அறிவியல் வளர்ச்சியும் பார்ப்பனியமும்!
அதிவேகமாக வளர்ந்து வரும் அறிவியல் வளர்ச்சியால் நடுங்கிப் போய் நிற்கிறது வைதீக பார்ப்பனியம். பாரம்பரியம் என்ற பெயரில் தாங்கள் கட்டமைத்த சனாதன மரபுகள் சீர்குலைந்து விடாமல் காப்பாற்றும் முயற்சிகளில் அது இறங்கியிருக்கிறது. அதற்காக அறிவியலை சனாதான பழமைக்குள் தொடர்புபடுத்தும் திட்டமிட்ட முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். குறிப்பாக பள்ளி பாடத்திட்டங்களில் இந்த கருத்துக்களை திணிக்க தொடங்கி இருக்கிறார்கள். தேசிய கல்விக் கொள்கையை ஏற்க தமிழ்நாடு அரசு மறுத்துவிட்டாலும் ஒன்றிய ஆட்சி தமிழ்நாடு மீது திணிக்க முயிற்சிக்கிறது. தமிழ்நாடு வந்துள்ள ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பகிரங்கமாக இந்த கல்வித் திட்டத்தை தமிழ்நாடு ஏற்க வேண்டும் என்று மிரட்டுகிறார். தேசிய கல்விக் கொள்கையின் கீழ் உருவாக்கப்படும் பாடத்திட்டங்களில் “பாரதத்தின் பாரம்பரிய அறிவை முன்னிறுத்துதல்” என்ற பெயரில் மிக மோசமான பார்ப்பனிய கருத்துக்களை திணித்து வைத்துள்ளனர். இதற்காக பல்கலைக்கழக நிதி உதவிக்குழு வரைவு பாடத்திட்டம் ஒன்றை உருவாக்கி இருக்கிறது. குறிப்பாக தேசிய கல்விக் கொள்கையின்...
