“நவசக்தி” யின் துக்கம்
“சுயராஜ்யக் கக்ஷி அழிந்து ஒழிய வேண்டுமென்பது திரு. ராஜ கோபாலாச்சாரியாரின் கருத்தெனத் தெரிய வருகிறது” என்று ‘நவசக்தி’ தன் 30.4.26 ² தலையங்கத்தில் துக்கப்பட்டு ஆச்சாரியார் மீது சீறுகிறது. சுய ராஜ்யக் கட்சியின் தோற்றத்தால் காந்தியடிகள் ஒடுங்கினார், ஒற்றுமை குலைந்தது, ஒத்துழையாமை மறைந்தது, வகுப்புப் பூசல் கிளம்பியது என்று சதா ஓலமிட்டுக் கொண்டிருந்த ‘நவசக்தி’க்கு இப்பொழுது சுயராஜ்யக் கட்சி ஒழிந்து போவதில் இவ்வளவு கவலை வரக் காரணம் தெரியவில்லை. சுய ராஜ்யக் கட்சி ஒழிந்தால் உலகம் முழுகிப் போகுமோ அல்லது ‘நவசக்தி’க்கு செல்வாக்கு குறைந்துப் போகுமோ என்கிற இரகசியத்தை நாம் அறிய வில்லை.
குடி அரசு – செய்தி விளக்கம் – 02.05.1926