புதிய கல்வி என்ற பெயரில் குலக்கல்வியை திணிக்காதே
மண்ணின் மைந்தர்களின் வேலை வாய்ப்புகளை பறிக்காதே
இளைய தலைமுறையின் உரிமை முழக்க பரப்புரை!
* நாம் மண்ணின் மைந்தர்கள்தலைமுறையாக இந்த மண்ணில்பிறந்தோம், வாழ்கிறோம், ஆனாலும், பிறவடமாநிலங்களை விட நாம்- வேறுபட்டுள்ளோம்.
* எவ்வளவு ஒடுக்கப்பட்ட ஜாதியானாலும் சரி; ஏழ்மையும், வறுமையும் நம்மைவாட்டினாலும் சரி; “எப்பாடுபட்டாவது- நமதுமகளை, மகனை படிக்க வைக்க வேண்டும்; உயர் கல்வியைத் தர வேண்டும்; என்ற கொள்கையே நமது பண்பாடு!
* பெரியார் இட ஒதுக்கீட்டுக்காக 1919 முதலேபோராடினார். உரிமையைப் பெற்று தந்தார். காமராசர், அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர்- அந்த உரிமைகளை படிப்படியாகவளர்த்தார்கள். அம்பேத்கர் சட்டத்தின்வழியாக நமக்கான இட ஒதுக்கீட்டுஉரிமைகளை உறுதிப்படுத்தினார். வி.பி.சிங்மத்திய அரசுப் பணிகளில் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடுதந்தார். போராடிப்பெற்ற சமூக நீதிஉரிமைகளை தற்போது பறிகொடுத்து வருகிறோம் .
இப்போது பாஜக ஆட்சியில் என்ன நடக்கிறது?
” உங்கள் கல்விக் கொள்கையை நீங்கள்தீர்மானிக்க முடியாது. நாங்களே தீர்மானிப்போம்”என்கிறது பாஜக ஆட்சி.
* நாம் வேண்டாம் என்ற ‘நீட்’டைதிணிக்கிறார்கள்; இந்தியை , சமஸ்கிருதத்தை படி என்கிறார்கள்; கல்விவேலை இட ஒதுக்கீடுகளைப் பார்ப்பனஉயர்ஜாதியினருக்கும் தருவோம். அவர்கள்பட்டியலின ஜாதியினரை விட குறைந்தமதிப்பெண்கள் எடுத்தாலே போதும்என்கிறார்கள்.
மீண்டும் குலக்கல்வியை புதிய கல்விக் கொள்கை என்ற பெயரில் நம் தலையில்சுமத்துகிறார்கள்.
புதிய கல்வி கொள்கை என்ன கூறுகிறது?
3,5,8 ம் வகுப்புகளுக்கும் அகில இந்திய தேர்வுஎன்கிறது.
8 ம் வகுப்பு முடித்த 14 வயதுகுழந்தைகள் விருப்பமான தொழில்கல்வியை கற்கலாம் என்ற பெயரில்குலக்கல்விக்கு கதவு திறக்கிறது; பாடத்திட்டத்தையும் அகில இந்தியஅடிப்படையில் தயார் செய்வார்களாம்; நமக்கான கல்விக் கொள்கையை மத்தியஅரசே தீர்மானிக்குமாம். 3 வயது முதலே கல்வியாம்,
30 குழந்தைகளுக்கு குறைவான கிராமப்புற பள்ளிகளை மூடுவார்களாம். ஒருங்கிணைந்த கல்வி வளாகத்திற்கு போக வேண்டுமாம். 3 வயது குழந்தை எப்படிச் செல்லும்?
நமது வேலை வாய்ப்புகளைவடநாட்டார்களுக்கு வாரி வழங்குகிறார்கள்; நெஞ்சு பதறும் இந்த புள்ளி விவரங்களைப்படியுங்கள்.
தென்னக இரயில்வேயில் திருச்சிகோட்டத்தில் சமீபத்தில் எலக்டிரிசியன், பிட்டர், மெக்கானிக், வெல்டர் உள்ளிட்டதொழில் பழகுநர் இடங்களுக்கு 1765 பேர்தேர்வு செய்யப்பட்டனர். அதில் 1600 பேர் வடஇந்தியர்கள்.
சென்னை மணலியில் உள்ள பெட்ரோலியநிறுவனத்தில் வேதியியல், இயந்திரவியல், மின்னியல் போன்ற 8 வகையானபொறியாளர்(ENGINEERING) பணிகளுக்கு 65 பேர் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டனர்.அவர்களில் ஒருவர் கூட தமிழர்கள் இல்லை.
தமிழக வருமான வரித்துறையில் 2012 ல்சேர்க்கப்பட்ட 384 பேரில் 28 பேர் தான்தமிழர்கள். 2014 ல் சேர்க்கப்பட்ட 78 பேரில் 3 பேர்தான் தமிழர்கள். 2018 ல்பணியிலமர்த்தப்பட்ட 100 ஆய்வாளர்களில்ஒருவர் தான் தமிழர்.
* வருமான வரித்துறையின், டேக்ஸ்அசிஸ்டென்ட் பணியில் அமர்த்தப்பட்ட 265 பேர்களில் 5 பேர்தான் தமிழர்கள். கடந்த சிலஆண்டுகளில் 10 சதவீதத்தை கூடஎட்டவில்லை.
சமீப காலமாக நடைபெற்ற இரயில்வேதேர்வுகளில் கிட்டத்தட்ட 90 சதவீத அளவில்வடமாநிலத்தினர் தேர்ச்சியடைந்துள்ளனர். குறிப்பாக பீகாரைச் சேர்ந்தவர்கள் 2010-2019 வரை 18% தேர்வாகியுள்ளனர்.
தமிழகத்தில் வருமான வரித்துறை, கலால்துறை, பாஸ்போர்ட் அலுவலகம் எனமத்திய அரசின் 55 வகையானஅலுவலகங்கள் உள்ளன. இவ்வாறான, பல்வேறு துறைகளில் 2011 ல் இருந்துபணியிலமர்த்தப்பட்டவர்களில் 99% வடஇந்தியர்கள்தான். 0.5% தான் தமிழர்கள்.
* மோடி தலைமையேற்ற கடந்த 62 மாதங்களில் தான், பாரத் மிகுமின்நிறுவனம், பெட்ரோலிய நிறுவனம், இரயில்வே, பெல் உள்ளிட்ட தமிழகத்தின்மத்திய அரசு நிறுவனங்களில் 90% வடஇந்தியர்களை பணியில் அமர்த்தியுள்ளதுமோடி அரசு.
மண்ணின் மைந்தர்களாகிய நமது- கல்வி,வேலை,மொழி உரிமைகளை மறுத்துதமிழ்நாட்டை வடநாடாக்கும் முயற்சிகள்வேக வேகமாக நடக்கின்றனவிழித்துக்கொள்வோம் தோழர்களே!
இந்த ஆபத்துகளை தடுத்து நிறுத்துவோம்மக்கள் கருத்தை உருவாக்குவோம் இதற்காகவே இந்த பரப்புரை பயணம்.
நடுவண் அரசே எங்கள் தலைமுறையைவாழவிடு!
நாங்கள் மண்ணின் மைந்தர்கள்!