Category: பெரியார் முழக்கம்

விழுப்புரத்தில் பெரியார் பிறந்த நாள் விழா

செப்டம்பர் 17இல் விழுப்புரம் மாவட்டம் கழக சார்பில் காலை 9 மணியளவில் சங்கராபுரத்திலுள்ள பெரியார் சிலைக்கு மாவட்ட செயலாளர் பெரியார் வெங்கட் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. அம்பேத்கர் சிலைக்கும் தோழர்கள் மரியாதை செலுத்தினர். காலை 11 மணியளவில் செம்பராம்பட்டு அரசு நடுநிலைப் பள்ளியில் 200க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்களுக்கு இனிப்பு (லட்டு) வழங்கினர். பள்ளி தலைமை ஆசிரியர் ஒத்துழைப்புடன் மாணவ மாணவிகளிடையே தோழர்கள் ராஜேஷ், க.இராமர் ஆகியோர் உரையாற்றினர். செஞ்சி நான்கு முனை சாலையில் பெரியார் படத்திற்கு செஞ்சி கழகப் பொறுப்பாளர் கோ. சாக்ரடீசு தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. பல்வேறு அமைப்புகளைச் சார்ந்த தோழர்கள் பங்கேற்றனர். திருவண்ணாமலை நகரத்தில் கழகத் தோழர் வழக்கறிஞர் சத்தியராஜ், பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தும், பெரியார் சிந்தனைகள் கொண்ட பெரிய பேனர் வைத்தும் பெரியார் பிறந்த நாள் விழாவை முன்னெடுத்தார். பெரியார் முழக்கம் 29092016 இதழ்

தடை மீறி 54 முறை கைதான புரட்சி நடிகர்

செப்.17, பெரியார் பிறந்த நாளில் தான் ‘நடிகவேள்’ இராதா முடிவெய்தினார். அவர் நினைவாக ‘மணா’ தொகுத்த ‘எம்.ஆர்.ராதா காலத்தின் கலைஞன்’ நூலிலிருந்து -சில பகுதிகள்: நடிகவேள் எம்.ஆர்.இராதா, 1942க்குப் பிறகு மறுபடியும் நாடக மேடைக்கே திரும்பினார். பொன்னுச்சாமி பிள்ளை கம்பெனியில் சேர்ந்து நடிக்க ஆரம்பித்தார். இழந்த காதல் நாடகத்தில் அவருடைய சவுக்கடிக் காட்சிக்குத் தனிப் பெயர் கிடைத்தது. சிவாஜி பெண் வேடத்தில் நடித்த இந்த நாடகம், வெள்ளித்திரை (திரைப்படம்) தரத் தவறிய புகழைத் தந்தது. அண்ணா உள்படப் பலர் பாராட்டினார்கள். பெரியாரும், சம்பத்தும் வந்து மனப்பூர்வமாக வாழ்த்தினார்கள். பெரியாருடன் தொடர்பு கூடியது. ‘திராவிட மறுமலர்ச்சி நாடக சபா’ என்கிற பெயருடன் இயங்க ஆரம்பித்தார் இராதா. “சுயமரியாதைக் கருத்துகளை நான் ஆராய ஆரம்பித்த சில ஆண்டுகளிலேயே முழுவதும் அதன் வசமாகிவிட்டேன்” என்று இராதாவே உணர்வுடன் சொல்லு மளவுக்கு திராவிட இயக்கக் கருத்துக்கள் அவருடைய நாடகங்களில் வெளிப்பட்டன. விமலா அல்லது விதவையின் கண்ணீர் துவங்கி, இலட்சுமி காந்தன்,...

கோவை மதவெறிக் கலவரத்துக்கு பச்சைக் கொடி காட்டிய காவல்துறை

கோவையில் இந்து முன்னணியின் மாவட்ட செய்தி தொடர்பாளர் பொறுப்பில் இருந்த டி.சசிக்குமார் (35) என்பவர் 22.09.2016 அன்று இரவு அடையாளம் தெரியாத சிலரால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவத்தை யொட்டி கோவை மாவட்டம் முழுவதும் காலை முதல் இரவு வரை கடைகள் அடைக்க வைக்கப்பட்டது. இந்து முன்னணியினர் இருசக்கர வாகனங்களில் சென்று அதிகாலை முதலே கடைகளை அடைக்கச் சொல்லி மிரட்டிச் சென்றனர். காலை 9 மணி வரை பெரும்பகுதி அரசு, தனியார் பேருந்துகள் இயங்கின. பிறகு காலை 9 மணிக்கு மேல் பேருந்துகள் இயங்கவில்லை. கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டது, பள்ளிகள் கல்லூரிகள் மதியத்திற்குமேல் விடுமுறை அளிக்கப்பட்டது. வன்முறையாளர்கள் நகரம் முழுவதும் கலவரத்திலும், தாக்குதலிலும், சொத்துக்களை அழிப்பதிலும், வாகனங்களை கொளுத்துவதிலும், சூறையாடுவதிலும் ஈடுபட்டனர். மாவட்ட காவல்துறையினர் இந்த நிகழ்வுகளில் எல்லாம் உரிய முறையில் தடுக்கவோ, கலைக்கவோ நடவடிக்கை எடுக்காததோடு, சார்பு தன்மையோடும் நடந்து கொண்டனர். அதிகாலை முதல் கலவரச் சூழல் உருவாகும் என்று தெரிந்தும் நடவடிக்கை போதுமானதல்ல, பள்ளி...

சமூக அவமதிப்புக்கு உள்ளாகும் திருநங்கைகளின் சுயமரியாதைப் போராட்டம்

தமிழகம் முழுதும் திருநங்கைகள் பல்லாயிரக்கணக்கில் சென்னையில் திரண்டு மாபெரும் ஆர்ப்பாட்டத்தை வள்ளுவர் கோட்டம் அருகே நடத்தினர். மோடி ஆட்சி திருநங்கைகள் நலனுக்காக மசோதா ஒன்றை அறிமுகப்படுத்தியிருக்கிறது. இந்த மசோதா திருநங்கை களின் வாழ்வை மேலும் மோசமாக்கிவிடும் என்று செப்.21 அன்று திருநங்கைகள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆர்ப்பாட்டத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, விடுதலை சிறுத்தைகள்    கட்சி தலைவர் திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்த பால கிருஷ்ணன், தி.மு.க.வைச் சார்ந்த விஜயா தாயன்பன், பேராசிரியர் சரசுவதி உள்ளிட்ட பலரும் திருநங்கைகள் கோரிக்கையை ஆதரித்துப் பேசினர். திருநங்கைகள் உரிமைகளுக்காக தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா, தனிநபர் மசோதா ஒன்றை மாநிலங்களவையில் கொண்டு வந்தார். அந்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியது. 35 ஆண்டுகால நாடாளுமன்ற வரலாற்றில் ஒரு தனி நபர் மசோதா, அப்போதுதான் நிறைவேறியது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மசோதாவில் இடம் பெற்றிருந்த நல்ல அம்சங்களை இப்போது மோடி ஆட்சி அறிமுகப்படுத்தியுள்ள மசோதா...

ஈழத்தில், மீண்டும் எழுகிறார்கள் தமிழர்கள்!

யாழ்ப்பாணத்தில் செப்.24 அன்று ‘எழுக தமிழ்’ என்ற எழுச்சிப் பேரணியை பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் திரண்டு நடத்தியிருக்கிறார்கள். வடக்கு மாகாண முதல்வர் விக்னேசுவரன் உருவாக்கிய அரசியல் சார்பற்ற ‘தமிழ் மாநிலக் குழு’ என்ற அமைப்பின் சார்பில் அவரே தலைமையேற்று வழி நடத்திய பேரணி இது. இதில் ஈபி.ஆர்.எல்.எஃப். டெலோ, புளோட் உள்ளிட்ட அமைப்புகளின்  அரசியல் பிரிவுகளைச் சார்ந்த அனைவரும் பங்கேற்றனர். தமிழ் தேசிய கூட்டணியில் சம்பந்தம் தலைமை யிலான ஒரு பிரிவினர் மட்டும் பங்கேற்க வில்லை. 2009 முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்குப் பிறகு மக்கள் ஆளும் சிங்களப் பேரினவாத அரசை எதிர்த்து வெளிப் படையாக போர்க்குரல் எழுப்பி வெளியே வந்திருக்கிறார்கள் என்ற அளவில் இந்தப் பேரணி முக்கியத்துவம் பெறுகிறது. தமிழர் பகுதி இராணுவ ஆக்கிரமிப்பில் இருக்கும் சூழலில் மக்களின் இந்தப் போராட்டக் குரல் அந்த மக்களின் விடுதலை உணர்வுத் தீ அணைந்து விடவில்லை என்பதை உலகுக்கு அறிவித்திருக்கிறது. பேரணியின் இறுதியில் வெளியிடப்பட்டுள்ள பிரகடனங்கள் மிகவும் முக்கியமானதாகும்....

அய்யகோ! விக்னேசு இப்படி ஒரு முடிவை எடுக்கலாமா?

விக்னேஷ் என்ற 21 வயது இளைஞர் தீக்குளித்து, உயிர்க் கொடை வழங்கிவிட்டார். நெஞ்சம் பதறுகிறது. நாம் தமிழர் கட்சி, காவிரி உரிமைக்காக கருநாடக அரசைக் கண்டித்து நடத்திய பேரணியில் விக்னேசு இப்படி ஒரு விபரீத முடிவை எடுத்து விட்டார். தனது முகநூலில் பேரணிக்கு முதல் நாளே ‘தீக்குளிப்பு நடக்கப் போகிறது’ என்று சூசகமாக அறிவித்திருக்கிறார். தமிழ்நாட்டில் சமூகத்தைப் பற்றி கவலைப்படுகிற இளைஞர்கள் வெகு சிலர்தான். உல்லாசம், பொழுது போக்கு, கேளிக்கை என்று வாழும் இளைஞர்களிடையே அதிசயமாக இன உணர்வோடு இனத்தின் விடுதலைக்காகப் போராட வரும் இத்தகைய இளைஞர்கள் இப்படி தங்களைத் தாங்களே அழித்துக்கொள்ளும் விபரீத முடிவுகளை ஏன் எடுக்க வேண்டும்? உணர்ச்சிகரமான பேச்சுகளும் அதற்காக கட்டமைக்கப்படும் சொல்லாடல்களும் இளைஞர்களை வெற்று உணர்ச்சிக்குள் மூழ்கச் செய்து  விடுகின்றன. தெளிந்த சமூக அரசியல் பார்வை; அதற்கான போராட்டப் பாதை; இதை முன்னெடுப்பதற்கான களச் சூழல் இவைகளோடு பொருத்திக் கொண்டு தொடர்ந்து செயலாற்றுவதற்கான  உறுதியை உணர்வுகளாக்கிக் கொள்ள...

நாட்டு விடுதலைப் போருக்குநாடகம் மூலம் தொண்டாற்றியவர்

நாட்டு விடுதலைப் போருக்குநாடகம் மூலம் தொண்டாற்றியவர்

நாடகத்தில் நடிப்பதற்கு பெண்கள் வரத்தயங்கிய காலத்தில் எம்.ஆர்.இராதாவின் ‘இரத்தக் கண்ணீர்’, ‘இலட்சுமி காந்தன்’ நாடகங்களில் துணிச்சலாக நடிக்க வந்தார் பிரேமாவதி என்ற 17 வயது பெண். இராதாவுக்கும் பிரேமாவதிக்கும் இடையே காதல் உருவாகி, திருமணம் செய்து கொண்டார்கள். பிறந்த குழந்தைக்கு ‘தமிழரசன்’ என்று பெயர்சூட்டினார்கள். அம்மை நோய் பாதிப்புக்குள்ளாகி, முதலில் ‘தமிழரசன்’ இறக்கிறார்; அடுத்த 3 நாள்களில் அதே நோய்க்கு பிரேமாவும் தனது 22 வயதில் இறந்து விட்டார். தனது அன்பு மனைவி, மகனுக்கு கோவையிலிருந்து பாலக்காடு போகும் வழியில் ஆற்றுப் பாலத்தைக் கடந்து நிற்கும் இடு காட்டில் அவர்கள் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் நாற்பதடி உயரத்தில் அவர்கள் நினைவாக கோபுரம் போன்ற நினைவுச் சின்னத்தை எழுப்பினார் எம்.ஆர். இராதா. அவ்வப்போது இந்த நினைவிடத்துக்கு வந்து நடிகவேள் கண் கலங்குவார். அந்த நினைவிடத்தின் கீழே பொறிக்கப்பட்ட  வாசகங்களும் மிகவும் முக்கியமானது. “பெரியார் ஈ.வெ.ரா. அவர்களின் நாட்டு விடுதலைப் போருக்கு நாடகம் மூலம் தொண்டு செய்து...

‘கருப்பும்-காவியும்’ இணைந்த வரலாறு

பெரியாருக்கும்-குன்றக்குடி அடிகளாருக்கும் இடையே உருவான ‘கொள்கை நட்பு’ குறித்து ‘தி இந்து’ ஆங்கில நாளேடு (செப்.16, 2016) ஆய்வாளர் ஏ.ஆர். வெங்கடாசலபதியின் கட்டுரை ஒன்றை வெளியிட் டிருக்கிறது. அக்கட்டுரையின் சுருக்கம்: “1945ஆம் ஆண்டு, 20 வயதே நிரம்பிய குன்றக்குடி அடிகள், தருமபுரம் சைவமடத்தில் சேர்ந்து, சைவ சித்தாந்தம், சங்க இலக்கியங்கள் மற்றும் சமஸ்கிருதத்தில் ஆழ்ந்த புலமைப் பெற்றார். அப்போது குன்றக்குடி, திருவண்ணாமலை சைவ மடத்துக்கு இளைய சாமியார் ஒருவரை தேடிக்கொண்டிருந்தபோது, குன்றக்குடி அடிகளாருக்கு அழைப்பு விடுத்தது. தருமபுரம் மடம் அடிகளாரை அனுப்பி வைக்க மறுத்தாலும், பிறகு ஒரு வழியாக சம்மதித்தது. இளைய மடாதிபதியாக குன்றக்குடி மடத்தில் சேர்ந்த ஆதீனம், அடுத்த 3 ஆண்டுகளில் குன்றக்குடி மடாதிபதி ஆகி விட்டார். சைவத்தில் வெள்ளாளர் ஜாதியினர் மட்டுமே சைவ மடங்களில் சன்னிதானமாக முடியும். இவரும் அதே ஜாதிப் பிரிவைச் சார்ந்தவர்தான். ஆனால், சீர்திருத்த எண்ணங்களைக் கொண்டிருந்தார். மடத்துக்கு அருகே உள்ள தாழ்த்தப்பட்டோர் குடியிருப்புகளுக்குச் சென்றார். ‘வழிபாட்டு மொழியாக...

‘சுய குடும்ப நலன்’-‘சுய புகழ்ச்சி’ மறுத்த தலைவர்

பெரியார் பிறந்த நாளையொட்டி ‘தமிழ் இந்து’ நாளேடு, பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரனிடம் பெரியார் பற்றிய கட்டுரையை கேட்டிருந்தது. பொதுச் செயலாளர் எழுதிய கட்டுரை செப்.19 இதழில் மாற்றங்களுடன்  வெளியிட்டுள்ளது. அக்கட்டுரையின் முழு வடிவம் இங்கே பதிவு செய்யப்படுகிறது. நாதசுரக் குழாய் இருந்தால் ஊதியாக வேண்டும்; தவுலாக இருந்தால் அடிபட்டுத்தானாக வேண்டும் என்பதுபோல் எனக்கு தொண்டைகுரல் உள்ள வரை பேசியாக வேண்டும்; பிரசங்கம் செய்தாக வேண்டும்.  – பெரியார் அரசு மக்களுக்கு வழங்கிடும் ‘இலவசங்கள்’ தேவைதானா? என்ற சூடான விவாதங்கள் நடக்கின்றன. ஆனால் சமூகத்தையே அரித்துக் கொண்டிருக்கிற ஒரு ‘இலவசம்’ குறித்து விவாதங்கள் நடப்பது இல்லையே! மக்களின் பொதுச் சிந்தனைக்குள் கொண்டு வரப்படாத அந்த ‘இலவசம்’தான் ஜாதி; இந்த ஜாதியை எவரும் தியாகம் செய்தோ, உழைத்தோ, விலை கொடுத்தோ வாங்குகிறார்களா என்ன? இந்த ‘இலவசம்’ ஒரு சமூகத்தில் மனிதர்களின் நிலையை தீர்மானிக்கிறது. இந்த இலவசம் சமூகத்தின் பெரும் பகுதி மக்களின் கலாச்சார...

மரணத்தில் மர்மம்!  பலியானார் இராம் குமார்!

மரணத்தில் மர்மம்! பலியானார் இராம் குமார்!

சுவாதி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட இராம்குமார், சிறையில் மின் பெட்டியை உடைத்து, கம்பியை வாயில் செலுத்தி தற்கொலை செய்து கொண்டதாக சிறை நிர்வாகம் கூறி, அதை நம்பச் சொல்கிறது. இராம்குமார் இந்த வழக்கில் உண்மையான  குற்றவாளி தானா? என்ற பலத்த சந்தேகம் தொடக்கம் முதலே இருந்து வந்திருக்கிறது. இராம்குமார் தற்கொலை செய்யவில்லை; அவர் சிறையில் கொலை செய்யப்பட்டுள்ளார் என்று அவரது பெற்றோர்களும், இராம்குமார் வழக்கறிஞர்களும் வெளிப்படையாகவே குற்றம் சாட்டுகிறார்கள். அடுத்த சில நாள்களில் அவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், இந்தச் சம்பவம் நடத்திருப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியிருக்கிறது. மின்சார பெட்டியை சிறைக்குள் ஒரு கைதியால் எப்படி  உடைக்க முடிந்தது? எந்த ஆயுதத்தை வைத்து உடைத்தார்? மின்சாரம் பாயும் கம்பியை எப்படி அவரால் வாயில் வைக்க முடிந்தது? அதுவரை சிறைக் காவலர்கள் எங்கே போனார்கள்? மின்சாரம் பாயும் கம்பியை இராம்குமார் வாயில் வைத்துதான் இறந்தார் என்று சிறை நிர்வாகம்...

சுயமரியாதை சுடரொளி சவுந்தரபாண்டியனார்

சுயமரியாதை சுடரொளி சவுந்தரபாண்டியனார்

சுயமரியாதை இயக்கத்தின் தூண்களில் ஒருவரான டபிள்யூ பி.ஏ.சவுந்தரபாண்டியனார், செப்.15ஆம் தேதி அவருக்கு 129ஆவது பிறந்த நாள். தியாகராயர் நகரிலுள்ள அவரது சிலைக்கு நாடார் சமூகத்தினர் மாலை அணி வித்து மரியாதை செலுத்தியுள்ளனர். சவுந்தர பாண்டியனார் நாடார் சமூகத்தில் பிறந்தாலும், பார்ப்பனரல்லாத சமூகத்தின் முன்னேற்றத்துக்காக பெரியாரோடு இணைந்து நின்றவர். நீதிக்கட்சியிலிருந்து அவரது பயணம் தொடங்கியது. 1924ஆம் ஆண்டு செங்கல்பட்டில் பெரியார் நடத்திய வரலாற்றுப் புகழ் மிக்க முதல் சுயமரியாதை மாநாட்டின் தலைவர் சவுந்தரபாண்டியனார்தான். நாடார் மகாஜன சங்கத்தின் பிரதிநிதியாக 1921ஆம் ஆண்டு ஆளுநர் வெல்லிங்டனால் சட்டமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டு, 12 ஆண்டுகள் சட்டமன்ற உறுப்பினராகவும், இராமநாதபுரம் மாவட்ட நிர்வாகக் குழு (ஜில்லா போர்டு) உறுப்பினராகவும் பணியாற்றியவர். கமுதிப் பகுதியில் நாடார்-மறவர் வகுப்பு மோதல்களை முடிவுக்குக் கொண்டு வருவதில் பெரும் பங்காற்றியவர். ‘தீண்டப்படாத’ மக்களுக்கு நில உரிமை; அவர்களை பேருந்தில் ஏற்ற மறுத்த பேருந்துகளுக்கு உரிமத்தை இரத்து செய்தமை; ஆதி திராவிட மாணவர்களை பள்ளிகளில் சேர்க்க மறுத்த...

கழகத் தோழர்கள் எழுச்சியுடன் எடுத்த பெரியார் விழா

பெரியார் 138ஆவது பிறந்த நாளை செப்.17 அன்று தமிழகம் முழுதும் கழகத்தினர் எழுச்சியுடன் கொண்டாடினர். சேலத்தில் : சேலம் மாவட்டம், காவலாண்டியூரில் 17.9.16 அன்று தந்தை பெரியார் 138வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு கழகக் கொடியேற்று விழா, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கும் நிகழ்வு காலை 9.00 மணிக்கு நடைபெற்றது. இந்நிகழ்வில் காவலாண்டியூர் கிளை கழகத் தலைவர் மாரியப்பன் தலைமையில் தோழர்கள் ஊர்வலமாக சென்று கழகக் கொடியை ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. காவலாண்டியூர் சுந்தரம், செ.செ.காட்டுவளவு சின்ராசு, கண்ணாமூச்சி மாரியப்பன், மூலக்கடை இராசேந்திரன், காந்தி நகர் சரசுவதி ஆகியோர் கழகக் கொடியை ஏற்றினர். ஊர்வலத்தில் தோழர்கள் விஜயகுமார், சித்துசாமி, மாரியப்பன், பழனிசாமி, சின்ராசு, அபிமன்யூ, இராசேந்திரன், சந்திரன், அவினாசி, பழனிசாமி, தங்கராஜ், சேகர், பச்சியப்பன், சுந்தரம், சித்தன், பிரகாஷ், ராணி, சரசுவதி ஆகியோர் இருசக்கர வாகனத்தில் ஊர்வலமாக சென்றனர். மூலக்கடை இராசேந்திரன் அனைவருக்கும் தேநீர் வழங்கினார்.   கொளத்தூரில் :...

‘கார்ப்பரேட்’ மயமாகும் பார்ப்பனிய திருமண முறை

‘கார்ப்பரேட்’ மயமாகும் பார்ப்பனிய திருமண முறை

பார்ப்பனியம் – பன்னாட்டு கார்ப்பரேட் பண்பாட்டுடன் கைகோர்த்துக் கொண்டு தன்னை மீட்டுருவாக்கம் செய்து வருகிறது என்பதற்கு திருமண முறைகளில் நிக ழ்ந்து வரும் மாற்றங்களே சான்று. புரோகிதம் – சோதிடம் – வரதட்சணை என்ற பார்ப்பனிய திருமணம், ஆடம்பர திருமணமாகி, கார்ப்பரேட் நிக ழ்வாகி நிற்பதை விளக்குகிறது, இக்கட்டுரை. இந்தியாவில் ஒரு திருமணத்துக்கு ரூ. 5 லட்சம் முதல் ரூ. 5 கோடி வரை செலவிடப்படுகின்றன. சுமார் மூன்று மாதம் முதல் ஒரு ஆண்டு வரையிலும் திருமண திட்டமிடல் நீள்கிறது. இவற்றின் பின்புலமாக திருமணத்தை பார்க்கிறோம் என்றால் மிகப் பெரிய தொழில் வாய்ப்புகளையும், பணப் புழக்கத்தையும் இந்திய திருமணங்கள் கொண்டிருக்கின்றன என்கிற உண்மை விளங்கும். ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் தோராயமாக 1 கோடி திருமணங்கள் நடக்கின்றன. ஒப்பீட்டளவில் ஆண்டுக் காண்டு திருமண செலவுகள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதனடிப்படையில் பார்த்தால் தற்போது இந்திய திருமண சந்தை சுமார் 2,00,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்பை கொண்டுள்ளது. இது...

உருவமாக சித்தரிக்கும் புகைப்படம் போலியானது சீரடி சாய்பாபா ‘அற்புத’ மோசடிகள்

புட்டபர்த்தி சாய்பாபா மரணத்துக்குப் பிறகு சீரடி சாய்பாபா திட்டமிட்டு பிரபலமாக்கப்பட்டு வருகிறார். புட்டபர்த்தி உயிருடன் வா ழ்ந்த காலத்திலேயே ‘இவர் மோசடிக்காரர்; சீரடி பாபாதான் உண்மையான கடவுள் அவதாரம்’ என்று பேசியவர்களும் இருந்தார்கள். ‘பாபா’க்கள் என்ற மனிதர்களுக்கு, ‘கடவுள் அவதாரம்’ என்ற முகமூடியைப் போட்டு, அவர்கள் ‘அற்புதங்களை’ நிகழ்த்தும் ஆற்றல் பெற்றவர்கள் என்ற கதைகளை உருவாக்கிப் பரப்புகிறார்கள். ‘அவதாரங்கள்’ எடுத்த ‘கடவுள்கள்’ இனியும் வர மாட்டார்கள். மக்களிடம் அவதார மகிமைகளைத் தொடர்ந்து பேசி ஏமாற்ற முடியாது என்பதால், அவ்வப்போது சில மனிதர்களைப் பிடித்து ‘அவதாரமாக’ தோளில் தூக்கி ஆடும் செப்படி வித்தைகள் நடக்கின்றன. சில ஆண்டுகளுக்கு முன் ‘கல்கி’ அவதாரம் எடுத்து வந்திருக்கிறார் என்று ஒரு பார்ப்பனர் விளம்பரப்படுத்தப் பட்டார். ஒரு கட்டத்தில் அவர் மோசடிக்காரர் என்ற உண்மை அம்பலமான பிறகு, ‘கல்கி’ அவதாரக் கூச்சல், பஜனைகள் முடிவுக்கு வந்தன. துவாரக பீட பார்ப்பனர் சங்கரச்சாரி சுகபோனந்த சரசுவதி சில ஆண்டுகளுக்கு முன் சீரடி சாய்பாபாவை இந்துக்கள் வணங்கக் கூடாது; அவர்...

தலையங்கம் – காவிரிப் பிரச்சினையில் கன்னடர் வன்முறைகள்

தலையங்கம் – காவிரிப் பிரச்சினையில் கன்னடர் வன்முறைகள்

காவிரிப் பிரச்சினையில் நடுவர் மன்றம் வழங்கிய இடைக்காலத் தீர்ப்பையும், இறுதி தீர்ப்பையும் மதித்து செயல்பட கர்நாடகம் தொடர்ந்து மறுத்து வருகிறது. நடுவர் மன்றத்தின் தீர்ப்பு வந்த பிறகும் சட்டப்பூர்வமாக அரசு ஏற்பை அறிவிக்க, அரசிதழில் அதை வெளியிடுவதற்கும் கர்நாடக அரசு எதிர்த்தது. நீண்ட சட்டப் போராட்டத்துக்குப் பிறகு, அரசிதழில் பதிவானது. இதற்குப் பிறகு தீர்ப்பை நடைமுறைப்படுத்துவதற்கான ‘காவிரி மேலாண்மை வாரியம்’ என்ற அமைப்பை உருவாக்க வேண்டியது மத்திய அரசின் கடமை. ஆனால் காங்கிரஸ் ஆட்சியானாலும் பா.ஜ.க. ஆட்சியானாலும் பொறுப்பைத் தட்டிக் கழித்தே வருகின்றன. இதனால் ஒவ்வொரு முறையும் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்திடம் முறையிட வேண்டி யிருக்கிறது. இப்போது தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில், தமிழகத்துக்கு வினாடிக்கு 15 ஆயிரம் கன அடி நீரை செப்டம்பர் 5ஆம் தேதி வரை திறந்து விட வேண்டும் என்று உச்சநீதி மன்றம் உத்தரவிட்டது. கன்னடர்கள் கலவரத்தில் இறங்கினார்கள், கர்நாடக அரசு...

மேட்டூர் தோழர் மார்ட்டின்

மேட்டூர் தோழர் மார்ட்டின்

கழகத்துக்கு 25 ஆயிரம் நன்கொடை தலைமைக் கழக செயலாளர் தபசி குமரனிடம் மேட்டூர் கழகத் தோழர் மார்ட்டின் தமது இல்ல மணவிழா மகிழ்வாக கழகக் கட்டமைப்பு நிதிக்கு ரூ.25,000 நன்கொடை வழங்கியுள்ளார். நன்றியுடன் பெற்றுக் கொண்டோம். பெரியார் முழக்கம் 15092016 இதழ்

செப்டம்பர் 24இல் யாழ் நகரில் தமிழர் எழுச்சிப் பேரணி

செப்டம்பர் 24இல் யாழ் நகரில் தமிழர் எழுச்சிப் பேரணி

செப்டம்பர் 24ஆம் தேதி யாழ்ப் பாணத்தில் தமிழர்களுக்கு எதிராக இலங்கை அரசின் இன அழிப்புக் கொள்கையை கண்டித்தும் தமிழர்களுக்கு சுய நிர்ணய உரிமைக் கோரியும் மாபெரும் பேரணி நடக்க இருக்கிறது. இந்தப் பேரணியை ஒருங்கிணைக்கும் முயற்சிகளில் வடக்கு மாகாண முதல்வர் விக்னேசுவரன், கஜேந்திர குமார் தலைமையிலான தமிழ்த் தேச மக்கள் முன்னணி, தமிழ்த் தேசிய கூட்டமைப்பைச் சார்ந்த சுரேஷ் பிரேம சந்திரன், ஈ.பி.ஆர்.எல்.எஃப். அமைப்பைச் சேர்ந்த சித்தார்த்தன் மற்றும் தமிழ் சிவில் சமூக அமையம், சர்வ மதத் தலைவர்கள், கல்வியாளர்கள், ஊடக வியலாளர்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறார்கள். தமிழர்களின் ஒன்றுபட்ட எழுச்சி மீண்டும் ஈழத்தில் தொடங்கியிருக்கிறது. தமிழர்களின் ஒருங்கிணைந்த உரிமைப் போராட்டம் சிங்கள அரசுக்கு அதிர்ச்சியைத் தந்துள்ளது. பெரியார் முழக்கம் 15092016 இதழ்

வினாயகன் அரசியலுக்கு எதிராக சென்னை-பொள்ளாச்சியில் பெரியார் கைத்தடி ஊர்வலம்: கைது

வினாயகன் அரசியலுக்கு எதிராக சென்னை-பொள்ளாச்சியில் பெரியார் கைத்தடி ஊர்வலம்: கைது

மதத்தை அரசியலாக்கி, மதக் கலவரத்தை உருவாக்கி வரும் ‘விநாயகன்’ ஊர்வலங்களை எதிர்த்து சென்னையில் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் கடந்த செப்டம்பர் 11ஆம் தேதி பிற்பகல் 4 மணியளவில் பெரியார் கைத்தடி ஊர்வலம் எழுச்சியுடன் நடைபெற்றது. அன்று தான் இந்து முன்னணி நடத்தும் ‘விநாயகன் சிலை’ ஊர்வலமும் நடந்தது. திருவல்லிக் கேணி அய்ஸ்அவுஸ் பகுதி மசூதிக்கு அருகே கழகத் தோழர்கள் திரண்டனர். பெரியார் கைத்தடிகளுடன் ‘விநாயகன் ஊர்வலத்தை அரசியலாக்காதே!’, ‘கலவரம்  உருவாக்கும் விநாயகன் ஊர்வலங்களுக்கு, அரசே அனுமதி அளிக்காதே!’ ‘வீடுகளில் நடக்கும் பக்தி பண்டிகைகளை வீதிக்குக்  கொண்டு வந்து அரசியலாக்காதே!’ என்ற முழக்கங்கள் அடங்கிய பதாகைகள் தாங்கி தோழர்கள் முழக்கமிட்டனர். கைத்தடி ஊர்வலத்துக்கு பரப்புரைச் செயலாளர் பால். பிரபாகரன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் இரா.உமாபதி முன்னிலை வகித்தார். திருச்செங்கோடு, விழுப்புரம், மேட்டூர், காவலாண்டியூர், குடியாத்தம் பகுதிகளிலிருந்து கழகத் தோழர்கள் பங்கேற்றனர். கண்டன ஊர்வலத்தின் நோக்கங்களை விளக்கி பால்பிரபாகரன் பேசினார். தோழர்களை காவல்துறை கைது செய்தது. இராயப்பேட்டை பி.எஸ்.என்.எல்....

மணமகள் தேவை

மணமகள் தேவை

மணமகள் தேவை சென்னை ‘பர்னிச்சர்’ நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றும், மாதம் ரூ.20,000 ஊதியம் பெறும், மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்த 28 வயதுடைய மணமகனுக்கு – மணமகள் தேவை. ஜாதி  தடையில்லை.   தொடர்புக்கு: 9840473704 / 9677294241 பெரியார் முழக்கம் 08092016 இதழ்

தூத்துக்குடியில் “நவீன சம்பூகர்களின் வகுப்புரிமை மீட்புப் பரப்புரை”ப் பயணம்

தூத்துக்குடியில் “நவீன சம்பூகர்களின் வகுப்புரிமை மீட்புப் பரப்புரை”ப் பயணம்

தூத்துக்குடி மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் 27.08.2016 சனிக்கிழமை அன்று மத்தியில் ஆளும் மோடியின் பி.ஜே.பி. அரசால் – கல்வி, வேலைவாய்ப்புகளில் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் பட்டியல் இனத்தினர் மற்றும் பட்டியல் பழங்குடியினருக்கு இழைக்கப்படும் அநீதிக்கு எதிராக நவீன சம்பூகர்களின் வகுப்புரிமை மீட்புப் பரப்புரைப் பயணம் தூத்துக்குடி முதல் ஆழ்வார்திருநகரி வரை கழகப் பரப்புரைச் செயலாளர் பால். பிரபாகரன் தலைமையில் நடைபெற்றது. 27.08.2016 காலை 9.00 மணிக்கு தூத்துக்குடி பாளை சாலையில் உள்ள புரட்சியாளர் அம்பேத்கர், தந்தை பெரியார் சிலை அருகே தொடங்கிய பரப்புரைப் பயணத்தை ஆதித்தமிழர் கட்சி மாநில துணைப் பொதுச்செயலாளர் க. கண்ணன் தொடங்கி வைத்தார். மாவட்ட தலைவர் பொறிஞர். சி. அம்புரோசு, தோழர்.கோ.அ. குமார் ஆகியோரது உரையைத் தொடர்ந்து கழகப் பரப்புரைச் செயலாளர் பால். பிரபாகரன் பயணத்தின் நோக்கத்தை விளக்கி உரையாற்றினார். முன்னதாக  தந்தை பெரியார்-புரட்சியாளர் அம்பேத்கர் சிலைக்கு பரப்புரைச் செயலாளர் மற்றும் மாவட்ட தலைவரால் மாலை அணி விக்கப்பட்டது....

ஒரு களப் போராளியின் வரலாற்றுப் பக்கங்களிலிருந்து…

ஒரு களப் போராளியின் வரலாற்றுப் பக்கங்களிலிருந்து…

தூக்குத் தண்டனைக்குள்ளாகி ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டு முழு ஆயுள் சிறைவாசத்துக்குப் பிறகு விடுதலையானவர் தோழர் ஏ.ஜி. கஸ்தூரிரங்கன். பெரியார் இலட்சியங்களில் ஊன்றி நின்று, திராவிடர் விவசாய சங்கத்தை அப்பகுதியில் வழி நடத்தி, பிறகு மார்க்சியக் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து, தன் மீது திணிக்கப்பட்ட ‘முக்கொலை’ பொய் வழக்கில் அரசு அதிகாரத்தால் தண்டிக்கப்பட்டு விடுதலையாகி மீண்டும் திராவிடர்கழகத்தில் இணைந்து விவசாய சங்கத்தை வழி நடத்தி, இறுதியில் தமிழர் தன்மானப் பேரவையைத் தொடங்கி, 84ஆம் அகவையில் முடிவெய்தினார், தோழர் ஏ.ஜி.கே.! தங்களை  விளம்பரப்படுத்திக் கொள்ளாதவர்கள் இத்தகைய களப்போராளிகள். ஏ.ஜி.கே.வை சமூகப் போராளியாக்கிய இளம்பருவ அனுபவங்களை ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறது. பசு. கவுதமன், சாக்கோட்டை இளங்கோவன் முயற்சி – உழைப்பால் வெளி வந்திருக்கும் ‘ஏ.ஜி. கஸ்தூரிரங்கனின் நினைவுகளும் நிகழ்வுகளும்’ நூலிலிருந்து சில பகுதிகள்: நாகையை அடுத்த அந்தணப்பேட்டை  வயல்களால் சூழப்பட்ட இருண்ட கிராமம். சேறு, சகதியாகிக் காயக்கூடிய மண்பாதை. சில ஒற்றையடிப் பாதைகள். இருட்டு ஆரம்பித்தால்...

படத் திறப்பு படையலுக்கு அல்ல; பாடம் கற்க!

படத் திறப்பு படையலுக்கு அல்ல; பாடம் கற்க!

“படத் திறப்பு படையலுக்கு அல்ல; பாடம் கற்க” என்று தோழர் ‘ஏ.ஜி.கே’ வின் முழக்கத்தை முன் வைத்து அவரது படத்திறப்பு நிகழ்ச்சி செப்டம்பர் 4ஆம் தேதி பகல் 11 மணியளவில் அவரது சொந்த கிராமமான நாகை அந்தணப் பேட்டையில் நடந்தது. முன்னதாக அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டிருந்த நினை விடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தப் பட்டது. தோழர் ஏ.ஜி.கே. எனும் அ.கோ. கஸ்தூரிரங்கன் படத்தை தோழர் தியாகு திறந்து வைத்தார். திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, விடுதலை இராசேந்திரன், தோழர் மணியரசன் மற்றும் பல்வேறு இயக்கங்கள், கட்சிகள், அமைப்புகளைச் சார்ந்த தோழர்கள், முடிவெய்திய தோழர் ‘ஏ.ஜி.கே.’ அர்ப்பணிப்பு, போர்க் குணம், மனித நேயம், போராட்ட வடிவங்கள், கீழத் தஞ்சை மாவட்டத்தில் ஜாதி – பண்ணையடிமை ஆதிக்கத்தை ஒழிப்பதில் ஆற்றிய பங்களிப்பு குறித்து விரிவாகப் பேசினர். ஏ.ஜி.கே. அவர்களின் மகள் வழக்கறிஞர் கல்பனா நன்றி கூறினார். மன்னை காளிதாசு, மயிலாடுதுறை இளையராசா, சாக்கோட்டை...

மூடநம்பிக்கை பரப்பும் தொலைக்காட்சிகள் மீது புகார்கள் குவிகின்றன!

மூடநம்பிக்கை பரப்பும் தொலைக்காட்சிகள் மீது புகார்கள் குவிகின்றன!

தொலைக் காட்சிகளில் பேய், பில்லி, சூன்யம், திகில், குரங்குக் கதைகள் போன்ற மூடநம்பிக்கைகளைப் பரப்பும் நிகழ்ச்சிகள் அதிகரித்து வருகின்றன. சிறிதும் சமூகப் பொறுப்பின்றி அரசியல் சட்டம் வலியுறுத்தும் அறிவியல் மனப்பான்மையை வளர்க்க வேண்டும் என்ற கொள்கைகளுக்கு எதிராக நிகழ்ச்சிகளை ஒளி பரப்பி வருகின்றன இந்த தொலைக்காட்சிகள் பற்றி மத்திய அரசிடம் கடந்த ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை 1850 புகார்கள் பார்வையாளர்களிடமிருந்து குவிந்துள்ளன. இதில் 1250 புகார்கள் இந்த மூடநம்பிக்கை நிகழ்ச்சிகள் தொடர்பானவை. மற்றவை ஆபாசம், வன்முறை தொடர்புடைய நிகழ்ச்சிகள் பற்றிய புகார்கள். இது வரை ஆபாசம், வன்முறை பற்றிய புகார்கள் மட்டுமே அதிகம் குவிந்த நிலை மாறி, இப்போது மூடநம்பிக்கை நிகழ்ச்சிகளுக்கு எதிரான புகார்கள் முதல்முறையாக அதிகரித்துள்ளன. தொலைக்காட்சிகள் குறித்த புகார்களை விசாரிப்பதற்காக ‘ஒளி பரப்புகள் உள்ளடக்கத்துக்கான புகார் கவுன்சில்’ (பிசிசிசி) என்ற அமைப்பு உள்ளது. மத்திய தகவல் ஒளி பரப்பு அமைச்சகம் இந்த புகார்களை மேற்குறிப்பிட்ட அமைப்புக்கு அனுப்பி வைத்துள்ளது. இந்த ‘பிசிசிசி’...

ஜாதிவெறி தலைதூக்கும் தமிழகம்!

ஜாதிவெறி தலைதூக்கும் தமிழகம்!

இந்தியாவிலேயே ஜாதிய மோதல்கள் நடப்பதில் இரண்டாவது இடத்துக்கு தமிழகம் வந்து விட்டது. இது தமிழகத்துக்கே அவமானம். தேசிய குற்றப் பதிவு ஆவணம் (நேஷனல் கிரைம் ரெக்கார்ட்ஸ் பீரோ) 2015ஆம் ஆண்டுக்கான  அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதன்படி ஜாதிய மோதல்கள் நடப்பதில் முதலிடத்தில் உ.பி.யும், இரண்டாவது இடத்தில் தமிழ்நாடும், மூன்றாவது இடத்தில் பீகாரும், நான்காவது இடத்தில் ஜார்கண்ட் மாநிலமும் இடம் பிடித்துள்ளன. 2015இல் தமிழகத்தில் 426 ஜாதிய மோதல்கள் நடந்துள்ளன. உயிரிழந்தோர் 578 பேர். உ.பி.யில் நடந்த 724 மோதல்களில் உயிரிழந்தோர் 808;. பீகாரில் 258 மோதல்களில் உயிரிழந்தோர் 403; 2014ஆம் ஆண்டைவிட தமிழகத்தில் ஜாதிய மோதல் 100 மடங்கு அதிகரித்திருப்பதாக அறிக்கை கூறுகிறது. 2014இல் நடந்த 211 மோதல்களில் உயிரிழந்தோர் 257 பேர். தமிழர் சமூகத்தில் ஜாதிய வகுப்புவாத வெறியூட்டப்படுவது ஆபத்தானது என்று இது குறித்து ‘டிடி நெக்ஸ்ட்’ ஆங்கில நாளேடுக்கு அளித்த பேட்டியில், ‘தலித் முரசு’ ஆசிரியர் புனித பாண்டியன், சமூக ஆய்வாளர் பேராசிரியர் அ.மார்க்ஸ்...

விநாயகர் சிலை ஊர்வலம் : காவல்துறை கட்டுபாடுகளை கண்காணிக்குமா?

விநாயகர் சிலை ஊர்வலம் : காவல்துறை கட்டுபாடுகளை கண்காணிக்குமா?

விநாயகர் சிலை ஊர்வலத்தை, குறித்த நேரத்தில் நடத்தி முடிக்க வேண்டும் என்பது உள்பட காவல்துறையின் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன் விவரம்: சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி சிலைகள் களிமண்ணால் செய்யப்பட்டு இருக்க வேண்டும்; இரசாயனம் பயன்படுத்தக் கூடாது. ஊர்வலத்தின்போது மின் கம்பம் மற்றும் பாலத்தின்மீது மோதி சிலைகளை பாதிப்பு ஏற்படும் என்பதால், உயரமான சிலைகள் எடுத்துச் செல்வதை தவிர்க்க வேண்டும். பொது இடங்களில் திடீர் கோவில்கள் அமைத்தல் கூடாது. சிலை அமைப்பாளர்களின் பெயர், முகவரி, தொலை பேசி, அலைபேசி எண்களை காவல் நிலையங்களில் தெரிவிக்க வேண்டும். அலைபேசியை அணைத்து வைக்காமல் இருக்க வேண்டும். காவல் துறை அனுமதித்த இடங்களில் மட்டுமே சிலைகள் வைக்க வேண்டும். சிலை வைக்க, கீற்று அல்லது துணியால் வேயப்பட்ட கொட்டகையாக இருக்கக் கூடாது. கல்நார் அல்லது இரும்பு தகடு பயன்படுத்த வேண்டும். அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே சிலைகளை கடலில் கரைக்க வேண்டும். ஊர்வலம் குறிப்பிட்ட நேரத்தில் நடத்தி முடிக்க வேண்டும்....

மதத்தை அரசியலாக்காதே; மக்கள் ஒற்றுமையை சீர்குலைக்காதே! பெரியார் கைத்தடி ஊர்வலம்

பதட்டத்தை உருவாக்கக்கூடிய விநாயகன் சிலை ஊர்வலம் என்பது மத ஊர்வலம் அல்ல; மதத்தின் பெயரால் நிகழும் அரசியல் ஊர்வலம். சென்னை நகரில் ‘மிலாது நபி’ ஊர்வலம் இஸ்லாமிய அமைப்புகள் நீண்டகாலம் நடத்தி வந்தன. அமைதியாக மக்களுக்கு எந்த இடையூறும் இன்றி அந்த ஊர்வலம் ஆண்டுதோறும் நடந்து வந்தது. இதற்குப் போட்டியாக மதவாத அரசியல் சக்திகள் ‘விநாயகன்’ சிலை ஊர்வலத்தை அதற்குப் பிறகுதான் தொடங்கின. தி.மு.க. ஆட்சி காலத்தில் இந்த ஊர்வலங்களால் பதட்டம் உருவாக்கப்படுவதைத் தவிர்க்க இரண்டு ஊர்வலங்களையும் தவிர்த்துவிடுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆட்சியின் கோரிக்கையையேற்று, இஸ்லாமியர் அமைப்புகள் மீலாது நபி ஊர்வலத்தைக் கைவிடுவதாக அறிவித்தன. அது முதல், நபிகள் நாயகம் பேரணி, சென்னையில் நடக்கவில்லை. ஆனால், விநாயகன் ஊர்வலத்தை கைவிட மதவாத அரசியல்வாதிகள் மறுத்து விட்டனர். 1996இல் பெரியார் திராவிடர் கழகம் விநாயகன் அரசியல் ஊர்வலத்துக்கு எதிராக பெரியார் சிலை ஊர்வலம் நடக்கும் என அறிவித்தது. தி.மு.க. ஆட்சி, இரு ஊர்வலங்களுக்கும்...

‘பிள்ளையார் சுழி’ வந்த கதை

பல்லவ நாட்டை ஆண்ட நரசிம்மவர்ம பல்லவனுடைய படைத் தலைவன் (சேனாதிபதி) பரஞ்சோதி வாதாபி நகரை வென்று – அந்நாட்டரசன் புலிகேசியைக் கொன்று, நகரச் சொத்துக்களை கொள்ளையடித்து வந்தான். அவன் கொண்டு வந்த பொருள்களின் மூட்டைகளை பிரித்துப் பார்த்தபோது அதில் யானைத் தலையுடைய ஒரு பொம்மையும் இருந்ததைக் கண்டனர். அந்த பொம்மையை புலிகேசி அரண்மனையில் வேடிக்கைக்காக வைத்திருக்கிறான். அதைத்தான் பிள்ளையார் என்கின்றனர் – முழுமுதற் கடவுள் என்கின்றனர். இப்போர் கி.பி.641இல் நடந்தது. அப்பொழுது மூட்டை முடிச்சுகளில் வந்த பொருள்களில் பிள்ளையாரும் ஒன்று. அதன்படி பார்த்தால் பிள்ளைாயர் தமிய்நாட்டிற்கு வந்து 1375 ஆண்டுகள்தான் ஆகிறது. ஆகவே, இடையில் வந்த பிள்ளையார் – முதல் கடவுளாக எப்படி ஆனார்? அதுதான் போகட்டும்; கல் உருவத்திற்கு சுழி ஏது? அதனால் என்ன நன்மை? ஒரு விஷயம் எழுதுகிறோம் என்றால்பிள்ளையார் சுழி போட்டுத்தான் எழுத வேண்டுமா? அக்காலத்தில் ஓலைச்சுவடிகளில் எழுத்தாணிகளைக் கொண்டு எழுதினார்கள். அறிவு வளராத காலம் – பேனா, பேப்பர் இல்லாத நேரம், ஆணியைக் கொண்டு ஓலையில் எழுதுவது கடினம். அதற்கு...

தூத்துக்குடியில் கழகம் சமூக நீதி பரப்புரை

27.08.2016 அன்று தூத்துக்குடி மாவட்ட தி.வி.க. சார்பில் நவீன சம்பூகர்களின் வகுப்புரிமை மீட்புப்பரப்புரை பயணம் தொடங்கியது. ஒருநாள் பயணமாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் திவிக பரப்புரை செயலாளர் தோழர் பால் பிரபாகரன் தலைமையில் அணிவகுத்த தோழர்கள் பயணத்தின் கருத்துகளை அடங்கிய துண்டறிக்கை விநியோகித்து மக்களிடம் எழுச்சியை உருவாக்கினர் மாலை 6 மணிக்கு காவை இளவரசன் ‘மந்திரமா தந்திரமா’ நிகய்ச்சியோடு பொதுக்கூட்டம் துவங்கியது. பெரியார் முழக்கம் 01092016 இதழ்

தபோல்கர் பன்சாரே கல்புர்க்கி படுகொலை

தபோல்கர் பன்சாரே கல்புர்க்கி படுகொலை

வழக்கு : உயர்நீதிமன்றம் கெடு மதவெறியர்களால் குறிவைக்கப்பட்டு படுகொலை  செய்யப்பட்டவழக்குகளில் தடயவியல் ஆய்வுக்கான அறிக்கையை ஸ்காட்லாந்து யார்ட் காவல்துறையினரிடமிருந்து 8 வாரங்களுக்குள்ளாக பெற்று நீதிமன்றத்தில் அளித்திட வேண்டும் என்று மத்தியப் புலனாய்வுக் குழுவினருக்கு மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2013ஆம் ஆண்டு ஆகஸ்ட் 20 அன்று புனே நகரில் நடைப் பயிற்சியின்போது மூடநம்பிக்கைகளுக்கு எதிரான அமைப்பின் நிறுவனரும் பகுத்தறிவாளருமாகிய நரேந்திர தபோல்கர் சுட்டுக் கொல்லப்பட்டார். இக்கொலை வழக்கில் மகாராட்டிர மாநிலத்தின் காவல்துறை முறையாக செயல்பட்டு புலனாய்வு விசாரணை செய்து குற்றவாளிகளைக் கண்டறியவில்லை எனக் கூறி, 2014ஆம் ஆண்டில் மத்திய புலனாய்வுக் குழுவின் விசாரணைக்கு மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. தபோல்கர் சுடப்பட்டதைப்போலவே, மகாராட்டிர மாநிலத்தில் மும்பை மாநகரில் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களில் ஒருவரும், பகுத்தறிவாளருமான கோவிந்த் பன்சாரே 2015ஆம் ஆண்டு பிப்ரவரி 16 அன்று நடைப் பயிற்சியின்போது சுடப்பட்டார். அதன் பின்னர் மருத்துவமனையில் 20.2.2015 அன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதேபோன்றே கருநாடக மாநிலத்தில் 30.8.2015 அன்று ஹம்பி பல்கலைக் கழகத்தின் மேனாள் துணைவேந்தரும், பேராசிரியரும் பகுத்தறிவாளருமாகிய எம்.எம்.கல்புர்கி, கருநாடக மாநிலத்தில் மைசூரு தார்வார்ட்...

அன்புக்கரசி-திலிப்குமார் ஜாதி-மத மறுப்பு மணவிழா

அன்புக்கரசி-திலிப்குமார் ஜாதி-மத மறுப்பு மணவிழா

மேட்டூர் கழகத் தோழர் செ.மார்ட்டின் -பொ. விஜயலட்சுமி ஆகியோரின் மகள் வி.மா. அன்புக்கரசி, பி.ஈ., டி.அய்.வி., கொளத்தூர் கு.மணி-மணிமேகலை ஆகியோரின் மகன் ம.திலீப்குமார் ஆகியோரின் ஜாதி-மத மறுப்பு வாய்க்கை இணை ஏற்பு விழா 21.8.2016 அன்று பகல் 11 மணியளவில் கொளத்தூர் எம்.எஸ். திருமண மண்டபத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் நடந்தது. பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், அமைப்புச் செயலாளர் ப. இரத்தினசாமி, பொருளாளர் திருப்பூர் துரைசாமி, பரப்புரை செயலாளர் பால் பிரபாகரன், டைகர் பாலன் வாய்த்துரை வழங்கினர். இசைமதி, ‘பெண்ணுரிமை’ குறித்தப் பாடல் பாடினார். கணவரை இழந்த மணமகள்மணமகன் பாட்டிமார்கள் வெள்ளை உடையுடன் மேடையில் மணமக்களுக்கு மாலை, தங்க சங்கிலிகளை மண மக்களிடம் எடுத்துத் தந்தபோது மண்டபமே கரவொலியால் அதிர்ந்தது. தமிழகம் முழுதுமிருந்தும் கழகத் தோழர்கள் மணவிழாவுக்கு திரண்டு வந்திருந்தனர். கழக மாநாடு போலவே மணவிழா காட்சி அளித்தது. பெரியார் முழக்கம் 01092016 இதழ்

பெண்கள் பாதுகாப்பு: மருத்துவர் இராமதாசு கடிதத்திற்கு கழகத்தின் பதில்

தமிழ்நாட்டில் இளம்பெண்கள் அச்சுறுத்தல் குறித்து கவலைப்பட்டு அவர்களின் பாதுகாப்புக்காக குரல் கொடுக்க வேண்டும் என்று கோரி பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு, கட்சித் தலைவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர், பொதுச் செயலாளர்களுக்கும் கடிதங்கள் நேரில் வழங்கப்பட்டன. இது குறித்து கருத்துகளை பா.ம.க. தலைமை அலுவலகத்துக்கு தெரிவிக்குமாறு அக்கடிதத்தில் மருத்துவர் இராமதாசு வேண்டுகோள் விடுத்திருந்தார். இது குறித்து நமது கருத்தை பதிவு செய்ய விரும்புகிறோம். காரைக்கால் வினோதினி, ஆதம்பாக்கம் வித்யா, சேலம் வினுப்பிரியா, சூளைமேடு சுவாதி, விழுப்புரம் நவீனா என்று காதலை ஏற்க மறுத்தப் பெண்களை கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளதை மருத்துவர் இராமதாசு பட்டியலிட்டுள்ளார். பெண்கள் மீது மூர்க்கத்தனமாக தங்கள் காதலை ஏற்கவேண்டும் என்று மிரட்டுவதும் மறுக்கும் பெண்களை கொடூரமாக கொலை செய்வதும் சகித்துக் கொள்ள முடியாத வக்கிர மனநிலை; ஆண்களின் இந்த ‘மூர்க்கம்’ காதல் என்ற பெயரில் வெளிப்படுவதை நாகரிக சமூகம் ஒரு போதும் ஏற்க முடியாது. ஆனால், பெண்கள்...

விநாயக சதுர்த்தியை சைவர்கள் கொண்டாடக் கூடாது: மறைமலை அடிகள்

விநாயகனை வழிபடுவது சைவர்களுக்கு அவமானம்; அது பார்ப்பான் கட்டிய கற்பனைக் கதை என்கிறார், மறைமலை அடிகளார். அன்பர்களே! இக்கதை எவ்வளவு அருவறுக்கற்பாலவான மாறுபாடுகள் நிறைந்ததாய் இருக்கின்றது. எல்லாம் வல்ல இறைவியான உமைப்பிராட்டியார் வினை வயத்தால் பிறக்கும் நம்போல் ஊனுடம்பு உடையரல்லர். அவர்தம் திருமேனி சொல் லொணா அருள் ஒளி வீசித் துலங்குவதென்று ‘தேனோபநிடதம்’ நன்கெடுத்து மொழியா நிற்க, அவ்வறிவு நூலுக்கும் கடவுளிலக் கணத்துக்கும் முற்றும் மாறாக அம்மையார் திருமேனியில் அழுக்கு நிரம்பி இருந்ததென்றும் அவ் வழுக்கினைத் திரட்டி எடுத்து பிள்ளையாரைச் சமைத்தனள் என்றும் கூறும் அழுக்குப்புராணம் சிவமகா புராணமெனப் பெயர் பெறுதற்குத் தகுதி யுடையதாமோ? ஆராய்ந்து கூறுமின்கள்! ஊனுடம்பு படைத்த மக்களும் அழகும் நாகரிகமும் தூய்மையும் வாய்ந்தார் சிலரின் உடம்புகள் அழுக்கில்லாதனவாய் மினு மினுவென்று மிளிரா நிற்கத் தூய அருட் பேரொளி வடிவாய் விளங்கும் அம்மையின் திருமேனி அழுக்குடையதாயிருக்குமோ சொன்மின்கள்! மேலும், “தம் மனைவியாரைத் தேடிக்கொண்டு வந்த சிவபிரான் தமக்குப்பிள்ளையென்று அறியாமல் அதன் தலையை...

தலையங்கம் கேரள முதல்வரின் பாராட்டுக்குரிய நடவடிக்கை

‘அரசு அலுவலகங்களில் ஓணம் பண்டிகை உள்ளிட்ட எந்த கொண்டாட்டங்களையும் கொண்டாடக் கூடாது’ என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தடை போட்டிருக்கிறார். வரவேற்கப்பட வேண்டிய அறிவிப்பு. கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதல்வராக இருக்கிறார் பினராயி விஜயன். ‘அரசு அலுவலகங்கள், பணி செய்ய வேண்டிய இடங்கள். அங்கே கொண்டாட்டத்திற்கு இடமில்லை’ என்று அறிவித்துள்ளார். தமிழ் நாட்டில் ஆயுத பூஜை என்றால் அரசு அலுவலகங்கள் அமர்க்களப்படுகின்றன. அதிலும் குறிப்பாக காவல் நிலையங்கள், பஜனை மடங்களாகவே மாறி நிற்கின்றன. தமிழக முதல்வர் ஜெயலலிதா, பெங்களூர் சிறையில் சொத்துக் குவிப்பு வழக்கில் அடைக்கப்பட்டபோது, இந்து அறநிலையத் துறையே ஜெயலலிதா விடுதலைக்கு, கோயிலில் விசேட பூஜைகள் நடத்துவதற்கு உத்தரவிட்டது. சில மாவட்ட ஆட்சித் தலைவர்களே கோயில் சடங்குகளில் யாகங்களில் பங்கேற்ற கூத்துகளும் அரங்கேறின. காவல் நிலையங்களில் யாகங்களை நடத்துவதும், ஆடுகளை வெட்டி பலியிடுவதும், ‘வாஸ்து’ பரிகாரங்களை செய்வதும் நடந்து கொண்டிருக்கின்றன. மதச்சார்பற்ற ஒரு நாட்டில் அரசு அலுவலகங்கள் பஜனை மடங்களாக...

ஈழ ஏதிலியர் உரிமை: கையெழுத்து இயக்கம் தொடங்கியது

தமிழீழ ஏதிலியர் (அகதிகள்) உரிமைக் கூட்டமைப்பு சார்பில் சென்னையில் 27 08 2018 சனிக்கிழமை மாலை 4 மணிக்கு மெரினா கடற்கரையில் காந்தி சிலை அருகில் 10 இலட்சம் கையெழுத்து இயக்கம் திராவிடர் விடுதலைகழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் தொடங்கியது. இதில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கோவை இராமகிருட்டிணன், பேராசிரியர் சரசுவதி (நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்), செந்தில் (இளம் தமிழகம்), பாரதி (த.தே.வி.இ.), அருண பாரதி (த.தே.பே), சேகர் (தொ.மு.இ.), வன்னி அரசு (வி.சி.), இயக்குனர் மு. களஞ்சியம், இயக்குநர் புகழேந்தி மற்றும் தமிழ் அமைப்புகளின் தலைவர்கள், தோழர்கள் கலந்து கொண்டனர். பெரியார் முழக்கம் 01092016 இதழ்

விநாயகர் ஊர்வலம்காவல்துறைக்கு கழகம் நேரில் மனு

விநாயகன் அரசியல் ஊர்வலங்களில் சட்டமீறல் விதிமுறைகளை அனுமதிக்கக் கூடாது என்று திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் காவல்துறை, மாசு கட்டுப்பாட்டு வாரியங்களுக்கு மனு அளிக்கப்பட்டுள்ளது. திருப்பூர் : விநாயகர் சதுர்த்தியை ஒட்டி வைக்கப்படுவதற்காக தடைசெய்யப்பட்ட இரசாயன பூச்சு பூசப்பட்ட, பிளாஸ்டர் ஆப் பாரிசால் செய்யப்பட்ட, சுட்ட களிமண்ணால் செய்யப்பட்ட சிலைகளை கண்டறிந்து பறிமுதல் செய்யவேண்டும்; சட்டவிரோதமாக ஒலி பெருக்கிகளை அலறவிடும் கோயில் நிர்வாகத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்; விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது மோட்டார் வாகன சட்டத்தை கடுமையாக அமுல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி திருப்பூர் மாவட்ட ஆட்சித் தலைவர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், இந்து அறநிலையத்துறை ஆணையர், மாநகராட்சி ஆணையர் ஆகியோரிடம் கழகப் பொருளாளர்  துரைசாமி தலைமையில் மனு அளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர் முகில்ராசு, தோழர்கள் தனபால், மாப்பிள்ளைசாமி, முத்து, கார்த்திக், கமலக்கண்ணன், பரிமளராசன், மாணவர் கழகத்தின் மணிகண்டன், ஹரீஷ்குமார் ஆகிய தோழர்கள் கலந்து கொண்டனர். ஆனைமலை : பொள்ளாச்சி-ஆனைமலை திராவிடர் விடுதலை கழகத்தின் சார்பில் தமிழ்நாடு முழுவதும்...

இராஜஸ்தான் உயர்நீதிமன்ற வாயிலில் டிச.6இல் ‘மனு’ கொடும்பாவி எரிப்பு

“செத்த மாடுகளை புதைக்க மாட்டோம்; பிணங்களை எரிக்க மாட்டோம்; சாக்கடைக் குழிக்குள் இறங்க மாட்டோம்” என்று குஜராத்தில் தலித் மக்கள் கிராமம் கிராமமாக நடத்தும் பயணம் மிகப் பெரும் தாக்கத்தை உருவாக்கி வருகிறது. ஜிக்மேஷ் மேவானி, சுபோத் பார்மர் எனும் இரண்டு தலித் இளைஞர்கள் இந்த புரட்சிக்கு தலைமை தாங்கி வழி நடத்துகிறார்கள். பயணத்தின் அடுத்த கட்டமாக ‘மனு சாஸ்திரம்’ என்ற பார்ப்பனிய கொடூர சட்டத்தை வழங்கிய ‘மனு’வின் உருவ பொம்மைக்கு தீ வைத்து எரிக்கும் போராட்டத்தை அறிவித்திருக்கிறார்கள். புரட்சியாளர் அம்பேத்கர் நினைவு நாளான டிசம்பர் 6ஆம் தேதி ஜெய்ப்பூரில் பல்லாயிரம் தலித் மக்கள், இஸ்லாமியர்கள், விவசாயிகள் திரண்டு ‘மனு’வின் உருவத்தை தீயிட்டு எரிக்கிறார்கள். இராஜஸ்தான் உயர்நீதிமன்ற கட்டிட வாயிலில் பார்ப்பன ‘மனு’வின் சிலை நிறுவப்பட்டுள்ளது. எனவே உயர்நீதிமன்ற அலுவலகத்தில் ‘மனு’வின் சிலைக்கு எதிரே இந்தப் போராட்டம் நடைபெறுகிறது. இத்தகவலை தலித் புரட்சிக்கு தலைமையேற்று நடத்தி வரும் ஜிக்மேஷ் மேவானி, லக்னோவில் செய்தியாளர்களிடையே அறிவித்து, பார்ப்பனிய...

அந்த காலத்தில் பார்ப்பனர்களை திருமணத்துக்கு அழைப்பதில்லை

பார்ப்பானை வைத்துத் திருமணம் செய்வதெல்லாம் ஒரு நூற்றாண்டுக்குள்தான் பரவிற்று என்றுதான் சொல்ல வேண்டும். எனக்கு நன்றாக ஞாபகமிருக்கிறது – 60, 65 ஆண்டுகளுக்கு முன் எங்கள் வீட்டுத் திருமணத்திற்கு வந்து 500 பேர்களுக்கு மேலாக மொய் (அன்பளிப்பு) எழுதினார்கள். அவர்களுக்குத் திருப்பி மொய் எழுதுவதற்கு என்னைத்தான் என் வீட்டிலே அனுப்புவார்கள். அதனால் பல திருமணங்களைப் பார்த்து இருக்கிறேன். அப்பொழுதெல்லாம் இப்படி எல்லோரும் பார்ப்பானைத் திருமணத்திற்கு அழைப்பதில்லை. அப்படி திருமண வீட்டிற்குப் பார்ப்பான் வந்தால் பிச்சை வாங்குவதற்காகத்தான் அங்கு வருவான். அதுவும் உள்ளேகூட அழைப்பதில்லை. வெளியே ஒரு திண்ணையில் வந்து உட்கார்ந்துவிட்டுப் போகும்போது ஆளுக்கு ஒரு அணா, இரண்டனா, பெரிய மனிதர்களாக இருந்தால் ஆளுக்கு 8 அணா, 1 ரூபாய் பிச்சையாய்க் கொடுப்பார்கள். அதை வாங்கிக் கொண்டு சென்று விடுவான். கலியாணம் செய்து வைக்கப் பரியாரி (நாவிதன்) தான் வருவான். அவன்தான் மணமக்களை ஆசி கூறி வாழ்த்திச் செல்வான். அப்பொழுதெல்லாம் மணப்பெண்ணுக்கு யார்...

சூத்திரனுக்கு சட்டப்படி திருமண உரிமையே மறுக்கப்பட்டது

சூத்திரனுக்கு சட்டப்படி திருமண உரிமையே மறுக்கப்பட்டது

மேட்டூர் கழகத் தோழர் செ. மார்ட்டின்-விஜயலட்சுமி மகள் வி.மா.அன்புக்கரசி, பி.ஈ., கொளத்தூர் கு. மணி-மணிமேகலை ஆகியோரின் மகன் ம.திலிப்குமார், எம்.பி.ஏ. ஆகியோரின் ஜாதி-மத மறுப்பு மணவிழா 21.8.2016 அன்று கொளத்தூர் எஸ்.எஸ். திருமண மண்டபத்தில் சிறப்புடன் நடந்தது. இதில் மணவிழா அழைப்பிதழ் மிகவும் வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டிருந்தது. 1958இல் பெரியார் பேச்சு தொகுப்பாக ‘வாழ்க்கைத் துணை நலம்’ என்ற தலைப்பில் வெளி வந்த நூலோடு இணைத்து, அழைப்பிதழ் தயாரிக்கப்பட் டிருந்தது. தந்தை பெரியாரின் சிறப்பான கருத்துகள் இடம் பெற்றிருந்த இந்த நூலில், ‘சூத்திரனுக்கு திருமண உரிமையே கிடையாது’ என்று பிரிட்டிஷ் இந்தியாவில் நீதிமன்றம் வழங்கிய ஒரு தீர்ப்பை பெரியார் எடுத்துக் காட்டியிருக்கிறார். உரையின் அந்தப் பகுதி: ‘இந்து லா’வில் பிராமணன், சூத்திரன் என்ற பிளவுகள் உண்டே தவிர – நாயுடு, செட்டியார், படையாட்சி, பிள்ளை என்ற தனி வகைகள் இல்லை. ஆகையால் பார்ப்பனரைத் தவிர்த்து நாம் எல்லோரும் ஒரே சாதிதான். திராவிடர் என்று...

பயணக் குழுவில் பங்கேற்ற தோழர்கள்

“நம்புங்கள் அறிவியலை; நம்பாதீர்கள் சாமியார்களை” என்ற முழக்கத்தை முன் வைத்து திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய அச்சம் போக்கும் அறிவியல் பரப்புரைப் பயணத்தில் பங்கேற்ற தோழர்களின் பட்டியல். திருப்பூர் பயணக் குழு 5 நாள் பங்கேற்றோர் : மணிமொழி – ஆனைமலை, நிர்மல் – கோவை,  திருப்பூர் : முத்துலட்சுமி, சத்தியமூர்த்தி, சங்கீதா, யாழ் இசை, மூர்த்தி, மாப்பிள்ளை சாமி (லெனின்), நீதிராசன், சு. துரைசாமி – திருப்பூர் கழகப் பொருளாளர், கிருஷ்ணன் – கோவை, பார்வதி – நூல்கள் விற்பனைக் குழு, பன்னீர் செல்வம் – சூலூர், தலைமைக் கழகப் பேச்சாளர்கள் கோபி. வேலுச்சாமி, காவை. இளவரசன். 4 நாள் பங்கேற்றோர் : கதிர்வேல்-ஆனை மலை 3 நாள் பங்கேற்றோர் : முகில்ராசு (திருப்பூர்), இராமச்சந்திரன் (மேட்டுப்பாளையம்) 2 நாள் பங்கேற்றோர் : சண்முகம் (பல்லடம்), கார்த்திகேயன் (பெங்களுர்), ராஜசிங்கம் (திருப்பூர்), தனபால், அகிலன். மயிலாடுதுறை பயணக் குழு 6...

‘ஜோக்கர்’ : சமூக இயக்கங்கள் ஆதரிக்க வேண்டிய அற்புத திரைக் காவியம்

ஜோக்கர் – தமிழ்த் திரைப்பட வரலாற்றில்  புதிய மைல் கல். ராஜு முருகன் எழுத்து இயக்கத்தில் உருவாகி யுள்ள இத்திரைப்படம், இன்றைய சமூகத்தின் சமூக அரசியல் பொருளாதார அவலங்களை சமரசமின்றி சாட்டையால் அடிக்கிறது. பயன் கருதாமல் சமுதாயத் தின் மீதான கவலையோடு போராடும் இயக்கங்களுக்கான படம் என்றே கூற வேண்டும். சாதி வெறிக்கு, மதவாதத்துக்கு எதிராகவும் இயற்கை வளச் சுரண்டல் களுக்கு எதிராகவும், மனித உரிமைக் காகவும் எந்த பொருள் வசதியும் இல்லாத இயக்கங்கள் போராடினாலும் சரி, விளக்கக் கூட்டங்களை நடத்தினாலும் சரி, துண்டறிக்கைகளை வழங்கினாலும் சரி, அதை கேலிப் பேசவும், ‘வேறு வேலை இல்லாத கூட்டம்’ என்று அலட்சியப் படுத்தவும் செய்யுமளவுக்கு சமூகத்தின் பொதுப் புத்தி சீழ் பிடித்து கிடக்கிறது. இந்த புறச் சூழல் எதிர்ப்பை புறந்தள்ளி, களத்தில் நிற்கும் இயக்கங்களுக்கு தன்னம்பிக்கையையும் உந்து சக்தியையும் தருகிறது ‘ஜோக்கர்’. அதுவே இப்படத்தின் மிகவும் குறிப்பிடத்தக்க சிறப்பு அம்ச மாகும். ஜாதி-மத-ஓட்டு...

குஜராத்தில் தலித் மக்களின் புரட்சிக் குரல்! பார்ப்பனப் பிடியில் சிக்கி நிற்கும் ஜாதியமைப்பை தகர்ப்போம்!

சட்டம் ஒழுங்கை தங்கள் கரங்களில் எடுத்துக் கொண்டு தலித் மக்களை தாக்கத் தொடங்கிவிட்டது. ‘பசு கண்காணிப்பு’ என்ற பெயரில் மதவெறி வன்முறை கூட்டம், அதிகார அமைப்பிலும் காவல் துறையிலும் ஊடுருவி நிற்கும் மதவெறி சக்திகள் இந்த வன்முறைக்கு துணை நிற்கின்றன. குஜராத்தில் கடந்த ஜூலை 11ஆம் தேதி செத்துப் போன பசுமாட்டின் தோலை விற்பனை செய்வதற்கு உரித்தார்கள் சில தலித் இளைஞர்கள். அதுவே அவர்களின் வாழ்க்கைக்கான தொழில். ‘பசு கண்காணிப்பு’ என்ற போர்வைக்குள் பதுங்கி நிற்கும் மனித மிருகங்கள் நான்கு தலித் இளைஞர்களை மூர்க்கத்தனமாக தாக்கினர். இது நடந்தது சவுராஷ்டிரா அருகே உள்ள ‘உனா’ எனும் கிராமத்தில். சமூக வலைதளங்களில் இந்தக் காட்சிகள் பதிவேற்றப்பட்டன. பிரச்சினை பற்றி எரியத் தொடங்கிவிட்டது. இந்தியாவுக்கே வழிகாட்டக் கூடிய மாநிலம் குஜராத் என்று பார்ப்பன ஊடகங்கள் எழுதிக் குவித்தது. அத்தனையும் அப்பட்டமான பொய். இப்போது உண்மைகள் வெளிவரத் தொடங்கி விட்டன. குஜராத் மக்கள் தொகையில் 8...

இஸ்லாமிய சிறைவாசிகளுக்கு மறுக்கப்படும் உரிமைகள்

தமிழ்நாட்டில் 14 ஆண்டுகளுக்குமேல் சிறையில் வாடும் இஸ்லாமிய சிறைவாசிகள், அவர்களுக்கான சட்டரீதியான உரிமைகள் மறுக்கப்பட்டு, ஒடுக்குமுறைக்கு உள்ளாகி வருகிறார்கள். இந்த சிறைவாசிகளின் உரிமைகளை வலியுறுத்தும் கருத்தரங்கம் கடந்த 20ஆம் தேதி சென்னை இக்ஷா அரங்கில் நடைபெற்றது. இந்திய சிறுபான்மை பாதுகாப்பு இயக்கம் ஏற்பாடு செய்த இக்கருத்தரங்கில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம். அப்பாதுரை, மக்கள் சிவில் உரிமைக் கழகத் தலைவர் பேராசிரியர் சரசுவதி, பேராசிரியர் அ.மார்க்ஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய குழு உறுப்பினர் அ. சவுந்தர்ராசன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல் ரஹ்மான் உள்ளிட்ட பலரும் பேசினர். இது குறித்து இந்திய சிறுபான்மை பாதுகாப்பு இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கை : அண்ணா பிறந்த நாளின்போது நீண்டகாலம் சிறையில் இருப்பவர்களை விடுதலை செய்யும் வழக்கத்தை தமிழக அரசு கடைப்பிடித்து வந்தது. இது உண்மையிலேயே பாராட்டத்தக்க செயலாகும். ஆனால், வழக்குக் காரணத்தைக் காட்டி தமிழக அரசு இந்த பழக்கத்தை சில ஆண்டுகளாக நிறுத்தி...

வினாயகன் அரசியல் ஊர்வலத்துக்கு எதிராக சென்னையில் பெரியார் கைத்தடி ஊர்வலம்

வினாயகன் அரசியல் ஊர்வலத்துக்கு எதிராக சென்னையில் பெரியார் கைத்தடி ஊர்வலம்

திராவிடர் விடுதலைக் கழகம் சென்னை மாவட்டம் சார்பில் மாவட்ட கலந்தாய்வு கூட்டம் மாவட்ட செயலாளர் உமாபதி தலைமையில் 19.08.2016 மாலை 5:30 மணியளவில் கழகத் தலைமை அலுவலகத்தில் நடை பெற்றது. கலந்துரையாடல் கூட்டத்தில் வருகின்ற 28, 29, 30, 31  தேதிகளில் நடைபெறவுள்ள பரப்புரைப் பயணம், விநாயகர் ஊர்வல எதிர்ப்பு, பெரியார் கைத்தடி ஊர்வலம், விநாயகர் ஊர்வல முறைகேடு பற்றி சமூக வலைதளங் களில் கவனம் ஈர்த்தல் மற்றும் காவல்துறையில் மனு அளித்தல், அய்யா பிறந்தநாள் நிகழ்வுகள் என அடுத்தக்கட்ட நிகழ்வுகளை பற்றி விரிவாக கலந்தாலோசிக்கப்பட்டது. சென்னை மாவட்ட பொறுப் பாளர்கள், பகுதி பொறுப்பாளர்கள், தோழர்களும் கலந்து கொண்டனர். பெரியார் முழக்கம் 25082016 இதழ்

தமிழீழ ஏதிலியர் உரிமைகளை வலியுறுத்தி கையெழுத்து இயக்கம்

ஆகஸ்டு 27இல் சென்னையில் தொடங்குகிறது தமிழகத்தில் வாழும் ஈழத் தமிழ் அகதிகள் உரிமைகளுக்காக “தமிழீழ ஏதிலியர் உரிமைக் கூட்டமைப்பு” என்ற அமைப்பு உருவாக்கப்பட் டுள்ளது. இந்த அமைப்பின் தலைவராக கழகத் தலைவர் கொளத்தூர் மணி தேர்வு செய்யப் பட்டார். தலைமைக் குழு உறுப்பினர் களாக பெ. மணியரசன், கோவை கு. இராமகிருட்டிணன் தேர்வு செய்யப் பட்டனர். கூட்டமைப்பு சார்பில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பெ. மணியரசன் உள்ளிட்ட பொறுப் பாளர்கள் ஆகஸ்ட் 21ஆம் தேதி சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர். பேட்டியில் கூறியதாவது: இலங்கையில் சிங்களப் பேரினவாத அரசின் இன ஒடுக்கு முறை, இன அடக்குமுறை, இனக் கொலைக் கொடுமைகளால் அங்கிருந்து உயிர்தப்பித் தஞ்சம் நாடித் தமிழகம் வரும் ஈழத் தமிழ் மக்களை ஏற்று வாழ வைக்கும் உரிமையும் கடமையும் தமிழ்நாட்டுத் தமிழ் மக்களாகிய நமக்குண்டு என்ற அடிப்படையில், இந்தியாவில், குறிப்பாகத் தமிழகத்தில் வாழ்ந்து வரும் இலட்சத்துக்கும் மேற்பட்ட தமிழீழ...

கழகத் தோழர்களே! சமூக செயல் பாட்டாளர்களே! கண்காணியுங்கள்!

உங்கள் ஊரில் வினாயகன் சிலைகள் அனுமதி பெறப்படாத இடங்களில் வைக்கப்பட் டிருக்கிறதா? உயர்நீதிமன்றம் – பசுமை தீர்ப்பாயம் உத்தரவு களுக்கு எதிராக ‘பிளாஸ்ட் ஆப் பாரிஸ்’ சுட்ட களிமண்ணால் சிலைகள் செய்யப்பட் டிருக்கிறதா? வாகன விதிகளுக்கு எதிராக சரக்கு வாகனங் களில் ஆட்கள் கொண்டு வரப்படுகிறார்களா? உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக இரவு 10 மணிக்கு மேல் ஒலிபெருக்கி அலறி, மாணவ மாணவிகளுக்கும் நோயாளிகளுக்கும் பொது மக்களின் அமைதி யான உறக்கத்துக்கும் ஊறு செய்கின்றார் களா? சட்ட மீறல், விதி மீறல் களை கண்காணியுங்கள்! காமிராக்களில் படம் பிடித்து முகநூலில் பரப்புங்கள்! உள்ளூர் காவல்துறைக்கு புகார் மனுக்களை எழுத்துப் பூர்வமாக வழங்குங்கள்! கவனம்; கவனம்; விரைந்து செயல்படுங்கள்! பெரியார் முழக்கம் 25082016 இதழ்

தூக்கிலிருந்து மீண்ட மக்கள் போராளி – ஏ.ஜி.கே. விடைபெற்றார்

தன் வாழ்நாள் முழுவதும் மக்கள் தலைவராக வாழ்ந்த அந்தணப்பேட்டை கோபாலசாமி கஸ்தூரிரங்கன் புதன்கிழமை (10.8.2016) மாலை முடிவெய்தினார். 60-களில் இன்றைய நாகப்பட்டினமான அன்றைய கீழத்தஞ்சையில் ஏ.ஜி.கே. அசலான மக்கள் தலைவராக இருந்தார். முதலில் திராவிடர் கழகம், பின்பு இடதுசாரி  இயக்கம் என இரண்டின் சாரத்தையும் தன்னுள் ஏந்திய அவர், வெற்றிகரமான  மக்கள் திரள் போராட்டத்தை முன்னெடுத்தார். அன்றைய கீழத் தஞ்சை முதலாளிகளுக்கு, நிலவுடைமையாளர்களுக்கு  அவர் ஒரு துர்சொப்பனம். ஒடுக்கப்பட்ட மக்களின் கூலி உயர்வுக் காகவும், சுயமரியாதைக்காகவும் அவர் நடத்திய போராட்டங்கள் நிறைய. ஒரு முறை, ஏ.ஜி.கே. தாக்கப்பட்டார் என்ற செய்தி அறிந்து மக்கள் கொந்தளித்தனர். அவரைத் தாக்கியதாகச்  சொல்லப்பட்ட முதலாளியின் வீட்டுக்குள் புகுந்து வீட்டை  உடைத்து நொறுக்கினர். அந்த வீட்டிலிருந்த மூன்று ஆண்கள் கொல்லப்பட்டனர். வீட்டில் இருந்த குழந்தை களுக்கும் பெண்களுக்கும் பாதிப்பு இல்லை. சம்பவம் நிகழ்ந்தபோது, ஏ.ஜி.கே. மருத்துவமனையில் இருந்தார். காயமடைந்திருந்த அவர் சாகட்டும் என போலீஸார் காத்திருக்க, அதற்குள் அந்தணப்பேட்டையில் அந்தக்...

பரப்புரைப் பயணத்திலிருந்து…

 ‘நம்புங்க அறிவியலை; நம்பாதீங்க சாமியார்களை’  என்ற முழக்கத்தோடு திராவிடர் விடுதலைக் கழகம் நான்கு முனைகளிலிருந்து புறப்பட்ட பயணம் குறித்த செய்தி தொகுப்பு. சென்னையிலிருந்து புறப்பட்ட பயணக் குழு, ஆகஸ்டு 6ஆம் தேதி தொடக்க விழாவை சென்னை இராயப்பேட்டையில் பொதுக் கூட்டமாக நடத்தி, 7ஆம் தேதி காலை புறப்பட்டது. முதல் நாள் பயணத்தை காஞ்சிபுரத்தில் நிறைவு செய்து இரண்டாம் நாள் பயணத்தை நெமிலியில் நடத்தி முடித்து, காவேரிப்பாக்கம் வந்தவுடன், ‘இந்து முன்னணி’ என்று சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். உடனே காவல் துறை வேலூர் மாவட்டம் முழுதும் அனுமதி மறுத்தது. அதைத் தொடர்ந்து திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களுக்கும் காவல்துறை அனுமதி மறுத்தது. காவல்துறை தடையைத் தொடர்ந்து சென்னை பரப்புரைக்குழுவினரும் வீதி நாடகக் குழு வினரும் சத்திய மங்கலம் பரப்புரைக் குழுவின ரோடு இணைந்து பரப்புரை செய்ய முடி வெடுத்து ஈரோடு பயணமாயினர். சென்னைக் குழுவைச் சேர்ந்த தோழர்களில் ஒரு பிரிவினர் ஆத்தூரில் தங்கி நிறைவு விழா நிகழ்ச்சிக்கான நன்கொடை திரட்டல்;...

பயணம் வெற்றி: மகிழ்ச்சிப் பூரிப்பில் கழகத் தோழர்கள் மாநாடுபோல் நடந்த ஆத்தூர் விழா

“நம்புங்க அறிவியலை; நம்பாதீங்க  சாமியார்களை” என்ற முழக்கத்தை முன் வைத்து திராவிடர் விடுதலைக் கழகம் ஆகஸ்டு 7 முதல் 12 வரை நடத்திய பரப்புரைப் பயணத்தின் நிறைவு விழா பொதுக் கூட்டம்,  ஆகஸ்டு 12 வெள்ளி மாலை சேலம் மாவட்டம் ஆத்தூரில் எழுச்சியுடன் நடந்தது.  6 நாள் பயணத்தையும் முடித்துக் கொண்டு ஆத்தூரில் கழகச் செயல் வீரர்கள்  திரண்டிருந்த காட்சி ஒரு மாநாடு போலவே இருந்தது. பேய், பில்லி, சூன்யம், சோதிடம், தீ மிதித்தல் உள்ளிட்ட மக்களை மிரட்டிக் கொண்டிருக்கும் மூடநம்பிக்கைகளை ஊர்  ஊராகச் சென்று தோழர்கள் வீதி நாடகம், மந்திரமா-தந்திரமா பாடல்கள் வழியாக விளக்கியபோது மக்கள் தந்த ஆதரவு,  தோழர்களை உற்சாகக் கடலில் மூழ்கச் செய்து விட்டது. பள்ளத்தூர் நாவலரசு குழுவினரின் இசை  நிகழ்ச்சியுடன் நிகழ்ச்சிகள் தொடங்கின. பெரம்பலூர் தாமோதரன், ‘மந்திரமா-தந்திரமா’ நிகழ்ச்சிகளை சில நிமிடங்கள் நடத்தினார். சேலம் பிரபு குழுவினர் இரண்டு வீதி  நாடகங்களை நடத்தினர். தொடர்ந்து ‘விரட்டு’ வீதி நாடகக் குழுவினரின் ‘ஒன்றுமில்ல’...

திராவிடர் விடுதலைக் கழகத்தின் புதிய வெளியீடுகள்

பேய், பில்லி-சூன்யம், பொய். விலை – ரூ.30. ‘சமஸ்கிருத’ படையெடுப்பு. விலை – ரூ.30. விஞ்ஞானிகளை அழித்த மதவெறி. விலை – ரூ.30. வளர்ந்தது விஞ்ஞானம்; வீழ்ந்தன மூடநம்பிக்கைகள்.செங்குட்டுவன்-விலை-ரூ.20. வரலாற்றில் பார்ப்பனிய வன்முறைகள்? அப்துல் சமது உரை- விலை-ரூ.115.  

சாகடிக்கப்பட்ட 370ஆவது பிரிவு

370ஆவது பிரிவை சிதைத்து சின்னாபின்னப்படுத்தும் வேலை திட்டமிட்டே நிறைவேற்றப்பட்டது. காஷ்மீர்  இணைப்பு ஆவணத்தின்படி தற்காப்பு,  அயலுறவு மற்றும் தகவல் தொடர்பு குறித்த  அம்சங்களில்தான் காஷ்மீருக்குப் பொருந்தும் வகையில் இந்தியப் பாராளுமன்றத்திற்கு சட்டம் இயற்றும் அதிகாரம் வழங்கப்பட்டது. அதற்கு மேல் மாநில அரசாங்கத்தின் (அதாவது மாநில சட்டமன்றத்தில்) ஒப்புதலுடன் பிற அம்சங்கள் குறித்து சட்டமியற்றுவதற்கு ஜனாதிபதி உத்தரவிடலாம் என்றும் அப்பிரிவில் கூறப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவராக இருந்த  இராஜேந்திர பிரசாத், பிரதமர் நேருவுக்கு 1949 மே 18-ந் தேதியன்று குறிப்பு ஒன்றை  அனுப்பியிருந்தார். “காஷ்மீர் அரசியல் அமைப்புச் சட்டம் முழுமையாக வடிவமைக்கப்பட்ட பிறகு இந்தப் பிரிவைப் பயன் படுத்தி மத்திய அரசு மற்றும் – காஷ்மீர் மாநில அரசு உறவுகளைப் பற்றி முதலும் கடைசியுமாக முடிவு செய்யலாம். ஆனால்,  370ஆவது பிரிவு வழங்கியுள்ள அசாதாரணமான அதிகாரங்களை மீண்டும்  மீண்டும் பயன்படுத்துவதற்கு குடியரசுத் தலைவருக்கும் அதிகாரம் இல்லை” என்று அவர் குறிப்பிட்டிருந்தார். (ஆதாம்: ஏ.ஜி. நூரணி, தி ஸ்டேட் ஸ்மன் 16.6.1992). ஆனால்...