வள்ளலாரின் ஆரிய மொழி எதிர்ப்பு
வள்ளலார், ‘சத்தியப் பெரு விண்ணப்பத்’தில், தமக்குத் தமிழ்ப்பற்றை உண்டாக்கியதற்காக இறைவனுக்கு நன்றி கூறும் பகுதி வருமாறு:
“எல்லாம் ஆனவராயும் ஒன்றும் அல்லாதவராயும் எல்லா அண்ட சராசரங்களின் அகத்தும் புறத்தும் நிறைந்து விளங்குகின்ற தனித் தலைமைக் கடவுளே!
இடம்பத்தையும் ஆரவாரத்தையும் பிரயாசத்தையும் பெருமறைப்பையும் போதுபோக்கையும் உண்டுபண்ணுகின்ற ‘ஆரிய முதலிய பாஷைகளில் எனக்கு ஆசை செல்லவொட்டாது’, பயிலுதற்கும் அறிதற்கும் மிகவும் இலேசுடையதாய்ப் பாடுதற்கும் துதித்தற்கு மிகவும் இனிமையுடையதாய் சாகாக் கல்வியை இலேசில் அறிவிப்பதாய்த் திருவருள் வலத்தாற் கிடைத்த ‘தென்மொழி ஒன்றனிடத்தே மனம் பற்றச் செய்து’ அத்தென்மொழிகளாற் பல்வகைத் தோத்திரப் பாட்டுகளைப் பாடுவித் தருளினீர்.”
பெரியார் முழக்கம் 13102022 இதழ்