Category: தலைமை கழகம்

குடி அரசு வழக்கு- முக்கிய திருப்பம்

குடி அரசு வழக்கு- முக்கிய திருப்பம்

ஏற்கனவே 21.01.2019 அன்று, கொளத்தூர் மணி மற்றும் கோவை இராமகிருட்டிணன் சார்பாக மூத்த வழக்கறிஞர் எஸ். துரைசாமி அவர்கள் பெரியாரின் எழுத்தும் பேச்சும் ஏற்கனவே பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்து விட்டது ஆகவே யாரும் சொந்தம் கொண்டாட முடியாது என்று பல ஆவணங்களையும், உயர்நீதிமன்ற, உச்சநீதி மன்ற தீர்ப்புகளையும் காரணம் காட்டி வாதிட்டார். மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தபோது பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவன செயலாளர் மற்றும் திராவிடர் கழகத் தலைவர் திரு கி. வீரமணி அவர்கள் சார்பாக வழக்கறிஞர் திரு வீரசேகரன் ஆஜராகி இரண்டு புதிய ஆவணங்களை நீதிபதி முன் சமர்ப்பித்தார். அதில் ஒரு ஆவணம் வரும் 31.01.2019 அன்று கோவையில் நடைபெறும் ஒரு பொதுக்கூட்டத்தில் மூவரும் அதாவது திரு கி.வீரமணி, திரு கொளத்தூர் மணி மற்றும் திரு இராமகிருட்டிணன் ஒன்றாக கலந்து கொள்கிறார்கள், அதற்கான அழைப்பிதழ் என்றும் மற்றொன்று மேற்படி அழைப்பிதழ் விடுதலை பத்திரிக்கையில் பிரசுரம் ஆகி உள்ளது என்றும்...

7 தமிழர் விடுதலை: ஈழ ஏதிலியர் உரிமைகளை வலியுறுத்தி  தமிழக முதல்வரிடம் கழகத் தலைவர்- தோழர்கள் நேரில் மனு

7 தமிழர் விடுதலை: ஈழ ஏதிலியர் உரிமைகளை வலியுறுத்தி தமிழக முதல்வரிடம் கழகத் தலைவர்- தோழர்கள் நேரில் மனு

14-1-2019 இரவு 8-00 மணியளவில் கழக வெளியீட்டுச் செயலாளர் கோபி இளங்கோவன், சேலம் மாவட்ட செயலாளர் மேட்டூர் கோவிந்தராசு, ஈரோடு மாவட்ட செயலாளர் பவானி வேணுகோபால், சேலம் மாநகர செயலாளர் பரமேசு ஆகியோருடன் சேலத்தில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்களை கழகத் தலைவர் கொளத்தூர் மணி சந்தித்து பேரறிவாளன் முதலான எழுவர் விடுதலைக்கு இயன்றதனைத்தையும் செய்யக் கோரியும் ஏதிலியர் உரிமைகளை வலியுறுத்தியும் விண்ணப்பத்தைக் கையளித்தனர். முதல்வரும் தாங்களும் எழுவர் விடுதலையில் அக்கறை கொண்டிருப்பதாகவும், விரைவில் விடுதலைக்கு ஆவன செய்வதாகவும் உறுதியளித்தார். முதல்வரிடம் வழங்கப்பட்ட கோரிக்கை மனு விவரம்: திரு. இராசிவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப் பெற்ற பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, இரவிச்சந்திரன், இராபர்ட் பயஸ், ஜெயக் குமார் ஆகிய எழுவரும் வாழ்நாள் சிறையாளர்களாக இருந்து வருவதும் அவர்கள் விடுதலைக் குறித்து ஒட்டுமொத்த தமிழகமும் அனைந்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள பெரும்பாலான கட்சிகளும்...

தற்போது விற்பனையில் ‘நிமிர்வோம்’ –  ஜனவரி 2019 இதழ்

தற்போது விற்பனையில் ‘நிமிர்வோம்’ – ஜனவரி 2019 இதழ்

தலையங்கம் – திசை வழிகாட்டிய திருச்சிப் பேரணி கருஞ்சட்டை – எதிர்நீச்சலின் வரலாறு பாரதியின் பார்ப்பனியம் : பெரியார் எழுப்பிய கேள்விகள் பெண்கள் மீதான வன்முறைக்கு கருத்தியலை வழங்கும் புராணங்கள் – சாஸ்திரங்கள் அய்.நா.வில் தலித் பெண்கள் சமர்ப்பித்த ஆவணம் ஒற்றைக் கலாச்சாரத் திணிப்பில் பார்ப்பனர்கள் வெற்றி பெற்றது எப்படி? பெண்களின் புனிதத்தைக் கெடுக்கிறதா ஸ்மார்ட் போன்கள்? மற்றும் பெரியார் சிந்தனைகளுடன்… தனி இதழ் விலை : ரூ.20 தொடர்புக்கு:  நிர்வாகி, 95, டாக்டர் நடேசன் சாலை, அம்பேத்கர் பாலம், மயிலாப்பூர், சென்னை-600 004. தொலைபேசி எண்: 044 24980745/7299230363 www.dvkperiyar.com/nimirvom@gmail.com பெரியார் முழக்கம் 17012019 இதழ்

சென்னையில் ‘திராவிடம்’ பயிற்சி வகுப்பு

சென்னையில் ‘திராவிடம்’ பயிற்சி வகுப்பு

‘பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா’ அமைப்பு சென்னையில் டிசம்பர் 14, 15 தேதிகளில் இரண்டு நாள் பயிற்சி வகுப்பை நடத்தியது. தமிழ்நாடு முழுதுமிருந்தும் 50க்கும் மேற்பட்டோர் பயிற்சியில் பங்கேற்றனர். ‘சென்னை பிரஸ் கிளப்’ அரங்கில் நடந்த இந்தப் பயிற்சி வகுப்பில் டிசம்பர் 14ஆம் தேதி பகல் 11 மணியிலிருந்து ஒரு மணி வரை ‘திராவிடம்’ என்ற தலைப்பில் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் பேசினார். திராவிடம் தோன்றிய வரலாறு, அதன் உள்ளடக்கம், வரலாற்றுத் தொடர்ச்சி, திராவிடத்துக்கு எதிராக வைக்கப்படும் வாதங்களில் அடங்கியுள்ள குழப்பங்களை தரவுகளோடு விளக்கினார். உரையைத் தொடர்ந்து பயிற்சி யாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு விளக்கமளித்தார் பெரியார் முழக்கம் 10012019 இதழ்

தமிழகத்தில் உள்ள ஈழ ஏதிலியரின் துயர்துடைக்க தமிழக முதல்வரிடம் வேண்டுகோள்

தமிழகத்தில் உள்ள ஈழ ஏதிலியரின் துயர்துடைக்க தமிழக முதல்வரிடம் வேண்டுகோள்

பெறுநர்: மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்அவர்கள், தமிழ்நாடு.  மதிப்பிற்குரிய ஐயா, வணக்கம். பொருள்: தமிழகத்தில் உள்ள ஈழ ஏதிலியரின் துயர்துடைக்க வேண்டுகோள்   இலங்கையில் சிங்களப் பேரினவாத அரசின் இன ஒடுக்குமுறை, இன அடக்குமுறை, இனக் கொலைக் கொடுமைகளால் அங்கிருந்து உயிர்தப்பித் தஞ்சம் நாடித் தமிழகம் வரும் ஈழத் தமிழ் மக்களை ஏற்று வாழ வைக்கும் உரிமையும் கடமையும் தமிழ்நாட்டு மக்களுக்கும் தமிழக அரசுக்கு உண்டு.  இவ்வடிப்படையில், இந்தியாவில், குறிப்பாகத் தமிழகத்தில் வாழ்ந்துவரும் இலட்சத்துக்கு மேற்பட்ட தமிழீழ ஏதிலியர் (அகதிகள்) நலவுரிமைகளுக்காகத் தமிழீழ ஏதிலியர் உரிமைக் கூட்டமைப்பின் சார்பில் பின்வரும் கோரிக்கைகளைத்  தங்களிடம் வலியுறுத்துகிறோம்.   இலங்கைத் தமிழ் அகதிகள் எனப்படும் தமிழீழ ஏதிலியர் அனைவர்க்கும் இந்நாட்டில் இடைக்காலக் குடியுரிமை வழங்க வேண்டும் என்று தமிழக அரசு இந்திய அரசை வலியுறுத்த வேண்டும். தமிழீழ ஏதிலியரின் அரசியல், குடியியல் உரிமைகளும் பொருளியல் உரிமைகளும் சட்டத்திலும் நடைமுறையிலும் உறுதி செய்யப்பட வேண்டும். திபெத்துப் போன்ற...

பேரறிவாளன் முதலான தமிழர் எழுவர் விடுதலைக்கு இயன்றதனைத்தையும் செய்ய வேண்டி – முதல்வருக்கு விண்ணப்பம்

பேரறிவாளன் முதலான தமிழர் எழுவர் விடுதலைக்கு இயன்றதனைத்தையும் செய்ய வேண்டி – முதல்வருக்கு விண்ணப்பம்

கொளத்தூர் தா.செ.மணி தலைவர்: திராவிடர் விடுதலைக் கழகம்   பெறுநர்: மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாடு.  மதிப்பிற்குரிய ஐயா, வணக்கம். பொருள்: பேரறிவாளன் முதலான தமிழர் எழுவர் விடுதலைக்கு இயன்றதனைத்தையும் செய்ய வேண்டி திரு இராசிவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பெற்ற பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, இரவிச்சந்திரன், இராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய எழுவரும் வாழ்நாள் சிறையாளர்களாக இருந்து வருவதும் அவர்கள் விடுதலைக் குறித்து ஒட்டுமொத்த தமிழகமும் அனைந்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள பெரும்பாலான கட்சிகளும் தமிழக அரசும் கவலையோடும் அக்கறையோடும் இருப்பது தாங்கள் அறிந்ததே. அவர்கள் 27 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் கழித்துவிட்ட நிலையில் தங்கள் விடுதலை வேண்டி மத்திய மாநில அரசுகளையும், இந்திய உச்சநீதி மன்றத்தையும் முறைப்படி அணுகினார்கள். அந்தச் செயல்வழியில் இறுதியாக, உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலை அடிப்படையாகக் கொண்டு தமிழக அரசு  அவர்களை விடுதலை செய்ய செப்டம்பர் 9,2018...

தோழர் பொழிலன் அவர்களின் “தமிழ் தேசம்” நூல் வெளியீடு 11012019 சென்னை

தோழர் பொழிலன் அவர்களின் “தமிழ் தேசம்” நூல் வெளியீடு 11012019 சென்னை

மாலை 7.30 மணியளவில் சென்னை புத்தக கண்காட்சி 300 அரங்கில் தோழர் பொழிலன் முன்னிலையில் {“அருவி புத்தக உலகம்”} கழகத் தலைவர் கொளத்தூர் மணி ‘தமிழ் தேசம்” என்ற நூலை வெளியிட்டார். இந் நிகழ்வில் தமிழக வாழ்வுரிமை கட்சி நிறுவனர் வேல் முருகன், மே 17 இயக்க தலைமை ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, தமிழர் விடியல் கட்சி டைசன் மற்றும் பெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பை சார்ந்த பலர் கலந்து கொண்டனர். பிறகு அரங்கு 222 {பொதுமை பதிப்பகத்தில்} தோழர் வேல் முருகன் வெளியிட கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி பெற்று கொண்டு உரையாற்றினார்கள். செய்தி குகன்

“நிமிர்வோம்” தடைகளைத் தகர்த்து… “ஜனவரி 2019” மாத இதழ் வெளிவந்துவிட்டது

“நிமிர்வோம்” தடைகளைத் தகர்த்து… “ஜனவரி 2019” மாத இதழ் வெளிவந்துவிட்டது

“நிமிர்வோம்” தடைகளைத் தகர்த்து…. திராவிடர் விடுதலைக் கழகத்தின் “ஜனவரி 2019” மாத இதழ் வெளிவந்துவிட்டது…. 🚸 தலையங்கம் – திசை வழிகாட்டிய திருச்சி பேரணி 🗞 கருஞ்சட்டை – எதிர்நீச்சலின் வரலாறு 🗣🏴பாரதியின் பார்ப்பனியம் : பெரியார் எழுப்பிய கேள்விகள் 🚩🙅‍♀ பெண்கள் மீதான வன்முறைக்கு கருத்தியலை வழங்கும் புராணங்கள் – சாஸ்திரங்கள் 🙋‍♀ அய்.நா.வில் தலித் பெண்கள் சமர்ப்பித்த ஆவணம் 💯 ஒற்றைக் கலாச்சாரத் திணிப்பில் பார்ப்பனர்கள் வெற்றி பெற்றது எப்படி? 📲 பெண்களின் புனிதத்தைக் கெடுக்கிறதா ஸ்மார்ட் போன்கள்? இன்னும் பல வரலாற்று பதிவுகளோடு….. தோழர்கள் இதழ்களை பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம் 💰அஞ்சல் வழியாக பெற – ₹ 300/- 💰 ஆண்டு சந்தா – ₹ 240/- 💰 இதழ் விலை – ₹ 20/- திராவிடர் விடுதலைக் கழகம்- சென்னை மாவட்டம் தொடர்புக்கு : 7299230363

பரப்புரை இயக்கங்கள்; போராட்டங்கள்; மாநாடுகள் 2018: கழகத்தின் தொடர் களப்பணிகள்

பரப்புரை இயக்கங்கள்; போராட்டங்கள்; மாநாடுகள் 2018: கழகத்தின் தொடர் களப்பணிகள்

2018இல் திராவிடர் விடுதலைக் கழகத்தில் செயலாற்றல் கொண்ட தோழர்கள் தொடர்ச்சியான களப்பணிகளை செய்து முடித்துள்ளனர். வழமையான பொதுக் கூட்டங்கள், பெரியார் அம்பேத்கர் பிறந்த நாள் விழா நிகழ்ச்சிகள் ஆகிய வற்றைத் தவிர்த்து மாநாடு, பரப்புரை, போராட்டம் மற்றும் பயிலரங்க நிகழ்வு களை மட்டும் கழக ஏடான ‘புரட்சிப் பெரியார் முழக்க’த்தில் இடம் பெற்றுள்ள பதிவுகளிலிருந்து தொகுத்துள்ளோம். ஜனவரி: கல்வி – வேலை வாய்ப்பில் – தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் உரிமைகள் பறிக்கப்படுவதை விளக்கும் துண்டறிக்கைகளை பல்லாயிரக்கணக்கில் தயாரித்து கழக முன்னணி அமைப்பினர் – தமிழ்நாடு மாணவர் கழகம் சார்பில் கல்லூரி, பள்ளி வாயில்களில் மாணவ மாணவிகளிடம் தோழர்கள் வழங்கினர். பா.ஜ.க. பார்ப்பனர் எச். ராஜா நடத்திய ஒரு சமஸ்கிருத நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற காஞ்சிபுரம் சங்கராச்சாரி விஜயேந்திரன் ‘தமிழ்த் தாய்’ வாழ்த்துப் பாடலுக்கு எழுந்து நிற்க மறுத்ததைக் கண்டித்து சேலம், மேட்டூர், பள்ளிப் பாளையம், ஈரோடு, மார்த்தாண்டம், மதுரை உள்ளிட்ட நகரங்களில்...

திராவிடர் விடுதலைக் கழக மாத நாள் காட்டி !

திராவிடர் விடுதலைக் கழக மாத நாள் காட்டி !

”நாள்காட்டி” திராவிடர் விடுதலைக் கழக மாத நாள் காட்டி ! விலை : ரூபாய் 70.00 மட்டும்.(ரூபாய் எழுபது மட்டும்) பெரியார், அண்ணல் அம்பேத்கர், மேதகு பிரபாகரன், கலைஞர்,  அறிஞர்அண்ணா, காமராஜர், எம்.ஆர்.ராதா, புரட்சிக்கவிஞர் படங்களுடன் அழகிய வடிமைப்பில்,வரலாற்று குறிப்புகளுடன் உள்ள மாத நாள்காட்டி. குறைந்த அளவே அச்சிடப்பட்டு உள்ளது. நாள்காட்டி தேவைப்படுவோர் தொடர்பு கொள்ளவேண்டிய எண் : தோழர் தபசி குமரன், அலைபேசி எண் : 9941759641 தலைமை நிலையச்செயலாளர், திராவிடர் விடுதலைக் கழகம். (திராவிடர் விடுதலைக் கழக மாவட்ட நிர்வாகிகளிடமும் நாள்காட்டி கிடைக்கும்

“காவிக்கு மறுப்பு – பெரியாரின் கறுப்பு” திருச்சிப் பேரணி மாநாட்டு நிகழ்விலிருந்து ஒரு தொகுப்பு:

“காவிக்கு மறுப்பு – பெரியாரின் கறுப்பு” திருச்சிப் பேரணி மாநாட்டு நிகழ்விலிருந்து ஒரு தொகுப்பு:

இலட்சியத்தில் உறுதி; கட்டுப்பாட்டின் அடை யாளமே கருஞ்சட்டை என்பதை நிரூபித்தது பேரணி. காவல் துறைக்கு வேலையே இல்லை; தோழர்களே தங்களை ஒழுங்குப்படுத்திக் கொண்டு கட்டுப்பாட்டுடன் – இளம் பெண்களும் ஆண்களும் பேரணியில் அணி வகுத்தக் காட்சி – எந்த அரசியல் கட்சியிலும் பார்க்க முடியாத ஒன்று. மூத்த தலைவர்களான திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, மார்க்சிய பெரியாரிய பொதுவுடைமைக் கட்சியின் நிறுவனர் வே. ஆனைமுத்து; அடுத்த தலைமுறையைச் சார்ந்த திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, தந்தை பெரியார் திராவிடர் விடுதலைக் கழகப் பொதுச் செயலாளர் கோவை இராமகிருட்டிணன் ஆகியோர் ஒரே மேடையில் அடுத்தடுத்து அமர்ந்திருந்த காட்சி தோழர்களுக்கு பெரும் உற்சாகத்தைத் தந்தது. மேடைக்குப் பின் திரையில் ஒளிக் காட்சிகளாக பெரியாரின் வெவ்வேறு நிழல் படங்கள் திரையிடப்பட்டன. உரைகளுக்கு இடையே பெரியாரின் ஒரு நிமிட உரை இரண்டு முறை ஒளி பரப்பப்பட்டது. பெரியார் குரலையும் கருத்தையும் கேட்ட இளைஞர்கள் கூட்டம்...

ஜாதி ஒழிப்பு – தமிழின விடுதலை – மதவெறி எதிர்ப்பை வலியுறுத்திக் குரல் கொடுத்தது கருஞ்சட்டை மாநாடு

ஜாதி ஒழிப்பு – தமிழின விடுதலை – மதவெறி எதிர்ப்பை வலியுறுத்திக் குரல் கொடுத்தது கருஞ்சட்டை மாநாடு

செயல் திசை நோக்கி வெளிச்சம் காட்டும் திருச்சி மாநாட்டுத் தீர்மானங்கள் திருச்சி பெரியாரிய உணர்வாளர் கூட்டமைப்பு தமிழர்களின் அடையாளம் – உரிமைப் பறிப்பு – விடுதலைக்கான இலக்கு நோக்கிய கொள்கை வழியை அடையாளப்படுத்தி தீர்மானங்களை நிறைவேற்றி யுள்ளது. திருச்சி உழவர் திடலில் 2018 திசம்பர் 23 அன்று பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் நடைபெற்ற தமிழின உரிமை மீட்பு மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: ஒரே மக்கள், ஒரே சட்டம், ஒற்றைப் பண்பாடு, ஒற்றை அடையாளங்கள் என்கிற வகையில் பார்ப்பனிய அதிகார வெறிகொண்டு இயங்குகிற இந்திய அரசு இந்தியாவிற்குள் அடக்கப்பட்டுள்ள பல்வேறு மொழித் தேசங்களின் வரலாற்றையும், பண்பாட்டையும், அடையாளங்களையும் மறுக் கிறது. இந்நிலையில் தமிழ்நாட்டு மக்கள் தங்களின் தேசியஇன அடையாள உரிமையின் கீழ்த் தங்களைத் `தமிழர்கள்’ என்றே பதிந்து கொள் வதற்கான வகையில் தமிழக அரசு ஆவன செய்ய வேண்டுமென இம்மாநாடு வலியுறுத்து கிறது. மாநில உரிமைகளை நசுக்குவதற்காகவே ஆங்கிலேயர்களால் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட...

பெரியாரைப் பார்த்திடாத இளைஞர் கூட்டம்  பெரியாரியலை முன்னெடுக்க உறுதி ஏற்றது

பெரியாரைப் பார்த்திடாத இளைஞர் கூட்டம் பெரியாரியலை முன்னெடுக்க உறுதி ஏற்றது

ஆயிரமாயிரமாய் இளைஞர்கள் அணி வகுத்த கருஞ்சட்டைப் பேரணி குலுங்கியது திருச்சி மாநகர் டிசம்பர் 23, 2018 அன்று திருச்சி மாநகர் ஒரு வரலாற்றை எழுதியுள்ளது. சுமார் 200 அமைப்புகள் ஓரணியில் திரண்டு – பெரியாரே – தமிழர்களின் – தமிழ்நாட்டின் முதன்மை அடையாளம்; காவிக்கு மறுப்பு – பெரியாரின் கருப்பு என்ற முழக்கத்தோடு பல்லாயிரக்கணக்கில் திருச்சியில் திரண்டார்கள். திரும்புமிடமெல்லாம் கருப்புச் சட்டை. அதிலும் நூற்றுக்கு 90 சதவீதம் பேர் பெரியார் இறப்புக்குப் பின் 10 ஆண்டுகள், 20 ஆண்டுகள் கழித்துப் பிறந்த பெரியாரையேப் பார்த்திடாத இளைஞர்கள்; அவர்களிலும் பலர் பெண்கள். தமிழ்நாடு முழுதுமிருந்தும் பல நூறு தனி வாகனங்கள் திருச்சியை நோக்கி வந்தன. பகல் 2 மணியளவில் பேரணி புறப்படும் கே.டி. திரையரங்கு அருகே கருஞ்சட்டைத் தோழர்கள் திரளத் தொடங்கினார்கள். 3.30 மணியளவில் பறை இசை முழங்க பேரணியை திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தொடங்கி வைத்தார். ஒவ்வொரு அமைப்பும் தங்கள்...

டிசம்பர் 23 பேரணி தோழர்களே தயாராகி விட்டீர்களா?

டிசம்பர் 23 பேரணி தோழர்களே தயாராகி விட்டீர்களா?

திருச்சியில் டிசம்பர் 23இல் பெரியார் உணர்வாளர்கள் நடந்த இருக்கும் கருஞ்சட்டைப் பேரணிக்கு பேராதரவு பெருகி வருகிறது. கலைஞர்கள், எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள் மிகவும் உற்சாகத்துடன் இந்த முயற்சியை பாராட்டி வரவேற்று பேரணியில் பங்கேற்க ஆர்வம் காட்டி வருகின்றனர். புதிய அமைப்புகளும் தங்கள் ஆதரவைத் தெரிவித்து வருகின்றன. அதிகாரம் இருக்கிறது என்ற இறுமாப்புடன் தமிழ்நாட்டின் தனித்துவத்துக்கும் சமூக நீதிக்கும் சவால் விட்டு வரும் மதவெறி சக்திகளுக்கு தமிழ்நாடு – பெரியார் மண் என்பதை உணர்த்துவோம். திருச்சி கருஞ்சட்டைக் கடலாக வேண்டும் தோழர்களே! தனிப் பேருந்துகளில் அணி அணியாகத் திரளுவீர்! பெரியார் முழக்கம் 13122018 இதழ்

சந்தா சேர்ப்பு இயக்கம்: கழகத் தோழர்களுக்கு முக்கிய வேண்டுகோள்

சந்தா சேர்ப்பு இயக்கம்: கழகத் தோழர்களுக்கு முக்கிய வேண்டுகோள்

கழக ஏடுகளான ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’, ‘நிமிர்வோம்’ இதழ்களுக்கான சந்தா சேர்ப்புப் பணிகளை டிசம்பர் 15ஆம் தேதிக்குள் முடித்துத் தருமாறு தோழர்களைக் கேட்டுக் கொள்கிறோம். கழகத்தின் இணைப்பு சக்தியாய் விளங்குவது கழகத்தின் ஏடுகள் தான்! கழக ஏடுகளை பரப்புவதன் வழியாக கழகத்தின் வளர்ச்சியை மேலும் தீவிரமாக்க முடியும் என்பதை உணர்ந்து சந்தா சேர்ப்பு இயக்கத்தில் முனைப்புக் காட்டி செயல்படுமாறு தோழர்களைக் கேட்டுக் கொள்கிறோம். – தலைமைக் கழகம் பெரியார் முழக்கம் 13122018 இதழ்

பெரியாரிய உணர்வாளர் கூட்டமைப்பு அழைக்கிறது ஆரியம் மிரள, கருப்பர்கள் கூட்டம் திரளட்டும்!

பெரியாரிய உணர்வாளர் கூட்டமைப்பு அழைக்கிறது ஆரியம் மிரள, கருப்பர்கள் கூட்டம் திரளட்டும்!

இந்தியா முழுதும் பிற்போக்குத்தனங்களும், சாதிய மேலாதிக்கமும் நிறைந்திருக்கிறது. ஆரியப் – பார்ப்பனிய  – இந்துத்துவ கும்பல் இந்திய ஒன்றியத்தின் அனைத்துத் தேசிய இனங்களின் வளங்களையும் கார்ப்பரேட்டுகளுக்குத் தாரை வார்த்துக் கொண்டிருக்கிறது. மதத்தின் பெயரால் நாள்தோறும் கலவரங்களும், படுகொலைகளும் இந்தியா முழுவதும் நிகழ்த்தப்படுகின்றன. மாட்டுக் கறி வைத்திருந்தவர்கள் என்று சொல்லி ஒடுக்கப்பட்ட மக்களையும், சிறுபான்மை மக்களையும் காவி வெறிக் கும்பல் அடித்துக் கொலை செய்கிறது. ஆரியப் – பார்ப்பனியத்தின் சூழ்ச்சிப் போக்குகளிலிருந்து தமிழ்நாட்டைக் காத்திட தன் இறுதி மூச்சு வரை போராடியவர் தந்தை பெரியார். ஆனால், அத்தகைய தமிழ்நாட்டினைக் கூறுபோட்டு விற்றிட இன்றைக்கு ஆரியப் – பார்ப்பனிய இந்துத்துவக் கும்பல்களை பெருமளவில் களமிறங்கி யிருக்கின்றன. தமிழ்நாட்டின் பண்பாட்டையும், இயற்கை வளங்களையும், தனித் தன்மைகளையும் இந்தக் கும்பல்களிடமிருந்து காக்க வேண்டிய கடமை தமிழ்நாட்டினர்  அனைவருக்கும் இருக்கிறது. தமிழ்நாட்டு வளங்களைக் கார்ப்பரேட்டுகளுக்கு சுரண்டிக் கொடுக்கும் ஆர்.எஸ்.எஸ். – இந்துத்துவக் கும்பலை அச்சுறுத்தும் பெரு நெருப்புகளுள் தந்தை...

கொளத்தூர் புலியூரில் நவ.27 மாவீரர் நாள்

கொளத்தூர் புலியூரில் நவ.27 மாவீரர் நாள்

இளமை சுகங்களை எல்லாம் துறந்து எதிர்கால சந்ததிகளுக்காக தம் நிகழ்காலத்தைப் பணயம் வைத்துப் போராடி தம் இன்னுயிரை ஈகம் செய்த மாவீரர்களுக்கும், தமிழ்ப் பொதுமக்களுக்கும் வீரவணக்கம் செலுத்தும் மாவீரர் நாள் வீரவணக்க நிகழ்ச்சி 27.11.2018 அன்று மாலை 5.00 மணிக்கு கொளத்தூர், புலியூர் பிரிவில், தளபதி பொன்னம்மான் நினைவு நிழற்கூடத்தில் நடைபெற்றது. தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் நடைபெற்ற இந்த மாவீரர் நாள் வீரவணக்க நிகழ்ச்சிக்கு ஈரோடு ப. இரத்தின சாமி தலைமை வகித்தார். சேலம் மேவி.குமார், த.சரவணன், திருப்பூர் துரைசாமி, தமிழ் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உலக திருக்குறள் கூட்டமைப்பின் தலைவர் வி.சேகர் (திரைப்பட இயக்குனர்), திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி ஆகியோர் மாவீரர் நாள் உரை நிகழ்த்தினர். இந்நிகழ்வில் ஏராளமான பெண்கள்,குழந்தைகள் உள்ளிட்ட தமிழின உணர்வாளர்கள் கலந்து கொண்டு வீரவணக்கம் செலுத்தினர். பெரியார் முழக்கம் 06122018 இதழ்

மாவீரர் நாள் கருத்தரங்கம் 01122018 சென்னை

மாவீரர் நாள் கருத்தரங்கம் 01122018 சென்னை

இன்று டிச.1. மாலை சென்னையில் மாவீரர் நாள் கருத்தங்கம். “இலங்கை : அரசியல் குழப்பமும், தமிழீழ விடுதலையும்” கழக பொதுச் செயலாளர் தோழர் விடுதலை ராசேந்திரன் உரையாற்றுகிறார். தோழமை அமைப்புகளின் தலைவர்களும் பங்கேற்று உரையாற்றுகிறார்கள். நாள் : 01.12.218. சனிக்கிழமை நேரம் : மாலை 5 மணி இடம் : ரிப்போ டர்ஸ் கில்ட், சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் சென்னை. நிகழ்ச்சி ஏற்பாடு : இளந்தமிழகம் அமைப்பு .

மாவீரர் நாள் கொளத்தூர் புலியூர் 27112018

மாவீரர் நாள் கொளத்தூர் புலியூர் 27112018

27.11.18 அன்று மாலை 6.05 மணிக்கு சேலம் கொளத்தூர் புலியூர் பிரிவில் அமைந்துள்ள தளபதி பொன்னம்மான் நினைவு நிழற்கூடத்தில் திரு. ரத்தினசாமி தலைமையில் திரு. தமிழ் ராஜேந்திரன், துரைசாமி, மேவி.குமார் முன்னிலையில் மாவீரர் நாள் சிறப்புடன் நடைபெற்றது. திரு.வி.சேகர் (திரைப்பட இயக்குனர்) தலைவர், உலக திருக்குறள் கூட்டமைப்பு மற்றும் கொளத்தூர் தா.செ.மணி தலைவர், திராவிடர் விடுதலைக் கழகம். ஆகியோர் மாவீரர் நாள் உரையாற்றினார். ஏராளமான பொதுமக்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டு மறைந்த மாவீரர்களுக்கும் தமிழ் பொதுமக்களுக்கும்  வீரவணக்கம் செலுத்தினர்.  இந்நிகழ்வை தமிழீழ விடுதலை ஆதரவு ஒருங்கிணைப்பு குழு ஏற்பாடு செய்திருந்தது. புகைப்படங்களுக்கு  

மாவீரர் நாள் 2018 கொளத்தூர் 27112018

மாவீரர் நாள் 2018 கொளத்தூர் 27112018

நவ.27 மாவீரர் நாள் – 2018 நேரம் : மாலை 5.00 மணி இடம்: தளபதி பொன்னம்மான் நினைவு நிழற்கூடம்,புலியூர் பிரிவு,கொளத்தூர். மாவீரர் நாள் உரை : தோழர் வி.சேகர் (திரைப்பட இயக்குனர்) தலைவர், உலக திருக்குறள் கூட்டமைப்பு. தோழர் கொளத்தூர் மணி, தலைவர், திராவிடர் விடுதலைக் கழகம் . நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு : தமிழீழ ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழு, கொளத்தூர், சேலம் மாவட்டம்.

அரசியல் சட்ட எரிப்பு நாள் மற்றும் மாவீரர் நாள் கருத்தரங்கம் சென்னை 25112018

அரசியல் சட்ட எரிப்பு நாள் மற்றும் மாவீரர் நாள் கருத்தரங்கம் சென்னை 25112018

*அரசியல் சட்ட எரிப்பு நாள் & மாவீரர் நாள் கருத்தரங்கம்…. நாளை (நவம்பர் 26, 2018 திங்கட்கிழமை)மாலை 4 மணிக்கு,சென்னை, சேப்பாக்கம் பத்திரிக்கையாளர் சங்கத்தில்..* *கருத்துரை :* தோழர்.கொளத்தூர் மணி தலைவர், திவிக *(தலைப்பு : சட்ட எரிப்பும், ஜாதி ஒழிப்பும்)* தோழர்.மருத்துவர்.தாயப்பன் *(தலைப்பு : ஈழம் – நமது கடமை)* தோழர்.விடுதலை இராசேந்திரன் பொதுச் செயலாளர், திவிக *(தலைப்பு : பெரியாரியம் இன்றைய தேவை)* *அரசியல் சட்ட எரிப்பு ஏன்? தெரிந்து கொள்வோம்…* *அனைவரும் வாரீர்.!* *தொடர்புக்கு : 7299230363*

‘குடிஅரசு’ வழக்கு விசாரணை

‘குடிஅரசு’ வழக்கு விசாரணை

முன்னாள் பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி (தற்போது திராவிடர் விடுதலைக் கழகம்) மற்றும் முன்னாள் பெ.தி.க பொதுச் செயலாளர் கோவை இராமகிருட்டிணன் (தற்போது தந்தை பெரியார் திராவிடர் கழகம்) ஆகியோர் மீது பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவன செயலாளரும், திராவிடர் கழகத் தலைவருமான  திரு. கி. வீரமணி அவர்களால் சென்னை உயர்நீதிமன்றத்தில் காபிரைட் ஐ (உடியீலசiபாவ) மீறியதாக- அதாவது பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனத்திற்கே சொந்தமான பெரியாரின் ‘குடிஅரசு’ பத்திரிகை மற்றும் இதர தொகுப்புகள் , புத்தகங்கள் மற்றும் வெளியீடுகள் ஆகியவற்றை மீறி வெளியிட்டதற்காக ரூ. 15,00,000/- இழப்பீடு கேட்டு  2008ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கில்  ஒன்றன்பின் ஒன்றாக உயர்நீதிமன்றம் முதல் உச்சநீதிமன்றம் வரை திரு. கி. வீரமணி அவர்களின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதுமல்லாமல், பெரியார் தன் எழுத்துகளுக்கு தனியாக காப்புரிமை கொண்டாடாததால் பெரியாரின் எழுத்தும் பேச்சும் , அவர் இறந்து 25 ஆண்டுகள் கழிந்ததும் அதே...

மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் – 2018 பட்டியல்

மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் – 2018 பட்டியல்

”தலைமைக் கழக அறிவிப்பு” அன்பு தோழர்களுக்கு வணக்கம். 14.10.2018 அன்று திருப்பூரில் நடைபெற்ற கழகச் செயலவையின் தீர்மானங்களை நினைவூட்டுகிறோம். அவற்றின் நிறைவேற்றம், முன்னேற்றம், கீழ்க்கண்ட செயல் திட்டங்கள் குறித்து ஆயவும், கலந்துரையாடவும் முதற்கட்ட பயணம் ஒன்றினை திட்டமிட்டுள்ளோம். இப்பயணத்தில் கழகத்தலைவர், பொதுச் செயலாளர், தலைமைக்கழகப் பொறுப்பாளர்கள் பங்கேற்க உள்ளனர். ”மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் – 2018 பட்டியல்” : 21.11.2018 – புதன் காலை – ஈரோடு வடக்கு – மாலை – ஈரோடு தெற்கு; 22.11.2018 -வியாழன் காலை – நாமக்கல் – மாலை – திருப்பூர்; 23.11.2018 – வெள்ளி மாலை – ஆனைமலை – கோவை மாநகர் – கோவை புறநகர் (ஆனைமலை) 24.11.2018 – சனி காலை -திண்டுக்கல் (பழனி) -மாலை – திருச்சி, பெரம்பலூர், அரியலூர் (திருச்சி) 30.11.2018 – வெள்ளி காலை – சேலம் கிழக்கு- மாலை – சேலம் மேற்கு; 02.12.2018...

அரசியல் சட்ட எரிப்பு நாள் & மாவீரர் நாள் கருத்தரங்கம் சென்னை 26112018

அரசியல் சட்ட எரிப்பு நாள் & மாவீரர் நாள் கருத்தரங்கம் சென்னை 26112018

நவம்பர் 26, 2018 (திங்கட்கிழமை)மாலை 4 மணிக்கு,சென்னை, சேப்பாக்கம் பத்திரிக்கையாளர் சங்கத்தில் அரசியல் சட்ட எரிப்பு நாள் & மாவீரர் நாள் கருத்தரங்கம் தலைமை : தி.இராவணன் வரவேற்புரை : மனோகர் முன்னிலை : இரா.மாரிமுத்து,ஆ.சிவக்குமார் கருத்துரை : தோழர்.கொளத்தூர் மணி தலைவர், திவிக (தலைப்பு : சட்ட எரிப்பும், ஜாதி ஒழிப்பும்) தோழர்.மருத்துவர்.தாயப்பன் (தலைப்பு : ஈழம் – நமது கடமை) தோழர்.விடுதலை இராசேந்திரன் பொதுச் செயலாளர், திவிக (தலைப்பு : பெரியாரியம் இன்றைய தேவை) நன்றியுரை : பிரவீன் குமார் அரசியல் சட்ட எரிப்பு ஏன்? தெரிந்து கொள்வோம்… அனைவரும் வாரீர்.! தொடர்புக்கு : 7299230363  

ஆணவப் படுகொலைக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம்.! சென்னை 19112018

ஆணவப் படுகொலைக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம்.! சென்னை 19112018

திராவிடர் விடுதலைக் கழகம், தமிழ்த்தேச மக்கள் முன்னணி மற்றும் இளந்தமிழகம் ஒருங்கிணைப்பில்  திராவிடர் விடுதலைக் கழகத்தின் பொதுச் செயலாளர் தோழர் விடுதலை இராசேந்திரன் அவர்கள் தலைமையில் நாளை (19.11.2018)மாலை 3 மணிக்கு சிம்சன் பாலம் பெரியார் சிலை அருகே தொடரும் ஆணவப் படுகொலைக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம்.! காதல் இணையர் “நந்தீஷ் – சுவாதி” இருவரும் சாதி ஆணவப் படுகொலை.! தமிழகமே! ஒன்றிணைந்து போராடுவோம்! சாதிய ஆணவப் படுகொலைக்கு எதிராக…. தொடர்புக்கு : 7299230363

பெரியாரியல் பயிற்சி வகுப்பு – ஒட்டன்சத்திரம் திராவிட விழுதுகள் 18112018

பெரியாரியல் பயிற்சி வகுப்பு – ஒட்டன்சத்திரம் திராவிட விழுதுகள் 18112018

18-11-2018  ஞாயிறு அன்று காலை 10-00 மணிக்குத் தொடங்கி பிற்பகல் 4-00 மணிவரை ஒட்டன்சத்திரம், பேருந்து நிலையம் அருகிலுள்ள இராமலிங்கசாமிகள் மடத்தின்  அரங்கில், ஒட்டன்சத்திரம் திராவிட விழுதுகள் அமைப்பின் சார்பாக பெரியாரியல் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. பயிற்சி வகுப்பில் பங்கேற்க பல்வேறு பகுதிகளில் இருந்து இளைஞர்களும், தோழர்களும், மாணவர்களும் (பெண் மாணவர்கள் 30 பேர் உள்பட)  ஏறத்தாழ 80 பேர் கலந்துகொண்டனர். தோழர்.வீ.அரிஸ்டாட்டில் வரவேற்புரையாற்ற, பேரா.மதியழகன் நோக்க உரையாற்றினார். வகுப்பெடுக்க வந்திருந்த மூவருக்கும் திராவிட விழுதுகளின் அமைப்பாளர்கள் திரு.தி.மோகன், திரு.சு.கருப்புசாமி, புலவர் வீர கலாநிதி ஆகியோருக்கு நினைவுப் பரிசாக நூல்களை வழங்கினர். அறிமுகத்தைத் தொடர்ந்து, ஏன் வேண்டும் இட ஒதுக்கீடு என்ற தலைப்பில் பணிநிறைவு பெற்ற கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளர் மு.செந்தமிழ்ச்செல்வன் எளிய எடுத்துக்காட்டுகளைக் கூறி விளக்கியதோடு, இன்று இட ஒதுக்கீடு சந்திக்கும் நெருக்கடிகளையும் சுட்டிக்காட்டி உரையாற்றினார். அடுத்ததாக திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி பெரியாரியல் –...

பெரியார் நினைவு கருஞ்சட்டைப் பேரணி – மாநாடு திருச்சி 24122018

பெரியார் நினைவு கருஞ்சட்டைப் பேரணி – மாநாடு திருச்சி 24122018

பெரியார் நினைவு கருஞ்சட்டைப் பேரணி – மாநாடு: ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்   பெரியார் நினைவு நாளான டிசம்பர் 24 அன்று அனைத்து பெரியாரிய இயக்கங்களும், உணர்வாளர்களும் இணைந்து முக்கியமான அரசியல் நிகழ்வு ஒன்றினை நடத்த வேண்டும் என்பது குறித்து நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்:   நாள்:  10-11-2018, சனிக்கிழமை இடம்:  சென்னை நிருபர்கள் சங்க கட்டிடம் டிசம்பர் 24 அன்று மாலையில் திருச்சியில் கருஞ்சட்டைப் பேரணி மற்றும் மாநாடு நடத்துவதென்று ஒரு மனதாக முடிவு செய்யப்பட்டது. மாநாட்டிற்கான பெயர் விவாதிக்கப்பட்டு“தமிழின உரிமை மீட்போம்!” என்ற முழக்கத்தின் பெயரில் நடத்துவதென்று முடிவெடுக்கப்பட்டது. இயக்கங்கள் மற்றும் இயக்கங்களை தாண்டிய பெரியாரிய சிந்தனையாளர்கள், எழுத்தாளர்கள், உணர்வாளர்கள் அனைவரையும் பங்கேற்கச் செய்வது. திருச்சியில் அனுமதி பெறுவதற்கான பொறுப்பினை தோழர் குடந்தை அரசன் அவர்கள் ஏற்றுக் கொண்டார். ஒன்பது மண்டலங்களாக பிரித்து மாநாட்டிற்கான வேலைகளை பார்ப்பது என முடிவெடுக்கப்பட்டு, ஒவ்வொரு இயக்கத்திற்கும் பொறுப்பு கொடுக்கப்பட்டது.       ஒன்பது மண்டலங்கள்   1.சென்னை – தோழர் பொழிலன்(தமிழக...

போலி சுவரொட்டிகளுக்குக் கழகம் மறுப்பு

போலி சுவரொட்டிகளுக்குக் கழகம் மறுப்பு

திராவிடர் விடுதலைக் கழகம் வெளியிட்டதாக சில சமூக விரோத சக்திகள் போலியாக ஒரு சுவ ரொட்டியை முகநூலில் வடிவமைப்பு செய்து வெளியிட்டு, அதைக் காரணமாக வைத்து கழகத் தோழர்களை அலைப்பேசி வழியாக ஆபாசமாக பேசி வருகின்றனர். இதற்கு கழக சார்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. மறுப்பு விவரம்: இங்கு பதிவிடப்பட்டுள்ள சுவரொட்டி படங்கள் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சுவரொட்டிகள் அல்ல. திவிக-விற்கு களங்கம் கற்பிக்கும் நோக்கோடு சமூக வலைத் தளங்களில் சமூக விரோதி களால் போலியாக தயாரிக்கப்பட்டு இது பரப்பப்பட்டுள்ளது. மயிலாடு துறை,சென்னை ஆகிய ஊர்களின் பெயரில் இந்த போலி சுவரொட்டிகள் இணையதளங்களில்  பரப்பப்படுவதாக அறிகிறோம். எமது இயக்கத்தை கருத்தியலாய் சந்திக்க இயலாத காவிகளும், இந்துத்துவவாதிகளும்  வழக்கமாக காவிகளின் கீழ்த்தரமான பிரச்சார பாணியில் பரப்பி தங்கள் சுய அரிப்பை சொறிந்து கொள்கிறார்கள். திவிக விற்கு அவப்பெயரை ஏற்படுத்தும் உள்நோக்கோடு இவ்வாறு அவதூறு பரப்பும் சமூக விரோதிகள் மீது சட்டப்படி கழகத்தின் சார்பில் காவல்துறையிடம்...

கழக தலைவர் நிகழ்ச்சிகளின் தொகுப்பு

கழக தலைவர் நிகழ்ச்சிகளின் தொகுப்பு

பெரியாரியல் பயிற்சி வகுப்பு – திராவிட விழுதுகள் ஒட்டஞ்சத்திரம் 18112018   திவிக மாநில செயலவை திருப்பூர் 14102018 முப்பெரும் விழா பொதுக்கூட்டம் குமாரபாளையம் 13102018 தோழர் செல்வராஜ் தாயார் இறுதி ஊர்வலம் சென்னிமலை 06102018 எழுவர் விடுதலை- அஞ்சல் அட்டை ஈரோடு 06102018 இந்திய டேசிய லீக் – பெரியார் யார்? கருத்தரங்கம் திருவண்ணாமலை 03102018 கல்வி கற்க – முப்பெரும் விழா பொதுக்கூட்டம் சென்னை எம்.ஜி.ஆர்.நகர் 02102018  தந்தை பெரியார் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் பாக்கம் விழுப்புரம் 01102018    கருஞ்சட்டை கலைஞர் கருத்தரங்கம் திருச்செங்கோடு 30092018 வாழ்க்கை இணையேற்பு விழா திருவண்ணாமலை 22092018 பெரியார் சிலை திறப்பு ஆண்டிமடம் 16092018  

நெருக்கடிக்குள்ளாகும் மத சார்பின்மையும் அரசியல் எழுச்சிக்கான தேவையும் கருத்தரங்கம் திருச்சி 21102018

நெருக்கடிக்குள்ளாகும் மத சார்பின்மையும் அரசியல் எழுச்சிக்கான தேவையும் கருத்தரங்கம் திருச்சி 21102018

திருச்சியில் 21.10.2018 ஞாயிறு அன்று நடைபெற்ற SDPI அமைப்பின் “ஒடுக்கப்பட்டோர் அரசியல் எழுச்சி மாநாட்டின் காலை அமர்வில் கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி’ அவர்கள் ‘நெருக்கடிக்குள்ளாகும் மத சார்பின்மையும் அரசியல் எழுச்சிக்கான தேவையும்’ எனும் தலைப்பில் உரையாற்றினார். இந்த நிகழ்ச்சிக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில பொதுச்செயலாளர் அப்துல் ஹமீது தலைமை தாங்கினார். மாநில செயலாளர் ரத்தினம் வரவேற்புரை நிகழ்த்தினார். இந்நிகழ்ச்சியில் தந்தை பெரியார் திராவிடர் கழக தலைவர் தோழர் கு.இராமகிருட்டிணன், இந்திய தவ்ஹீத் ஜமாத் தலைவர் எஸ்.எம்.பாக்கர், மக்கள் கண்காணிப்பகத்தின் ஒருங்கிணைப்பாளர் ஆசிர்வாதம், தமிழ் புலிகள் கட்சித் தலைவர் நாகை திருவள்ளுவன், ஜமாத்தே இஸ்லாமிய ஆலோசனை குழு உறுப்பினர் ஜலாலுதீன், தமிழ் தேச மக்கள் முன்னணி தலைவர் மீ.த.பாண்டியன், கிருஸ்தவ நல்லெண்ண இயக்கத் தலைவர் இனிக்கோ இருதயராஜ், மே17 இயக்கத்தின் அருள் முருகன், பாப்புலர் ஃப்ரண்ட் மாநில பொதுச்செயலாளர் காலித் முகமது, ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் மாநில தலைவர்...

திருப்பூரில் கழகத் தலைமைக் குழு ஆலோசனைக் கூட்டம்

திருப்பூரில் கழகத் தலைமைக் குழு ஆலோசனைக் கூட்டம்

திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைமைக் குழுக் கூட்டம் அக்.13, 2018 பிற்பகல் 2 மணியளவில் கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி இல்லத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் நடந்தது. பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமி, பொருளாளர் துரைசாமி, பரப்புரைச் செயலாளர் பால். பிரபாகரன், வெளியீட்டுச் செயலாளர் கோபி. இளங்கோவன், தலைமை நிலையச் செயலாளர் தபசி. குமரன், தமிழ்நாடு  அறிவியல் மன்ற அமைப்பாளர் ஆசிரியர் சிவசாமி மற்றும் தலைமைக் குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். களப்பணியாளர்களுக்கு சிறப்புப் பயிற்சி முகாம் ஒன்றை 5 நாட்கள் நடத்த முடிவு செய்யப்பட்டு அதற்கு ஆகும் செலவை 10 கழகப் பொறுப்பாளர்கள் பகிர்ந்து கொள்ள முடிவு செய்யப்பட்டது. புரட்சிப் பெரியார் முழக்கம், நிமிர்வோம் 2018ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுகளை விடுதலை இராசேந்திரன் அறிவித்தார். கழக ஏடுகளுக்கான சந்தா சேர்ப்புக் குறித்து விவாதிக்கப்பட்டது. மாவட்டம்தோறும் கழகத் தோழர்களை கழகத் தலைவர் பொதுச்செயலாளர் சந்தித்து, கழக...

திருப்பூர் கழகச் செயலவையில்…

திருப்பூர் கழகச் செயலவையில்…

திருப்பூர் செயலவையில் பங்கேற்ற தோழர்கள் மிகுந்த உற்சாகத்துடன் கருத்துகளை முன் வைத்தனர். செயலவைக் கூட்டங்களில் கழகத் தலைவருக்கு வணக்கம் கூறுவதற்கு பதிலாக நன்கொடை வழங்கி உரையைத் தொடர வேண்டும் என்ற கருத்தை முன்மொழிந்து, மடத்துக்குளம் மோகன் தலைவருக்கு ரூ.500/- வழங்கி உரையைத் தொடர்ந்தார். தோழர்கள் ஆர்வமாக வரவேற்றனர். சிலர் அதேபோல் ரூ.100, ரூ.200 என்று தலைவரிடம் வணக்கம் கூறி நன்கொடை வழங்கினர். மதிய உணவாக சுவையான மாட்டுக்கறி பிரியாணி வழங்கப்பட்டது. சாக்கோட்டை இளங்கோவன், புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பாடல்களைப் பாடி தோழர்களை மகிழ்வித்தார். தலைமைக்குழு மற்றும் செயலவைக் கூட்டங்களுக்கு திருப்பூர் மாவட்டக் கழகம் சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தது. கழகக் கட்டமைப்பு நிதி – கழக ஏடுகளுக்கு சந்தா சேர்ப்பில் மாவட்டங்களின் பங்களிப்பைத் தோழர்கள் அறிவித்தனர். நிமிர்வோம் இதழுக்கு மாதம் 1000 நன்கொடை தருவதாக அறிவித்த ஆசிரியர் சிவகாமி, முதல் தவணையாக ரூ.5,000 வழங்கினார். சென்னை அன்பு தனசேகர் மாதம் ரூ.1000 வழங்குவதாக...

இந்து மதமும் திராவிடர் இயக்கமும்

இந்து மதமும் திராவிடர் இயக்கமும்

தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் என்னிடம் ஒரு கேள்வி கேட்டார்கள். காவி ஆட்சியை வீழ்த்துவோம் என்று தி.மு.க. தலைவர் ஸ்டாலின் இப்போது அறிவிக்கிறார். இவரே எங்களது கட்சியில் 90 சதவீதம் பேர் இந்துக்கள் என்று ஏற்கனவே கூறியவர் தானே? இது முரண்பாடு அல்லவா? என்று கேட்டார்கள். முரண்பாடு அல்ல என்று நான் பதில் கூறினேன். பார்ப்பனரல்லாத தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்டோர் அனைவருமே விரும்பினாலும் விரும்பா விட்டாலும் ‘இந்து’க்கள் என்ற பட்டியலில் தான் அடைத்து வைக்கப்பட் டிருக்கிறார்கள். தாழ்த்தப்பட்டோர் பிற்படுத்தப்பட்டோர் என்ற பட்டியலை உருவாக்கி அவர்களுக்கு சமூகநீதி உரிமைகள் வழங்கப்பட்டாக வேண்டும் என்ற நிலையை உருவானதற்கே அடிப்படை என்ன? இந்த மக்களை இந்துக்களாகி, பார்ப்பன ஆதிக்கத்துக்கு அடிமையாக்கி,  அவர்கள் மீது சுமத்திய இழிவை நீக்கவும் பறிக்கப்பட்ட உரிமைகளை மீட்டுத் தரவும் இந்த இடஒதுக்கீடு பட்டியல்களே வந்தன! ‘இந்துக்கள்’ என்றாக்கப்பட்டதால் உழைக்கும் மக்கள் கொடுத்த கடும் விலை இது. திராவிட இயக்கத்தின் அடிப்படை இலட்சியம் – சுயமரியாதை,...

கொளத்தூரில் பறை பயிற்சிப் பட்டறை

கொளத்தூரில் பறை பயிற்சிப் பட்டறை

15.09.2018 அன்று கழகத் தலைவர்  கொளத்தூர் மணி, பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் ஆகியோர் தலைமையில் ஈரோட்டில் நடைபெற்ற தமிழர் கல்வி உரிமை மீட்புப் பயணம் குறித்த தலைமைக் குழு – பயண ஒருங்கிணைப்பாளர்கள் ஆய்வுக் கூட்டத்தில் –  இயக்கக் கொள்கைப் பரப்புரைக்கும்,  மக்களிடையே கருத்துகளை எளிமையாகக் கொண்டு சேர்ப்பதற்கும் கலைக்குழுக்களின் தேவை குறித்து விரிவாக  விவாதிக்கப்பட்டது. அதனை செயல்படுத்தும் முதல் முன்னெடுப்பாக தமிழ்நாடு மாணவர் கழகமும், மாற்றம் பகுத்தறிவு கலைக் குழுவும் இணைந்து சேலம் மாவட்டம் கொளத்தூர், உக்கம்பருத்திக்காடு பெரியார் படிப்பகத்தில் இரண்டு நாள் பறை பயிற்சிப் பட்டறையை எதிர்வரும் 3.11.2018,  4.11.2018 (சனி, ஞாயிறு) ஆகிய இரண்டு நாள்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்களுக்கு மட்டும் நுழைவுக் கட்டணமாக ரூ.500 (பயிற்சி, உணவு செலவுகள் உட்பட) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மற்றவர்களுக்கான பயிற்சிக் கட்டணம்  ரூ.1200 ஆகும். பயிற்சி பெற விரும்பும்  கழகத் தோழர்கள் கீழ்க்கண்ட கைபேசி எண்களுக்குத்...

பயணக் குழுவினர் ஆக்கபூர்வ யோசனைகளை முன்வைத்தனர் ஈரோட்டில் பரப்புரைப் பயண மீள் ஆய்வுக்குழு கூட்டம்

பயணக் குழுவினர் ஆக்கபூர்வ யோசனைகளை முன்வைத்தனர் ஈரோட்டில் பரப்புரைப் பயண மீள் ஆய்வுக்குழு கூட்டம்

திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய கல்வி உரிமை மீட்பு பரப்புரைக் குழுவில் பங்கேற்ற தோழர்கள், பயண ஒருங்கிணைப்பாளர்கள் செப்டம்பர் 15 அன்று கூடி, பயணத்தின் அனுபவங்கள், மேலும் பயணத்தை செழுமை யாக்குதல் குறித்து விரிவாக விவரித்தனர். ஈரோடு கே.எஸ்.கே. மகாலில், 11 மணியளவில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் முன்னிலையில் ஆய்வுக் கூட்டம் நடந்தது. கழக அமைப்புச் செயலாளர் இரத்தினசாமி, பொருளாளர் திருப்பூர் துரைசாமி, பரப்புரைச் செயலாளர் பால். பிரபாகரன், வெளியீட்டுச் செயலாளர் இராம.  இளங்கோவன், தமிழ்நாடு அறிவியல் மன்ற அமைப்பாளர் ஆசிரியர் சிவகாமி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட தோழர்கள் பங்கேற்றனர். கோவை நிர்மல் குமார், சூலூர் பன்னீர் செல்வம், மடத்துக்குளம் மோகன், விழுப்புரம் அய்யனார், சென்னை உமாபதி, மேட்டூர் அ. சக்திவேல், கொளத்தூர் பரத், காலாண்டியூர் ஈஸ்வரன், குருவை நாத்திகஜோதி, பவானி வேணுகோபால், திருப்பூர் முத்துலட்சுமி, காவை இளவரசன், சந்தோஷ் குமார், பெரம்பலூர்...

திவிக செயலவை கூட்டம் 14102018 திருப்பூர்

திவிக செயலவை கூட்டம் 14102018 திருப்பூர்

“செயலவைக் கூட்டம்” மாற்று தேதி அறிவிப்பு. பெருமழை அறிவிப்பு காரணமாக ஒத்தி வைக்கப்பட்ட திராவிடர் விடுதலைக் கழக மாநில செயலவைக் கூட்டம் வரும் அக்14 ஞாயிறு அன்று, திருப்பூரில் நடைபெறும். நாள் : 14.10 2018, ஞாயிற்றுக்கிழமை. நேரம் : காலை 9.00 மணி இடம் : டைய்யர்ஸ் அசோசியேசன் கட்டிடம், முருகன் கோயில் பின்புறம், வாலிபாளையம், திருப்பூர். கழக செயலவை உறுப்பினர்கள் தவறாது கலந்து கொள்ளவேண்டுமாய்க் கேட்டுக்கொள்கிறோம். மாவட்டத்தின் மற்ற செயலவை உறுப்பினர்களுக்கும் தெரிவியுங்கள். – கொளத்தூர் தா.செ.மணி, தலைவர், திராவிடர் விடுதலைக் கழகம் . 06.10.2018.

செங்கோட்டையில் இசுலாமிய மக்கள் மீது இந்து தீவிரவாதிகளால் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு திராவிடர் விடுதலைக் கழகம் கடும் கண்டனம் !

செங்கோட்டையில் இசுலாமிய மக்கள் மீது இந்து தீவிரவாதிகளால் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு திராவிடர் விடுதலைக் கழகம் கடும் கண்டனம் !

செங்கோட்டையில் இசுலாமிய மக்கள் மீது இந்து தீவிரவாதிகளால் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு திராவிடர் விடுதலைக் கழகம் கடும் கண்டனம் ! வன்முறையாளர்கள் மீது தக்க நடவடிக்கையும்,இசுலாமிய மக்களுக்கு தக்க பாதுகாப்பும் வழங்க தமிழக அரசுக்கு வலியுறுத்தல் ! கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அறிக்கை. செங்கோட்டையில் கடந்த 13.09.2018 அன்று இந்து முன்னணி அமைப்பின் சார்பில் நடத்தப்பட்ட விநாயகர் ஊர்வலம் திட்டமிட்டு கலவரமாக ஆக்கப்பட்டுள்ளது. அந்த ஊர்வலத்தில் இந்து தீவிரவாதிகள் வன்முறையை உருவாக்கி இசுலாமிய மக்களின் வீடுகள்,வாகனங்கள் அடித்து உடைக்கப்பட்டு, கடைகள் சூறையாடப்பட்டு சிலரை தாக்கி அம்மக்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.அடுத்தநாளும் வன்முறை தொடர்ந்து அப்பகுதி ஒரு பதட்டமான பகுதியாக மாறியுள்ளது. ஒவ்வொரு வருடமும் சங்கபரிவார அமைப்புகள் திட்டமிட்டே இப்பகுதியில் வன்முறையை தூண்டுவது காவல்துறையில் புகார்களாகவும், வழக்குகளாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது.இந்த ஆண்டும் வன்முறை நிகழவிருக்கும் ஆபத்தை சுட்டிக்காட்டி தக்க பாதுகாப்பு வழங்க வேண்டும் என இசுலாமிய...

கழக தலைவர் மீது அவதூறு – காவல்துறை முன்னாள் அதிகாரிக்கு எச்சரிக்கை

கழக தலைவர் மீது அவதூறு – காவல்துறை முன்னாள் அதிகாரிக்கு எச்சரிக்கை

திராவிடர் விடுதலைக் கழகத்தலைவர் தோழர் கொளத்தூர்மணி அவர்களைப் பற்றியும், அவரது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையிலும், ராஜீவ்காந்தி கொலைவழக்கில் தோழர்.கொளத்தூர்மணி அவர்களைப் பற்றி, தவறான, உண்மைக்குப் புறம்பான செய்தி ஒன்றை ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி ஒருவர் வீடியோவாக வெளியிட்டு தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.. அந்த வீடியோவில் ராஜீவ்காந்தி கொலைவழக்கில் தொடர்புடைய குண்டு சாந்தனை தோழர்.கொளத்தூர்மணி தான் காட்டிக் கொடுத்ததாக அவதூறாகக் கூறியுள்ளார்.. மேலும், அந்த வீடியோவில், வேலூர் சிறையிலிருந்து 44 விடுதலைப்புலிகள் சுரங்கம் தோண்டி தப்பிய வழக்கில் கைது செய்யப்பட்ட கொளத்தூர்மணியை வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்தில் நேர்நிறுத்திய போது, தன் கையில் துப்பாக்கி இருந்தால் அப்போதே சுட்டுக் கொன்றிருப்பேன் என்றும் பேசியுள்ளார்.. தனது பணிக்காலத்தில் இது போன்று பேசாமல், பணியில் இருந்து ஓய்வு பெற்ற பின்பு அந்த அதிகாரி இது போன்று பேசவேண்டிய அவசியம், மர்மம் என்ன என்பதையும் அறிய வேண்டி உள்ளது.. ராஜீவ்...

பெரம்பலூர் மாநாட்டு புகைப்படங்கள்

பெரம்பலூர் மாநாட்டு புகைப்படங்கள்

பெரம்பலூர் மாநாட்டு புகைப்படங்கள் சென்னை அணி புகைப்படங்கள் திருப்பூர் அணி புகைப்படங்கள் குடியாத்தம் அணி புகைப்படங்கள் மயிலாடுதுறை அணி புகைப்படங்கள்  

ஆகஸ்ட் 30- அனைத்துலக காணாமற் போனோர் நாள் – சென்னை – ஆகஸ்ட் 31 அன்று கோரிக்கை மனு

ஆகஸ்ட் 30- அனைத்துலக காணாமற் போனோர் நாள் – சென்னை – ஆகஸ்ட் 31 அன்று கோரிக்கை மனு

ஆகஸ்ட் 30- அனைத்துலக காணாமற் போனோர் நாளை முன்னிட்டு இலங்கையில் காணாமற் ஆக்கப்பட்டோர் நிலை குறித்து ஐ.நா விடம் இன்று ஆகஸ்ட் 31 அன்று கோரிக்கை விடப்பட்டது To: ஆகஸ்ட் 30 – அனைத்துலக காணாமற்போனோர் நாளை முன்னிட்டு இலங்கையில்  காணாலாக்கப்பட்ட 20000 க்கும் மேலான ஈழத் தமிழர்களுக்கு நீதி கோரி அடையாறு யுனிசெப் அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டது. இன்று ஆகஸ்ட் 31 வெள்ளி அன்று காலை 11 மணி அளவில் அடையாறில் காந்தி கஸ்தூரி பாய் ரயில் நிலையத்தின் பின்புறம் உள்ள யுனிசெப் அலுவலகத்தில் உள்ள கள அதிகாரியிடம்  ஐ.நா. பொதுச் செயலாளருக்கும் ஐ.நா. மனித உரிமை ஆணையருக்குமான கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது. ஈழத் தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு சார்பாக ஒழுங்குசெய்யப்பட்டிந்த இந்நிகழ்வில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் தி.வேல்முருகன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் வன்னியரசு, திராவிடர் விடுதலைக் கழகத்தின் பொதுச் செயலாளர் விடுதலை இராஜேந்திரன்,...

ஐநா பொதுச் செயலருக்கும்,  ஐநா மனித உரிமைகளுக்கான உயர் ஆணையருக்கும் கோரிக்கை மனு

ஐநா பொதுச் செயலருக்கும், ஐநா மனித உரிமைகளுக்கான உயர் ஆணையருக்கும் கோரிக்கை மனு

தோழர் கொளத்தூர் மணி                                31.8.2018 தலைமை ஒருங்கிணைப்பாளர்   ஐநா பொதுச் செயலருக்கும், ஐநா மனித உரிமைகளுக்கான உயர் ஆணையருக்கும்.  ஆகஸ்ட் 30 ஆம் நாளில் வலுக்கட்டாயக் காணாமலடிக்கப்பட்டவர்களை உலகம் நினைவுகூர்வது போலவே, தமிழ்நாட்டில் உள்ள ஈழத் தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பைச் சேர்ந்த நாங்கள், இலங்கையில் காணாமலாக்கப்பட்ட பத்தாயிரக்கணக்கான தமிழர்களின் நிலையை ஐ.நா.வின் வலுக்கட்டாயக் காணாமலடித்தல் பற்றிய குழுவில் எழுப்புமாறு வலுக்கட்டாயக் காணாமலடித்தலிலிருந்து அனைவரையும் பாதுகாப்பதற்கான பன்னாட்டு ஒப்பந்தத்தில்(ICPPED) கைசாத்திட்டுள்ள நாடுகளை வலியுறுத்துகிறோம். இலங்கையில் பத்தாயிரக்கணக்கானத் தமிழர்கள் இறுதிப்  போரின் போதும் அதற்குப் முன்பும் பின்பும் வலுகட்டாயக் காணாமலடித்தலுக்கு ஆளானதோடு இறுதிப்போர் முடிந்து ஒன்பது ஆண்டுகளாகியும் அவர்களின் நிலை வெளிப்படாமலும் கண்டறியப்படாமலும் உள்ளது. ஐ.நா. கணக்குப்படி, உலகிலேயே காணாமலடிக்கப்பட்டோரை அதிகமாக கொண்டுள்ள நாடுகளில் இலங்கை இரண்டாம் இடத்தில் உள்ளது. இதில் எண்ணற்ற குழந்தைகளும் அடங்குவர். அவர்கள் 2009 ஆம் ஆண்டு மே மாதத்தில் போரின் கடைசி நாட்களில் சிறிலங்கா அரசப்படைகளிடம் சரணடைந்த...

தோழர் செங்கொடி அவர்களின் 7ஆம் ஆண்டு நினைவேந்தல் 28082018

தோழர் செங்கொடி அவர்களின் 7ஆம் ஆண்டு நினைவேந்தல் 28082018

தமிழர் உயிர் காக்க தன்னுயிர் மாய்த்த மக்கள் மன்ற தோழர்.செங்கொடி அவர்களின் 7ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வான இன்று (28.08.2018)… கழக பொதுச் செயலாளர் தோழர்.விடுதலை இராசேந்திரன் மற்றும் கழகத் தோழர்கள் காஞ்சிபுரம் மக்கள் மன்றத்தில் அமைந்துள்ள தோழர்.செங்கொடி நினைவிடத்தில் வீரவணக்கத்தை செலுத்தினார்கள்.

கழக மாநாடு தமிழக அரசுக்கு கோரிக்கை ‘நீட்’டுக்கு விலக்கு கோரி – தமிழக சட்டமன்றத்தில் மீண்டும் தீர்மானம்

கழக மாநாடு தமிழக அரசுக்கு கோரிக்கை ‘நீட்’டுக்கு விலக்கு கோரி – தமிழக சட்டமன்றத்தில் மீண்டும் தீர்மானம்

2018 ஆகஸ்ட் 26 அன்று பெரம்பலூரில் நிகழ்ந்த திராவிடர் விடுதலைக் கழகத்தின் தமிழர் கல்வி உரிமை மீட்புப் பரப்புரைப் பயணத்தின் நிறைவு விழா மாநாட்டில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி முன்மொழிந்த தீர்மானங்கள்: கலைஞருக்கு வீர வணக்கம் திராவிட இயக்கத்தின் மூத்த தலைவரும், சூத்திரர் இழிவு ஒழிப்பு இலட்சியத்தை நிறை வேற்றிட அனைத்து ஜாதியினரை யும் அர்ச்சகராக்க – இரண்டு முறை – தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் மற்றும் சட்டம் நிறைவேற்றியவரும்,  திராவிட இயக்கத்தின் அடிப்படையான சமூக நீதிக் கொள்கைகளைக் கட்டிக் காப்பாற்றி விரிவு செய்து – மேலும் செழுமையாக்கி இட ஒதுக்கீட்டுத் தத்துவத்தை ஜன நாயகப்படுத்தியவரும், சூத்திரர் களுக்கான ஆட்சியை நடத்து கிறேன் என்று சட்டப் பேரவையில் முதல்வராகப் பிரகடனம் செய்தவரும், தை முதல் நாளே தமிழர்களுக்கான புத்தாண்டு என்று பார்ப்பனியத்திற்கு எதிரான பண்பாட்டுப் புரட்சியை சட்டப் படி நடைமுறைக்குக் கொண்டு வந்தவரும், ‘சிலை வைக்க வேண்டிய தலைவர்’ என்று...

பயண நிறைவு விழா மாநாடு பெரம்பலூரில் பேரெழுச்சி

பயண நிறைவு விழா மாநாடு பெரம்பலூரில் பேரெழுச்சி

திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய கல்வி உரிமை மீட்புப் பரப்புரைப் பயணத்தின் நிறைவு விழா மாநாடு ஆகஸ்ட் 26 அன்று பெரம்பலூரில் எழுச்சியுடனும் உணர்ச்சியுடனும் நடைபெற்றது. பெரம்பலூர் புதிய பேருந்து நிலைய வளாகம் முழுதும் பல்லாயிரக்கணக்கில் பொது மக்களும் கருஞ்சட்டைத் தோழர்களும் கடல்போல் திரண்டிருந்தது கண்கொள்ளாக் காட்சி. மாநாட்டுக்குப் பொறுப்பேற்று செயல்பட்ட பெரம்பலூர் மாவட்டத் தலைவர் துரை. தாமோதரன் தலைமை யிலான செயல் வீரர்கள் மிகச் சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தனர். நகரம் முழுதும் கழகக் கொடிகளும் மாநாட்டுக் கோரிக்கைகளை விளக்கும் பதாகைகளும் கம்பீரமாகக் காட்சி அளித்தன. மாநாட்டு மேடைக்கு ‘சமச்சீர் கல்வி நாயகன் கலைஞர் மேடை’ என்று பெயர் சூட்டப்பட்டிருந்தது. மாலை 3 மணியிலிருந்தே 6 பயணக் குழுக்களும் பறை இசை ஒலி முழக்கங்களோடு பெரம்பலூர் நோக்கி வந்து நகரையே குலுக்கின. சென்னை பயணக்குழு தனது நிறைவு பரப்புரையை பெரம்பலூர் கூட் ரோடு சந்திப்பில் நிகழ்த்தியது. மாலை 6 மணியளவில் பறை...

தமிழர் கல்வி உரிமை மீட்புப் பரப்புரை கழக அணிகளின் பயணம் புறப்பாடு!

தமிழர் கல்வி உரிமை மீட்புப் பரப்புரை கழக அணிகளின் பயணம் புறப்பாடு!

திராவிடர் விடுதலைக் கழகத்தின் தமிழர் கல்வி உரிமை மீட்புப் பரப்புரைப் பயணம் எழுச்சியுடன் தொடங்கியது. 20ஆம் தேதி சென்னை, மேட்டூர், மயிலாடுதுறை குழுக்கள் பயணத்தைத் தொடங்கின. 21ஆம் தேதி குடியாத்தம், திருப்பூர், சங்கரன்கோயில் பயணக் குழுக்கள் பயணத்தைத் தொடங்கின. முன்னதாக சென்னை பயணக் குழுவின் தொடக்க விழா பொதுக் கூட்டம் ஆகஸ்டு 19 ஆம் தேதி மாலை 6 மணியளவில் திருவல்லிக்கேணி சேக்தாவூது தெருவில் அருண்குமார் தலைமையில் சி.இலட்சு மணன் முன்னிலையில் ப. பிரபாகரன் வரவேற்புரையுடன் தொடங்கியது. கலைஞர் நினைவு அரங்கம் என்று மேடைக்கு பெயர் சூட்டப்ப்டடிருந்தது. கலைஞர் உருவப் படத்தைப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் திறந்து வைத்தார். மாவட்ட செயலாளர் இரா. உமாபதி தொடக்க உரையைத் தொடர்ந்து ‘விரட்டு’ கலை பண்பாட்டுக் குழுவினரின் பறை இசையோடு நிகழ்ச்சிகள் தொடங்கின. சமூக நீதி காத்த தலைவர்கள் பெரியார், அம்பேத்கர் பாடல்கள், கல்வி உரிமைப் பயண நோக்கங்களை விளக்கம் பாடல்களைத் தொடர்ந்து...

அஞ்சல் வழியாக ‘நிமிர்வோம்’ இதழ்

அஞ்சல் வழியாக ‘நிமிர்வோம்’ இதழ்

அஞ்சல் வழியாக ‘நிமிர்வோம்’ இதழ் பெற வேண்டியவர்கள் ஆண்டுக் கட்டணம் ரூ.300 செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம். பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி : ‘நிமிர்வோம்’ 29, பத்திரிகையாளர் குடியிருப்பு திருவான்மியூர், சென்னை – 600 041. வங்கி வழியாக அனுப்ப: ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ கரூர் வைஸ்யா வங்கி அடையாறு கிளை நடப்புக் கணக்கு  (Current a/c) வங்கிக் கணக்கு எண் : 1257115000002041 i.f.c. Code : kvbl0001257 தொடர்புக்கு:  7299230363 பெரியார் முழக்கம் 16082018 இதழ்

பெரம்பலூர் – கருஞ்சட்டைக் கடலாகட்டும்!

பெரம்பலூர் – கருஞ்சட்டைக் கடலாகட்டும்!

திராவிடர் விடுதலைக் கழகத்தின் செயலாற்றல் மிக்க தோழர்கள் தமிழர்களின் குறிப்பாக தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களின் பாதிக்கப் படும் கல்வி வேலை வாய்ப்பு உரிமைகளை மக்களிடம் எடுத்துச் சொல்ல பரப்புரைப் பயணத்தைத் தொடங்குகிறார்கள். 2018 ஆக. 20இல் தொடங்கி 26இல் பெரம்பலூரில் நிறைவு விழா மாநாடு; 6 முனைகளிலிருந்து புறப்பட்டு 180 ஊர்களில் பரப்புரைக் கூட்டங்கள். எத்தனையோ தடைகளைத் தகர்த்து ‘மனு சாஸ்திரம்’ நமக்கு மறுத்த கல்வி உரிமையை மீட்டு நமது தலைவர்கள் போராடிப் பெற்றுத் தந்த உரிமைகள் இப்போது பறிபோய்க் கொண்டிருக்கின்றன. நீதிக்கட்சி ஆட்சியில் தொடங்கியது நமக்கான வகுப்புவாரி உரிமை. 1950இல் தமிழ்நாட்டில் பின்பற்றி வந்த வகுப்புவாரி பிரதிநிதித்துவம் செல்லாது என்று சென்னை உயர்நீதி மன்றமும் பிறகு உச்சநீதிமன்றமும் தீர்ப்பளித்தது. பெரியார் போராடினார்; தமிழகம் கொந்தளித்தது. இந்திய அரசியல் சட்டம் பெரியார் நடத்திய போராட்டத்தால் முதன் முதலாக 1951இல் திருத்தப்பட்டது. வகுப்புவாரி பிரதிநிதித்துவத்துக் கான போராட்டத்தையும் வடவர் சுரண்டல் எதிர்ப்புப் போராட்டத்தையும்...

திராவிடர் விடுதலைக் கழகம் நடத்தும் ‘கல்வி உரிமை பரப்புரைப் பயணம்’

திராவிடர் விடுதலைக் கழகம் நடத்தும் ‘கல்வி உரிமை பரப்புரைப் பயணம்’

கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்று! • தமிழ்நாட்டில் ‘நீட்’டை விலக்கு! • மத்திய அரசுப் பணிகளில் வடநாட்டுக் காரர்களைத் திணிக்காதே!   • தமிழகத்தில் தமிழ்நாட்டைச் சார்ந்தவர்களுக்கு மட்டும் வேலை கொடு; தேர்வுகளை  தமிழில் நடத்து! • தனியார் துறைகளில் இடஒதுக்கீடு வழங்கு! தோழர்களே! கல்வி – வேலை வாய்ப்பு – இதுவே தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களாகிய நமக்கு இரண்டு கண்கள்: ஆனால், நமது கண்கள் இப்போது பிடுங்கப் படுகின்றன. மீண்டும் நமது தாத்தா, பாட்டி களின் ‘கைநாட்டு’க் காலத்துக்கே விரட்டப் பட்டுவிடுவோமோ என்ற அச்சம் சூழ்ந்து நிற்கிறோம். இதோ சில தகவல்கள்… இதைப் படியுங்கள். 1976ஆம் ஆண்டு வரை கல்வி நமது மாநில அரசுக்கு மட்டுமே உரிமையாக இருந்த நிலை மாறி மத்திய அரசு ‘நாங்களும் தலையிடுவோம்’ என்று குறுக்கிட்டுத் தானாகவே பொதுப் பட்டியலுக்கு மாற்றிக் கொண்டது. அதன் விளைவு? இப்போது நமக்கு அடி மேல் அடி. ‘நீட்’ தேர்வு அப்படித்தான்...

தற்போது விற்பனையில் ‘நிமிர்வோம்’ –  ஜூலை 2018 இதழ்

தற்போது விற்பனையில் ‘நிமிர்வோம்’ – ஜூலை 2018 இதழ்

தலையங்கம்-ஒரு நாத்திகரின் 75 ஆண்டு பொது வாழ்வுப் பயணம் ‘தலித்’துகளை புறக்கணிக்கும் கிரிக்கெட் வாரியம் ஆளுநர்களின் அதிகார வரம்பு மீறல்- ஒரு விரிவான அலசல் தமிழ் இலக்கியங்களில் மூடநம்பிக்கைகள் ஜாதி சங்க மாநாடுகளில் ஜாதியை எதிர்த்த பெரியார் மோடி ஆட்சியில் ‘தலித்’ அடக்குமுறைகள் – அய்.நா வில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணம் மற்றும் பெரியார் சிந்தனைகளுடன்… தனி இதழ் விலை : ரூ.20 தொடர்புக்கு:  நிர்வாகி, 95, டாக்டர் நடேசன் சாலை, அம்பேத்கர் பாலம், மயிலாப்பூர், சென்னை-600 004. தொலைபேசி எண்: 044 24980745/7299230363 www.dvkperiyar.com/nimirvomdvk@gmail.com பெரியார் முழக்கம் 09082018 இதழ்