போக்குவரத்து விதிகளை மீறினால் பூங்கொத்து: ‘சந்தி சிரிக்கும்’ குஜராத் மாடல்

விபத்துகளைத் தடுக்க போக்குவரத்து விதிகளை மீறுவோர், குடித்து விட்டு வண்டி ஓட்டுவோர்களுக்கு  அபராதத் தொகையைக் கடுமையாக உயர்த்தியிருக்கிறது – தி.மு.க. ஆட்சி; இது திராவிட மாடல் ஆட்சி.

குஜராத்தில் என்ன நடக்கிறது?

போக்குவரத்து விதியை மீறுவோருக்கு போலீசார் அபராதம் விதிக்க மாட்டார்களாம். மாறாக, போலீசார் அவர்களுக்கு பூக்களை வழங்கி பாராட்டுவார்களாம். தீபாவளிக்காக வரும் 27ஆம்  தேதி வரை இது நடைமுறையில் இருக்கும். குஜராத் உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சுங்வி, மாநில முதல்வர் பூபேந்திரபட்டில் வழிகாட்டுதலின்படி இதை அறிவித்துள்ளனர். விபத்துகள் நடந்தாலோ உயிரிழப்புகள் நடந்தாலோ அது பற்றி கவலை இல்லை. கொலை கொள்ளைகளில் ஈடுபடுவோருக்கு தீபாவளி பரிசாக அரசு பணமுடிப்புகூட வழங்கி கவுரவிக்கும் அறிவிப்பு வந்தாலும் வியப்பதற்கு இல்லை.

– இது குஜராத் மாடல்.

தேர்தலில் ஓட்டு வாங்க இவ்வளவு கேவலமான அறிவிப்புகளை குஜராத் ஆட்சி அறிவித்துக் கொண்டிருப்பது வெட்கக் கேடு.

பெரியார் முழக்கம் 27102022 இதழ்

You may also like...