மனிதக்கழிவை மனிதன் அகற்றும் அவல நிலையை போக்கக் கோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டம் ஆர்ப்பாட்டம்
கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

மனிதக்கழிவை மனிதன் அகற்றும்
அவல நிலையை போக்கக் கோரி

மத்திய மாநில அரசுகளை
வலியுறுத்தும் ஆர்ப்பாட்டம்!
_____________________

விண்வெளிக்கு ராக்கெட் அனுப்பும்
விஞ்ஞான யுகத்திலே

மலக்குழி கழிவுகளை
மனிதன் அள்ளுவது அவமானம்!

ஆலயத்தில் மணி அடிக்க
எந்திரம் உள்ள நாட்டிலே

அடைப்பை நீக்க கருவியில்லை
ஆளும் அரசுகளுக்கு வெக்கமில்லை!

வெக்கக்கேடு மானக்கேடு
காரித் துப்புது உலகநாடு.
__________________

தூய்மை இந்தியா நாடகங்கள்
தொலைகாட்சி விளம்பரங்கள்

தெருவைப் கூட்டும் புகைப்படங்கள்!
தேடிக்கொள்ளும் விளம்பரங்கள்

மோடி அரசின் மோசடிகள்
காலியாகுது வரிப்பணங்கள்

ஏமாற்றாதே! ஏமாற்றாதே!
எளியவர்களை ஏமாற்றாதே!

வஞ்சிக்காதே வஞ்சிக்காதே
தூய்மைத் தொழிலாளரை வஞ்சிக்காதே!
___________________

தமிழக அரசே! தமிழக அரசே!

அருந்ததியர்களின் வாக்குகளால்
ஆட்சியை பிடித்த அதிமுக அரசே!

அண்டை மாநிலம் கேரள அரசு
அறிமுகம் செய்து உள்ள
கழிவகற்றும் எந்திரமாம்
பேண்டிக்கூட் ரோபோவை

தமிழகத்தில் கொண்டுவர
தயக்கம் ஏன்? தயக்கம் ஏன்?

கொண்டு வா! கொண்டு வா!
பேண்டிக் கூட் ரோபோவை
தமிழகத்துக்கு கொண்டு வா!
__________________

நடவடிக்கை எடு! நடவடிக்கை எடு!
மலக்குழி மரணங்களை
தடுத்து நிறுத்த நடவடிக்கை எடு!

நடைமுறைப் படுத்து! நடைமுறைப் படுத்து!
மலமள்ளும் தடைச்சட்டத்தை
முழுமையாக நடைமுறைப்படுத்து!

தண்டணை வழங்கு! தண்டணை வழங்கு!
மலக்குழி கழிவுகளை
அகற்றுவதற்கு பணியமர்த்தும்
ஆட்களுக்கு தண்டணை வழங்கு!

தண்டணை வழங்கு! தண்டணை வழங்கு!
ஆணையாளருக்கும் தண்டணை வழங்கு!
_________________

நடைமுறைப் படுத்து! நடைமுறைப் படுத்து!

உச்ச நீதிமன்றத்தின்
வழிகாட்டல் தீர்ப்பினை

நடைமுறைப் படுத்து! நடைமுறைப் படுத்து!
முழுமையாக நடைமுறைப் படுத்து!

மறுவாழ்வு வழங்கு! மறுவாழ்வு வழங்கு!

மாற்றுத் தொழில் வழங்கி
மறுவாழ்வு வழங்கு! மறுவாழ்வு வழங்கு!

இழப்பீடு வழங்கு! இழப்பீடு வழங்கு!
உச்ச நீதிமன்ற தீர்ப்பின் படி
10 லட்சம் இழப்பீடு வழங்கு!

உயர்த்தி வழங்கு உயர்த்தி வழங்கு!
இழப்பீட்டு தொகையை உயர்த்தி வழங்கு!
உயர்த்தி வழங்கு! உயர்த்தி வழங்கு!
50 லட்சமாய் உயர்த்தி வழங்கு!
___________________

நடவடிக்கை எடு! நடவடிக்கை எடு!
சட்டப்படி நடவடிக்கை எடு!

வளைக்காதே வளைக்காதே
குற்றவாளிகளை தப்பவிட
சட்டத்தினை வளைக்காதே!

நடைமுறைப் படுத்து! நடைமுறைப் படுத்து!
கையால் மலமள்ளும் தடைச்சட்டத்தை
முழுமையாக நடைமுறைப் படுத்து!
___________________

நிர்வாகமே! நிர்வாகமே!
ஆட்சித்தலைவர் நிர்வாகமே!

எய்ட்ஸ்சுக்கும், மலேரியாவுக்கும்
இடைவிடாது விழிப்பூட்டும்
உள்ளாச்சி நிர்வாகமே!

விழிப்பூட்டு விழிப்பூட்டு
மலக்குழி மரணங்களை தடுப்பதற்கு விழிப்பூட்டு
___________________

நியாயம்தானா? நியாயம்தானா?
பொது மக்களே நியாயம்தானா?

பாதாள சாக்கடைக்குள்
பணிசெய்யும் மனிதர்களை

பார்த்துவிட்டு கடந்து போகும்
பொது மக்களே நியாயம் தானா?

மனிதர்தானே மனிதர்தானே!
தூய்மைப் பணியாளரும் மனிதர்தானே!

தட்டிக்கேட்க மனமில்லை!
தடுப்பதற்கு யாருமில்லை!

விபத்துகளில் பலியானோருக்கு விழிநீரை சிந்துகின்றோம்!

மலக்குழியில் மடிந்து போனால்
மூக்கை பிடித்து கடக்கின்றோம்!

எங்கே போச்சு எங்கே போச்சு
மனித நேயம் எங்கே போச்சு
_________________

அர்ச்சகராகும் உரிமை கூட
அனைத்து சாதிக்கும் வந்தாச்சு!

குலத்தொழில் என்று சொல்லி
திணிக்கப்பட்ட இழிவெல்லாம்

விஞ்ஞான வளர்ச்சியிலே
விடை பெற்று போயாச்சு!

மாற்றம் என்ற சொல்லைத் தவிற
அனைத்தும் இங்கே மாறியாச்சு

முடிவெட்டும் இழிதொழில்
பியூட்டி பார்லர் ஆயாச்சு!

துணிவெளுக்கும் இழிதொழில்
ட்டிரை கிளீனராயாச்சு,

பிணம் எரிக்கும் இழிதொழில்
மின் மயானமாயாச்சு

எல்லாம் இங்கே மாறினாலும்
இது மட்டும் மாறவில்லை

மாற்ற வேண்டும்! மாற்ற வேண்டும்!
இழி நிலையை மாற்ற வேண்டும்!

போற்ற வேண்டும்! போற்ற வேண்டும்!
மனித நேயம் போற்ற வேண்டும்!
___________________

வெக்கக்கேடு! மானக்கேடு!
இழி நிலையில் நீடிப்பது
தலைமுறைக்கு மானக்கேடு!

சபதமேற்போம் சபதமேற்போம்!
இழி தொழிலை விட்டொழிக்க
சபதமேற்போம்! சபதமேற்போம்!

கட்டி வைத்து அடித்தாலும்
கழுத்தை அறுத்துக் கொன்றாலும்

செய்ய மாட்டோம்! செய்ய மாட்டோம்!
மனிதக் கழிவை அள்ளுகின்ற
மனங்கெட்ட செயலினை
இனிமேலும் செய்ய மாட்டோம்!

தொலையட்டும்! தொலையட்டும்!
நாற்றமெடுக்கு இழி நிலை
நம்மோடு தொலையட்டும்!

நிமிரட்டும் நிமிரட்டும்
தலைமுறை நிமிரட்டும்.

ஒழியட்டும் ஒழியட்டும்
இழி நிலை ஒழியட்டும்!
__________________

இன்று நடக்கும் ஆர்ப்பாட்டம்
நாளை வெடிக்கும் போராட்டம்!

எச்சரிக்கை எச்சரிக்கை
எச்சரிக்கை செய்கின்றோம்!

அய்யா அதியமான் தலைமையிலே
எச்சரிக்கை செய்கின்றோம்!

வெல்லட்டும்! வெல்லட்டும்!
ஆர்ப்பாட்டம்! வெல்லட்டும்!

வாழ்க வாழ்க வாழ்கவே
அம்பேத்கர் வாழ்கவே

வாழ்க வாழ்க வாழ்கவே
தந்தை பெரியார் வாழ்கவே!

வெல்க வெல்க வெல்கவே!
இழிவொழிப்பு ஆண்டின்
லட்சியங்கள் வெல்கவே!

 

080718 ஆதித்தமிழர் பேரவை

You may also like...