ஸ்ரீமான் ஸி. ராஜகோபாலாச்சாரியார்
“கள்ளின் வெற்றியே வெற்றி” என்ற தலைப்பின் கீழ் “அரசாங்கத்தார் நடத்திவரும் பொல்லாத கள்ளுக்கடைகளை மூட வழி தேடுங்கள்” என்று சொன்னேன். அதற்கு வகுப்புவாரிக்காரரும் ஜஸ்டிஸ் கக்ஷியாரும் இன்னும் சிலரும் தன்னைப் பற்றி சந்தேகப்படுகிறார்கள் என்று சொல்லுகிறார். ஆனால், கக்ஷியார்கள் இவர்பேரில் சந்தேகப்படுவதற்கு சொல்லும் காரணங்களுக்கு மாத்திரம் பதில் சொல்லுவதில்லை. சந்தடி சாக்கில் ஜஸ்டிஸ் கக்ஷியைப் பற்றி சொல்லும் போது “நியாயக் கட்சி (=பிராமணரல்லாதார் – ஜஸ்டிஸ் கக்ஷி) என்று பெயர் வைத்துக் கொண்டு சிறு வகுப்பார்களை (=பிராமணர்களை ) அநியாயமாய் (= யோக்கியமான பிராமணர்களின் மேல் அபாண்டமான பழிகளைச் சொல்லி) பசு பலத்தால் (= மிருக பலத்தால்) ஒடுக்கியாள (=அவர்களுக்கு மேலே போக) முயலும் (=வகுப்புவாரிப் பிரதிநிதித்வம் கேட்கும் ) கக்ஷியாரை (= பிரசாரம் செய்யும் கக்ஷியாரை) நான் ஆதரிப்பதாய் (=பிராமணராகப் பிறந்த நான் ஆதரிப்பதாய்) ஏன் எண்ணுகிறீர்கள்(=பிராமணர்களே பயித்தியக் காரத்தனமாய் ஏன் எண்ணுகிறீர்கள்) என்று எழுதுகிறார்.” இதிலிருந்தே ஸ்ரீமான் ஆச்சாரியாரின்...