சாமியாடுவது அற்புத சக்தியாம்? எட்வின் பிரபாகரன்
உச்ச நீதிமன்ற நீதிபதி இராம சுப்ரமணியத்தின் போலி அறிவியல் வாதங்களுக்கு ஆணித்தர மறுப்பு (9) ‘நிமிர்வோம்’ மாத இதழில் 2020 ஆம் ஆண்டில் வெளி வந்துள்ள கட்டுரையை அதன் முக்கியத்துவம் கருதி மீண்டும் வெளியிடுகிறோம். புதிர் 15: 1995ஆம் ஆண்டு, செப்டம்பர் 21ஆம் நாள், தெற்கு புது டெல்லியில் உள்ள ஒரு கோயிலில் விநாயகர் சிலை, தும்பிக்கையின் மூலம் பாலை உறிஞ்சி விட்டதாக ஒரு செய்தி காட்டுத்தீ போல பரவியது. நாடெங்கும் பல விநாயகர் கோயில்களிலும் இதே சம்பவம் நடந்ததாக மக்கள் பரவசத்தோடு கொண்டாடினர். அறிவியலாளர்கள் அளித்த விளக்கம் என்னவென்றால், விநாயகர் சிலைகளில் உள்ள மிக நுண்ணிய துளைகளின் மூலமாக, தந்துகி எழுகை முறையால் (Capillary Rise Method), பால் உறிஞ்சப்படுகிறது என்பதேயாகும். அன்று மாலைக்குள், இந்த விளக்கம் பிடிக்காததாலோ என்னவோ, விநாயகர் சிலைகள் பால் குடிப்பதை நிறுத்திவிட்டன. தந்துகி எழுகை முறையில் இது நடக்குமானால், ஏன் இதற்கு முன் அப்படி...
