Author: admin

டாக்டர் அறிவுக்கரசி நன்கொடை

டாக்டர் அறிவுக்கரசி நன்கொடை

மேட்டூர் மார்டின்-விஜயலட்சுமி மகள் அறிவுக்கரசி, ரஷ்யாவில் மருத்துவப் படிப்பு முடித்து விட்டு டெல்லிக்கு தேர்வெழுத செல்லும்போது ‘புரட்சிப் பெரியார் முழக்க’த்திற்கு ரூ.2,000/- நன்கொடை அளித்தார். நன்றியுடன் பெற்றுக் கொண்டோம். (ஆர்) பெரியார் முழக்கம் 18072019 இதழ்

10 சதவிகித இடஒதுக்கீட்டை அமுல்படுத்த பணியிலிருக்கும் ஆசிரியர்கள் நீக்கம்

10 சதவிகித இடஒதுக்கீட்டை அமுல்படுத்த பணியிலிருக்கும் ஆசிரியர்கள் நீக்கம்

பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினருக்கான இடஒதுக்கீட்டை அமல்படுத்த, தில்லிப் பல்கலைக்கழகம் மிகவும் அவசரகதியில் நடவடிக்கை எடுத்திருப்பதன் காரணமாக தற்சமயம் பணியிலிருக்கும் நூற்றுக்கணக்கான ஆசிரியர்கள் வேலைநீக்கம் செய்யப்படும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இதனைக் கண்டித்து, தில்லிப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் தலைமையில், ஆசிரியர்கள், இரண்டு நாட்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர். பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீட்டை அமல்படுத்துகிறோம் என்ற பெயரில், தில்லிப் பல்கலைக் கழக நிர்வாகமானது, தற்போது பணியிலிருக்கும் தற்காலிக ஊழியர்கள் நூற்றுக்கணக்கானவர்களை வேலையை விட்டு நீக்கும் முயற்சியில் இறங்கியிருப்பதாக, தில்லிப் பல்கலைக் கழக ஆசிரியர் சங்கத்தின் தலைவர் ரபிப் ராய் குற்றம் சாட்டியுள்ளார். தில்லி பல்கலைக்கழக நிர்வாகத்தின் நடவடிக்கை சரியல்ல என்றும், தற்சமயம் பணியி லிருக்கும் ஆசிரியர்கள் பணிநீக்கம் செய்யப்படாத விதத்தில் கூடுதல் பணியிடங்கள் உருவாக்கும் வரை, பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினருக்கான இட ஒதுக்கீடு அமலாக்கத்தை நிறுத்தி வைக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார். பல்கலைக்கழக...

வர்ணாசிரம கல்விக் கொள்கை

வர்ணாசிரம கல்விக் கொள்கை

இந்தியாவில் ஆரியர்கள் குடியேறிய பின் அதிகாரம் பெற்றவர்களாக மாறினார்கள். வேதங்கள் உருவாக்கப்பட்டன. இந்துத்துவா கொள்கையை வேலையின் அடிப்படையில் நான்கு வர்ணங்களை உருவாக்கினார்கள். முதல் மூன்று வர்ணங்களும் சேர்ந்து மனித சமூகத்திற்கு உழைப்பாளிகளாக இருந்த மக்களை அடிமைப்படுத்தினார்கள். அவர்கள் சூத்திரர்கள் என்று அழைக்கப்பட்டார்கள்.  அக்காலக்கட்டத்தின் குருகுல கல்வி முறை உருவானது. வேதங்கள் கற்றுக் கொள்வதும் கொடுப்பதும் பிராமணர்கள், ஆட்சி புரிபவர் சத்திரியர், வியாபாரம் செய்பவர்கள் வைசியர்கள். இவர்களே கல்வி கற்றுக் கொள்ளும் நிலை இருந்தது. சூத்திரர், பஞ்சமர் குழந்தைகளுக்கு கல்வி மறுக்கப்பட்டது. அவர்கள் வேதங்களை கேட்டாலே காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றுங்கள் என்று மனுதர்ம கோட்பாடு கூறுகிறது. அக்கால கட்டத்தில் மறைந்திருந்து வில்வித்தை கற்ற வேடர் சமூகத்தை சேர்ந்த ஏகலைவன் கட்டை விரல் வெட்டப்பட்டது வர்ணாசிரம கோட்பாட்டின் அடிப்படையில் தான். இந்திய நாடு சுதந்திரம் அடைந்த பிறகு பொதுக் கல்வி முறை 1968இல் கோத்தாரி கமிஷனால் உருவாக்கப்பட்டது. இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின்படி...

2024இல் இந்து இராஷ்டிரமாக இந்தியா அறிவிக்கப்படுமாம்

2024இல் இந்து இராஷ்டிரமாக இந்தியா அறிவிக்கப்படுமாம்

உத்தரப்பிரதேச மாநில பாஜக எம்எல்ஏ-வாக இருப்பவர், சுரேந்திரா சிங். வாயைத் திறந்தாலே இஸ்லாமிய எதிர்ப்பும், வெறுப்புமாக கொட்டித் தீர்ப்பவர். அந்த வகையில், மீண்டும் இஸ்லாமியர்கள் மீது வன்மத்தைக் காட்டியுள்ளார். இதுதொடர்பான வீடியோக்கள் சமூகவலைத் தளங்களில் வெளியாகியுள்ளன. அந்த வீடியோக்களில் ஒன்றில், “இஸ்லாமியர்கள் 50 மனைவிகளை மணமுடித்து 1050 குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்கள்” என்றும், “இது பாரம்பரியம் அல்ல, மிருகத்தனமான செயல்” என்றும் தனது வக்கிரத்தை வெளிப்படுத்தியுள்ளார். அதேபோல, “2024ஆம் ஆண்டு ஆர்.எஸ்.எஸ். துவங்கப்பட்டு 100ஆண்டுகள் நிறைவடைகின்றது; அந்த ஆண்டில் இந்தியா இந்து இராஷ்ட்ராவாக அறிவிக்கப்படும்” என்றும் மற்றொரு வீடியோவில் குறிப்பிட்டுள்ள சுரேந்திரா சிங், “மேற்கு வங்க மாநிலம் இலங்கை போன்றது;  இராமரைப் போன்று தாங்கள் ஏற்கெனவே  பாதி மேற்கு வங்கத்தை சிதைத்து விட்ட நிலையில், சட்டமன்றத் தேர்தல் முடிவின்போது மீதமுள்ள மேற்கு வங்கமும் சிதைக்கப்படும்” என்றும் ஆணவத்தை வெளிப்படுத்தியுள்ளார். பெரியார் முழக்கம் 18072019 இதழ்

மாநாட்டில் விடுதலை இராசேந்திரன் பேச்சு அணுக்கழிவுகளைப் புதைக்கும் பாதுகாப்பான இடம் உலகில் எங்குமே இல்லை

மாநாட்டில் விடுதலை இராசேந்திரன் பேச்சு அணுக்கழிவுகளைப் புதைக்கும் பாதுகாப்பான இடம் உலகில் எங்குமே இல்லை

கூடங்குளத்தில் ‘அணுக் கழிவு மய்யம்’ அமைக்கும் நடுவண் அரசின் ஆபத்தான திட்டத்தை எதிர்த்து அணுசக்தி எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு சார்பில் 14.7.2019 அன்று சென்னை பத்திரிகையாளர் சங்கத்தில் ஒரு நாள் எச்சரிக்கை மாநாடு நடைபெற்றது. மாநாட்டில் பங்கேற்று கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் பேசுகையில் குறிப்பிட்டதாவது: காலையிலிருந்து மாநாட்டில் தொடர்ந்து பங்கேற்று கருத்துகளைக் கேட்டு வருகிறீர்கள். அணுஉலை ஆபத்துகளை ஆழமாக உணர்ந்து, அதைத் தடுத்து நிறுத்தி, நமது மண்ணை மக்களைக் காப்பாற்ற வேண்டும் என்ற கவலை யும் உறுதியும் கொண்டவர்கள் என்பதாலேயே காலை முதல் அர்ப்பணிப்பு உறுதியுடன் இங்கே அமர்ந்திருக்கிறீர்கள். கூடங்குளத்தில் 6 அணுஉலைகளைக் கொண்டு வந்து அணுஉலைப் பூங்காவாகவே மாற்றுகின்றன நடுவண் ஆட்சிகள். இப்போது பா.ஜ.க. ஆட்சி உலகிலேயே மிக மிக ஆபத்தான ‘அணுக்கழிவு கருவூலம்’ என்ற சேமிப்பு கிடங்கினையும் தமிழ்நாட்டிலேயே அமைக்கப் போகிறதாம். அணுக்கழிவு கருவூலம் அல்லது வைப்பகம் ஆபத்துகளை விளக்கி சூழலியல் ஆய்வாளர் நக்கீரன் எழுதிய...

எங்கள் தலைமுறையை வாழவிடு ! தமிழ்நாட்டை வடநாடு ஆக்காதே ! மண்ணின் மைந்தர்கள் உரிமை முழக்க பரப்புரைப் பயணம் !

உரிமை முழக்க பரப்புரை பயண நிறைவு விழா மாநாடு ! 30.08.2019 வெள்ளி மாலை 6.00 மணி – நேரு திடல் பள்ளி பாளையம். எங்கள் தலைமுறையை வாழவிடு ! தமிழ்நாட்டை வடநாடு ஆக்காதே ! மண்ணின் மைந்தர்கள் உரிமை முழக்க பரப்புரைப் பயணம் ! 2019 ஆகத்து 26 முதல் 30 வரை ! சிறப்புரை : தோழர்.#கொளத்தூர்_மணி தலைவர், திராவிடர் விடுதலை கழகம். தோழர்.#விடுதலை_ராசேந்திரன். பொதுச்செயலாளர், திராவிடர் விடுதலை கழகம்.

மண்ணின் மைந்தர்களின் உரிமை முழக்க பரப்புரை பயணம்

மண்ணின் மைந்தர்களின் உரிமை முழக்க பரப்புரை பயணம்

புதிய கல்வி என்ற பெயரில்  குலக்கல்வியை திணிக்காதே மண்ணின் மைந்தர்களின் வேலை வாய்ப்புகளை பறிக்காதே இளைய தலைமுறையின் உரிமை முழக்க பரப்புரை! * நாம் மண்ணின் மைந்தர்கள்தலைமுறையாக இந்த மண்ணில்பிறந்தோம், வாழ்கிறோம், ஆனாலும், பிறவடமாநிலங்களை விட நாம்- வேறுபட்டுள்ளோம். * எவ்வளவு ஒடுக்கப்பட்ட ஜாதியானாலும் சரி; ஏழ்மையும், வறுமையும் நம்மைவாட்டினாலும் சரி; “எப்பாடுபட்டாவது- நமதுமகளை, மகனை படிக்க வைக்க வேண்டும்; உயர் கல்வியைத் தர வேண்டும்; என்ற கொள்கையே நமது பண்பாடு! * பெரியார் இட ஒதுக்கீட்டுக்காக 1919 முதலேபோராடினார். உரிமையைப் பெற்று தந்தார்.  காமராசர், அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர்- அந்த உரிமைகளை படிப்படியாகவளர்த்தார்கள். அம்பேத்கர் சட்டத்தின்வழியாக நமக்கான இட ஒதுக்கீட்டுஉரிமைகளை உறுதிப்படுத்தினார். வி.பி.சிங்மத்திய அரசுப் பணிகளில் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடுதந்தார். போராடிப்பெற்ற சமூக நீதிஉரிமைகளை தற்போது பறிகொடுத்து வருகிறோம் . இப்போது பாஜக ஆட்சியில் என்ன நடக்கிறது? ” உங்கள் கல்விக் கொள்கையை நீங்கள்தீர்மானிக்க முடியாது. நாங்களே  தீர்மானிப்போம்”என்கிறது பாஜக ஆட்சி. * நாம் வேண்டாம் என்ற ‘நீட்’டைதிணிக்கிறார்கள்; இந்தியை , சமஸ்கிருதத்தை படி என்கிறார்கள்;  கல்விவேலை இட ஒதுக்கீடுகளைப் பார்ப்பனஉயர்ஜாதியினருக்கும் தருவோம். அவர்கள்பட்டியலின ஜாதியினரை விட குறைந்தமதிப்பெண்கள் எடுத்தாலே போதும்என்கிறார்கள். மீண்டும் குலக்கல்வியை புதிய கல்விக் கொள்கை என்ற பெயரில் நம் தலையில்சுமத்துகிறார்கள். புதிய கல்வி கொள்கை என்ன கூறுகிறது? 3,5,8 ம் வகுப்புகளுக்கும்  அகில இந்திய தேர்வுஎன்கிறது. 8 ம் வகுப்பு முடித்த 14 வயதுகுழந்தைகள் விருப்பமான தொழில்கல்வியை கற்கலாம் என்ற பெயரில்குலக்கல்விக்கு கதவு திறக்கிறது;   பாடத்திட்டத்தையும் அகில இந்தியஅடிப்படையில் தயார் செய்வார்களாம்; நமக்கான கல்விக் கொள்கையை மத்தியஅரசே தீர்மானிக்குமாம். 3 வயது முதலே கல்வியாம், 30 குழந்தைகளுக்கு குறைவான கிராமப்புற பள்ளிகளை மூடுவார்களாம். ஒருங்கிணைந்த கல்வி வளாகத்திற்கு போக வேண்டுமாம். 3 வயது குழந்தை எப்படிச் செல்லும்? அதுமட்டுமா தோழர்களே! நமது வேலை வாய்ப்புகளைவடநாட்டார்களுக்கு வாரி வழங்குகிறார்கள்; நெஞ்சு பதறும் இந்த புள்ளி விவரங்களைப்படியுங்கள். தென்னக இரயில்வேயில் திருச்சிகோட்டத்தில் சமீபத்தில் எலக்டிரிசியன், பிட்டர், மெக்கானிக், வெல்டர் உள்ளிட்டதொழில் பழகுநர் இடங்களுக்கு 1765 பேர்தேர்வு செய்யப்பட்டனர். அதில் 1600 பேர் வடஇந்தியர்கள். சென்னை மணலியில் உள்ள பெட்ரோலியநிறுவனத்தில் வேதியியல், இயந்திரவியல், மின்னியல் போன்ற 8 வகையானபொறியாளர்(ENGINEERING) பணிகளுக்கு 65 பேர் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டனர்.அவர்களில் ஒருவர் கூட தமிழர்கள் இல்லை. தமிழக வருமான வரித்துறையில் 2012 ல்சேர்க்கப்பட்ட 384 பேரில் 28 பேர் தான்தமிழர்கள். 2014 ல் சேர்க்கப்பட்ட 78 பேரில் 3 பேர்தான் தமிழர்கள். 2018 ல்பணியிலமர்த்தப்பட்ட 100 ஆய்வாளர்களில்ஒருவர் தான் தமிழர். * வருமான வரித்துறையின்,  டேக்ஸ்அசிஸ்டென்ட் பணியில் அமர்த்தப்பட்ட 265 பேர்களில் 5 பேர்தான் தமிழர்கள். கடந்த சிலஆண்டுகளில் 10 சதவீதத்தை கூடஎட்டவில்லை. சமீப காலமாக நடைபெற்ற இரயில்வேதேர்வுகளில் கிட்டத்தட்ட 90 சதவீத அளவில்வடமாநிலத்தினர் தேர்ச்சியடைந்துள்ளனர். குறிப்பாக பீகாரைச் சேர்ந்தவர்கள் 2010-2019 வரை 18% தேர்வாகியுள்ளனர். தமிழகத்தில் வருமான வரித்துறை, கலால்துறை, பாஸ்போர்ட் அலுவலகம் எனமத்திய அரசின் 55 வகையானஅலுவலகங்கள் உள்ளன. இவ்வாறான, பல்வேறு துறைகளில் 2011 ல் இருந்துபணியிலமர்த்தப்பட்டவர்களில் 99% வடஇந்தியர்கள்தான். 0.5% தான் தமிழர்கள். * மோடி தலைமையேற்ற கடந்த 62 மாதங்களில் தான், பாரத் மிகுமின்நிறுவனம், பெட்ரோலிய நிறுவனம், இரயில்வே, பெல் உள்ளிட்ட தமிழகத்தின்மத்திய அரசு நிறுவனங்களில் 90% வடஇந்தியர்களை பணியில் அமர்த்தியுள்ளதுமோடி அரசு. மண்ணின் மைந்தர்களாகிய நமது- கல்வி,வேலை,மொழி உரிமைகளை மறுத்துதமிழ்நாட்டை வடநாடாக்கும் முயற்சிகள்வேக வேகமாக நடக்கின்றனவிழித்துக்கொள்வோம் தோழர்களே!  இந்த ஆபத்துகளை தடுத்து நிறுத்துவோம்மக்கள் கருத்தை உருவாக்குவோம் இதற்காகவே இந்த பரப்புரை பயணம்.  உரத்து முழங்குவோம்! நடுவண் அரசே எங்கள் தலைமுறையைவாழவிடு! நாங்கள் மண்ணின் மைந்தர்கள்!

திராவிடர் விடுதலைக் கழகத்தின் சென்னை மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் 04082019

திராவிடர் விடுதலைக் கழகத்தின் சென்னை மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் 04082019

திராவிடர் விடுதலைக் கழகத்தின் சென்னை மாவட்ட கமிட்டி, கழக பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் தலைமையில், ஆகஸ்ட் 4 ஞாயிற்றுக் கிழமை மாலை 6 மணிக்கு, சென்னை, இராயப்பேட்டை இலாயிட்ஸ் ரோடு விஜய் திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது.. மாவட்ட கழக நிர்வாகிகள், பகுதி பொருப்பாளர்கள், தோழர்கள் குறித்த நேரத்தில் தவறாமல் கலந்து கொள்ளவும்.. தோழமையுடன் இரா.உமாபதி தொடர்புக்கு: 7299230363

திராவிடர் விடுதலைக் கழக நாமக்கல் மாவட்ட கலந்துரையாடல் 04082019

திராவிடர் விடுதலைக் கழக நாமக்கல் மாவட்ட கலந்துரையாடல் 04082019

திராவிடர் விடுதலைக் கழக நாமக்கல் மாவட்ட கலந்துரையாடல் 04.08.2019 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் பள்ளிபாளையம் பெரியார் நூல் கடையில், மாவட்ட தலைவர் சாமிநாதன் தலைமையில் நடைபெற உள்ளது. மண்ணின் மய்ந்தர்களின் உரிமை மீட்பு பயணத்தின் நிறைவு மாநாடு ஆகஸ்ட் 30 ம் தேதி பள்ளிபாளையத்தில் நடைபெற உள்ளது. நிறைவு விழா மாநாட்டை பற்றியும், மாவட்ட கழகத்தின் அடுத்த கட்ட நகர்வு பற்றியும் கலந்து ஆலோசிக்கப்படுவதால். மாவட்ட கழக பொருப்பாளர்கள், பகுதி பொருப்பாளர்கள் தோழர்கள் குறித்த நேரத்தில் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். தோழமையுடன், சரவணன் தொடர்புக்கு: 9842510606

நியூ செஞ்சுரி 25 புதிய நூல்கள் வெளியீட்டு விழா ஈரோடு 07082019

நியூ செஞ்சுரி 25 புதிய நூல்கள் வெளியீட்டு விழா ஈரோடு 07082019

ஈரோடு புத்தகத் திருவிழாவை ஒட்டி, நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தின் 25 புதிய நூல்கள் வெளியீட்டு விழா கழகத் தலைவர் புத்தக வெளியிட்டு பாராட்டுரை நாள் 07.08.2019 நேரம் காலை 11.30 மணி இடம் விபிவி மகால், ஈரோடு  

நிமிர்வோம் 11 வது வாசகர் வட்டம்

நிமிர்வோம் 11 வது வாசகர் வட்டம்

வருகிற ஆகஸ்டு 3 ம் தேதி நடைபெற இருந்த #நிமிர்வோம் 11 வது வாசகர் வட்டம் கூட்டம் தவிர்க்க இயலாத காரணத்தினால் தள்ளிவைக்கப்படுகிறது. மீண்டும் நடைபெறும் தேதி விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

இராஜாதாலே அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு சென்னை 30072019

இராஜாதாலே அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு சென்னை 30072019

இந்திய குடியரசு கட்சி நடத்தும், அகில இந்திய விடுதலை சிறுத்தைகள் இயக்கத்தின் (DPI) நிறுவனர்- தலைவர் மற்றும் இந்திய குடியரசுக் கட்சியின் மூத்த தலைவருமான இராஜாதாலே அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு, எழும்பூர் அருங்காட்சியகம் எதிரில் இக்‌ஷா மய்யத்தில், 30.07.2019 மாலை 7 மணிக்கு நடைபெற்றது. நிகழ்வில், திராவிடர்விடுதலைக்கழக பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் கலந்து கொண்டு இராஜாதாலே பற்றின வரலாறுகளை பகிர்ந்து கொண்டார்…

உயர்ஜாதியினருக்கான, 10% இட ஒதுக்கீட்டு அநீதியை திரும்பப்பெற கண்டன ஆர்ப்பாட்டம் சென்னை 29072019

உயர்ஜாதியினருக்கான, 10% இட ஒதுக்கீட்டு அநீதியை திரும்பப்பெற கண்டன ஆர்ப்பாட்டம் சென்னை 29072019

உயர்ஜாதியினருக்கான, 10% இட ஒதுக்கீட்டு அநீதியை திரும்பப்பெற, மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் 29.07.2019 திங்கள் கிழமை மாலை 5 மணிக்கு, திராவிடர் விடுதலைக் கழகத்தின் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதிர்ச்சியளிக்கும் ஸ்டேட் பேங்க் கட் ஆப் மார்க்! இட ஒதுக்கீட்டின் நோக்கத்தையே சீரழிக்கும் முன்னேறிய வகுப்பினருக்கான 10% ஒதுக்கீட்டை இரத்து செய்யக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தலைமை : தோழர். #விடுதலை_ராசேந்திரன் பொதுச்செயலாளர் திவிக. கண்டன உரையாற்றியோர் : தோழர். #திருமுருகன்_காந்தி மே 17 ஒருங்கிணைப்பாளர். மருத்துவர். #எழிலன். இளைஞர் இயக்கம். முனைவர். #சுந்தரவள்ளி தமுஎகச மருத்துவர். #ரவீந்தரநாத் சமூக சமத்துவத்திற்கான டாக்டர் சங்கம். தோழர். #செந்தில் இளந்தமிழகம்.    

மண்ணின் மைந்தர் உரிமை முழக்கப் பரப்புரைப் பயணம் நிறைவு விழா பள்ளிபாளையம்

மண்ணின் மைந்தர் உரிமை முழக்கப் பரப்புரைப் பயணம் நிறைவு விழா பள்ளிபாளையம்

பயண நிறைவு நாள் மாற்றம்: #அறிவிப்பு மண்ணின் மைந்தர் உரிமை முழக்கப் பரப்புரைப் பயணம் நிறைவு விழா – இடம் மற்றும் நாள் மாற்றம் அறிவிப்பு கடந்த ஜூலை-18″ 2019 பெரியார் முழக்கத்தில் வெளிவந்த #பரப்புரை_பயண_நிறைவு_விழா – இடம் *மேட்டூர்* , நாள் – 31. 08. 2019 என அறிவிக்கப்பட்டிருந்தது. மேற்படி பயண நிறைவு விழா *#பள்ளிபாளையத்தில்* ( #நாமக்கல்மாவட்டம்) *30.08.2019* *வெள்ளி* மாலை நடைபெறும் என அறிவிக்கிறோம். பயணக் குழு பொறுப்பாளர்கள் 30.08.2019 அன்று பள்ளிபாளையத்தில் பரப்புரை பயணம் நிறைவடையும் வகையில் பயணத் திட்டத்தை மாற்றியமைக்கும்படியும், தேவையெனில் மாநில பொறுப்பாளர்களிடம் தொடர்பு கொண்டு பயண திட்டத்தை வகுத்துக் கொள்ளுமாறு தோழமையுடன் கேட்டுக் கொள்கிறோம். #கொளத்தூர்மணி தலைவர் திராவிடர் விடுதலைக் கழகம்.

தோழர் நிர்மல்குமார் அவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் கோவை 31072019

தோழர் நிர்மல்குமார் அவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் கோவை 31072019

ஆர்ப்பாட்டம் ! கோவை – 31.07.2019. தோழர் நிர்மல்குமார் அவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி ! ”கருத்துரிமையை பறிக்கும் அரசின் அடக்குமுறைக்கு எதிரான கூட்டமைப்பு” சார்பில் ……….. கழகத் தோழர் கோவை மாவட்டச்செயலாளர் தோழர் நிர்மல் குமார் அவர்கள் ஒரு முகநூல் பதிவிற்காக 27.07.2019 அன்று பொய் வழக்கில் தமிழக அர்சின் காவல்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.இதனைக் கண்டித்தும்,தோழரை விடுதலை செய்ய வலியுறுத்தியும் கோவையில் ”கருத்துரிமையை பறிக்கும் அரசின் அடக்குமுறைக்கு எதிரான கூட்டமைப்பு” சார்பில் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு 31.07.2019 அன்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு த.பெ.தி.க.பொதுச்செயலாளர் தோழர் கோவை கு.ராமகிருட்டிணன் அவர்கள் தலைமை வகித்தார்.கழகத்தின் மாவட்டத்தலைவர் தோழர் நேருதாஸ் அவர்கள் முன்னிலை வகித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மண்டல செயலாளர் சுசி கலையரசன், திராவிட தமிழர் கட்சியின் வெண்மணி, சிபிஎம் மாநில குழு உறுப்பினர் பத்மநாபன், தமிழ்தேசிய இறையாண்மைக்கட்சி தென்மொழி, பு.இ.முவின்...

அடுத்து தொடர்ச்சியாய் செய்ய வேண்டியது…

அடுத்து தொடர்ச்சியாய் செய்ய வேண்டியது…

அன்பார்ந்த தோழர்களே, அண்மைக்காலமாக பொதுவெளியிலும் சமூக வலை தளங்களிலும் முன்வைக்கப்படுகின்ற கருத்துக்களுக்காக அந்த கருத்துகளில் சமூக அமைதிக்கு எவ்வித நெருடலும் சீர்குலைவும் ஏற்படாத நிலையிலும் கூட காவல்துறையும் நீதித்துறையும் முன்னெடுக்கும் பக்க சார்பான நடவடிக்கைகளை தொடர்ந்து காண முடிகிறது. ராஜராஜ சோழனைப் பற்றிய திறனாய்வு பேச்சுக்கு காவல்துறை தானாக முன்வந்து வழக்குப் பதிவு செய்கிறது 1000 ஆண்டுகளுக்கு முன் இருந்தவற்றை ஏன் இப்போது பேச வேண்டும் என்கிறது நீதிமன்றம்.முன் பிணைக்கு கூட இனி பேச மாட்டேன் என உறுதி கேட்கிறது நீதித்துறை . பெரியார் சிலைகளை உடைக்க வேண்டும் என்று பேசியதற்கு அனைத்துக் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து இருந்தாலும் ஊடகங்கள் அனைத்தும் சில நாட்கள் அது குறித்தே பேசியிருந்தாலும் பல புகார் விண்ணப்பங்கள் அளிக்கப்பட்டிருந்தாலும் நடவடிக்கை எடுப்பதில் தயங்கி நின்ற துறைகள்தான் நம்மைப் போன்றோர் மீதான புகார்களுக்கு நடவடிக்கைகளை எடுக்க அவசர அவசரமாக செயல்படுகிறார்கள் உயர் நீதிமன்றத்தை பற்றியே பொது...

தோழர்களே, கோவைக்குத் திரளுவீர்!

தோழர்களே, கோவைக்குத் திரளுவீர்!

தமிழ்நாட்டில் ஆணவப் படுகொலைகள் தலைவிரித்தாடுகின்றன. ஜாதிகளைக் கடந்து ஒருவரையொருவர் விரும்பி திருமணம் செய்து கொள்ள அரசியல் சட்டம் வழங்கியுள்ள உரிமைகளை ஜாதிவெறிக் கூட்டம் கையில் எடுத்துக் கொண்டு வீச்சறிவாளையும் கத்தியையும் தூக்கிக் கொண்டு வருகிறது. ‘நாம் எல்லோரும் இந்துக்கள்’ என்று மதவாதம் பேசும் கூட்டம், இந்துக்களுக்குள்ளே நடக்கும் ‘ஜாதிக் கொலைகளை’ எதிர்க்காமல் மவுனம் சாதிக்கிறது. தமிழ்நாட்டில் ஜாதி ஆணவப் படுகொலைகளே நடக்கவில்லை என்கிறது, தமிழக அரசு! ஜாதி ஆணவப் படுகொலைகளைத் தடுக்கும் சட்டத்தையும் கொண்டுவர மறுக்கிறது, மத்திய சட்ட ஆணையம். ஜாதியப் படுகொலைகளைத் தடுக்கும் மசோதாவைத் தயாரித்து 2011ஆம் ஆண்டு நடுவண் ஆட்சிக்கு அனுப்பி பல ஆண்டுகளாகியும் மசோதா கிடப்பில் போடப்பட்டுவிட்டது. ஜாதி ஆணவப் படுகொலைகள் குறித்த விவரங்களை சமர்ப்பிக்குமாறு மாநில அரசுகளுக்கு 2016ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. 22 மாநில அரசுகள் பதிலளித்து விட்டன. தமிழ்நாடு மட்டுமே பதிலளிக்கவில்லை. இளைஞர்கள் ஜாதி மறுப்புத் திருமணம் செய்ய முன் வந்தால் முதியவர்கள்...

மண்ணின் மைந்தர்கள் உரிமைகளைப் பறிக்காதே! ஆக. 26-31 வரை கழகத்தின் பரப்புரை 5 முனைகளிலிருந்து தொடங்குகிறது கழகத்தின் தலைமைக் குழு முடிவு

மண்ணின் மைந்தர்கள் உரிமைகளைப் பறிக்காதே! ஆக. 26-31 வரை கழகத்தின் பரப்புரை 5 முனைகளிலிருந்து தொடங்குகிறது கழகத்தின் தலைமைக் குழு முடிவு

திராவிடர் விடுதலைக் கழகத் தலைமைக் குழு, ஜூலை 13, 2019 பிற்பகல் 2.30 மணியளவில் மேட்டூரில் தாய்த் தமிழ்ப் பள்ளியில் கூடியது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் முன்னிலையில் நிகழ்ந்த குழுவின் கூட்டத்தில் கழக அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமி, பொருளாளர் திருப்பூர் துரைசாமி, பரப்புரைச் செயலாளர் பால். பிரபாகரன், தலைமைக் கழக செயலாளர் தபசி குமரன், வெளியீட்டுச் செயலாளர் கோபி. இளங்கோவன், தமிழ்நாடு அறிவியல் மன்ற அமைப்பாளர் ஆசிரியர் சிவகாமி, முகநூல் பதிவு பொறுப்பாளர் பரிமள ராசன், இணையதள பொறுப்பாளர் விஜயகுமார், சென்னை இரா. உமாபதி, விழுப்புரம் அய்யனார், மடத்துக்குளம் மோகன், மேட்டூர் சக்திவேல், காவலாண்டியூர் ஈசுவரன், சூலூர் பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கழகக் கட்டமைப்பு நிதி வரவு குறித்து நன்கொடையாளர்கள் அளித்த நிதி விவரங்களை தலைமைக் கழகச் செயலாளர் தபசி குமரன் விரிவாக எடுத்துரைத்தார். தலைமைக் கழகக் கட்டிடத்தை மறு சீரமைப்பு...

கல்வி வள்ளல் காமராசர் பிறந்தநாள் விழா சென்னை

கல்வி வள்ளல் காமராசர் பிறந்தநாள் விழா சென்னை

காமராசரின் பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை அடையாறு பெட்ரிசியன் கல்லூரியில், கல்வி வளர்ச்சி நாள் நிகழ்வில் காமராசரின் கல்வி புரட்சி என்ற தலைப்பில், திராவிடர்  விடுதலைக் கழக பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்

பொன்.இராமச்சந்திரன் ரூ.5000 நன்கொடை

பொன்.இராமச்சந்திரன் ரூ.5000 நன்கொடை

கழக ஆதரவாளர் சென்னை பொன். இராமச்சந்திரன், கழகக் கட்டமைப்பு நிதியாக தலைமைக் கழகச் செயலாளர் தபசி குமரனிடம் ரூ.5000 நிதி வழங்கினார். பெரியார் முழக்கம் 11072019 இதழ்

அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை

அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை

அரசுப் பள்ளிகளில் பதினோராம், பன்னிரெண்டாம் வகுப்புகளில் போதிய ஆசிரியர்கள் இல்லாத காரணத்தால் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் சார்பில் ஆசிரியர்களை நியமிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. அதிக எண்ணிக்கையில் மாணவர்களைக் கொண்ட பள்ளிகளில்கூட பாடத்திற்கு ஒரு ஆசிரியர் என்ற நிலை தான் தொடர்கிறது. அந்த ஒரு ஆசிரியர் பணியிடத்திற்கும் ஆசிரியர்களை நியமனம் செய்யாமல் மாணவர்கள் அவதியுறும் நிலை உள்ளது. இந்நிலையில் மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காகவும் மாணவர்கள் தேர்ச்சி விழுக்காட்டில் சரிவு ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காகவும் சில தலைமை ஆசிரியர்கள் பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகளுடன் கலந்து பேசி பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலம் தகுதியான ஆசிரியர்களை நியமனம் செய்கிறார்கள். இந்த பெற்றோர்-ஆசிரியர் கழக நியமன ஆசிரியர்கள் இல்லாமல் பள்ளிகளை நடத்த முடியாத சூழல்தான் நிலவி வருகிறது. கல்விப் பணி மட்டுமல்லாமல் நிர்வாகப் பணிகளுக்கும் ஆள் பற்றாக்குறையோடு பள்ளிகள் இயங்கி வருகிறது. அதிக மாணவர் எண்ணிக்கை கொண்ட பள்ளிகளில் நிர்வாக செயல்பாடுகளை மேற்கொள்ள...

இந்துத்துவா : ஆயிரம் ஆண்டுகாலமாக நடக்கும் சித்தாந்தப் போராட்டம்

இந்துத்துவா : ஆயிரம் ஆண்டுகாலமாக நடக்கும் சித்தாந்தப் போராட்டம்

பா.ஜ.க. மீது நாம் நடத்துவது சித்தாந்தப் போராட்டம். இது ஆயிரம் ஆண்டுகளாக நடக்கும் போராட்டம். பா.ஜ.க.வினர் மீது தனிப்பட்ட முறையில் எனக்கு கோபம் இல்லை; அவர்கள் சித்தாந்தத்தை என்னுடைய ஒவ்வொரு இரத்த அணுவும் எதிர்க்கிறது. இந்தியாவில் அனைத்து அமைப்புகளையும் ‘இந்துத்துவ’ கொள்கையால் நிறுவனப்படுத்தி முடித்து விட்டார்கள். இனி வரப்போகும் தேர்தல்கள் சடங்குகளாகவே இருக்கும். அதிகாரத்தைத் துறக்கும் மனநிலை கொண்டவர்களால்தான் இந்தத் தத்துவத்தைத் தோற்கடிக்க முடியும். – ராகுல் காந்தி டிவிட்டரிலிருந்து பெரியார் முழக்கம் 11072019 இதழ்

பார்ப்பன பயங்கரவாதி ஒப்புதல் வாக்குமூலம் தபோல்கரை பின்னாலிருந்து தலையை குறி வைத்து சுட்டேன்!

பார்ப்பன பயங்கரவாதி ஒப்புதல் வாக்குமூலம் தபோல்கரை பின்னாலிருந்து தலையை குறி வைத்து சுட்டேன்!

மகாராஷ்டிராவைச் சேர்ந்த நரேந்திர தபோல்கர், 2013ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், புனேவில் நடைப் பயிற்சி சென்ற போது சுட்டுக் கொலை செய்யப்பட்டார். அதைத்தொடர்ந்து கோவிந்த் பன்சாரே 2015ஆம் ஆண்டு பிப்ரவரியிலும், கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த எம்.எம்.கல்புர்கி 2015 ஆகஸ்டிலும் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.இவர்கள் மூவருமே இந்துத்துவா மதவெறிச் சிந்தனைக்கு எதிராக தொடர்ச்சியாக செயல்பட்டு வந்தவர்கள் ஆவார்கள். பகுத்தறிவாளர், எழுத்தாளர், பேராசிரியர் என பன்முக பரிமாணங்களைக் கொண்டவர்கள். எனினும், இப்படுகொலைகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை அடை யாளம் காண்பதில் போலீசார் திணறி வந்தனர். இந்நிலையில், கன்னட வார இதழான ‘லங்கேஷ்’ பத்திரிகை யின் ஆசிரியர் கவுரி லங்கேஷ், 2017-ஆம் ஆண்டு செப்டம்பர் 5-ஆம் தேதி, அவரது வீட்டின் முன்பாகவே சுட்டுக் கொல்லப் பட்டது, மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால், கவுரி லங்கேஷ் படு கொலை வழக்கில், பெரும் அக்கறை எடுத்துக் கொண்ட அன்றைய கர்நாடக முதல்வர் சித்தராமையா, சிறப்பு புலனாய்வுக்குழு ஒன்றை அமைத்து,...

உயர்நீதிமன்றங்களில் தமிழில் வழக்காட தடைப்படுத்துவது என்ன நியாயம்?

உயர்நீதிமன்றங்களில் தமிழில் வழக்காட தடைப்படுத்துவது என்ன நியாயம்?

1956இல் தமிழ்நாடு ஆட்சிமொழிச் சட்டம் இயற்றப்பட்டது. அதன்படி, தமிழ்நாட்டின் ஆட்சிமொழியாகத் தமிழ் இருந்தது. அப்போது தமிழார்வம் கொண்ட ஒரு நீதிபதி சிவில் வழக்கொன்றில் தமிழில் தீர்ப்பளித்தார். சென்னை உயர் நீதிமன்றம் தமிழில் தீர்ப்பு எழுதப்பட்ட ஒரே காரணத்துக்காக அத்தீர்ப்பை ரத்துசெய்தது. பின்னர், 1976இல் 4பி என்ற புதிய பிரிவு சேர்க்கப்பட்டு, கீழமை நீதிமன்றங்களிலும் தமிழ் ஆட்சிமொழியாகக் கொண்டுவரப்பட்டது. இந்த சட்டத் திருத்தத்தை எதிர்த்து ராஜஸ்தானி வழக்கறிஞர் ஒருவர் போட்ட வழக்கை, உயர் நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் அமர்வு தள்ளுபடி செய்தது (1995). அச்சட்டத்திலுள்ள விதிவிலக்கைப் பயன்படுத்தி, பல மாவட்ட நீதிபதிகள் உயர் நீதிமன்றத்திடம் அனுமதி கேட்டதன் விளைவாக தலைமை நீதிபதி சுவாமி, நீதிபதிகள் விரும்பும் மொழியில் தீர்ப்பை எழுதலாம் என்று சுற்றறிக்கை விடுத்தார். இதனால், கீழமை நீதிமன்ற நீதிபதிகள் தங்களது தீர்ப்புகளை ஆட்சிமொழியான தமிழில் எழுதுவது அநேகமாக நிறுத்தப்பட்டது. வக்கீல்களும் தாழ்வுமனப்பான்மையில் தொடர்ந்து ஆங்கிலத்திலேயே வாதாடலாயினர். இதைத்தான் 140 வருடங்களுக்கு முன்னால்...

அறிவியல் தமிழ் வளர பெரியார் காட்டிய ஆர்வம்

அறிவியல் தமிழ் வளர பெரியார் காட்டிய ஆர்வம்

கிண்டி பொறியியல் கல்லூரிக்கு முதன் முதலாக கணிப்பொறி வந்தபோது தனது 86ஆம் வயதில் கிண்டிக்குச் சென்று அது குறித்த விவரங்களைக் கேட்டு அறிந்தார் பெரியார். அன்றைய சென்னை மாநிலத்தில், மாணவர்கள் முன்னின்று நடத்திய மொழிப் போர் உச்சத்தில் இருந்த 1965ஆம் ஆண்டு, அதே ஆண்டில் நடந்த இன்னும் ஓர் அரிய நிகழ்வு பிற்காலத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தப்போகிறது எனப் பலரும் அறிந்திருக்க மாட்டார்கள். கிண்டி பொறியியல் கல்லூரி வளாகத்தில் அமைந் திருந்த அடிப்படைப் பொறியியல் ஆய்வு மையத் துக்கு ஓர் புதுமையான கருவி வந்து இறங்கியது. ஐபிஎம் 1620 வகை கணினி அது. இந்தியாவில் முதன் முதலில் கணினியின் பயன்பாடு தொடங்கப்பட்டது, வடக்கே கான்பூர் ஐஐடியிலும் தெற்கே கிண்டி பொறியியல் கல்லூரியிலும்தான். அக்கணினி மையத்தின் இயக்குநராக வா.செ.குழந்தைசாமி, போர்ட்ரான் முதலான கணினி நிரல்மொழிகளைப் பயிற்றுவித்து வந்தார். ஐபிஎம் 1620 வகை கணினியில் தகவலை ‘பஞ்ச் கார்ட்’ எனப்படும் துளை யிடப்பட்ட அட்டைகள்...

மருத்துவக் கல்வி: மறுக்கப்படும்  27 சதவீத இடஒதுக்கீடு

மருத்துவக் கல்வி: மறுக்கப்படும் 27 சதவீத இடஒதுக்கீடு

மருத்துவப் பட்டப் படிப்பு, மேல் பட்டப் படிப்புகளுக்கான இடங்களில் ‘அகிலஇந்திய கோட்டா’ என்ற பிரிவில் நடுவண் ஆட்சி இடங்களைப் பறித்துக் கொள்கிறது. மருத்துவப் படிப்புக்கான இடங்களில் 15 சதவீதமும் மேல்பட்டப் படிப்புக்கான இடங்களில் 50 சதவீதமும் இவ்வாறு பறிக்கப்படுகின்றன. இந்த இடங்களுக்கு பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடுகள், கடந்த பத்து ஆண்டுகளாக மறுக்கப்படுகின்றன. பட்டியல் இனப்பிரிவினருக்கான இடஒதுக்கீடுகள் வழங்கும்போது பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு உரிமைகளை மறுக்கக் கூடாது என்று சமூக நீதி மருத்துவர் சங்கத்துக்கான பொதுச் செயலாளர் டாக்டர் இரவீந்திரநாத், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந் துள்ளார். மத்திய கல்வி நிறுவனங்களுக்கான சட்டத்தில் இடம் பெற்றுள்ள சில பிரிவுகளைக் காட்டி இந்த உரிமைகள் மறுக்கப்படுகின்றன. அந்த சட்டப் பிரிவுகள் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு வழங்க தடை செய்யவில்லை என்று வழக்கு  மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. பெரியார் முழக்கம் 11072019 இதழ்

ஈழத் தமிழர் ஏதிலிகள் முகாமில் படித்தும் வேலை வாய்ப்பு மறுக்கப்படும் இளைஞர்கள்

ஈழத் தமிழர் ஏதிலிகள் முகாமில் படித்தும் வேலை வாய்ப்பு மறுக்கப்படும் இளைஞர்கள்

அண்மையில் மதுரை உயர்நீதிமன்ற கிளை 65 ஈழத் தமிழ் அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை வழங்குவது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. ஈழத்தில் போர் முடிந்து 10 ஆண்டுகள் ஆன பிறகும் தங்களின் தாயகத்தை உறுதி செய்யாமல் நாடற்ற மக்களாக வாழ்கிறார்கள், ஈழத் தமிழர்கள். 1983ஆம் ஆண்டிலிருந்து 2012ஆம் ஆண்டு வரை அகதிகளாகத் தமிழகம் வந்தவர்கள் 95,000 பேர். இவர்களில் 60,000 பேர் மாநில அரசு நடத்தும் 107 அகதிகள் முகாம்களில் இருக்கிறார்கள். மாநில அரசு நடத்தும் இந்த முகாம்களுக்கு கணிசமான நிதி உதவியை மத்திய அரசு வழங்குகிறது. ஏனையோர் முகாம்களில் அல்லாமல் தங்கள் சொந்த செலவிலேயே தனியாக வாடகைக்கு வீடு எடுத்து வாழ்கிறார்கள். உள்ளூர் காவல் நிலையங்களில் அவ்வப்போது அவர்கள் தங்களைப் பற்றிய தகவல்களைத் தர வேண்டும். தமிழ்நாட்டிலிருந்து பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் தோட்டத் தொழிலாளர் களாக அழைத்துச் செல்லப்பட்ட பலர் தமிழ் ஈழப் பகுதிகளிலேயே தங்கி விட்டனர். 1983ஆம்...

வைகோவுக்கு இராஜ துரோகி முத்திரைக் குத்தும் 124(ஏ) ஒழியட்டும்!

வைகோவுக்கு இராஜ துரோகி முத்திரைக் குத்தும் 124(ஏ) ஒழியட்டும்!

‘வைகோ’ இராஜதுரோகி என்று குற்றம்சாட்டியிருக்கிறது சென்னை சிறப்பு நீதிமன்றம். ஈழத் தமிழர் பிரச்சினையில் மன்மோகன் சிங் ஆட்சி செய்த துரோகங்களை அவ்வப்போது கடிதங்களாக எழுதி, பிறகு அதைத் தொகுத்து ‘ஐ யஉஉரளந’ என்ற தலைப்பில் நூலாக வெளியிட்டார். அதையே தமிழில் மொழி பெயர்த்து, ‘நான் குற்றம் சாட்டுகிறேன்’ என்ற நூல் வெளி யீட்டு விழா, சென்னை இராணி சீதை அரங்கில் நடந்தது (அந்த விழாவில் விடுதலை இராசேந்திரன் பங்கேற்றார்). அப்போது ஈழத் தமிழருக்கு இந்திய அரசு தொடர்ந்து செய்து வரும் துரோகங்களால் இந்தியாவின் இறையாண்மைக்கே கேடு ஏற்பட்டு விடும் என்று எச்சரித்தார். அந்தப் பேச்சு இந்திய தண்டனைச் சட்டம் 124(ஏ)வுக்கு எதிரான இராஜ துரோகம் என்று அன்றைய தி.மு.க. ஆட்சி வழக்கு தொடர்ந் தது. வழக்கில் ‘ஆம் இராஜ துரோகம் தான்’ என்று சென்னை சிறப்பு நீதிமன்றம் உறுதி செய்து, ஓராண்டு சிறை, ரூ. 10,000 அபராதம் விதித்துள்ளது. ‘ஈழத் தமிழருக்கு, ...

நடுவண் பட்ஜெட்: தமிழக முதல்வர் கோரிக்கைகளை ஏற்கவில்லை

நடுவண் பட்ஜெட்: தமிழக முதல்வர் கோரிக்கைகளை ஏற்கவில்லை

நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் சமர்ப்பித்த நிதி நிலை அறிக்கையில் தமிழக முதல்வர் முன் வைத்த கோரிக்கைகள் ஏதும் இடம் பெறவில்லை. ஆனால் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, நிதிநிலையைப் பாராட்டி மகிழ்கிறார். நிதிநிலை அறிக்கைத் தயாரிப்புக்கான ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக முதல்வர், துணை முதல்வர் இருவரும் தமிழகத்துக்காக ஏராளமான கோரிக்கைகளை முன் வைத்தனர். கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடிசைகளை அகற்றி இயற்கைச் சீற்றங்களை எதிர்கொள்ளும் கட்டமைப்புகளுடன் கூடிய வீடுகளைக் கட்ட கூடுதலாக ரூ.6000 கோடியை ஒதுக்க தமிழக முதல்வர் கேட்டுக் கொண்டார். (பிரதான் மந்திரி அவாஸ் – யோஜனா – கிராமின் என்ற திட்டத்தின்கீழ்) ஆனால் நிதி ஒதுக்கப்படவில்லை. இயற்கைப் பேரிடர்கள் நிகழும் இடங்களில் அந்தப் பேரழிவுகளின் நேரடித் தாக்குதலிலிருந்து விடுவிக்க “பேரிடர் தடுப்பு பல்நோக்கு மின் மய்யக் கட்டமைப்பு” (ஆரடவi-hயணயசன-சநளளைவயவே யீடிறநச வசயளேஅளைளiடிn iகேசயளவசரஉவரசந) அமைக்க, நிதி நிலை அறிக்கையில் ரூ.7077 கோடி நிதி ஒதுக்கீடு செய்யக் கோரி...

அன்று வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை எதிர்த்தவர்கள் இன்று அமுல்படுத்துகிறார்கள் பெரியார் வெற்றி நடைபோடுகிறார்

அன்று வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை எதிர்த்தவர்கள் இன்று அமுல்படுத்துகிறார்கள் பெரியார் வெற்றி நடைபோடுகிறார்

வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை எதிர்த்த பார்ப்பனர்கள், ‘சங்கிகள்’ இப்போது மகாராஷ்டிராவில் அதைப் பின்பற்றுகிறார்கள். வேத மதத்தை ‘பிராமணரல்லாத’ வெகு மக்கள் மீது ‘இந்து’ மதம் என்ற போர்வைக்குள் பதுங்கிக் கொண்டு திணித்த பார்ப்பனர்கள் பெரும்பான்மை மக்களை ‘சூத்திரர்’, ‘பஞ்சமர்’ களாக்கியதோடு  ஜாதிக் குழுக்களையும் உருவாக்கி மக்கள் ஒற்றுமையை சிதைத்தனர். குலத் தொழில் அடிமைத் தொழில் பிறப்பின் அடிப்படையில் திணிக்கப் பட்டது. குல தர்மப்படி வேதம் படிக்க வேண்டிய பார்ப் பனர்கள் மட்டும் வழக்கறிஞர்களாக மருத்துவர் களாக நீதிபதிகளாக உயர் அதிகாரிகளாகி பிரிட்டிஷ் ஆட்சி காலத்திலேயே அதிகார மய்யங்களை ஆக்கிரமித்துக் கொண்டதோடு ஒடுக்கப்பட்ட பெரும்பான்மை ‘இந்து’க்களுக்கு உரிமைகளைத் தடுத்து வந்தனர். அக்காலக் கட்டத்தில்தான், ‘இந்து’ சமூகத்தில் அடக்கப் பட்ட ஒடுக்கப்பட்ட பார்ப்பனரல்லாத பெரும் பான்மை சமூகத்தினருக்கு கல்வி – வேலை -அரசியல் உரிமை களுக்காகப் பெரியார் வகுப்பு வாரி பிரதிநிதித்துவம் கேட்டு போர்க்கொடி உயர்த்தினார். “அப்போது பெரியார் ஜாதிப் பிரிவினையைத் தூண்டுகிறார்; இந்த கோரிக்கை...

வாசகர்களிடமிருந்து…

‘செம்மொழித் தமிழ் மீது நஞ்சு கக்கும் நாகசாமி’ தலைப்பில் வெளி வந்த இரண்டு தொடர்களும் நாகசாமிக்கு மறுப்பு என்பதையும் தாண்டி மொழியியல் குறித்த சிறப்பான தகவல்களைக் கொண்டிருந்தன. ‘மனு நீதிக்கும் திருக்குறளுக்கும்’ உள்ள வேறுபாட்டை நாவலர் நெடுஞ்செழியன் நூல்களிலிருந்து ஓ. சுந்தரம் எடுத்துக் காட்டியிருப்பது சிறப்பு. ‘பிராமி’ எனும் பண்டைய எழுத்து வடிவ முறையை ‘பிராமணர்கள்’ தான் கண்டுபிடித்தார்கள் என்றால், தங்கள் வேத மொழியான சமஸ்கிருதத்துக்கு, ஏன் தனியாக எழுத்து வடிவத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்ற கேள்விக்கு பார்ப்பனர்கள் என்ன பதிலைக் கூறுவார்கள்? – மலர்விழி, மஞ்சக்குப்பம் மருத்துவமனையிலிருந்து பெரியார் பொதுக் கூட்டம் பேசச் சென்ற நிகழ்வை அவரது உதவியாளர் புலவர் இமயவரம்பன் பதிவு செய்திருந்ததைப் படித்தேன். இப்படியும் ஒரு தலைவரைப் பெற்றிருந்தோமே என்ற பெருமித உணர்வுதான் மேலிட்டது. பார்ப்பனர்களை எதிர்த்த போராட்டத்தில் பெரியார் வெற்றி பெற்றதற்கு அவர் பொது வாழ்க்கையில் உறுதியாகப் பின்பற்றிய நேர்மை, பொது ஒழுக்கம், ஒளிவு மறைவு...

அயோத்தி இராமன் கோயில் – பாபர் மசூதி – வரலாறுகள் கூறுவது என்ன? கே.என். பணிக்கர்

மோடி மீண்டும் பிரதமரானதைத் தொடர்ந்து அயோத்தியில் ‘இராமன்’ கோயில் கட்டும் வேலைகளைத் தொடங்க இருக்கிறார்கள். முதற்கட்டமாக தேர்தல் முடிவுக்குப் பிறகு உ.பி. முதல்வர் ஆதித்யநாத், அயோத்தியில் இராமன் சிலையை நிறுவியிருக்கிறார். அயோத்தியில் இராமன் கோயிலை இடித்துவிட்டுத்தான் பாப்ரி மசூதி கட்டப்பட்டதா? இராமாயணத்தில் கூறப்படும் அயோத்தி இந்த அயோத்தி தானா? என்பது குறித்து அடுக்கடுக்கான வரலாற்றுச் சான்றுகள் வழியாகக் கேள்விகள் எழுந்து நிற்கின்றன. அயோத்தி, இராமன் பிறந்த இடம் தானா? இந்தக் கேள்வி இது தொடர்பான வேறொன்றையும் எழுப்புகிறது. இன்றைய அயோத்தி இராமாயணத்தில் குறிப்பிடப்படும் அயோத்திதானா? இராமனுடைய கதை நிகழ்ச்சிகள் ஆரம்பத்தில் ‘ராமகதா’வில் சொல்லப்பட்டன. இந்த ‘இராம கதா’ இப்போது நமக்குக் கிடைக்கவில்லை. இந்த இராமனின் கதை நிகழ்ச்சிகளை பின்னாளில் ‘இராமாயணம்’ என்ற பெயரில் மிக நீண்ட இதிகாசமாக வால்மீகி எழுதினார். இது முழுவதும் கவிதைகளாக, செய்யுள்களாக இருந்தது. இதனாலேயே இதில் கூறப்பட்ட பாத்திரங்கள், இடங்கள் உள்பட பெரும்பாலானவை கற்பனையாக இருக்கக் கூடும்....

அண்ணாவின் பகுத்தறிவு சிறுகதை “கருப்பண்ணசாமி யோசிக்கிறார்”

புனிதங்களை ‘பகடி’களால் கட்டுடைத்த திராவிட இலக்கியம் குறித்து பேராசிரியர் ராஜ் கவுதமன் கட்டுரை ஒன்று இந்த இதழில் இடம் பெற்றிருக்கிறது. அந்தப் பகடி வரிசையில் அண்ணா – 1951இல் எழுதிய சிறுகதை இது. இந்த சம்பவங்கள் இப்போதும் நாட்டின் நிகழ்வுகளாக தொடர்வதை இக்கதையைப் படிக்கும் வாசகர்கள் உணர முடியும். மணி ஒலித்தது. கதவு திறக்கும் சத்தம் கேட்டது. கருப்பண்ணசாமி அலறிய படி உள்ளே ஓடலானார். ஒளிந்து கொள்ள இடம் தேடினார். `களுக்’கென ஒரு சிரிப்பொலி கேட்டது. கருப்பண்ணசாமி கோபம் கொண்டு “வேதனைப் படுகிறேன் நான், இந்த வேளையில் கேலி வேறு செய்கிறாயா?” என்று கேட்டார் சிரித்தபடி, தன் எதிரே வந்த தேவியைப் பார்த்து. “கருப்பண்ணா, என்ன கலக்கம்? ஏன் ஓடுகிறாய்?” என்று தேவி கேட்க, கருப்பண்ணசாமி “காதிலே விழவில்லையா, மணி சத்தம்” என்று கேட்டார். “விழுந்தது. அது கேட்டு அச்சம் ஏன் வர வேண்டும்? ஆச்சர்யமாக இருக்கிறதே!” என்று தேவி கேட்டார்....

பெரியார் மண்ணா? ஆழ்வார்கள் மண்ணா?  – பழனி சோ. முத்து மாணிக்கம்

பெரியார் மண்ணா? ஆழ்வார்கள் மண்ணா? – பழனி சோ. முத்து மாணிக்கம்

‘தமிழ்நாடு பெரியார் மண்’ என்ற குரல் ஒலிக்கும் போதெல்லாம் – ‘இல்லை; இது ஆழ்வார்கள், நாயன்மார்கள் பூமி’ என்று எதிர்க்குரல், இந்து முன்னணிகளிடமிருந்து கேட்கிறது. ஆழ்வார்களும் நாயன்மார்களும் மனிதகுல விடுதலைக்கு என்ன செய்தார்கள்? என்ற கேள்வியை எழுப்புகிறது, கட்டுரை. தொலைக்காட்சி ஒன்றில் அனல் தெறிக்க அறிஞர்களின் விவாதம் அரங்கேறிக் கொண்டிருந்தது. நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளைப் பற்றிப் பேசும்போது ஒருவர், ‘இது பெரியார் மண்; எனவே மதவாதக் கட்சிகளுக்கு இடமில்லை என்று  மக்கள் தீர்ப்பளித்துள்ளார்கள்’ என்றார். உடனே மதவாத கட்சியை ஆதரிக்கும் நண்பர் வெகுண்டெழுந்தார். ‘இது பெரியார் மண் அல்ல; இது ஆழ்வார்களும் நாயன்மார்களும் ஆண்டாளும் தோன்றிய மண்’ என்று உரக்கக் குரல் கொடுத்தார். இருவர் சொல்வதிலும் உண்மை இருக்கிறதே எனத் தோன்றுகிறது அல்லவா? எப்பொருள் எத்தன்மை உடையதாக இருந்தாலும், யார்யார்வாய்க் கேட்பினும், ஆய்ந்து முடிவெடுப்பதே சிறந்தது. இது பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று சமனியம் பேசிய  திருவள்ளுவர் தோன்றிய...

மூவலூர் இராமாமிர்தம் தேவதாசி இழிவுக்கு எதிராகக் களம் கண்ட போராளி – க. திருநாவுக்கரசு

1925இல் அன்றைய மாயவரத்தில் (இன்றைய மயிலாடுதுறை) முதல் தேவதாசி ஒழிப்பு மாநாட்டைக் கூட்டியவர் இராமாமிர்தம்  அம்மையார். பெரியார் – திரு.வி.க. உள்ளிட்ட தலைவர்கள் அதில் பங்கேற்றனர். இராமாமிர்தம் அம்மையாரின் பொதுத் தொண்டு காங்கிரஸ், நீதிக்கட்சி, சுமயரியாதை இயக்கம், திராவிடர் கழகம், தி.மு.கழகம் ஆகிய அமைப்புகளின் மூலம் நிகழ்ந்தன. காங்கிரசில் அம்மையார் இருந்த போதே 1925இல் மயிலாடு துறையில் இசை வேளாளர் மாநாட்டினைப் பொறுப்பேற்று நடத்தியிருக்கிறார். இம்மாநாட்டிற்குப் பிறகுதான் காங்கிரசின் ‘புகழ்’ பெற்ற காஞ்சிபுரம் மாநாடு நடைபெறு கிறது. இவ்வம்மையாரின் செயற்பாடுகளைக் கவனிக்கிறபோது, தேவதாசி ஒழிப்புச் சட்டத்திற்கு டாக்டர் முத்துலட்சமி ரெட்டிக்கு இவர்தான் முன்மாதிரியாகத் தோன்றி இருக்கிறார். அவரது மயிலாடுதுறை மாநாடுதான் அதற்கு அடிப்படையாக அமைந்திருக்கிறது. காங்கிரஸ் காலத்திலேயே இவ்வம்மையார் தந்தை பெரியார் பக்கம் நின்று பணியாற்றுவதில்தான் பெருவிருப்பம் கொண்டவராக இருந்திருக்கிறார். 1925இல் வகுப்புவாரித் தீர்மானம் காஞ்சிபுரம் மாநாட்டில் தோற்றுப் போகவே பெரியாரோடு வெளியேறிய முக்கியமானவர்களில் இராமாமிர்தம் அம்மையாரும் ஒருவர். மயிலாடுதுறையில் கூட்டிய...

வரலாற்றின் வரலாறு

1350 கோடி ஆண்டுகளுக்கு முன்பு     பிரபஞ்சத்தில் பருப்பொருளும் ஆற்றலும் தோன்றுகின்றன. இயற்பியல் பிறக்கிறது. அணுக்களும் மூலக்கூறுகளும் தோன்றுகின்றன, வேதியியல் பிறக்கிறது. 450 கோடி ஆண்டுகளுக்கு முன்பு பூமி உருவாகிறது. 380 கோடி ஆண்டுகளுக்கு முன்பு உயிரினங்கள் தோன்றுகின்றன. உயிரியல் பிறக்கிறது. 60 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு ஹோமோ பேரினத்திற்கும் சிம்பன்சிகளுக்கும் பொதுவான மூதாதையர் தோன்றுகின்றனர். 25 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்காவில் ஹோமோ பேரினம் தோன்றுகிறது. முதன்முதலாகக் கற்கருவிகள் உருவாக்கப்படுகின்றன. 20 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு ஹோமோ பேரினம் ஆப்பிரிக்காவிலிருந்து யுரேசியாவிற்குப் பரவுகிறது. பல்வேறு மனித இனங்கள் உருவாகின்றனர். 5 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு நியாண்டர்தால் இனத்தினர் ஐரோப்பாவிலும் மத்தியக் கிழக்கிலும் தோன்றுகின்றனர். 3 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு நெருப்பின் அன்றாடப் பயன்பாடு நடைமுறைக்கு வருகிறது. 2 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு ஹோமோ சேப்பியன்ஸ் இனம் கிழக்கு ஆப்பிரிக்காவில் தோன்றுகிறது. 70,000 ஆண்டுகளுக்கு முன்பு    அறிவுப் புரட்சி மலர்கிறது. மொழி கண்டுபிடிக்கப்படுகிறது....

‘புனிதங்’களை பகடிகளால் தகர்த்த திராவிட இலக்கியங்கள்

பார்ப்பனியத்தையும் வைதீக இந்து மதத்தையும் அதன் வருணாசிரமத்தையும் பகடி மூலம் தலைகீழாக்கிய பெரியாரின் சொல்லாடலில் தவிர்க்க முடியாதபடி, பெண்ணியத்துக்கும், தலித்தியத் துக்குமான கூறுகள் இடம்பெற்றுள்ளன. மிகவும் பவித்திரமானவற்றுக்கு எதிரானது சிரிப்பு என்பார் பக்தின். ரொம்பவும் சீரியஸானது, பவித்திரமானது என்று உயர்த்திப் பிடிக்கிற பண்பாட்டில் அச்சம், மடமை, பலவீனம், ஒடுக்குமுறை, பொய், கபடம், வன்முறை, எச்சரிக்கை, தணிக்கை, தடை, அச்சுறுத்தல் ஆகிய அம்சங்கள் உள்ளூற உறைந்திருக்கும். இவை அதிகாரத்தைக் கட்டமைப்பவை. இவை கபட வேஷ முகமூடியை அணிந்திருக்கும் என்பார் பக்தின். இந்த முகமூடியைக் கிழித்துவிடும் ஆற்றல் கொண்டவை: சிரிப்பு, வசை, முட்டாள்தனம், இங்கிதமின்மை, கேலி, கிண்டல், பகடி. இவற்றால் கும்மாளமிடுகிற சிரிப்பு, ஒருக்காலும் மக்களை ஒடுக்காது; குருடாக்காது. இந்தச் சிரிப்புதான், என்றைக்கும் மக்களின் கைகளில் ஒரு சுதந்திரமான ஆயுதமாக இருக்கும். அதிகாரபூர்வமான, பவித்திரமான, புனிதமான, ‘சீரியஸான’ பண்பாட்டால் விலக்க, பழிக்க, ஒடுக்கப்பட்ட மக்கள் தொகுதியின் சிரிப்பு, அவர்களைப் புறவயமான தணிக்கையிலிருந்து மட்டுமின்றி, அதற்கு...

இஸ்லாம் அறிவியல் மதமா? (2) சூரியனைச் சுருட்ட முடியுமா?

அறிவியல் மதம் என்ற உரிமைக்கு எந்த மதமும் சொந்தம் கொண்டாட முடியாது. இஸ்லாம் மதத்தில் அறிவியலுக்கு எதிரான கருத்துகளை அலசுகிறது கட்டுரை. – கடந்த இதழின் தொடர்ச்சி சூரியனை சுருட்டமுடியுமா? குர்ஆனில் சூரியனைப்பற்றி வருகிறது. இதைப்பற்றி ஆடியோ புகழ் பி.ஜே அவர்கள் குர்ஆன் வசனங் களை எடுத்து, “இஸ்லாத்தில் அறிவியல்” என்ற புத்தகத்தை வெளியிட்டிருந்தார். குர்ஆன் வசனங்களைப் போட்டு நியாயப்படுத்தி யிருந்தார். அதில் சூரியனைச் சுருட்டுவது என்ற வசனம் குர்ஆனில் வருகிறது. சூரியனை எப்படி சுருட்டுவது? அது உவமானமாகக்கூட இருக்கலாம். ஆனால் இவர்கள் அதை நியாயப் படுத்த சுருட்டலாம் என்று சொல்கிறார்கள். கோள வடிவில் உள்ளதை எப்படி சுருட்ட முடியும்? உவமானமாக சொன்னதை திசை திருப்புவதுதான் இது போன்ற செயல்கள் அனைத்தும். காலநிலை மாற்றங்கள் நரகத்தின் பெருமூச்சா? உலகத்தில் காலநிலைகள் எப்படி மாறுபடு கிறது என்று ஹதீசில் விடை கிடைக்கும். ஹதீஸ்: 1088 அபுஹுரையார் கூறியதாவது: அல்லாவின் தூதர் அவர்கள் கூறியது...

பெரியார் தமிழுக்கு எதிரானவரா? பாவலரேறு பெருஞ்சித்திரனார்

பெரியார் தமிழ்மொழி எதிர்ப்பாளர் என்றும் தமிழைக் காட்டுமிராண்டி மொழியாகக் கூறியவர் என்றும் சமஸ்கிருதத்தை உயர்த்திப் பிடிக்கும் பார்ப்பனர்களும், சில தமிழ்த் தேசியத் தலைவர்களும் ஒரே குரலில் பேசி வருகிறார்கள். மிகச் சிறந்த தமிழறிஞர் பாவலேறு பெருஞ்சித்திரனார் இந்த அவதூறுகளை மறுத்து ஆற்றிய உரை இது. தந்தைப் பெரியார் ஒரு முழுப் பகுத்தறிவாளர். குமுகாயச் சீர்சிருத்தக்காரர். பழமை உணர்வு களையும் கொள்கைகளையும் அறிவியல் கண்ணோட்டத்தோடு ஆராய்ந்து, அவற்றைத் தவறு சரியென்று தேர்ந்து, நன்மை தீமைகளை மக்களுக்கு எடுத்துச் சொல்லும் மக்கள் அறிவியலாளர். புதுமை விரும்பி. எனவே, தமிழ் மொழியையும் அவர் அறிவியல் கண்ணோட்டத்துடன் தான் அணுகினார். அது ஒரு பழைமையான மொழி என்பதற்காகவோ, சிறந்த இலக்கண இலக்கியச் செழுமை வாய்ந்தது என்பதற்காகவோ, அவர் அதைப் பாராட்டவில்லை. அதில் உள்ள பாட்டு இலக்கியங்களையும், கதை இலக்கியங்களையும், வேறு சில கூறு களையும் மக்கள் மனநலன் அறிவுநலன் இவற்றுக்குப் பயன் தரும் வகையில் ஆராய்ந்தார். அவற்றிலுள்ள...

எந்த சங்ககாலப் புலவர்களின் பெயருக்குப் பின்னாலும் ஜாதி கிடையாது புலவர் செந்தலை கவுதமன்

நம்முடைய மரபு, செய்த தொழிலின் காரணமாக வந்த குடி மரபு! அந்தக் குடி இனக் குழுவானது, குல மானது. அதை இலக்கணப்படுத்தி வரையறுத்தபோது அது தான் திணை அமைப்பு. அந்த திணைக்குள்ளே நிலம் வரும், மக்கள் வருவார்கள். வாழ்க்கை முறையும் வரும். அந்த திணை வழி அமைப்பைத் தான் பிற் காலத்தில் ஜாதி ஆக்கி விட்டார்கள். இந்த அரங்கத்தில் இருக்கின்றவர்களையெல்லாம் மத ரீதியாக அமருங்கள் என்று சொன்னால் ஒரு மூன்று அல்லது நான்கு பிரிவுகளாகப் பிரிக்க வேண்டும். ஜாதி ரீதியாக அமருங்கள் என்று சொன்னால் ஒரு நாற்பதுப் பிரிவுகளாக பிரிக்க வேண்டும். அனைவரும் தமிழர்களாக அமருங்கள் என்றால்! உட்கார்ந்துதான் இருக்கிறோம். தமிழ் நம்மை இணைக்கும்! ஜாதி நம்மைப் பிரிக்கும்! மதம் நம்மைப் பிளக்கும்! ஏன் நமக்கு இந்த இழிநிலை என்று எண்ணுவதற்கும், இப்படித்தான் இருந்தோமா என்று எண்ணுவதற்கும் தான் இப்படி ஒரு தலைப்பை வழங்கியிருக்கிறார்கள். சங்க இலக்கியத்தில் சொல்லப்பட்ட எந்த புலவனுக்கும்,...

இந்து தேசியத்தை எதிர்கொள்வது எப்படி? விவாதங்கள் தொடங்கட்டும்!

இந்தியா இந்துக்களுக்கான தேசம் என்ற பெருமிதத்தோடு அதன் “பெருமைமிகு” பாரம்பர்யத்தை மீட்டெடுப்பதை அரசியல் முழக்கத்துடன் இணைப்பதே பா.ஜ.க. – சங்பரிவாரங்களின் அரசியலுக்கான அடித்தளம். அந்தக் கற்பிதங்களை உணர்வுகளாக்கி வாக்குகளாக மாற்றுவதில் அவர்கள் வெற்றி பெற்றிருக்கிறார்கள். தேசப் பெருமையோடு தேசத்தின் பாதுகாப்பையும் சாதுர்யமாக பிணைத்துக் கொண்டுதான் பார்ப்பனியமும் தன்னைத் தொடர்ந்து ஆதிக்க சக்தியாகத் தக்க வைத்துக் கொண்டிருக்கிறது. ‘மனுசாஸ்திரம் வர்ணாஸ்ரமம்’ என்ற நஞ்சு – இந்த தேசக் கட்டமைப்புக்குள் எவரும் அடையாளம் கண்டு கொள்ளாமல் பதுங்கி நிற்கிறது. பார்ப்பன கொடுங்கோன்மைக்கும் அதன் சமூக அரசியல் ஆதிக்கத்துக்கும் எதிராகப் போராடிய பெரியார், தேசிய எதிர்ப்பையும் அதில் ஏன் இணைத்தார் என்ற வரலாற்று உண்மை – இப்போது புரிந்திருக்கும்.  சமூக ஆய்வாளர்கள் பலரும் இப்போது இது குறித்து வெளிப்படையாக எழுதத் தொடங்கியிருப்பதையும் சுட்டிக்காட்ட வேண்டும். “தேசியம் என்பது பித்தலாட்டம்; வடமொழியை நுழைத்து, அதன் மூலம் வருணாசிரமத்தை நுழைத்து பெருமைமிக்க திராவிட மக்களைச் சூத்திரர்களாக்கி என்றென்றும் அடிமைகளாக...

‘அன்னவர்கள்’

‘அன்னவர்கள்’

வாழி! வாழி!! பாவலர் தமிழேந்தி நரியார்கள், ‘புரி’யார்கள், நல்லனவே தெரியார்கள் நம்பும் வண்ணம் திரிபான ஒருகருத்தை – திராவிடத்தில் குறைகாணும் கருத்தை, உண்மை புரியாத சிலபேர்கள் பொழுதெல்லாம் உரைக்கின்றார்; பொதுவாய் யாவும் பெரியார்தான் கெடுத்தாராம்; பெருமையெலாம் சிதைத்தாராம் பிதற்று கின்றார். ‘மொழிப்போரில் பெரியார்க்கு முற்றாகப் பங்கில்லை’ என்றுஅ வர்பேர் கழிக்கின்றார்; தமிழினத்தைக் கருவறுத்த கன்னடரே அவர்தான் என்று பழிக்கின்றார்; பகுத்தறிவுக் கனிதந்த பயன்மரத்தின் வேரைத் தோண்டி அழிக்கின்றார்; ஒவ்வொன்றாய்க் குற்றங்கள் அவர்மீதில் அடுக்கு கின்றார். ‘தமிழகமா? திராவிடமா?’ சொல்லாய்வுச் சண்டைஅவர் அறியார்; இங்கே நமதுழைப்பை உறிஞ்சுகிற நால்வருணச் சாதிமுறை ஒழித்தல் ஒன்றே தமதுபணி என்றெடுத்தார்; சலியாமல் போர்தொடுத்தார்; தன்மானத்தைச் சுமந்தபடி முதுகொடியச் சூத்திரர்க்கும் பஞ்சமர்க்கும் தொண்டு செய்தார். அடுக்குமொழித் தமிழறியார்; அகம்புறமா ஒன்றறியார்; ஆனால் சாதி அடுக்குமுறைக் கருத்தியலின் இலக்கியங்கள் ஆதரியார்! என்ற போதும் கெடுக்கவந்த வடமொழியை இந்தியினை எதிர்த்திட்ட கிளர்ச்சிப் போரில் நடுப்பரணாய் நின்றவர்யார்? தனிச்சிறையில் நொந்தவர் யார்? மறத்தல்...

காதலில், கவனம் தேவை பத்மா

உங்கள் மகளுக்கு இப்படி வன்கொடுமையோ பாலியல் தொல்லையோ நிகழ்ந்திருந்தால், அதை அவள் உங்களோடு பகிரத் துணிந்தால்,  எந்தவிதமான குற்றம்சாட்டுதலும் இல்லாமல் அவளுக்குத் துணை நில்லுங்கள். பொள்ளாச்சி சம்பவத்திலிருந்து நாம் பல பாடங்களைக்  கற்க வேண்டியுள்ளது. நாம் ஏன் ஆண்களையும் பெண்களையும் வெவ்வேறு விதமாக வளர்க்கிறோம்? பெண்களைத் தைரியம் இல்லாதவர் களாகவும் ஆண்களைக் கோளாறு நிறைந்தவர் களாகவும் வளர்க்கிறோம். பாதிக்கப்பட்ட பெண்களின் பெற்றோர்கள் அடையாளத்தை மறைத்து நிற்கிறார்கள்.  பாதிப்பைத் தந்த பையனின் தாயோ வீராவேசமாக  வாதாடுகிறார். பெண்ணை மட்டுமே அவமான உணர்வோடு வளர்க்க வில்லை. பெண்ணைப்  பெற்றதாலேயே அவமானப் பட்டு நிற்க  நினைக்கிறோம்.  ஏன் சமூகம் இப்படி இரண்டு மதிப்பீடுகளோடு தொடர்ந்து இயங்கி வருகிறது? ஏழு வருடங்களாக எத்தனையோ பெண்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். ஓரிருவர் புகார் அளித்ததாகச் சொல்லப்பட்டிருக்கிறது. மற்றவர்கள் மௌனம் காத்து நிற்கிறார்கள். ஒரு பெண்ணுக்குக் குடும்பம் ஆதரவாக நிற்க, அவர்கள் காவல் நிலையத்தை அணுகியிருக் கிறார்கள். இப்போதுதான் நமக்குப் பிரச்சினையின் “பூதாகாரம்”...

லெமூரியா (குமரிக் கண்டம்) என்பது ஒரு கற்பனை நக்கீரன்

சார்லஸ் ராபர்ட் டார்வின் (Charles Robert Darwin – 1809-1882) என்பவர் ஓர் ஆங்கிலேய இயற்கையியல் அறிஞர் ஆவர். இவர் முன்வைத்த உயிரினங்களின் படிமலர்ச்சிக்  கோட்பாடு (Theory of Evolution) அதுவரை நம்பி வந்த  படைப்புப் பற்றிய கோட்பாட்டைப் புரட்டிப் போட்டது. படிமலர்ச்சிக் கோட்பாடு என்பது ஓர் அடிப்படையான புரட்சிகரமான அறிவியற் கொள்கை ஆகும். டார்வின்  தாம் கண்டுபிடித்த உண்மைகளையும், கோட்பாடுகளையும், 1859 ஆம் ஆண்டில் உயிரினங்களின் தோற்றம் (The Origin of Species) என்னும் தலைப்பில் ஒரு நூலாக வெளியிட்டார்.  இவர் கடல் வழியே, எச்எம்எஸ் பீகிள் (HMS Beagle) என்னும் கப்பலில், உலகில் பல இடங்களுக்கும் சென்று, குறிப்பாக காலபாகசுத் தீவுகளுக்குச் சென்று நிகழ்த்திய உயிரினங்கள் பற்றி ஆராய்ந்தார். படிமலர்ச்சிக் கருதுகோள் (Theory of Evolution) நீர்வாழ்வன, நிலத்தில் ஊர்வன, மேலே பறப்பன போன்ற உயிரினங்கள் தாமாகவே தோன்றின, அவை இன்றுள்ளது போல யாராலும் படைக்கப் படவில்லை என்பதை...

மருத்துவமனை சிகிச்சையிலிருந்து கூட்டம் பேசச் சென்ற பெரியார் புலவர் கோ.இமயவரம்பன்

ஒப்புக் கொண்ட கூட்டத்துக்குச் சென்றாக வேண்டும் என்ற கடமை உணர்வும் சமுதாயக் கவலையும் கொண்ட தலைவராகப் பெரியார் வாழ்ந்தார்.   பெரியார் அவர்கள் சென்னையில் ஒரு தடவை கடுமையான வயிற்றுப் போக்கினால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டார்கள். அந்த காலத்தில்  பெரியார் அவர்களுக்கு வழக்கமாக சிகிச்சை அளித்து வந்தவரான பிரபல நிபுணர் டாக்டர் குருசாமி முதலியார் அவர்கள் அழைக்கப்பட்டார். டாக்டர் குருசாமி முதலியார் அவர்கள் பெரியார்பால் பெரும் மதிப்பும் மரியாதையும் கொண்டவர். மேலும் பார்ப்பனர் அல்லாத மக்கள் நலனில் மிக்க அக்கறை கொண்டவரும் ஆவார். பார்ப்பனர் அல்லாத மக்களுக்கு வழிகாட்டவல்ல ஒரே தலைவர் பெரியார் அவர்களே ஆவார் என நம்பி தமது இறுதி மூச்சு அடங்கும் வரை வாழ்ந்த மாமனிதர் அவர் ஆவார். பெரியார் அவர்களும் சென்னைக்கு வந்தால் டாக்டர் அவர்களைச் சந்தித்து தமது உடல்நிலைக்கு சிகிச்சையும் மருந்தும் பெறுவ தோடு அவர்களோடு அளவளாவுவதையே தமது வாடிக்கையாகக் கொண்டவர் ஆவார். இந்த முறை டாக்டர்...

இராமன் அயோத்தியில் பிறந்தானா? ம.கி. எட்வின் பிரபாகரன்

அயோத்தியில் இராமன் பிறந்தான் என்ற நம்பிக்கையின் அடிப்படையில், இன்றைய அயோத்தியில், அவுரங்கசிப் காலத்தில் கட்டப்பட்ட பாபர் மசூதியை இடித்துவிட்டு, அந்த இடத்தில் இராமனுக்கு கோயில் கட்ட வேண்டும் என்று சங் பரிவார் அமைப்பினர் முயன்று வருகின்றனர். இதனால் ஏற்பட்ட மோதல்களிலும், கலவரங்களிலும் பல்லாயிரக்கணக்கானோர் இறந்துள்ளனர். இத்தகைய சூழலில், அனைத்து கலவரங்களுக்கும் அடிப்படையான, “இராமன் அயோத்தியில் பிறந்தான்” என்ற நம்பிக்கையை ஆய்வுக்கு உட்படுத்துவது அவசியமாகிறது. முதல் இராமாயணம் எது? இராமன் அயோத்தியில் பிறந்தான் என்ற நம்பிக்கைக்கு, கிமு 4 ஆம் நூற்றாண்டில் தொகுக்கப்பட்ட வால்மீகி இராமாயணமே காரணம். எனவே இராமாயணங்களை ஆராய்வது அவசியமாகிறது. இராமாயணங்கள் மொத்தம் 48. இவற்றுள் புத்த இராமாயணங்கள் மூன்றும், ஜைன இராமாயணங்கள் மூன்றும் அடங்கும். முதலில் தோன்றிய இராமாயணம் வால்மீகி இராமாயணம் என்று தவறாக கருதுவோரே பெரும்பான்மை. ஆனால், முதல் இராமா யணத்துக்கு “தசரத ஜாதகம்” என்று பெயர். இது கிமு 500ஆம் ஆண்டைச் சேர்ந்த புத்தமத இராமாயணமாகும்....

பார்ப்பனிய பயங்கரவாத அமைப்புகளின் கதை – துரை

கலவரங்கள் படுகொலைகளுக்குப் பயிற்சி தரும் மதவெறிப் பள்ளிகள் மோடி ஆட்சியில் தங்குதடையின்றி செயல்படுகின்றன. இந்தியாவைப் பொறுத்தவரை எங்கேனும் குண்டு வெடிப்போ, மத கலவரமோ நடக்கும் போதெல்லாம் அவை தீவிரவாதச் செயல்கள் என்ற அடிப்படையில் மட்டும் நோக்கப்படுவதில்லை. மாறாக எடுத்த எடுப்பிலே இஸ்லாமிய தீவிரவாதம் என்று முத்திரை குத்தப்படுகிறது. குண்டு வெடிப்புகள் அனைத்தும் இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் மட்டுமே நடத்தப்படுகின்றன என்பது முழு உண்மை அல்ல. ஏனெனில் இந்தியாவில் நிகழும் பல்வேறு குண்டு வெடிப்பு, கலவரச் செயல்களில் பின்னணியில் இங்குள்ள சங்பரிவார அமைப்புகளின் பங்கு கணிசமான முறையில் உள்ளது என்பதே உண்மை. சற்றேறக்குறைய 600க்கும் அதிகமான அமைப்புகளாக, சமூகத்தின் பல்வேறு மட்டங் களிலும், கல்வி அமைப்புகளாக, கலாச்சார அமைப்புகளாக, ஆன்மிக அமைப்புகளாக இயங்கும் சங்பரிவாரங்கள் என்பவை இப்படியான வகுப்புவாதச் செயல்களை தொடர்ந்து நடத்தி வருவதில் இன்றளவும் முயன்று வருகின்றன. அவற்றில் முக்கியமான ஒரு சில அமைப்புகளைப் பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதே...

செம்மொழித் தமிழ் மீது நஞ்சு கக்கும் நாகசாமி (2) – ஒ. சுந்தரம்

‘மனுநீதி’ கூறும் ‘தர்ம’த்துக்கும் – வள்ளுவர் கூறும் ‘அறம்’ என்ற கருத்துக்கும் உள்ள வேறுபாட்டை ஆழமாகப் படம் பிடித்துக் காட்டுகிறார், நாவலர் நெடுஞ்செழியன்.   அவற்றில் சிலவற்றைக் காண்போம்: 1)            எல்லா மக்களுக்கும் பிறப்பு என்பது ஒரே தன்மையதாகத்தான் அமையும்; பிறப்பைப் பொறுத்து ஏற்றத் தாழ்வு இல்லை என்னும் கருத்துப்பட, “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” (குறள். 972) என்று கூறுவது வள்ளுவரின் ‘அறம்’. ஆனால், “பிராமணன் முதல் வருணத்தான் ஆனதாலும், பிரம்மாவின் முகமாகிய உயர்ந்த இடத்தில் பிறந்ததினாலும், எல்லா வருணத்தாருடைய பொருள்களையும் தானம் வாங்கத் தலைவனாகிறான்.” (மனு. த.சா. அத்தி.1, சுலோகம் (100) என்றும், “சூத்திரன் பிராமணனைத் திட்டினால், அவன் தாழ்ந்த இடமான காலில் பிறந்தவனாகையால், அவன் நாக்கை அறுக்க வேண்டும்” (மனு. த.சா. அத்தி.8, சுலோகம் : 270) என்றும் கூறுவது மனுவின் தருமமாகும். 2)            ‘ஒருவர் தாம் தேடிய பொருளைப் பிறர்க்குக் கொடுக்காமல், தாம் மட்டும் தனியாக இருந்து, உண்ணுதல்...

இந்தி எதிர்ப்புக்கு தமிழர் படை நடத்திய பட்டுக்கோட்டை அழகர்சாமி க. திருநாவுக்கரசு

இந்தி எதிர்ப்புக்கு தமிழர் படை நடத்திய பட்டுக்கோட்டை அழகர்சாமி க. திருநாவுக்கரசு

பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தில் தங்களை ஒப்படைத்து எதிர்நீச்சலில் வாழ்ந்து காட்டிய அஞ்சாநெஞ்சன் அழகிரி குறித்த வாழ்க்கைச் சுருக்கம். நீதிக்கட்சி, சுயமரியாதை இயக்கம், திராவிடர் கழகம் ஆகிய இயக்கங்களின் வளர்ச்சிப் போக்கில், தம்மை இணைத்துக் கொண்டு பணியாற்றியவர் பட்டுக்கோட்டை அழகர்சாமி! இவரது பெயருக்கு முன்பு பட்டுக் கோட்டை என்று அடைமொழி இருந்தாலும், இவரது சொந்த ஊர் புதுக்கோட்டைக்கு அருகிலுள்ள காருகுறிச்சி ஆகும். இவரது பெற்றோர் வாசுதேவ நாயுடு – கண்ணம்மாள், தந்தையார் வாசுதேவ நாயுடு பட்டாளத்தில் சுபேதாராகப் பணியாற்றி விட்டுப் பின்னர் காவல் நிலையத் தலைமைக் காவலராக (ஹெட் கான்ஸ்டபிள்) வேலை பார்த்தவர். அழகர்சாமி பசுமலையில் நான்காவது படிவம் (9ஆம் வகுப்பு) வரை படித்தவர். அதன் பிறகு, பட்டுக்கோட்டையில் அந்நாளில் நீதிக்கட்சியில் புகழ்பெற்ற வழக்கறிஞராய் இருந்த வேணுகோபால் நாயுடு என்பவரின் பரிந்துரையின் பெயரில் கூட்டுறவு வங்கியில் எழுத்தராகச் சில காலம் பணியாற்றினார். அந்த பாங்கியில் வேலை பார்த்த பார்ப்பன மேலாளர்க்கும் இவர்க்கும் ஏற்பட்ட...

கள்ள மவுனத்திலிருந்தே உருவாகின்றன வெடிகுண்டுகள் ஸர்மிளா ஸெய்யித்

இலங்கை அய்.எஸ். குண்டுவெடிப்புப் பயங்கரவாதத்திலிருந்து பாடம் பெறுவார்களா? அது 2002 என்று நினைவு. எங்கள் ஊரில் திடீரென உருவெடுத்த ஒரு பெயர் தெரியாத அமைப்பு, பிரச்சாரம் செய்யத் தொடங்கியது. இந்தச் செயல்பாடு பிரச்சாரத்தோடு நின்றுவிட வில்லை. வீடு வீடாகச் சென்று ஆன்டனாக்களை உடைப்பது, சிடி விற்கும் கடை உரிமையாளர்களை எச்சரித்து, கடைகளை எரிப்பது என்று வன்முறையாக மாறியது. அடுத்து, கறுப்பு ஹபாயாக்களையும் நீண்ட அங்கிகளையும் கொண்டு வந்து ‘இதுதான் இஸ்லாமிய உடை’ என்று யாரோ சில வியாபாரிகள் அறிமுகப் படுததினார்கள். ‘எங்கள் இறுதித் தூதர் முஹம்மத் நபி அவர்கள் வாழ்ந்த மண்ணில் பெண்களெல்லாம் இதைத்தான் அணிகிறார்கள். இது எங்கள் கலாச்சாரம்’ என்று ஏற்பதற்குப் பெண்களையும் பிள்ளைகளையும் பழக்கப்படுத்தினார்கள். இது பெண்களுக்குப் பாது காப்பான கவுரவமான உடை என்பதான உணர்வை வலிந்து உருவாக்கிப் பெண்கள் வாயாலேயே சொல்லும்படி மூளைச் சலவை நடந்தது. பாடசாலை மாணவிகளும், பல்கலைக் கழகம் செல்லும் மாணவி களும் கறுப்பு...