12 மணி நேர வேலை சட்டம்; அரசு திரும்பப் பெற வேண்டும்
1948ஆம் ஆண்டு இயற்றபட்ட தொழிற்சாலை சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்திருக்கிறது தமிழ்நாடு அரசு. தொழிலாளர் களின் 8 மணி நேர வேலையை 12 மணி நேரமாக உயர்த்தி அறிவித்திருக்கிறது தமிழ்நாடு அரசு. இந்த சட்டத்திற்கு திமுகவின் கூட்டணி கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து சட்டமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்திருக்கிறது. இப்படிப்பட்ட ஒரு சட்டம் ஏன் கொண்டு வரப்பட்டுள்ளது என்று தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தரும் விளக்கம் ஏற்றுக் கொள்வதாக இல்லை. பல தொழில் நிறுவனங்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய வரும்போது இப்படி
கடநஒiடெந hடிரசள என்ற ஒரு சட்ட திருத்தத்தை அவர்கள் கோருகின்றனர். அதற்காகவே இந்த திருத்தம் கொண்டு வரப்பட்டிருக்கிறது, தொழிலாளர்கள் 12 மணி நேரம் வேலை செய்ய வேண்டிய கட்டாயம் இல்லை, அவர்கள் விரும்பினால் வேலை செய்யலாம் என்று ஒரு விளக்கத்தை அவர் வழங்கியிருக்கிறார்.
முதலாளிகளிடம் அதிகாரத்தைக் கொடுத்துவிட்டு அவர்கள் தொழிலாளிகளுக்கு உரிய பாதுகாப்பை வழங்குவார்கள் என்று எதிர்பார்ப்பதில் எந்த நியாயமும் இருக்க முடியாது. இப்போதும் கூட டிஎநச வiஅந என்று சொல்லக்கூடிய கூடுதல் நேரம் வேலை செய்து அதற்கு தனி ஊதியம் பெற்றுக் கொள்ளும் முறை இருக்கும் பொழுது 8 மணி நேரத்தை ஏன் 12 மணி நேரமாக உயர்த்த வேண்டும் என்று சில உறுப்பினர்கள் கேட்கும் கேள்வியில் நியாயம் இருக்கிறது.
ஏற்கனவே உள்ள சட்டத்தில் சில தொழிற்சாலைகளுக்கு 8 மணி நேர வேலையிலிருந்து விலக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில் இப்போது இந்த தனிச் சட்டத்துக்கு என்ன தேவை?
அதிகாரிகளின் உளவியல் எப்பொழுதும் நிர்வாகத்தைச் சார்ந்திருக்குமே தவிர மக்களின் உணர்வுகளைச் சார்ந்து இருக்காது. அரசு அதிகாரிகளின் கருத்துகளை கேட்டுக்கொண்டு மக்களின் உணர்வுகளுக்கு எதிராக செயல்படுவது ஆபத்தானது. அதிகாரிகளைக் கட்டுப்படுத்தி மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து நடக்கக்கூடிய கடமையும் பொறுப்பும் அரசுக்கு இருக்கிறது. அந்த வகையில் தமிழ்நாடு அரசு இந்த சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கை, இந்த ஆட்சிக்கு இதுவே ஒரு கரும்புள்ளியாக மாறிவிட்டது என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
பெரியார் முழக்கம் 27042023 இதழ்