மீண்டும் பார்ப்பனீயமா?
மாகாணப் பார்ப்பனீயம் மீண்டும் அறைகூவி அழைக்கிறது. இதற்கு மாகாணப் பார்ப்பனரல்லாதார் அளிக்கப்போகும் பதில் யாது? இன்றைய மாகாணச் சர்க்கார் நமது பார்ப்பனர் அல்லாதார் கட்சியில் நடைபெற்று வருகிறது. சென்ற மாதத்திற்கு முன் மாகாணச் சட்டசபையில் இனாம்தார்களின் பார்ப்பனப் பணக்காரர்களின் குடிகளுக்கு நியாயம் வழங்க ஓர் சட்டம் நிறைவேறியது. இச்சட்டத்தால் இனாம்குடிகளுக்குப் பரிபூரண நன்மை எதுவும் ஏற்படாவிட்டாலும் ஓர் சாதாரண உரிமையை மட்டும் ஒப்புக்கொள்வதாகவே அச்சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதைக் கண்டு மாகாணப் பார்ப்பனீயம் ஒன்றுபட்டு எதிர்க்க முயற்சித்தது. முடிவில் மாகாணக் கவர்னர் பெருமானைப் பேட்டிகண்டு நிறைவேற்றப்பட்டுள்ள இனாம் குடிகள் சட்டத்திற்கு ஓர் திருத்தம் கொண்டுவரும்படி இன்றைய பிராமணீயம் செய்துவிட்டது. இதற்கு மாகாணப் பார்ப்பனரல்லாதார் கட்சி செய்யப்போகும் பரிகாரம் யாது என்பதுதான் நமது கேள்வியாகும். அதிகாரத்தில் உள்ள சட்ட சபையில் மெஜாரிட்டியாகவுள்ள ஜஸ்டிஸ் கட்சிக்காரர்கள் சர்க்கார் மெம்பர்களுடைய பரிபூரண ஒத்துழைப்பையும் பெற்று இச் சட்டத்தை நிறைவேற்றினார்கள். இச் சட்டத்தால் இனாம்தார்களுக்கு எத்தகைய கஷ்டமோ, ...