‘கச்சநத்தம்’ படுகொலை கண்டனக் கூட்டத்தில் கொளத்தூர் மணி பேச்சு ஜாதியை ‘மறந்து’ அல்ல; ஜாதியை ‘மறுத்து’த் தமிழராக வேண்டும்
‘சமூக நல்லிணக்கம்’ என்ற போர்வையில் தமிழர் ஓர்மைப் பேசாமல் ஜாதி ஒழிப்புத் தளத்தில் ஓர்மையை உருவாக்க வேண்டும் என்றார் கழகத் தலைவர் கொளத்தூர் மணி. தமிழ்நாடு கலை இலக்கிய ஊடக செயற் பாட்டாளர்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பில் சிவகங்கை கச்சநத்தம் ஜாதிவெறிப் படுகொலையைக் கண்டித்து கண்டனக் கூட்டம் சென்னை மேற்கு மாம்பலம் வி.கே.எம். மகாலில் ஜூன் 3, 2018 அன்று மாலை 6 மணிக்கு நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளர்களாக கழகத் தலைவர் கொளத்தூர் மணி, தொல். திருமாவளவன், தீண்டாமை ஒழிப்பு முன்னணிப் பொறுப்பாளர் சாமுவேல் ராஜ், மனுஷ்யபுத்திரன், இயக்குநர் அமீர், வெற்றி மாறன், எழுத்தாளர் எஸ்.இராமகிருஷ்ணன், சீனு ராமசாமி, மீரா கதிரவன், வழக்கறிஞர் அருள்மொழி, நவீன், மதிவண்ணன், கிரேஸ் பானு, மருத்துவர் ஷாலினி, யாழன் ஆதி, பா. இரஞ்சித், வழக்கறிஞர் ராஜகுரு, லெனின் பாரதி உள்ளிட்ட பலரும் உரையாற்றினர். திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி நிகழ்த்திய உரையிலிருந்து: ஜாதியை எப்படி...
