ஆதி திராவிடரும் சுயராஜ்யக் கக்ஷியும்

“சுதேசமித்திரன்” என்னும் பிராமணப் பத்திரிகை ஆதி திராவிடர்க ளுக்கு ஜஸ்டீஸ் கட்சியார் ஒன்றும் செய்யவில்லை என்றும், தங்கள் கூட்டத் தார் ஆதி திராவிடர்களுக்கு சுவர்க்க வாசலைத் திறந்து விடப் போவதாகவும், இனியாவது தங்களை வந்து சரணமடையும்படி உபதேசிக்கிறது. ஜஸ்டீஸ் கட்சியார் ஆதி திராவிடர்களுக்கு நன்மை செய்தார்களோ, இல்லையோ? அதைப் பற்றி அதிக கவலை வேண்டாம். அது ஆதி திராவிடர்களுக்கே தெரியும். ஆனால் காங்கிரசின் ஆதிக்கத்தை அடைந்த சுயராஜ்யக் கட்சியார் ஆதி திராவிடர்களுக்கு என்ன நன்மை செய்தார்கள்? என்ன பதவி கொடுத் தார்கள்? என்ன உத்தியோகம் தந்தார்கள்? இந்தியா சட்டசபைக்கு ஒரு ஆதி திராவிடரை நிறுத்தினார்களா? நிறுத்த ஆளில்லாமல் திண்டாடும் சென்னை சட்டசபைக்கு ஒரு ஆதி திராவிடரையாவது நிறுத்தினார்களா? சென்னை கார்ப்பரேஷன் கவுன்சிலுக்கு ஆதி திராவிட வகுப்பில் பிறந்த ஒருவரை யாவது நிறுத்தினார்களா? வேறு வகையில் இவர்கள் மட்டிலும் என்ன சாதித்து விட்டார்கள்? ஒரு சமயம் ஆதி திராவிடர்களில் எவராவது ஒருவருக்கு அதுவும் தன்னோடு கூடத் தன்னைத் தலைவர் என்று சொல்லித் திரிய – அதுவும் வீட்டில் பட்டினி, சுத்தமாய் செலவுக்கில்லை என்று கேட்கும் போதும் – நீ கொடுக்கிறாயா ஜஸ்டீஸ் கட்சியில் சேரட்டுமா என்று மிரட்டும் போதும் – ஒன்றோ இரண்டோ ரூபாய்கள் பிச்சை போடுவதுபோல் கொடுத் துக் கொண்டு வந்திருக்கிறதைத் தவிர வேறென்ன செய்திருக்கிறார்கள்? அல்லது ஆதி திராவிடர்களுக்கு வகுப்புவாரி உரிமை வாங்கித் தர சம்மதிக் கிறார்களா? வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் என்று சொன்னாலே, சொல்ப வனை, “ஜஸ்டீஸ் கட்சியில் சேர்ந்து விட்டான், பாவி, துரோகி” என்று சொல்லு கிறார்கள். இவர்களை நம்பி என்ன பலனை அடைய முடியும்? காஞ்சீவரத் தில் கூடிய பிராமணரல்லாதார்களாவது எல்லோரும் ஒன்றாய்ச்சேர்ந்து ஏக மனதாய் ஆதி திராவிடர்களுக்கு, அவர்கள் எண்ணிக்கைக்குத் தகுந்த அளவுக்கு மேலாகக் கூட சட்டசபை, கார்ப்பரேஷன், உத்தியோகம், பதவி ஆகிய எல்லாவற்றிலும் பிரதிநிதித்துவம் கொடுப்பதாய்த் தீர்மானித் தார்களே; அதைக் கெடுத்தவர்கள் யார்? சுயராஜ்யக் கட்சியின் “மாபெருந் தலைவரான” ஸ்ரீமான் சீனிவாசய்யங்காரும் “காந்தி சிஷ்யரும் ஒப்பற்ற தலைவருமான” ஸ்ரீமான் சி.ராஜகோபாலாச்சாரியாரும் கூடி சதியாலோசனை செய்து ஸ்ரீமான் கலியாணசுந்தர முதலியாரையும் கெடுத்து, இத்தீர்மானம் காங்கிரஸ் மகாநாட்டிற்கே கொண்டு வரக் கூடாது என்று தடுத்துவிட்டார்கள். தீர்மானம் கொண்டுவரக்கூட சம்மதிக்காத காங்கிரஸ் தலைவரும், சுயராஜ்யக் கட்சித் தலைவரும் தீர்மானத்தை நிறைவேற்ற சம்மதிப்பார்களா? என்பது ஆதி திராவிடர்களுக்குத் தெரியமுடியாமல் போகாது. ஜஸ்டீஸ் கட்சியாரா வது ஆதிதிராவிடர்கள் கேட்கும் வகுப்பு வாரிப் பிரதிநிதித்துவம் சரியான தென்றும், அதற்காக தாங்கள் போராடியும், அதை தங்கள் கட்சியின் முக்கியக் கொள்கையாகவும் வைத்திருக்கிறார்கள். அவர்கள் கூச்சல் போட்டதன் பலனாய்த்தான் ஸ்ரீமான்கள் எம்.சி.ராஜா, வீரய்யன் முதலிய மணிகள் ஆதி திராவிட வகுப்பில் இருக்கிறார்கள் என்றாவது பிறத்தியாருக்குத் தெரியும் படியாய் இருக்கிறது. அது இல்லாவிட்டால் இவர்களுக்கு சட்டசபை ஏது? கான்பரன்ஸ் ஏது? தீர்மானம் ஏது? “எங்கள் கட்சியில் வந்து சேருங்கள், நாங்கள் சாதித்து விடுகிறோம்” என்று பிராமணர்கள் கூப்பிடுவது ஏது? ஸ்ரீமான் சீனிவாசய்யங்கார் பணம் ஒன்றிரண்டு ரூபாய்கூட ஆதி திராவிடர் களுக்காவது கிடைப்பதேது?

குடி அரசு – கட்டுரை – 23.05.1926

You may also like...

Leave a Reply