பெரியாரை மீண்டும் மீண்டும் வாசிப்போம் – ஆளூர் ஷா நவாஸ் எம்.எல்.ஏ
(28.12.2023 இதழில் வெளியான கட்டுரையின் தொடர்ச்சி) ஒன்றிய அரசின் எந்தவொரு உயர் பொறுப்புகளிலும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியின வகுப்புச் சார்ந்தவர்கள் கிடையாது என்று ஒன்றிய அரசே நாடாளுமன்றத்தில் கூறுகிறது. உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றம், இராணுவம் என ஒன்றிய அரசின் அனைத்துத் துறைகளிலும் முற்பட்ட வகுப்பினர்தான் நிறைந்துள்ளனர். இந்த நாட்டின் அதிகாரம் முழுமைக்கும் இன்றைக்கு பார்ப்பனர்களின் கட்டுப்பாட்டில் சிக்கியுள்ளது. ஆங்கிலேயர்கள் இந்த நாட்டை விட்டு செல்லும்போது பெரியார் ஏன் இது உண்மையான விடுதலை கிடையாது, அதிகாரம் கைமாறி இருக்கிறது என்று கூறினார்? ஆங்கிலேயரிடமாவது நம் உரிமைகளைப் போராடி பெற்றுவிடலாம் என்று பெரியார் கூறினார். சுதந்தர நாளை துக்கநாளாக அறிவித்தவர் பெரியார். விடுதலை அடைந்து 75 ஆண்டுகளாகிறது. ஆனால் இன்னும் கல்விக்காக, வேலைவாய்ப்புகளுக்காக முட்டிமோதிக்கொண்டுதானே இருக்கிறோம். பிற்படுத்தப்பட்டவராக இருக்கும் மோடி பிரதமராக இருக்கும்போது பிற்படுத்தப்பட்டவர்களுக்கு மருத்துவ மேற்படிப்புகளில் இட ஒதுக்கீடு மறுக்கப்பட்டது. அதை எதிர்த்து உச்சநீதிமன்றம் வரை சென்று வழக்காடி வென்றது திமுக, விசிக உள்ளிட்ட...