நெற்றிக் கண்ணைக் காட்டினாலும் குற்றம் குற்றமே

சுவாமி வேதாசலம் அவர்கள் அருமைக் குமாரத்திக்கும் நமது நண்பர் திருவரங்கம்பிள்ளை அவர்களுக்கும் நடந்தேறிய திருமணச் சடங்கானது தமிழ்மக்களையே குழப்பத்தில் கொண்டு வந்து விட்டு விட்டது.

சுவாமி வேதாசலம் அவர்களும் திருவாளர் கா. சுப்பிரமணிய பிள்ளை அவர்களும் தமிழ் நாட்டிலேயே தமிழ் மக்களின் பழய நாகரிக விஷயமாய் தக்க ஆராய்ச்சி உள்ளவர்கள் . ஏனையவர்களை இவர்களுக்கு சமமானவர்கள் அல்லது இவர்களுக்கு அடுத்தவர்கள் என்று சொல்ல வேண்டுமேயல்லாமல் இவர்களுக்கு மீறினவர்கள் என்று சொல்ல முடியாது என்பது நமது அபிப்பிராயம். அப்படிப்பட்ட இரு ஞான பாஸ்கரர்கள் கூடிச் செய்த திருமணம் பார்ப்பனீயத் திருமணமாய் நடந்தேறிற்றென்றால் மற்ற வர்கள் எவ்வளவு தூரம் பார்ப்பனீயத்திற்கு உயர்வு கொடுக்க மாட்டார்கள்! உயர்வு கொடுக்க விரும்பார்களா என்பதை யோசிக்கும்படி அவர்களுக்கே விட்டு விடுகிறேன். இதற்கு ஏதாவது தகுந்த சமாதானம் இவர்கள் சொல்லாத வரையில் திருத்த முடியாத குற்றமாவதோடு மக்களுக்கு குழப்பமும் நமது முயற்சிக்கு இடையூறும் ஏற்படும் என்பதையும் வணக்கத்துடன் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.

குடி அரசு – குறிப்புரை – 11.09.1927

You may also like...

Leave a Reply