கோயமுத்தூர் வாக்காளர்களுக்கு ஓர் வேண்டுகோள் (ஸ்ரீமான் ஈ.வெ.ராமசாமி நாயக்கர்)
நமது நாட்டின் அடிமைத் தன்மைக்கும், அழிவுத் தன்மைக்கும் நமது ஒற்றுமைக் குறைவுதான் காரணமாயிருப்பதென்பதை எல்லோரும் அறிந்த விஷயம். அரசாங்கத்தாரால் நமக்குக் கொடுக்கப்படும் கல்வியும் அக்கல்வி கற்றதற்காக நமக்குக் கொடுக்கப்படும் உத்தியோகமும், பதவியும், அரசாங்கத் தாரால் நமக்கு வழங்கப்பட்டதெனச் சொல்லும் இத்தேர்தல் முறைகளும் ஆகிய இம்மூன்றும் நமது ஒற்றுமையின்மைக்குப் பிறப்பிடமாயிருக்கிறது. முதலிரண்டு காரியமும் படித்தவர்களைப் பற்றிக்கொண்டு ஒற்றுமைக் குறைவும் அடிமைத் தன்மையும் அவர்களால் உண்டாக்கப்பட்டு வந்தாலும் மூன்றாவதான தேர்தல் முறைகளான ( எலக்ஷன்கள் ) படித்தவர்களோடு அல்லாமல் சாது ஜனங்களையும், வியாபாரிகளையும், பொது மக்களையும் ஒற்றுமையோடு வாழ்வதற்கில்லாமல் பிரித்து வைக்கவும், துவேஷங்களை யும், குரோதங்களையும் உண்டாக்கி கட்சிப் பிரதிகட்சிகளை ஏற்படுத்தவும் சாத்தியமாயிருக்கிறது. இக்காரணங்களால்தான் பொதுநலத்திற்கு உண்மை யாய் உழைக்கிறவர்கள் இத்தேர்தல்களை காங்கிரஸின் வேலைத் திட்டங் களில் புகவிடாமல் தள்ளிவைத்துக் கொண்டே வந்தார்கள். இப்பொழுது நியாயமாகவோ, அநியாயமாகவோ எப்படியோ காங்கிரஸிற்குள்ளாக தேர்தல் கள் வந்து புகுந்துவிட்டதாய் காங்கிர°காரர்களும், பொது ஜனங் களும் எண்ணும் படியாய்...