Author: admin

மாவட்டக் கழக கலந்துரையாடல் கூட்டங்கள்

மாவட்டக் கழக கலந்துரையாடல் கூட்டங்கள்

காஞ்சிபுரம் : திராவிடர் விடுதலைக் கழகத்தின் காஞ்சிபுரம் மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்  18-10-2018 அன்று மாலை 5 மணிக்கு தினேஷ்குமார் தலைமையில் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன் மற்றும் தென்சென்னை மாவட்ட செயலாளர் இரா. உமாபதி முன்னிலையில் நடைபெற்றது . புரட்சிப் பெரியார் முழக்கம், நிமிர்வோம் இதழ்களுக்கு சந்தா சேர்த்தல், தெருமுனைக் கூட்டம், கருத்தரங்கம்  நடத்துதல் குறித்து விவாதிக்கப்பட்டது. இதில் தென்சென்னை மாவட்டத் தலைவர் வேழவேந்தன், செங்குட்டுவன், தெள்ளமிழ்து, ரவிபாரதி, கரிகாலன், ஆண்டனி, ராஜேஷ், அருண் ஆகியோர் கலந்து கொண்டனர். சங்கராபுரம் :  18.10.2018 வியாழன் மாலை 4மணி அளவில் திராவிடர் விடுதலை கழக மாவட்ட கலந்தாய்வுக் கூட்டம் சங்கராபுரம் வட்டம் கடுவனூரில் சி. சாமி துரை இல்லத்தில் நடந்தது. கூட்டத்திற்கு கழகத் தலைமைக் குழு உறுப்பினர் நா.அய்யனார் தலைமை தாங்கினார். கூட்டத்தில் தமிழகத்தில் உள்ள அரசியல் சூழல்களும், பி.ஜே.பி.யினால் மக்கள் படும் அவலம் , பெரியாரியல் பற்றிய தமிழ்...

புல்லட் இரயில் : கடன்சுமை  ரூ. 6,160 கோடி அதிகரித்தது…!

புல்லட் இரயில் : கடன்சுமை ரூ. 6,160 கோடி அதிகரித்தது…!

ஜப்பான் நாட்டு நாணயமான ‘யென்’னின் மதிப்பு, தொடர்ந்து உயர்ந்துகொண்டே போவதால், புல்லட் ரயில் திட்டத்திற்காக இந்தியா பெற்ற கடன்தொகையில் திடீரென ரூ. 6 ஆயிரத்து 160 கோடியை அதிகமாக செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.திட்டப்பணிகளே இன்னும் துவங்கப்படாத சூழலில் கடன்மதிப்பு- அதுவும் ஒரே ஆண்டில் ரூ. 6 ஆயிரம் கோடி அதிகரித்துள்ளது ரயில்வே துறைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜப்பான் நாட்டு கடனுதவியுடன் மும்பை – அகமதாபாத் இடையே 508 கி.மீ. தூரத்திற்கு ரூ. 1 லட்சம் கோடி செலவில் புல்லட் ரயில் திட்டம் செயல்படுத்தப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்தார். ‘இந்தியாவின் முதலாவது அதிவேக புல்லட் ரயில் திட்டம்’ என்றும் இத்திட்டத்தை அவர் அழைத்தார். மேலும், குஜராத் தேர்தலையொட்டி, ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே-வை இந்தியாவுக்கே நேரில் வரவழைத்து கடந்த ஆண்டு அகமதாபாத்தில் புல்லட் ரயில் திட்டத்தை மோடி துவக்கி வைத்தார். அப்போதே இத்திட்டத்திற்கு பெரும் எதிர்ப்பு எழுந்தது. இந்தியா போன்ற...

ஆதாரங்களுடன் கொளத்தூர் மணி விளக்கம்  (5) விடுதலைப் புலிகளே தங்களை திராவிடர்கள் என்றே பதிவு செய்தனர்

ஆதாரங்களுடன் கொளத்தூர் மணி விளக்கம் (5) விடுதலைப் புலிகளே தங்களை திராவிடர்கள் என்றே பதிவு செய்தனர்

“கருஞ்சட்டைக் கலைஞர்” என்ற தலைப்பில் திருச்செங்கோட்டில் 30.09.2018 ஞாயிறு அன்று நடந்த கருத்தரங்கில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆற்றிய உரை. சென்ற வார தொடர்ச்சி பெரும்பான்மை மக்களாகிய நம்மை, எண்ணிக்கையில் சிறுபான்மை மக்களாகிய பார்ப்பனர்களுடன் ஒப்பிட்டு நம்மைப் பார்ப்பனர் அல்லாதவர்கள் என்று கூறுவதா என்று கேட்ட பெரியார். சிதம்பரத்தில் ஒருமுறை பேசும்போது கூட பெரியார் கேட்டார். ”உங்களைப் பார்த்து ஈரோட்டவர் அல்லாதவர்களே (சூடிn நுசடினயைளே) என்று நான் பேச இயலுமா? ஈரோட்டிலிருந்து நான் மட்டும்தான் வந்திருக்கிறேன். நீங்கள் 10,000 பேர் இருப்பீர்கள் என்றால் நீங்கள் எல்லாம் இந்த ஊர். அதுபோலத்தான் எண்ணிக்கை யில் குறைவாக இருக்கிற பார்ப்பனர்களை ஒப்பிட்டு நம்மைக் குறிக்க பார்ப்பனர் அல்லாதவர் என்ற சொல்லை பயன்படுத்தக் கூடாது” என்று பேசினார். அதற்கு மாற்றாக ஒரு உடன்பாட்டுச் சொல்லாக, எதிர்மறைச் சொல்லாக அல்லாமல், நேர்மறைச் சொல்லாக இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் திராவிடர் என்ற சொல்லை 1939ஆம் ஆண்டு...

வெறுப்பு அரசியலை வளர்க்கும் ‘குஜராத் மாடல்’

வெறுப்பு அரசியலை வளர்க்கும் ‘குஜராத் மாடல்’

பீகார் – உத்திரப்பிரதேச இந்திக்காரர் களையே விரட்டி அடிக்கிறது, மோடியின் குஜராத். இவர்கள் ‘இந்து’ தேசத்தை உருவாக்கப் போகிறார்களாம். உண்மையில் ‘குஜராத்’ என்பது மோசமான உணர்ச்சியின்  உதாரணம்தான். பிரதமர் நரேந்திர மோடியாலும், பாஜக வினராலும் மிகவும் தம்பட்டம் அடிக்கப்பட்ட ‘குஜராத் மாடல்’, பீகார் மற்றும் உத்தரப்பிரதேச மாநிலங் களிலிருந்து புலம்பெயர்ந்து வந்து வேலைகளைச் செய்துகொண்டிருந்த தொழிலாளர்கள் குஜராத்திலிருந்து வெளியேறிச் சென்று கொண்டிருப்பதன் மூலமாக மீண்டும் ஒருமுறை தன் கோர வடிவத்தை மக்கள் மத்தியில் தோலுரித்துக் காட்டிக் கொண் டிருக்கிறது. அவர்கள் மீது ஏவப்படும் வன்முறை வெறியாட்டங்களின் காரண மாகவும், அவர்களுக்கெதிரான பிரச்சாரங்கள் மூலமாகவும் மோடியின் ‘குஜராத் மாடல்’ எந்த அளவிற்கு சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் படுதோல்வி அடைந்துள்ளது என்பதை இன்னும் முழுமையாக வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது. குஜராத்தி லிருந்து அச்சத்துடன் மீண்டும் தங்கள் மாநிலங் களுக்குத் திரும்பும் தொழிலாளர்களில் மிகப் பெரும்பாலானவர்கள் பீகார் மற்றும் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள். உண்மையில்...

தலையங்கம் ஜாதி எதிர்ப்புச் சட்டம்: பிரிட்டன்  அரசு பின் வாங்கியது

தலையங்கம் ஜாதி எதிர்ப்புச் சட்டம்: பிரிட்டன் அரசு பின் வாங்கியது

இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு வேலைக்குப் போகும் பார்ப்பனர்களும் உயர் ஜாதியினரும் தங்களுடைய ஜாதியப் பெருமைக ளையும் ‘தீண்டாமை’ வெறுப்பு களையும் சேர்த்து சுமந்து கொண்டே போகிறார்கள். குறிப்பாக பிரிட்டனில் இந்தியாவிலிருந்து வேலைக்குச் சென்ற ‘தலித்’ மக்களுக்கு எதிராக ‘தீண்டாமை’ மறைமுகமாக திணிக்கப்பட்டே வருகிறது. இதற்காகவே ‘ஜாதிக் கண்காணிப்பு’ என்ற அமைப்பு ஒன்று பல ஆண்டு களுக்கு முன்பே இலண்டனில் உருவாக்கப்பட்டது. ‘ஜாதிப் பாகுபாடு காட்டுவதும் இனபாகுபாடுதான்’ என்று வலியுறுத்திய இந்த அமைப்பு, ஜாதிப் பாகுபாட்டை தடை செய்யும் சட்டம் ஒன்றைக் கொண்டு வர வேண்டும் என்று நீண்டகாலமாக வற்புறத்தி வந்தது. பார்ப்பனர்கள் உயர்ஜாதியினர் ‘இந்து’ மதத்தின் பெயராலும் ‘கோயில் பாதுகாப்புக் குழு’ என்ற பெயராலும் சில அமைப்புகளை ஏற்படுத்திக் கொண்டு இந்தச் சட்டம் கொண்டு வரப்படக் கூடாது என்று அரசை நிர்ப்பந்தித்து வந்தன. கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாகவே இது குறித்து விவாதங்கள் பிரிட்டனில் நடந்து வந்தன. ஜாதியப் பாகுபாடு இனப் பாகுபாடுதான்...

சபரிமலை கோயிலில் பெண்கள் ஏன் நுழையக் கூடாது

சபரிமலை கோயிலில் பெண்கள் ஏன் நுழையக் கூடாது

“இந்துத்துவத்தை எதிர்க்கிறோம் இந்து மதத்துக்கு நாங்கள் எதிரிகள் அல்ல; பெண்ணுரிமையை ஏற்கிறோம்; ஆனால் பெண்களுக்கு சமத்துவத்தை மறுக்கும் மதங்களை எதிர்க்க மாட்டோம்” என்பதுதான் இங்கே பொதுவான முழக்கமாகவே இருந்து வருகிறது. அரை நூற்றாண்டு காலமாக சபரிமலை அய்யப்பன் கோயில் ‘தீட்டாகிறார்கள்’ என்ற காரணத்துக்காக பெண்களில் கோயில் வழிபாட்டு உரிமைக்குப் போடப்பட்டிருந்த தடையை நீக்கி உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து விட்டது. ஆனாலும் அய்யப்பன் கோயிலின் பார்ப்பன அர்ச்சகர்களான தந்திரிகள், கேரள அரசை மிரட்டி வருகிறார்கள். கேரள அரசு தீர்ப்பை எதிர்த்து மறு சீராய்வு மனு போட்டால்தான் அரசு பிரதிநிதிகளோடு பேச்சுவார்த்தை நடத்துவோம் என்கிறார்கள். ‘நாயர் சொசைட்டி’ என்ற உயர்ஜாதியினரின் அமைப்பும் பந்தளம் மன்னர் குடும்பமும் தீர்ப்புக்கு எதிராக ஆட்சியை மிரட்டுகிறது. கேரள காங்கிரஸ்காரர்களும் பா.ஜ.க.வின ரோடு கைகோர்த்துக் கொண்டு பெண்கள் உரிமைக்கு எதிராகப் போராடுகிறார்கள். ஆர்.எஸ்.எஸ்.சும் பெண்களுக்கு எதிராகவே பேசுகிறது. பெண்களையே இன்னும் ‘சுயம்சேவக்குள்ளாக’ அங்கீகரிக்காமல் ஆர்.எஸ்.எஸ்.இல் உறுப்பினராகத் தடை செய்து வைத்திருக்கும் அமைப்பிடமிருந்து...

மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் – 2018 பட்டியல்

மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் – 2018 பட்டியல்

”தலைமைக் கழக அறிவிப்பு” அன்பு தோழர்களுக்கு வணக்கம். 14.10.2018 அன்று திருப்பூரில் நடைபெற்ற கழகச் செயலவையின் தீர்மானங்களை நினைவூட்டுகிறோம். அவற்றின் நிறைவேற்றம், முன்னேற்றம், கீழ்க்கண்ட செயல் திட்டங்கள் குறித்து ஆயவும், கலந்துரையாடவும் முதற்கட்ட பயணம் ஒன்றினை திட்டமிட்டுள்ளோம். இப்பயணத்தில் கழகத்தலைவர், பொதுச் செயலாளர், தலைமைக்கழகப் பொறுப்பாளர்கள் பங்கேற்க உள்ளனர். ”மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் – 2018 பட்டியல்” : 21.11.2018 – புதன் காலை – ஈரோடு வடக்கு – மாலை – ஈரோடு தெற்கு; 22.11.2018 -வியாழன் காலை – நாமக்கல் – மாலை – திருப்பூர்; 23.11.2018 – வெள்ளி மாலை – ஆனைமலை – கோவை மாநகர் – கோவை புறநகர் (ஆனைமலை) 24.11.2018 – சனி காலை -திண்டுக்கல் (பழனி) -மாலை – திருச்சி, பெரம்பலூர், அரியலூர் (திருச்சி) 30.11.2018 – வெள்ளி காலை – சேலம் கிழக்கு- மாலை – சேலம் மேற்கு; 02.12.2018...

அரசியல் சட்ட எரிப்பு நாள் & மாவீரர் நாள் கருத்தரங்கம் சென்னை 26112018

அரசியல் சட்ட எரிப்பு நாள் & மாவீரர் நாள் கருத்தரங்கம் சென்னை 26112018

நவம்பர் 26, 2018 (திங்கட்கிழமை)மாலை 4 மணிக்கு,சென்னை, சேப்பாக்கம் பத்திரிக்கையாளர் சங்கத்தில் அரசியல் சட்ட எரிப்பு நாள் & மாவீரர் நாள் கருத்தரங்கம் தலைமை : தி.இராவணன் வரவேற்புரை : மனோகர் முன்னிலை : இரா.மாரிமுத்து,ஆ.சிவக்குமார் கருத்துரை : தோழர்.கொளத்தூர் மணி தலைவர், திவிக (தலைப்பு : சட்ட எரிப்பும், ஜாதி ஒழிப்பும்) தோழர்.மருத்துவர்.தாயப்பன் (தலைப்பு : ஈழம் – நமது கடமை) தோழர்.விடுதலை இராசேந்திரன் பொதுச் செயலாளர், திவிக (தலைப்பு : பெரியாரியம் இன்றைய தேவை) நன்றியுரை : பிரவீன் குமார் அரசியல் சட்ட எரிப்பு ஏன்? தெரிந்து கொள்வோம்… அனைவரும் வாரீர்.! தொடர்புக்கு : 7299230363  

ஆணவப் படுகொலைக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம்.! சென்னை 19112018

ஆணவப் படுகொலைக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம்.! சென்னை 19112018

திராவிடர் விடுதலைக் கழகம், தமிழ்த்தேச மக்கள் முன்னணி மற்றும் இளந்தமிழகம் ஒருங்கிணைப்பில்  திராவிடர் விடுதலைக் கழகத்தின் பொதுச் செயலாளர் தோழர் விடுதலை இராசேந்திரன் அவர்கள் தலைமையில் நாளை (19.11.2018)மாலை 3 மணிக்கு சிம்சன் பாலம் பெரியார் சிலை அருகே தொடரும் ஆணவப் படுகொலைக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம்.! காதல் இணையர் “நந்தீஷ் – சுவாதி” இருவரும் சாதி ஆணவப் படுகொலை.! தமிழகமே! ஒன்றிணைந்து போராடுவோம்! சாதிய ஆணவப் படுகொலைக்கு எதிராக…. தொடர்புக்கு : 7299230363

பெரியாரியல் பயிற்சி வகுப்பு – ஒட்டன்சத்திரம் திராவிட விழுதுகள் 18112018

பெரியாரியல் பயிற்சி வகுப்பு – ஒட்டன்சத்திரம் திராவிட விழுதுகள் 18112018

18-11-2018  ஞாயிறு அன்று காலை 10-00 மணிக்குத் தொடங்கி பிற்பகல் 4-00 மணிவரை ஒட்டன்சத்திரம், பேருந்து நிலையம் அருகிலுள்ள இராமலிங்கசாமிகள் மடத்தின்  அரங்கில், ஒட்டன்சத்திரம் திராவிட விழுதுகள் அமைப்பின் சார்பாக பெரியாரியல் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. பயிற்சி வகுப்பில் பங்கேற்க பல்வேறு பகுதிகளில் இருந்து இளைஞர்களும், தோழர்களும், மாணவர்களும் (பெண் மாணவர்கள் 30 பேர் உள்பட)  ஏறத்தாழ 80 பேர் கலந்துகொண்டனர். தோழர்.வீ.அரிஸ்டாட்டில் வரவேற்புரையாற்ற, பேரா.மதியழகன் நோக்க உரையாற்றினார். வகுப்பெடுக்க வந்திருந்த மூவருக்கும் திராவிட விழுதுகளின் அமைப்பாளர்கள் திரு.தி.மோகன், திரு.சு.கருப்புசாமி, புலவர் வீர கலாநிதி ஆகியோருக்கு நினைவுப் பரிசாக நூல்களை வழங்கினர். அறிமுகத்தைத் தொடர்ந்து, ஏன் வேண்டும் இட ஒதுக்கீடு என்ற தலைப்பில் பணிநிறைவு பெற்ற கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளர் மு.செந்தமிழ்ச்செல்வன் எளிய எடுத்துக்காட்டுகளைக் கூறி விளக்கியதோடு, இன்று இட ஒதுக்கீடு சந்திக்கும் நெருக்கடிகளையும் சுட்டிக்காட்டி உரையாற்றினார். அடுத்ததாக திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி பெரியாரியல் –...

ஈரோடு வடக்கு மாவட்டக் கழகம் நடத்திய தமிழர் கல்வி உரிமை மீட்பு பரப்புரைப் பயணம் 30.09.2017

ஈரோடு வடக்கு மாவட்டக் கழகம் நடத்திய தமிழர் கல்வி உரிமை மீட்பு பரப்புரைப் பயணம் 30.09.2017

பெரியார்  140 ஆவது பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு  ஈரோடு வடக்கு மாவட்ட கோபி ஒன்றிய கழகத்தின் சார்பில் கொடி யேற்றம் மற்றும் தமிழர் கல்வி உரிமை பரப்புரை பயணம் ஆகியன 30.09.2018 ஞாயிறு அன்று சிறுவலூரில் நடைபெற்றது. சிறுவலூர் பகுதியில் அமைந்துள்ள கழகத்தின் கொடிக்கம்பத்தில் கழக வழக்குரைஞர் தோழர் செகதீசன் கழகக் கொடி யினை ஏற்றி வைத்து பரப்புரை பயணத்தை தொடங்கி வைத்தார். தொடர்ந்து  தலைமை கழகப் பேச்சாளர் வேலுச்சாமி, மாநில வெளியீட்டுச் செயலாளர் இராம இளங்கோவன் ஆகியோர் பயணத்தின் நோக்கத்தை விளக்கி உரையாற்றினார்கள். அப்பகுதியில் நம் தோழர்களுக்கு கோபி ஒன்றியத்தின் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தோழர்கள் தேனீர் வழங்கி நம் பயணம் தொடர வாழ்த்துகள் தெரிவித்தனர். தொடர்ந்து எலந்தக்காடு பகுதியில் தோழர் சுந்தரம், மூப்பன் சாலையில் நதியா, கிழக்கு தோட்டம் பிரிவில் கிருட்டிணசாமி, மரியன்னை மேல்நிலைப்பள்ளி அருகில் பெரியார் பிஞ்சு அகிலன், கொளப்பலூர் பேருந்து நிலையம் பகுதியில் பெரியார்...

திருப்பூரில் காவல்துறையின் தடையை மீறி கண்டன ஆர்ப்பாட்டம்: கழகத் தோழர்கள் கைது !

திருப்பூரில் காவல்துறையின் தடையை மீறி கண்டன ஆர்ப்பாட்டம்: கழகத் தோழர்கள் கைது !

திருப்பூரில் கடந்த 22.10.2018 திங்கள் கிழமை அரசு நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் கணக்கு, ஆங்கிலம், அறிவியல், வரலாறு பட்டதாரி ஆசிரியர்களுக்குப் பயிற்சி ஒன்று வழங்கப்பட்டது. இது குறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சாந்தி ஒரு சுற்றறிக்கையை வெளியிட் டிருந்தார். அதில் என்ன பயிற்சி என்றோ, யார் நடத்துகிறார்கள் என்றோ எதுவும் குறிப்பிடவில்லை. ஆசிரியர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என்றும் அவர்களுக்கு விடுப்பு அளிக்க வேண்டும் என்றும் வட்டாரக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர் ஆகியோருக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட் டிருந்தது. 22.10.2018 அன்று காலை பயிற்சி வகுப்புக்குச் சென்ற சுமார் 600 ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவ்வகுப்பை நடத்த வந்தவர்கள் “இதிகாச சங்காலன சமிதி” என்ற வடமொழிப் பெயருடனும் வரலாற்றுத் தொகுப்புப் பேரவை என்று தமிழிலும் அறிமுகப் படுத்திக் கொண்டனர். பயிற்சியை நடத்தி யவர்கள் சுப்பிரமணியம் மற்றும் டி.வி.ரங்கராஜன் ஆகியோர். இதனை ஒருங்கிணைத்தவர் இந்துத்துவ அமைப்பின்...

திருச்செங்கோடு கருத்தரங்கில் கொளத்தூர் மணி பேச்சு (4) நாடகத்தில் வேடம் தரித்து கொள்கை பரப்பியவர்கள், திராவிடத் தலைவர்கள்

திருச்செங்கோடு கருத்தரங்கில் கொளத்தூர் மணி பேச்சு (4) நாடகத்தில் வேடம் தரித்து கொள்கை பரப்பியவர்கள், திராவிடத் தலைவர்கள்

“கருஞ்சட்டைக் கலைஞர்” என்ற தலைப்பில் திருச்செங்கோட்டில் 30.09.2018 ஞாயிறு அன்று நடந்த கருத்தரங்கில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆற்றிய உரை. சென்ற வார தொடர்ச்சி இன்றைக்கும் ராமனை உயர்த்திப் பேசிக் கொண்டிருக்கிற ஒரு கூட்டம் இருக்கிறது. நாம் இராவணனை உயர்த்திப் பிடிக்கிற கூட்டம். இருவரும் கற்பனைக் கதாபாத்திரங் கள் என்பதில் நமக்கு எந்தக் கருத்து மாறு பாடும் இல்லை. அவர்கள் எழுதியபடியே பார்த்தாலும்கூட என்றுதான் நாம் சொல்லு கிறோமே தவிர, நாம் அதை நம்பிக்கொண்டு பேசவில்லை. கம்பர் ஒரு இடத்தில், ’இரக்கம் எனும் பொருளிலா அரக்கன்’ என்று இராவணனைப் பற்றி சொல்லியிருப்பார். இராமன்தான் தீயவன், இராவணன் அல்ல என்று நிறுவுவதற்காக நாடகம் ஒன்று நடந்தது. எல்லோரும் இறந்துபோன பிறகு வழக்கு நடக்கும் என்பதுபோல கற்பனையில் இந்த நாடகம் உருவாக்கப்பட்டிருக்கும். நீதி தேவன் முன்னால் எல்லோரும் நிற்பார்கள். என்னை இரக்கமெனும் பொருளிலா அரக்கன் என்று கம்பர் சொல்லிவிட்டார் என்று கம்பர் மீது இராவணன்...

தேவ-அசுரப் போராட்டமே தீபாவளி பண்டிகை – பெரியார் –

தேவ-அசுரப் போராட்டமே தீபாவளி பண்டிகை – பெரியார் –

தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடுவது தமிழனுக்கு மானக்கேடும், முட்டாள்தனமுமான காரியம் என்று 50 ஆண்டுகளாக எழுதியும் பேசியும்  வருகின்றேன்.  இதன் பயனாய் அநேக தமிழ் மக்கள் இப்பண்டிகையைக் கொண்டாடாமல் நிறுத்தி விட்டார்கள் என்றாலும்,  இன்னமும் பல தமிழ் மக்கள் தங்கள்  இழிநிலையை  மான அவமானத்தை உணராமல் கொண்டாடி வரு கிறார்கள். இக்கொண்டாட்டமானது தமிழ்  மக்களுடைய, இழிவையும் முட்டாள்தனத்தையும் காட்டுவது மாத்திரமல்ல, தமிழர்கள் (திராவிடர்கள்) ஆரிய இனத்தானுக்கு அடிமை, அவனது தலைமைக்கு அடிமை,  மீட்சிபெற விருப்பமில்லாத மானங் கெட்ட ஈனப்பிறவி என்பதைக்காட்டிக் கொள்ளப் போட்டி போடுகிறார்கள் என்பதையே காட்டுகிறது. “மானமும் பகுத்தறிவும் உடையவனே மனிதன்; அஃதிலார் மனித உருவமுள்ள மிருகமே ஆவர்”  என்ற  அறிவுரைப்படி மானமில்லா மக்களே இப்போது தீபாவளி கொண்டாடு கிறார்கள் என்றுதான் சொல்லவேண்டி இருக்கிறது. வெளிநாட்டிலிருந்து பிழைப்புக்கு வழி தேடிக்கொண்டு நம் நாட்டிற்குள் புகுந்த ஆரியர் அக்காலத்தில் அவர்கள் இருந்த காட்டுமிராண்டித் தன்மைக்கு  ஏற்ப மடமையினால் கொண்ட கருத்துக்களை மதுக்குடி வெறியில்...

தலையங்கம் வேலை வாய்ப்புகளைத் தடுக்கும் தென்னக தொடர்வண்டித் துறை

தலையங்கம் வேலை வாய்ப்புகளைத் தடுக்கும் தென்னக தொடர்வண்டித் துறை

இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கிடும் நோக்கத்தோடு மத்திய மாநில அரசுகள் திட்டங்களை உருவாக்குவது இல்லை. அதன் காரணமாக இளையச் சமூகம் கடும் நெருக்கடிகளை சந்தித்து வருகிறது. படித்த இளைஞர்களே வேறு வழியின்றி கிரிமினல்களாக மாறும் நிலையை ஆட்சிகள்தான் உருவாக்கி வருகின்றன. உருவாகும் வேலை வாய்ப்புகளைக் கூட நிரந்தரப் பணிகளாக்காமல் ஒப்பந்த ஊழியர்கள் தற்காலிக ஊழியர்களாக குறைந்த ஊதியத்தில் நியமிக்கவே மத்திய மாநில ஆட்சிகள் விரும்புகின்றன. அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்கித் தரும் தொடர்வண்டித் துறையில் 13 இலட்சம் பேர் பணியாற்றுகிறார்கள். இதில் தென்னக தொடர்வண்டித் துறையில் மொத்தம் 1இலட்சத்து 2 ஆயிரம் பணியிடங்கள் உள்ளன. சென்னை, திருச்சி, மதுரை, பாலக்காடு, திருவனந்தபுரம், சேலம் ஆகிய மண்டலங்கள் அடங்கியுள்ள இப்பிரிவில் 15,000 இடங்கள் நிரப்பப்படாமல் காலியாகவே உள்ளன. தொடர்வண்டித் துறையில் சில மாதங்களுக்கு முன்பு, 90,000 பணியிடங்களை நிரப்புவதற்கு அரசு விண்ணப்பங்கள் கோரியபோது, வந்த விண்ணப்பங்கள் 2 கோடியே 30 இலட்சம். அந்த...

பட்டாசு வெடிப்பின் ஆபத்து: மாசு கட்டுப்பாட்டு வாரியம் எச்சரிக்கிறது

பட்டாசு வெடிப்பின் ஆபத்து: மாசு கட்டுப்பாட்டு வாரியம் எச்சரிக்கிறது

தீபாவளி பட்டாசு வெடிப்புகளால் இந்தியா விலேயே அதிக காற்று மாசு ஏற்படும் நகரமாக கடந்த ஆண்டு சென்னை இருந்தது என்று கூறியுள்ள மாசு, கட்டுப்பாட்டு வாரியம் சுவாசக் கோளாறு, மூச்சுத் திணறல், தொண்டை எரிச்சல் பாதிப்புகளோடு புற்று நோய் ஆபத்தும்  இதில் அடங்கியிருக்கிறது என்று எச்சரித்துள்ளது. தீபாவளி பண்டிகையின்போது பட்டாசுகளால் காற்று மாசு ஏற்படுவதைத் தடுக்க, குறிப்பிட்ட  பொது இடங்களில் மட்டும் பொதுமக்கள் பட்டாசு வெடிக்க அனுமதி வழங்குவது குறித்து தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் பரிசீலித்து வருகிறது. தீபாவளியன்று  பட்டாசுகளை  வெடிப்பதால் ஏற்படும் காற்று மாசானது மிகவும் அதிகமாக உள்ளது.  இது மதம் மற்றும் திருவிழா சார்ந்த விஷயம்  என்பதால், அரசானது விழிப்புணர்வை மட்டுமே நம்பியுள்ளது. அதுவும் கடந்த ஆண்டு தீபாவளியின் போது கை கொடுக்கவில்லை.   கடந்தஆண்டில் தீபாவளி பண்டிகை யின்போது, சென்னை சவுக்கார் பேட்டையில் 777 மைக்ரோ கிராம் காற்று மாசு பதிவானது. காற்றில் மிதக்கும் 10 மைக்ரோ கிராமுக்கும்...

உச்சநீதிமன்றத்தின் முக்கிய தீர்ப்பு பட்டாசு வெடிப்பது மத சுதந்திரம் அல்ல!

உச்சநீதிமன்றத்தின் முக்கிய தீர்ப்பு பட்டாசு வெடிப்பது மத சுதந்திரம் அல்ல!

பட்டாசுகளுக்கு முழுமையான தடைஇல்லை என்றாலும் ‘தீபாவளி’ நாளில் இரவு 8 மணியிலிருந்து 10 மணி வரை இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்கலாம். கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு நாள்களில் இரவு 11.55 மணி முதல் 12.30 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்கலாம் என்று உச்சநீதிமன்றம் கட்டுப்பாடு விதித்துள்ளது. உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பு வரவேற்கப்பட வேண்டியதாகும். 6 மாதம் மற்றும் 14 மாத குழந்தைகள் சார்பில் அவர்களின் பெற்றோர்கள் இந்த வழக்கைத் தொடர்ந்திருந்தனர்.இந்தப் பட்டாசு வெடிப்பால் உருவாகும் மாசு – அதனால் தங்களுக்கு ஏற்படும் உடல் பாதிப்புகளால் உயிர் வாழ்க்கைக்கான அடிப்படை உரிமை பாதிக்கப்படுகிறது. எனவே பட்டாசுகளுக்கே தடை போட வேண்டும் என்பது இவர்களின் கோரிக்கை. இதை எதிர்த்து விருதுநகர் மாவட்ட பட்டாசு தீப்பெட்டி தொழிலாளர் சங்கம் வழக்கு தொடர்ந்தது. இந்த தொழிலாளர் சங்கம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தொழிற் சங்கமான ‘சி.அய்.டி.யு.’ சங்கம் என்பதையும் சுட்டிக்காட்ட வேண்டும். “காற்று...

அய்யப்ப ஆச்சாரம்? – முல்லைவேந்தன் பெரியார்

அய்யப்ப ஆச்சாரம்? – முல்லைவேந்தன் பெரியார்

கோவணம் கட்டாமல் சென்றவன் ஜட்டிபோட்டு சென்றபோது மாறிய ஆச்சாரம்?   வீடுமுதல் வீடுவரை அய்யப்பன்கோவில் நடைபயணம் ஊர்திகளில் பயணித்த போது மாறிய ஆச்சாரம்?   நாற்பத்தெட்டு நாள் விரதம் மாறி இன்று மாலைபோட்டு நாளை சபரிமலை சென்றபோது மாறிய ஆச்சாரம்?   வெறும் காலில் மலையேறி ஒருமுடியில் இருந்த உணவுதின்றது மாறி உணவக வியாபாரம் உச்சி சென்றபோது மாறிய ஆச்சாரம்?? நெய் எரிந்த வெளிச்சம் மின்விளக்காய் பரிணமித்தபோது மாறிய ஆச்சாரம்???   மலைமேல் மாலை அவிழ்த்து, மலையிறங்கி கோவணம் அவிழ்த்து குடி,கும்மாளம் போட்ட சாமிகளின் கொண்டாட்டத்தால் மாறிய ஆச்சாரம்???   பெண்ணின் பிறப்புறுப்பில் ??? தீட்டோடு பிரவித்த அய்யப்ப(னும்) பக்த(னும்) பெண்களை தீட்டென ஒதுக்குவது தங்களின் ஆச்சார பலகீனம் பல்லிளித்து உலகம் சிரிக்குது,   பெண்கள் வருகை கண்டு பீதியில் பேதியாவது அய்யப்பனா?? அய்யப்ப பக்தனா?? ஆச்சார போர்வைக்குள். – முல்லைவேந்தன் பெரியார் நிமிர்வோம் அக்டோபர் 2018 இதழ்

வாசகர்களிடமிருந்து…

வாசகர்களிடமிருந்து…

‘கருப்பும் காவியும் இணைந்தபுள்ளி’ கட்டுரை பல அரிய தகவல்களைத்தந்தது. பார்ப்பனியத்தை முதன்மையான எதிரியாக தமிழினத்துக்கு அடையாளம் காட்டிய பெரியார், அதற்குக் கருத்தியலை வழங்கும் பார்ப்பனர்களைக்கூட அவர்கள் மேலாதிக்கத்தை எதிர்த்தாரே தவிர, தனிப்பட்ட பார்ப்பனர்களிடம் பகைமை பாராட்டியதில்லை. அனல் வீசும் கருத்துக் களங்களும் அதன் வழியாக நடந்த உரையாடல்களுமே தமிழ் நாட்டைப் பண்படுத்தி உயர்ந்தன. பெரியாரின் அத்தகைய அணுகுமுறைக்கு சான்றாக பெரியார்-அடிகளார் உறவு நிலவியது. 1971ஆம் ஆண்டு சேலத்தில் “இராமனை செருப்பாலடித்த” திராவிடர் கழக ஊர்வலத்தைத் தொடர்ந்து பார்ப்பனர் -பார்ப்பனரல்லாதார் எழுச்சியைத் தமிழகம் பார்த்தது. அப்போது பெரியார் உருவப் படத்தை பார்ப்பன சக்திகள் பல பகுதிகளில் செருப்பாலடித்தபோது பெரியார் ஆத்திரப்படவில்லை. குறைந்த விலையில் எனது செருப்பையும் படத்தையும் அனுப்புகிறேன்; நன்றாக அடியுங்கள்; அதன் வழியாக எனது கொள்கைதான் பரவும் என்றார். அக்காலகட்டத்தில் காவி உடை தரித்த குன்றக்குடி அடிகளார் கூறியதுதான் மிகவும் முக்கியமானது. “இன்று ஆத்திகம் என்பது உயர்சாதி நலன் காப்பது; நாத்திகம்...

இரட்டை வேடம்

இரட்டை வேடம்

“சபரிமலை பற்றிய உச்ச நீதிமன்றத் தீர்ப்பை இயற்கை யாகவே ஏற்றுக் கொள்ள முடியாது; கோடிக் கணக்கான பக்தர்களின் உணர்வை நீதிமன்றம் தனது தீர்ப்பில் கவனத்தில் கொள்ளவில்லை; பாரம்பரியத்தை கடைபிடிக்கும் ஏராளமான பெண்களின் கோரிக்கையும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை; இந்து சமுதாயத்தின் மீது மட்டும் ஏன் இதுபோன்ற தாக்குதல்கள் நடத்தப்படுகிறது என்று தெரியவில்லை; உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு நாட்டில் அமைதி யின்மையை ஏற்படுத்தி உள்ளது; சமுதாயத் தில் பிரிவினையை ஏற்படுத்தி இருக்கிறது.” – ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் “கோயில்களில் பெண்களைத் தடை செய்தது போன்ற அநீதியான மரபுகள் மாற்றப்பட வேண்டும்; இது போன்ற முக்கியப் பிரச்சனைகள் அரசியல் மயமாக்கப்படக் கூடாது; ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரும் எந்த விதமான பாகுபாடுமின்றி கோயில்களில் நுழைய ஆர்எஸ்எஸ் அனுமதிக்கிறது; தற்போதைய காலங்களில் பெண்களே வேதங்களைப் படிப்பதோடு, கோயில்களில் பூஜையும் செய்கிறார்கள்.” ஆர்.எஸ்.எஸ். பொதுச்செயலாளர் பையாஜி ஜோஷி நிமிர்வோம் அக்டோபர் 2018 இதழ்

அய்.நா. ஆய்வே அம்பலப்படுத்துகிறது: உலகமயமாக்கலின் படுதோல்வி –  முனைவர் ஜெ.ஜெயரஞ்சன்

அய்.நா. ஆய்வே அம்பலப்படுத்துகிறது: உலகமயமாக்கலின் படுதோல்வி – முனைவர் ஜெ.ஜெயரஞ்சன்

உலகமயமாக்கல் – தனியார் மயமாக்கல் – தாராளமயமாக்கல் கொள்கை – ஏற்றத் தாழ்வுகளை ஆதரித்து பெரும் நிறுவனங்களின் சுரண்டல்களை அதிகரித்திருக்கிறது என்ற உண்மையை அய்.நா.வின் வர்த்தகம் மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பே அம்பலப்படுத்தியிருக்கிறது. உலக மயமாக்கல், தனியார் மயமாக்கல், தாராள மயமாக்கல் (Liberalisation, Privatisation, Globalisation) இவை மூன்றும்தான் உலகப் பொருளாதாரத்தை புதிய வளர்ச்சிப் பாதையில் இட்டுச் செல்லும், வளர்ச்சி அதிகரிக்கும், செல்வம் பெருகும், மக்களின் வாழ்வு சிறக்கும் என்ற தாரக மந்திரம், 1980களிலிருந்து ஒலிக்கத்துவங்கி 1990களில் வலுப்பெற்றது. இக்கருத்தாக்கத்தின் அரசியல் வலிமை என்பது அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நாடுகளின் ஆதரவினால் கூடுதலானது. உலக வங்கியும், பன்னாட்டு நிதியமும் இதனை அனைத்து நாடுகளுக்குமான சர்வ ரோக நிவாரணியாக பரிந்துரைக்கத் துவங்கின. பரிந்துரைத்தன என்பதைவிட அவைகளின் கட்டளைகளாவே இவை மாறின. இதன்விளைவாக வளர்ந்த நாடுகள் மட்டுமின்றி பல வளரும் நாடுகளும் இக்கொள்கைகளை ஏற்று செயல்படுத்த வேண்டிய கட்டாய நிலை எற்பட்டது. இதன் தொடர்ச்சியாக, உலகளவில்...

ஜாதி அமைப்பின் கொடூர வடிவம் கிராமங்கள் மனுஷ புத்திரன்

ஜாதி அமைப்பின் கொடூர வடிவம் கிராமங்கள் மனுஷ புத்திரன்

என் மதத்தைச் சார்ந்தவன் என்ற காரணத்துக்காக அவனுக் குத் தகுதியில்லாவிட்டாலும் நான் அவனை மேலே கொண்டு வருவேன் என்பதை விட பெரிய ஊழல் இந்த நாட்டில் எதுவுமே இருக்க முடியாது. கடந்த பல ஆண்டுகளாக தமிழகத் தினுடைய வரலாறாக தமிழகத்தினுடைய அடையாளமாக படுகொலைகளும், சாதிப் படுகொலைகளும், வன்முறைகளும் தான் ஒவ்வொரு ஊரினுடைய அடையாளமாக மாறிக் கொண்டிருப்பதை நாம் பார்க்கிறோம். இப்படியே போனால் தமிழகத்தினுடைய வரலாறு சில ஆண்டுகளுக்குப் பிறகு ஜாதிப் படுகொலைகளுடைய வரலாறாக இருக்கப் போகிறது என்ற அச்சம் எழுகிறது.  முக்கியமாக இந்துத்துவாவை வேரறுக்க வேண்டும். பிராமணியத்தை வேரறுக்க வேண்டும் என்று நண்பர்கள் சொன்னார்கள். நானும்  அந்த கருத்துக்களை தீவிரமாக முன் வைக்கக்க கூடியவன் தான். ஆனால் இந்துத்துவா என்பது இந்துத்துவா என்கின்ற இந்த சமூகத்தில் இல்லை . அது பல்வேறு வடிவங்களில் பல்வேறு முகமூடிகளில் இருக்கிறது. அதேபோல் பார்ப்பனியம் என்பது பெயரில் இல்லை அது பல்வேறு வடிவங்களில் பல்வேறு முகமூடிகளில்...

மதயானை வருகிறது!

மதயானை வருகிறது!

“அப்பா! மதம் பிடித்த யானை வருகிறதாமே! வாங்களேன் போவோம், வேடிக்கைப் பார்க்க! நான் பார்த்ததே இல்லையே, மதம்பிடித்த யானையை! வாங்க! வாங்க! சீக்கிரம் வாங்க!” இப்படி ஒரு சிறு பிள்ளைகூடக் கூப்பிட மாட்டான். யானை பார்த்திராதவர்கள் பலர் இருக்கலாம். அவர்கள் யானை வந்தால் கட்டாயம் பார்த்தே தீருவார்கள். முன்பு பார்த்தவர்களேகூட மீண்டும் பார்க்கத்தான் ஆசைப்படுவார்கள்! யானையிலேயே வெள்ளை யானை வருகிறது என்றால், நீங்களும் நானும்கூடத்தான் பார்க்க ஆசைப்படுவோம்! காரணமென்ன? யானை பூனையைப்போல நாள்தோறும் வீட்டில் பார்க்கப்படும் விலங்கல்ல. அதன் அமைப்பே ஒரு அலாதி! ஆகையால்தான் பார்க்க ஆசைப்படுகிறோம். யானையின் நிறம் சாதாரணமாகக் கறுப்பு. ஆதலால் வெள்ளை யானையென்றால் இன்னும் ஆச்சரியமல்லவா? இந்திரனிடத்தில் மட்டும் (இதுமேல் உலக விஷயம்! என்னைப் போல அடிக்கடி பார்க்கிறவர்கள் மட்டுந்தான் நம்புவார்கள்!) ஒரே ஒரு வெள்ளை யானை இருப்பதாகக் கதை! போன வருஷத்தில் பர்மா காட்டிலிருந்து ஒரு வெள்ளை யானையைப் பிடித்து வந்ததாகப் பத்திரிகையில் படித்தேன். நீங்களும்...

“நான் மகிழ்ச்சியான பெண்ணியவாதி”

“நான் மகிழ்ச்சியான பெண்ணியவாதி”

இன்று ஆங்கிலத்தில் எழுதும் மிக முக்கியமான கறுப்பின எழுத்தாளர்களில் சிமாமாண்டா எங்கோஸி அடீச்சியும் ஒருவர். நைஜீரியாவைச் சேர்ந்த இவர், இதுவரை ஆறு புத்தகங்களை எழுதியிருக்கிறார். பெண்ணியம் குறித்த சரியான புரிதலை உண்டாக்கும் வகையில் அமைந்துள்ளது இவரது எழுத்து. இவருக்குக் கடந்த 2018 ஜூன் 12இல் ‘பென்’ (ஞநுசூ) பரிசு அறிவிக்கப்பட்டது. நோபல் பரிசு பெற்ற நாடக ஆசிரியர் ஹரால்ட் பிண்ட்டரின் நினைவாக இந்தப் பரிசு ஒவ்வோர் ஆண்டும் பிரிட்டன், காமன்வெல்த் நாடுகளைச் சேர்ந்த எழுத்தாளர் ஒருவருக்கு வழங்கப்படுகிறது. இந்த உலகத்தின் மீது துணிச்சலான, தடுமாற்றம் இல்லாத பார்வையைக் கொண்டிருக்கும் எழுத்தாளர்களைக் கவுரவிக்கும் விதமாக இந்தப் பரிசு ஒன்பது ஆண்டுகளாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு அக்டோபர் 9-ம் தேதி அடீச்சிக்கு இந்தப் பரிசு வழங்கப்பட உள்ளது. பாலினம், நிறம், உலக அளவிலான சமத்துவமின்மை ஆகியவற்றின் மீது இவர் கொண்டிருக்கும் நவீன அணுகுமுறையே இந்தப் பரிசுக்காக இவர் தேர்வு செய்யப்பட்டதற்குக் காரணம் என்று...

கருநாடக இசை பார்ப்பனர்களின் தனிச் சொத்தா?   ராமச்சந்திர வைத்தியநாத்

கருநாடக இசை பார்ப்பனர்களின் தனிச் சொத்தா? ராமச்சந்திர வைத்தியநாத்

கருநாடக இசை ‘இந்து’க் கடவுள்களுக்கே உரித்தானது என்று பார்ப்பனர்கள் வெளிப் படையாகப் பேசுவதோடு பிற மதக் கடவுள்களை கருநாடக இசையில் பாடுவோரை யும் மிரட்டுகிறார்கள். இசைக்கு மதம் உண்டா என்ற கேள்வியை எழுப்புகிறார், கட்டுரையாளர். கர்நாடக சங்கீதம் எனும் மரபு சார்ந்த இசை வடிவம் காலங்காலமாய் இருந்த கட்டுத் தளைகளிலிருந்து அறுபட்டு ஜனநாயகப் படுத்தும் முயற்சிகளுக்கு உட்படுகையில், அதை சாதி வடிவத்திற்குள் அடைக்கும் சமீபத்திய முயற்சி விபரீதமானது. இந்து இசைக் கலைஞர்கள் இந்து அல்லாத மற்ற மதங்களுக் குரிய தெய்வங்களைப் பற்றியோ,நம்பிக்கைகள் குறித்தோ பாடலாகாது என்று எச்சரிக்கை விடப்படுகிறது. எச்சரிக்கை விடுக்கும் ராமநாதன் எனும் அந்நபர் ராஷ்ட்ரீய சனாதன் சேவா சங் எனும் அமைப்பின் நிர்வாகி என்ற முறையில் பல்வேறு இசைக் கலைஞர்களை தொடர்பு கொண்டு அச்சுறுத்தியும் வருகிறார். பார்ப்பனர்களுக்கான பிரத்யேக அரசியல் அமைப்புதான் ராஷ்ட்ரீய சனாதன் சேவா சங் என்று அவரும், சென்னை செல்வகுமார் சாஸ்திரிகளும் கூறி வருவதால் இந்த...

‘பிரம்மத்தை’ப் பார்த்த “பிராமணன்” உண்டா?

‘பிரம்மத்தை’ப் பார்த்த “பிராமணன்” உண்டா?

புத்தரின் பார்ப்பனிய எதிர்ப்பை முன் வைக்கும் சில வரலாற்றுக் குறிப்புகள் விடுதலை இராசேந்திரன் “யாகத்துக்காக நீங்கள் நெருப்பைமூட்டி அதில் யாகத்துக் காகவே பொருள்களைக் கொட்டி ஜாதியை சுத்தம்செய்துவிடலாம். தீங்குகளை ஒழித்து விடலாம் என்று கூறுகிறீர்கள். ஒருவனை ஜாதியி லிருந்தும் தீங்கிலிருந்தும் விடுவிக்கும் சக்தி நீங்கள் வளர்க்கும் யாக நெருப்புக்கு உள்ளே இல்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள். அது அந்த யாக நெருப்புக்கு வெளியே இருக்கிறது. அந்த நெருப்பு மக்களின் சிந்தனைகளில் மூட்ட வேண்டிய நெருப்பு. நான் அந்த நெருப்பைத்தான் மூட்டுகிறேன்; நீங்கள் மூட்டிய யாக நெருப்பு அணைந்துவிடும்; நான் மக்களின் சிந்தனையில் மூட்டும் நெருப்பு அணையாது” என்று பதிலடி தந்தார் புத்தர். பெரியார் 1953ஆம் ஆண்டு நடத்திய விநாயகன் சிலை உடைப்புப் போராட்டம் வர்ணாஸ்ரம எதிர்ப்புக்கான போராட்டம்தான். 1952இல் தமிழ்நாட்டில் தேர்தலில் போட்டி யிட்டு மக்களை சந்திக்காமல் கொல்லைப்புற வழியாக பார்ப்பனர் இராஜகோபாலாச்சாரி முதல்வரானார். பார்ப்பன மேலாதிக்கத்தை நிறுவி வர்ணாஸ்ரமத்தை காப்பாற்ற...

‘விநாயகன்’  அரசியலுக்கு வந்த வரலாறு தமிழகத்தில்  பகுத்தறிவு அரசியலில்  இருந்த விநாயகர்

‘விநாயகன்’ அரசியலுக்கு வந்த வரலாறு தமிழகத்தில் பகுத்தறிவு அரசியலில் இருந்த விநாயகர்

மற்ற இந்திய பகுதிகளைப் போலவே ஊர்வல அரசியலுக்கு வந்தது 1980களில்தான். பேஷ்வா பார்ப்பனர்களின் குடும்ப விழாவாக இருந்த விநாயக சதுர்த்தி அரசியல் வடிவம் எடுத்தது எப்படி? இந்தியாவின் வர்த்தகத் தலைநகரம் மும்பை. உலக கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் நவநாகரீக இந்தியப் பெருநகரம். அந்த நகரையே திக்குமுக்காட வைக்கும் நிகழ்வொன்று ஆண்டுக்கு ஒருமுறை வரும். அப்போது ஆர்ப்பரிக்கும் கூட்டம் மும்பை வீதிகளில் வழிந்து நிற்கும். தீபாவளிக்குப் பிறகு இந்தியா முழுக்க கொண்டாடப்படும் ஒரு விழா என்றால் அது விநாயாகர் சதுர்த்திதான். கடந்த அரை நூற்றாண்டுகளில் இந்து அமைப்புகளால்  இந்தியா முழுக்க கொண்டு சேர்க்கப்பட்டுள்ள விநாயகர் ஊர்வலத்துக்கு ஆன்மீக ரீதியில் பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் அதையும் தாண்டிய காரணம் ஒன்று உள்ளது. அது இந்துத்துவா அரசியல். நாடு முழுக்க இந்துத்துவா அரசியலை இந்துக்களிடம் கொண்டு சேர்க்கவும், அதன்பேரில் அவர்களை ஒன்று திரட்டவும் அறிவிக்கப்படாத ரத யாத்திரையாக விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்கள் நடந்து வருகின்றன. உண்மையில் இதன்...

மோடி ஆட்சியில் சீர்குலைந்த  பொருளாதாரம்  புள்ளி விவரங்கள் உண்மையை  படம் பிடிக்கின்றன செ.கார்கி

மோடி ஆட்சியில் சீர்குலைந்த பொருளாதாரம் புள்ளி விவரங்கள் உண்மையை படம் பிடிக்கின்றன செ.கார்கி

“பங்குச்சந்தையில் முதலீடு செய்து கொள்ளையடிக்க வந்த அந்நிய மூலதனம் எப்போதுமே நிலையாக இருப்பதில்லை. அவை எங்கு லாபம் கிடைக்குமோ அங்கு வெட்டுகிளி கூட்டத்தைப் போல ஓடிக்கொண்டே இருக்கும். இந்தியாவில் இருந்து வெளியேறிய அந்நிய முதலீடுகள் 2010 ஆம் ஆண்டு 30 சதவீதமாகவும் 2016-2017 ஆம் ஆண்டு 36 சதவீதமாகவும் 2017-2018(ஜனவரி வரை) 47 சதவீதமாகவும் உயர்ந்திருக்கின்றது.”   மோடியின் ஆட்சி இன்னும் சில மாதங்களில் முடியப்போகின்றது. நரகத்தின் எண்ணெய் சட்டியில் இருந்து எழுந்து ஓட இந்தியர்கள் தயாராக இருக்கின்றார்கள். ஆனால் இந்த முறையும் மோடி பழைய பொய்களுக்கு பதில் பதிய பொய்களைத் தூக்கிக் கொண்டு உங்களை சந்திக்க வருவார். இந்த முறை முன்பைவிட  கவர்ச்சியான அதி பயங்கரமான பொய்களை அவர் கட்டவிழ்த்து விடுவார். இறந்து போனவர்களை உயிர்ப் பிப்பேன் என்றோ, உயிரோடு இருப்பவர்களுக்கு மரணமற்ற பெருவாழ்வை தருவேன் என்றோ அவர் வாக்குறுதி தரலாம். பொய்யையும், உண்மையையும் பிரித்தறிய திராணியற்ற பார்ப்பனியத்தால் மூளை...

‘அவர்களின் கைப்பிடித்து நடப்போம்’ ‘டீன்ஏஜ்‘ குழந்தைகளின் பாலின ஈர்ப்பை  பெற்றோர்கள் எப்படி எதிர்கொள்வது?

‘அவர்களின் கைப்பிடித்து நடப்போம்’ ‘டீன்ஏஜ்‘ குழந்தைகளின் பாலின ஈர்ப்பை பெற்றோர்கள் எப்படி எதிர்கொள்வது?

பள்ளிக்குச் செல்லும் வழியில் கல்லூரி மாணவன் ஒருவன் தன்னைச் சில நாட்களாகப் பின்தொடர்ந்து வருவதை ரேவதி கவனித்தாள். அவனைத் திரும்பிப் பார்க்க வேண்டும்போல் தோன்றியது. ஆனால், அவன் அதைக் கவனித்துவிடுவானோ என்று பதற்றமாகவும் இருந்தது. பிப்ரவரி 14 காதலர் தினத்தன்று அவன் ஒரு வாழ்த்து அட்டையை அவளிடம் கொடுத்தான். கைகள் தீண்டியபொழுது கிடைத்த ஸ்பரிசம் அவளுக்கு மகிழ்ச்சியாகவும் இருந்தது. கூடவே யாராவது பார்த்து விடுவார்களோ என்று பயமாகவும் இருந்தது. பிறந்த நாளன்று புது டிரெஸ் அணிந்து அத்தை வீட்டுக்கு இனிப்பு கொடுக்கப் போனாள் ஸ்வேதா. அத்தை, மாமாவிடம் கொடுத்துவிட்டு சந்துருவைத் தேடினாள். அவன் அறைக்குள் இருப்பதாக அத்தை சொன்னார். கதவுக்குப் பின்னால் மறைந்து இருந்தவன் அவள் உள்ளே நுழைந்தவுடன் ‘பே’ என்று பயமுறுத்தினான். அவள் பயந்துவிட்டாள் என்று தெரிந்தவுடன், ‘சும்மா’ என்று சொல்லி விட்டு, இனிப்பை எடுத்துச் சாப்பிட்டான். இன்னொரு இனிப்பை எடுத்து அவளுக்கு ஊட்டிவிடப் போனான். அவள் பின்னால் போவதைப்...

நீர் நிலைகளை மாசுபடுத்தும் ‘கடவுள்’ கரைப்புகள்

நீர் நிலைகளை மாசுபடுத்தும் ‘கடவுள்’ கரைப்புகள்

பல்வேறு வகையில் வெளியேறும் கழிவுநீரும் நீர்நிலைகளை மாசுபடுத்துகிறது. ஆனால், கடவுள் சிலைகளைக் கரைப்பதால் ஏற்படும் ஆபத்தைவிடக் குறைவான பாதிப்பையே கழிவுநீர் ஏற்படுத்துகிறது என்று மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்திருக்கிறது. களிமண்ணால் செய்யப்பட்ட சிலைகள், நீர்நிலைகளுக்கு எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது. ஆனால், செயற்கைக் களிமண் (பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ்), சுட்ட களிமண், காகிதக்கூழ் போன்றவற்றால் செய்யப்படும் சிலைகள், நீர்நிலைகளுக்குப் பெரும் ஆபத்தை விளைவிக்கும். தவிர, இந்தச் சிலைகளைச் செய்யவும் அலங்கரிக்கவும் பயன்படுத்தப்படும் ரசாயனப் பூச்சுகள், வண்ணத் திரவங்கள், இரும்புக் கம்பிகள், பல வகையான துணி ரகங்கள், செயற்கை மணிகள் – மாலைகள் போன்றவையும் நீர்நிலைகளைப் பெரிய அளவில் மாசுபடுத்து கின்றன. ரசாயன வண்ணங்களில் பாதரசம், காட்மியம், குரோமியம், துத்தநாகம், ஆர்சனிக், காரீயம் போன்ற கன உலோகங்கள் நிறைந்திருக்கும். இவற்றில் பல புற்றுநோயை ஏற்படுத்தக் கூடியவை. இவை நீரில் கரையும்போது அங்கு வாழும் உயிரினங்களும் அந்தப் பகுதியைச் சுற்றி வாழும் பறவை யினங்களும்...

ஒரு பெரியார் தொண்டரின் வாய்மொழி வரலாறு மா.கோபாலன்

ஒரு பெரியார் தொண்டரின் வாய்மொழி வரலாறு மா.கோபாலன்

1940-50களில் சென்னையில் பெரியார் இயக்கச் செயல்பாடுகள் எப்படி இருந்தன? 14 வயதில் பெரியாரிடம் அறிமுகமாகி பெரியார் இயக்கத்தில் இணைத்துக் கொண்டு 23ஆவது வயதில் பெரியார் ஆணையை ஏற்று தமிழக அரசுப் பணியில் சேர்ந்தவர் மா.கோபாலன். திருத்தணி வட்டம் சிறுமணவூரைச் சேர்ந்தவர். அரசு துணைச் செயலாளராகவும், கடைசியில் புதிய பல்கலைக் கழகங்களுக்குத் தனி அலுவலராகவும் பணியாற்றி, ஓய்வுக்குப் பிறகு சைவப் பற்றாளராக மாறியவர். குடந்தை அருகே திருப்பனந்தாள் சைவ மடத்தில் மடத்தின் சைவ மடாதிபதியிடம் நெருக்கமாகி, சைவச் சொற்பொழிவுகளை நடத்தத் தொடங்கினார். பெரியாரியலிலிருந்து சைவப் பற்றாளராக மாறிய நிலையிலும், பணி ஓய்வுக்குப் பிறகு வாழ்வின் இறுதி காலத்தில் தனது மரணத்துக்கு முன் ‘ஆடும் பருவத்தில் என்னை ஆட்கொண்ட பெரியார்’ என்று பெரியார் இயக்கத்திடம் தனக்கிருந்த ஈடுபாட்டை நெகிழ்ச்சியோடு பதிவு செய்துள்ளார். வாய்மொழி வரலாறாக வெளி வந்துள்ள இந்த நூலில், அக்காலத்தில் சென்னையில் திராவிடர் கழகத்தின் செயல்பாடுகளையும் களப்பணியாற்றிய பெரியார் தொண்டர்கள், அவர்கள் நடத்திய...

“கோயில் பக்கம் திரும்பாதே!”

“கோயில் பக்கம் திரும்பாதே!”

உலகில் எந்த ஒரு மதமும் தங்கள் மதத்தினர் வழிபாட்டுக்கு வரும்போது ‘உள்ளே வராதே’ என்று தடுப்பது இல்லை. ஆனால் இந்த நாடே இந்துக்களுக்கானது; நாம் அனைவருமே இந்துக்கள்; பிற மதத்தவர் – அன்னியர்” என்று  பேசுகிறவர்கள்தான். ‘இந்து’ வழிபாட்டுக்கு உரிய கோயில்களில் சமூகத்தின் சரி பகுதியாக இருக்கும் பெண்களைப் பார்த்து, “கோயிலுக்கு வராதே” என்று தடுக்கிறார்கள். “தீண்டாமை அனைத்து வடிவங்களிலும் தடை செய்யப்படுகிறது” என்று சட்டம் அமுலில் உள்ள ஒரு நாட்டில் அந்த சட்டத்தின் உணர்வுகளை மதித்து உச்சநீதிமன்றம், பெண்களையும் கோயிலுக்குள் அனுமதிக்கலாம் என்று தீர்ப்பளித்த பிறகும், பா.ஜ.க.வும் சங்பரிவாரங்களும் கேரள மாநில காங்கிரசும் கைகோர்த்துக் கொண்டு, பெண்கள் சபரிமலை அய்யப்பன் கோயிலுக்குள் வழிபட வருவதைத் தடுத்து நிறுத்துகிறார்கள். ‘தீண்டப்படாத மக்கள்’ கோயில் நுழைவுக்குக்கூட சம்பிரதாயங்களைக் காட்டியே பார்ப்பனர்கள் தடுத்தனர். 1947ஆம் ஆண்டு அனைத்து ஜாதியினருக்கும் ‘ஆலயப் பிரவேசம்’ வழங்கும் சட்டம் தமிழ்நாட்டில் கொண்டுவரப்பட்டபோது சம்பிரதாயங்களான ‘ஆகமவிதிகளும்’ மாற்றப்பட்டன என்பது வரலாறு....

ஒரு வரலாற்றுக் கவிதை

ஒரு வரலாற்றுக் கவிதை

1970ஆம் ஆண்டு சென்னை வானொலிக்கு பெரியார் ஒரு பேட்டி அளித்தார். பெரியாரின் பல்வேறு வரலாற்றுத் தடங்களை விரிவாக பெரியாரே பதிவு செய்த முக்கியத்துவமான பேட்டி  அது. பேட்டி கண்ட செய்தியாளர் மாறன். பெரியாருடன் வைக்கம் போராட்டம், கதர் இயக்கம் உள்ளிட்ட இயக்கங்களில் உடன் பயணித்தவரும், காங்கிரஸ்காரரும் பெரியாரின் உற்ற நண்பருமான கோவை அய்யாமுத்து, பெரியாரின் பேட்டியை குரல் வழியாக வானொலியில் கேட்டவுடன், உணர்வுக் குள்ளாகி உடனே எழுதிய கவிதை இது. வானொலி தன்னில் மாறன் வழுத்திய கேள்விக் கெல்லாம் வான்மழைபோன்று தாங்கள் வழங்கிய சொற்கள் கேட்டு நானும் என்மனையாள் தானும் நன்மனம் நிறைவுற் றோமே! நீங்கிலா நினைவு பூட்டு நித்தமும் நினைப்ப தோடு ஓங்குமுன் புகழைக் கேட்டு உள்ளமும் மகிழ்வுற் றோமே! எண்ணிய கருத்தைத் தாங்கள் எவரெல்லாம் எதிர்த்த போதும் திண்ணிய மாகச் சொல்லும் திறத்தினை எண்ணி எண்ணிச் சிறியனேன் இறும்பூ தெய்தித் திளைத்திடல் இன்றும் உண்டே! உத்தமி நாகம் மாவும்...

வாசகர்களிடமிருந்து…

வாசகர்களிடமிருந்து…

வளர்ச்சித் திட்டமா? அழிவுத் திட்டமா? அணுக்கழிவுகளை ஒரு இலட்சம் ஆண்டுகள் பாதுகாக்க வேண்டும் என்ற சுந்தரராஜன் உரையைப் படித்தபோது அதிர்ந்து போனேன். வளர்ச்சிக்கான திட்டங்கள் என்ற பெயரில் மக்களின் உயிர் வாழ்க்கையே வளர்ச்சிக்கு விலையாகக் கேட்கும் திட்டங்களை எப்படி ஏற்க முடியும்? தூத்துக்குடியில் மக்கள் போராட்டத்தினாலும் 13 உயிர்களை துப்பாக்கிச் சூட்டுக்குப் பலி கொடுத்ததினாலும் தமிழக  அரசு ஸ்டெர்லைட் ஆலையை மூடி சீல் வைத்தது. இப்போது பசுமைத் தீர்ப்பாயத்தின் வழியாக தனது செல்வாக்கைப் பயன்படுத்தி, மீண்டும் தூத்துக்குடியில் நுழைய ஸ்டெர்லைட் நிறுவனம் முயற்சிக்கிறது. வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்திலும் வரதட்சணை ஒழிப்புச் சட்டத்திலும் ஓட்டையைப் போட்டு சட்டத்தின் வலிமையை சிதைக்கும் தீர்ப்பை வழங்கிய உச்சநீதிமன்ற நீதிபதி கோயல் பதவி ஓய்வு பெற்ற அடுத்த சில மணி நேரங்களிலேயே நடுவண் ஆட்சியால் பசுமைத் தீர்ப்பாயத்தின் தலைவராக்கப்பட்டார். அவர் பொறுப்பேற்றவுடன் வேதாந்தா நிறுவனம் தனக்கு சாதகமான உத்தரவுகளைப் பெறத் தொடங்கி விட்டது. லண்டனைத் தலைமையகமாகக் கொண்டு...

சுயமரியாதை இதழியல்: புதுவைச் சிவத்தின் கருத்துலகப் போர் ட  மணிகோ. பன்னீர்செல்வம்

சுயமரியாதை இதழியல்: புதுவைச் சிவத்தின் கருத்துலகப் போர் ட மணிகோ. பன்னீர்செல்வம்

புதுவையில் திராவிட இயக்கத் தூண்களில் ஒருவராகவும் இதழிய லாளருமாக செயல்பட்ட புதுவை சிவம் அவர்களை முன் வைத்து சுயமரியாதை இயக்கத்iதை ஆய்வுக்கு உட்படுத்துகிறது இக்கட்டுரை. திராவிட இயக்க இதழியல் என்பது முதன்மையாக இந்தியர் என்பதற்கு எதிர்த்தேசியமாக அமைந்த திராவிடம் என்கிற நிலப்பரப்பு, பண்பாட்டு வெளி, மொழி இனக் குறித்தொகுதி  என்பவற்றை உள்ளடக்கமாகக் கொண்டது எனலாம். ஆனால் சுயமரியாதை இதழியல் என்பது தனியொரு மனிதனின் சமூகத்தின் மீது கவிந்துள்ள மத அடையாளத்தை சாதிய இழிவை பால்நிலைப் பாகுபாட்டை நீக்குவதும் களைவதும் என்பதோடு தொடர்புடையதாகும். இவ்விடத்து சுயம் உருவாக்கம் குறித்த சில வரலாற்று விவரங்களையும் காண்போம். இந்தப் பொருண்மையை விளங்கிக்கொள்ள அது இன்றியமையாததாகும். ஐரோப்பாவில் மறுமலர்ச்சியை ஏற்படுத்திய நவீன அறிவொளிக் காலம் பல்வேறு விடுதலையியல் சிந்தனைகளை ஏற் படுத்தியது. இந்த விடுதலையியல் சிந்தனைகளின் பெருவெள்ளத்தில் கடவுளர்களின் திருஉருக்கள் அடித்து செல்லப்பட்டாலும் மதத்தின் எச்ச சொச்சமான, மாயையான கருத்து ஒன்று (fetish) நீடித்து வரவே செய்தது....

அடிமைகளை மீட்டெடுக்கப் போராடிய ஸ்பார்டகஸ்

அடிமைகளை மீட்டெடுக்கப் போராடிய ஸ்பார்டகஸ்

மனிதர்களை மனிதர்களே அடிமை களாக வைத்திருக்கும் பழக்கம் ஒரு காலத்தில் உலகம் முழுவதும் பரவிக்கிடந்தது. ரோம் நகரில் இந்தக் கலாசாரம் கொஞ்சம் தீவிரமாக இருந்தது. பொன், பொருளை வைத்திருப்பதைப் போல அதிக அடிமைகளை வைத்திருப்பதையும் கவுரவமாகக் கருதியவர்கள் அங்கு நிரம்ப இருந்தனர். மாடமாளிகைகளை கட்டுவதற்காக வும், தோட்டம் வயல்களைப் பராமரிப்ப தற்காகவும் சொல்லும் வேலையை சொன்னபடி செய்யவும் தங்களைப் புகழ்ந்து கவிபாடவும் அந்த அடிமைகளை செல்வச்செழிப்பு மிகுந்த பலரும் பயன்படுத்தினர். மேலும் சிலர் தங்களை எதிர்க்க நினைப்பவர்களிடம் வாதங்கள் செய் வதற்கும், போரிடுவதற்கும்கூட, தாங்கள் விலை கொடுத்து வாங்கியவர்களைப் பயன்படுத்திக் கொண்டனர். அப்படி விலைக்கு வாங்கப்பட்ட வர்களில் ஒருவன் தான் ஸ்பார்டகஸ். தற்போது பல்கேரியாவாக உருவகம் கொண்டிருக்கும் அப்போதைய கிரேஸ் நாட்டில் பிறந்தவன் ஸ்பார்டகஸ். ரோம் ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்ட, அடிமையாக விற்பனை செய்யப்பட்டான். திடகாத்திரமான வலிமை மிகுந்த அவனது உடலைக் கண்டு ரோம் நகர செல்வந்தர்கள் அதிசயித்தனர். அவனை மற்றவர்களைப் போல...

பா.ஜ.க. ஆட்சியில் வாராக் கடன் தள்ளுபடி 7 மடங்கு அதிகரிப்பு!

பா.ஜ.க. ஆட்சியில் வாராக் கடன் தள்ளுபடி 7 மடங்கு அதிகரிப்பு!

மோடி ஆட்சியின் கடந்த 4 ஆண்டுகளில் வாராக்கடன்கள் என்று முடிவுகட்டி, தள்ளுபடி செய்யப்பட்ட கடன்தொகையும் 7 மடங்கு அதிகரித் திருப்பது, ரிசர்வ் வங்கியின் அறிக்கை மூலம் தற்போது தெரியவந்துள்ளது. இதன்படி, கடந்த 2017-ஆம் ஆண்டின் இறுதியில், வங்கிகளின் வாராக்கடன் 7 லட்சத்து 70 ஆயிரம் கோடி ரூபாயை எட்டியிருந்த நிலையில், அதில் 2017-18 நிதியாண்டில் மட்டும், 90 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கான தொகை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. வங்கிகளில் வாங்கப்பட்ட கடன்களில் திரும்பி வராத தொகையை, பயன்தராத சொத்துக்கள் (சூடிn ஞநசகடிசஅiபே ஹளளநவ) என்று கூறுகின்றனர். அதாவது இந்த சொத்துக்கள் வட்டியை ஈட்டித் தராவிட்டாலும், கடனுக்கான ஈட்டுச் சொத்துக்கள் இருக்கின்றன என்று பொருள்படும். இதனால், வங்கிகளுக்கு பெரிய நஷ்டம் எதுவும் இருக்காது. ஆனால், ஒருகட்டத்தில் இந்த வாராக் கடன்களை வசூலிக்கவே முடியாது; ஈடுகட்டும் அளவிற்கு சொத்துக்களும் இல்லை என்று தீர்மானித்து, அந்த கடன்களை தள்ளுபடி செய்யும்போது, வங்கிகள் மிகப்பெரிய இழப்பைச் சந்திக்கின்றன....

உழைக்கும் மக்கள் திறன்களைவிட பட்டம் பெற்றவர்கள் உயர்ந்தவர்கள் அல்ல!  – பெரியார்

உழைக்கும் மக்கள் திறன்களைவிட பட்டம் பெற்றவர்கள் உயர்ந்தவர்கள் அல்ல! – பெரியார்

கல்வி குறித்து பெரியாரின் கருத்துகள் ஆழமானவை; ஆய்வுக் குரியவை; ஆசிரியர் மாநாட்டில் அவர் நிகழ்த்திய உரை இது: என்னுடைய வாழ்நாளில் சுமார் 2 வருஷக் காலந்தாம் நான் பள்ளியில் படித்திருப் பேன். அப்போதும் என் கையெழுத்தைப் போடக் கற்றுக்கொண்டேன் என்று சொல்லலாம். ஆகவே, கல்வி முறையிலும் உங்கள் குறைகளைப் பற்றியும் உங்களுக்கு சொல்லக்கூடிய சக்தி என்னிடத்தில் இல்லை. ஏதோ என் புத்தி அனுபவத்திற்கெட்டிய வரையில் சில வார்த்தைகளைச் சொல்கிறேன். சாதாரணமாக, ஆரம்ப ஆசிரியர்கள் என்ற பெயரையே யாருக்கு உபயோகப் படுத்தலாம் என்றால், முதலில் நமது பெண் மக்களுக்குத்தான் உபயோகப்படுத்தலாம். ஏனெனில் நமது குழந்தைகளுக்கு ஆரம்ப ஆசிரியர்கள் அவர்களுடைய தாய்மார்களாகிய நமது பெண்களேயாவார்கள். எனவே, இரண்டாவதாகத்தான் நீங்கள் ஆசிரியர்கள் ஆவீர்கள். நீங்கள் இருவரும் எப்படிக் குழந்தைகளைப் படிப்பிக்கின்றீர்களோ அப்படியே அவர்கள் தேசத்துக்கும், தேச நன்மைக்கும், ஒழுக்கத்துக்கும் உரிய மக்களாய் வாழக்கூடும். எனவே தேசம் மக்களாலும், மக்கள் ஆசிரியர்களாலும் உருப்பட வேண்டி இருக்கிறது. ஆனால்,...

அமெரிக்காவில் பார்ப்பனியம் திணிக்கும் ஜாதி

அமெரிக்காவில் பார்ப்பனியம் திணிக்கும் ஜாதி

கென்னத் ஜே கூப்பர் என்ற பிரபல ஆங்கில பத்திரிக்கையாளர் “தி வாஷிங்டன் போஸ்ட்” பத்திரிகையில் ‘அமெரிக்காவில் இந்தியர்கள் திணித்த சாதி’ என்றுகட்டுரை ஒன்றை எழுதியுள்ளார். அதில், அமெரிக்காவிலுள்ள இந்தியர்கள் பள்ளியிலும், வீட்டிலும், வேலைபார்க்கும் இடங்களிலும் எப்படி எல்லாம் சாதியைக் கடைப்பிடிக் கிறார்கள் என்றுபுள்ளிவிவரமாக எழுதி தனது மனக்குமுறலை வெளிப்படுத்தியுள்ளார். எழுத்தாளர்கள் தேன்மொழி சௌந்தர் ராஜன் மற்றும் மாரி சிவிக் -மைத்ரேயி ஆகியோர், அமெரிக்காவில் உள்ள இந்தியர்கள் பலரிடம் மேற்கொண்ட ஆய்வை மேற்கோளாகக் கொண்டு இந்த கட்டுரையை அவர் எழுதியுள்ளார். அமெரிக்காவில் இருக்கும் 3-இல் இரண்டு பட்டியலின சாதியினர் ஒடுக்குமுறைகளைச் சந்திக்கிறார்கள்; ஏனைய சாதி இந்துக்களின் பாகுபாட்டுக்கு ஆளாகிறார்கள்; பள்ளி மாணவர்களும் கூட இந்த பாகுபாட்டுக்கு தப்புவதில்லை; அலுவலகம், வெளியிடங்கள், திருமணம் என அனைத்து விஷயங்களிலும் சாதி இந்துக்கள், சாதியை-தீண்டாமையைக் கடைப்பிடிக்கின்றனர் என்று கென்னத் ஜே கூப்பர் கூறியுள்ளார். நிறவேற்றுமை பிரச்சனையில், அமெரிக்காவில் கறுப்பின மக்கள் கடைப் பிடிக்கும் “பாஸ்ஸிங் (Passing)” என்று...

மோடி ஆட்சியில் பொருளாதாரம் வளர்ந்துள்ளதா?

மோடி ஆட்சியில் பொருளாதாரம் வளர்ந்துள்ளதா?

நாடு பொருளாதாரத்தில் முன்னேறி வருகிறது என்று பா.ஜ.க.வினர் முன் வைக்கும் வாதங்களை அழுத்தமாக மறுக்கிறார் சி.அய்.டி.யு. பொதுச் செயலாளர் தபன்சென். பொருளாதாரம் அதிக வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது என்று மத்திய ஆட்சியாளர்கள் பெருமை பேசுகிறார்களே? மொத்த உள்நாட்டு உற்பத்தி 8.2 சதவீத வளர்ச்சியைக் கண்டுள்ளது என அரசாங்கம் கூறுவது சந்தேகத்திற்குரியது. அத்தகைய வளர்ச்சி எங்காவது வெளிப்படுகிறதா? அரசு வறுமைக் கோட்டிற்குள்ளே உள்ள மக்களை வெளியே கொண்டு வந்துள்ளது; 28 சதவீத மக்கள் தான் இன்று வறுமைக்கோட்டிற்கு கீழ் இருக்கிறார்கள் என்று அரசாங்கம் கூறுகிறது. இது எப்படி சாத்தியம்? இதோ 2014க்கு பிறகு ஏற்றத்தாழ்வுகள் எவ்வளவு விரிவடைந்துள்ளது என்பதைப் பாருங்கள்! 2014ல் 1 சதவீத உயர்தட்டு செல்வந்தர்கள் தேச செல்வத்தில் 48 சதவீதத்தைக் கைவசம் வைத்திருந்தனர். 2016ல் இது 53 சதவீதமாக உயர்ந்தது. 2017ல் 78 சதவீத செல்வம் 1 சதவீதம் பேரிடம் உள்ளது. செல்வந்தர்களின் செழிப்பும், வறுமை ஒழிப்பும் எப்படி...

‘மனிதன் எங்கிருந்து வந்தான்?’ – புதிய ஆய்வு

‘மனிதன் எங்கிருந்து வந்தான்?’ – புதிய ஆய்வு

இதற்கு முந்தைய ஆய்வுகளில் பதிவு செய்யப்பட்டது போல, மனித இனம் ஆப்பிரிக்காவில் உள்ள கிழக்கு ஆப்பிரிக்க பகுதியிலோ அல்லது தெற்கு ஆப்பிரிக்க பகுதியிலோ மட்டுமே தோன்றவில்லை என்றும், மாறாக ஆப்பிரிக்க கண்டம் மொத்தத்திலும் பரவி வாழ்ந்திருக்கின்றனர் என்றும் விளக்குகிறது எலீனர் தலைமையிலான இந்த புதிய ஆய்வு. மனிதன் எங்கிருந்து வந்தான்? என்று யாரிடமாவது கேட்டால், சற்றும் யோசிக்காமல் ‘குரங்கில் இருந்து’ என்றே பலரும் கூறுவர். ஆனால் நாம் தற்போது வாழ்ந்துகொண்டு இருப்பது கூகுள் காலம். விஞ்ஞானமும், தொழில்நுட்பமும் அபரிமிதமான வளர்ச்சி கண்டுள்ள இந்த தகவல் யுகத்தில், மனிதன் எங்கிருந்து வந்தான் என்பது போன்ற அறிவியல் மற்றும் பரிணாமம் சார்ந்த ஆழமான கேள்விகளுக்கு, இனியும், பொதுவான, தகுந்த ஆதாரங்கள் இல்லாத மற்றும் பாரம்பரியமான பதில்களைச் சொன்னால் அது ஏற்புடைய தாகவும் இருக்காது, அறிவுப்பூர்வமான ஒரு பதிலாகவும் இருக்காது. அதுபோலவே, மனித பரிணாமம் என்றாலே, குனிந்த சில குரங்குகளில் இருந்து நிமிர்ந்த உடல்கொண்ட மனிதன்...

கைகளால் கழிவு அள்ளுவோர் 20 ஆயிரம் பேர்!

கைகளால் கழிவு அள்ளுவோர் 20 ஆயிரம் பேர்!

நாட்டில் 20 ஆயிரத்து500 பேர் கைகளால் கழிவுகளை அள்ளும் பணியில் ஈடுபட்டிருப்பதாக மத்திய சமூகநீதி மற்றும் மேம்பாட்டுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது. அதிகபட்சமாக உத்தரப்பிரதேசத்தில் 6,126 பேரு, மகாராஷ்டிராவில் 5,269பேரும் கைகளால் கழிவுகளை அள்ளுவதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது 18 மாநிலங்களின் கணக்குதான். நிமிர்வோம் செப் 2018 இதழ்

ஜாதி ஆணவப் படுகொலைகளையும் ஜாதிய சமூகத்தின் வெறுப்பு  உளவியலையும் ஆழமாகப் பதிவு செய்திருக்கிறது  ‘பரியேறும் பெருமாள்’ திரைப்படம்.

ஜாதி ஆணவப் படுகொலைகளையும் ஜாதிய சமூகத்தின் வெறுப்பு உளவியலையும் ஆழமாகப் பதிவு செய்திருக்கிறது ‘பரியேறும் பெருமாள்’ திரைப்படம்.

அய்ம்பது ஆண்டுகளுக்கு முன்பு நிலவிய ஜாதி வெறி, இப்போது தனது உருவத்தை மாற்றிக் கொண்டு நுட்பமாக செயல்படுவதைப் படம் துல்லியமாகப் படம்பிடித்துக் காட்டு கிறது. நெல்லை மாவட்டம் புளியங்குளம் கிராமம் கதைக்களம். புளியங்குளத்து மக்கள் என்றாலே,  அவர்கள், ‘தலித் மக்கள் தான்’ என்று ஊரை வைத்தே ஜாதி அடையாளம் போர்த்தப்படுகிறது. அப்பகுதியில் 2005ஆம் ஆண்டு நிலவிய ஜாதியப் படிநிலை மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்நிலையை இயல்பாகக் கண் முன் கொண்டு வந்து நிறுத்து கிறார்கள், ஒளிப்பதிவாளரும், இயக்குனரும். திரைப்படங்கள் தொடங்குவதற்கு முன்பு அரசு ஆணைப்படி கட்டாயமாகக் காட்டப் படும் காட்சிகளான “புகைப் பிடிப்பது – உயிருக்கு ஆபத்து; புற்று நோயை உருவாக்கும்; மது குடிப்பது – உடலுக்குக் கேடானது” என்ற விளம்பரத்தைத் தொடர்ந்து, “ஜாதியும் மதமும் – மனிதநேயத்தைக் கொல்லும்” என்ற அறிவிப் புடன் படம் தொடங்குகிறது. கதையின் நாயகன், உயிருக்கு உயிராக நேசிக்கும் அவனது வேட்டை நாய் ‘கருப்பியை’ உள்ளூர்...

சுயமரியாதை கலை பண்பாட்டுக் கழகம்

சுயமரியாதை கலை பண்பாட்டுக் கழகம்

திராவிடர் விடுதலைக்கழகத்தின் முன்னணி அமைப்பு ஆகும். திராவிடர் விடுதலைக்கழகத்தின் பிரச்சாரப்பணிகளில் மக்களை ஈர்க்கும் கலை வடிவங்களை தோழர்களுக்கு பயிற்றுவித்து கலைவடிவில் பெரியாரியலை மக்களிடம் கொண்டு செல்லும் பணியில் செயல்படுகிறது. ஆண்டாண்டு காலமாக நாட்டின் பெரும்பான்மை மக்களை அடக்கி, அடிமைப்படுத்தி வைத்துள்ள வேத, இந்து மதம் உருவாக்கி வைத்துள்ள இன்றளவிலும் நடைமுறையில் உள்ள பிறப்பு முதல் இறப்பு வரையிலான இந்து மதத்தின் அனைத்து வகைச் சடங்குகள், சாஸ்திரங்கள், சம்பிரதாயங்கள், பழக்கவழக்கங்கள் அனைத்தையும் அழித்து ஒழித்து இந்து வேத வாழ்வியலுக்கு எதிரான பெரியாரியல் வாழ்வியலை நடைமுறைப் படுத்தும் பணியிலும்,ஜாதி மறுப்புப் பண்பாட்டைச் செயலாக்கும் நோக்கிலும் செயல்படுகிறது. கலை துறையில் முற்போக்கு கருத்துகளின் மூலம் சமூக விடுதலைக்கு உதவிடும் வகையில் படைப்புகளை அளித்திடும் கலைஞர்களை பாராட்டி ஊக்குவித்து வருகிறது. சுயமரியாதை கலை பண்பாட்டுக்கழகத்தின் பொறுப்பாளர்கள் கொளத்தூர் அ.குமார் தலைமை செயற்குழுஉறுப்பினர் தொடர்பு எண் – 9842757550

‘ஆதி திராவிடர்’களை தனிமைப்படுத்துவதா? குன்றக்குடி அடிகளார்

‘ஆதி திராவிடர்’களை தனிமைப்படுத்துவதா? குன்றக்குடி அடிகளார்

இன்று தமிழகத்திற்கு மீண்டும் பெரியார் தேவை! ஏன்? பெரியார் தலை முறைக்கு முன் தமிழர்கள் வாழ்ந்த நிலைமைக்கு மீண்டும் விரைந்து சென்று கொண் டிருக்கின்றனர். ஆம்! தமிழினம் பல்குழு வழிப்பட்டு இன்று சிதறுண்டு வருகிறது. பெரியார் வார்த்தையில் சொன்னால் ‘நெல்லிக்காய்’ போலத் தமிழர் நம்முள் உட்பகைக் கொண்டு ஒருவரை ஒருவர் தொலைக்கச் சூளுரை கொள்கின்றனர். அரசியல் பொது வாழ்க்கையில் நாணயம் கடைச் சரக்காக மாறி வருகிறது. தன் பெண்டு, தன் மக்கள் என்று சுற்றித் திரிந்தும் சுருட்டியும் வாழும் ‘கடுகு மனத்’தவர்களாகத் தமிழர்கள் உருமாறி வருகின்றனர். புதுப்புதுக் கடவுள்கள் இறக்குமதி ஆகின்றன. புதுப்புதுக் கோயில்கள் நாள் தோறும் கட்டப்படுகின்றன. நடுவண் அரசின் பணித் தேர்வில் தேர்ச்சி பெறுவோர் எண்ணிக்கை அருகி வருகிறது. ஏன்? ஆரம்பப் பாடசாலையிலிருந்து ‘தர்ம மார்க்’கில் மாணவர்கள் வளர்ந்து வரு கின்றனர். ஏன் இந்த அவலம்? பெண்கள் ஒடுக்கப்படுகிறார்கள். ஏன்? பெண் குழந்தைகள் கொல்லப் படுகின்றனர். இங்கும் அங்கும்...

சாதி மதமொழித்த மனிதத்தை மதிப்போம் – அடிகளார் ‘விடுதலை’ பெரியார் மலருக்கு அடிகளார் எழுதிய கட்டுரை

சாதி மதமொழித்த மனிதத்தை மதிப்போம் – அடிகளார் ‘விடுதலை’ பெரியார் மலருக்கு அடிகளார் எழுதிய கட்டுரை

‘மனிதனை நெருங்கு பவன் கடவுளை நெருங்கு கிறான்’ என்பது மதத்தின் இதோபதேசமாக இருந்தாலும் செயலில் அப்படி இல்லை. தந்தை பெரியார் அவர்கள் இந்தத் தலைமுறைத் தமிழர்களுக்குத் தந்த மறைமொழி ‘மனிதனை நினை!’ என்பதேயாகும். ஆம்! தமிழகத்தின் கடந்த பலநூற்றாண்டு வரலாற்றை உற்றுநோக்கின் மனிதன் மதிக்கப் பெற்றதாகத் தெரியவில்லை. மனிதரிலும் மகளிர் ஒரு பொருளாக எண்ணப்பட்டதாகக் கூடத் தெரியவில்லை. கடவுள், மதம், மொழி, பணம்,  சொத்து, பதவி இவைகள் மதிக்கப் பெற்ற அளவுக்கு ‘மனிதன்’ மதிக்கப்பட்டதாகத் தெரியவில்லை. இங்கொன்றும் அங்கொன்று மாகச் சில வரலாற்று நிகழ்ச்சிகள் இருந்ததாகத் தெரிந்தாலும் அது அபூர்வ வாழ்க்கை. அது, இயற்கை நியதியன்று. அதனால் தானே வரலாற்றில் பல நூற்றாண்டுகள் பல கோடி மக்கள் தாழ்த்தப்பட்டவர்களாக வாழ்ந்து வந்துள்ளனர். தாழ்த்தப்பட்ட மக்களுடைய பொறி புலன்கள் பயனற்றப் போயின. கல்வியறிவே இல்லாத மக்களாகப் பல கோடிப் பேரை வைத்திருந்து பல்லக்குச் சவாரி செய்த பெருமை உயர்சாதியினர்க்கு உண்டு. ஏன் இந்த...

காஞ்சி மடத்தின் ஆணையை மீறிய  குன்றக்குடி அடிகளார்

காஞ்சி மடத்தின் ஆணையை மீறிய குன்றக்குடி அடிகளார்

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராவதற்கு வழி செய்வதற்கான மசோதாவை தி.மு.க. அரசு கொண்டு வந்தது. சட்ட மேலவையில் இந்த மசோதாவை எதிர்க்கும் படி காஞ்சி காமகோடி பீடத்திலிருந்து குன்றக்குடி அடிகளாருக்கு கோரிக்கை வந்தது.   பழைய தஞ்சாவூர் மாவட்டத்தின் மயிலாடுதுறையை அடுத்துள்ள திருவாளப் புத்தூருக்கு அருகேயுள்ள நடுத்திட்டு என்னும் கிராமத்தில் சீனிவாசப் பிள்ளை-சொர்ணத்தம்மாள் இணையருக்கு 1925ஆம் ஆண்டு சூலை மாதம் 11ஆம் நாள் பிறந்தவர் குன்றக்குடி அடிகளார். அவரது இயற்பெயர் அரங்கநாதன். 1952ஆம் ஆண்டு முதல் 1995ஆம் ஆண்டுவரை குன்றக்குடி மடத்தின் தலைமை ஆதினமாக இருந்தவர். ஆன்மீகவாதியாக இருந்தாலும்கூட சமூக-சமத்துவத் தளங்களில் தமிழ்ச் சமூகத்துக்கு தொண்டாற்றிய பெருமையும் குன்றக்குடி அடிகளாருக்கு உண்டு. பெரியாரின் நாத்திகக் கருத்துகளோடு ஏராளமான முரண்பாடுகள் இருந்தாலும், ஜாதி ஒழிப்புக் கருத்துகளுக்கு இசைந்து பெரியாரோடு அந்தப் புள்ளியில் இணைந்தவர் குன்றக்குடி அடிகளார். சன்னிதானங்கள் பவனி வர பயன்படுத்தி வந்த பல்லக்கை தான் ஆதீனமாகப் பொறுப்பேற்ற ஆரம்பத்திலேயே தவிர்த்தது போன்ற எண்ணற்ற...

‘கருப்பும்-காவியும்’ இணைந்த வரலாறு

‘கருப்பும்-காவியும்’ இணைந்த வரலாறு

கடவுள் – மத மறுப்புகளைக் கடுமையாகப் பேசிய பெரியார், போராட்ட வடிவங்களிலும் கடுமையான அணுகுமுறை களையே பின்பற்றினார். பார்ப்பனியத்தில் ஊறிப் போய் நிற்கும் மக்களுக்கு இத்தகைய ‘அறுவை சிகிச்சை’ முறையே தேவை என்று கருதினார் பெரியார். ஆனால், தமிழ்நாட்டில் கொள்கை முரண் பாடுகளுக்கிடையே உரையாடல்களைத் தொடங்கி விவாதங்களுக்கு வழி திறந்து விட்டதுதான் பெரியார் இயக்கம், மாற்றுக் கருத்தாளர்களை எதிரிகளாக்கி வன்முறைக்கு தூபம் போட்டது இல்லை. இன்று எச். ராஜாக்களும், இந்து தீவிரவாத அமைப்புகளும் பேசும் தரமற்ற வன்முறைப் பேச்சுகளை பெரியார் இயக்கம் எப்போதும் பின்பற்றியதும் இல்லை. சைவத்திலும் பக்தியிலும் ஊறித் திளைத்த காவி உடை சாமியார் குன்றக்குடி அடிகளாரும் பெரியாரும் ஒரே மேடையைப் பகிர்ந்து கொண்டார்கள். அவரவர் நிலையிலிருந்து கருத்து மோதல்களை நிகழ்த்தினார்கள். தமிழர் இன நலன் என்று வரும்போது ‘கருப்பும் காவியும்’ ஒரே குரலில் ஒலித்தது. இந்த வரலாற்றை இளைய சமுதாயத்துக்கு நினைவூட்டுவதற்காக பெரியார் – அடிகளாருக்கிடையே நிலவிய உறவுகளை...

மோசடி செய்து வெளிநாடு ஓடும் ‘பார்ப்பன-பனியாக்கள்’

மோசடி செய்து வெளிநாடு ஓடும் ‘பார்ப்பன-பனியாக்கள்’

விஜய் மல்லையா, லலித் மோடி, நீரவ் மோடி, நிதின் சந்தேசரா என பலரும் இந்தியாவில் நிதிமோசடி செய்து விட்டு வெளிநாட்டுக்கு ஓடி விட்டனர். இவர்களைப் பிடிப்பதற்காக, சிபிஐ-யும், அமலாக்கத்துறையும் பின்னாலேயே சென்றுள்ளன. இந்நிலையில், ஐஎல்எப்எஸ் (Infrastructure Leasing and Financial Services) நிறுவனத்தை 91 ஆயிரம் கோடி ரூபாய் கடனில் தத்தளிக்க விட்ட, அந்நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ரவி பார்த்தசாரதியும் தற்போது லண்டன் தப்பிவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ரவி பார்த்தசாரதி மருத்துவச் சிகிச்சைக்குத்தான் வெளிநாடு சென்றிருக்கிறார் என்று கூறப்பட்டாலும், அவருக்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் மீண்டும் இந்தியா திரும்புவரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது. உட்கட்டமைப்பு குத்தகை மற்றும் நிதிச்சேவை (Infrastructure Leasing and Financial Services) என்ற நிறுவனம் ரூ. 91 ஆயிரம் கோடி கடனில் விடப்பட்டுள்ளது. அதில் ரூ. 57 ஆயிரம் கோடி வங்கிகளுக்கு செலுத்த வேண்டியதாகும். இந்த மோசமான நிலைக்குக் காரணம், நிறுவனத்தின்...

பூமி சூரியனை சுற்றுகிறது என்றால் சூரியன் எதைச் சுற்றுகிறது?

பூமி சூரியனை சுற்றுகிறது என்றால் சூரியன் எதைச் சுற்றுகிறது?

சமகாலத்தின் மிக முக்கியமான இயக்குநர் களில் ஒருவரான பெலா டார் எடுத்த அற்புதமான திரைப்படம் ‘வெர்க்மைஸ்டர் ஹார்மனீஸ்’. இதன் தொடக்கக் காட்சி ஒரு மது விடுதியில் தொடங்குகிறது. படத்தின் இளம் நாயகனான யானோஸ் வலுஸ்கா தனது மூன்று நண்பர்களை வைத்து சூரியன், பூமி, நிலவு நடனத்தை நிகழ்த்துவார். சூரியன் போன்று ஒருவர் நடுவில் நிற்க இன்னொருவர் பூமியின் வேடத்தில் தன்னைத் தானே சுற்றிக்கொண்டு சூரியனையும் சுற்றுவார். பூமியை நிலவு பாத்திரத்தில் ஒருவர் தன்னைத் தானே சுற்றிக்கொண்டு பூமியைச் சுற்றுவார். ஆக, நிலவு மனிதர் ஒரே நேரத்தில் பூமியையும் சூரியனையும் சுற்றுவார். இந்த அறிவியல் விளக்கம் ஒரு அற்புதமான நடனம்போல் படத்தில் அமைக்கப் பட்டிருக்கும். இந்தக் காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தபோது அருகிலிருந்த என் நண்பர் கேட்டார், “சூரியன் பாத்திரத்தை ஏற்ற நபர் அப்படியே இருக்கிறாரே. உண்மையில் சூரியன் அசையாமல் இருக்கிறதா, அல்லது சுற்றுகிறதா?” கொஞ்சம் தலைசுற்றவைக்கும் கேள்விதான்! நாம் எல்லோரும் தோற்றத்தை நம்பி...