தலையங்கம் திருச்செங்கோடு தீர்மானங்கள்
2012 ஆகஸ்டு 12ஆம் தேதி ஈரோட்டில் உருவானது ‘திராவிடர் விடுதலைக் கழகம்’. தடம் மாறாத பெரியாரியல் பயணத்தை முன்னெடுக்க உறுதி ஏற்று இந்த இயக்கத்தில் ஏராளமான இளைஞர்கள் பங்கெடுத்து களமாட முன் வந்தனர். மாறி வரும் அரசியல் சமூக சூழல்களைக் கருத்தில் கொண்டு அதற்கேற்ற செயல் திட்டங்களை உருவாக்கி களப்பணியாற்றி வருகிறது திராவிடர் விடுதலைக் கழகம். பொய்யான வாக்குறுதிகளையும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின் பலவீனங் களையும் மூலதனமாக்கி இந்தியாவின் அதிகாரத்தைப் பிடித்தது பா.ஜ.க. அதிகாரம் தங்களிடம் வந்த பிறகு ஆர்.எஸ்.எஸ். ஆலோசனையுடன் ‘பார்ப்பனிய–மதவாதத்’ திட்டங்களை படிப்படியாக செயல்படுத்தத் தொடங்கி விட்டார்கள். இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்தையும் தங்கள் அதிகாரப் பிடிக்குள் கொண்டு வருகிறார்கள். அதற்காக எத்தகைய ‘ஜனநாயக’ படுகொலைகளையும் அவர்கள் விட்டு வைக்கவில்லை என்பதை நாடு பார்த்துக் கொண்டிருக்கிறது. இந்தியப் பார்ப்பனியத்துக்கும் இந்துத்துவ ஒடுக்குமுறை அரசியலுக்கும் நேர் முரணாக மக்கள் விடுதலைக்கான கொள்கைகளைக் கொண்டிருக்கும் வலிமையான கருத்தியல் பெரியாரியம்; அம்பேத்கரியம். இந்த உண்மை,...
