நீட் : ஆளுநர் கூறும் வாதங்கள் சரியா?
ஆளுநர் நீட் தேர்வு விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பிட குறிப்பிட்டிருந்த இரண்டு காரணங்கள், ஒன்று – மசோதா மாணவர்களின் நலனுக்கு எதிராக இருக்கிறது; இரண்டு – ‘நீட்’ தேர்வு ஏழை மாணவர்களின் மீதான பொருளாதாரச் சுரண்டலைத் தடுக்கிறது. நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது. இந்த காரணங்களுமே நகைப்புக்குரியது மட்டுமல்ல, ‘நீட்’ தேர்வு குறித்த புரிதல் இன்மையை வெளிக் காட்டுகிறது சட்டம் இயற்றும் அதிகாரம் சட்டமன்றத் துக்கும் உண்டு. மாணவி அனிதா முதல் ‘நீட்’ தேர்வு காரணமாக தங்களை மாய்த்துக் கொண்ட பலரும் சமூகத்தின் ஏழ்மை நிலையில் உள்ளவர்கள்தாம். அவர்கள் பன்னி ரெண்டாம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்து, ‘நீட்’ தேர்வுக்கான பயிற்சியை பல லட்சம் கொடுத்து பயிற்சி பெற முடியாமல் வாய்ப்பை இழந்துள்ளனர். இதைத்தான் உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி டாக்டர் ஏ.கே.ராஜன் குழு புள்ளி விவரங்களுடன் எடுத்துக் காட்டியுள்ளது. ஏன், தற்போது வெளிவந்துள்ள மருத்துவ இளங்கலை படிப்பு முடித்து (எம்.பி.பி.எஸ்.)க்கான கலந்தாய்வு...