இரண்டாம் கட்ட மாணவர் சந்திப்பு ஈரோடு 07012018
இரண்டாம் கட்ட மாணவர் சந்திப்பு…
நாமக்கல், ஈரோடு மாவட்டங்கள் சார்பில், ஈரோட்டில் பெரியார் JCB என்ற இடத்தில் இன்று(07.01.2018) காலை 11 மணிக்கு தோழர் இனியவன் தலைமை வகிக்க, தோழர் ரத்தினசாமி(மாநில அமைப்புச் செயலாளர்) முன்னிலையில், மாணவர்கள் கலந்துரையாடல் தொடங்கியது.
நிகழ்விற்கு, வெப்படை, பூந்துறை, மல்லசமுத்திரம், சென்னிமலை, திருச்செங்கோடு போன்ற பகுதிகளிலிருந்து மாணவர்கள் கலந்து கொண்டனர். மேலும் இந்நிகழ்வில், புதிய மாணவர்கள் கலந்து கொண்டதால், மாணவர்களின் சமகால ப்ரச்சனைகளான, நீட் தேர்வு, TNPSC-ன் தமிழக மாணவர்களுக்கு எதிரான அறிவிப்பு, தாழ்த்தப்பட்ட மாணவர்களின் உதவித்தொகை குறைப்பு போன்றவைகளைப் பற்றி தோழர் ரத்தினசாமி(மாநில அமைப்புச் செயலாளர்), தோழர் வைரவேல்(நாமக்கல் மாவட்ட அமைப்பாளர்), தோழர் வேனுகோபால்(ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர்) ஆகியோர் விரிவாக எடுத்துரைத்தனர்.
அதன்பின், மாணவர்கள் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்தனர். மேலும், முதல் கலந்துரையாடலில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் இந்நிகழ்விலும் முன்மொழியப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது. இரண்டாவதாக ஈரோடு மண்டலம் சார்பாக ஈரோட்டில் மாணவர்கள் மாநாடு நடத்துவது, என்ற தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. இறுதியாக தோழர் மனோஜ் நன்றியுறையாற்றினார்