”சர்வதேச காணாமல் போனோர் தினம்” ஆர்ப்பாட்டம்
2015 ஆக.30ஆம் தேதி ‘காணாமல் போனோர் நாள்’ என்று அய்.நா. கடைபிடித்து வருகிறது. இதையொட்டி, ஈழத்தில் காணாமல் போன தமிழர்களின் கதி என்ன? இலங்கை அரசு இது
குறித்து ஏன் மவுனம் சாதிக்கிறது என்ற கேள்வியை எழுப்பி, தமிழர் வாழ்வுரிமை கட்சி, திராவிடர் விடுதலைக் கழகம், காஞ்சி மக்கள் மன்றம் உள்ளிட்ட அமைப்புகள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தின.
அய்.நா. நிறுவனங்களில் ஒன்றான ‘யுனிசெப்’ அமைந்துள்ள அடையாறு காந்தி நகரில் 31ஆம் தேதி காலை நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, வாழ்வுரிமை கட்சி நிறுவனர் வேல் முருகன், தியாகு (தமிழ் தேசவிடுதலை இயக்கம்), ஆனந்தி சசிதரன் (இலங்கை வடக்கு மாகாண நாடாளுமன்ற உறுப்பினர்), பேராசிரியர் சரசுவதி (நாடு கடந்த தமிழீழ அரசு, தமிழக பொறுப்பாளர்), மகேசு (காஞ்சி மக்கள் மன்றம்), லோகு ஐயப்பன் (புதுவை திராவிடர் விடுதலைக் கழகம்), கழகத் தோழர் தபசி. குமரன், இரா. உமாபதி (மாவட்ட செயலாளர்) மற்றும் தோழர்கள் கலந்து கொண்டனர்.
முன்னதாக ‘யுனிசெப்’ அதிகாரிகளிடம் அய்.நா. நடவடிக்கைக் கோரி, மனு அளிக்கப் பட்டது. 500க்கும் மேற்பட்ட தோழர்கள்ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்