திராவிடர் விடுதலைக் கழகச் செயலவை அறைகூவல்
பா.ஜ.க.வின் ‘இந்துராஷ்டிரம்’ அமைக்கும் முயற்சிகளை முறியடிக்க மக்களை ஒன்று திரட்டுவோம் பா.ஜ.க.வின் ‘இந்துராஷ்டிரம்’ அமைக்கும் முயற்சியைத் தடுக்க மக்கள் சக்தியை அணி திரட்டுவோம் என்று திராவிடர் விடுதலைக் கழக செயலவை அறைகூவல் விடுத்துள்ளது. நாடு இராணுவ ஆட்சியை நோக்கி நகரும் ஆபத்தையும் செயலவை எச்சரித்துள்ளது. திராவிடர் விடுதலைக் கழகத்தின் செயலவையில் நிறைவேற்றிய தீர்மானங்கள்: இந்தியாவின் மதச் சார்பற்ற அடையாளத்தை உருக்குலைத்து ‘இந்து இராஷ்டிரமாக்கும்’ முயற்சிகளை பா.ஜ.க. நடுவண் ஆட்சி தீவிரப்படுத்தி வருகிறது. இதற்கான வழிகாட்டும் அதிகாரங்களை ஆர்.எஸ்.எஸ். கையில் எடுத்துக் கொண்டுள்ளது. மெஜாரிட்டி மக்களாக இந்துக்களைக் கொண்ட ஒரு நாடு இந்து நாடாகவே இருக்க வேண்டும் என்று சங்பரிவாரங்கள், பா.ஜ.க. முன் வைக்கும் கருத்துகளின் உள்ளடக்கம் மிக மிக ஆபத்தானது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம். ‘மெஜாரிட்டி இந்துக்கள்’ போர்வைக்குள் மைனாரிட்டி பார்ப்பனர்கள் புகுந்து கொண்டு மெஜாரிட்டி இந்துக்களின் பண்பாடு, உணவு, பழக்க வழக்கங்கள், வழிபாட்டு முறைகளை சிதைத்து, பார்ப்பன சமஸ்கிருதப் பண்பாடே...
