Tagged: பெரியார்139

திருப்பூரை உலுக்கிய பெரியார் பிறந்தாள் வாகன பேரணி

கழக தலைவர் கொடியசைத்து துவக்கி வைத்தார் பெரியாரின் 139ஆவது பிறந்த நாள் விழா செப்.17 அன்று திருப்பூர் மாவட்டத்தின் சார்பாக பெரியார் கூட்டமைப்பின் ஊர்வலம் மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து இரயில்நிலையம் பெரியார் சிலை வரை 3 மணி நேரம் கொட்டும் மழையில் நடைபெற்றது அதன் தொடர்ச்சியாக இருசக்கர வாகன பேரணியும், 24 இடங்களில் கழக கொடியேற்றும் விழாவும் 02/10/2017 அன்று காலை 10 மணிக்கு கழக தலைவர் கொளத்தூர் மணி அவர்கள் பெரியார் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து கழக கொடியினை ஏற்றி சிறப்புரையாற்றினார். உடன் கழக பொருளாளர் துரைசாமி, மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் மாநகர் பொறுப்பாளர்களோடு, திருப்பூர், பொள்ளாச்சி, கோவை, நாமக்கல் மாவட்ட தோழர்களும் இருந்தனர். காலையில் இரயில்நிலையம் முன் அமைந்துள்ள பெரியார் சிலை அருகில் தோழர்கள் ஒன்று கூடினர். பறை முழக்கம் இசைக்கப்பட்டது. அதன் பின் கழக கொடியசைத்து தோழர் கொளத்தூர் மணி அவர்கள் வாகன ஊர்வலத்தை தொடங்கி...

நெமிலியில் பெரியார் பிறந்த நாள் பொதுக் கூட்டம்.

நெமிலியில் பெரியார் பிறந்த நாள் பொதுக் கூட்டம். நாள் : O8.10.2017 ஞாயிற்றுக்கிழமை நேரம். : மாலை 5.00 மணி. இடம்: மரக்கன்று நடுதல் – கோடம்பாக்கம். பொதுக் கூட்டம் : நேரம் : மாலை 6.00 மணி. இடம்: தோழர் க.முனியாண்டி நினைவு மேடை – நெமிலி பேருந்து நிலையம். சிறப்புரை : தோழர் கொளத்தூர் மணி, தலைவர், திராவிடர் விடுதலைக்கழகம். வே.மதிமாறன், எழுத்தாளர் கும்மிடிப்பூண்டி மனோகரனின் அம்பேக்கர் கலைக் குழுவின் கலை நிகழ்ச்சி நடைபெறும்.

தந்தை பெரியார் பிறந்தநாள் விழா இரு சக்கர வாகன ஊர்வலம் / கொடியேற்றம் 02102017 திருப்பூர்

தந்தை பெரியார் 139வது பிறந்தநாளை முன்னிட்டு திருப்பூர் மாநகரில் வாகன பேரணி மற்றும் கொடியேற்று விழா 02102017 காலை 9 மணியளவில் நடைபெறுகிறது. கழக தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் கொடியசைத்து பெரியார் சிலை முன்பு துவக்கி வைக்கிறார்.

தந்தை பெரியாரின் 139 வது பிறந்தநாள் விழா & நீட் தேர்வு குறித்த கருத்தரங்கம் 19092017 இராசிபுரம்

இராசிபுரம் திராவிடர் விடுதலைக்கழகத்தின் சார்பில் தந்தைபெரியாரின் 139 வது பிறந்தநாள் விழா & நீட் தேர்வு குறித்த கருத்தரங்கம் செப்டம்பர்19 ந் தேதி செவ்வாய் மாலை 6 மணிக்கு  இராசிபுரம் லயன்ஸ்கிளப் மீட்டிங்ஹாலில் நடைபெற்றது. தலைமை :  தோழர் இரா.பிடல் சேகுவேரா, நகரஅமைப்பாளர், இராசிபுரம் முன்னிலை:தோழர்.மு.சாமிநாதன் மாவட்டதலைவர், தி.வி.க வரவேற்புரை : தோழர்.மு.சரவணன் மாவட்டசெயலாளர், தி.வி.க வாழ்த்துரை:வி.பாலு, தலைவர், நகரவளர்ச்சிமன்றம், இராசிபுரம். நா.ஜோதிபாசு நகரசெயலாளர் மதிமுக எஸ்.கந்தசாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.பி.எம் கருத்துரையாளர்கள் : பேராசிரியர்.முனைவர் :இராம.சுப்பிரமணியன் பேராசிரியர் முனைவர்.சேதுமணி மணியன் ,மதுரை சிறப்பு அழைப்பாளர்: டாக்டர்.கே.பி.இராமலிங்கம் ,தலைவர், இயற்கை நீர்வளபாதுகாப்பு இயக்கம் ,திமுக ,விவசாய அணி மாநிலசெயலாளர். சிறப்புரை: தோழர் கொளத்தூர்மணி தலைவர் ,திவிக. நன்றியுரை : தோழர் அ.முத்துபாண்டி மாவட்டபொருளாளர், திவிக இராசிபுரம் பெரியார் பிறந்தநாளையொட்டி  புதுப்பாளையம் அரசுப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு பேச்சுப்போட்டி  கட்டுரைப்போட்டி ” நடத்தப்பட்டு  மாணவமாணவிகள்  மற்றும் மாணவ மாணவிகள் 29 பேருக்கு பாராட்டுசான்றிதழ்கள்,...

மதவாத சக்திகளை முறியடிக்க சூளுரை பெரியார் பிறந்த நாள் எழுச்சி கம்பீரமாக எழுகிறார் பெரியார்

பெரியாரின் 139ஆவது பிறந்த நாள் விழாக்கள் முன் எப்போதும் இல்லாத உணர்ச்சியுடன் கொண்டாடப்பட்டது. சமூக வலைதளங்களில் பெரியார் பிறந்த நாள் வாழ்த்துக்கள் குவிந்து வழிந்தன. ராகுல் காந்தி, கருநாடக முதல்வர் சித்தராமய்யா, லாலு பிரசாத், தலைசிறந்த ஆய்வாளர் இராமச்சந்திர குகா என்று அனைத்து தரப்பினரும் பெரியாருக்கு வாழ்த்துக் கூறினர். பெரியார் வரலாற்றுத் தேவையாகி யிருக்கிறார். சமூகத்தில் பீடு நடை போடுகிறார். பெரியார் 139ஆவது பிறந்த நாள் விழா இதுவரை காணாத அளவுக்கு தமிழகம் முழுதும் கொண்டாடப் பட்டது. திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட நகரங்களில் திராவிடர் விடுதலைக் கழகம், தந்தை பெரியார் திராவிடர் கழகம், திராவிடர் கழகத் தோழர்கள் இணைந்து பேரணியாகச் சென்று பெரியார் சிலைகளுக்கு மாலை அணிவித்த காட்சி உணர்ச்சிமயமாக இருந்தது. பெரியார் இயக்கங்களைத் தவிர, மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம், மாணவர் அமைப்புகள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மே 17 உள்ளிட்ட பல்வேறு இயக்கங்களும் பெரியார்...

தந்தை பெரியார் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் கோவை 17092017

தந்தை பெரியார் பிறந்த நாள் விழா…  17-09-2017 மாலை 6 மணிக்கு மாவட்ட தலைவர் நேருதாஸ் தலைமையில்  துவங்கியது மாவட்ட அமைப்பாளர் ஜெயந்த் வரவேற்புரை நிகழ்த்த தோழர்கள் மருத்துவர் அனிதா, மதவாதத்தால் படுகொலை செய்யப்பட்ட கவுரி லங்கேஷ் ஆகியோர் படத்திறப்பும் நினைவேந்தல் நிகழ்ச்சியும் நடைபெற்றது தோழர்கள் கருத்துரை நிகழ்த்தினர் கே.எஸ்.கனகராஜ் dyfi மாவட்ட செயலாளர்  சிவகாமி தமிழ்நாடு அறிவியல் மன்றம் ச.பாலமுருகன் பி. யூ. சி. எல் சிறப்புரையாக- தோழர் பிரின்ஸ் கஜேந்திர பாபு தோழர் கொளத்தூர் மணி தொடர் மழையிலும் புதியவர்கள் அதிக அளவில் கலந்துகொண்டனர் நிகழ்ச்சியில் பெரியார் பிஞ்சுகள் திருப்பூர் சங்கீதா அவர்களின் குழந்தைகள் மற்றும் இசைமதி கிருஷ்ணன் சங்கீதா ஆகியோர் பாடல்கள் பாடினார் நிகழ்ச்சியில் திருப்பூர்துரைசாமி, முகில்ராசு, இணையதள பொறுப்பாளர் விஜய், கனல்மதி, சூலூர்பன்னீர்செல்வம், விக்னேஷ், லோகு, கணேஷ் கோவை மாநகர தோழர்கள் கலந்துகொண்டனர் இறுதியாக  நன்றியுரை தோழர் நிர்மல் கூறி நிகழ்ச்சியை நிறைவுற்றது மேலும் படங்களுக்கு

தந்தை பெரியார் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் குருவரெட்டியூர்

ஈரோடு மாவட்டம் குருவரெட்டியூரில் திவிக, திக தோழர்கள் இணைந்து பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு ஊர்வலமாக சென்று இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்ட நிகழ்வுகள்

தந்தை பெரியார் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் ஈரோடு வடக்கு

தி.வி க ஈரோடு வடக்கு மாவட்டத்தின் சார்பாக கோபி சத்தி அந்தியூர் நம்பியூர் ஆகிய ஒன்றியங்களில் இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது அய்யா தந்தை பெரியார் அவர்களின் 139 வது பிறந்த நாள் விழாவையொட்டி எதிர்வரும் 24.09.2017 அன்று கோபி ஒன்றியங்களில் உள்ள அனைத்து கிளைகளிலும் கொண்டாடப்படவுள்ளது அனைவரும் வருக வருக என வரவேற்கிறோம் இங்கனம் தி.வி.க ஈரோடு வடக்கு மாவட்டம் ஈரோடு வடக்கு மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் அந்தியூர் ஓன்றியம் சார் பாக தந்தை பெரியார் அவர்களின் 139 ஆவது பிறந்தநாள்வினை முன்னிட்டு செப்டம்பர் 17 ந் தேதி காலை கீழ்வானி இந்திரா நகர பகுதியில் கழக கொடி கம்பத்தில் கழக கொடியினை மாவட்ட செயலாளர்  வேணுகோபால் ஏற்றி வைத்தார். அங்கு கூடியிருந்த பொது மக்கள் அனைவருக்கும் இனிப்புகள் மற்றும் கழகத்தின் சார் பாக துண்டறிக்கைகள் வழங்கப்பட்டன. நிகழ்வுக்கான ஏற்பாடுகளை அறிவியல் மன்ற பொறுப்பாளர் சுந்தரம் மற்றும் கிளை கழகத்...

தந்தை பெரியார் பிறந்தநாள் கொண்டாட்டம் சேலம் கிழக்கு

சேலம் கிழக்கு மாவட்ட தி.வி.க சார்பில் மாவட்ட செயலாளர் தோழர் டேவிட் தலைமையில் சேலம் ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து கழக கொடி ஏற்றப்பட்டது. இந்நிகழ்வில் 60க்கும் மேற்பட்ட கழக தோழர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து தோழர்கள் இருசக்கர வாகன பேரணியாக சென்று சேலம் மாநகரை சுற்றி 8 இடங்களில் அய்யாவின் படத்திற்கு மாலை அணிவித்து முழக்கமிட்டனர். கூடியிருந்த மக்களுக்கு துண்டறிக்கையும் இனிப்பும் வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து இரும்பாலை, தோப்பூர், இளம்பிள்ளை என 8 இடங்களில் கழக கொடி ஏற்றப்பட்டது. அடாத மழையிலும் தோழர்கள் தோய்விற்றி பேரணியில் குழந்தைகளுடன் கலந்து கொண்டனர். காலையில் அம்மாப்பேட்டை தோழர் செந்தில் தோழர்கள் அனைவருக்கும் அவரது இல்லத்தில் தேனீர், பிஸ்கட் வழங்கினார். தோழர் பிரபு நெத்திமேடு பகுதியில் தோழர்களுக்கு அவரது இல்லத்தில் தயாரித்த கேசரி மற்றும் வடை வழங்கினார். மதியம் இளம்பிள்ளை பகுதி தோழர்கள் அனைவருக்கும் மாட்டிறைச்சி உணவு வழங்கினார்கள்....

தந்தை பெரியார் 139வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மயிலை 26092017

திராவிடர் விடுதலைக் கழகம் சென்னை மாவட்டத்தின் மயிலாப்பூர் பகுதியின்… தந்தை பெரியார் 139வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்…. நாள் : 26.09.2017,செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிக்கு, இடம் : சென்மேரீஸ் பாலம், மயிலாப்பூர் சிறப்புரை : #தோழர்_கொளத்தூர்_மணி தலைவர் திவிக #நீதியரசர்_அரிபரந்தாமன் முன்னாள் நீதிபதி, உயர்நீதிமன்றம் சென்னை #தோழர்_விடுதலை_இராசேந்திரன் பொதுச் செயலாளர், திவிக #தோழர்_தபசி_குமரன் தலைமை நிலையச் செயலாளர், திவிக #தோழர்_அன்பு_தனசேகரன் தலைமை செயற்குழு உறுப்பினர், திவிக #வழக்கறிஞர்_திருமூர்த்தி சென்னை உயர்நீதிமன்றம், திவிக #வழக்கறிஞர்_தோழர்_துரை_அருண் சென்னை உயர்நீதிமன்றம், திவிக #தோழர்_இரா_உமாபதி தென் சென்னை மாவட்ட செயலாளர், திவிக #தோழர்_வேழவேந்தன் தென்சென்னை மாவட்ட தலைவர், திவிக #விரட்டு கலைக்குழுவின் பறையிசை மற்றும் வீதி நாடகம் நடைபெறும். #வாருங்க_தோழர்களே.! #சமூகநீதி_காத்த_தந்தை_பெரியாரின் #கொள்கையை_சூளுரைப்போம்.! #மற்றும்… #சுயமரியாதை_கால்பந்து_கழகத்தின் 5ஆம் ஆண்டு கால்பந்து போட்டி… நாள் : 24.09.2017 ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு இடம் : குருபுரம் விளையாட்டு திடல், மயிலாப்பூர். கால்பந்து போட்டியை தொடங்கி வைப்பவர் : #மயிலை_த_வேலு மயிலை...

பெரியார் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் சென்னை

தந்தை பெரியாரின் 139வது பிறந்தநாளான 17.09.2017 காலை திராவிடர் விடுதலைக் கழகத்தின் சென்னை மாவட்ட தோழர்கள் கழகப் பொதுச் செயலாளர் தோழர். விடுதலை இராசேந்திரன் அவர்கள் தலைமையில் தி.நகர் பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து முழக்கத்தோடு மரியாதை செலுத்தினார்கள். அதன் தொடர்ச்சியாக கிண்டி ஆலந்தூர், மந்தவெளி குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தார். பின்பு, மயிலாப்பூர் பகுதியில் அமைக்கப்பட்ட பெரியாரின் திருஉருவப் படத்திற்கு கழகப் பொதுச் செயலாளர் மாலை அணிவித்தார். அதை தொடர்ந்து இராயப்பேட்டை மற்றும் சென்னை சிம்சன் பகுதியில் அமைந்துள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து, சமூகநீதி முழக்கத்தோடு மரியாதை செலுத்தப்பட்டது. தண்டையார்பேட்டை பகுதியில் கழக கொடி ஏற்றி, தோழர்.அனிதாவிற்கு வீர வணக்க முழக்கங்கள் எழுப்பப்பட்டது. கடைசியாக, திருவொற்றியூர் பகுதியில் கழக கொடியை ஏற்றி தோழர்.அனிதா மற்றும் எழுத்தாளர்.தோழர்.கவுரி லங்கேஷ் அவர்களுக்கு மாலை அணிவித்து வீரவணக்க முழக்கமிட்டனர்.அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த...

பெரியார் பிறந்தநாள் கொண்டாட்டம் மதுரை

கலகக்காரனின் 139 பிறந்த நாளையொட்டி திராவிடர் விடுதலைக் கழகம் நீட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு இணைந்து பேரணியாக சென்று, பெரியார் சிலைக்கு மாலையிட்டு நீட் தேர்வுக்கு எதிரான பரப்புரைகளை தொடங்கினர்

பெரியார் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் நாமக்கல்

கொட்டித்தீர்த்த மழையிலும் பெரியாரைக் கொண்டாடிய பள்ளிபாளையம் திவிக தோழர்கள் ஊர்வலமாக பிறந்தநாள் கொண்டாட்டம் குமாரபாளையத்தில் செய்தி – வைரவேல்

தந்தை பெரியார் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் ஈரோடு தெற்கு

தந்தை பெரியாரின் 139 வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு ஈரோடு தெற்கு மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக,கழக அமைப்புச் செயலாளர் இரத்தினசாமி தலைமையில் ஈரோடு பன்னீர்செல்வம் பூங்காவிலுள்ள தந்தை பெரியாரின் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. பின்னர் திராவிடர் கழகம், தந்தை பெரியார் திராவிடர் கழகம்,திராவிடர் விடுதலைக் கழகத்தைச் சார்ந்த தோழர்கள் இருசக்கர வாகனங்களில் ஈரோடு மார்க்கெட் பகுதியில் ஊர்வலமாகச் சென்று, தந்தை பெரியாரின் நினைவிடத்தை அடைந்தனர். அங்கு தந்தை பெரியாரின் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.. அடுத்ததாக தோழர்கள் இருசக்கர வாகனங்களிலும் கழக ஆட்டோவிலும் ஊர்வலமாகச் சென்று ஈரோட்டின் பல்வேறு பகுதிகளில் நிறுவப்பட்டிருந்த கழகக் கொடிக்கம்பங்களில் கொடியேற்றினர். மரப்பாலம் பகுதியில் சத்தியமூர்த்தி கொடியேற்றி வைத்து உரையாற்றினார். லோகநாதபுரம் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த கொடிக்கம்பத்தில் அப்பகுதி தோழர் சித்ரா சுரேஷ் கொடியேற்றினார். ஆசிரியர் சிவக்குமார் உரையாற்றினார். தோழர் சித்ரா அனைவருக்கும் நன்றி கூறினார். தோழர் சித்ரா அவர்களின் இல்லத்தில் அனைவருக்கும் தேநீர் வழங்கப்பட்டது....

பெரியார் பிறந்தநாள் பரப்புரைக் கூட்டம் குமரி 17092017

திராவிடர் விடுதலைக் கழகம்,குமரி மாவட்டம் தந்தை பெரியார்-ன் 139-வது பிறந்த நாளை முன்னிட்டு மூவோட்டுக் கோணம் சந்திப்பில் தெருமுனைப் பரப்புரைக் கூட்டம் நடைப் பெற்றது. மாவட்டப் பொருளாளர், தோழர்.மஞ்சுகுமார் தலைமைத் தாங்கினார். தோழர்கள்.நீதி அரசர்,தமிழ் மதி ஆகியோர் பெரியார் பற்றிய கருத்துரையாற்றினர். தோழர்கள்.இராஜேஸ் குமார்,அணில் குமார்,ஜெயன்,பெரியார் பிஞ்சு.ஆர்மல்,சஜிக்குமார்,றசல் ராஜ்,சிக்கு,சரத் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

பெரியார் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் குமரி

திராவிடர் விடுதலைக் கழகம், குமரி மாவட்டம் நடத்திய தந்தை பெரியார்-ன் 139-வது பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம் 16-09-2017 சனிக்கிழமை மாலை 5.00மணிக்கு  நாகர்கோவில் அம்பேத்கர் சிலை அருகில் நடைப்பெற்றது. மாவட்டத் தலைவர்.தோழர்.வழக்கறிஞர்.வே.சதா தலைமைத்தாங்கினார்.கழகத் தோழர்.விஸ்ணு வரவேற்புரையாற்றினார்.தோழர்கள் நீதி அரசர்,தமிழ் மதி,சூசையப்பா சிறப்புரையாற்றினர். கழகப் பரப்புரைச் செயலாளர் தோழர்.பால் பிரபாகரன் “வஞ்சிக்கப்பட்டத் தமிழர்கள்” என்றத் தலைப்பில் பார்ப்பனீய பாரதீய சனதா அரசின் துரோகங்களைப் பட்டியலிட்டு பொதுமக்களுக்குப் புரியும் வகையில் நீண்டதொரு உரையாற்றினார்.முடிவில் கழகத்தோழர் அனீஸ் நன்றியுரையாற்றினார். நிகழ்ச்சிகளை தமிழ்நாடு அறிவியல் மன்ற மாவட்டத் தலைவர். தோழர்.ச.ச.மணிமேகலை தொகுத்து வழங்கினார். கழகத் தோழர்கள்.மஞ்சு குமார்,இராஜேஸ் குமார்,தமிழ் அரசன்,றசல் ராஜ்ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

பெரியார் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் பேராவூரணி

திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் பெரியார் பிறந்தநாள் விழா தந்தைப் பெரியாரின் 139 வது பிறந்தநாளையொட்டி திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் பேராவூரணியில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. திராவிடர் விடுதலைக் கழக மாவட்ட அமைப்பாளர் சித.திருவேங்கடம் தலைமையில், திவிக பொறுப்பாளர் சீனி. கண்ணன் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தார். மேலும் தமிழக மக்கள் புரட்சிக் கழகம் சார்பில் முனியன், மெய்ச்சுடர் நா.வெங்கடேசன், உழைக்கும் மக்கள் கட்சியின் வீர.மாரிமுத்து, நாகூரான், பெரியார் அம்பேத்கர் மக்கள் கழகம் அனல் இரவீந்திரன், பெரியார் பிஞ்சுகள் அறிவுச்செல்வன், அரும்புச் செல்வன் ஆகியோர் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தனர். நிகழ்வில் ஆறு.நீலகண்டன், ஆயில் மதியழகன், பைங்கால் இரா.மதியழகன், தா.கலைச்செல்வன் உள்ளிட்ட பெரியாரிய தொண்டர்கள் கலந்துகொண்டனர். பெண் விடுதலை, சாதி மறுப்பு, வகுப்புவாரி இடஒதுக்கீடு, மநுநீதி எதிர்ப்பு, திருக்குறள் மீட்பு, மாநில சுயாட்சி உள்ளிட்ட பெரியாரின் கருத்துக்கள் ஒலிபெருக்கிமூலம் முழக்கம் செய்யப்பட்டது.

பெரியார் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் திருப்பூர்

திருப்பூரில் 17/09 காலை 10 மணிக்கு பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் பிறந்த நாள் கொண்டாட்டம் பெரியாரியல் கூட்டமைப்பு சார்பாக மிக சிறப்பாகவும் எழுச்சியோடும் நடைபெற்றது. திராவிடர் விடுதலைக் கழகத்தோடு திக, தபெதிக ஒருங்கிணைப்பாய் திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்திலிருந்து இரயில் நிலையம் அருகில் உள்ள பெரியார் சிலை வரை பெரியார் பிறந்தநாள் வாழ்த்தோடும் கொள்கை முழக்கங்களோடும் பேரணியாய் நடைபெற்றது. பெரியார் படையை வலுப்படுத்த தோழர்களோடு பெரியாரிய பிஞ்சுகளும் ஒன்று கூடினர்; கொட்டும் மழையிலும் பெரியார் கொள்கை முழங்கினர்; காரிருள் மண்ணில் இறங்கியதோ என வியக்கும் வண்ணம் கருஞ்சட்டையாய் அணிவகுத்து முழக்கங்களை எழுப்பி சென்றனர் வாழ்க வாழ்க வாழ்கவே தந்தை பெரியார் வாழ்கவே சாதி ஒழிப்பு போராளி தந்தை பெரியார் வாழ்கவே பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் வாழ்கவே இடஒதுக்கீடு பெற்றுத்தந்த தந்தை பெரியார் வாழ்கவே சட்ட எரிப்பு போராளி தந்தை பெரியார் வாழ்கவே இந்துத்துவ எதிர்ப்பு போராளி தந்தை பெரியார் வாழ்கவே...

தந்தை பெரியாரின் 139வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நாகர்கோவில் 16092017

நாகர் கோவிலில், தந்தை பெரியாரின் 139வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம், திராவிடர் விடுதலைக் கழகம் குமரி மாவட்டம் சார்பில். நாள் : 16.09.2017 சனிக்கிழமை  நேரம் : மாலை 5 மணி. இடம் அறிஞர் அண்ணா விளையாட்டரங்கம்,நாகர் கோவில். வஞ்சிக்கப்பட்ட தமிழர்கள் எனும் தலைப்பில் உரை முழக்கம் கழக பரப்புரைச்செயலாளர் ”தோழர் பால்.பிரபாகரன்” அவர்கள்.

தந்தை பெரியார் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் ! கோவை 17092017

கோவையில் பொதுக்கூட்டம் ! நாள் : 17.09.2017 ஞாயிற்றுக்கிழமை, நேரம் : மாலை 5 மணி. இடம் :தோழர் ஃபாரூக் நினைவு மேடை, மசக்காளிபாளையம்,கோயம்புத்தூர். இழந்துவரும் உரிமைகளை மீட்போம், தமிழகத்தின் தனித்தனமை காப்போம் பரப்புரை பயண நிறைவு விழா மற்றும் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் ! கழகத்தலைவர்,தோழர் பிரின்ஸ் கஜேந்திர பாபு (தலைவர் பொதுப்பள்ளிக்கான மாநில மேடை) ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார்கள்.

தந்தை பெரியார் 139 வது பிறந்த நாள் விழா மற்றும் மாநாடு விளக்க பொதுக்கூட்டம் ! பொள்ளாச்சி 16092017

பொள்ளாச்சியில் பொதுக்கூட்டம் ! நாள் : 16.09.2017 சனிக்கிழமை, நேரம் : மாலை 6 மணி. இடம் : திருவள்ளுவர் திடல்,பொள்ளாச்சி. இழந்துவரும் உரிமைகளை மீட்போம், தமிழகத்தின் தனித்தனமை காப்போம் ! எனும் முழக்கத்தோடு, தந்தை பெரியார் 139 வது பிறந்த நாள் விழா மற்றும் மாநாடு விளக்க பொதுக்கூட்டம் ! கழகத்தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார்கள்.

ஜாதி ஒழிப்பு போராளி தோழர் இமானுவேல் சேகரின் நினைவு நாள் மற்றும் பெரியார் பிறந்தநாள் தெருமுனைக் கூட்டம்

ஜாதி ஒழிப்பு போராளி தோழர் இமானுவேல் சேகரின் நினைவு நாள் மற்றும் பெரியார் பிறந்தநாள் தெருமுனைக் கூட்டம் திராவிடர் விடுதலைக் கழகம் சென்னை மாவட்டம் மயிலை பகுதி சார்பாக… நாள் : 11.09.2017 திங்கட்கிழமை, மாலை 5 மணியளவில், இடம் : குயில் தோட்டம், (முன்புற பகுதி), சாந்தோம் நெடுஞ்சாலை, மயிலாப்பூர், சென்னை- 04. சிறப்புரை : தோழர்.கு.அன்பு தனசேகரன், தலைமை செயற்குழு உறுப்பினர், திவிக தோழர்.அம்பேத் ராமசாமி தோழர்.வழக்கறிஞர்.துரை அருண் சென்னை உயர்நீதிமன்றம், திவிக தோழர்.இரா.உமாபதி தென்சென்னை மாவட்டச் செயலாளர், திவிக தோழர்.ந.அய்யனார் தலைமை செயற்குழு உறுப்பினர், திவிக வாருங்கள்_தோழர்களே.! பார்ப்பனிய கட்டமைப்பில் உள்ள இந்தியாவில் பார்ப்பனியத்தை நடைமுறையில் உயிர்ப்புடன் வைத்திருக்கும் ஆதிக்க சாதி இந்துக்களுக்கெதிராக போராடி தன் இன்னுயிரை நீத்த பார்ப்பனீய எதிர்ப்பு போராளி இம்மானுவேல் சேகரை நினைவு கூறுவோம்.! திராவிடர் விடுதலைக் கழகம்- சென்னை மாவட்டம் தொடர்புக்கு : 7299230363

ஈரோடு வடக்கு மாவட்ட கழகத்தின் சார்பாக பெரியார் பிறந்தநாள் விழா தொடர்பாக கலந்துரையாடல் கூட்டம்

ஈரோடு வடக்கு மாவட்ட கழகத்தின் சார்பாக பெரியார் பிறந்தநாள் விழா தொடர்பாக கலந்துரையாடல் கூட்டம் மாவட்ட அலுவலகத்தில் 10.09.2017 ஞாயிறு மாலை 4 மணிக்கு நடைபெற்றது. மாநில வெளியீட்டு செயலாளர் இளங்கோவன் தலைமை யில் நடைபெற்ற கூட்டத்தில் வருகின்ற 17 அய்யா பிறந்தநாள் விழாவை மாவட்ட கழகத்தால் சிறப்பாக சத்தியமங்கலத்தில் துவங்கி மாவட்ட முழுவதற்கும் அனைத்து பகுதியில் கழக கொடியினை ஏற்றுவது எனவும், கோபி நகர,ஒன்றிய கழகத்தின் சார் பாக 24.09.2017 அன்று கொடியேற்று விழா நடத்துவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் பெரியார் பிறந்தநாள் விழா செலவிற்காக மாவட்ட அமைப்பாளர் நிவாஸ் அவர்களது மகன் பெரியார் பிஞ்சு அறிவுக்கனல் அவர்கள் தனது உண்டியல் சேமிப்பு தொகையாக ரூபாய் 750/_ ஐ மாவட்ட செயலாளர் வேணுகோபால் அவர்களிடத்தில் வழங்கினார். கலந்துரையாடலில் மாவட்ட கழகத்தோழர்கள் பலர் கலந்து கொண்டனர்.