Category: நாமக்கல்

நாமக்கல் தொடர்வண்டி மறியலில் கழகம் பங்கேற்பு

நாமக்கல் தொடர்வண்டி மறியலில் கழகம் பங்கேற்பு

வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை செயலிழக்கச் செய்யும் தீர்ப்பைக் கண்டித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒருங்கிணைத்து, ஜூலை 2 ஆம் தேதி திங்கள் கிழமை  நடத்திய ரயில் மறியல் போராட்டம், நாமக்கல் ரயில் நிலையத்தில் மதியம் 12 மணிக்கு மேல் நடைபெற்றது. இதில், திராவிடர் விடுதலைக் கழக நாமக்கல் மாவட்டத் தலைவர் சாமிநாதன், மாவட்ட பொருளாளர் முத்துப்பாண்டி, பள்ளிபாளையம் நகர தலைவர் பிரகாசு, பள்ளாளையம் நகர அமைப்பாளர் தியாகு மற்றும் பள்ளிபாளையம், திருச்செங்கோடு பகுதியைச் சேர்ந்த தோழர்கள் கலந்து கொண்டனர். பெரியார் முழக்கம் 12072018 இதழ்

பயிலரங்கத்துக்கு நன்கொடை வழங்கிய தி.மு.க தோழர் பாலுவுக்கு பாராட்டு

பயிலரங்கத்துக்கு நன்கொடை வழங்கிய தி.மு.க தோழர் பாலுவுக்கு பாராட்டு

பயிலரங்கத்துக்கு  ரூ.25,000 நன்கொடை வழங்க முன் வந்து முகாமை நடத்துமாறு கூறியவர் முன்னாள் தி.மு.க. மாவட்ட துணைச் செயலாளரும், இராசிபுரம் பகுதியைச் சார்ந்த தி.மு.க. பிரமுகருமான பாலு ஆவார். அவருக்கு கழகத் தலைவர்  கொளத்தூர் மணி சால்வை போர்த்தி, பாராட்டி நினைவுப் பரிசுகளை வழங்கினார். நிகழ்வை முழுமையாக ஒளிப்பதிவு செய்து, வீடியோ பதிவாக்கிய சித்தோடு கழகத் தோழர் எழிலன் மற்றும் அவருக்கு உடனிருந்து உதவிய தோழர்களுக்கும் இரண்டு நாளும் சிறப்பாக உணவு தயாரித்து வழங்கிய ஏற்காடு பிரபாகரன் உணவு விடுதி உரிமை யாளரும் கழகச் செயல் பாட்டாளருமான பெருமாள் ஆகியோரைப் பாராட்டி நினைவுப் பரிசு மற்றும் நூல்களை கழகத் தலைவர் வழங்கினார். பயிலரங் கத்தை  முன்னின்று ஏற்பாடு செய்த இராசிபுரம் கழகச் செயல்பாட்டாளர் சேகுவேரா, அவரது இணையர் மற்றும் கமலக் கண்ணன் நிகழ்வில் பாராட்டப் பெற்றனர். பெரியார் முழக்கம் 28062018 இதழ்

கிராமப்புற பெண்-ஆண் இளைஞர்கள் சம அளவில் பங்கேற்றனர் சிந்தனைக் கூர் தீட்டிய, ஏற்காடு பயிலரங்கம்

கிராமப்புற பெண்-ஆண் இளைஞர்கள் சம அளவில் பங்கேற்றனர் சிந்தனைக் கூர் தீட்டிய, ஏற்காடு பயிலரங்கம்

இராசிபுரம் பகுதி திராவிடர் விடுதலைக் கழகம் ஏற்காட்டில் ஜூன் 23, 24ஆம் தேதிகளில் நடத்திய பெரியாரியல் பயிலரங்கம், கருத்துக் களமாகவும், விவாத அரங்கமாகவும் சிறப்புடன் நடந்து முடிந்தது. இந்தப் பயிலரங்கில் பங்கேற்க நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் முன் பதிவு செய்திருந்தனர். ஆனாலும் பங்கேற்பாளர் எண்ணிக்கை அதிகரிப்பதால் கவனச் சிதைவு மற்றும் ஏற்பாட்டு வசதிக் குறைவு கருதி எண்ணிக்கைக் குறைக்கப்பட்டு முதல் முறையாக பெரியாரியல் குறித்து அறிய விரும்பு வோருக்கு முன்னுரிமை தரப்பட்டு, பயிற்சியாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். ஏற்கனவே பயிலரங்கில் பங்கேற்ற கழகத் தோழர்கள் இதில் பங்கேற்காது தவிர்க்கலாம் என்ற அடிப்படையில் புதிய தோழர்களை கழகத் தலைவர் கொளத்தூர் மணி தேர்வு செய்தார். மொத்தம் பங்கேற்ற 51 பயிற்சியாளர்களில் பெண்கள் 21 பேர் என்பது இப்பயிலரங்கின் சிறப்பாகும். கிராமத்தி லிருந்து முதல் தலைமுறையாகப் படித்த ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவர்கள் பங்கேற்ற இந்த முகாமில் இளம் பெண் தோழர்கள் முனைப் புடன் பங்கேற்று கருத்துகளை குறிப்பெடுத்து...

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: கழகம் கண்டன ஆர்ப்பாட்டங்கள்

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: கழகம் கண்டன ஆர்ப்பாட்டங்கள்

மதுரை : தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து 22.05.2018 அன்று மாலை 6 மணிக்கு மதுரையில் திராவிடர் விடுதலைக் கழகம், மே 17, புரட்சிகர இளைஞர் முன்னணி, கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட 60க்கும் மேற்பட்டோர் இணைந்து பெரியார் பேருந்து நிலையம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.  சாலை மறியலில் ஈடுபட்ட தோழர்களை காவல்துறை கைது செய்து இரவு 11 மணிக்கு விடுதலை செய்தது. பேராவூரணி : 23.05.2018 அன்று மாலை அண்ணா சாலை பேராவூரணி யில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மக்கள் எதிர்ப்பையும் மீறி ஸ்டெர்லைட் ஆலையை ஏன் உடனடியாக மூட வில்லை? போராடும் மக்கள் ஆட்சியர் அலுவலகம் வந்த போது ஆட்சியர் எங்கு போனார்? ஏன் அமைதியாகப் போராடும் மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப் பட்டது? இதற்கு அனுமதி கொடுத்தது யார்? காவலர்களால் திட்டமிட்டு கலவரம் நடத்தப்பட்டது ஏன்? இராணுவ உதவி வேண்டுமானால் தருவதாக...

தூத்துக்குடி  அரச பயங்கரவாதத்தைக் கண்டித்து நாமக்கல் மாவட்ட திவிக ஒருங்கிணைத்த கண்டன ஆர்ப்பாட்டம் 23052018

தூத்துக்குடி அரச பயங்கரவாதத்தைக் கண்டித்து நாமக்கல் மாவட்ட திவிக ஒருங்கிணைத்த கண்டன ஆர்ப்பாட்டம் 23052018

23052018  மாலை பள்ளிபாளையத்தில்…! தூத்துக்குடி அரச பயங்கரவாதத்தைக் கண்டித்து நாமக்கல் மாவட்ட திவிக ஒருங்கிணைத்த கண்டன ஆர்ப்பாட்டம். பங்கேற்ற அமைப்புகளுக்கு நன்றி. •புரட்சிகர இளைஞர் முன்னணி. •மகஇக. •SDPI. •சிபிஐ எம்-எல். •தமிழ்ப்புலிகள். •தமிழக தேசிய கட்சி. தொடரட்டும் அரச வன்முறைக்கு எதிரான கூட்டமைப்பு.

கழகத்தின் பரப்புரைகள் – ஆர்ப்பாட்டங்கள் பள்ளிப்பாளையத்தில் ஆசிபாவுக்கு  நீதி கேட்டு ஆர்ப்பாட்டம்

கழகத்தின் பரப்புரைகள் – ஆர்ப்பாட்டங்கள் பள்ளிப்பாளையத்தில் ஆசிபாவுக்கு நீதி கேட்டு ஆர்ப்பாட்டம்

நாமக்கல் மாவட்டம் சார்பில் இந்துத்துவ வெறியர்களால் வன்புணர்ந்து கொல்லப்பட்ட ஆசிஃபாவிற்கு நீதி கேட்டும், இந்துத்துவ பாஜக அரசைக் கண்டித்தும் திராவிடர் விடுதலைக் கழகம், தோழமைக் கட்சிகள் ஒன்றிணைந்து பள்ளிப்பாளை யத்தில் 17.4.2018 அன்று மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு நாமக்கல் மாவட்டப் பொருளாளர் முத்துப்பாண்டி தலைமை வகிக்க, மாவட்ட செயலாளர் சரவணன் முன்னிலையில்  நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு திராவிடர் கழகம், தமுமுக, பு.இ.மு. தோழர்கள் கண்டன  உரைக்குப் பிறகு கழக அமைப்பாளர் ஈரோடு ரத்தினசாமி கண்டன உரையாற்றினார். ஆசிபாவும் தேசத் துரோகியா? சென்னை-மயிலாடுதுறையில் கழகம் கண்டன ஆர்ப்பாட்டங்கள் சிறுமி ஆசிபாவை இந்துத்துவா கும்பல், வன்புணர்ச்சி செய்து படுகொலை செய்ததைக் கண்டித்து சென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் 20.4.2018 மாலை 4 மணியளவில் சென்னை மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம் அருகே பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதிகார வெறியில் மனிதத்தைக் கொல்லாதே; ஆசிபாவும் தேசத்...

பள்ளிபாளையத்தில் ஆசிஃபாவிற்க்கு நீதி கேட்டு ஆர்ப்பாட்டம் ! 23042018

பள்ளிபாளையத்தில் ஆசிஃபாவிற்க்கு நீதி கேட்டு ஆர்ப்பாட்டம் ! 23042018

பள்ளிபாளையத்தில் ஆசிஃபாவிற்க்கு நீதி கேட்டு ஆர்ப்பாட்டம் ! இந்துத்துவ வெறியர்களால் வன்புனர்ந்து கொள்ளப்பட்ட ஆசிஃபாவிற்கு நீதி கேட்டும், இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதாலும், இந்துத்துவ பாஜக அரசை கண்டித்து திராவிடர் விடுதலைக் கழகம் நாமக்கல் மாவட்டம் சார்பில் தோழமைக் கட்சிகள் ஒன்றினைந்து பள்ளிபாளையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு நாமக்கல் மாவட்ட பொருளாளர் தோழர் முத்துப்பாண்டி தலைமை வகிக்க, மாவட்ட செயலாளர் சரவணன் முன்னிலையில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு திராவிடர் கழகம், தமுமுக, புஇமு தோழர்கள் மற்றும் பொருப்பாளர்கள் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர். இறுதியாக திராவிடர் விடுதலைக் கழக மாநில அமைப்பாளர் ஈரோடு ரத்தினசாமி கண்டன உரையாற்றினார்..

இராசிபுரத்தில்  “ஆரியம் – திராவிடம் – தமிழ் தேசியம் ” கருத்தரங்கம் மற்றும் கலந்துரையாடல் நிகழ்வு.

இராசிபுரத்தில் “ஆரியம் – திராவிடம் – தமிழ் தேசியம் ” கருத்தரங்கம் மற்றும் கலந்துரையாடல் நிகழ்வு.

இராசிபுரத்தில் “ஆரியம் – திராவிடம் – தமிழ் தேசியம் ” கருத்தரங்கம் மற்றும் கலந்துரையாடல் நிகழ்வு. இராசிபுரத்தில் திராவிடர்விடுதலைக்கழகத்தின் சார்பில் ஞாயிறு 08.04.18 அன்று”ஆரியம் – திராவிடம் – தமிழ் தேசியம்” எனும் தலைப்பில் கருத்தரங்கம் மற்றும் கலந்துரையாடல் நிகழ்வு நடைபெற்றது. தோழர் வசந்தி அவர்கள் வரவேற்புரையாற்றினார். தோழர் சுமதி மதிவதனி அவர்கள்கருத்தரங்கிற்கு தலைமை தாங்கினர். சிறப்பு அழைப்பாளராக திமுகவின் முன்னாள் மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் தோழர் வி.பாலு அவர்கள் கலந்து கொண்டார். கருத்துரையாக திரைப்பட துணை இயக்குநர் தோழர் கலைமதி, தமிழ்நாடு அறிவியல் மன்றத்தின் தோழர் வீரா.கார்த்திக், திவிகவின் தலைமைக் கழக பேச்சாளர் தோழர் கோபி.வேலுச்சாமி ஆகியோர் பேசினர். தோழர் ஈரோடு மணிமேகலை அவர்கள் நன்றியுரையாற்றினார்.ஏராளமான கழகத்தோழர்கள் ஆதரவாளர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

திருச்செங்கோட்டில் புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாள் விழா ! 14042018

திருச்செங்கோட்டில் புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாள் விழா ! 14042018

திருச்செங்கோட்டில் புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாள் விழா ! திராவிடர் விடுதலைக் கழகம் காஞ்சிபுரம் மாவட்டத்தின் சார்பில் 14.04.2018 அன்று காலை அண்ணல் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செய்யப்பட்டது. கழகத்தோழர்களால் கொள்கை முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

அம்பேத்கர் சிலைக்கு கழகத்தினர் மாலை

அம்பேத்கர் சிலைக்கு கழகத்தினர் மாலை

திருப்பூர் : மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் புரட்சியாளர் அம்பேத்கரின் 127 வது பிறந்த நாள் விழா 14.04.2018 சனிக் கிழமை காலை 10.00 மணியளவில் திருப்பூர் மாநகராட்சி எதிரில் உள்ள புரட்சியாளர் அம்பேத்கரின் சிலை அருகே நடைபெற்றது. கழக பொருளாளர் துரைசாமி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ் வில் புரட்சியாளரின் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. கொள்கை முழக்கங்கள் எழுப்பப்பட்டன. கவிஞர் கனல் மதி வாசிப்பில் கழகத் தின் ‘ஜாதி ஒழிப்பு உறுதிமொழி’ ஏற்பு கழகத் தோழர்களால் ஏற்கப்பட்டது. நிகழ்வின் இடையே பெரியார் பிஞ்சுகள் யாழினி, முத்தமிழ் ஆகி யோரின் பிறந்த நாள் அவ்விடத் திலேயே கேக் வெட்டி கொண்டாடப் பட்டது. அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. கழகத்தின் மாவட்டத் தலைவர் முகில் ராசு, மாநில அறிவியல் மன்ற தலைவர் சிவகாமி, மாவட்டக் கழகச் செயலாளர் நீதிராசன், மாவட்ட அமைப்பாளர் சங்கீதா, மாநகர பொறுப்பாளர் மாதவன், மாணவர் கழக தேன்மொழி, இணைய தள...

இராசிபுரத்தில் தெருமுனைக் கூட்டம்; கருத்தரங்கம்

இராசிபுரத்தில் தெருமுனைக் கூட்டம்; கருத்தரங்கம்

8.4.2018 காலை 10 மணிக்கு இராசிபுரம் பழைய பேருந்து நிலையம், லயன்ஸ் கிளப் ஹாலில் ‘ஆரியம்-திராவிடம்-தமிழ் தேசியம்’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. சுமதி மதிவதனி தலைமை வகித்தார். பிடல் சேகுவேரா முன்னிலையில் திருப்பூர் முத்துலட்சுமி வரவேற்புரையாற்றினார். நிகழ்வில் வி. பாலு, கலைமதி (திரைப்பட துணை இயக்குனர்), வீரா. கார்த்திக் (தமிழ்நாடு அறிவியல் மன்றம், மாவட்டச் செயலாளர், ஈரோடு வடக்கு), கோபி. வேலுச்சாமி (தலைமைக் கழகப் பேச்சாளர்) ஆகியோர் கருத்துரையாற்றினர். இறுதியாக மணிமேகலை நன்றி கூறினார். மாலை 6:30 மணியளவில் இராசிபுரம் பழைய கதர்க் கடை அருகே கொள்கை விளக்க தெருமுனைக்கூட்டம் நடைபெற்றது. நிகழ்வில் இரா.பிடல் சேகுவேரா, வி. பாலு  (தி.மு.க) ஆகியோர் உரைக்குப் பின் கோபி.வேலுச்சாமி,  கலைமதி (துணைஇயக்குனர், திரைப்படத்துறை) சிறப்புரையாற்றினர். திருப்பூர் சாரதி நன்றி கூறினார். பெரியார் முழக்கம் 12042018 இதழ்

போராட்டக் களத்தில் கழகத் தோழர்கள்

போராட்டக் களத்தில் கழகத் தோழர்கள்

அய்.பி.எல். சுவர் விளம்பரம் : கழகத் தோழர்கள் அழித்தனர் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சென்னை மாவட்ட மயிலாப்பூர் தோழர்கள் மற்றும் மந்தவெளி விசாலாட்சி தோட்டம் பகுதி தோழர்கள் இணைந்து 05.04.2018 அன்று சென்னையில் நடைபெறவிருக்கும் ஐ.பி.எல் போட்டிக்காக வரையப்பட்டிருந்த சுவர் விளம்பரங்களை அழித்து அதன் மேல் “ஐபிஎல் வேண்டாம்” – “காவிரி மேலாண்மை வாரியம் வேண்டும்” என்று எழுதி எதிர்ப்பைத் தெரிவித்தனர். மந்தவெளி இரயில் நிலையம் முற்றுகை திராவிடர் விடுதலைக் கழகத்தின் சென்னை மாவட்ட மயிலாப்பூர் பகுதி தோழர்கள் மற்றும் விசாலாட்சி தோட்டம் பகுதியைச் சார்ந்த மக்கள் இணைந்து, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை சீர்குலைக்கும் மத்திய அரசைக் கண்டித்து 06.04.2018 காலை 11 மணிக்கு மந்தவெளி இரயில் நிலையத்தை கண்டன முழக்கத்தோடு முற்றுகை யிட்டனர். மந்தவெளி இரயில் தடத்தில் இறங்கி கண்டன முழக்கமிட்ட அனைவரும் கைது செய்யப்பட்டு மந்தவெளி திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டனர். விழுப்புரத்தில் அஞ்சலகம்...

நாமக்கல் பள்ளிபாளையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் !

நாமக்கல் பள்ளிபாளையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் !

நாமக்கல் பள்ளிபாளையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் ! திராவிடர் விடுதலைக் கழகம் நாமக்கல் மாவட்டம் சார்பில்04.04.2018 புதன்கிழமை மாலை 5 மணியளவில் நாசகார ஸ்டெர்லை ஆலையை மூட வலியுறுத்தியும்,காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுக்கும் மத்திய பாஜக அரசைக் கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இராசிபுரத்தில்  “ஆரியம் – திராவிடம் – தமிழ் தேசியம் ” கருத்தரங்கம் மற்றும் கலந்துரையாடல் நிகழ்வு.

இராசிபுரத்தில் “ஆரியம் – திராவிடம் – தமிழ் தேசியம் ” கருத்தரங்கம் மற்றும் கலந்துரையாடல் நிகழ்வு.

  இராசிபுரத்தில் திராவிடர்விடுதலைக்கழகத்தின் சார்பில் ஞாயிறு 08.04.18 அன்று”ஆரியம் – திராவிடம் – தமிழ் தேசியம்” எனும் தலைப்பில் கருத்தரங்கம் மற்றும் கலந்துரையாடல் நிகழ்வு நடைபெற்றது. தோழர் வசந்தி அவர்கள் வரவேற்புரையாற்றினார். தோழர் சுமதி மதிவதனி அவர்கள்கருத்தரங்கிற்கு தலைமை தாங்கினர். சிறப்பு அழைப்பாளராக திமுகவின் முன்னாள் மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் தோழர் வி.பாலு அவர்கள் கலந்து கொண்டார். கருத்துரையாக திரைப்பட துணை இயக்குநர் தோழர் கலைமதி, தமிழ்நாடு அறிவியல் மன்றத்தின் தோழர் வீரா.கார்த்திக், திவிகவின் தலைமைக் கழக பேச்சாளர் தோழர் கோபி.வேலுச்சாமி ஆகியோர் பேசினர். தோழர் ஈரோடு மணிமேகலை அவர்கள் நன்றியுரையாற்றினார்.ஏராளமான கழகத்தோழர்கள் ஆதரவாளர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

எச்.ராஜாவைக் கைது செய்! கொந்தளித்தது தமிழகம்!

எச்.ராஜாவைக் கைது செய்! கொந்தளித்தது தமிழகம்!

எச். ராஜாவைக் கண்டித்து, திராவிடர் விடுதலைக் கழக சார்பில் ஆர்ப்பாட்டங்கள் உருவ பொம்மை எரிப்புகள் நடந்தன. குமரி மாவட்டத்தில் 07-03-2017 புதன் கிழமை, காலை 11.00 மணிக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிறீநாத்திடம் புகார் மனு வழக்குரைஞர் வே.சதா (மாவட்டத் தலைவர்) தலைமையில் தமிழ்மதி (மாவட்டச் செயலாளர்), நீதி அரசர் (தலைவர், பெரியார் தொழிலாளர் கழகம்), சூசையப்பா (முன்னாள் மாவட்டத் தலைவர்), அப்பாஜி (வழக்குரைஞர் அணி துணைச் செயலாளர், தி.மு.க), வைகுண்ட ராமன், வின்சென்ட் ஆகியோரால் வழங்கப் பட்டது. ஆனைமலை : கண்டன ஆர்ப்பாட்டம் திராவிடர் விடுதலைக் கழகத்தின்  ஒருங் கிணைப்பில் அனைத்து கட்சிகளின் சார்பில் 07-03-2018 மாலை 5 மணிக்கு ஆனைமலை முக்கோணத்தில் நடைபெற்றது. ஆனைமலை நகரச் செயலர் வே.அரிதாசு தலைமையில், நகர தலைவர் சோ.மணிமொழி முன்னிலையில் நடைபெற்றது. கண்டன உரையாக நாகராசு (திராவிடர் கழகம்), பரமசிவம் (சிபிஎம் ), மணிமாறன்  (வெல்ஃபேர் பார்ட்டி), அப்பன்குமார் (விசிக), சாந்துசாகுல்அமீது (இந்திய...

திருச்செங்கோட்டில் எச்.ராஜா கொடும்பாவி எரிப்பு !

திருச்செங்கோட்டில் எச்.ராஜா கொடும்பாவி எரிப்பு !

திருச்செங்கோட்டில் எச்.ராஜா கொடும்பாவி எரிப்பு ! கழகத்தோழர்கள் கைது ! பெரியார் சிலையை அகற்றவேண்டும் என கூறிய பா.ஜ.க.தேசிய செயலாளர் எச்.ராஜாவைக்கண்டித்து 07.03.2018 அன்று திருச்செங்கோடு திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் காவல்துறையின் தடையையும் மீறி எச்.ராஜா கொடும்பாவி கொளுத்தப்பட்டது. இந்த போராட்டத்தில் ஈடுபட்ட கழகத்தோழர்களை காவல்துறை கைது செய்தது.

குமாரப்பாளையத்தில் ஆரியம்-திராவிடம்- தமிழ்த் தேசியம் கருத்தரங்கம்!

குமாரப்பாளையத்தில் ஆரியம்-திராவிடம்- தமிழ்த் தேசியம் கருத்தரங்கம்!

நாமக்கல் மாவட்டம், குமாரப்பாளையத்தில் ஆரியம்-திராவிடம்-தமிழ்த்தேசியம் குறித்த கருத்தரங்கம் மற்றும் விவாத நிகழ்ச்சி குமாரபாளையம் சி.எஸ்.அய். பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை (11.02.2018) மதியம்  2.00 மணியளவில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு நாமக்கல் மாவட்டத் தலைவர் மு.சாமிநாதன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலளார் மு.சரவணன், மாவட்ட அமைப்பாளர் மா.வைரவேல் மற்றும் மாவட்ட பொருளாளர் அ.முத்துப்பாண்டி முன்னிலை வகித்தனர். திருச்செங்கோடு பகுதித் தோழர் கவுதமன் வரவேற்புரையாற்றினார். வழக்கறிஞர் கிருஷ்ணன் துவக்கவுரையாற்றினார். இதையடுத்து குமாரபாளையம் பகுதி தோழர் கலைமதி ஆரியம்-திராவிடம்-தமிழ்த் தேசியம் பற்றி விரிவாகவும், வரலாற்று ரீதியாகவும் விளக்கவுரை யாற்றினார். பின்னர் தோழர்களின் கேள்விகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. நிகழ்விற்கு பள்ளிபாளையம், குமாரபாளையம், ராசிபுரம் மற்றும் திருச்செங்கோடு உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த தோழர்கள் வந்திருந்தனர். இறுதியாக குமாரபாளையம் பகுதி நகர செயலாளர் தண்டபாணி நன்றியுரையாற்றினார். பெரியார் முழக்கம் 22022018 இதழ்

ஜீயர் மீது வழக்கு பதியக்கோரி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!

ஜீயர் மீது வழக்கு பதியக்கோரி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!

கொளத்தூரில் ‘ஆண்டாள் ஆய்வுக்குரியவளே’ என்ற தலைப்பில் ஆய்வரங்கம் நடத்த திராவிடர் விடுதலைக் கழகம் திட்டமிட்டிருந்த நிகழ்ச்சியில் ‘சோடா பாட்டில் வீசுவோம்’ என்று வன்முறையைத் தூண்டும் விதமாகப் பேசிய சடகோப ராமனுஜன் மீது வழக்குப் பதியக் கோரி நாமக்கல் மாவட்ட திவிக சார்பில் திருச்செங்கோடு நகர காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளிக்கப்பட்டிருந்தது. இந்த மனுவின் மீது திருச்செங்கோடு துணை கண்காணிப் பாளர் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் மாவட்ட கண்காணிப்பாளரிடம் புகார் அளிக்கப்பட்டது. அதன் பிறகும் காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் சென்னை உயர்நீதிமன்றத்தில் நாமக்கல் மாவட்ட அமைப்பாளர் மா.வைரவேல் சார்பில் சடகோப ராமனுஜன் மீது வழக்குப் பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன்னிலையில் பிப்ரவரி 13ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது. பெரியார் முழக்கம் 15022018 இதழ்

‘சோடா பாட்டில்’ வீச்சுப் பேச்சுக்கு ஜீயர் மீது காவல்துறையில் புகார்

‘சோடா பாட்டில்’ வீச்சுப் பேச்சுக்கு ஜீயர் மீது காவல்துறையில் புகார்

‘ஆண்டாள் ஆய்வுக்குரியவளே’ என்ற தலைப்பில் கொளத்தூரில் வரும் 03.02.2018 அன்று நடைபெறவிருக்கும் கருத்தரங்கில் சடகோப ராமானுஜ ஜீயர் என்பவர் சென்று சோடா பாட்டில் வீசுவோம், எதற்கும் துணிவோம் எனவும் நான் உங்களுக்கு அழைப்பு விடுக்கும் போது நான் சொல்வது போல் செய்யுங்கள். இந்தக் கால சாமியார் எல்லாம் சும்மா உட்கார்ந்திருக்க மாட்டார்கள். இப்போதெல்லாம் தேவைப்பட்டால் நாங்களும் கண்ணாடி விடுவோம். எங்களுக்கும் சோடா பாட்டில் வீசத்தெரியும் எல்லாவற்றையும் வெளிப்படையாக சொல்லிவிடுவோம் என்று வன்முறையை தூண்டும் விதத்தில் பேசியிருக்கிறார். அதனை மேடையில் இருப்பவர்களும் ஆமோதித்து கைதட்டுகிறார்கள். நான் சொன்னபடி செய்வீர்களா என அரங்கில் இருந்தவர்களைப் பார்த்து கேட்கிறார், அனைவரும் செய்வோம் என முழங்குகிறார்கள். எனவே சடகோப ராமானுஜ ஜீயர், மேடையில் இருந்தவர்கள், நிகழ்ச்சி ஏற்பாடு செய்தவர்கள் ஆகியோர் மீது வன்முறையை தூண்டுதல், கலவரத்தை ஏற்படுத்தும் உள் நோக்கத்துடனும் கூட்டுச் சதியிலும் ஈடுபட்டதற்காக வழக்கு பதிவு செய்து கைது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று 27.01.2018 மாலை...

மத்திய கல்வி நிறுவனங்களில் மரணித்த மாணவர்களுக்கு  நீதி கேட்கும் பொதுக் கூட்டம்

மத்திய கல்வி நிறுவனங்களில் மரணித்த மாணவர்களுக்கு நீதி கேட்கும் பொதுக் கூட்டம்

மத்திய கல்வி நிறுவனங்களில் மரணித்த மாணவர்களுக்கு நீதி கேட்கும் பொதுக் கூட்டம் நாள்     :                 6.2.2018 வெள்ளிக்கிழமை நேரம்                   :                 மாலை 5.00 மணி இடம் :                 நெல்லுக்குத்தி மண்டபம் அருகில், திருச்செங்கோடு சிறப்புரை  : ஆசிரியர் சிவகாமி டாக்டர் ஜி.ஆர். ரவீந்திரநாத் (பொதுச் செயலாளர், சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம்) கொளத்தூர் மணி (தலைவர், திராவிடர் விடுதலைக் கழகம்) ஒருங்கிணைப்பு : தமிழ்நாடு மாணவர்க் கழகம், நாமக்கல் மாவட்டம் பெரியார் முழக்கம் 02022018 இதழ்

விஜயேந்திரன்-எச். ராஜா பார்ப்பனத் திமிர் காஞ்சி சங்கர மடம் முற்றுகை

சமஸ்கிருத விழாவில் தமிழ்த் தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்க மறுத்த காஞ்சி விஜயேந்திரன், நிகழ்வுக்கு ஏற்பாடு செய்த எச். ராஜா மன்னிப்புக் கேட்கக் கோரி தமிழகம் முழுதும் கழகத்தினரும், இன உணர்வாளர்களும் முற்றுகை ஆர்ப்பாட்டங்களை நடத்தினர். சேலம்: சேலம் மாவட்ட தி.வி.க. சார்பில் 25.1.18 மாலை 4.30 மணியளவில் சேலம் மேற்கு மாவட்ட கழகச் செயலாளர் சி.கோவிந்தராசு தலைமையில் தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடலை அவமரியாதை செய்த காஞ்சி இளைய மடாதிபதி விஜயேந்திரனின் ஆணவத்தைக் கண்டித்தும், திருவள்ளுவர் சிலை முன் மன்னிப்பு கேட்கக் கோரியும்   சேலம் சங்கர மடம் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் விஜயேந் திரன், எச்.ராஜா செயலுக்கு எதிரான முழங்கங்கள் எழுப்பப்பட்டன. தோழர்கள் சக்திவேல், டேவிட், சூரியகுமார், ஏற்காடு பெருமாள், மேட்டூர் தேன்மொழி, இளம்பிள்ளை வசந்தி உட்பட 50க்கும் மேற்பட்ட தோழர்கள் கைது. கொளத்தூர், காவலாண்டியூர்,  மேட்டூர், நங்கவள்ளி, இளம்பிள்ளை, ஏற்காடு ஆகிய பகுதியைச் சேர்ந்த தோழர்கள் கலந்து...

கழக சார்பில் தமிழர் திருநாள் விழாக்கள்

கழக சார்பில் தமிழர் திருநாள் விழாக்கள்

திராவிடர் விடுதலைக் கழக சார்பில் பல்வேறு பகுதிகளில் கழகத் தோழர்கள் தமிழர் திருநாள் தமிழ்ப் புத்தாண்டு விழாக்களை எழுச்சியுடன் நடத்தினர். சென்னையில் கழகம் நடத்தும் 18ஆம் ஆண்டு பொங்கல் விழா வழக்க மான உற்சாகம், கலை நிகழ்வுகளுடன் ஜன.12ஆம் தேதி இராயப்பேட்டை ‘பத்ரி நாராயணன்’ படிப்பகம் எதிரே வி.எம். சாலையில் நடந்தது. அதிர்வு குழுவினர் பறை இசை பழந்தமிழர்க் கலை நிகழ்வுகள், கிராமியப் பாடல்கள், ஜாதி ஒழிப்புப் பாடல் களோடு சிறப்பாக நிகழ்ச்சிகளை நடத்தினர். அதைத் தொடர்ந்து ‘அருண் டிரம்ஸ்’ குழுவினரின் கானா மற்றும் திரையிசை நிகழ்ச்சி நடந்தது. பெரியார், அம்பேத்கர் பாடல்களும், நீட் எதிர்ப்பு, அனிதாவுக்கு வீர வணக்கம் செலுத்தும் கானா பாடல் களும் பாடப்பட்டன. தி.மு.க., அ.தி.மு.க., பா.ம.க., விடுதலை சிறுத்தைகள் என்று அனைத்துக் கட்சிகளையும் கழகத் தோழர்கள் ஒருங்கிணைத்து இந்த விழாவை நடத்தி வருகிறார்கள். பகுதி வாழ் குழந்தைகள், சிறுவர்கள், வெவ்வேறு வேடங்களில் பங்கேற்றுப் பேசும் மாற்றுடைப்...

விஜயேந்திரர் உருவ பொம்மை எரிப்பு பள்ளிபாளையம் 25012018

விஜயேந்திரர் உருவ பொம்மை எரிப்பு பள்ளிபாளையம் 25012018

திவிக சார்பில் நாளை உருவ பொம்மை எரிப்பு… தமிழ்த்தாய் வாழ்த்துக்கு மரியாதை செலுத்தாத, தமிழை நீசபாஷை என்கிற பார்ப்பன கும்பலின் குட்டித்தலைவன் விஜயேந்திரன் உருவ பொம்மை எரிக்கப்படுகிறது…! நேரம்:மாலை-4.00 மணி, இடம்:பள்ளிபாளையம். நாமக்கல் மாவட்டம்.   செய்தி – வைரவேல்

மாணவர் சரத்பிரபு படுகொலைக்கு நீதி கேட்கும் ஆர்ப்பாட்டத்திற்கு தடை திருச்செங்கோடு

மாணவர் சரத்பிரபு படுகொலைக்கு நீதி கேட்கும் ஆர்ப்பாட்டத்திற்கு தடை திருச்செங்கோடு

டெல்லியில் மத்திய அரசின் மருத்துவ கல்வி நிறவனத்தின் சாதிய வன்மத்தால் படுகொலை செய்யப்பட்ட…. திருப்பூர் சரத் பிரபுவுக்கு நீதிகேட்டு திருச்செங்கோட்டில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் முன்னணி அமைப்பான தமிழ்நாடு மாணவர் கழகத்தின் சார்பில் வருகிற புதன்கிழமை (24-01-2018) ஆர்ப்பாட்டம் நடைபெற அனுமதி கேட்டதற்கு காவல் துறை மறுப்பு. நிகழ்வின் சிறப்பு யாதெனில், சரத் பிரபு கொங்கு வேளாளர் சமூகத்தை சார்ந்தவர்… அவருக்கு நீதிகேட்க போகிறவர்கள் திராவிடர் விடுதலைக் கழகம். ஆதித்தமிழர் பேரவை. விடுதலைச் சிறுத்தைகள். மா.வைரவேல் மாவட்ட அமைப்பாளர். திவிக. விரைவில் நீதிமன்ற அனுமதியோடு ஆர்ப்பாட்டம் நடைபெறும்

மதவெறியை தூண்டும் எச் ராஜாவை கைது செய்யக்கோரி புகார் மனு பள்ளிபாளையம் 19012018

தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக சாதி, மத ,கலவரங்களை தூண்டும் விதமாகவும் கவிஞர் வைரமுத்தை தரகுரைவாகபேசிய எச்.ராஜாவை கைது செய்ய கோரி திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக பள்ளிபாளையம் காவல் ஆய்வாளரிடம் புகார் அளிக்கப்பட்டது நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் 19-01-2018

இரண்டாம் கட்ட மாணவர் சந்திப்பு ஈரோடு 07012018

இரண்டாம் கட்ட மாணவர் சந்திப்பு… நாமக்கல், ஈரோடு மாவட்டங்கள் சார்பில், ஈரோட்டில் பெரியார் JCB என்ற இடத்தில் இன்று(07.01.2018) காலை 11 மணிக்கு தோழர் இனியவன் தலைமை வகிக்க, தோழர் ரத்தினசாமி(மாநில அமைப்புச் செயலாளர்) முன்னிலையில், மாணவர்கள் கலந்துரையாடல் தொடங்கியது. நிகழ்விற்கு, வெப்படை, பூந்துறை, மல்லசமுத்திரம், சென்னிமலை, திருச்செங்கோடு போன்ற பகுதிகளிலிருந்து மாணவர்கள் கலந்து கொண்டனர். மேலும் இந்நிகழ்வில், புதிய மாணவர்கள் கலந்து கொண்டதால், மாணவர்களின் சமகால ப்ரச்சனைகளான, நீட் தேர்வு, TNPSC-ன் தமிழக மாணவர்களுக்கு எதிரான அறிவிப்பு, தாழ்த்தப்பட்ட மாணவர்களின் உதவித்தொகை குறைப்பு போன்றவைகளைப் பற்றி  தோழர் ரத்தினசாமி(மாநில அமைப்புச் செயலாளர்), தோழர் வைரவேல்(நாமக்கல் மாவட்ட அமைப்பாளர்), தோழர் வேனுகோபால்(ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர்) ஆகியோர் விரிவாக எடுத்துரைத்தனர். அதன்பின், மாணவர்கள் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்தனர். மேலும், முதல் கலந்துரையாடலில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் இந்நிகழ்விலும் முன்மொழியப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது. இரண்டாவதாக ஈரோடு மண்டலம் சார்பாக ஈரோட்டில் மாணவர்கள் மாநாடு நடத்துவது, என்ற...

சேலம் தீர்மானம் எதிரொலி: களப்பணியைத் தொடங்கினர் நாமக்கல், ஈரோடு கழக மாணவர்கள்

சேலம் தீர்மானம் எதிரொலி: களப்பணியைத் தொடங்கினர் நாமக்கல், ஈரோடு கழக மாணவர்கள்

ஈரோட்டில் டிசம்பர் 16 ஆம் தேதி கூடிய தலைமைக் குழு தீர்மானங்களை செயல்படுத்த உடனடியாக களமிறங்கினர். நாமக்கல் ஈரோடு மாவட்டக் கழகத் தோழர்கள், நாமக்கல், ஈரோடு மாவட்டங்கள் சார்பில்  மாணவர்கள் சந்திப்பு, திருச்செங்கோடு பெரியார் மன்றத்தில் 31.12.2017 அன்று காலை 11:30 மணிக்கு தொடங் கியது. நிகழ்வில், ராசிபுரம், மல்லசமுத்திரம், பவானி, திருச்செங்கோடு போன்ற பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர். மனோஜ் தலைமை வகிக்க, தோழர்கள் வே.ஜீவிதா மற்றும் நித்யா முன்னிலை வகிக்க மாணவர்கள் கலந்துரையாடல் தொடங்கியது. மாணவர்களிடையே, நீட், தமிழ்நாடு தேர்வாணையத்தின் தமிழர் விரோத போக்கு, தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கான உதவித்தொகை குறைப்பு போன்றவைகளைப் பற்றி விரிவான கலந்துரையாடல் நடைபெற்றது. கலந்து கொண்ட புதிய மாணவர்கள் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்தனர். கலந்துரையாடலுக்குப் பின்,  சமூக வலைதளங்களில் மாணவர்கள் பிரச்சனைகளை பரப்புதல், கல்லூரி நுழைவாயிலில் காலை நேரங்களில் (வாய்ப்பைப் பொறுத்து) துண்டறிக்கைகளை கொடுத்தல், துறை சார்ந்த மாணவர்களின் பிரச்சனைகளுக்கு ஏற்றவாறு துண்டறிக்கைகளை...

அரசு தேர்வாணையத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டங்கள்!

தமிழ்நாட்டின் அரசுப் பணிகளுக்கு பிற மாநிலத்தவரும் விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு அரசு தேர்வாணையத்தின் அறிவிப்புக்கு கண்டனம் தெரிவித்து கழகம் ஆர்ப்பாட்டங்களை நடத்தியது. திருச்சி : திருச்சி மாவட்ட கழகச் சார்பாக 14.12.2017 வியாழன் காலை 10.30 மணிக்கு தமிழ்நாடு அரசு பணி தேர்வாணையத்தைக் கண்டித்து, அண்ணா சிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு பெரம்பலூர் மாவட்டத் தலைவர் துரை. தாமோதரன் தலைமை வகித்தார். பல் மருத்துவர் எஸ்.எஸ். முத்து, திருவரங்க நகரச் செயலாளர் அசோக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கருத்துரை வழங்கியோர்: செந்தில் (இளந்தமிழகம்), வின்செட் (மாநகரத் தலைவர், த.பெ.தி.க.), பாலாஜி (மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மே 17 இயக்கம்), வழக்குரைஞர் தமிழழகன் (ஆசிரியர், ‘தமிழ்க்காவிரி’), அன்பழகன் (பெரியார் பாசறை), பஷீர் அகமது (மக்கள் உரிமை மீட்பு இயக்கம்), வழக்குரைஞர் பொற்கொடி ஆகியோர்.  டார்வின்தாசன் (கழக மாவட்ட இணை ஒருங்கிணைப்பாளர்) நன்றியுரையாற்றினார்.  தோழர்கள் குணா, முருகானந்தம், மு.மனோகரன், டி.வி.மெக்கானிக் மணி, அவரது துணைவியார்,...

அரசு அலுவலகங்களில் மதப் பண்டிகைகளை கொண்டாடக் கூடாது என்று மனூ – திருச்செங்கோடு 28092017

அரசு அலுவலகங்களில் மதப் பண்டிகைகளை கொண்டாடக் கூடாது என்ற அரசாணையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி 28092017  நாமக்கல் மாவட்டம் சார்பாக, திருச்செங்கோடு நகர காவல் நிலையம், ஊரக காவல் நிலையம் மற்றும் நகராட்சி அலுவலகம் ஆகிய அலுவலகங்களில் மணு அளிக்கப்பட்டது  

தந்தை பெரியாரின் 139 வது பிறந்தநாள் விழா & நீட் தேர்வு குறித்த கருத்தரங்கம் 19092017 இராசிபுரம்

இராசிபுரம் திராவிடர் விடுதலைக்கழகத்தின் சார்பில் தந்தைபெரியாரின் 139 வது பிறந்தநாள் விழா & நீட் தேர்வு குறித்த கருத்தரங்கம் செப்டம்பர்19 ந் தேதி செவ்வாய் மாலை 6 மணிக்கு  இராசிபுரம் லயன்ஸ்கிளப் மீட்டிங்ஹாலில் நடைபெற்றது. தலைமை :  தோழர் இரா.பிடல் சேகுவேரா, நகரஅமைப்பாளர், இராசிபுரம் முன்னிலை:தோழர்.மு.சாமிநாதன் மாவட்டதலைவர், தி.வி.க வரவேற்புரை : தோழர்.மு.சரவணன் மாவட்டசெயலாளர், தி.வி.க வாழ்த்துரை:வி.பாலு, தலைவர், நகரவளர்ச்சிமன்றம், இராசிபுரம். நா.ஜோதிபாசு நகரசெயலாளர் மதிமுக எஸ்.கந்தசாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.பி.எம் கருத்துரையாளர்கள் : பேராசிரியர்.முனைவர் :இராம.சுப்பிரமணியன் பேராசிரியர் முனைவர்.சேதுமணி மணியன் ,மதுரை சிறப்பு அழைப்பாளர்: டாக்டர்.கே.பி.இராமலிங்கம் ,தலைவர், இயற்கை நீர்வளபாதுகாப்பு இயக்கம் ,திமுக ,விவசாய அணி மாநிலசெயலாளர். சிறப்புரை: தோழர் கொளத்தூர்மணி தலைவர் ,திவிக. நன்றியுரை : தோழர் அ.முத்துபாண்டி மாவட்டபொருளாளர், திவிக இராசிபுரம் பெரியார் பிறந்தநாளையொட்டி  புதுப்பாளையம் அரசுப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு பேச்சுப்போட்டி  கட்டுரைப்போட்டி ” நடத்தப்பட்டு  மாணவமாணவிகள்  மற்றும் மாணவ மாணவிகள் 29 பேருக்கு பாராட்டுசான்றிதழ்கள்,...

பெரியார் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் நாமக்கல்

கொட்டித்தீர்த்த மழையிலும் பெரியாரைக் கொண்டாடிய பள்ளிபாளையம் திவிக தோழர்கள் ஊர்வலமாக பிறந்தநாள் கொண்டாட்டம் குமாரபாளையத்தில் செய்தி – வைரவேல்

ஈரோடு பெரியார் சிலை முன் கழக தோழர்கள் நீட் தேர்விற்கு எதிரான உறுதிமொழி 03092017

திராவிடர் விடுதலைக் கழக மேற்கு மாவட்ட தோழர்கள் 03092017 மாலை ஈரோடு வீரப்பன் சத்திரம் பேருந்து நிலையத்தில் கல்வி உரிமை போராளி டாக்டர் அனிதா தற்கொலைக்கு நீதி வேண்டி நீட் தேர்வை ரத்து செய்ய கோரி மத்திய மாநில அரசுகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் முடிந்த பின்னர் பன்னீர் செல்வம் பூங்காவில் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து 60க்கும் மேற்பட்ட தோழர்கள் நீட் தேர்வை ரத்து செய்யும் வரை பெரியாரிய வழியில் போராட்டம் நடைபெறும், ஓயமாட்டோம் என்று உறுதிமொழி எடுத்தனர். நீட் தேர்வுக்கு எதிரான உறுதிமொழியை தோழர் கனல்மதி படிக்க அனைத்து தோழர்களும் உடன் சேர்ந்து உறுதியேற்றனர். தேர்வு உள்ளிட்ட தகுதி, திறமை என்று சொல்லி தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் கல்வி வேலை வாய்ப்பை பறிக்கும் எல்லாவித நுழைவுத் தேர்வுகளையும் தமிழ்நாட்டிலிருந்து விரட்டி அடிப்போம், தமிழக மக்களின் கல்வி நலம் காப்போம் மாநில பரப்புரை செயலாளர் தோழர் பால் பிரபாகரன் அவர்கள்...

திருச்செங்கோட்டில் எழுச்சியூட்டிய பயண நிறைவு விழா மாநாடு

“இழந்து வரும் உரிமைகளை மீட்போம்; தமிழகத்தின் தனித்தன்மை காப்போம்” என்ற முழக்கத்தை முன் வைத்து திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய 6 நாள் பரப்புரைப் பயணம், திருச்செங்கோட்டில் பயண நிறைவு விழா மாநாடாக எழுச்சியுடன் நடந்தது. ஆகஸ்டு 12 திராவிடர் விடுதலைக் கழகம் தொடங்கப்பட்ட நாளாகும். மாலை 4 மணியிலிருந்து ஒவ்வொரு பயணக் குழுவினரும் திருச்செங்கோடு நோக்கி வரத் தொடங்கினர். பயணத்துக்கு மக்கள் காட்டிய பேராதரவில் தோழர்கள் உற்சாகத்தில் மூழ்கியிருந்தனர். 6.30 மணியளவில் திருச்செங்கோடு நெல்லுக்குத்தி மண்டபம் அருகில் மாவட்ட அமைப்பாளர் மா.வைரவேல் தலைமையில் நிகழ்ச்சிகள் தொடங்கின. மாவட்டத் தலைவர் மு.சாமிநாதன் வரவேற்புரையாற்றியதைத் தொடர்ந்து மேட்டூர் டி.கே.ஆர். குழுவினரின் பறை இசை, பயணத்தில் மக்களிடம் நடத்திய வீதி நாடகக் கலை நிகழ்வுகள் தொடங்கின. தொடர்ந்து சென்னை பயணக் குழுவில் வந்த விரட்டு குழுவினரின் பறை. வீதி நாடகம், கலை நிகழ்வுகள் நடந்தன. தொடர்ந்து 5 பயணக் குழுக்கள் சார்பில் குழுவில் பங்கேற்ற...

நாமக்கல் நகராட்சி கட்டிடத்தின் பெரியார் மாளிகை பெயரை நீக்க முயற்சி

நாமக்கல் நகராட்சி கட்டிடத்தின் பெரியார் மாளிகை என்கிற பெயரை நீக்கி, ‘அம்மா மாளிகை’என்று மாற்ற முயற்சிக்கும் அதிமுகவின் சதி நாமக்கல் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தால் தற்காலிகமாக முறியடிப்பு செய்தி – வைரவேல்

சமூகநீதி-சமத்துவ பரப்புரைப் பயணம்’ நிறைவுவிழா பொதுக்கூட்டம் திருச்செங்கோடு 12082017

ஆகஸ்ட் 12 திருச்செங்கோட்டில்… திராவிடர் விடுதலைக் கழகம் நடத்தும், ‘சமூகநீதி-சமத்துவ பரப்புரைப் பயணம்’ நிறைவுவிழா பொதுக்கூட்டம். சமூகநீதி காக்க தோழர்களின் பேராதவை எதிர்நோக்கி… -வைரவேல் மாரியப்பன் 97882-28962

சே குவாராவின் 90ஆவது பிறந்தநாள் பொதுக்கூட்டம் திருச்செங்கோடு 14062017

14-6-2017 அன்று மாலை 6-00 மணியளவில், இராசிபுரம் புதிய பேருந்து நிலையத் திடலில், இராசிபுரம் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில்  “சே குவாராவின் 90ஆவது பிறந்தநாள் பொதுக்கூட்டம் நகரக் கழகத் தலைவர் பிடல் சே குவேரா தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில் தொடக்கத்தில் மேட்டூர் டி.கே.ஆர் பகுத்தறிவு இசைக்குழுவினரின் பகுத்தறிவு, ஜாதியொழிப்புப் பாடல்கள் பாடப்பட்டன. பொதுக்கூட்டத்தில் இர. சுமதி வரவேற்புரயாற்றினார். தொடர்ந்து இராசிபுரம் கழகத் தோழர் மலர், பள்ளிபாளையம் முத்துபாண்டி, கழக அமைப்பு செயலாளர் ஈரோடு இரத்தினசாமி, ஆகியோரைத் தொடர்ந்து கழகப் பரப்புரைச் செயலாளர் தூத்துக்குடி பால் பிரபாகரன் சிறப்புரையாற்றினார். இறுதியாக உரையாற்றிய கழகத் தலைவர், அர்ஜெண்டினாவில் பிறந்து, கியூப நாட்டு விடுதலைக்குப் போராடி, அந்நாடு விடுதலை அடைந்த பின்னர், அந்நாட்டுக் குடியுரிமை வழங்கப் பட்டு தலைமை அமைச்சராய், திட்ட அமைச்சராய், தேசிய ரிசர்வ் வங்கியின் கவர்னராய் நியமிக்கப்பட்ட பின்னரும், அண்டை நாடான பொலிவியாவில் நடைபெற்ற விடுதலைப் போரில் கலந்துகொள்ளச் சென்று அங்கு...

மாட்டுக்கறிக்கு எதிரான முற்றுகைப் போர் நாமக்கல் 31052017

மாட்டுக்கறி விற்பனைக்கு தடைவிதித்த பாஜக அரசைக் கண்டித்து, மாவட்ட அமைப்பாளர் வைரவேல் தலைமையில் திராவிடர் விடுதலைக் கழகத்தினர் சார்பில் திருச்செங்கோடு ஸ்டேட் பாங்க்கை முற்றுகையிட்டு போராட்டம். 21 பேர் கைது.

மத்திய அரசின் மாட்டிறைச்சிக்கான தடையை எதிர்த்து முற்றுகைப் போராட்டம் திருச்செங்கோடு 31052017

.. தடையைத் தகர்க்க ஒன்று கூடுவோம்.. நாள்: 31.05.2017 இடம்: ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா முன்பு, திருச்செங்கோடு. திராவிடர் விடுதலைக் கழகம்

திராவிடர் விடுதலைக் கழக கிளைக் கழக துவக்க விழா

நாமக்கல் மாவட்டம்,  திருச்செங்கோடு நகர திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் கருவேப்பம்பட்டி, குதிரைப்பள்ளம் பகுதியில் 07.05.2017 ஞாயிற்றுக் கிழமையன்று  மாலை5.00 மணிக்கு கிளைக்கழக துவக்கவிழா நிகழ்வும் பெரியாரின் கொள்கை விளக்க தெருமுனைப் பிரச்சாரமும் நடைபெற்றது. நிகழ்வின் முன்னதாக அப்பகுதியில் கழகத்தின் கொடியை தலைமைக் கழகப் பேச்சாளர் தோழர் கா.சு வேலுச்சாமி ஏற்றி வைத்தார். இதனைத் தொடர்ந்து பெரியாரின் கொள்கை விளக்க தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் காவை இளவரசனின் “மந்திரமா தந்திரமா” அறிவியல் விளக்க நிகழ்ச்சி நடைபெற்றது. அதைத் தொடர்ந்து தலைமைக் கழகப்  பேச்சாளர்  கா.சு.வேலுச்சாமி, பெரியாரின் கொள்கைகளை விளக்கி சிறப்பான உரை நிகழ்த்தினார். இந்நிகழ்விற்கு கழகத்தோழர் மணி தலைமை தாங்கினார், நாமக்கல் மாவட்ட அமைப்பாளர் மா.வைரவேல், மாவட்ட பொருளாளர் அ.முத்துப்பாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்வை அப்பகுதியைச் சார்ந்த தோழர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். கொங்கு அமைப்புகளின் ஜாதி ஆதிக்கம் நிறைந்த இப்பகுதியில் சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக...

களப்பணிகளில் கழகத் தோழர்கள்

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் நடந்த கழகத்தின் களப்பணிகள் கழகப் பொறுப்பாளர்கள் பங்கேற்ற நிகழ்வுகளின் தொகுப்பு. ஈரோட்டில் ‘கனி ராவுத்தர்’ குளம் மீட்பு இயக்கத்தின் தொடர் போராட்டம் ஈரோடு நகருக்கு அருகே உள்ளது கனிராவுத்தர் குளம். 44 ஏக்கர் பரப்பளவு கொண்ட அந்தக் குளம் அரசு அதிகாரிகளின் துணையோடு பணமுதலை களால் ஆக்கிரமிக்கப்பட்டு தற்போது வெறும்14 ஏக்கராக சுருங்கியுள்ளது. குளத்தை மீட்டெடுப் பதற்காக ‘கனிராவுத்தர் குள மீட்பு இயக்கம்’ என்ற பெயரால் தமிழத் தேசிய நடுவம் தோழர் நிலவன் ஒருங்கிணைப்பில் மக்கள் சிவில் உரிமைக் கழகத் தலைவர் கண.குறிஞ்சி, திராவிடர் விடுதலைக் கழக அமைப்புச் செயலாளர் ப. இரத்தினசாமி போன்றோர் இணைந்து மக்கள் திரள் போராட்டங்கள், நீதிமன்ற வழக்கு என்ற வழிமுறைகளில் போராடிவருகின்றனர். அதன் ஒரு பகுதியாக குளத்தை சுத்தப்படுத்தும் பணிகள் தற்போது நடந்தேறிவருகின்றன. 23-4-2017 அன்று ஈரோட்டுக்கு ஒரு நூல் வெளியீட்டுக்காக சென்றிருந்த கழகத் தலைவர் கொளத்தூர் மணி, மூத்த வழக்கறிஞர்...

புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாள் விழாப் பொதுக்கூட்டம் பள்ளிபாளையம் 30042017

30042017 அன்று மாலை நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அருகே உள்ள சின்னாகவுண்டன்பாளையத்தில், பள்ளிபாளையம் நகர திராவிடர் விடுதலைக் கழகத்தின் ஏற்பாட்டில் ‘புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாள் விழாப் பொதுக்கூட்டம் நகர செயலாளர் தியாகு தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தின் தொடக்கத்தில் பெரம்பலூர் தாமோதரனின் ‘மந்திரமல்ல! தந்திரமே!’ செயல்முறை விளக்க நிகழ்ச்சி நடத்தப்பட்டது. கூட்டம் தொடங்குவதற்கு முன்னதாக இஸ்லாமிய மதவெறியர்களால் படுகொலைசெய்யப்பட்ட தோழர் கோவை ஃபாரூக்கின் படத்தை தோழர்கள் சஜீனா,மீனாட்சி ஆகியோர் திறந்துவைத்தனர். தோழர்கள் முத்துபாண்டி, திருச்செங்கோடு வைரவேல், மாவட்டத் தலைவர் சாமிநாதன், அமைப்புச் செயலாளர் இரத்தினசாமி ஆகியோரைத் தொடர்ந்து கோபி வேலுச்சாமி நகைச்சுவை பொங்க ஒரு மணி நேரம் உரையாற்றினார். இறுதியாக கழகத் தலைவர் கொளத்தூர் மணி அம்பேத்கர் பெரியார் ஆகியோரின் பணிகளைக் குறிப்பிட்டு, அவர்கள் காட்டிய வழியில் பணியாற்றி சமூக விடுதலை பெறுவோம் என்றார். இளைஞரணித் தோழர் கா.யுவராசு நன்றி கூற கூடம் நிறைவுற்றது.

புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்தநாள் விழா திருச்செங்கோடு 14042017

திருச்செங்கோட்டில்திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்தநாள் விழா… செய்தி தோழர் வைரவேல்

மெரினாவில் காவல்துறை தாக்குதலுக்கு கண்டன ஆர்ப்பாட்டம் திருச்செங்கோடு 30012017

சென்னை மெரினாவில் ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது மாணவர்கள், மீனவர்கள் மற்றும் தலித்துகள் மீது நடத்தப்பட்ட காவல்துறையின் வன்முறைகளுக்கு நீதிகேட்டு…. நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையத்தில் 30012017 அன்று திராவிடர் விடுதலைக் கழகம் ஆர்ப்பாட்டம்.   செய்தி தோழர் வைரவேல்

திருச்செங்கோட்டில் அரியலூர் நந்தினிக்கு நீதிக்கேட்டு ஆர்ப்பாட்டம்…! 27012017

நாமக்கல் மாவட்ட திவிக சார்பில் திருச்செங்கோட்டில் அரியலூர் நந்தினிக்கு நீதிக்கேட்டு ஆர்ப்பாட்டம்…! பொள்ளாட்சி,ஈரோடு,திருப்பூர்,சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து சுமார் 70க்கும் மேற்பட்ட ஜாதி ஒழிப்பு போராளிகள் பங்கேற்பு. (10 பெண்கள் உட்பட) நன்றி: •கா.சு.நாகராசு.ஒருங்கிணைப்பாளர். பெரியார் திக. •இரத்தினசாமி. மாநில அமைப்பு செயலாளர். திராவிடர் விடுதலைக் கழகம். •சிவகாமி.மாநில அமைப்பாளர். தமிழ்நாடு அறிவியல் மன்றம். •முல்லைவேந்தன்.மேட்டூர் •மணிமொழி.திவிக.பொள்ளாட்சி செய்தி வைரவேல்

பெரியார் அம்பேத்கர் நினைவு நாள் பொதுக்கூட்டம் பள்ளிபாளையம் 29122016

தந்தை பெரியார் அம்பேத்கர் நினைவு நாள் பொதுக்கூட்டம் 29122016 அன்று நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியின் தொடக்கத்தில் கருப்பரசன் நாடக குழுவினர் மிகச் சிறப்பாக பெரியாரிய கருத்துக்களால் உலுக்கிய எடுத்தார்.   கழக தலைவர் தோழர்.கொளத்தூர் மணி அவர்களின் உரை பார்க்க சொடுக்கவும் பகுதி 1 கழக தலைவர் தோழர்.கொளத்தூர் மணி அவர்களின் உரை பார்க்க சொடுக்கவும் பகுதி 2