Category: குடி அரசு 1926

ஆதி திராவிடரும் சுயராஜ்யக் கக்ஷியும் 0

ஆதி திராவிடரும் சுயராஜ்யக் கக்ஷியும்

“சுதேசமித்திரன்” என்னும் பிராமணப் பத்திரிகை ஆதி திராவிடர்க ளுக்கு ஜஸ்டீஸ் கட்சியார் ஒன்றும் செய்யவில்லை என்றும், தங்கள் கூட்டத் தார் ஆதி திராவிடர்களுக்கு சுவர்க்க வாசலைத் திறந்து விடப் போவதாகவும், இனியாவது தங்களை வந்து சரணமடையும்படி உபதேசிக்கிறது. ஜஸ்டீஸ் கட்சியார் ஆதி திராவிடர்களுக்கு நன்மை செய்தார்களோ, இல்லையோ? அதைப் பற்றி அதிக கவலை வேண்டாம். அது ஆதி திராவிடர்களுக்கே தெரியும். ஆனால் காங்கிரசின் ஆதிக்கத்தை அடைந்த சுயராஜ்யக் கட்சியார் ஆதி திராவிடர்களுக்கு என்ன நன்மை செய்தார்கள்? என்ன பதவி கொடுத் தார்கள்? என்ன உத்தியோகம் தந்தார்கள்? இந்தியா சட்டசபைக்கு ஒரு ஆதி திராவிடரை நிறுத்தினார்களா? நிறுத்த ஆளில்லாமல் திண்டாடும் சென்னை சட்டசபைக்கு ஒரு ஆதி திராவிடரையாவது நிறுத்தினார்களா? சென்னை கார்ப்பரேஷன் கவுன்சிலுக்கு ஆதி திராவிட வகுப்பில் பிறந்த ஒருவரை யாவது நிறுத்தினார்களா? வேறு வகையில் இவர்கள் மட்டிலும் என்ன சாதித்து விட்டார்கள்? ஒரு சமயம் ஆதி திராவிடர்களில் எவராவது ஒருவருக்கு அதுவும்...

ஆசை வெட்கமறியாது சுயராஜ்ஜியக் கட்சியாரின் வெளியேற்றம் 0

ஆசை வெட்கமறியாது சுயராஜ்ஜியக் கட்சியாரின் வெளியேற்றம்

“சுவற்றுக் கீரையை வழித்துப் போடடி சுரணைக் கெட்ட வெள் ளாட்டி” என்று ஒரு பழமொழி உண்டு. அதாவது ஒரு ஸ்திரீ கீரை கடைந்து தன் கணவனுக்குச் சாதம் போட்டு கீரை பரிமாரினாள். கணவன் மனதில் எதையோ வைத்துக்கொண்டு கோபம் வந்து விட்டதுபோல பாசாங்கு செய்து கீரை பக்குவம் நன்றாக இல்லையில்லை என்று கீரையை வாரி சுவற்றின் மீது இறைத்துவிட்டு எழுந்து போய் படுத்துக் கொண்டான். ஸ்திரீயும் அந்த இலையை இழுத்து வைத்து விட்டு மீதி இருந்ததைப் போட்டு சாப்பிட்டு விட்டுப் படுத்துக் கொண்டாள். சிறிது நேரத்திற்குப் பிறகு கணவனுக்குப் பசி ஏற்பட்டது. மறுபடியும் வந்து உட்கார்ந்து கொண்டு சாப்பாடு போடச் சொன் னான். அந்த மனைவி முன் இழுத்து வைத்திருந்த இலையையே பக்கத்தில் இழுத்து விட்டுவிட்டு நின்று கொண்டாள். இலையில் வெறும் சாதம் மாத்திரம் தான் இருந்தது. கணவன், மனைவியைப் பார்த்து “இந்த சாதத்திற்கு ஏதாவது கரி வைத்துத் தொலை, தொட்டு...

தேர்தல் அபேக்ஷகர்கள் 0

தேர்தல் அபேக்ஷகர்கள்

சுயராஜ்யக் கட்சியின் சார்பாய் சென்னை சட்டசபைக்கும் இந்தியா சட்டசபைக்கும் வரப்போகும் தேர்தல்களுக்கு ஐயங்கார் கோஷ்டியாரால் அபேக்ஷகர்களை நியமனம் செய்திருப்பதாகப் பத்திரிகைகளில் வெளி வந்திருக்கிறது. இதனை எல்லா இந்திய காங்கிரஸ் கமிட்டியாரும் ஒப்புக் கொண்டு உறுதிபடுத்தியாய் விட்டதாம். ஆனாலும் இன்னும் பல ஜில்லாக் களுக்கு அபேக்ஷகர்களைப் பூர்த்தி செய்யாமல் காலியாக விட்டுவைத்திருக் கிறார்கள். அது எதற்காக வென்றால் தாங்கள் இதுவரை நியமித்த பட்டிய லானது பிராமணரல்லாதவர்களையே அதிகமாய் நியமித்ததாகப் பொது ஜனங்களை நம்பும்படி செய்வதற்காகவும், பிராமணர்களை நியமிக்கப் போகும் ஸ்தானங்களையெல்லாம் காலியாக வைத்து பின்னால் சமயம் பார்த்து ஜில்லாவுக்கு ஒவ்வொருவராகச் சேர்த்துக்கொள்ளும் தந்திரத்திற் காகவுமே தான் என்று சொல்லுவோம். உதாரணமாக, தஞ்சை ஜில்லாவுக்கு ஒரு ஸ்தானம் காலி. இதற்கு ஒரு ஐயரோ, ஐயங்காரோ திரைமறைவில் இருக்கிறார் . அவர் பெயரை இப்போது சொன்னால் கலகம் ஏற்பட்டுவிடும். ஆதலால் மூடு மந்திரமாகவே வைத்தி ருந்து, சமயம் பார்த்து அந்தப் பெயரை வெளிப்படுத்தி விடுவார்கள். ஜனங்...

ஸ்ரீமான் சத்தியமூர்த்தி                            எல்லா இந்தியப் பிரசாரகராய் விட்டாராம் 0

ஸ்ரீமான் சத்தியமூர்த்தி எல்லா இந்தியப் பிரசாரகராய் விட்டாராம்

ஸ்ரீமான் சத்தியமூர்த்தியை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் சார்பாக விளம்பர உபகமிட்டி மெம்பராய்ச் சேர்க்கப் பட்டிருப்பதாகக் காங்கி ரஸ் காரியதரிசி ஸ்ரீமான் ஏ. ரெங்கசாமி ஐயங்கார் அறிவிக்கிறார், என்று “சுதேசமித்திரனில்” குறிப்பிட்டிருக்கிறது. பொதுத் தேர்தலையொட்டி அவர் இந்தியா முழுவதும் சுற்றுப்பிரயாணம் செய்வாராம். சரி, இவரை யார் நியமித் தார்கள்? ஸ்ரீமான் ஏ.ரெங்கசாமி ஐயங்கார் நியமித்தார்; ஸ்ரீமான் சத்தியமூர்த்தி இந்தியா வெங்கும் சுற்றுப்பிரயாணம் செய்கிறார். யாருடைய பணம்? ஊரார் பொதுப் பணம். என்ன பிரசாரம்? பிராமணத் தேர்தல் பிரசாரம். அதாவது பொது ஜனங்கள் பணத்தில் மாகாணம் மாகாணமாய்ச் சுற்றி “தமிழ்நாட்டில் பிராமணரல்லாதார் என்கிற அப்பிராமணக் கூட்டம் ஒன்று இருக்கிறது; அவர்கள் எல்லோரும் தேசத் துரோகிகள்; அவர்களுக்கு மூளை கிடையாது; பிராமணர்கள்தான் பெரிய தேசபக்தர்கள்; மகா புத்திசாலிகள்; அதிலும் நானும் ஸ்ரீமான்கள் ஏ. ரெங்கசாமி ஐயங்காரும், எஸ்.சீனிவாசய்யங்காரும், சி.வி.வெங்கிட்டரமணய்யங்காரும், எம்.கே. ஆச்சாரியாருந்தான் மகாமகா புத்திசாலிகள், தேசபக்தர்கள்; ஒத்துழையாமையின் போது நாங்கள்தான் முன்னணியிலிருந்து மிகவும் கஷ்டப்பட்டு...

இந்து மகாசபையின்                                  பலனும் கிலாபத்தும் 0

இந்து மகாசபையின் பலனும் கிலாபத்தும்

டில்லியில் கூடிய கிலாபத் மகாநாட்டில் மௌலானா மலிக் ஒரு தீர்மானத்தின் பேரில் பேசுகையில் “எங்காவது இந்து முஸ்லீம் கலவரம் ஏற்பட்டால் தற்காப்பிற்கான வழியை மாத்திரம் இத்தீர்மானம் கூறுவதாயிருக் கிறது. ஆனால் இந்து சகோதரருடன் ஒற்றுமை ஏற்படுத்த முடியும் என்று இன்னமும் தாம் நம்புவதால்…” என்று சொல்லிக்கொண்டிருக்கும் போதே சபையோர்கள் கூச்சலிட்டு ‘இந்துக்களை சகோதரர் என்று சொன்னது தப்பு’ என்றும் அதை வாப்பீசு வாங்கிக்கொள்ள வேண்டும் என்றும் கோபாவேசத் துடன் கூறினார்களாம். கடைசியாக மௌலானா ஷவுகத்தலி பலதடவை கெஞ்சிக்கேட்டுக் கொண்டதன் பேரில் கூச்சல் அடங்கிற்றாம். இதைப்பற்றி கூச்சல் போட்டவர்கள் பேரில் நமக்கு ஒன்றும் அதிருப்தியும் ஆச்சரியமும் இல்லை; ஆனால் இதிலிருந்து மகமதிய சகோதரர்களின் மனோபாவம் எது வரை பாய்ந்திருக்கிறது என்று இப்போதாவது இந்துக்கள் தெரிந்து கொள் ளலாம். இவ்வித மனோபாவம் ஏற்படக் காரணமென்ன? நம் தேசத்து வைதீகப் பிராமணர்களின் இந்து மகாசபை செய்த பழிக்கு இந்து சமூகத்தார் அனைவருமே மகமதியரின் இவ்விதத் துவேஷத்திற்கு...

கல்பாத்தியும் தெருவில் நடக்காமையும் 0

கல்பாத்தியும் தெருவில் நடக்காமையும்

மலையாளம் ஜில்லாவைச் சேர்ந்த பாலக்காடு முனிசிபல் எல்லைக் குள் கல்பாத்தி என்கிற பாகம் பிராமணர்கள் முக்கியமாய் வசிக்கும் பாகம். அது பல தெருக்களை உடையது. அத்தெருக்கள் எல்லாம் முனிசிபாலிட்டி யாரைச் சேர்ந்தது. அதைப் பழுது பார்த்தல், பராமரித்தல் எல்லாம் முனிசிபல் செலவிலேயே நடந்து வருகிறது. அப்படி இருந்தும் அங்கிருக்கும் பிராமணர்கள் அத்தெருவின் வழியாய் “பஞ்சமர்கள்” என்று சொல்லுவோர் களையும் “தீயர்” என்று சொல்லுவோர்களையும் நடப்பதற்கு விடுவதில்லை. அத்தெருக்களின் முகப்புகளில் உள்ள பல வியாபாரக் கடைகளிலும் பிராமணர்கள் வந்து சாமான்கள் வாங்கினால் அதைத் தங்கள் வீட்டுக்குத் தூக்கிச் செல்ல மகமதியக் கூலிகளையாவது, கிறிஸ்தவக் கூலிகளையாவது அமர்த்தி எடுத்துக் கொண்டு போவதே தவிர ³ இந்து கூலிகளை எடுக்க விடுவதில்லை. இதற்காகவே அக்கடைகளுக்குப் பக்கத்தில் மகமதிய கிறிஸ் துவக் கூலிகள் அதிகமாய் நின்று கொண்டிருப்பார்கள். அல்லாமலும் அந்த வீதிகளில் உத்தியோகஸ்தர்களும் குடி இருக்கி றார்கள். அவர்கள் வீட்டுக்கும் ஆபீஸ் சம்மந்தமான காகிதம் போக்குவரத்து முதலியவைகளுக்கும்...

சென்னை ஓட்டர்களுக்கு                          இனியாவது புத்தி வருமா? 0

சென்னை ஓட்டர்களுக்கு இனியாவது புத்தி வருமா?

சென்னைக் கார்ப்பரேஷனில் சுயராஜ்யக் கட்சியாரின் தலைக் கொழுப்பு ஒரு நிலையில் நிற்காமல் தலை கிருகிருவென்று சுற்றுவதாகவே தெரிகிறது.  ஏமாந்துபோன சென்னை ஓட்டர்களுக்கு இனியாவது புத்தி வருமோ வராதோ நமக்குத் தெரியவில்லை. அதன் பிரசிடெண்டு ஸ்ரீமான் சாமி வெங்கிடாசலம் செட்டியார் கார்ப்பரேஷனை தனது முன்னோர்கள்  வீட்டுச் சொத்து  போல் நினைத்து தனக்கே உரிமையாக்கிக் கொண்டதாகத் தெரிகிறது.  இவர்கள் கையில் ராஜீய பாரத்தையும் மந்திரி பதவிகளையும் ஒப்புவித்து விட்டால் நாடு துலங்கிப் போகும் போலவே இருக்கிறது.  அதா வது 3-5-26-ல் ஒரு மீட்டிங்கு போட்டார். அய்யங்கார் சிஷ்யர் ஒருவர் அன்று வரமுடியாததால் உடனே மாற்றி விட்டார் .  அடிக்கடி இம்மாதிரி மீட்டிங் போடுவதும், தங்கள் கட்சி ஆள்களில் ஒரு  பூனைக் குட்டிக்கு வர அசவு கரியம் ஏற்பட்டாலும் அதற்காக மீட்டிங் கை தனது இஷ்டப்படி ஒத்தி வைத்து விடுவதுமே வேலையாயிருக்கிறார். இதுபோல் இதற்குமுன் பலதடவைகளில் நடந்திருக்கிறது.  தங்கள் கட்சியில் ஒரு ஆள் வரமுடியாவிட்டால் தங்கள்...

தட்டிப் பேச ஆளில்லாவிட்டால்  தம்பி சண்டப் பிரசண்டன் தொழிலாளர் மத்தியில் ஓட்டுப் பிரசாரம்  	– சித்திரபுத்திரன் 0

தட்டிப் பேச ஆளில்லாவிட்டால் தம்பி சண்டப் பிரசண்டன் தொழிலாளர் மத்தியில் ஓட்டுப் பிரசாரம் – சித்திரபுத்திரன்

சென்னை எம்.எஸ்.எம். ரயில்வே தொழிலாளர் கூட்டத்தில் ஸ்ரீமான் எம். கே. ஆச்சாரியார் அருமையான மாயப்பிரசங்கம் ஒன்று செய்தார். அப்பொழுது அவர் சொல்லியுள்ளவைகளில் முக்கியமானது இரண்டு விஷயம். அதாவது, “உங்களுக்கு அரசாங்க சட்டசபைகளில் பிரதிநிதித்து வம் கிடையாது. அது கிடைக்கிற வரையில் எங்களை அங்கீகரிக்க வேண் டும்” என்று பேசியிருக்கிறார். ஸ்ரீமான் எம். கே. ஆச்சாரியார் ஒரு பிராமணர், அதோடு அளவுக்கு மிஞ்சிய வருணாசிரம தர்மி. ஒரு பிராமணக் குழந்தை சாப்பிடுவதை ஒரு பிராமணரல்லாத குழந்தை ஒருவேளை பார்த்து விட்டால் ஒரு மாதத்திற்கு உண்ணாவிரதமிருப்பேன் என்று சொன்னவர். அல்லாமலும், பிராமணன் அயோக்கியனாயிருந்தாலும், ஸ்ரீமான் சீனிவாசய்யங்காரிடம் கூலிக்காரனாயிருந்தாலும், குஷ்டரோகியாயிருந் தாலும் அவன் பிறவியிலேயே உயர்ந்தவன். மற்றவன் சூத்திரன் ஒரு யோக்கியனானாலும் சுயமரியாதை உள்ளவனானாலும் அவன் தாசி மகன்; அடிமை; அவன் பிறவியிலேயே பிராமணனுக்கு வேலை செய்யப் பிறந்த வன் என்று சொல்லும் வருணாசிரம சபைக்குத் தலைவர் . இவர் 100- க்கு 99 பேர்...

இந்து மகாசபை 0

இந்து மகாசபை

இந்துக்களும் முஸ்லீம்களும் ஒன்றுபட்டு ஒற்றுமையாகி விட்டால் நமது சர்க்காருக்கு எவ்வளவு சங்கடமோ, அதைவிட அதிக சங்கடம் நமது பிராமணர்களுக்கு ஏற்பட்டுவிடும். ஏனெனில் சிறு வகுப்பாயுள்ளவர்கள் வாழ வேண்டுமானால் பெருவகுப்பாய் உள்ளவர்களை ஒருவருக்கொருவர் உதைத்துக் கொள்ளும்படி செய்து பிரித்து வைத்தால்தான் முடியும் என்பது ஒரு பழமொழி. அப்பழமொழிக்கிணங்கவே சர்க்காராரும் பிரித்தாள பல தந்திரங்கள் செய்து அதில் வெற்றிபெற்று வருகிறார்கள். அதுபோலவே நமது பிராமணர்களும் பிராமணரல்லாதாரை அடக்கியாள அவர்களுக்குள் பிரிவி னையுண்டாக்கி ஒருவருக்கொருவர் துவேஷமும் பொறாமையும் நிரந்தர மாய்க் கொள்ளும்படி பல தந்திரங்கள் ஆதியிலிருந்தே செய்து வந்திருக் கிறார்கள். அவைகளின் குறிப்புதான் இன்றைய தினம் இந்தியாவைக் காட்டிக் கொடுக்கும் வர்ணாசிரமமும் பஞ்சமர் என்னும் ஜாதியும். இதை மகாத்மா எப்படியாவது ஒழித்து விடுதலை சம்பாதிக்கலாம் என்று எண்ணியவுடன், நமது பிராமணர்கள் புது தந்திரம் ஒன்று செய்திருக் கிறார்கள். அதுதான் “இந்து மகாசபை”. அது இந்துக்களை மாத்திரம் நிரந்தர மாய்ப் பிரித்து வைப்பதோடல்லாமல் இந்து முஸ்லீம் ஒற்றுமையும்...

கோயமுத்தூரில் பஞ்ச நிவாரண வேலையும்                                        ஸ்ரீமான் சி.வி. வெங்கிட்டரமணய்யங்காரும் 0

கோயமுத்தூரில் பஞ்ச நிவாரண வேலையும் ஸ்ரீமான் சி.வி. வெங்கிட்டரமணய்யங்காரும்

கோயமுத்தூரில் பஞ்ச நிவாரண வேலைக்காக ரூ. 2102-8-0 செலவாகி யிருக்கிறது. கிராமத்து ஜனங்கள் இந்தப் பணம் ஸ்ரீமான் வெங்கிட்ட ரமணய் யங்கார் தான் கையிலிருந்து செலவு செய்ததாக நினைக்கும்படி பல தந்திரங் கள் செய்ததோடு சில காங்கிரஸ் தொண்டர்கள் என்போரும் ஸ்ரீமான் ஐயங் கார் பின் சென்று ஓட்டு வாங்க, பஞ்சப்படி போட்ட ஐயங்கார் என்று அவருக் குப் பெயர் வாங்கிக் கொடுத்து கிராமத்து ஜனங்களை ஏமாற்றியிருக்கிறார் கள். இதன் இரகசியம் என்ன வென்றால் பஞ்ச நிவாரண வேலைக்காக பொது ஜனங்களிடமிருந்து வசூலாகி வந்த பணத்தை ஸ்ரீமான் எஸ்.சீனிவாசய் யங்கார் தூக்கி ஸ்ரீமான் வெங்கிட்டரமணய்யங்காரிடம் கொடுத்து, செலவு செய்யும்படி சொல்லியிருக்கிறார். அந்தப் பணத்தை வாங்கி, தான் செலவு செய்ததாக அவர் நடித்திருக்கிறார். இந்த நடிப்புக்கு காங்கிரஸ் தொண்டர்கள் திரைப்பிடித்து இருக்கிறார்கள். இவ்வளவுதான் இரகசியம். இதை 3-5-26 ² “சுதேசமித்திரன்” பத்திரிகையிலேயே பார்க்கலாம். குடி அரசு – செய்தி விளக்கம் – 09.05.1926

எங்கும் இராமசாமி நாயக்கர்                           பம்பாயில் பிராமணரல்லாதார் மகாநாடு 0

எங்கும் இராமசாமி நாயக்கர் பம்பாயில் பிராமணரல்லாதார் மகாநாடு

சென்னை மாகாணப் பிராமணர்கள் சென்னையில் மாத்திரம்தான் பிராமணர் – பிராமணரல்லாதார் வித்தியாசமும் ‘வகுப்புத் துவேஷமும்’ ஏற்பட்டிருப்பதாகவும், அதை ஸ்ரீமான் ஈ.வெ. இராமசாமி நாயக்கர் வளர்த்து வருவதாகவும், அவர் பேச்சை எவரும் கேட்கக் கூடாது என்றும், அவர் சொல்லுவதை எவரும் நம்பக்கூடாது என்றும், அவர் பேரில் பல குற்றங் களைக் கற்பித்து பிராமணர்களும், பிராமணப் பத்திரிகைகளும், அவர்களைத் தலைவராகக் கொண்ட ஸ்ரீமான் திரு.வி. கலியாணசுந்தர முதலியார் போன்ற வர்களும், அவர்களிடம் பணம் வாங்கிக்கொண்டு எழுதும் – பேசும் சிப்பந்தி கோடிகளும் அவர்கள் தயவால் பதவிபெற நினைக்கும் சில சுயகாரியப் புலிகளும் சதா காலமும் கையொடிய, தொண்டை கிழிய எழுதியும்,பேசியும் வருகிறார்கள். இப்பொழுது மத்திய மாகாணத்திலும் (மஹாராஷ்ட்டிர மாகாணத்தில்) பம்பாய் மாகாணத்திலும் பிராமணரல்லாதார் மகாநாடுகள் என்றும் “வகுப்புத் துவேஷங்கள்” வளர்ந்து வருகிறது. பஞ்சாபிலும் கல்கத்தாவிலும் இந்து முஸ்லீம் சச்சரவுகள் இல்லாவிட்டால் அங்கும் பிராமணர்- பிராமண ரல்லாதார் “வகுப்புத் துவேஷங்கள்” வளரும். ஆதலால் இராமசாமி நாயக்கர்...

சுயராஜ்யக் கட்சியார்             கார்ப்பொரேஷனில் செய்த வேலை 0

சுயராஜ்யக் கட்சியார் கார்ப்பொரேஷனில் செய்த வேலை

சுயராஜ்யக் கட்சியார் என்கிற பிராமணர்கள் சென்னைக் கார்ப்பொ ரேஷனைக் கைப்பற்ற ஆட்களை நிறுத்தி ஸ்ரீமான் திரு. வி. கலியாணசுந்தர முதலியாரை சுவாதீனம் செய்து கொண்டு மூலைமுடுக்கெல்லாம் ஜஸ்டீஸ் கட்சியாரை வைது பிரசங்கம் செய்த காலத்தில் தாங்கள் மிகுதியும் யோக்கியர் கள் என்றும், ஜஸ்டீஸ் கட்சியார் தேசத் துரோகிகள் என்றும், கார்ப்பொரேஷ னுக்குத் தாங்கள் மெம்பர்களானால் ஜனங்களுக்கு அதிக அனுகூலம் செய்வோம் என்றும், வரிகளைக் குறைப்போம் என்றும் பொய் மூட்டைகளை அளந்தார்கள். இப்பொய் மூட்டைகளை ஸ்ரீமான் கலியாணசுந்தர முதலியா ரும் தலையில் தூக்கிக்கொண்டு போய் ஓட்டர்கள் வீட்டில் கொட்டினார். இப் பொய்யர்கள் வெற்றியடைந்து கார்ப்பொரேஷன் மெம்பர்களான பிறகு அவர்கள் யோக்கியதை என்ன என்பதை சென்னை வியாபாரிகள் சங்கத் தாரால் செய்த தீர்மானங்களிலிருந்தே பொது ஜனங்கள் அறிந்து கொள்ள லாம். அதாவது:- “வியாபார சுணக்கத்தால் வியாபாரம் நடப்பதே கஷ்டமாயிருக்கும் போது வியாபாரிகளின் தொழில் வரியைக் கார்ப்பொரேஷன் கவுன்சிலர்கள் 100-க்கு 25 வீதம் அதிகமாக உயர்த்தியதை...

ஒத்தக்காசுச் செட்டியார் பிராமணத் தந்திரத்தின் தோல்வி 0

ஒத்தக்காசுச் செட்டியார் பிராமணத் தந்திரத்தின் தோல்வி

பனகால் ராஜா மந்திரியாயிருந்து மாதம் ரூ. 4333 – 5 – 4 சம்பளம் வாங்குவதில் பொறாமை கொண்ட சில பிராமணர் பனகால் ராஜா கட்சியிலி ருந்தே ஆசாபங்கமடைந்த ஸ்ரீமான். ஓ. கந்தசாமி செட்டியார் என்கிற ஒருவரைப் பிடித்து பனகால் ராஜாவின் மீது ஏவிவிட்டு, திரை மறைவிலி ருந்து சூஸ்திரக் கயிராட்டி வந்தார்கள். அளவுக்கு மிஞ்சி கயிற்றை ஆட்டின தன் பலனாய்க் கயிறு அறுந்துபோய் ஸ்ரீமான் செட்டியாரின் தலை உடைந்து நிரந்தரமான வடு இருக்கும் படியாய் ஒரு பெரிய தளும்பு ஏற்பட்டுவிட்டது. விஷயமென்ன? பனகால் ராஜாவை ஸ்ரீமான் செட்டியார் ஒரு கூட்டத்தில் இகழ்ச்சி யாய்ப் பேசினார்; மற்றொரு கூட்டத்தில் ஸ்ரீமான் செட்டியாரை பனகால் ராஜா இகழ்ச்சியாய்ப் பேசினார் . இது அரசியல் உலகில் சாதாரணமாய் நடக்கிற விஷயங்கள்தான். அநாவசியமாய் இந்த சம்பவத்தில் பிராமணர்கள் புகுந்து செட்டியாருக்கு ஏதோ பெரிய மானநஷ்டம் வந்துவிட்டதாகவும், அதற்காக சில பிராமணர்கள் பரிதாபப்பட்டு ஸ்ரீமான் செட்டியாருக்கு ஏதோ...

சபர்மதி ராஜியின் முறிவு 0

சபர்மதி ராஜியின் முறிவு

சுயராஜ்யக் கட்சியாருக்கும் பரஸ்பர ஒத்துழைப்பாளர்களுக்கும் வெளிப்படையாய் உள்ள வித்தியாசமெல்லாம் கவர்ன்மெண்டார் இணங்கி வந்தால் 1,000, 5,000 சம்பளமுள்ள உத்தியோகங்களை ஏற்றுக்கொள்வ தென்பது முன்னவருக்கும், கவர்ன்மெண்டார் எவ்வளவு இணங்கி வருகிறார்களோ அவ்வளவுக்குத் தகுந்தபடி 1,000, 5,000 சம்பளமுள்ள உத்தி யோகங்களை ஏற்றுக் கொண்டு அதற்குத் தகுந்தபடி நடந்துக் கொள்வ தென்பது பின்னவருடையதுமான வெளிப்படை கொள்கைகளாகும். இந்தக் கொள்கைக்கும் மிதவாதம், ஜஸ்டீஸ், பெசண்டம்மையார் ஆகியோர்களு டைய கட்சிக் கொள்கைக்கும் யாதொரு விதமான வித்தியாசமும் வெளிப் படையாகவுமில்லை, இரகசியமாகவுமில்லை. சுயராஜ்யக் கட்சிக்கும் மேற் கண்ட மற்ற கட்சிகளுக்கும் அந்தரங்கத்தில் யாதொரு விதமான வித்தியாச முமில்லை. சுயராஜ்யக் கட்சி “சாத்தமுதில் மல அமுது விழுந்து விட்டது, வடிகட்டினாப் போல் வாறு” என்பது போல் கவர்ன்மெண்டார் இணங்கி வந்தால் உத்தியோகம் ஏற்றுக் கொள்வதென்று சொல்லுவது, ஓட்டர்களை ஏமாற்றுவதற்கு தமிழ்நாட்டு ஐயங்கார் கோஷ்டிகள் செய்த சூழ்ச்சியே யல்லாமல் வேறல்ல. ஏனென்றால் அவர்கள் தமிழ்நாட்டில் ஜஸ்டீஸ் கட்சி யாரைப் போலவும், மிதவாதக்...

அய்யங்கார் தர்மம்  -சித்திரபுத்திரன் 0

அய்யங்கார் தர்மம் -சித்திரபுத்திரன்

கோவை ஸ்ரீமான் வெங்கிட்டரமணய்யங்கார் தர்மத்தின் இரகசியம் ‘குடி அரசில்’ வெளியானதினால் ஸ்ரீமான் ஐயங்கார் முதல் பல பிராமணர் களுக்கும், அவரது தர்மத்தில் பங்கு கொண்ட – கொள்ள இருக்கும் சில பிராமணரல்லாத பத்திராதிபர்கள், பிரசாரகர்கள் என்போருக்கும் ஆத்திரங் கிளம்பிவிட்டது. தர்மத்தைப் பற்றி நமக்கு பொறாமையா? யார் தர்மம் செய்வ தாயிருந்தாலும், அது என்ன தர்மமாயிருந்தாலும், பொதுவாக உண்மைத் தர்மம் என்றாலே அதை வரவேற்பார்களே தவிர எவரும் அதை வெறுக்க மாட்டார்கள். ஆனால் பொது ஜனங்களை ஏமாற்றச் செய்யும் ஒரு சூழ்ச்சிக்கு தர்மம் என்று பெயர் கொடுப்பதனால் அறிவுள்ளவன் – யோக்கியன் பொது ஜனங்கள் ஏமாறும்படி பார்த்துக் கொண்டிருக்கவே மாட்டான். அப்படிப் பார்த்துக் கொண்டிருப்பவன் கோழையும் சுயநலவாதியுமே ஆவான். கோவை ஜில்லாவில் உண்மையான தர்மம் செய்த பிரபுக்களில்லா மலில்லை. உதாரணமாக கோவைக்கடுத்த பீளமேடு என்னும் ஊரில் ஸ்ரீமான் கள் பி.எஸ். கோவிந்தசாமி நாயுடு அன் சன்ஸ் என்கிற பிரபல நாயுடு கன வான்கள்...

சட்ட கோர்ட்  பத்திராதிபருக்கும் குடியானவனுக்கும் சம்பாஷனை 0

சட்ட கோர்ட் பத்திராதிபருக்கும் குடியானவனுக்கும் சம்பாஷனை

குடியானவன்: அய்யா, பத்திராதிபரே! சில வக்கீல்கள் இரண்டு கக்ஷியிலும் பீஸ் வாங்கு கிறார்களாமே, இது வாஸ்தவமா? பத்திராதிபர் : ஏன் ? அதனால் என்ன தப்பிதம். ஒரு கக்ஷியில் பீஸ் வாங்கும்போது இரண்டு கக்ஷியில் வாங்கினாலென்ன? மூன்று கக்ஷியில் வாங்குகிற வக்கீல்கள் கூட இருக்கிறார்கள். அதனால் என்ன தப்பு? குடியானவன்: மூன்று கக்ஷியென்றால் என்ன? எனக்கு தெரியவில்லையே. பத்திராதிபர்: இது தெரியாதா? வாதி, பிரதிவாதி, சாட்சி ஆகிய மூன்று கட்சி. குடியானவன்: சாட்சி எதற்காகக் கொடுப்பார்? பத்திராதிபர்: சாட்சி திருடி இருப்பார், ஜெயிலுக்குப் போயிருப்பார், கடன்காரராயிருப்பார், பொய் சாட்சி சொல்லியிருப்பார், அதிகாரிகளுக்கு லஞ்சம் வாங்கிக் கொடுத்திருப்பார், இந்த வக்கீலைப்பற்றி ஏதாவது பேசி யிருப்பார். இவைகளையெல்லாம் கட்சிக்காரர்கள் பேச்சைக் கேட்டுக் கொண்டு பப்ளிக் கோர்ட்டில் அவமானப்படுத்தாமல் இருப்பதற்காக சாட்சி களும் வக்கீலுக்குப் பணம் கொடுப்பதுண்டு. குடியானவன்: இப்படி இரண்டு மூன்று பேரிடம் பணம் வாங்கினால் அது யோக்கியமாகுமா? பத்திராதிபர்: ஏன்? ஒருவனிடம் வாங்குவது...

காந்தியின் மகிமை இரண்டு கிராம வாசிகளின் சம்பாஷனை 0

காந்தியின் மகிமை இரண்டு கிராம வாசிகளின் சம்பாஷனை

சாமுண்டி: ஏ, அண்ணே மதுரை வீரா! எல்லோரும் காந்தியை மகாத்மா, மகாத்மா என்று கூப்பிடுகிறார்களே, அவர்கிட்ட ஏதாவது மகிமை இருக் கிறதா? மதுரைவீரன்: மகிமை என்றால் என்ன ? சாமுண்டி: மகிமை என்றால் தெரியாதா? சித்து விளையாட்டு. கல்லை கற்கண்டு செய்கிறது; சாணியை சந்தனம் செய்கிறது; கள்ளை பன்னீராக்குவது. இந்த மாதிரி சித்து விளையாட்டுக்கள்தான். மதுரைவீரன்: அடேயப்பா! இதுதானா சித்து என்கிறது! இதெல்லாம் அவருடைய சிஷ்யப் பிள்ளைகள் செய்துவிடுவார்கள். அதிலும் தமிழ் நாட்டிலிருக் கும் குட்டி மகாத்மாக்கள் இப்பொழுது கூட செய்து வருகிறார்கள். இது ஒரு அதிசயமா? சாமுண்டி: அதிசயம் சொல்லுகிறேன் கேளு. சேலம் ஸ்ரீமான் ஆதிநாராயணச் செட்டியாருக்கு வடஆர்க்காடு ஜில்லாவிலே சட்டசபை மெம்பராயிருக் கிறது. இது எப்படிப்பட்ட சித்து பார்த்தாயா? அப்புறம் சென்னைக் கார்பொரேஷனைப் பாரு – பார்த்தாயா? இன்னம் கேளு; இதுகளைவிட ஒரு பெரிய சித்து விளையாட்டு காட்டுகிறேன் பார். ஸ்ரீமான் எம்.கே. ஆச்சாரியாருக்கு இந்தியா சட்டசபை மெம்பராயிருக்கிறது....

நமது நிருபர்களுக்கு 0

நமது நிருபர்களுக்கு

நமது ‘குடி அரசு’ மீது அன்பு கொண்டு அடிக்கடி பற்பல முக்கிய விடயம் பற்றி கட்டுரை வரைந்து வரும் அன்பர்களுக்கு நமது நன்றியறி தலைத் தெரிவித்துக் கொள்ளுகிறோம். தமிழகத்தின் முன்னேற்றத்தில் ஆர்வங் கொண்டு எழுதப்பெறும் அவர்களின் ஒவ்வொரு வாக்கியத்தையும் போற்றுகிறோம். ஆனால் “குடி அரசு”க்கு விஷயதானம் செய்வோரில் பலர் , நமது பத்திரிகை வாரப் பத்திரிகை என்பதையும் சிறிய அளவில் பெரிய விஷயங் களை எடுத்துச் சொல்ல வேண்டியிருக்கிறது என்பதையும் அவர்கள் கருதுவ தில்லையென்றே நினைக்கவேண்டி யிருக்கிறது. நமது கட்டுரைக் கர்த்தாக் கள் பக்கம் பக்கமாய் வரைந்த நீண்ட கட்டுரைகளை அனுப்பிவிடுகிறார்கள். நாள்தோறும் வரும் இக்கட்டுரைகளை மட்டிலும் பூராவும் பிரசுரிப் பதாக வைத்துக் கொண்டாலும் 12 பக்கங்களுக்கு மேலாகி விடும். அக் கட்டுரைகளைச் சுருக்கி வெளியிடுவதென்றாலும் அதனை ஆக்கியோரின் கருத்து புலனாகாது போய்விடுமென அஞ்ச வேண்டியிருக்கிறது. ஆகவே, மிகுந்த மன வருத்தத்துடன் கஷ்டத்தோடு இத்தகைய கட்டுரைகளை தள்ளி விட நேருகிறது. ஆகையால்,...

மாயவரத்தில் மும்மூர்த்திகள் 0

மாயவரத்தில் மும்மூர்த்திகள்

சில தினங்களுக்கு முன்பாக மாயவரத்தில் மும்மூர்த்திகள் வந்து சபை கூடி ரகசிய யோசனைகள் செய்து முடிவான தீர்மானங்கள் செய்து கொண்டு போயிருக்கிறார்கள். அவர்கள் 1. ரைட் ஆனரபிள் சீனிவாச சாஸ்திரியார் 2. சட்ட மெம்பர் சர்.சி.பி. ராமசாமி ஐயர் 3. அட்வகேட் ஜெனரல் கனம் வெங் கட்டராம சாஸ்திரியார் ஆகிய மூவருமேயாகும். இந்த மும்மூர்த்திகளும் சேர்ந்து தற்கால நிலைமையில் பிராமணர்கள் எப்படி உத்தியோகங்கள் பெறுவது, பிராமண வக்கீல்கள் இனி எப்படி பிழைப்பது, பிராமணரல்லா தார்களை ஏய்ப்பதற்கு வழி யென்ன என்று யோசித்து முடிவு செய்துகொண்டு போயிருக்கிறார்களென்றே நினைக்கிறோம். எல்லாம் ரகசியத்திலேயே யிருக்கிறது. குதிரை எப்பொழுது முட்டையிடுமோ பார்ப்போம். குடி அரசு – செய்தி விளக்கம் – 02.05.1926

புது இறக்குமதி 0

புது இறக்குமதி

இந்தியாவுக்குப் புதிதாக ஒரு கவர்னர் உத்தியோகம், ஒரு லார்ட் பட்டம், ஒரு ரைட் ஆனரபிள் பட்டம் ஆக மூன்று புதுமைகள் இறக்குமதி ஆகிவந்தது. அந்த மூன்றும் பிராமணர்களுக்கே போய்விட்டது. அதாவது ளு.ஞ. சின்னா, லார்ட் சின்னா, ரைட் ஆனரபிள் சீனிவாச சாஸ்திரி ஆகிய மூன்று பிராமணர்களுக்கும், பிளேக்கோ, இன்புளுவென்சாவோ, எக்ஸ் சேஞ்சு நாணய மாற்றுப் பஞ்சமோ முதலிய புதுவியாதிகள் இறக்குமதி யானால் அது முழுமையும் பிராமணரல்லாதாருக்குத்தான் கிடைக்கிறது. பிராமணரல்லா தாரின் பாக்கியமே பாக்கியம். குடி அரசு – பெட்டிச் செய்தி – 02.05.1926

“நவசக்தி” யின் துக்கம் 0

“நவசக்தி” யின் துக்கம்

“சுயராஜ்யக் கக்ஷி அழிந்து ஒழிய வேண்டுமென்பது திரு. ராஜ கோபாலாச்சாரியாரின் கருத்தெனத் தெரிய வருகிறது” என்று ‘நவசக்தி’ தன் 30.4.26 ² தலையங்கத்தில் துக்கப்பட்டு ஆச்சாரியார் மீது சீறுகிறது. சுய ராஜ்யக் கட்சியின் தோற்றத்தால் காந்தியடிகள் ஒடுங்கினார், ஒற்றுமை குலைந்தது, ஒத்துழையாமை மறைந்தது, வகுப்புப் பூசல் கிளம்பியது என்று சதா ஓலமிட்டுக் கொண்டிருந்த ‘நவசக்தி’க்கு இப்பொழுது சுயராஜ்யக் கட்சி ஒழிந்து போவதில் இவ்வளவு கவலை வரக் காரணம் தெரியவில்லை. சுய ராஜ்யக் கட்சி ஒழிந்தால் உலகம் முழுகிப் போகுமோ அல்லது ‘நவசக்தி’க்கு செல்வாக்கு குறைந்துப் போகுமோ என்கிற இரகசியத்தை நாம் அறிய வில்லை. குடி அரசு – செய்தி விளக்கம் – 02.05.1926

பிராமண அகராதி  வினா – விடை 0

பிராமண அகராதி வினா – விடை

வினா : ஆச்சிரமம் என்றால் என்ன? விடை : காந்தர்வ விவாகமும் ராக்ஷச விவாஹமும் நடக்கு மிடங்கள். வினா : சுயராஜ்யம் என்றால் என்ன? விடை : பிராமணர்கள் உத்தியோகமும் பதவியும் அதிகாரமும் பெறுவதுதான் சுயராஜ்யம். வினா : பிராமணரல்லாதார்களுக்கு உத்தியோகமும் பதவியும் அதிகாரமும் வந்தால் அதற்குப் பெயரென்ன? விடை : அது அதிகார வர்க்கத்தின் ஆட்சி அல்லது அன்னிய ஆட்சி. வினா : தேச சேவை யென்றால் என்ன? விடை : பிராமணர்கள் பின்னால் திரிந்துகொண்டு ஜஸ்டிஸ் கட்சி யைத் திட்டுவது போல் பிராமணரல்லாதாரைத் திட்டுவதும், பிராமணர்களிடம் பணம் வாங்கிக் கொண்டு அவர்களை ‘தலைவர்’, ‘தமிழ்நாட்டுக் கர்ணன்’, ‘கலியுகக் கர்ணன்’, ‘மகாத்மாவின் சிஷ்யர்’ என்று சொல்லி பிராமண ரல்லாதாரை வஞ்சித்து பிராமணர்களுக்கு ஓட்டு வாங்கிக் கொடுப்பதுதான் தேச சேவை ஆகும். வினா : தேசத் துரோகம் என்றால் என்ன? விடை : பிராமணரல்லாதார் நன்மையைப் பற்றிப் பேசுவதும் எழுதுவதும் தேசத்...

ஸ்தல ஸ்தாபனங்களில் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் 0

ஸ்தல ஸ்தாபனங்களில் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம்

வகுப்புவாரிப் பிரதிநிதித்துவமே தற்கால அரசியல் முறைக்கு ஏற்ற தென்றும், வகுப்புப் பூசலும் சமயச் சண்டையும் கிளம்பாமலிருப்பதற்கு வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் நல்குவதே ஏற்ற மருந்தென்றும் அறிஞர் பலரும் கூறுகின்றனர். சென்ற ஏப்ரல் மாதம் 10 – ² பெங்களூர் முனிசிபல் சபையார் இத்தகைய சிறந்ததொரு முடிவுக்கு வந்துள்ளார்கள். அச்சபையில் இனி எவரேனும் ஓர் எஞ்சினீர் நியமனஞ் செய்யப்படுவாரெனின் அவர் பிராமணரல்லாதவராயிருத்தல் வேண்டுமென தீர்மானமொன்று கொண்டு வரப்பட்டு பல பார்ப்பனர்களின் எதிர்ப்புக்கிடையே நிறைவேறியது. மற்ற நகரசபைகளுக்கெல்லாம் ஓர் வழி காட்டியாய் நடந்து கொண்ட பெங்களூர் நகரசபையைப் போற்றுகிறோம். நம் நாட்டிலுள்ள இதர முனிசிபல் சபை, ஜில்லா போர்டு போன்ற ஸ்தல ஸ்தாபனங்களும் பெங்களூர் நகரசபையைப் போன்று உத்தியோகம் நியமிப்பதில் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தைக் கையாடினால் பெரிதும் நலம் பயக்குமென்று கூறுகிறோம். நாட்டிலே தற்காலம் வகுப்புப் பகை வளர்ந்து வருவதற்குக் காரணம் சமூக வாரியாக உத்தியோகம் நல்கப்படவில்லை என்பது பற்றியேயாகும். ஆதலால், தற்காலம் குடிமக்கள் கையிலிருக்கக் கூடிய...

மகாத்மாவின் நன்றியறிதல் 0

மகாத்மாவின் நன்றியறிதல்

சபர்மதியில் ராஜி ஒப்பந்தம் முடிந்த பிறகு ஸ்ரீமான் ஜெயக்கர் மகாத்மா விடம் சென்று ”இந்த ராஜீயை உண்டு பண்ணியதிற்காக தங்களுக்கு நன்றி செலுத்துகிறேன்” என்று சொன்னாராம் . அதற்கு மகாத்மா “நானும் உங்க ளுக்கு நன்றியுள்ளவனாயிருக்கிறேன்” என்று சொன்னாராம். மகாத்மா எதற்காக இந்த விஷயத்தில் ஸ்ரீ ஜெயக்கருக்கு நன்றி செலுத்த வேண்டும் என்கிற கேள்வி இதில் பிறக்கக் கூடும். அது எதற்கு என்று யோசிப்போமானால், சுயராஜ்யக் கக்ஷியார் உத்தி யோகம் ஒப்புக்கொள்ளாத தன்மையின் திருட்டுத்தனத்தை வெளியாக்கிய தற்காகத்தான். குடி அரசு – பெட்டிச் செய்தி – 02.05.1926

இந்தியா சட்டசபையும்                           சென்னை பிராமணர்களும் 0

இந்தியா சட்டசபையும் சென்னை பிராமணர்களும்

ஆந்திரா காங்கிரஸ் கமிட்டியார்கள் இந்தியா சட்டசபைத் தேர்தலுக்கு அபேக்ஷகர்களை நிறுத்தியாய் விட்டது. அதாவது, மூன்று ஸ்தானங்களுக் கும் மூன்று பிராமணர்களையே நிறுத்தியாய் விட்டது. அவர்களின் பெயர் களாவன:- 1. வி.வி. ஜோகைய பந்துலு 2. டி. பிரகாசம் பந்துலு 3. சி. துரைசாமி அய்யங்கார் முதல் இரண்டு பேர்களும் தெலுங்குப் பிராமணர்கள்; மூன்றாவதவர் தமிழ் அய்யங்கார் பிராமணர். ஆக மூன்று பேரும் பிராமணர்களேயாவார் கள். ஆந்திரா தேசம் சுமார் 10 ஜில்லாக்களையுடையது. இதில் நூற்றைம்பது லக்ஷம் ஜனங்களுக்கு மேல் மகமதியரல்லாதவர்கள். அதாவது (பிராமண ரல்லாத) இந்துக்கள். இந்த ஒன்றே முக்கால் கோடி பிராமணரல்லாதவர்கள் அடங்கிய சமூகத்தில் இந்தியா சட்டசபைக்கு அபேக்ஷகராய் நிற்பதற்கு ஒரு பிராமணரல்லாதார்கூட கிடைக்கவில்லை என்றால், அதாவது இந்தியா சட்டசபைக்கு நிற்க ஒரு பிராமணரல்லாதாருக்குக் கூட யோக்கியதை இல்லை என்றால் இவர்கள் சுயராஜ்யம் அடைய எப்படி யோக்கியதை உடைய வராவார்கள். மகமதியர்களில் யோக்கியதை உள்ளவர்கள் இருக்கிறார்கள். கிறிஸ்த வர்களில் யோக்கியதை...

நமது பத்திரிகை 0

நமது பத்திரிகை

“குடி அரசு” ஆரம்பமாகி ஒரு வருஷம் முடிந்து இரண்டாம் வருஷம் ஆரம்பமாகிவிட்டது. இவ்வொரு வருஷ காலமும் “குடி அரசு” தன்னால் கூடியதை ஒளிக்காமல் உண்மையோடு உழைத்து வந்திருக்கிறது என்பதைப் பற்றி நாமே உணர்ந்து திருப்தி அடைகிறோம். “குடி அரசை” ஆதரித்தும் ஆசி கூறியும் வரும் சமாசாரக் கடிதங்களிலிருந்தே இதை உணரு கிறோம். இதுவரை “குடிஅரசி” ன் தொண்டைப் பற்றிச் சிலாகித்து சுமார் முந்நூறு நானூறு கடிதங்களும் “குடிஅரசி”ன் மீது குற்றம் சுமத்தி சுமார் 3,4 கடிதங் களும் நமக்குக் கிடைத்திருக்கின்றன. சிலாக்கியமாய் எழுதியவர் களைப் பற்றி இதில் எழுத இடமில்லை; எழுதினாலும் தற்புகழ்ச்சியாக முடியும். ஆனாலும் குற்றங் கூறி எழுதியவர்களைப் பற்றி எழுதுவதற்கு இதில் இடமுண்டு. அதாவது, குற்றங்கண்டு எழுதிய கனவான்கள் நான்கு பேர்; யாரென்றால், 1. ஸ்ரீமான் எ. ரெங்கராம் நாயக்கர், ஆனைமலை. 2. ஸ்ரீமான் சுப்பிரமணிய ஐயர், நெரூர். 3. ஸ்ரீமான் இராஜரெத்தின முதலியார், காஞ்சீவரம். 4. ஸ்ரீமான்...

சூத்திரன் 0

சூத்திரன்

“தோலைக் கடித்து, துருத்தியைக் கடித்து, மெள்ள மெள்ள வேட்டை நாய் ஆகிவிட்டது” என்பதாக தமிழ் நாட்டுப் பழமொழி ஒன்று உண்டு. அதுபோல் தற்காலத்திய நமது அரசாங்க நிருவாகம் பார்ப்பனரல்லாதார் சுயமரியாதை விஷயத்தில் வேண்டுமென்றே கொடுமை செய்து கொண்டு வரத் துணிந்து விட்டதென்றே நினைக்க வேண்டியிருக்கிறது. அதிலும் இது சமயம் தமிழ் மக்கள் பெரும்பாலும் அரசியல் முதலியவைகளைக் கூட லக்ஷியம் செய்யாமல் தங்கள் சுயமரியாதையைப் பெருக்குவதே முக்கிய நோக்கமாகக் கொண்டு உயிரைக் கொடுத்து வேலை செய்து கொண்டிருக்கும் சமயத்தில் அரசாங்கம் இவ்வளவு யோக்கியப் பொறுப்பற்ற தன்மையாய் நடக்க கூடியதாய் இருந்தால், சாதாரண காலங்களில் எப்படி நடக்க மாட்டாது என்பதைப் பொதுமக்கள் யோசித்துப் பார்க்க வேண்டும். இந்தத் தடவை கூட்டப்பட்ட சென்னை சட்டசபைக் கூட்டத்தில், ஸ்ரீமான் சல்டானா என்கிற ஒரு சட்டசபை அங்கத்தினர் ஸ்தல ஸ்தாபன இலாக்காவில் சென்ற ஆறு மாதங்களில் எத்தனை ஸ்தானங்கள் சர்க்காரால் நியமனம் செய்யப்பட்ட தென்றும், நியமனம் செய்யப்பட்டவர்கள் எந்த...

இனி செய்ய வேண்டியது என்ன? 0

இனி செய்ய வேண்டியது என்ன?

மத்திய மாகாண அரசாங்கத்தார் மந்திரிகளுக்கென்று மாற்றப்பட்டி ருந்த இலாக்காக்களை எடுத்துக்கொண்டு இனிமேல் மந்திரிகள் இல்லாமலே சகல நிர்வாகத்தையும் தாங்களே நடத்துவதென்று தீர்மானித்து விட்டார்கள். இதன் பலனாய் இரட்டையாட்சி ஒழிந்ததென்றே வைத்துக் கொள்ளலாம். மத்திய மாகாணத்தில் இரட்டை ஆட்சியை ஒழித்த பெருமையை சுயராஜ்யக் கக்ஷியாருக்கே கொடுத்து விடலாம். சுயராஜ்யக் கட்சியாருக்கு இந்தப் பெரு மையை உண்டாக்கிக் கொடுத்த பெருமையை மகாத்மா சொற்படி நடப்பதாகச் சொல்லிக்கொண்டு சுயராஜ்யக் கட்சிக்கு உதவி செய்த ஸ்ரீமான் முதலியார் போன்ற உண்மைச் சிஷ்யர்களுக்குக் கொடுத்துவிடலாம். ஆனால் தேசத் திற்கு இதனால் என்ன லாபம். மந்திரிகளின் சம்பளம் சர்க்காருக்கு இதனால் மீதியாய் விட்டது. இரட்டை ஆட்சி ஒழிந்து சர்க்காரின் எதேச்சாதிகார ஒத்தை ஆட்சி உறுதியாய் விட்டது. சுயராஜ்யம் கிடைத்து விட்டதா? உரிமை கிடைத்து விட்டதா? சுயராஜ்யத்திற்காவது உரிமைக்காவது ஏதாவதொரு அறிகுறியாவது ஏற்பட்டிருக்கிறதா? இரட்டை ஆட்சியை ஒழித்த பிறகு இரட்டை ஆட்சியை ஒழிக்கப் போன சுயராஜ்யக் கட்சியாருக்கு மறுபடியும் சட்டசபையில் என்ன...

சத்தியமூர்த்தியும் கதரும் 0

சத்தியமூர்த்தியும் கதரும்

சில மாதங்களுக்கு முன்னர் சேலத்திலே கதர் சாலையைத் திறந்து வைத்த சென்னை டாக்டர் சி. நடேச முதலியார் அதுசமயம் கதராடை அணிந்து வராமல் சுதேச பட்டுடைகளைத் தரித்திருந்ததைப்பற்றி பிராமண சிகாமணியான ஸ்ரீமான் சத்தியமூர்த்தி எள்ளி நகையாடினார். அதாவது, டாக்டர் முதலியார் மில்லில் நெசவான பட்டாடை தரித்துக்கொண்டு கதர் சாலையைத் திறந்து வைத்ததானது, கொள்கைக்காக நெற்றியில் விபூதியும் வயிற்றுப் பிழைப்புக்காக வயிற்றில் நாமமும் தரித்திருப்பவன் கதையாக யிருக்கிறதென்று கூறினார். அதற்கு டாக்டர் முதலியார் இந்தியாவில் கையி னால் நெசவானாலும் ஆலை நெசவானாலும் இரண்டையும் சுதேசிய மென்றே தாம் கருதுவதாகவும் ஆகையால் சுதேசியத்தை ஆதரிக்க வேண்டியதே எங்கள் கொள்கை என்றும் உள்ளதை வெளிப்படையாகக் கூறினார். ஆனால் சத்தியத்திற்கே உழைக்கிறோமென்று சொல்லும் சத்திய கீர்த்தியின் பிள்ளைகளான சத்தியவந்தர் குலத்திலுதித்த நித்தியங்கத்தி “ஸ்ரீமான் சத்தியமூர்த்தி புதுவருஷத் திருநாளன்று திருவல்லிக்கேணி கடற்கரையில் நடந்த பெருங்கூட்டத்தில் முற்றிலும் பரதேசி மயமாய் விளங் கினார்” என்று “லோகோபகாரி”யில் பாரி எழுதியிருக்கிறார். இப்படியிருக்க,...

“சுதேசமித்திர”னின் தேசபக்தி 0

“சுதேசமித்திர”னின் தேசபக்தி

பெருந்தேசபக்தர்களெனப் படாடோபம் செய்து வருகின்றவர்க ளான பிராமணர்கள் இந்தியாவின் சுயராஜ்யத்திற்காகப் பாடுபடுபவர்களல்ல வென்றும், அவர்கள் செய்துவரும் ஆரவாரமனைத்தும் தங்கள் இனத்தவர் களான பிராமணர்கள் மல்கிய பிராமண ராஜ்யம் நிலைநாட்டவேயல்லாமல் வேறில்லை யென்று நாம் பன்முறை கூறிவந்திருக்கிறோம். நாளடைவில் இவ்வுண்மை புலனாகிவருகிறதென்பதை அடியிற்காணும் உரைகளால் அறிந்து கொள்ளலாம். திரு. விபினசந்திரபாலகர் சமீபத்தில் நடந்த கல்கத்தா இந்து முஸ்லீம் சச்சரவைப் பற்றி எழுதுங் காலையில், இத்தகைய அமளி நாட்டில் பரவாதிருக்க வேண்டுமானால் விரைவில் சுய ஆட்சி கொடுக்க வேண்டு மென வரைந்து விட்டு, தற்சமயம் “சட்டம் ஒழுங்கு சம்மந்தப்பட்ட பொறுப்பும் மந்திரிகள் வசம் ஒப்புவிக்கப்பட்டால் அவர்கள் ஜாதி வேற்று மை பாராமல் சரியாக வேலை நடத்துவார்கள்” என்றும் எழுதியுள்ளார். ஒருவகையில் திரு. பாலரின் கருத்து போற்றத்தக்க தொன்றாகும். ஏனெனில் மந்திரிகள் ஜனங்களின் பிரதிநிதிகளாதலாலும் அவர்கள் பாமர மக்களிடம் நெருங்கிப் பழகியவர்களாதலாலும் நாட்டில் அமைதி நிலவ எவ்வாறு நடந்து கொள்ள வேண்டுமென்பதை அறிந்து அதற்கேற்றாப்போல் ‘சட்டம்...

சட்டசபைக்கு ஆள் பிடிக்கிற                                             “ தேர்தல் கங்காணிகள்” 0

சட்டசபைக்கு ஆள் பிடிக்கிற “ தேர்தல் கங்காணிகள்”

தமிழ்நாட்டிலே நிலவும் பத்திரிகைகளில் பெரும்பாலும் தனது மனசாக்ஷிக்கு விரோதமாக எழுதி தன் சுயமரியாதையை இழந்து வருகின்றன. முதுகெலும்பில்லாமல் இருக்கும் இவைகள், எவ்வளவுதான் யோக்கியதை யாயிருப்பதுபோல – போலித்தனமாக கைவீசி காலுதறி நடப்பதாகப் பாவனை செய்துவரினும் அவைகளுக்கு முதுகெலும்பில்லாத தத்துவத்தை நாட்டார் அறியாமலிருக்க மாட்டார்கள். இப்பத்திரிகைகளெல்லாம் உண்மையறிய முடி யாமலோ, பலக்குறைவாலோ வேண்டுமென்றே சூழ்ச்சிக்காரர்கள் பக்கமாக வேயிருந்து வருகின்றன. ஆனால் பிறருடைய உதவியை நாடாது தன் கால் பலத்திலேயே நிற்கக்கூடிய பத்திரிகைகளில் ஒன்றாகிய நமது “நாடார் குலமித் திரன்” சுயராஜ்யக் கக்ஷியினுடைய சூழ்ச்சியின் உண்மை கண்டு தைரியமாய் வெளிவந்து எழுதியிருப்பதில் ஒருசிலவற்றை இங்கு குறிப்பிடுகிறோம். “சட்டசபைக்கு ஆள்பிடிக்கிற கங்காணிமார்கள் (சுயராஜ்யக் கக்ஷி யார்) தேசமெங்கும் உலாவித் திரிகின்றனர். . . சொற் கேளாப் பிள்ளையினால் குலத்துக்கீனமென்ற பழமொழி இவர்களுக்கே தகு மென்று மகாத்மா காந்தி மௌன யோகத்திலிருந்து விட்டார். நமது நேரு கங்காணி, தமது தோழர்களையெல்லாம் பிரிய விட்டு விட்டுத் துடித்துக் கொண்டிருக்கிறார்....

மூட்டை சோதனை  பிராமணர்கள் தங்கள் பின்னால் திரியும் பிராமணரல்லாதாரிடம் வைத்திருக்கும் மதிப்பு 0

மூட்டை சோதனை பிராமணர்கள் தங்கள் பின்னால் திரியும் பிராமணரல்லாதாரிடம் வைத்திருக்கும் மதிப்பு

சென்ற மாதத்திற்கு முன் மதுரையில் நடந்த மாகாண காங்கிரஸ் கமிட்டிக் கூட்டம் முடிந்து எல்லோரும் திரும்பி ரயிலுக்கு வரும்போது ரயில்வே மேடையில் ஸ்ரீமான் சீனிவாசய்யங்காருடைய சட்டைப் பையிலி ருந்த சிறு பணப்பை காணாமல் போய்விட்டதாம். இதற்காக வேண்டி அவர்க ளுடன் சென்ற இரண்டு முக்கியமான பிராமணரல்லாதாரின் மூட்டையையும் மடியையும் சோதனைப் போட்டுப் பார்த்ததாக ஒரு நிரூபர் எழுதியிருக்கிறார். இதை நாம் கேட்கும் போது நமது காதில் நாராசம் காய்ச்சி ஊற்றியது போலிருந்தது. அவ்விரண்டு பிராமணரல்லாதாருள் ஒருவர் 5,6 வருஷமாய் காங்கிரஸிலுழைத்துவரும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அங்கத்தினர். மற்றொருவர் செல்வாக்கும் மதிப்புமுள்ள பிரபலஸ்தர். இவர்கள் இருவரும் ஸ்ரீமான் சீனிவாசய்யங்கார் பணப்பைக் காணா மல் போனதற்காக எந்தக் காரணத்தைக் கொண்டானாலும், தங்கள் மூட்டை யைப் பிரித்துக் காட்டினதற்கு நாம் மிகவும் வெட்கப்படுகிறோம். அல்லாம லும் இந்தப் பிராமணர்களுக்கு இவர்களைப் பரிசோதனை செய்யும்படி யானதோர் தைரியமேற்பட்டதானது பிராமணரல்லாதாரின் நிலையை இகழ்ந்து காட்டுகிறது. இன்னும் சிலருக்கு...

காந்தியடிகளும்                                               திரு. கலியாணசுந்திர முதலியாரும் 0

காந்தியடிகளும் திரு. கலியாணசுந்திர முதலியாரும்

“நவசக்தி” ஆசிரியர் திரு.வி.கலியாணசுந்திர முதலியார் ஒரு பெரிய காங்கிரஸ் பக்தராம். காந்தியடிகள் கீறிய கோட்டைத் தாண்டாதவராம். இத்தகைய சீரியர் சின்னாட்களாக ‘காங்கிரஸ் தலைவர்’களெனப்படும் சிலரு டன் சேர்ந்துகொண்டு தமிழ்நாட்டில் திக் விஜயம் செய்து வருகின்றார். இவரு டன் சேர்ந்து வருபவர்கள் உண்மையான காங்கிரஸ்வாதிகளா? என்பதையும், வாஸ்தவத்திலேயே தேச நன்மைக்கு பாடுபடுகிறவர்களா வென்பதையும் கவனிப்போம். உண்மையான காங்கிரஸ்காரர் யார் ? என்ப தைப்பற்றி காந்தி அடிகள் கூறுவதாவது. காங்கிரஸ்காரருக்கு பின்வரும் லக்ஷணங்கள் இருக்க வேண்டும். 1. கதரில் பூரண நம்பிக்கை கொள்ள வேண்டும். அவர் தற்காலிக உடையாகவோ அல்லது வெளி வேஷத்திற்கான உடையாகவோ கதரை அணிபவராக இருக்கக்கூடாது. உண்மையான ஆர்வத்துடன் கதர் அணிபவராக இருக்க வேண்டும். 2. தீண்டாமை விலக்கில் நம்பிக்கை கொண்டவராக இருக்க வேண்டும். தீண்டத்தகாதவரென கூறப்படுகிறவருடன் அவர் தாராளமாகக் கலந்துறவாடக் கூடியவராயிருக்க வேண்டும். பல வகுப்பின ருள்ளும் ஒற்றுமை இருக்க வேண்டும் என்பதில் நம்பிக்கைக் கொண்டவராக இருக்க வேண்டும். 3....

சுயராஜ்யக் கக்ஷியும் முகம்மதியரும் 0

சுயராஜ்யக் கக்ஷியும் முகம்மதியரும்

சென்ற வாரம் நமது பத்திரிகையில் இதே தலைப்பின் கீழ் வெளிவந்த விஷயத்தை நேயர்கள் அறிவார்கள். அதில் எல்லைப்புற மாகாண சீர்திருத்தத்தைக் கோரிய சுயராஜ்யக் கக்ஷியைச் சேர்ந்த முகம்மதியர்களின் பிரேரணையை, பண்டித நேரு முதலிய சுயராஜ்யக் கக்ஷியைச் சேர்ந்த தலைவர்கள் சில மொண்டிச் சமாதானங்களைச் சொல்லி முகம்மதியர்கட்கு விரோதமாய் அரசாங்கத்தார் சார்பில் வோட்டுக்கொடுத்து அத்தீர்மானத்தை வீழ்த்தியதினால் சுயமரியாதையுள்ள முகமதியர்கள் சுயராஜ்யக் கக்ஷியி னின்று விலகிக் கொண்டனர் என்று எழுதியிருந்தோம். அக்க்ஷியிலுள்ள முகமதிய பிரதமருள் ஒருவரான மௌல்வி மகமது ஷாபி அவர்கள், தான் சுயராஜ்யக் கக்ஷியிலிருந்து விலகிக் கொண்டதோடல்லாது இந்தியா சட்ட சபை ஸ்தானத்திலிருந்தும் விலகிக் கொண்டதாகத் தெரிகிறது. இது நாம் கூறி யதை பலப்படுத்தும். தன் காலில் நிற்கக்கூடிய சுயமரியாதையுள்ள எவரும் இனி அக்கக்ஷியிலிருக்க மாட்டாரென்பது துணிபு. குடி அரசு – செய்தி விளக்கம் – 25.04.1926

சபர்மதி ராஜி 0

சபர்மதி ராஜி

சபர்மதி ஆச்சிரமத்தில் மகாத்மா காந்தி முன்னிலையில் சுயராஜ்யக் கக்ஷிக்கும் பரஸ்பர ஒத்துழைப்புக் கக்ஷிக்கும் ராஜி ஏற்பட்டுவிட்டதாம். ஆனால், மகாத்மா அதில் கலந்து கொள்ளவே கிடையாது. மகாத்மா காந்திக்கு முன்னிலையில் சபர்மதி ஆச்சிரமத்தில் ராஜி யேற்பட்டுவிட்டதென்று சொன்னால், அதில் ஒரு பெருமையும், பொதுஜனங்களுக்கு ஒரு நம்பிக் கையும் ஏற்பட்டுவிடுமென்ற எண்ணத்தினால் செய்த சூழ்ச்சியேயல்லாமல் வேறல்ல. ராஜியால் விளைந்த பலன், நாளுக்கு நாள் நகர்ந்துதடி அம்மானே என்றபடி சுயராஜ்யக் கக்ஷியார் உத்தியோகம் ஒப்புக் கொள்ளுவதுதான். அதாவது, “மந்திரிகள் தங்களுடைய கடமைகளைச் சரியாக நடத்து வதற்கு அவசியமான அதிகாரம், பொறுப்பு, சுயமாகச் செய்வதற்கு சக்தி முதலியவை கொடுக்கப்பட்டால் கவர்ன்மெண்ட் போதுமான அளவு இணங்கிவிட்டதாகக் கருதி சுயராஜ்யக் கக்ஷியார் மந்திரி பதவிகளை ஒப்புக்கொள்ளலாம். மந்திரி பதவிக்கு அவ்வித பொறுப் பும் சுதந்திரமும் கொடுத்திருக்கிறார்களா இல்லையா என்கிற விஷயம் அந்தந்த மாகாண சட்டசபை மெம்பர்களே தீர்மானித்துக் கொள்ள வேண்டியது. திரு. ஜெயகரும் திரு. நேருவும் இதை ஊர்ஜிதம் செய்ய...

திரு. ஆர்.கே.ஷண்முகஞ் செட்டியார் 0

திரு. ஆர்.கே.ஷண்முகஞ் செட்டியார்

அஷ்டதிக்குப் பாலகர்களான ஐயங்கார் கோஷ்டியார் சமீபத்தில் தமிழ் நாடெங்கும் சுற்றுப்பிரயாணம் செய்து வரும்போது திரு. ஆர்.கே. ஷண்முகஞ் செட்டியாரவர்களை பல கேள்விகளால் தூத்துக்குடியிலும், திருச்சியிலும் வளைத்துக் கொண்டார்கள். அக்கேள்விகளுள் முக்கியமான இரண்டிற்கு உண்மையிலே தன்னுள்ளத்திலே உறையும் அபிப்பிராயத்தை வெளிப் படையாய்க் கூறிவிட்டார். அவை வகுப்புவாரிப் பிரதிநிதித்து வத்தைப் பற்றியும் ஹிந்துமத பரிபாலனச் சட்டத்தைப் பற்றியுமாகும். திரு.ஷண்முகஞ் செட்டியார் இவற்றிற்குப் பதிலளிக்கு முகத்தான் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவமே நாட்டின் அமைதியைக் காக்கவல்ல தென்றும், வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்திற்காகக் காங்கிரசிலும் போராடப் போவதாகவும் கூறியுள்ளார். மத பரிபாலனச் சட்டத்தைப்பற்றிக் கூறும்போது இச்சட்டம் அருமையானதொரு சட்டமென்றும், சட்ட சபையில் இச்சட்டம் நிறைவேற்றப் பெறுதற்குத் தன்னுடைய உதவியையும் அக்காலத்தில் கொடுத்திருப்பதாகவும், இனி காங்கிரசோ அல்லது மற்றையோர்களோ அச்சட்டத்தை அழிப்பதற்கு முற்பட்டால் தன்னுடைய முழு பலத்தையும் செலுத்தி அச்சட்டத்தை நிலைநாட்ட முயலுவேன் என்றும் திரு.செட்டியார் விடையிறுத்துள்ளார். இவ்வாறு தன்னுள்ளத்திலே உறையும் எண்ணத்தை தைரியமாய்க் கூறியது ஆச்சரியத்தைக் கொடுக்காது. ஐயங்கார் கோஷ்டியில் சேர்ந்து...

ராஜியின் பலன்                                சுயராஜ்யக் கக்ஷியின் கதி 0

ராஜியின் பலன் சுயராஜ்யக் கக்ஷியின் கதி

“பயித்தியம் தெளிந்து போய்விட்டது. உலக்கையை எடுத்துக் கொண்டுவா கோவணங் கட்டிக்கொள்கிறேன்.” என்று ஒரு பழமொழி யுண்டு. அதாவது, ஒரு வாலிபனுக்குப் பெண்ணாசையால் பயித்தியம் பிடித் திருந்தது. அவன் கோவணமுமில்லாமல் நிர்வாணமாய்த் திரிந்து கொண்டி ருப்பது வழக்கம். அதனால் ஜனங்கள் அவனைப் பிடித்து விலங் கிட்டு ஒரு அறையில் மூடி வைத்திருந்தார்கள். கொஞ்சநாள் பொறுத்து அவ் வாலிபன் “தனக்கு பயித்தியம் தெளிந்து விட்டது. உலக்கை எடுத்துக்கொண்டு வாருங்கள், அதைக் கோவணமாகக் கட்டிக்கொள்கிறேன்” என்று சொன்னா னாம். அது போல் நமது ராஜீயக் கக்ஷிகளுக்குள் ராஜி ஏற்பட்டுப் போய் விட்டதாம்; காங்கிரசுக்கும் நல்ல காலமாம்; தங்கள் கக்ஷிக்கும் இனிமேல் குறைவில்லையாம்; இனி எல்லோரும் ஒத்து வேலைசெய்ய வேண்டியது தான் பாக்கியாம் என்பதாக இன்னும் என்னென்னவோ எழுதி பிராமணப் பத்திரிகைகள் ஏமாற்றுப் பிரசாரம் செய்கின்றன. பயித்தியம் தெளிந்ததாகச் சொல்லுபவன் எப்படி உலக்கையை கோவணம் கட்டிக்கொள்ளலாம் என்று நினைத்தானோ அதேபோல் சுயராஜ்யக் கக்ஷியார் மந்திரி வேலை ஒப்புக்கொள்ளுவதை...

தீண்டாமை 0

தீண்டாமை

“இந்தக் கிணற்றைத் திறந்து வைக்கும் வேலையை, ஒரு பெருமை யெனக்கருதி நீங்கள் எனக்களித்திருந்தாலும் உண்மையில் எனக்கு அதைத் திறந்து வைக்கக் கொஞ்சமும் மனமில்லை. அல்லாமலும் இதை ஒரு சிறுமையாகவே மதித்து மிகுந்த சங்கடத்துடனேயே இந்த வைபவத்தில் கலந்து கொள்ளுகிறேன். ஆதி திராவிடர்களுக்கென்று தனிக் கிணறுகள் வெட்டுவது அக்கிரமமென்பதே எனது அபிப்பிராயம். இவ்வாறு தனிக் கிணறுகள் வெட்டுவது, ஆதி திராவிடர்கள் நம்மைவிடத் தாழ்ந்தவர்கள், அவர்கள் நம்முடன் கலக்கத் தக்கவர்களல்ல என்று ஒரு நிரந்தரமான வேலியும் ஞாபகக் குறிப்பும் ஏற்படுத்துவதாகத்தான் அர்த்தமாகும். எதற்காக அவர்களுக்குத் தனிக்கிணறு வெட்டவேண்டும்? சிலர் ஆதி திராவிடர் களுக்கு நன்மை செய்வதாக வேஷம் போட்டு தாங்கள் உயர்ந்தவர்கள் என்பதை நிலை நிறுத்திக் கொள்ளத்தான் இவ்வித தர்மங்கள் உதவும். நமது கிணறு குளங்களில் ஆதி திராவிடர்களை ஏன் தண்ணீர் எடுக்க அநுமதிக் கலாகாது? பக்ஷிகளும் மிருகங்களும் குளங்களில் தண்ணீர் சாப்பிடுவதில் லையா? குளங்களுக்கு எங்கிருந்து தண்ணீர் வருகிறது என்பது உங்களுக்குத் தெரியாதா?...

ஸ்ரீமான் சி.வி.வெங்கட்ரமண அய்யங்காரின் தர்ம விளம்பரம் – சித்திரபுத்திரன் 0

ஸ்ரீமான் சி.வி.வெங்கட்ரமண அய்யங்காரின் தர்ம விளம்பரம் – சித்திரபுத்திரன்

சட்டசபைத் தேர்தல்கள் சமீபத்தில் வர வர அபேக்ஷகர்கள் அதிக மாய் விளம்பரமாகும்படி செய்து கொள்வது எங்கும் சகஜமானது. இதில் அபேக்ஷகர்கள் முன் செய்த வேலைகளையும் பின் செய்யப் போகிற வேலைகளையும் சொல்லுவதும் இயற்கை. ஆனால், நமது ஸ்ரீமான் சி.வி. வெங்கிட்டரமணய்யங்கார் அந்த இரண்டுமல்லாத புதிய ஒரு முறையைக் கண்டுபிடித்திருக்கிறார். அதென்னவெனில்:- ஒரு பெரிய தர்ம விளம்பரம். அதாவது, தான் 2 லக்ஷம் ரூபாய் தனது சொத்திலிருந்து தர்மம் செய்ய இருப்பதாகவும், அந்த தர்மங்கள் இன்ன இன்னாருக்கு உபயோகப்படத்தகுந்தது என்றும் சில ஓட்டர்களுக்கும் வோட்டுத் தரகர்களுக்கும் வாயில் தண்ணீர் ஊரும்படி வாய்பறை, பத்திரிகை பறையடிப்பதோடு நில்லாமல் திறப்பு விழாப் பறையும் அடித்தாகிவிட்டது. ஆனால், நடந்த விஷயந்தான் என்ன? “தர்ம பிரபு” ஸ்ரீமான் வெங்கிட்டரமணய்யங்கார் திறப்புவிழா ஆரம்பத்தில் தனது தர்மத்தின் பெருமையைப்பற்றி பேசியவைகளின் சுருக்கம் இதில் குறிப்பிடுகிறோம். இதிலிருந்தே பல விஷயம் தெரிந்து கொள்ளலாம். இது 14.4.26 -ம் தேதி “சுதேசமித்திரன்” 6-வது பக்கம்...

தேசோபகாரி 0

தேசோபகாரி

நம் நாட்டில் நாளுக்கு நாள் மேல் நாடுகளைப்போல் பத்திரிகைகள் பெருகி வருகின்றன. ஆனால், அவ்வாறு தோன்றும் பத்திரிகைகளில் நாட்டின் நலங்கருதி உண்மையான தொண்டாற்றி வருவதுதான் வழக்க மில்லாமலிருந்து வருகிறது. காரணமென்ன வெனில் பத்திரிகைகள் ஆரம் பிக்கும்போது அதன் ஆசிரியர்கள் எவ்வளவு உண்மையான நோக்கத்தோடு ஆரம்பித்தாலும் ஆரம்பித்த பின்னர் பத்திரிகை வளர்ச்சியின் அவசியத்தை பத்திராதிபர் கருத வேண்டி வந்துவிடுகிறது. பத்திரிகை வளர்ச்சியையும் அதனால் தமது கால nக்ஷமத்தையும் எதிர்பார்க்கும் பத்திராதிபர்கள் பத்திரிகையின் கொள்கைகளை தங்கள் மனச்சாட்சிப்படி நடத்திக்கொண்டு போக முடிகிறதில்லை. அப்படிப்பட்ட பத்திரிகைகள் பொது ஜனங்களை சீர்திருத்தத் தமது கொள்கை களை ஜனங்கள் பின்பற்றும்படி செய்ய முடியா மல் எந்த சமயத்தில் எப்படி நடந்தால் தனக்குப் பெரும்பான்மையான ஜனங் களின் ஆதரவும் செல்வாக்குள்ள ஜாதியாரின் தயவும் கிடைக்குமோ அப்படி நடந்துகொண்டு தனது மனச்சாக்ஷியை விற்றுவிட வேண்டிவருகிறது. இது நம் நாட்டின் துரதிஷ்டமே. தமிழர்களின் நலங்கருதி உண்மையாக உழைக்கும் பத்திரிகைகள் நாட்டிற் சொற்பமாயினும் ரங்கூனில்...

சமாதானமும் வந்தனமும் 0

சமாதானமும் வந்தனமும்

நமது “குடி அரசு” இரண்டு வாரம் நிறுத்தப்பட்டதைப் பற்றி அநேக ஆவலாதிகள் வந்தன. அவற்றில் ஒன்று இன்று யார் முகத்தில் முழித்தேனோ “குடி அரசு” வரவில்லையென்றும், மற்றொன்று “குடி அரசு” வராததால் இன்று முழுதும் சாப்பிட மனமில்லை யென்றும், மற்றொன்று “குடி அரசை” ஒழுங்காய் அனுப்புவதானால் அனுப்புங்கள் இல்லாவிட்டால் நிறுத்திவிட்டு என் பணத்தை திருப்பி அனுப்புங்கள், பத்திரிகை திங்கட் கிழமை தபால் நேரத்திற்குக் கிடைக்காவிட்டால் மனம் வருத்தப்படும் என்றும், ஒரு மகமதிய கனவான் மற்றொன்று இந்த ஒரு பத்திரிகையை ஒழுங்காய் நடத்த முடியா விட்டால் எப்படி உங்களை பிராமணரல்லாதார் பின்பற்ற முடியும், இது ஒன்றுதான் உள்ள நிலைமையை எழுதுவதால் அது கிடைக்கா விட்டால் மனது அவ்வளவு வருத்தப்படுகிறது என்றும், மற்றொருவர் திராவிடர்க ளுக்கு ஆசையிருக்கிறதே தவிர பிராமணர்கள் போல் காரியம் நடத்தத்தக்க சக்தியில்லை, வீணாய் அவர்களுடன் போட்டி போட்டு என்ன செய்வது, இந்த ஒரு சிறிய பத்திரிகையை சரியாய் நடத்தத் தங்களால்...

போலீஸ் நிர்வாகம் 0

போலீஸ் நிர்வாகம்

கொஞ்சகாலமாக போலீஸ் நிர்வாகம் வெகு தடபுடலாக இருந்து வருவ தாகவே சொல்லலாம். வீதிகளில் முக்கு முக்குக்கு போலீஸாரை நிறுத்தி வண்டிகளையும் மோட்டார்களையும் இடம் வலம் பிரித்து அனுப்புவது வெகு மும்முரமாயிருக்கிறது. இது ஒரு விதத்தில் நன்மை ஆனாலும் 15 அடி 20 அடி உள்ள குறுகிய ரோட்டுகளில் கூட போலீஸார் நடுவில் நின்று கொண்டு வண்டிகளை இடம் வலம் பிரிப்பது வேடிக்கையாயிருக்கிறது. ஒவ்வொரு சமயங்களில் போலீஸார் பாடு உயிருக்கே ஆபத்தாய் விடும் போலிருக்கிறது. சிற்சில போலீஸார் தங்கள் மேல் வண்டி ஏறட்டுமென்றே உறுதியாய் விலகா மல் நிற்கிறார்கள். அது சமயங்களில் வண்டிக்காரர்கள் பாடு வெகு கஷ்ட மாய்ப் போய்விடுகிறது. அல்லாமல் இந்த கொடுமையான வெய்யிலில் போலீஸ்காரர்கள் அசையாமல் நின்று கொண்டிருப்பதானது போலீஸாருக்கு பெரிய தண்டனை என்றுதான் சொல்ல வேண்டும். பார்க்கிறவர்கள் கண் ணுக்கு இந்த போலீஸார்களின் நிலை மிகப் பரிதாபமாகவே காணப் படுகிறதும் தவிர மாதம் 20, 25 ரூபாய் சம்பளமும்...

சுயராஜ்யக் கக்ஷியும் மகமதியரும் 0

சுயராஜ்யக் கக்ஷியும் மகமதியரும்

“ மகமதியர்கள் பெரும்பான்மையாயுள்ள இந்தியாவின் வட எல்லைப் புற மாகாணங்களுக்கு இந்தியாவின் மற்ற பாகங்களைப் போலாவது சீர்திருத் தங்கள் வழங்கப்படவேண்டும்” என்ற ஒரு தீர்மானத்தை இந்தியா சட்ட சபையில் ஒரு மகமதிய கனவான் பிரேரேபித்தபோது சுயராஜ்யக் கக்ஷியார் அதை எதிர்த்துத் தோற்கடிப்பதற்கு அநுகூலமாயிருந்தார்களாம். சில மகமதிய கனவான்கள் சுயராஜ்யக் கக்ஷித் தலைவரான பண்டித நேருவை எங்கள் விஷயத்தில் ஏன் இப்படிச் செய்தீர்கள் என்று கேட்டதற்கு சீர்திருத் தமே போதுமானதல்ல, உபயோகப்படக்கூடியதல்ல; ஆதலால் அது உங்க ளுக்கு ஆகாது; அதினால்தான் நாங்கள் ஆnக்ஷபித்தோம் என்று பதில் சொன்னாராம். சுயராஜ்யக் கக்ஷி பிராமணருக்கு மாத்திரம் சீர்திருத்தத்தின் பலனாய் ஏற்பட்ட சட்டசபையும், அதில் ஏற்படும் கமிட்டி அங்கத்தினர் பதவி யும் 4000, 5000 சம்பளமுள்ள சட்டசபை அக்கிராசனம் முதலிய ஸ்தானங் களும் சுயராஜ்யம் பெற உபயோகப்படுத்திக் கொள்ளக்கூடியதும் அதற்குப் போதுமானதுமாயிருக்கிறது. ஆனால், எல்லைப்புற மகமதியர்களுக்கு மாத்திரம் பிரயோஜனமில்லையாம், போறாதாம். இது சிறு குழந்தைகள் ஏதாவது கேட்டால்...

மகாத்மாவுக்கு                                               பொது ஜனங்களிடம்                                   உள்ள நம்பிக்கை 0

மகாத்மாவுக்கு பொது ஜனங்களிடம் உள்ள நம்பிக்கை

கொஞ்ச நாளைக்கு முன்பு ஒரு நூல் சந்தாதாரர், தன் கைப்பட நூற்று நூற்போர் சங்கத்திற்கு அனுப்பிவரும் நூல்களை தனக்கு திருப்பி அனுப்பி னால் அதன் கிரையத்தை கொடுத்துவிடுவதாகவும், அந்த நூலைக்கொண்டு நெய்த துணியை அணிய தான் ஆசைப்படுவதாகவும் எழுதியிருந்தாராம். அதற்கு மகாத்மா பதில் எழுதுகையில் அவரவர்கள் நூலை அவரவர்களுக்கு திருப்பி அனுப்பிவிட்டால் மறுபடியும் அந்த நூலையே சந்தாவுக்கு அனுப்பி விடுவார்கள் ஆதலால், அந்த நூலை சலவை செய்து அனுப்பக்கூடும் என்று எழுதினாராம். தினம் நூற்று, மாதா மாதம் நூல் அனுப்புகிறோம் என்று பிரமாணம் செய்து உறுதிமொழியில் கையொப்பமிட்ட நூல் சந்தாதாரரிடமே இவ்வளவு அவநம்பிக்கை இருக்குமானால் மற்றவர் களிடம் எவ்வளவு நம்பிக்கை இருக்கும்? இதிலிருந்து கொஞ்ச காலத்திற்கு முன் மகாத்மாவுக்கு வெறும் ஆள்களிடம் இருந்த நம்பிக்கைக்கூட, உறுதிமொழி கொடுத்தவர் களிடம் இல்லைபோல் இருக்கிறது. தன்னிடம் இருக்கும் உறுதி, ஆட்டம் கொடுத்தவுடன் எல்லாரிடமும் சந்தேகப்படுவது இயற்கைதான். குடி அரசு – செய்தி விளக்கம் –...

சர். செட்டியாரும் டாக்டர் அம்மையாரும் 0

சர். செட்டியாரும் டாக்டர் அம்மையாரும்

ஒத்துழையாமையின் போது ஜயிலுக்கு ஜனங்கள் போய்க் கொண்டி ருந்ததை ஒப்புக்கொள்ளாத ஸர்.பி. தியாகராய செட்டியார் ஜயிலுக்குப் போன ஸ்ரீமான் எஸ்.ராமநாதன் அவர்களுக்கு பிரத்தியேக சௌகரியம் செய்து கொடுக்க சம்மதிக்கவில்லையாம். இது குற்றமல்ல வென்று கஷ்டப்பட்ட ஸ்ரீமான் எஸ்.ராமநாதனே ஒப்புக்கொண்டாலும், மறைந்து வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த நமது பிராமணர்களுக்கு ஸர்.செட்டியார் “டயராய்” விட்டார். அவருடைய கக்ஷி தேசத்துரோக கக்ஷியாய்ப் போய்விட்டது. ஆனால் பஞ்சாப் படுகொலையானபோது ஸ்ரீமதி பெசண்டம்மையார் “ஜலி யன் வாலாபார்க்கில் நிரபராதிகளை டயர் சுட்டது சரி; இவர்கள் கல்லு போட் டார்கள்; அதற்கு டயர் குண்டு போட்டார்; இதிலொன்றும் தப்பில்லை” என்று சொன்னார். அதைப்பற்றி கேள்ப்பாரில்லை. அவருடனும் அந்தம்மாள் கக்ஷியிலும் அநேக பெரிய “மதிப்பு வாய்ந்த” பிராமணர்கள் சூழ்ந்து கொண்டு சபை நடுவிலிருத்தி ஆட்டத்துக்குத் தகுந்த தாளம் போடுகிறார்கள். ஏன்? அந்தம்மாள் பிராமணர்களுக்கு அநுகூலமாய் இருந்துகொண்டு வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் கூடாது என்கிறார். தனக்குள்ள செல்வாக்கை பிராமணர்களுக்கு உத்தியோகங்கள் வாங்கிக் கொடுப்பதிலும் அதற்குத்...

சுயராஜ்யக் கக்ஷிக்கு  நற்சாக்ஷிப் பத்திரம் 0

சுயராஜ்யக் கக்ஷிக்கு நற்சாக்ஷிப் பத்திரம்

ராஜீய உலகத்திலும் சீர்திருத்த உலகத்திலும் ஸ்ரீமான் சி.விஜயராகவாச் சாரியாரும் ஸ்வாமி சிரத்தானந்தரும் முறையே பேர் போனவர்கள். முதல்வர் காங்கிரசுக்கே அக்கிராசனாதிபதியாயிருந்தவர். இரண்டாவதவர் மனித சமூகத்தின் சம உரிமைக்கு உண்மையாய்ப் பாடுபடுகிறவர். இவர்களிருவரும் சுயராஜ்யக் கக்ஷியைப் பற்றி சொல்லுவதாவது:- 1-வது, சி. விஜயராகவாச்சாரியார் : “கான்பூர் காங்கிரஸ் தீர்மானம் ஒழுங்கில்லையென்பது என் அபிப்பிராயம். காங்கிரஸ் ஒரு கோவிலுக்கு சமானம். அதை சிலர் மாத்திரம் பிடித்துக்கொண்டு பிறருக்கு அதில் தொழும் பாத்திய தையைத் தடுக்கக்கூடாது. ஒரு பெரிய சந்நியாசியாகிய மகாத்மா காந்தியை ஏமாற்றி கான்பூரில் அத்தீர்மானத்தை காங்கிரஸில் நிறைவேற்றப் பட்டிருக்கிறதென்பதே என் அபிப்பிராயம். காங்கிரஸ் 40 வருஷத்திற்கு முன்னாலேற்பட்டது. அப்பொழுது சட்டசபை இல்லை, சட்டசபைக்காக காங்கிரஸ் ஏற்படவில்லை.” 2-வது, ஸ்வாமி சிரத்தானந்தர் : “சுயராஜ்யக் கக்ஷியார் சட்டசபை யினின்றும் வெளிவந்ததும் சட்டமறுப்பு ஆரம்பித்திருந்தால் அதை சரியான கக்ஷியென்று சொல்லலாம். பிரயோஜனமில்லையென்று வெளிவந்தபின் மறுபடியும் சட்டசபைக்குப் போகிறோமென்பதை எப்படி நாம் ஒப்புக்கொள்ள முடியும்.” குடி அரசு...

வகுப்புவாரி உரிமை 0

வகுப்புவாரி உரிமை

வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தைப் பற்றி வலியுறுத்த ஆரம்பித்த பிறகு தமிழ்நாடு ராஜீய உலகத்தில் ஒரு பெரிய மாறுதல் ஏற்பட்டதோடு வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்திற்கு அநுகூலமாயிருக்கும் சில தேசபக்தர் களுக்கு காங்கிரசில் செல்வாக்கில்லாமலடிப்பதோடு காங்கிரஸையே பிராமண மயமாக்க அவசியம் ஏற்பட்டதும், பிராமணரல்லாதாரில் யாருக்கா வது காங்கிரஸ் பெயரைச் சொல்லிக்கொள்ள வேண்டுமானால் அவர்கள் பிராமணர்கள் தயவு பெற வேண்டியிருப்பதால் பிராமணர்களுக்கு பயப்பட்டு வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தை எதிர்க்கவேண்டிய அவசியமேற்படவும் ஏற்பட்டிருப்பது நேயர்களுக்குத் தெரிந்த விஷயமே. வகுப்புவாரிப் பிரதி நிதித்துவத்தை ஒரு நாளும் பிராமணர்கள் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் எங்கு ஏற்பட்டுப் போகுமோ என்கிற பயத் தால் தான் பிராமணர்கள் சர்க்காரைத் தொங்கிக் கொண்டிருப்பதும் ஒரு சர்க்கார் இவர்களுக்கு விரோதமாயிருந்தால் வேறொரு சர்க்காரை தயார் செய்வதுமாயிருக்கிறார்கள். அதற்குப் பயந்து கொண்டுதான் வரும் சர்க்கார் களும் பிராமணர்களுக்கு சுவாதீனமாய்ப் போய் விடுகிறார்கள். நம் நாடு ஏதாவது ஒரு காலத்தில் “இயற்கைக்கு விரோதமாய்” நம் நாட்டார்களாலேயே ஆளப்படுகிறது என்கிற யோக்கியதை அடையுமானால்...

தென்னாட்டுத் தலைவர்களின்               சுற்றுப் பிரயாணத்தின் பெருமை 0

தென்னாட்டுத் தலைவர்களின் சுற்றுப் பிரயாணத்தின் பெருமை

தென்னாட்டுத் தலைவர்கள் என்று சொல்லப்படுவோர்கள் வோட்டு வேட்டையென்னும் சுற்றுப் பிரயாணங்களில் ஆங்காங்கு நடக்கும் திரு விளையாடல்களை பிராமணப் பத்திரிகைகள் மறைத்து விட்டு தங்களுக்குப் பெருமை உண்டாகும்படியாக இல்லாத சங்கதிகளையும், நடக்காத கௌரவங் களையும் எழுதி பாமர ஜனங்களை ஏமாற்றி வருகிறது. பிராமணரல்லாத வாரப் பத்திரிகைகள் சிலதும் உண்மைகளை மறைத்துவிடுகிறது. தலைவர் களின் சுற்றுப் பிரயாணங்களின் யோக்கியதையை அறியவேண்டுமானால் “திராவிடன்” பத்திரிகையை வாங்கிப் படித்தால் உண்மை விளங்கும். சுய ராஜ்யக் கட்சியை எதிர்ப்பவர்களுக்கும் பிராமணரல்லாதார்களுக்காக பாடு படும் பிராமணரல்லாதார் கட்சிக்கும் பிராமணர்களின் யோக்கியதையை தைரியமாய் எடுத்து சொல்லுகிறவர்களுக்கும் யோக்கியதையும் மதிப்பும் இருக்கிறதா என்பதையும் நன்றாய் அறியலாம். தூத்துக்குடியில் நடந்த விஷயங்களும் திருச்சியில் நடந்த விஷயங்களும் தலைவர்களைக் கேட்ட கேள்விகளும் அதற்குத் தலைவர்கள் சொன்ன பதில்களையும் பிராமணப் பத்திரிகைகள் பிரசுரிக்காமல் விட்டுவிட்டிருக்கிறது. ஆகையால் அப்பத்திரி கைகளின் பொய் ஆதாரங்களையும் பொய்த் தலையங்கங்களையும் கண்டு ஏமாந்து போகாமல் இருக்கும்படியாய்க் கேட்டுக் கொள்ளுகிறோம். குடி அரசு –...

டாக்டர் வரதராஜுலு நாயுடுவின் சுற்றுப் பிரயாணம் 0

டாக்டர் வரதராஜுலு நாயுடுவின் சுற்றுப் பிரயாணம்

டாக்டர் வரதராஜுலு நாயுடு அவர்கள் தனது சுற்றுப் பிரயாணத்தில் நாகப்பட்டணம் முனிசிபல் உபசாரப் பத்திரத்திற்கு பதிலளிக்கும்போது வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் வேண்டுமென்று பேசினார். அதாவது பஞ்சமர் முதலிய சிறுபான்மையோருக்கு தனித் தொகுதி வகுத்து தேர்தல் முறையை அளிக்க வேண்டும் என்று பேசியிருக்கிறார். (இது 21-3-26 தமிழ்நாடு பத்திரிகையின் 7 – வது பக்கம் 23, 24, 25, 26 – வது வரிகளில் பிரசுரமாயிருக் கிறது) நாம் கேழ்க்கும் முதல் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் இதேதான். இது சமயம் பஞ்சமர்களுக்கு டாக்டர் நாயுடு சொல்லுகிறபடி செய்தால்கூட போது மானது. ஆனாலும் பஞ்சமர் சிறுபான்மையோரல்ல என்பதை டாக்டர் நாயுடு அவர்களுக்குத் தெரிவித்துக் கொள்ளுகிறோம். பஞ்சமர் என்போர் இந்தியா வில் ஐந்தாவது வகுப்பார் என்று சொல்லுவது நிஜமல்லாமலிருந் தாலும் தேச மொத்த ஜனத் தொகையில் 5-ல் ஒன்றுக்கு மேலாயிருக்கிறார்கள். இந்த கணக்கு டாக்டர் நாயுடு அவர்களுக்குத் தெரிந்ததுதான். ஜஸ்டிஸ் கட்சியா ருடைய வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தின் தத்துவமும் இதுதான்....

“ஸ்ரீமான் கலியாணசுந்திர முதலி”யாரின் சுற்றுப் பிரயாணம் 0

“ஸ்ரீமான் கலியாணசுந்திர முதலி”யாரின் சுற்றுப் பிரயாணம்

வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தால் வகுப்புத் துவேஷம் உண்டாகி விடும் என்று பயப்படுவதாய்ச் சொல்லிக்கொண்டு அதற்கெதிர்ப் பிரசாரம் செய்ய பிராமணர்களுடன் சுற்றுப் பிரயாணம் செய்யும் ஸ்ரீமான் திரு.வி.கலி யாணசுந்திர முதலியார் அவர்கள் ஆங்காங்கு கண்ட காட்சியைப் பற்றி சொல்லும் போதும், எழுதும் போதும், தான் போனவிடங்களில் வகுப்புத் துவேஷங்கள் விளங்கிக் கொண்டிருப்பதாய்ச் சொல்லுகிறார். வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் வெகுகாலமாய் இல்லாமலிருந்தும் நாட்டில் ஏன் வகுப்புத் துவேஷங்கள் ஏற்பட்டிருக்க வேண்டும்? இம்மாதிரி வகுப்புத் துவேஷங்கள் நாட்டில் இருப்பதற்குக் காரணம் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் ஏற்பட்ட தினாலா ஏற்படாததினாலா? என்பதை நமது ஸ்ரீமான் முதலியார் அவர்கள் தயவு செய்து பிராமணர்கள் இல்லாத சமயத்தில் தனியே உட்கார்ந்து தனது நெஞ்சில் கையை வைத்துப் பார்க்கும்படி வேண்டிக் கொள்ளுகிறோம். குடி அரசு – செய்தி விளக்கம் – 18.04.1926