3 லக்ஷமா?
ரஷிய நாட்டில் தீக்கிரையாக்கப்பட்டது போக மிஞ்சிய சில புத்தகங்களில் புறாதன காலத்து கையெழுத்து பிரதியான “”பைபிள்” ஒன்று பிரிட்டீஷ் பொது ஜனங்கள் 3 லக்ஷ ரூபாய் கொடுத்து வாங்கினார்களாம். இது அங்குள்ள மதத்தின் பேரால் உள்ள செல்வ செறுக்கை காட்டுகிறது. அதே தினத்தில் தான் பதினாயிரக்கணக்கான வேலையற்றோர் ஊர்வலக் காக்ஷியும் அங்கு நேர்ந்தது. பைபிளுக்கு கொடுத்த பணம் பட்டினிக்கு கொடுத்தால் சோறாகும். பட்டினிகாரர்களுக்கு பைபிள் ஒருக்கால் இனி சோறு போடுமா? என்று பார்க்கலாம்.
புரட்சி துணைத் தலையங்கம் 11.03.1934