“சமூக விரோதிகள்”
‘மாப்பிள்ளை இவருதான்; ஆனா, அவரு போட்டிருக்கிற சட்டை என்னுடையதல்ல” என்று நடிகர் செந்திலை, ரஜினிகாந்த் கலாய்ப்பார். அந்தக் கதை இப்போது நீதிமன்றத் தீர்ப்புகளாகவே வரத் தொடங்கி விட்டன. கரசேவகர்களாக அத்வானி, ஜோஷி என்று 32 பேர் கொண்ட ஒரு கும்பலே அயோத்தியில் கூடியிருந்திருக்கலாம். ஆனால், இவர்கள் இராமன் ‘சத்தியமாக’ மசூதியை இடித்தவர்கள் அல்ல – லக்னோ சிறப்பு நீதிமன்றமே கூறிவிட்டது. இது என்ன புதுக் கதை? அப்படின்னா, மசூதியை இடிச்சது யாரு பாஸ்? அதுவா, அவர்களுக்கு லக்னோ நீதிமன்றம் ஒரு கவுரவப் பட்டத்தையே வழங்கி யிருக்கிறது. ‘சமூக விரோதிகள்’ என்ற நாட்டின் மிக உயர்ந்த பட்டம்! இந்தியா முழுவதிலிருந்தும் இலட்சக் கணக்கில் இரயில் ஏறி அயோத்திக்கு கடப்பாறை, இரும்புத் தடிகளோடு வந்து சேர்ந்த இராம பக்தர்கள் – சமூக விரோதிகளா? இராம பக்தர்களை இப்படியா புண்படுத்துவது? என்று ராம பக்தர்கள் கொந்தளிக்க மாட்டார்கள் என்று நாம் நிச்சயம் நம்பலாம். நீதிமன்ற அவமதிப்பு...