நல்ல இடி

சேலம் பார்ப்பனருக்கும் அவர்களது வால் பிடித்துத் திரிபவர்களுக் கும் நமது முதல் மந்திரி கனம் டாக்டர் சுப்பராயன் நல்ல இடி கொடுத்ததாக தெரிந்து நாம் மிகவும் சந்தோஷப்படுகிறோம். ஆனாலும் காண்டா மிருகத்தோல் படைத்த அப்பார்ப்பனருக்கும் அவர்களது அடிமைகளுக்கும் அது கொஞ்சமாவது சொரணை உண்டாகுமா என்பதுதான் நமது கேள்வி?

அதாவது கனம் சுப்பராயனவர்களை சேலம் பார்ப்பனர்கள் தங்கள் டிக்கட் பாக்கட்டில் போடுவதற்காக “லிட்டரரி சொசைட்டி” என்கிற ஒரு பார்ப்பனக் கூட்ட நிலையத்தில் ஒரு கூட்டம் கூட்டி அவரை வானமளாவப் புகழ்ந்தும் இதற்கு முன் மந்திரியாய் இருந்தவர்களை ஆசைதீர வைதும் பேசினார்களாம். இதற்குப் பதிலளிக்குமுகத்தான் கனம் சுப்பராயன் இம்மாதிரி ஒருவரை, உத்தியோகம்விட்டுப் போனபின் வைவது இழிவு என்றும், நாளைக்கு என்னையும் இப்படித்தான் வைவீர்கள் என்றும், இப்படிச் செய்வது உங்களுக்கு யோக்கியதை அல்ல வென்றும் சொன்னாராம். வைததில் பெருமை கொண்டவர்களும் வைததைக் கேட்டு ஆனந்தம் கொண்டவர் களும் வெட்கித் தலைகுனிந்தார்களாம். இதோடு இந்தப் புத்தியை விட்டு விடுவார்களா?

குடி அரசு – துணைத் தலையங்கம் – 09.01.1927

You may also like...

Leave a Reply