்பார்ப்பதில்...