தந்தை பெரியார் பிறந்தநாள் கொண்டாட்டம் சேலம் கிழக்கு

சேலம் கிழக்கு மாவட்ட தி.வி.க சார்பில் மாவட்ட செயலாளர் தோழர் டேவிட் தலைமையில் சேலம் ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து கழக கொடி ஏற்றப்பட்டது. இந்நிகழ்வில் 60க்கும் மேற்பட்ட கழக தோழர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து தோழர்கள் இருசக்கர வாகன பேரணியாக சென்று சேலம் மாநகரை சுற்றி 8 இடங்களில் அய்யாவின் படத்திற்கு மாலை அணிவித்து முழக்கமிட்டனர். கூடியிருந்த மக்களுக்கு துண்டறிக்கையும் இனிப்பும் வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து இரும்பாலை, தோப்பூர், இளம்பிள்ளை என 8 இடங்களில் கழக கொடி ஏற்றப்பட்டது.

அடாத மழையிலும் தோழர்கள் தோய்விற்றி பேரணியில் குழந்தைகளுடன் கலந்து கொண்டனர். காலையில் அம்மாப்பேட்டை தோழர் செந்தில் தோழர்கள் அனைவருக்கும் அவரது இல்லத்தில் தேனீர், பிஸ்கட் வழங்கினார். தோழர் பிரபு நெத்திமேடு பகுதியில் தோழர்களுக்கு அவரது இல்லத்தில் தயாரித்த கேசரி மற்றும் வடை வழங்கினார். மதியம் இளம்பிள்ளை பகுதி தோழர்கள் அனைவருக்கும் மாட்டிறைச்சி உணவு வழங்கினார்கள்.

பேரணியின் போது இளம்பிள்ளை பகுதியில் இரண்டு இருசக்கர வாகத்தில் வந்த பொதுமக்கள் அவர்களுக்குள் மோதிக்கொண்டனர் இதில் இருவருக்கும் பலத்த அடி உடனே நமது தோழர்கள் ஆம்புலன்ஸ்க்கு அழைத்தனர் ஆம்புலன்ஸ் அருகில் இல்லை வருவதற்கு அரைமணி நேரம் ஆகும் என்று சொல்லிவிட்டனர் உடனே நமது தோழர் தங்களின் இருசக்கர வாகனத்தில் அந்த இரண்டு நபரையும் அழைத்து சென்று அருகே இருந்த ஆரம்ப சுகாதார நிலையம் மருத்துவமனையில் சேர்த்தனர்.

காலை 10 மணிக்கு துவங்கப்பட்ட பேரணி மாலை 5 மணிக்கு இளம்பிள்ளை பகுதியில் முடிவுற்றது. இந்நிகழ்வில் சேலம் மாநகரம், ஏற்காடு, இளம்பிள்ளை பகுதிகளை சேர்ந்த பொறுப்பாளர்களும் தோழர்களும் கலந்து கொண்டனர்.

செய்தி   – த.பரமேஸ் குமர்
சேலம் மாநகரத் தலைவர்

salem

You may also like...