பெரியாரின் கனவு நனவாகும் மாட்சி!
உற்பத்தி சேவைத் துறைகளில் பணியாற்றும் பெண்களில் தமிழ் நாடே முதலிடம் வேலைக்குப் போகும் பெண்களில் இந்தியாவில் தமிழ்நாடு முதல் மாநிலமாக வளர்ந்திருக்கிறது. இந்தியா முழுமைக்கும் மொத்தம் 15.93 சதவீதப் பெண்கள் வேலைக்குப் போகும் நிலையில் பாதிக்கும் மேற்பட்டவர்கள், அதாவது 7.08 இலட்சம் பெண்கள் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள். இரண்டா வது இடத்தில் கருநாடகம் இருந்தாலும் கருநாடகத்தைவிட மூன்று மடங்கு தமிழ்நாட்டில் அதிகம். 2017-2018ஆம் ஆண்டுக்கான தொழிற்சாலைகளுக்கான ஆண்டறிக்கை இத்தகவலைத் தெரிவித்துள்ளது. பெண்களையும் உள்ளடக்கிய தொழில் கொள்கைகளை தமிழ்நாடு அரசு உருவாக்கி அமுல்படுத்துவதே இதற்குக் காரணம். இரவு நேரப் பணிகளுக்கு அனுமதி; அதற்கான பாதுகாப்பு; உயர் தொழில் நுட்பத் திறன் பயிற்சி பயிற்சி; குழந்தைகள் பராமரிப்பு நிலையங்கள் (இதற்கு ஒன்றிய ஆட்சி 10 கோடி மான்யம் வழங்குகிறது); பெண்கள் தங்கும் விடுதி வசதிகள்; உதிரி பாகங்கள் தயாரிப்புப் பூங்கா போன்ற திட்டங்களால் உற்பத்தி மற்றும் சேவைத் துறைகளில் தமிழ்நாட்டில் பெண்களின் பங்கேற்பு அதிகமாக இருக்கிறது....
