Category: திவிக

0

ஈரோடு தெற்கு மாவட்டக் கலந்துரையாடல்

29-7-2015 அன்று ஈரோடு ( தெற்கு ) மாவட்டக் கலந்துரையாடல் கூட்டம் கழகத் தலைவர் தலைமையிலும், கழகப் பொதுச்செயலாளர் முன்னிலையிலும் ஈரோடு ரீஜென்சி விடுதியின் கூட்ட அரங்கில் நடைபெற்றது.

75ஆம் பிறந்த நாளில் கழகம் வழங்கியது பெரியார் பெருந்தொண்டர் சதாசிவத்துக்கு “பெரியாரியல் பேரொளி விருது” 0

75ஆம் பிறந்த நாளில் கழகம் வழங்கியது பெரியார் பெருந்தொண்டர் சதாசிவத்துக்கு “பெரியாரியல் பேரொளி விருது”

பெரியாரியல் கொள்கைகளை கிராமம் கிராமமாக சென்று பரப்பும் பணியை தொடர்ந்து பல ஆண்டுகளாக செய்துவருபவரும், ஏராளமான பெரியாரியல் பரப்புரையாளர்களை உருவாக்கியவருமான தோழர் பட்டுக்கோட்டை சதாசிவம் (வளவன்) அவர்களுக்கு 24-7-2015ஆம் நாள் 75ஆம் ஆண்டு பிறந்தநாள் ஆகும். பேச்சின்போக்கில் இதை அறிந்துகொண்ட மேட்டூர் நகரக் கழகத் தோழர்கள் அவருக்கு பிறந்தநாள் விழா எடுக்க முடிவுசெய்து கழகத் தலைமையிடம் அனுமதி கோரினர். கழகத் தலைவரும், கழகப் பொதுச்செயலாளரும் கலந்துபேசி அவரது நீண்டகால பெரியாரியல் பரப்புரைப் பணிகளைக் கருத்தில் கொண்டு அவ்விழாவை நடத்த அனுமதித்ததோடு, அவருக்கு “பெரியாரியல் பேரொளி ” என்ற விருதினை அளிக்கவும் ஆலோசனைக் கூறினர். அதையடுத்து 24-7-2015 வெள்ளியன்று மேட்டூர் மகாலட்சுமி திருமண மண்டபத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் அவ்விழாவை எடுத்தனர். அது விழா என்ற அளவோடு முடிந்துவிடாமல் அதை ஒரு பயிலரங்கமாகவும் நடத்தினர். கழகத் தலைவர் கொளத்தூர் மணி ‘ இட ஒதுக்கீட்டின் நியாயங்கள்’ என்ற தலைப்பில் ஒரு...

0

நீடாமங்கலம் சுப்பிரமனியம் சந்திப்பு

திராவிடர் கழகத்தின் மூத்த உறுப்பினர்களில் ஒருவரான நீடாமங்கலம் சுப்பிரமணியம் அவர்கள் மருத்துவ சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ள செய்தியறிந்து 26-7-2015 அன்று காலை அவர்து இல்லம் சென்று கழகத் தலைவர் கொளத்தூர் மணி சந்தித்தார். அவருடன் திருவாரூர் மாவட்டக் கழக செயலாளர் இரா. காளிதாஸ், கோவில்வெண்ணி தோழர் செந்தமிழன் ஆகியோரும் உடன் சென்றிருந்தனர்.

0

கிருட்டிணகிரி – காமராசர் பிறந்தநாள் விழா

கிருஷ்ணகிரி, நுகர்வோர் சேவை மையம் நடத்திய கல்விக்கண் தந்த கர்மவீரர் காமராசரின் 113 வது பிறந்த நாள் விழா கல்வி விழிப்புணர்வு விழாவாக நடைபெற்றது. இவ்விழாவை ஒட்டி கிருஷ்ணகிரியில் 21.07.2015 செவ்வாய் மாலை 6 மணியளவில் கிருஷ்ணகிரி ரவுண்டானா அருகில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இவ்விழாவிற்கு நுகர்வோர் பொதுச்சேவை சங்கத்தின் பொதுச்செயலாளர் தோழர் ராஜேஷ் ஜெயராமன் தலைமை தாங்கினார். இந்த விழா மற்றும் பொதுக்கூட்டத்தில் கழக தலைவர் கொளத்தூர் மணி கலந்து கொண்டு விருதுகள் வழங்கி சிறப்புரையாற்றினார்.உரையில் காமராசருக்கும் பெரியாருக்குமான உறவு, கல்விப் பெருக்கத்துக்கு ஆற்றிய பணிகள், பசுவதை தடை குறித்து அவரது எதிர்ப்பால் அவர்மீது இந்து மதவெறி அமைப்பினரின் தாக்குதல் ஆகியவற்றை விளக்கிப் பேசினார். விழாவின் தொடக்கத்தில் புதுவை அதிர்வுக் கலைகுழுவின் பறையிசை, கலைநிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் பல்வேறு அரசியல் அமைப்புச் சேர்ந்தவர்களும், இலக்கிய அமைப்பினரும் உரையாற்றினர். முன்னதாக கிருஷ்ணகிரி கொத்தபேட்டா நகராட்சி குப்பை கிடங்கை வேறு இடத்திற்கு மாற்ற கோருவதை...

0

மன்னார்குடி காவேரிப் பாதுகாப்பு கருத்தரங்கம்

25-7-2015 சனிக்கிழமை அன்று மாலை மீத்தேன் எதிர்ப்பு கூட்டமைப்பின் சார்பாக மன்னார்குடி சிட்டி ஹாலைல் கூட்டமைப்பின் தலைவர் பேராசிரியர் ஜெயராமனின் தலைமையில் காவேரிப் படுகை பாதுகாப்புக் கருத்தரங்கம் நடைபெற்றது. அக்கருத்தரங்கில் கழகத்தலைவர் கொளத்தூர் மணி, தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாரன், தமிழர் தேசியப் பேரியக்கத்தின் தலைவர் பெ. மணியரசன், பூவுலகின் நண்பர்கள் பொறியாளர். சுந்தரராசன், கூடங்குளம் அணுவுலைப் போராட்டக் குழு முகிலன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

0

முனைவர் பொன்னியின் செல்வம் சந்திப்பு.

26-7-2015 அன்று காலை 11 மணியளவில், பெரியாரியல் சிந்தனையாளரும், அழுத்தமான திராவிட இயக்கப் பற்றாளரும், ஏரளமான விருதுகள், பரிசுகள் பெற்ற சிறந்த பாவலருமான முனைவர் பொன்னியின் செல்வன் அவர்களை தஞ்சாவூர், அம்மன்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி சந்தித்தார். குடிஅரசு இதழின் உள்ளடக்க தொகுப்பு பற்றியும், அவரது இலக்கியப் பணிகள் பற்றியும் நீண்ட நேரம் உரையாடினர். அவருடன் பெரியாரியல் சிந்தனையாளர்கள் தஞ்சை பசு.கவுதமன், குப்பு.வீரமணி ஆகியோர் உடன் இருந்தனர். முனைவர் பொன்னியின் செல்வன் அவர்கள் பெரியாரின் ‘குடிஅரசு’ இதழின் 2-5-1925 இதழில் இருந்து இறுதி இதழான 5-11-1949 வரையிலான அனைத்து இதழ்களிலும் வெளிவந்துள்ள கட்டுரைகள், அதன் ஆசிரியர், வந்துள்ள பக்கம், என்ன செய்தி குறித்து என்ற விவரங்களை நான்காண்டு காலம் கடுமையாக உழைத்து தொகுத்த பெரும்பணியைச் செய்த மாண்பாளர் ஆவார்.

0

“பெரியாரியல் பேரொளி” தோழர் பட்டுக்கோட்டை சதாசிவம் ( வளவன் ) 75ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா

பெரியாரியல் கொள்கைகளை கிராமம் கிராமமாக சென்று பரப்பும் பணியை தொடர்ந்து பல ஆண்டுகளாக செய்துவருபவரும், ஏராளமான பெரியாரியல் பரப்புரையாளர்களை உருவாக்கியவருமான தோழர் பட்டுக்கோட்டை சதாசிவம் ( வளவன் ) அவர்களுக்கு 24-7-2015ஆம் நாள் 75ஆம் ஆண்டு பிறந்தநாள் ஆகும். பேச்சின்போக்கில் இதை அறிந்துகொண்ட மேட்டூர் நகரக் கழகத் தோழர்கள் அவருக்கு பிறந்தநாள் விழா எடுக்க முடிவுசெய்து கழகத் தலைமையிடம் அனுமதி கோரினர். கழகத் தலைவரும், கழகப் பொதுச்செயலாளரும் கலந்துபேசி அவரது நீண்ட கால பெரியாரியல் பரப்புரைப் பணிகளைக் கருத்தில் கொண்டு அவ்விழாவை நடத்த அனுமதித்ததோடு, அவருக்கு “ பெரியாரியல் பேரொளி ” என்ற விருதினை அளிக்கவும் ஆலோசனைக் கூறினர். அதையடுத்து 24-7-2015 வெள்ளியன்று மேட்டூர் மகலட்சுமி திருமண மண்டபத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் அவ்விழாவை எடுத்தனர். அது விழா என்ற அளவோடு முடிந்துவிடாமல் அதை ஒரு பயிலரங்கமாகவும் நடத்தினர். கழகத் தலைவர் கொளத்தூர் மணி ‘ இட ஒதுக்கீட்டின்...

0

கையெழுத்து இயக்கம் தீவிரமாகட்டும்!

ஈழத் தமிழர்கள் மீது இலங்கை அரசு இழைத்த இனப்படுகொலைகளுக்கு சர்வதேச விசாரணை நடத்தவேண்டும் என்ற கோரிக்கை தமிழகம் உள்ளிட்டு உலகம் முழுதும் வாழும் தமிழர்களால், மனித உரிமை அமைப்புகளால் வலியுறுத் தப்படுகிறது. எதிர்வரும் செப்டம்பர் மாதம், அய்.நா. மனித உரிமை அவையில் இது குறித்த விவாதம் வரும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. அண்மையில் நீண்ட நெடுங்காலமாக போர்க்குற்றத்துக்கு உள்ளாகி வரம் பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக இஸ்ரேல் மீது நடவடிக்கை எடுக்கக் கோரும் அய்.நா. தீர்மானத்தின்போது இந்தியா வாக் கெடுப்பைப் புறக்கணித்து, பாலஸ்தீனர் களுக்கு துரோகம் செய்துள்ளது. அதே துரோகத்தை ஈழத் தமிழர் பிரச்சினையில் மேற்கொள்ளக் கூடாது என்று இந்திய அரசை வற்புறுத்துகிறோம். அய்.நா. சர்வதேச விசாரணைக்கு ஆணையிட வேண்டும் என்று வலியுறுத்தி, தமிழகத்தில் நடக்கும் கையெழுத்து இயக்கங்களை கழகத் தோழர்கள் தீவிரப்படுத்திட இந்த செயற்குழு வலியுறுத்துகிறது.

0

20 தமிழர் படுகொலை வழக்கு: தமிழக அரசுக்கு கோரிக்கை!

செம்மரக் கடத்தல் தொடர்பாக – ஆந்திர காவல்துறை 20 தமிழர்களை கொடூரமாக சித்திரவதை செய்து சுட்டுக் கொன்ற வழக்கை, மத்திய புலனாய்வு நிறுவனம் (சி.பி.அய்.) விசாரிக்க வேண்டும் என்று தேசிய மனித உரிமை ஆணையம் செய்த பரிந்துரைக்கு ஆந்திர காவல்துறை அம்மாநில உயர்நீதி மன்றத்தில் தடை வாங்கி விட்டது. வழக்கு விசாரணை முடங்கிப் போய் நிற்கும் நிலையில், தடையை நீக்குவதற்கும், படுகொலை செய்யப்பட்ட தமிழர்களுக்கும், சிறையில் அடைக்கப்பட்டுள்ள 2000 அப்பாவித் தமிழர்களுக்கும் நீதி கிடைப்பதற்கும் தமிழக அரசு, அலட்சியம் ம்காட்டாமல், இந்த வழக்கில், தன்னையும் ஒரு தரப்பினராக இணைத்துக் கொண்டு கடமையாற்ற வேண்டும் என்று திராவிடர் விடுதலைக் கழகம் வலியுறுத்துகிறது.

0

சாதிவாரி கணக்கெடுப்பை வெளியிடுக!

மக்களின் சமூக பொருளாதார கணக்கெடுப்பு விவரங்களை வெளியிட்டுள்ள நடுவண் அரசு ஜாதிவாரிக்கணக்கெடுப்பு விவரங்களை மட்டும் வெளியிடாமல் தவிர்ப்பது கண்டனத்துக்குரியது. இந்த உண்மைகள் வெளியே வந்தால் பார்ப்பன உயர்ஜாதி – ஆதிக்கம் அனைத்துத் துறைகளிலும் மேலோங்கி நிற்கும் உண்மை அம்பலமாகிவிடுமோ என்று அஞ்சுகிறதோ என்ற நியாயமான சந்தேகம் எழுகிறது. தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் உண்மையான கல்வி, வேலை வாய்ப்பு, பொருளாதார நிலைகள் வெளிவரும் போதுதான் அவர்களுக்கு சமூக நீதிக்கான இடஒதுக்கீடு மற்றும் பொருளாதாரத் திட்டங்களை நிறைவேற்றிட முடியும் என்பதால், ஜாதிவாரி கணக்கீட்டு விவரங்களை வெளியிட வேண்டும் என்று இந்த செயற்குழு வற்புறுத்துகிறது.

எழுச்சியுடன் நடந்த தர்மபுரி கழக செயலவை 0

எழுச்சியுடன் நடந்த தர்மபுரி கழக செயலவை

திராவிடர் விடுதலைக் கழக செயலவைக் கூட்டம் 19.7.2015 காலை 11 மணியளவில் தர்மபுரி பெரியார் மன்றத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில், பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் முன்னிலையில் நடந்தது.கழகத் தோழர் கிணத்துக்கடவு நிர்மல் குமார்,கடவுள்,ஆன்மா மறுப்பு கூற, மாவட்டக் கழக சார்பில் நிகழ்ச்சிக்கு பொறுப்பேற்று ஏற்பாடுகளை செய்த பரமசிவம் வரவேற்புரையாற்றினார். சென்னை மாவட்டக் கழகத் தோழர் சரவணன்,நெல்லை மாவட்டத் தலைவர் குறும்பலபேரிசு. வடிவேலு (3.11.2014), தூத்துக்குடி மாவட்டச்செயலாளர் க.மதன் (16.4.2015), மதுரை கைவண்டி கருப்பு, கழக ஓவியர் மேட்டூர் சாதகப் பறவை சேகர், கரூர் இராஜா ஆகியோர் மறைவுக்கு ஒரு நிமிடம் மவுனம் காத்து இரங்கல் தெரிவிக்கப்பட்டது. பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன், செயலவை முன் விவாதிக்க வேண்டிய பிரச்சினைகள், கழக செயல் பாடுகளை விளக்கி தொடக்க உரையாற்றினார்.பின்னர், மாவட்ட வாரியாக தோழர்கள் கருத்துகளைத் தெரிவித்தனர். ஈரோடு வடக்கு – நாத்திக ஜோதி, ஈரோடு தெற்கு – சண்முகபிரியன், சேலம்...

0

திராவிடர் விடுதலைக் கழகத்தின் மாநில செயலவைக்கூட்டம்

கழகத்தின் செயலவைக்கூட்டம் 19.07.2015 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 10 மணிக்கு தருமபுரி,பெரியார் மன்றத்தில் நடைபெற்றது. கழக தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் தலைமையிலும்,கழக பொதுச்செயலாளர் தோழர் விடுதலை இராஜேந்திரன் அவர்கள் முன்னிலையிலும் நடைபெற்றது. ஆரம்ப உரை நிகழ்த்திய கழக பொதுச்செயலாளர் தோழர் விடுதலை இராஜேந்திரன் அவர்கள் தோழர்கள் பேசவேண்டிய கருத்துக்கள்,இயக்கத்தின் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து பேசினார். தொடர்ந்து கழகத்தின் எதிர்காலத் திட்டங்கள்.பயிற்சி வகுப்புகள்,செயல்திட்டங்கள்,கழக அமைப்பு முறைகள் ஆகியவை குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. மாவட்ட பொறுப்பாளர்கள் தங்கள் கருத்துக்களை செயலவையின் முன் வைத்தனர். மேலும் அச்செயலவையில் தனியார் துறை இடஒதுக்கீடு,எங்கள் தலைமுறைக்கு ஜாதிவேண்டாம் பயண நோக்கங்களை ஒருங்கிணைத்த பரப்புரை பயணத்தை மேற்கொள்ள – தங்கள் மாவட்டத்தின் பகுதி /ஒன்றிய,கிளைக்கழகங்களுடன் விவாதித்து எடுக்கப்பட்ட முடிவுகளையும், எந்தெந்த பாதை வழியாக பயணம் மேற்கொள்வது,எங்கெங்கு தெருமுனைக் கூட்டங்கள் நடத்துவது என்கிற முன்மொழிவுகளையும் தோழர்கள் எடுத்துரைத்தனர். இறுதியில் கழக தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் செயலவையில்...

0

எழுச்சியுடன் நடந்த தர்மபுரி கழக செயலவை

திராவிடர் விடுதலைக் கழக செயலவைக் கூட்டம் 19.7.2015 காலை 11 மணியளவில் தர்மபுரி பெரியார் மன்றத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில், பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் முன்னிலையில் நடந்தது.கழகத் தோழர் கிணத்துக்கடவு நிர்மல் குமார்,கடவுள்,ஆன்மா மறுப்பு கூற, மாவட்டக் கழக சார்பில் நிகழ்ச்சிக்கு பொறுப்பேற்று ஏற்பாடுகளை செய்த பரமசிவம் வரவேற்புரையாற்றினார். சென்னை மாவட்டக் கழகத் தோழர் சரவணன்,நெல்லை மாவட்டத் தலைவர் குறும்பலபேரிசு. வடிவேலு (3.11.2014), தூத்துக்குடி மாவட்டச்செயலாளர் க.மதன் (16.4.2015), மதுரை கைவண்டி கருப்பு, கழக ஓவியர் மேட்டூர் சாதகப் பறவை சேகர், கரூர் இராஜா ஆகியோர் மறைவுக்கு ஒரு நிமிடம் மவுனம் காத்து இரங்கல் தெரிவிக்கப்பட்டது. பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன், செயலவை முன் விவாதிக்க வேண்டிய பிரச்சினைகள், கழக செயல் பாடுகளை விளக்கி தொடக்க உரையாற்றினார்.பின்னர், மாவட்ட வாரியாக தோழர்கள் கருத்துகளைத் தெரிவித்தனர். ஈரோடு வடக்கு – நாத்திக ஜோதி, ஈரோடு தெற்கு – சண்முகபிரியன், சேலம்...

0

திராவிடர் விடுதலைக் கழக செயலவை தீர்மானங்கள் !

19.07.2015 அன்று தர்மபுரியில் கழக தலைவர் தோழர் கொளத்தூர் மணி தலைமையில் கூடிய திராவிடர் விடுதலைக் கழக செயலவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் : தீர்மானம் எண் 1 : சாதிவாரி கணக்கெடுப்பை வெளியிடுக! மக்களின் சமூக பொருளாதார கணக்கெடுப்பு விவரங்களை வெளியிட்டுள்ள நடுவண் அரசு ஜாதிவாரிக்கணக்கெடுப்பு விவரங்களை மட்டும் வெளியிடாமல் தவிர்ப்பது கண்டனத்துக்குரியது. இந்த உண்மைகள் வெளியே வந்தால் பார்ப்பன உயர்ஜாதி – ஆதிக்கம் அனைத்துத் துறைகளிலும் மேலோங்கி நிற்கும் உண்மை அம்பலமாகிவிடுமோ என்று அஞ்சுகிறதோ என்ற நியாயமான சந்தேகம் எழுகிறது. தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் உண்மையான கல்வி, வேலை வாய்ப்பு, பொருளாதார நிலைகள் வெளிவரும் போதுதான் அவர்களுக்கு சமூக நீதிக்கான இடஒதுக்கீடு மற்றும் பொருளாதாரத் திட்டங்களை நிறைவேற்றிட முடியும் என்பதால், ஜாதிவாரி கணக்கீட்டு விவரங்களை வெளியிட வேண்டும் என்று இந்த செயற்குழு வற்புறுத்துகிறது. தீர்மானம் எண் 2 : காவல்துறைக்கு சவால் விடும் ஜாதிவெறியர்கள்! தமிழ்நாட்டில் ஜாதி ஆணவக் கொலைகள்...

0

மாநில கழகப் பொறுப்பாளர்கள்

திராவிடர் விடுதலைக் கழகத்துக்கு கீழ்க்கண்ட மாநிலப் பொறுப்பாளர்களை தர்மபுரியில் நடந்த செயலவைக் கூட்டத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, தோழர்களின் பலத்த கரவொலிகளுக்கிடையே அறிவித்தார். ஈரோடு இரத்தினசாமி – அமைப்புச் செயலாளர் திருப்பூர் துரைசாமி – பொருளாளர் பால். பிரபாகரன் – பரப்புரை செயலாளர் கோபி. இராம.இளங்கோவன் – வெளியீட்டுச் செயலாளர் தபசி. குமரன் – தலைமைக் கழகச் செயலாளர்

0

திராவிடர் விடுதலைக் கழகத்தின் செயலவவைக் கூட்டம்

”திராவிடர் விடுதலைக் கழக தோழர்களுக்கு கழக தலைமையின் அறிவிப்பு” அன்பு தோழர்களுக்கு, வணக்கம், எதிர்வரும் 19.07.2015 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 10 மணிக்கு தருமபுரி,பெரியார் மன்றத்தில் (பெரியார் சிலை அருகில்) திராவிடர் விடுதலைக் கழகத்தின் செயலவவைக் கூட்டம் கழகத்தலைவர் தோழர் கொளத்தூர் மணி தலைமையிலும்,கழக பொதுச்செயலாளர் தோழர் விடுதலை இராஜேந்திரன் முன்னிலையிலும் நடைபெற உள்ளது. அதில் கழகத்தின் எதிர்காலத் திட்டங்கள்.பயிற்சி வகுப்புகள்,செயல்திட்டங்கள்,கழக அமைப்பு முறைகள் ஆகியவை குறித்து விரிவாக விவாதிக்க குறித்த நேரத்தில் தவறாது வருமாறு தோழமையுடன் அழைக்கிறோம். மேலும் அச்செயலவையில் தனியார் துறை இடஒதுக்கீடு,எங்கள் தலைமுறைக்கு ஜாதிவேண்டாம் பயண நோக்கங்களை ஒருங்கிணைத்த பரப்புரை பயணத்தை மேற்கொள்ள – தங்கள் மாவட்டத்தின் பகுதி /ஒன்றிய,கிளைக்கழகங்களுடன் விவாதித்து எந்தெந்த பாதை வழியாக பயணம் மேற்கொள்வது,எங்கெங்கு தெருமுனைக்கூட்டங்கள் நடத்துவது என்கிற முன்மொழிவுகளுடன் வருமாறும் வேண்டுகிறோம். – கையொப்பம்- கொளத்தூர் மணி, (தலைவர்) விடுதலை ராசேந்திரன்,(பொதுச்செயலாளர்)

0

கோகுல்ராஜ் படுகொலையை கண்டித்து எழும்பூர் இக்சாவில் கூட்டம்

கோகுல்ராஜ் படுகொலையை கண்டித்து அம்பேத்கர் பெரியார் வாசிப்பு வட்டம், சென்னை, சார்பாக எழும்பூர் இக்சாவில் 13.07.2015 அன்று மாலை 5 மணியளவில் அரங்க கூட்டம் நடைபெற்றது. பேரசிரியர் வீ.அரசு, தோழர் செல்வி, கவின் மலர், தோழர் தியாகு, கழகப் பொது செயலாளர் விடுதலை இராசேந்திரன் நிறைவாக தோழர் தொல்.திருமாவளவன் ஆகியோர் பல்வேறு தலைப்புகளில் உரையாற்றினர்.

0

வெறிப்படுகொலைகளைக் கண்டித்து கண்டனக் கருத்தரங்ம்

ஜாதி வெறிப்படுகொலைகளைக் கண்டித்து கண்டனக் கருத்தரங்கு 13.07.2015 திங்கட்கிழமை அன்று மாலை 05.30 மணியளவில் ஈரோடு,பன்னீர் செல்வம் பூங்கா அருகில் உள்ள பெரியார் மன்றத்தில் நடைபெற்றது. சாதி மறுப்பு மக்கள் கூட்டியக்க தோழர் கண.குறிஞ்சி அவர்கள் கருத்தரங்கிற்கு தலைமை தாங்கினார். இக்கண்டன கருத்தரங்கில் கழக தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். மேலும் தோழர்.முத்தரசன்,இந்திய கம்னியூஸ்ட் கட்சி. தோழர்.இரா.அதியமான்,ஆதித்தமிழர் பேரவை. தோழர்.குமரேசன்,தீக்கதிர் நாளிதழ் உள்ளிட்ட தோழமைக் கட்சியின் தலைவர்களும் கலந்து கொண்டு ஜாதி வெறிப்படுகொலைகளைக் கண்டித்து கண்டன உரையாற்றினர்.

0

கோகுல்ராஜ் படுகொலையை கண்டித்து திருச்சியில் ஆர்ப்பாட்டம்

திருச்சியில் கழகத்தின் சார்பில் கோகுல்ராஜ் படுகொலையை கண்டித்து ஆர்ப்பாட்டம் ! 03-07-15 திருச்சி மாவட்ட திராவிடா் விடுதலைக் கழகத்தின் சாா்பாக கோகுல்ராஜ் படுகொலையைக் கண்டித்து கண்டன ஆா்ப்பாட்டம் நடை பெற்றது. இந்த ஆா்ப்பாட்டத்தில் கண்டன உரையாற்றியோர் – புதிய தமிழகம் கட்சியின் கொள்கைபரப்புச் செயலாளா் வாழையூா் குணா.மாவட்டச் செயலாளா் அய்யப்பன்.விடுதலைச்சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளா் தமிழாதன்.எஸ்.டி.பி.ஜ கட்சியின் மாநிலப் பேச்சாளர் சம்சுதீன். பெரியார் பெருந்தொண்டர் திருச்சி எஸ்.எஸ்.முத்து, மாவட்ட தலைவர் திவிக தோழர் ஆரோக்கியசாமி. ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் – திருச்சி விஜி, திவிக, திவிக மாவட்ட செயலாளர் கந்தவேல்குமார், திவிக மாவட்ட அமைப்பாளர்கள் புதியவன்.மனோகரன்.குணா.திருவரங்க பகுதி செயலாளர் அசோக்.வழக்கறிஞா் சந்துரு.பழனி. பாரத்.சரத்,முருகானந்தம்.குளித்தலை சத்யா, கரூர் மோகன் தாஸ் மற்றும் கழக தோழா்கள் கலந்துக் கொண்டனா். நன்றியுரை தோழர் சந்துரு, வழக்கறிஞர்

0

இளவரசனை தொடர்ந்து கோகுல்ராஜ்

”திராவிடர் விடுதலைக் கழகம் இந்த ஜாதி ஆணவப் படுகொலையை வன்மையாக கண்டிக்கிறது”- கழக தலைவர் தோழர் கொளத்தூர் மணி அறிக்கை. கோகுல்ராஜ் கொலை’கவுரவக் கொலை’ என்ற பெயரில் ‘ஜாதி ஆணவக் கொலைச் சம்பவங்கள்’ தமிழகத்தில் தலைதூக்கி வருவது தமிழ் நாட்டுக்கே தலைக்குனிவாகும். 2013ம் ஆண்டு இளவரசன் என்ற தலித் இளைஞர் திவ்யா என்கிற வன்னியப் பெண்ணை காதலித்து திருமணம் செய்த குற்றத்திற்க்காக அவர்களை ஜாதிவெறியர்கள் கட்டாயப்படுத்தி அச்சுறுத்தி பிரித்தனர்.கடைசியில் இளவரசனின் பிணம் தண்டவாளத்தில் கிடந்தது. இப்போது பொறியியல் பட்டதாரியான தலித் இளைஞர் கோகுல்ராஜ் அதே கதிக்கு ஆளாகி உள்ளார்.உயர் ஜாதி என சொல்லிக் கொள்ளும் கவுண்டர் ஜாதிப்பெண்ணை காதலித்ததால் அவர் ஜாதிவெறியர்களால் கடந்த 23ம் தேதி கடத்தப்பட்டுள்ளார்.24ம் தேதி தலை துண்டிக்கப்பட்டுல்ள நிலையில் பள்ளிபாளையம் கிழக்கு தொட்டி பாளையம் அருகே ரயில் தண்டவாளத்தில் பிணமாக கிடந்தார். திருச்செங்கோடு மலைக்கோவிலுக்கு கோகுல்ராஜ் ஒருமாணவியோடு சென்று சாமி கும்பிடுவது கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது.கடைசியாக...

0

திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் காவல்துறை தலைவரிடம் மனு

திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் காவல்துறை தலைவரிடம் மனு! நாள் : 01.07.2015 புதன்கிழமை காலை 11 மணி. இடம் : காவல்துறை தலைமை அலுவலகம், காமராஜர் சாலை,மெரீனா கடற்கரை அருகில்,சென்னை.4 தமிழ் நாட்டில் நடக்கும் ஜாதீய வன்கொடுமை,ஜாதி வெறிப் படுகொலைகளில் காவல்துறை துரிதமாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தியும், குறிப்பிட்ட ஆதிக்க ஜாதியினர் வாழும் மாவட்டங்களில் அதே ஜாதியை சேர்ந்தவர்களை காவல்துறை அதிகாரிகளாக நியமனம் செய்யக்கூடாது என வலியுறுத்தியும், நாமக்கல் பொறியியல் கல்லூரி மாணவன் கோகுல்ராஜ் படுகொலை செய்யப்பட்ட வழக்கு நேர்மையாகவும்,விரைவாகவும் நடக்கும் பொருட்டு வழக்கை சி..பி.அய்.க்கு மாற்றவேண்டும் என்கிற கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் தமிழக காவல்துறை தலைவர் (D.G.P.)அவர்களிடம் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் நாளை 01.07.2015 அன்று காலை 11 மணியளவில் கழக பொதுச்செயலாளர் விடுதலை ராஜேந்திரன் அவர்கள் தலைமையில் மனு அளிக்கப்படுகிறது. தொடர்புக்கு : 7299230363 தோழர் உமாபதி மாவட்ட செயலாளர்,சென்னை.

மேட்டூரில் தொடர் கூட்டங்கள்.

மேட்டூரில் தொடர் கூட்டங்கள்.

மேட்டூர் நகர திராவிடர் விடுதலைக் கழக சார்பில் மேட்டூர் அணைப் பகுதியில் ஜூலை 4 முதல் 19ஆம் தேதி வரை பெரியார் கொள்கை விளக்க தெருமுனைக் கூட்டங்கள் தொடங்கி நடந்து வருகின்றன. ஜூலை 4 – காவேரி பாலம் (தலைமை – பிரகாசு) 5 – குள்ள வீரன்பட்டி (தலைமை – பெ. சக்திவேல்) 7 – பொன்னகர் ( தலைமை – இர. பூவழகன்) 9 – ஆஸ்பத்திரி காலனி (தலைமை – பொன்.தேவராசு) 11 – பாரதி நகர் (தலைமை – மே.கா.கிட்டு) 12 – வீரபாண்டிய கட்டபொம்மன் (தலைமை – மா.கதிரேசன்) 14 – நேரு நகர் (தலைமை – அ. அண்ணாதுரை) 16 – மசூதித் தெரு (தலைமை – மார்ட்டின்) 18 – காவேரி நகர் (தலைமை – சி. கோவிந்தராசு) 19 – மாதையன்குட்டை (தலைமை – மா. பழனிச்சாமி) கூட்டங்களில் கோபி....

0

ஆந்திராவில் 20 தமிழர்கள் படுகொலை-சி.பி.ஐ.விசாரணையை தடுக்கும் ஆந்திர அரசு

ஆந்திராவில் 20 தமிழர்கள் படுகொலையில் சி.பி.ஐ.விசாரணையை தடுக்கும் ஆந்திர அரசுக்கு எதிராக வழக்காடவும்,ஆந்திர சிறையில் வாடும் சுமார் 2000 தமிழர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க கோரியும் தமிழக முதல்வரை நேரில் சந்தித்து வலியுறுத்துவது என ஆலோசனைக்கூட்டத்தில் முடிவு. 15.07.2015 அன்று சென்னையில் ம.தி.மு.க. தலைமையகமான ‘தாயகத்தில்’ மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், மக்கள் கண்காணிப்பகம் ஹென்றி டிபேன்,தமிழக மக்கள் வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் வேல்முருகன், விடுதலைசிறுத்தைகள் அமைப்பின் தோழர் பாலசிங்கம்,தமுமுக தலைவர் பேராசியர் ஜிவாஹிருல்லா,மார்க்ஸிஸ்ட் கம்னியூஸ்ட் கட்சியின் சார்பில் தோழர் வீரபாண்டியன்,இந்திய கம்னியூஸ்ட் கட்சி சார்பில் தோழர் பீமாராவ்,திராவிடர் விடுதலைக் கழக தலைவர் தோழர் கொளத்தூர் மணி,தந்தை பெரியார் திராவிடர் கழக தலைவர் தோழர் ஆனூர் ஜெகதீசன் ஆகியோர் கலந்து கொண்டனர். பத்திரிக்கையாளர் சந்திப்பில் இந்த ஆலோசனைக்கூட்டத்தின் நோக்கம் குறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் பேட்டியளித்தார். ஆந்திராவில் 20 கூலித்தொழிலாள தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட...