சக்கரை என் நண்பரல்ல ( நன்றி கெட்ட தன்மை )
சென்னை கார்பொரேஷன் தேர்தலின் போது சென்னை கார்பொரே ஷனை பிராமணக் கார்பொரேஷனாக்க ஸ்ரீமான்கள் சக்கரை செட்டியாரும், ஆதிகேசவ நாயக்கரும், பிராமணரல்லாதார் பலரும் அரும்பாடு பட்டார்கள்; தங்கள் வகுப்பாரை வைதார்கள்; தேசத் துரோகி என்றார்கள்; சமூகத் துரோகி என்றார்கள்; இன்னும் ஒரு மயிர்க்காலுக்கு ஒரு பொய்யும் சொல்லி பாமர ஜனங்களை ஏமாற்றி பிராமண கார்பொரேஷன் ஆக்கினார்கள். பிறகு, இவர்கள் கதி என்ன ஆயிற்று? ஸ்ரீமான் ஆதிகேசவ நாயக்கரைப்பற்றி எங்கு தேடிப் பார்த்தாலும் ஆசாமி இருக்கிற இடமே தெரியாமல் ஒழித்து விட்டார் கள். ஸ்ரீமான் சக்கரை செட்டியாரைப் பற்றியோவென்றால் நினைப்பதற்கே மயிர் கூச்சல் எடுக்கிறது. அதாவது, சென்ற வாரம் கார்பொரேஷன் மீட்டிங் கில் ஸ்ரீமான் சக்கரை செட்டியார் தனது அருகில் இருந்த ஒரு பிராமண நண்பரிடம் தனது நண்பர் என்கிற முறையில், ஏதோ சில வார்த்தைகள் பேசிக் கொண்டிருந்தாராம். அதை ஒண்டிக் கேட்டுக் கொண்டிருந்த மற்றொரு பிராமண மெம்பர் உடனே அதை கார்பொரேஷன் பிரசிடெண்ட்...