Tagged: நம்பாதிங்க சாமியார்களை

பயணக் குழுவில் பங்கேற்ற தோழர்கள்

“நம்புங்கள் அறிவியலை; நம்பாதீர்கள் சாமியார்களை” என்ற முழக்கத்தை முன் வைத்து திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய அச்சம் போக்கும் அறிவியல் பரப்புரைப் பயணத்தில் பங்கேற்ற தோழர்களின் பட்டியல். திருப்பூர் பயணக் குழு 5 நாள் பங்கேற்றோர் : மணிமொழி – ஆனைமலை, நிர்மல் – கோவை,  திருப்பூர் : முத்துலட்சுமி, சத்தியமூர்த்தி, சங்கீதா, யாழ் இசை, மூர்த்தி, மாப்பிள்ளை சாமி (லெனின்), நீதிராசன், சு. துரைசாமி – திருப்பூர் கழகப் பொருளாளர், கிருஷ்ணன் – கோவை, பார்வதி – நூல்கள் விற்பனைக் குழு, பன்னீர் செல்வம் – சூலூர், தலைமைக் கழகப் பேச்சாளர்கள் கோபி. வேலுச்சாமி, காவை. இளவரசன். 4 நாள் பங்கேற்றோர் : கதிர்வேல்-ஆனை மலை 3 நாள் பங்கேற்றோர் : முகில்ராசு (திருப்பூர்), இராமச்சந்திரன் (மேட்டுப்பாளையம்) 2 நாள் பங்கேற்றோர் : சண்முகம் (பல்லடம்), கார்த்திகேயன் (பெங்களுர்), ராஜசிங்கம் (திருப்பூர்), தனபால், அகிலன். மயிலாடுதுறை பயணக் குழு 6...

அறிவியல் பரப்புரை பயண திருப்பூர் அணியில் பயணத்தில்கலந்து கொண்டோர்

நம்புங்கள் அறிவியலை நம்பாதிங்க சாமியார்களை என்ற முழக்கத்தோடு திவிக சார்பில் அச்சம் போக்கும் அறிவியல் பரப்புரை பயணம் 5 நாட்கள் தமிழகமெங்கும் நடந்தது திருப்பூர் அணியில் கலந்துகொண்டு வழிநடத்தியவர்கள் தலைமை தோழர் திருப்பூர் சுதுரைசாமி பொருளாளர் திவிக பயணவிளக்கவுரை தோழர். கோபி வேலுச்சாமி தலைமைக் கழகப்பேச்சாளர் மந்திரமா? தந்திரமா? அறிவியல் விளக்கவுரை தோழர் காவை இளவரசன் பயணஒருங்கிணைப்பாளர் தோழர் சூலுர் பன்னிர் செல்வம்   அய்ந்து நாள் கலந்துகொண்டவர்கள் தோழர் நிர்மல்குமார் கோவை மாவட்டசெயலாளர்/வசூல் குழு தோழர் ஆனைமலை மணிமொழி தோழர் உக்கடம். கிருஷ்ணன் அவர்கள் /விடியோ புகைபடம் தோழர் திருப்பூர் நீதிராசன் மாநகர தலைவர் திருப்பூர் தோழர் பார்வதி   திருப்பூர் ,புத்தகவிற்பனை பொருப்பு தோழர் சங்கீதா  இயக்க பாடல்கள் இளம்தோழர் சங்கீதா மகள் யாழ் இசை தோழர் முத்துலட்சுமி அவர்கள் துண்டறிக்கை /புத்தகவிற்பனை தோழர் மாப்பிள்ளைசாமி அவர்கள் மதுரை மாவட்ட அமைப்பாளர் தோழர் சக்தி அவர்கள் திருப்பூர் ராயபுரம்,...

‘விநாயகர்’ ஊர்வலங்களில் விதி மீறல்கள் தடுத்து நிறுத்த கழகம் களமிறங்கும்!

திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பாக 12.8.2016 அன்று மாலை, சேலம் மாவட்டம் ஆத்தூரில் நடைபெற்ற ‘அச்சம் போக்கும் அறிவியல் பரப்புரைப் பயணம்’ நிறைவு விழா பொதுக் கூட்டத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி முன்மொழிந்து நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: இந்திய அரசியலமைப்புச் சட்டம், குடிமக்களுக்கு பல அடிப்படை உரிமைகளை வழங்கியிருப்பதைப் போலவே அதன் 51ஏ பிரிவின்படி அடிப்படை கடமைகளையும் வரையறுத்துள்ளது. அறிவியல் மனப்பான்மை, மனித நேயம், ஆய்வு மனப்பான்மை, சீர்திருத்தம் ஆகியவற்றை வளர்த்தெடுப்பது என்பதை குடிமக்கள் அனைவரின் அடிப்படை கடமை என்று உள்பிரிவு ‘எச்’ (h) வலியுறுத்துகின்றது. இதனை வலியுறுத்தியே “நம்புங்கள் அறிவியலை! நம்பாதீர்கள் சாமியார்களை!” எனும் முழக்கத்தோடு அச்சம் போக்கும் அறிவியல் பரப்புரைப் பயணத்தை தமிழகத்தின் நான்கு முனைகளிலிருந்தும் திராவிடர் விடுதலைக் கழகம் மக்களின் பெரு வரவேற்போடும், ஆதரவோடும் நடத்தி முடித்துள்ளது. அரசியல் அமைப்புச் சட்டம் வலியுறுத்தும் அடிப்படை கடமைகளை நிறைவேற்றும் இப்பயணங்களுக்கு ஆதரவாக பாதுகாப்பு வழங்கியும் வந்த சிறு இடையூறுகளைக்...

‘விரட்டு’ வீதி நாடகக் குழுவினரின் ‘ஒன்றுமில்ல’ என்ற வீதி நாடக காட்சிகள் !

“நம்புங்க அறிவியலை; நம்பாதீங்க சாமியார்களை” என்ற முழக்கத்தை முன்வைத்து திராவிடர் விடுதலைக் கழகம் ஆகஸ்டு 7 முதல் 12 வரை நடத்திய பரப்புரைப்பயணத்தின் நிறைவு விழா பொதுக் கூட்டம், ஆகஸ்டு 12 வெள்ளி மாலை சேலம்மாவட்டம் ஆத்தூரில் எழுச்சியுடன் நடந்தது. நிறைவு விழாவின் தொடக்க நிகழ்வாக நடைபெற்ற விரட்டு நாடக குழுவினரின் நாடகம்.

பயணம் வெற்றி: மகிழ்ச்சிப் பூரிப்பில் கழகத் தோழர்கள் மாநாடுபோல் நடந்த ஆத்தூர் விழா

“நம்புங்க அறிவியலை; நம்பாதீங்க  சாமியார்களை” என்ற முழக்கத்தை முன் வைத்து திராவிடர் விடுதலைக் கழகம் ஆகஸ்டு 7 முதல் 12 வரை நடத்திய பரப்புரைப் பயணத்தின் நிறைவு விழா பொதுக் கூட்டம்,  ஆகஸ்டு 12 வெள்ளி மாலை சேலம் மாவட்டம் ஆத்தூரில் எழுச்சியுடன் நடந்தது.  6 நாள் பயணத்தையும் முடித்துக் கொண்டு ஆத்தூரில் கழகச் செயல் வீரர்கள்  திரண்டிருந்த காட்சி ஒரு மாநாடு போலவே இருந்தது. பேய், பில்லி, சூன்யம், சோதிடம், தீ மிதித்தல் உள்ளிட்ட மக்களை மிரட்டிக் கொண்டிருக்கும் மூடநம்பிக்கைகளை ஊர்  ஊராகச் சென்று தோழர்கள் வீதி நாடகம், மந்திரமா-தந்திரமா பாடல்கள் வழியாக விளக்கியபோது மக்கள் தந்த ஆதரவு,  தோழர்களை உற்சாகக் கடலில் மூழ்கச் செய்து விட்டது. பள்ளத்தூர் நாவலரசு குழுவினரின் இசை  நிகழ்ச்சியுடன் நிகழ்ச்சிகள் தொடங்கின. பெரம்பலூர் தாமோதரன், ‘மந்திரமா-தந்திரமா’ நிகழ்ச்சிகளை சில நிமிடங்கள் நடத்தினார். சேலம் பிரபு குழுவினர் இரண்டு வீதி  நாடகங்களை நடத்தினர். தொடர்ந்து ‘விரட்டு’ வீதி நாடகக் குழுவினரின் ‘ஒன்றுமில்ல’...

திருப்பூர் அணியின் பயண பரப்புரை தொகுப்பு

090816 செவ்வாய்   காலை 1030 மணி கிணத்துக்கடவு தலைமை நிர்மல் குமார்தி.வி.க.கோவை மாவட்டச்செயலாளர் தொடக்கவுரை .தோழர் மணிமொழி அவர்கள் வாழ்த்துரை  தமிழ் பித்தன் தி.மு.க அவர்கள், தோழர்.வானுகன் அவர்கள் ஆதி தமிழர்பேரவை அவர்கள் இயக்க பாடல் தோழர்கள் .சங்கீதா உக்கடம் கிருட்டிணன் அவர்கள், தோழர் ராமசந்திரன் தி.வி.க. புற நகர் மாவட்ட தலைவர் அவர்கள், தோழர் பொள்ளாச்சி.வெள்ளிங்கிரி தி .வி.க அமைப்பாளர் பொள்ளாச்சி நகரம் தோழர் காவை இளவரசன் அவர்கள் மந்திரமா? தந்திரமா? அறிவியல் விளக்கநிகழ்ச்சி தோழர் திருப்பூர்.சு.துரைசாமி திவிக. மாநில பொருளாளர் தோழர்.கோபி வேலுச்சாமி தி.வி.க. தலைமைக்கழகப்பேச்சாளர். நன்றியுரை தோழர்  வடபுதூர் ராமகிருட்டிணன் அவர்கள் மதிய உணவு ஏற்பாடுகள். தோழர்கள் திமுக பொருப்பாளர் நடராசன் தமிழ்பித்தன் வெள்ளக்கிணறு மருதகனி கொண்டம்பட்டி செல்வராசு வடவள்ளி ஒவியர் தமிழேந்தி மிக சிறப்பாக ஏற்ப்பாடுகள் செய்து கொடுத்தனர் நன்றி மாலை 0415க்கு பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் தலைமை பொள்ளாச்சி வெள்ளிங்கிரி அவர்கள் தி வி க.நகர...

நம்புங்க… அறிவியலை; நம்பாதீங்க… சாமியார்களை!

பரப்புரைப் பயணத்தில் கழக சார்பில் மக்களிடம் வழங்கப்படும்  துண்டறிக்கை. இப்படி ஒரு கருத்தை நமது மக்களிடம் சொல்றதுக்கு நாங்க ஊர் ஊராவந்துகிட்டு இருக்கோம். ஏன்? நமது மக்கள் இன்னமும் சில நம்பிக்கைகளை நம்பிகிட்டு குழம்பி தப்பு தப்பான முடிவுகளுக்கு  வந்துடாறங்களே… அப்படிங்குற கவலை தான்! இதைப் படியுங்க… சாமியார்கள் அந்த காலத்துல சாமியார்கள் வீடுவாசலை விட்டு வெளியேறி ஊர் ஊராக சுத்துனாங்க. இப்ப சாமியார்கள் சொகுசு கார்ல – கோடி கோடியா பணத்துல புரளுராங்க… மக்கள ஏமாத்திட்டு சிறையில கம்பி எண்ணுற சாமியார்கள் ஏராளம். இதுக்குப் பிறகு இவங்களை நம்பலாமா? நமது சகோதரிகள்  நமது சகோதரிகள் இப்போ கல்லூரிகளுக்குப் போய் நல்லா படிக்குறாங்க… வேலைக்குப் போய் சம்பளம் வாங்குறாங்க… ஸ்கூட்டர், கார் ஓட்டுறாங்க… ஆனால், நமது தாத்தா பாட்டி காலத்துல நமது சகோதரிகளை படிக்கக் கூடாது; வேலைக்குப் போகக் கூடாதுன்னு தடுத்து வச்சாங்க… இப்ப கருத்தை மாத்திகிட்டோம்ல… இது தான் அறிவியல். பேய்-பிசாசு பயம் இன்னமும்...

பரப்புரை தொடங்கியது

“நம்புங்கள்… அறிவியலை; நம்பாதீங்க சாமியார்களை”என்ற முழக்கத்தை முன் வைத்து அச்சம் பேக்கும் அறிவியல் பரப்புரைப் பயணம், ஆகஸ்ட் 6ஆம் தேதி சென்னையில் தொடங்கியது. அன்று மாலை இலாயிட்ஸ் சாலையில் நடந்ததொடக்க விழா, சம்பூகன் குழுவினரின் எழுச்சி இசையோடு தொடங்கியது. கழகத் தோழர் பிரகாஷ் தலைமையில் வழக்கறிஞர்கள் திருமூர்த்தி, துரை. அருண், கவிஞர் செ.வை.ர. சிகாமணி, பகலவன் (வி.சி.), செல்லப்பா (வி.சி. மாவட்ட செயலாளர்) ஆகியோர் பயணத்தை வாழ்த்தி உரையாற்றினர். முனைவர் சுந்தர வள்ளி 45 நிமிடம் மூடநம்பிக்கைகளை தோலுரித்து எழுச்சி உரையாற்றினார். தொடர்ந்து தமிழ்நாடு மாணவர் கழகம் நடத்திய பேச்சுப் போட்டியில் முதல் பரிசு பெற்ற மாணவி தமிழ்ச் செல்வி -மூடநம்பிக்கைகள் குறித்து உரையாற்றினார். அவருக்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி ரூ.8000-த்துக்கானகாசோலையையும் கழக வெளியீடுகளையும் பரிசாக வழங்கினார். இரண்டாம் பரிசு பெற்ற மாணவர் ஸ்டாலினுக்கு ரூ.4000-த்துக்கான காசோலையை பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரனும், மூன்றாம் பரிசு பெற்ற மாணவி சிபியாவுக்கு ரூ.2000-த்துக்கான காசோலையை...

நம்புங்கள் அறிவியலை, நம்பாதிங்க சாமியார்களை – திருப்பூர் அணியின் பயண தொகுப்பு

08.08.16 திங்கள்  பல்லடம் அனுப்பட்டியில் 3.30மணிக்கு தலைமை; தோழர்.சீனி.செந்தேவன் அவர்கள் முன்னிலை;தோழர்.சண்முகம் தி,வி.க.ஒன்றியச்செயலாள்ர்அவர்கள் மந்திரமா?தந்திரமா?; தோழர்.காவை இளவரசன் அவர்கள் சிறப்புரை; தோழர்.முகில் ராசு அவர்கள் திருப்பூர் மாவட்டச்செயலாளர் அவர்கள், தோழர் திருப்பூர்.சு.துரைசாமி .மாநில பொருளாளர்.தி.வி க. அவர்கள் நன்றியுரை; தோழர்; அனுப்பட்டி.சுந்தரராசன் தி.விக.அவர்கள். மதியம் உணவு வழங்கி சிறப்பு செய்தவர்கள்  பல்லடம் நகர திவிக தலைவர் மற்றும் இயக்க தோழர்கள்  காரணம் பேட்டை நால் ரோடு  மாலை; 05, 30 மணிக்கு    தலைமை; தோழர்; நீதி ராசன் திருப்பூர்.மாநகரதலைவர் தி.விக  தொடக்கவுரை; தோழர். மணிமொழிஅவர்கள்   மந்திரமா? தந்திரமா? தோழர்.காவை இளவரசன் அவர்கள்  சிறப்புரை; தோழர்; கோபி வேலுச்சமி அவர்கள் தலைமைக்கழகபேச்சாளர்  நன்றியுரை; தோழர். மாப்பிள்ளை சாமி அவர்கள் சூலூர் ஊர்வேலாங்குட்டை ,கலைஞர் நகர்  இரவு பொதுக்கூட்டம்  தலைமை தோழர் சூ.அ. முருகேசன் .தி.மு.க.அவர்கள், முன்னால் பேருராட்சி துனைத்தலைவர். மந்திரமா? தந்திரமா? அறிவியல் விளக்கம் தோழர் காவை இளவரசன் அவர்கள் சிறப்புரை தோழர்; திருப்பூர்...

பாமர மக்களை பற்றிப்படரும் பெரியாரியம்….

நாமக்கல் மாவட்டத்தில் திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய அறிவியல் பரப்புரைக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு. புகைப்படம் தோழர் வைரம், நாமக்கல் மாவட்ட அமைப்பாளர்

சத்தியமங்கலம் அணியின் நான்காம் நாள் எழுச்சி பரப்புரை பயணம்

திராவிடர் விடுதலைக் கழகம் நடத்தும் அச்சம் போக்கும் அறிவியல் பரப்புரை பயணத்தில் சத்தி அணியின் நான்காவது நாள் பயணம் நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் துவங்கியது. முதல் நிகழ்வாக தோழர் ஆனந்து தலைமையில் ஆன வீதி நாடக குழுவின் பறை இசை மற்றும் மூடநம்பிக்கை  ஒழிப்புசார்ந்த வீதி நாடகம் நடைபெற்றது. தொடர்ந்து தோழர் சுவாமி நாதன்,முத்துபாண்டி,அய்யனார் ஆகியோர் கருத்துரை வழங்க தோழர் வைரவேல் நன்றி கூற பயணம் ஆவத்திபாளையம் சென்றடைந்த்து. ஆவத்திபாளையம் பேருந்து நிறுத்தத்தில் பயணக்குழு தனது பரப்புரையை தொடர்ந்த்து.அப்பகுதியில் கழகத்தின் பொது செயலாளர் தோழர் விடுதலை இராசேந்திரன் உரை நிகழ்த்த தோழர் சரவணன் நன்றி கூற பயணக்குழு திருச்செங்கோடு சென்று அடைந்த்து.மதிய உணவுக்கு பின்  பயணக்குழு தேவனாங்குறிச்சி சென்றடைந்த்து. அங்கு கலைக் குழுவின் வீதி நாடகம் மற்றும் மேட்டூர் டி.கே.ஆர் இசைக்குழு வின் பகுத்தறிவு பாடல்கள் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து விடுதலை இராசேந்திரன் அவர்கள் கருத்துரை வழங்க, தோழர் சதிஷ் நன்றி...

எழுச்சியுடன் நடைபெறும் பரப்புரை பயணம் ஆத்தூரில் சுவரெழுத்து

நம்புங்கள் அறிவியலை நம்பாதிங்க சாமியார்களை என்ற முழக்கக்தோடு திவிக முன்னெடுக்கும் நான்கு திசைகளிலிருந்தும் அறிவியல் பரப்புரை பயணத்தின் நோக்கத்தை வலியுறுத்தி 12082016 அன்று நடைபெற உள்ள நிறைவுரை பொதுக்கூட்டத்தின் சுவரெழுத்து  இராணிப்பேட்டை ஆத்தூரில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி அவர்களின் சிறப்புரையோடு.    

திருப்பூரில் நிமிர்வு கலைக்குழுவினருக்கு பாராட்டு !

திருப்பூரில் நிமிர்வு கலைக்குழுவினருக்கு பாராட்டு !

திருப்பூர் 15 வேலம்பாளையம் பகுதியில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பாக ஆகஸ்ட் 7 முதல் 12 வரை நடைபெறும் ”நம்புங்க அறிவியலை …நம்பாதீங்க சாமியார்கள …” எனும் தலைப்பில் ”அச்சம் போக்கும் அறிவியல் பரப்புரை” பயணம் நிமிர்வு கலைக்குழுவினரின் பறையிசை நிகழ்ச்சியுடன் தொடங்கியது.இந்நிகழ்ச்சி கூடியிருந்த பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. கலை நிகழ்சியாக மட்டுமல்லாமல்இசையிலும் நடைபெற்றுவரும் தீண்டாமை குறித்தும் விளக்கங்களுடன் நிகழ்சியை நடத்தினர்.சிறப்பாக நடைபெற்ற இந்நிகழ்வில் பங்கேற்ற கலைஞர்களுக்கு திருப்பூர் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் புத்தகங்கள் பரிசளிக்கப்பட்டன. பொருளாளர் துரைசாமி அவர்களும்,அறிவியல் மன்ற அமைப்பாளர் சிவகாமி அவர்களும் தோழர்களை பாராட்டி பரிசளித்தனர்.

பல்லடத்தில் பரப்புரை பயணக்குழு !

திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் நடைபெற்று வரும் ”நம்புங்க அறிவியலை …நம்பாதீங்க சாமியார்கள …” எனும் தலைப்பில் ”அச்சம் போக்கும் அறிவியல் பரப்புரை” பயணத்தில் நேற்று பல்லடத்தில் பரப்புரை நடைபெற்றது. பல்லடம் பரப்புரை பயணம் மதியம் 11.30 க்கு துவங்கியது. பல்லடம் நகர தலைவர் கோவிந்தராஜ் தலைமை தாங்கினார்.மாநில பெருளாளர் திருப்பூர் துரை சாமி, ஆனைமலை மணிமொழி, திருப்பூர் மாவட்ட செயலாளர் தோழர் முகில் ராசு,ஒன்றியச் செயலாளர் சண்முகம், பயண ஒருங்கிணைப்பாளர் சூலூர் பன்னிர் செல்வம், மந்திரமா தந்திரமா காவை இளவரசன் தி.வி க நன்றியுரை சங்கீதா அவர்கள். ,

மூன்றாம் நாள் அச்சம் போக்கும் அறிவியல் பயண பரப்புரை தொகுப்பு சத்தியமங்கலம் அணி

திராவிடர் விடுதலைக் கழகம் நடத்தும் அச்சம் போக்கும் அறிவியல் பரப்புரை பயணத்தின் சத்தி அணியின் மூன்றாம் நாள் முதல் நிகழ்வு பூதப்பாடியில் காலை 10 மணிக்கு  மேட்டூர் கோவிந்தராஜ்  குழுவினரின் பறை இசை நிகழ்ச்சி மற்றும் பகுத்தறிவு பாடல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. தொடர்ந்து நாத்திக சோதி,ரமேசு,பால் பிரபாகரன்,ஆகியோர் கருத்துரை வழங்க தோழர் வேணுகோபால் நன்றியுரை கூற பயணம் அப்பகுதியில் முடிவுற்றது.தோழர்களுக்கு திராவிடர் கழகத்தின் தோழர்கள் தேனீர் வாங்கி கொடுத்தனர்.பயணக்குழு சித்தார் பகுதிக்கு வந்தடைந்த்து.அங்கு தோழர் கோவிந்தராசு குழுவின் பறை இசை மற்றும்  பகுத்தறிவு பாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து நாத்திக சோதி,வேணு கோபால் ,பால்பிரபாகரன், ஆகியோர் உரையாற்ற தோழர் ஆனந்தன் நன்றியுரை ஆற்றினார். தோழர்கள் அனைவருக்கும்  தோழர் ஆனந்தன் மதிய உணவு ஏற்பாடு செய்தார். மதிய உணவு மற்றும் சிறிது நேரம் ஓய்வு க்கு பிறகு பயண குழு பவானி பேருந்து நிலையம் வந்து அடைந்த்து. நம் பயணக்குழு பவானி வந்த...

சத்தி அணியின் இரண்டாம் நாள் பயண பொதுக்கூட்ட நிகழ்வு

திராவிடர் விடுதலைக் கழகம் நடத்தும் அச்சம் போக்கும் அறிவியல் பரப்புரை பயணத்தின் சத்தி அணியின் இரண்டாம் நாள் நிறைவு பொதுக்கூட்டம் குருவரெட்டியூரில் 8.8.2016 மாலை 7 மணிக்கு துவங்கியது. முதல் நிகழ்வாக பெரியார் சிலைக்கு மாலை அணிவித்த பின் மேட்டூர் டி.கே.ஆர் இசைக்குழுவின் பறை இசை முழக்கத்தோடு தொடங்கியது.தொடர்ந்து பகுத்தறிவு பாடல்கள் பாடியபின் பொது கூட்ட நிகழ்வுகள் தொடங்கியது.தோழர் நாத்திகசோதி தலைமை ஏற்க தோழர் வேல்முருகன் வரவேற்பு உரை ஆற்ற தோழர்  இராம.இளங்கோவன், தோழர் இரத்தினசாமி,தோழர் பால்பிரபாகரன் ஆகியோர் கருத்துரை வழங்க தோழர் திலிபன் நன்றியுரை ஆற்றினார்.

அச்சம் போக்கும் அறிவியல் பரப்புரை பயணம் சத்தியமங்கலம் பயணக் குழு

திராவிடர் விடுதலைக் கழகம் நடத்தும் நம்புங்கள் அறிவியலை!நம்பாதீர்கள் சாமியார்களை எனும் தலைப்பில், அச்சம் போக்கும் அறிவியல் பரப்புரை பயணத்தை தமிழகத்தில் 4 பகுதிகளில் இருந்து தொடங்கி மாநிலம் முழுவதும் பலவேறு பகுதிகளில் நடக்கிறது. அதன் ஒருபகுதியாக சத்தியமங்கலத்தில் இருந்து ஆகத்து 7 ம் தேதி கழக பரப்புரைச் செயலாளர்  பால் பிரபாகரன் தலைமையில் பரப்புரை பயணம் துவங்கியது. பயணத்தின் முதல் நிகழ்வாக சத்தியமங்கலம் கழக தோழரும், மேட்டூர் தோழர் சம்பத் அவர்களின் தம்பியுமான தோழர் கோகுல்ராசு அவர்களின் படத்தினை தோழர்  பால்பிரபாகரன் திறந்து வைத்தார். தொடர்ந்து மேட்டூர் டி கே ஆர் இசைக்குழுவின் பகுத்தறிவு இசைநிகழ்ச்சி நடைபெற்றது. பாடல்களுக்கு  இடையே தோழர் கோவிந்தராசு மற்றும் தோழர் கிருட்டிணன் அவர்களும் நகைச்சுவையாக மக்கள் புரிந்து கொள்ளும் வகையில் தருக்கவகையில் கருத்துக்களை முன்வைத்தனர். தொடர்ந்து மாநில வெளியீட்டு செயலாளர் இராம இளங்கோவன் கோபி வேலுச்சாமி ஆகையோர் உரையாற்றினார்கள். தோழர் மூர்த்தி நன்றியுரை ஆற்ற அங்கு.நிகழ்ச்சி நிறைவுற்றது. ஆதிதமிழர் முன்னணி  அமைப்பை சார்ந்த தோழர்கள் நமது தோழர்களுக்கு தேநீர் ஏற்பாடு செய்து கொடுத்தனர். பயணக்குழு நம்பியூர் ஒன்றிய...

சென்னை அணி காஞ்சிபுரத்தில் பரப்புரை

காஞ்சியில் சங்கரமடம் எதிரில் கழகம் தன் முழுவீச்சில் அறிவியல் பரப்புரையை தோழர்கள் வீதி நாடகம் பகுத்தறிவு பாடல்கள் மூலம் ‘ மதம் மனிதனை மிருகமாக்கும்’ ஜாதி மனிதனை சாக்கடையாக்கும்’ என்றும் அச்சம் போக்கி நம்பாதீர்கள் போலி சாமியார்களை அம்பலப்படுத்தி மாலை பரப்புரை அதிக கூட்டத்தின் இடையே படுத்திய நேரம் ஒரு இஸ்லாமிய சவ ஊர்வலத்திற்கு மதிப்பளித்து பரப்புரையை நிறுத்தி மீண்டும் கழகப் பொதுச் செயலாளர் உரையை தொடர்ந்து மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தினார். காஞ்சி மக்கள் மன்ற தோழர்கள் திரளாக வந்து ஆதரவு தெரிவித்தனர். செய்தி குகநந்தன்

“நம்புங்கள் அறிவியலை – நம்பாதிங்க சாமியார்களை …துவக்கவிழா பொதுக்கூட்டம் சென்னை 06082016

திராவிடர் விடுதலைக் கழகம் நடத்தும் “நம்புங்கள் அறிவியலை – நம்பாதிங்க சாமியார்களை… அச்சம் போக்கும் அறிவியல் பரப்புரை துவக்க பொதுக் கூட்டம் 06.08.16 சனிக் கிழமை மாலை 6.00 மணியளவில் இலாயிட்ஸ் சாலை, சென்னையில் மாவட்டத் தலைவர் உமாபதி முன்னுரையுடன் இனிதே துவங்கியது. சம்பூகன் இசை குழுவின் பகுத்தறிவு பாடல்களை தொடர்ந்து தமிழ்நாடு மாணவர் கழகம் நடத்திய  கல்லூரி மாணவர்களுக்கான பேச்சு போட்டி, கட்டுரை போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி, பொதுச் செயலாளர் தோழர் விடுதலை இராசேந்திரன் கருத்துரையுடன் கழக வழக்கறிஞர் திருமூர்த்தி, அருண் ஆகியோரும் அறிவியல பரப்பரையின் முக்கியத்துவத்தை எடுத்து கூறினார்கள் தோழர் தர்மா நன்றியுரையுடன் நிகழ்ச்சி முடிவுற்றது செய்தி தோழர் குகநந்தன்

திருப்பூரில் அறிவியல் பரப்புரை பயண சுவர் விளம்பரங்கள்

திருப்பூரில் சுவர் விளம்பரங்கள் ! திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பாக ஆகஸ்ட் 7 முதல் 12 வரை நடைபெறும் ”நம்புங்க அறிவியலை …நம்பாதீங்க சாமியார்கள …” அச்சம் போக்கும் அறிவியல் பரப்புரை “பயணத்திற்கு திருப்பூர் மாஸ்கோ நகர் பகுதியில் செய்யப்பட்டுள்ள சுவர் விளம்பரங்கள். ஓவியர் தோழர் பழனி பத்மநாபன் அவர்கள்.

அறிவியல் பிரச்சார பயணம் – கழக தோழர்களுக்கு ஒரு அறிவிப்பு !

பரப்புரைப் பயணத்தின் செய்திகளை அனுப்புவது தொடர்பாக……… கழகத்தின் சார்பாக ஆகஸ்ட் 7 முதல் 12 வரை ”நம்புங்க அறிவியல …நம்பாதீங்க சாமியார்கள …” எனும் முழக்கத்தோடு நடைபெறும் ”அச்சம் போக்கும் அறிவியல் பரப்புரை” பயணம் தமிழகத்தின் நான்கு முனைகளில் புறப்பட்டு சிற்றூர்கள்,நகரங்கள் வழியாக பயணித்து மக்களைச் சந்தித்து விழிப்புணர்வுப் பரப்புரை செய்ய உள்ளது. ஒரு நாளைக்கு குறைந்தது 3 இடங்கள் என்கிற அளவில் தெருமுனைக் கூட்டங்களும், பொதுக்கூட்டங்களுக்குமான ஏற்பாடுகளை கழகத் தோழர்கள் செய்துவருகிறார்கள் 4 அணிகள் 5 நாட்கள் என 80 க்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெற உள்ள இந்த பரப்புரைப் பயணத்தின் ஒவ்வொரு நிகழ்வின் செய்திகளையும் தோழர்கள் தவறாது பதிவு செய்து, அதனை கழகத் தலைமைக்கு மின்னஞ்சல் வழியாக அனுப்பி வைக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இச்செய்திகளை அனுப்புவதற்கென ஒவ்வொரு அணிக்கும் ஒரு தோழர் பொறுப்பெடுத்துக்கொள்வது நல்லது. ஒவ்வொரு நிகழ்ச்சிகள் பற்றி குறைந்த அளவு 3 புகைப்படங்கள்,கலந்து கொண்டோர் மற்றும் செய்திகள் ஆகியவற்றைக்...

அறிவியல் பரப்புரை பயணத்திற்கு புது பொலிவுடன் பிரச்சார வாகனம்

நம்புங்கள் அறிவியலை … நம்பாதீங்க சாமியர்களை … அச்சம் போக்கும் அறிவியல் பரப்புரை … மூடநம்பிக்கைக்கு எதிரான பிரச்சார வாசகங்கள் மற்றும் அதன் மடமையை வலியை விளக்கும் புகைப்படங்கள் அடங்கிய பதாகையை பேருந்து முழுவதும் ஓட்டும் பணி சென்னை திவிக சார்பில் இராயப்பேட்டை பத்ரி படிப்பகத்தில் இரவு முழுவதும் நடந்தது … அனைத்து விதமான பிரச்சார சுவரொட்டிகளோடு பாமர மக்களுக்கு மிக எளிதாக புரியும்வண்ணம் பலவண்ணத்தில் பேருந்தின் நாற்புரமும் ஒட்டி முடிக்கப்பட்டது

நம்புங்கள் அறிவியலை… நம்பாதீங்க சாமியார்களை….பொதுக்கூட்டம் மன்னார்குடி 08082016

திராவிடர் விடுதலைக் கழக தலைவர் தோழர் .கொளத்தூர்மணி அவர்கள் தலைமையில்… திருவாரூர் மாவட்டதில் திராவிடர் விடுதலைக் கழகம் நடத்தும் நம்புங்கள் அறிவியலை… நம்பாதீங்க சாமியார்களை…. அச்சம் போக்கும் அறிவியல் பரப்புரை பயணம்!… 08.08.2016 மாலை 5மணிக்கு நீடாமங்கலம் பெரியார் சிலைஅருகில்.. இரவு 7மணிக்கு மன்னார்குடி பந்தலடி கீழ்புறத்தில்… மாபெரும் பொதுக்கூட்டம்…!!  அனைவரும் வாரீர்!

பயணத்துக்கு தயாராகிறது சத்தியமங்கலம் அணி

17.07.2016 ஞாயிறு மாலை 4 மணிக்கு கோபி மாவட்ட  அலுவலகத்தில் மாவட்ட தலைவர் நாத்திகசோதி மற்றும்  மாநில அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தின சாமி தலைமையிலும், மாநில வெளியீட்டுச் செயலாளர் இராம.இளங்கோவன், மாவட்ட செயலாளர் பவானி வேணு கோபால் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது. 07.08.2016 அன்று சத்திய மங்கலத்தில் துவங்க உள்ள “நம்புங்க அறிவியலை; நம்பாதீங்க சாமியார்கள!” என்ற அறிவியல் பரப்புரை அணியை சிறப்பாக வழிநடத்தி ஆத்தூரில் 12ஆம் தேதி நடைபெற உள்ள நிறைவு நாள் மாநாட்டில் கலந்து கொண்டு சிறப்பிப்பது என தீர்மானிக்கப்பட்டது. கூட்டத்தில் தோழர்கள் நிவாசு, சதுமுகை பழனிச்சாமி, இரகுநாதன், கிருட்டிணமூர்த்தி, தங்கம், அறிவு, அருளானந்தம் ஆகியோர் கலந்து கொண்டனர். கீழ்க்கண்டவாறு சத்தியமங்கலம் அணியின் பரப்புரைப் பயண அட்டவணை மாற்றப்பட்டுள்ளது. “நம்புங்க அறிவியலை! நம்பாதீங்க சாமியாரை!” அச்சம் போக்கும் அறிவியல் பரப்புரைப் பயணத் திட்டஅட்டவணை பின்வருமாறு. 07.08.2016 (ஞாயிறு) : காலை : 10 மணி சத்தியமங்கலம் துவக்கம்; முற்பகல் :...

‘நம்புங்க-அறிவியலை; நம்பாதீங்க-சாமியார்களை’  அச்சம் போக்கும் அறிவியல் பரப்புரை  4 முனைகளிலிருந்து ஆகஸ்டு 7இல் புறப்படுகிறது

‘நம்புங்க-அறிவியலை; நம்பாதீங்க-சாமியார்களை’ அச்சம் போக்கும் அறிவியல் பரப்புரை 4 முனைகளிலிருந்து ஆகஸ்டு 7இல் புறப்படுகிறது

மக்களிடம் அறிவியல் சிந்தனைகளையும் பகுத்தறிவு கருத்துகளையும் விளக்கி, ‘நம்புங்க-அறிவியலை; நம்பாதீங்க-சாமியார்களை’, ‘அச்சம் போக்கும் அறிவியல் பரப்புரை’ என்ற முழக்கத்தோடு, பரப்புரைப் பயணத்துக்கு திராவிடர் விடுதலைக் கழகம் திட்டமிட்டுள்ளது. ஆகஸ்டு 7ஆம் தேதி தொடங்கி 12ஆம் தேதி  வரை தமிழகம் முழுதும் நான்கு முனைகளிலிருந்து பரப்புரை பயணக் குழு புறப்படுகிறது. சத்தியமங்கலம் – சென்னை – மயிலாடுதுறை – திருப்பூரிலிருந்து 4 அணிகளும் தனித் தனி யாகப் புறப்பட்டு, மக்களிடம் அறிவியல்  கருத்துகளையும் மூடநம்பிக்கைகளால்  சமூகத்தின் பாதிப்புகளையும்  விளக்கிப் பேசுவார்கள். குறிப்பாக பெண் குழந்தைகள் என்றால் கருவிலேயே அழிக்கும் பெண் சிசுக் கொலை, 18 வயது முழுமையடைவதற்கு முன்பே சிறுமிகளாக இருக்கும் பெண்களுக்கு ‘மரபு வழக்கம்’ என்ற பெயரால் நடத்தப்படும் இளம் வயது திருமணத்தால் பெண்களுக்கு உடலியல், உளவியல் ரீதியாக ஏற்படும் பாதிப்புகள் – பறிக்கப்படும் பெண்களின்  உரிமைகள்; பெண்களிடம் அவர்களின் மூடநம்பிக்கைகளைப் பயன்படுத்தி ஏமாற்றி கெடுக்கும் சாமியார்கள் மோசடி, ‘பேய்- பில்லி-சூன்யம்’ என்ற கற்பனைகள்...