“திராவிடன்” வேண்டுமா? வேண்டாமா?

சகோதரர்களே!
பார்ப்பன ஆட்சியாலும், பார்ப்பன சூழ்ச்சியாலும், பார்ப்பன மதத் தாலும், பார்ப்பன பத்திரிகை பிரசாரத்தாலும் நீங்கள் இழந்து கிடக்கும் சுய மரியாதையும், சுதந்திரத்தையும், ஒற்றுமையையும் திரும்பவும் அடைய வேண்டுமா? வேண்டாமா? வேண்டுமானால் அதற்கென்றே உங்கள் தொண்டர்களால், பலவித கஷ்ட நஷ்டங்களுக்கும் பழிகளுக்கும் ஆளாகி நடத்தப்பட்டு வரும் ‘திராவிடனை’ வாங்கிப் படியுங்கள். ‘திராவிடன்’ தான் போலி தேசீயத்தையும் சுயராஜ்யப் புரட்டையும் தைரியமாய் வெளியாக்கி சுயமரியாதைக்கென்றே உழைப்பவன். எனவே, ‘திராவிடன’ன்றிக் கண்டிப்பாய் உங்களுக்கு கதி மோட்சமில்லை; இதை நம்புங்கள்.

குடி அரசு – அறிவிப்பு – 28.08.1927

You may also like...

Leave a Reply