கோவை மகாநாடு ( ஈ.வெ.கி )

நமது மாகாண பார்ப்பனரல்லாதாரின் விசேஷ மகாநாடு இன்று கோவையில் கூடுகிறது. நீண்ட காலமாக நம்முள் சிதரிக் கிடந்த அபிப்பிராய பேதமுடைய ராஜீய பார்ப்பனரல்லாதார்களான கனவான்கள் யாவரும் விஜயம் செய்திருக்கிறார்கள். இதில் ஒரு நன்முடிவுக்கு நாம் வராவிட்டால் நமது நிலை என்ன ஆகுமென்பதை முன்பே எழுதி இருக்கிறோம்.“ சுயமரியாதை” வேண்டுமென்றும் அதற்கு நமக்கென ஒரு தனி இயக்கம் வேண்டுவது அவசியமென்றும், காலம்சென்ற நமது தலைவர்களான திரு. நாயர் பெருமானாலும், தியாகராயர் பெருமானாலும் முதன் முதல் எந்த இடத்தில் இயக்கம் தோற்றுவிக்கப்பட்டதோ அதே இடத்தில்தான் அவ்வியக் கத்தின் நெருக்கடியான காலத்தில் ஒரு முடிவு காணவும் இன்று கூடி இருக்கிறோம். மாகாண பார்ப்பனரல்லாதார் மகாநாடும், ஜில்லா இளைஞர்கள் மகாநாடும் ஒரே இடத்தில் கூடி இருக்கிறது. இவ்விரு மகாநாடுகளின் வரவேற்புக் கழகத் தலைவர் பிரசங்கமும், மகாநாட்டுத் தலைவர் பிரசங்கமும், நமது பார்வைக்கு வந்து விட்டது.

திருவாளர் ரெத்தின சபாபதிக் கவுண்டர் மகாநாட்டு வரவேற்புக் கழகத் தலைவரவர்கள் பார்ப்பனர் கொடுமையையும், பார்ப்பன சூழ்ச்சிகளையும், தாராளமாக எடுத்துக் காட்டி கண்டித்திருப்பதோடு காங்கிரஸில் சேர வேண்டு மென்ற அபிப்பிராயத்தையே முக்கியமாகக் காட்டி இருக்கிறார். அதற்கு பல காரணங்களைச் சொல்லி இருக்கிறார் எனினும் காங்கிரஸைப் பற்றி இதுவரையில் நாம் சொல்லி வந்த விஷயங்களில் ஒன்றுக்காவது சரியான பதிலில்லை. மகாநாட்டுத் தலைவர் திவான்பஹதூர் எஸ். குமாரசாமி ரெட்டி யார் எம்.எல்.ஸி அவர்கள் தமது தலைமை உபன்யாசத்தில், நமது கட்சியின் இன்றைய நிலையைப் பற்றியும், காங்கிரஸை பார்ப்பனர்கள் தங்கள் நன் மைக்கு எப்படி உபயோகப்படுத்தி வருகிறார்கள் என்பதைப்பற்றியும், காங்கிரஸின் மூலியமாகப் பார்ப்பனர்கள் தங்கள் வகுப்பு நலன் ஒன்றை மட்டும் கோரி எவ்விதம் நடந்து கொள்ளுகிறார்களென்பதை பற்றியும் காங்கிரஸ் தலைவர் ஸ்ரீமான் சீனிவாச ஐயங்கார் தன்னுடைய வகுப்பு நலனுக் காக இதுவரையில் செய்து வந்த சூழ்ச்சிகளைப் பற்றியும், மந்திரிகளைத் தங்களின் நலத்துக்கென்றே சிருஷ்டித்து அவர்களை எப்படி ஆட்டி வருகிறார் என்பதைப் பற்றியும் விஸ்தாரமாகச் சொல்லியிருப்பதோடு, கிராம அபிவிருத்தி, நிர்மாணத்திட்டம், எதிர்காலத்தில் நமக்குள்ள பெரும் பொறுப்பு, கல்வி, சுகாதாரம், கைத்தொழிலபிவிருத்தி, விவசாயம், நீர்ப்பாசனம் முதலிய விஷயங்களைப் பற்றியும் உத்தியோகம் முதலிய விஷயங்களில் அரசாங் கத்தின் மனப்பான்மையை விளக்கிக் காட்டிக் கண்டித்தும் இருப்பதோடு, காங்கிரஸ் பிரவேசத்தைப் பற்றி பிரவேசத்துக்கு அனுகூலமாகச் சொல்லப் படுவதில் சிலதையும், பிரதிகூலமாகச் சொல்லப்படும் விஷயங்களில் சில தையும் எடுத்துக் காட்டி இருப்பதோடு அதன் முடிவைப் பொதுஜனங்கட்கே விட்டு விட்டதாகவும் எழுதி இருக்கிறார்.

இளைஞர் மகாநாட்டின் வரவேற்புத் தலைவர் திருவாளர் சி.வி.வி. சுப்பைய்ய செட்டியார் அவர்கள் தமது உரையில் இதுவரையில் இளைஞர்கள் சமுதாய விஷயம் ஒன்றிலேயே இருந்து வந்ததாகவும், இன்று நமது தலைவர்களின் செய்கை இளைஞர்களை அரசியலிலும் தலையிடத் தூண்டிவிடுமோவென்று ஐயுறுவதாகவும் கூறிவிட்டு காங்கிரஸ் பிரவேசம் கூடாதென்றும் அது மாய்கை என்றும், இன்றுள்ள சிறு ஐக்கிய பாவம் கூட பிரவேசத்தால் நமது தலைவர்களுக்கு இராதென்றும், அரசியலும், சமூக இயலும் உடலும், உயிரும் போன்றதென்றும், இவ்விரண்டையும் அனுஷ் டிக்கும் காலங்களிலெல்லாம் நமது இயக்கத்திற்குச் செல்வாக்கிருந்ததாகவும், அரசியல் ஒன்றையே கவனித்ததால்தான் தேர்தலில் நமது கட்சி தோற்ற தென்றும், நியாயக் கட்சியான நமது திட்டத்தை நமது மாகாணமின்றி மற்ற மாகாணவாசிகளும் பின்பற்றி வருகிறார்கள் என்றும், அவர்களின் சம்மத மின்றி காங்கிரஸ் பிரவேசத்தைப் பற்றிச் சிந்திப்பதே பொறுத்தமற்றதென்றும் ராயல் கமிஷனிடம் சாக்ஷி கொடுத்து அதன் பயனைக் கொண்டு சமூக நன்மைகளைச் செய்ய அகில இந்திய இயக்கமாக வேண்டுமானால் அதற்கு காங்கிரஸை விட நமது கக்ஷியின் பெயரையே அகில இந்திய இயக்கமாக்க வேண்டுமென்றும் சென்ற லார்ட் செம்ஸ் போர்டு சீர்திருத்தக் கமிஷன் முன் நாம் சாக்ஷியம் கொடுத்த காலத்தில் காங்கிரசுடன் சேர்ந்திருக்கவில்லை என்றும் பொதுவாக காங்கிரஸ் பிரவேசத்தைக் கண்டித்து, பார்ப்பன புரோகித பகிஷ்காரமான சுயமரியாதை இயக்கத்திற்குச் சகலரும் ஆதரவளிக்க வேண்டுமென்றும் கூறி இருக்கிறார். இளைஞர் மகாநாட்டின் தலைவரான திருச்சி, திரு. கூ.ஹ.ழு. இரத்தினம் க்ஷ.ஹ.,டு.டு.க்ஷ, அவர்களின் அக்கிறாசன உரை நமக்கு இன்னம் கிட்டவில்லை.

பின் அதைப் பற்றி விவரிப்போம். நமது ஆசிரியர் ஈ.வெ. இராமசாமி நாயக்கர் அவர்கள் திரேக அசௌக்கிய மடைந்து கோவையிலேயே இருப் பதால் மகாநாட்டைப் பற்றிய அபிப்பிராயத்தை நாம் வெளியிடுவதற்கில்லை யெனினும் மகாநாட்டுப் பிரதிநிதிகளில் தங்களை அரசியல் தலைவர்கள் என்று சொல்லிக் கொண்டிருக்கிற தனிப்பட்ட கனவான்களும், அவர்களின் சிஷ்யர்கள் சிலரும் தவிர, மற்றவர்களெல்லோரும் காங்கிரஸ் சம்பந்தமானது தேசத்திற்கும் சிறப்பாக பார்ப்பனரல்லாதாருக்கும் கெடுதி என்றே நினைக் கிறார்கள். ஆயினும் நம்முள் பிரிவினையில்லாதிருப்பதற்கு ஏதாவது ஏற் பாடு செய்யலாம் என்ற ஆவலுமிருக்கிறதாக உணர்கிறோம். ஜஸ்டிஸ் கட்சியை சில அரசியல் தலைவர்கள் தங்களுடைய நன்மைக்கு உபயோகப் படுத்திக் கொள்ள இது சூழ்ச்சியா? என்ற பயமுள்ளவர்களும், ஜஸ்டிஸ், காங்கிரஸ் இரு கட்சிகளையும் இதன் இஷ்டம் போல் விட்டு விட்டுச் சமுதாய முற்போக்கிற்கென்று சுயமரியாதை இயக்கத்தை தனியாக ஏர்ப்படுத்தலாமா? என்ற எண்ணமுள்ளவர்களும் இருக்கிறார்களென அறிகிறோம். எப்படி யானாலும் சரி மகாநாட்டில் பொது உணர்ச்சியும், முன்னேற்றத்திற்கு கெம்பீ ரமான தோற்றத்துடன் கூடிய ஆசையும் தான் தாண்டவமாடிக் கொண்டி ருக்கிறது. நாயக்கரை பொறுத்தவரையில் எந்த விஷயத்தையும் வலியுறுத்தப் போவதில்லையென்றும் காங்கிரஸின் பொறுப்பையோ; ஜஸ்டிஸ் கட்சியின் பொறுப்பையோ தான் மேல் எடுத்துப் போட்டுக் கொள்ள போவதில்லை என்றும் எவருடைய முயர்ச்சிக்கும் தாம் முட்டுக்கட்டையாக இருக்கப் போவதில்லை என்றும் முன்னமேயே தெரிவித்து விட்டதாக அறிகிறோம். டாக்டர்கள் கண்டிப்பாய் ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டுமென்று கட்டாயப் படுத்தியிருப்பதால் மகாநாட்டின் நடவடிக்கைகளில் அதிகம் பங்கெடுத்துக் கொள்ள முடியவில்லை.

சிறப்புற்ற நமது ஜில்லாவின் தலைநகரான கோவையம்பதி மகா நாட்டுக்கு விஜயம் செய்துள்ள மாகாண பார்ப்பனரல்லாதாரர்களை மீண்டும் நல்வரவேற்கிறோம். தங்களின் மகத்தான கடமையையும், பொறுப்பையும் உணர்ந்து மகாநாட்டை பொதுநல நோக்கத்துடன் பொறுப்பெடுத்து வெற்றி பெறுமாறு இனிது நிறைவேற்றுவார்களென்று நம்புகிறோம்.


குடி அரசு – தலையங்கம் – 03.07.1927

You may also like...

Leave a Reply