மகாத்மாவும் காங்கிரசும்

காங்கிரஸ் ஏற்பட்டது முதல் நாளது வரை பொது மக்களுக்கு எந்த விதமான நன்மையும் ஏற்படவில்லை என்பதையும் பல கெடுதிகள் ஏற்பட்டி ருக்கிறது என்பதையும் மகாத்மா மனதார அறிந்திருந்தும், அக்கெடுதிகளை ஒழிக்க தன்னால் கூடியவரை பாடுபட்டுப் பார்த்தும் முடியவில்லை என்று ஒப்புக்கொண்டும், காங்கிரஸ் பெயரைச் சொல்லிக் கொண்டு ஒரு கூட்டத்தார் பாமர மக்களை ஏமாற்றிப் பிழைக்கிறார்கள் என்பதையும் ஒப்புக் கொண்ட பிறகும், மகாத்மா எல்லோரையும் காங்கிரசில் சேருங்கள் என்பதும் பம்பாய் பார்ப்பனரல்லாதார் மகாநாட்டுக்கு மகாநாட்டார் மகாத்மாவை அழைத்தால் அதற்கு பதிலாக “நல்ல எண்ணத்தோடு எல்லோரும் காங்கிரசில் சேருங்கள்” என்று தந்தி அடிப்பதும் நமக்கு ஆச்சரியமாயிருக்கிறது. மகாத்மா காந்தி போன்றவர்களே காங்கிரஸ் முத்திரை (லேபிள்) இல்லாமல் மகாத்மாவாக இருக்க முடியவில்லை என்றால் மற்றவர்கள் காங்கிரஸ் முத்திரையைப் போட்டுக் கொண்டு வாழ்வதில் நமக்கு அதிசயம் எப்படி தோன்றும்.

குடி அரசு – செய்தி விளக்கம் – 11.09.1927

You may also like...

Leave a Reply