கலிபோர்னியா மாநிலத்தில் ஜாதிப் பாகுபாடுகளுக்குத் தடை

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலம், ஜாதிப் பாகுபாடுகளைத் தடை செய்யும் மசோதாவைக் கொண்டு வந்துள்ளது. ஏற்கனவே வாஷிங்டன் மாநிலத்திலுள்ள சீட்டில் நகரசபை இதேபோல ஒரு சட்டத்தை நிறைவேற்றி யுள்ளது. இப்போது அமெரிக்காவில் கலிபோர்னியா மாநிலமே இப்படி ஒரு சட்டத்தைக் கொண்டு வந்திருக்கிறது. மாநில சட்டமன்ற செனட்டர் ஆயிஷா வகாப் என்ற முஸ்லிம் பெண், இந்த மசோதாவை அறிமுகம் செய்துள்ளார்.

இவர் ஆப்கானிஸ்தானத்தைப் பிறப்பிடமாகக் கொண்டு அமெரிக்காவின் குடியுரிமைப் பெற்று சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வு பெற்றுள்ளார். இது சமூகநீதி மனித உரிமைப் பிரச்சினை என்று அவர் கூறியுள்ளார். இந்த மசோதாவுக்கு அமெரிக்க இந்துக்கள் கூட்டமைப்பு போன்ற பார்ப்பன சனாதன அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

தகவல்: ‘டைம்ஸ் ஆப் இந்தியா’, மார்ச் 24, 2023

பெரியார் முழக்கம் 13042023 இதழ்

You may also like...