திராவிடர் இயக்கம் உருவாகிய பின்னணி (6)
1917 “தென்னிந்திய மக்கள் சங்கம்” சார்பில் ஆங்கிலம், தமிழ், தெலுங்கு ஆகிய மும்மொழிகளில் நாளிதழ்கள் வெளி வந்தன. ஆங்கில நாளிதழ் ‘ஜஸ்டிஸ்’ பிப்ரவரி 26-ல் வெளியிடப்பட்டது. இவ்விதழுக்கு ஆசிரியராகப் பணியாற்ற சி.கருணாகரமேனன் ஒப்புக் கொண்டிருந்தார். அன்னிபெசன்ட் சர். சி.பி.ராமசாமி (அய்யர்), கேசவ (பிள்ளை) ஆகியோர் குறுக்கிட்டு அவரைத் தடுத்தனர். எனவே ஜஸ்டிஸ் நாளிதழ் வெளிவர 6 நாட்களே இருக்கும் நிலையில் கருணாகரமேனன் ‘பல்டி’ அடித்து ஆசிரியராக இருக்க மறுத்து விட்டார். பின்னர், நாயரே கவுரவ ஆசிரியர் ஆனார். ‘மதராஸ் ஸ்டாண்டர்ட்’ பத்திரிகையின் ஆசிரியராய் இருந்த பி. ராமன் (பிள்ளை) துணை ஆசிரியர் ஆனார். தமிழ் நாளிதழ் ‘திராவிடன்’ ஜூன் மாதத்தி லிருந்து வெளிவரத் துவங்கியது. இவ்விதழின் ஆசிரியராக என்.பகவத்சலம் (பிள்ளை), துணை ஆசிரியர்களாக சாமி ருத்ர கோடீஸ்வரர், பண்டித வில்வபதி (செட்டியார்) ஆகியோர் பணியாற்றினர். ஏற்கனவே நடைபெற்று வந்த (நிறுவியது 1885-ல்) ‘ஆந்திரப் பிரகா சிகா’ என்ற தெலுங்கு வார இதழின்...
