மறுபடியும் பெசண்டம்மையார்
ஒரு விதத்தில் மறைந்து போன ஸ்ரீமதி பெசண்டம்மையாரின் அரசியல் செல்வாக்கை மறுபடியும் உயிர்ப்பிக்க கொஞ்ச நாளாகவே அந்தரங் கத்தில் பல ஏற்பாடுகள் நடந்து வருகின்றதை நாம் அறிவோம். அதற்காக பல பத்திரிகைகளையும் வசப்படுத்த செய்துவரும் முயற்சியையும் நாம் அறிந்துவருகிறோம்.
பெசண்டம்மையாரின் ஆதிக்கம் அல்லது தலைமை என்பது பெரிதும் விபூதி பூசும் அய்யர்களான பார்ப்பனர்களின் ஆதிக்கம்தான். மகாத்மா காந்தி யின் ஆதிக்கமென்பது பெரிதும் நாமம் போடும் அய்யங்கார்களான பார்ப்பனர்களின் ஆதிக்கம்தான். “நாட்டுக்கு எந்த துரை வந்தாலும் தோட்டிக்கு புல் சுமக்கும் வேலை போகாது” என்பது போல் பார்ப்பன சூழ்ச்சி யால் எந்த தலைவர் போய் எந்த தலைவர் வந்தாலும் பார்ப்பனர்களுக்கு யோகமே தவிர நமது கதி இவர்கள் காலை நக்கிக் கொண்டு திரிய வேண்டிய தாய்தான் இருக்குமேயல்லாமல் ஒருக்காலும் சுயமரியாதையுடன் வாழ முடியாது. இதற்கு சாட்சி மகாத்மா ஆதிக்கத்தால் ஏற்பட்ட பலனே போது மானது. இனி நமக்கு மகாத்மாக்களும் வேண்டாம், உலக ரக்ஷகிகளும் வேண் டாம். நம்ம காலிலேயே நாம் நிற்கும்படியான யோக்கியதை நமக்கு வரும் வரை அனாவசியமாய் இவைகளிலெல்லாம் கவனம் செலுத்தாமலிருப்பதே மேலானது.
குடி அரசு – செய்தி விளக்கம் – 11.09.1927