இந்தியா இனி ‘இந்தி’யா?
2011-ம் ஆண்டு நாடாளுமன்ற நிலைக்குழு சமர்ப்பித்த இந்தி மொழி தொடர்பான பரிந்துரைகளுக்குக் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி இப்போது ஒப்புதல் அளித்துள்ளார். இந்தி பேசாத மாநிலங்களின் மீது இடியைப்போல் இறங்கியிருக்கும் இந்தப் பரிந்துரைகள் கீழ்வருமாறு… ஜனாதிபதி, பிரதமர், மத்திய மந்திரிகள் உள்ளிட்ட தலைவர்கள், குறிப்பாக யாருக்கெல்லாம் இந்தி தெரியுமோ, அவர்கள் இனி நாடாளுமன்றத்திலும் பொது விழாக்களிலும் இந்தியில்தான் பேச வேண்டும் விமானங்களில் இந்தியில்தான் அறிவிப்புகளை வெளியிட வேண்டும். அதைத் தொடர்ந்து, ஆங்கிலத்தில் அறிவிப்புகள் வெளியிடப்பட வேண்டும். இனி, விமானங்களில் வழங்கப்படுகிற செய்தித்தாள்கள் மற்றும் பத்திரிகைகள் 50 சதவிகிதம் இந்தி மொழியில் இருக்க வேண்டும். ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் டிக்கெட்டுகளிலும் இந்தி பெருமளவு பயன்படுத்தப்பட வேண்டும். மத்திய அரசின் டேராடூன் ஐ.ஏ.எஸ். பயிற்சி நிலையத்தில் அனைத்துப் பயிற்சி ஏடுகளும் இந்தி, ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளைக்கொண்டதாக இருக்க வேண்டும். பள்ளிக் கல்வித்திட்டத்தில் இந்தி கட்டாயப் பாடமாகச் சேர்க்கப்படவேண்டும். முதல் கட்டமாக சி.பி.எஸ்.இ...