வாலிபர்களே தயாராய் இருங்கள்!
பெரியார் தன்னைப் பற்றி சுய விமர்சனத்தோடு எழுதிய கட்டுரை. 02.05.2024 இதழின் தொடர்ச்சி… இந்த எண்ணத்தின் மீதே சுயமரியாதை இயக்கம் ஆரம்பித்தேன். இந்த எண்ணம் கைகூடினால் மனித சமூகத்தில் உள்ள போராட்டங்கள் மறைந்து விடும். தனிப்பட்ட மனிதர்களுக்குள்ள குறைகள் நீங்கிவிடும்; தனக்கு என்கின்ற பற்றும் ஒழிந்துவிடும். உற்சாகத்துக்காக வேண்டுமானால் போராட்டங்களும் குறைகளும் அதிருப்திகளும் கவலைகளும் இருக்கலாம். அதாவது பண்டிகைக்காக ஓய்வெடுத்துக்கொண்ட மக்கள் பலர் கூடி சதுரங்கமோ, சீட்டாட்டமோ விளையாடும்போது யோசனைகள், கவலைகள், அதிருப்திகள் காணப்படுவதுபோல் இயற்கையின் ஆதிக்கத்தால் நமது வாழ்வுக்கு அவசியமில்லாததும் பாதிக்காததுமான யோசனை, கவலைகள் முதலியன காணப்படலாம். இவை எந்த மனிதனுக்கும் மனிதனல்லாத மற்ற எந்த ஜீவனுக்கும் உயிருள்ளவரை இருந்து தான் தீரும். “சரீரமில்லாத ஆத்மாவுக்கும் கண்ணுக்குத் தெரியாத சூட்சம சரீரத்திற்கும்” கூட “மோட்சமும்” “முக்தியும்” கற்பித்திருப்பதில் ஜீவனுக்கு வேலை யில்லாமலும் அநுபவமில்லாமலும் மோட்சம் – முக்தி கற்பிக்க முடியவில்லை. ஆதலால் ஏதாவது ஒரு வேலை செய்ய வேண்டி இருந்து...